தேன் துளி » Obama

வாழ்த்துக்கள் ஒபாமா
இப்போதுதான் உங்களுடைய பதவி ஏற்பு உரையை கேட்டேன். அமெரிக்காவின் பிரச்சினைகளை தொட்டு சென்றதும், அவை சரியாக இன்னும் சில காலம் ஆகும் என்ற நிதர்சனத்தையும் கூறினீர்கள். மக்களிடையே ஏற்றத்தாழ்வென்பது இல்லை என்றும், அடிமையாக இருந்த ஒர் ஈனத்தை சேர்ந்தவர் நாடாள வந்ததன் இயல்பையும் நாட்டின் பெருமையாக சொன்னதையும் கேட்டு மனம் நிறைந்திருக்கிறது. உணவகத்திலே கூட நின்று பேச அதிகாரம் இல்லாத பரம்பரையில் இருந்து இன்று நாடாள உறுதி மொழி எடுத்துக்கொள்கிற வரை வந்ததை நினைவு கூறினீர்கள். வழிகிற கண்ணோரோடு குழுமி இருந்து ஆர்ப்பரிக்கும் மக்களை கண்டு நம்மையும் அறியாமலேயே சிலிர்க்கிறது.

மக்கள் என்னிடம் மின்மடலில் தொடர்புகொள்ளலாம் என்று நீங்கள் அளித்த செவ்வி ஒன்று கூறுகிறது.  உங்கள் சிரிப்பில் உண்மை இருப்பதாக உடல் மொழியாளர்கள் எழுதுகிறார்கள். வெள்ளை மாளிகையில் கூடைப்பந்து அரங்கு நிர்வகிக்கப்படுகிறது. ஓட்டமும் Golfமட்டுமே இருந்த வெள்ளை மாளிகை கூடைப்பந்து விளையாட்டிற்கு தயாராகிறது.

பிரச்சினைகளை தீர்க்க உங்களிடம் மந்திரக்கோல் இல்லை என்பது தெரியும். ஆனால் எந்த ஒரு சிறு நாட்டிலும் வாழும் மக்கள் உரிமை இல்லாமல் வாழக்கூடாது என்றும் அமெரிக்க ஒரு சிறந்த நண்பனாக விளங்கும் என்று சொன்னதை நிறைவேற்றுங்கள். சின்னஞ்சிறு நாடாக இருப்பினும் மனித உரிமையை மதிக்க அமெரிக்க உதவி செய்யும் என்று சொன்னதை செயலில் காட்டுங்கள். ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களிடம் நடக்கிற அநீதிகளை கொஞ்சம் கவனியுங்கள். அங்கே அமெரிக்காவிற்கு தேவையான எண்னெய் வளம் இல்லை என்பதால் முக்கியத்துவத்தை குறைக்காதீர்கள். உங்களுக்கான வேண்டுகோள் வந்து கொண்டிருக்கிறது.  போக வேண்டிய தூரம் அதிகம், கவனிக்க வேண்டிய வேலைகளும் அதிகம். தாமதமானாலும் நிராகரிக்காதீர்கள்.

மகத்தான சாதனைக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.