தேன் துளி » மருத்துவம்

பல்வலியால் படும் பாடு
என் வீட்டில் எல்லோருக்கும் பற்கள் கரும்பை கடித்து தின்கின்ற ரகம் இல்லை. ஈறுகளின் அறுவை சிகிச்சை செய்து, இப்போது நலத்துடன் இருந்தாலும் பேகல் போன்றவை உண்ணவே யோசிக்கும் ரகம். என் மகன் 3 வயதிலேயே பால்பற்களை கூட பிடுங்கி பற்கள் இல்லாமல் திரவ உணவில் 7 வயதுவரை வளர்ந்தவன். அதிலும் முகம் வீங்கி, கேவர்னஸ் சைனஸ் வழியாக கிருமிகள் பரவியிருக்குமோ என்ற ஐயத்தில் அவசர சிகிச்சை பிரிவில் இரவை கழிக்க நேரிட்டது. பற்களை இழந்துவிட்டால் உண்ண முடியாமல், சக்தி இல்லாமல் எந்த வேலையும் செய்யவும் முடியாமல் திணறிப்போகிறது. ஈறுகளில் நோய் வருமேயானால், அது சைனஸ் மூலமாக மூளைக்கும் பரவ வாய்ப்பு உண்டு. இதனால் தன்னுடைய மாக்ஸிலரி சைனஸ் பாதிக்கப்பட்டு நல்ல சுரத்தில் என் மகன் பல நாட்கள் அவதிப்பட்டான்.

இப்போது அதே நிலையில் அர்விந்த். ஈறுகளில் வீக்கம் கண்டு அது புரையோடி முகம் முழுதும் வீங்கி, கடந்த வாரம் உண்ணவும் முடியாமல் பேசவும் முடியாமல், அதையும்விட வேலைகளை செய்யவும் முடியாமல் ஒரே அவஸ்தை. இத்தனைக்கும் சானிகேட்டர் பிரஷும், பார்த்து வாங்கிய பற்பசையும், இரண்டு வேளையும் பல் துலக்குவதும் உண்டு.ஒருமுறை மிக மோசமான விபத்துக்கு பிறகு பற்கள், தாடை எலும்பு அறுவை சிகிச்சையால் சரிசெய்தும் அடிக்கடி வரும் தாகுதல்தான் என்றாலும் எல்லோரும் கஷ்டப்பட்டது கடந்த வாரம் இன்னும் அதிக பிரச்சினையாகிவிட்டது.

இங்கே 4 வயதிலேயே முதம் முறை பல்மருத்துவரிடம் அழைத்து போய் வருவது வழக்கமாக இருக்கிறது.(well baby visit)மிக முக்கியமாக பதின்ம வயதில் பல் வரிசையை ஒழுங்குபடுத்த இன்னபிற சுத்தம் செய்ய என்று ஒரு வரிசைக்கிரமத்தில் நடந்தே ஆகவேண்டி இருக்கிறது. இல்லை என்றால் பள்ளி நர்ஸிடமிருந்து தொலைபேசிகள் வருவதும் உண்டு. இங்கே பள்ளியிலும் வருடம் இரண்டுமுரை பற்களை பரிசோதிக்கிறார்கள். பல் துலக்கும் முறை சொல்லி தருவது, ஒரு இலவச ப்ரஷ், பற்பசை, நைலான் நூல்( floss) எல்லாம் தருவார்கள்.

இப்போது கோக் போன்ற பானங்களை குடிப்பவர்கள் அதில் உள்ள பாஸ்பாரிக் அமிலத்தின் விளைவால் பல் எனாமல் மெல்ல அழிவதனால் இன்னும் பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள்.

ஆரோக்கியம் இல்லாத பற்களும் ஈறுகளும் இதய நோய் வரக்கூட காரணமாகலாம். நுண்ணிய பாக்டீரியாக்கள் பல்லின் இடையில் தங்கும் சர்க்கரை, உணவு துகளில் இருந்து பெருகி, இரத்தம் மூலம் இதயத்தை அடந்து அங்கே நோய் உண்டாக்கும். இதுபோல ஈறுகளில் ஏதேனும் பாக்டீரியாக்கள் இருந்து ஜிஞ்ஜிவைடிஸ் என்ற நோய் வந்தால், அது சைனஸ் குழாய் வழியே மூளையில் உள்ள கேவர்னஸ் சைனஸை தாக்கி மூளை காய்ச்சலை வரவழைக்க கூடும். முகம் வீங்கி, மருத்துவமனைக்கு வருவோர் உண்டு.

இலட்சணக்கான மக்கள் பல்வலியால் (சாதாரணது முதல் ஈறுகளில் புற்றுநோய்வரை) துன்பப்படுவதை கண்டால் வருத்தமாக இருக்கிறது. மனிதனுக்கு வரும் உபாதைகளில் பல்வலிதான் முற்றிலும் தவிர்க்க கூடியது.

20% சதவிதம் 2-4 வயதுக்குள்ளான குழந்தைகள் பல்லில் ஓட்டைவந்து அவதிப்படுகின்றனர். இதற்கு அவர்களுக்கு தரப்படும் மிட்டாய்களில் உள்ள சர்க்கரையே காரணம் ஆகும். 60% 15 வயதுக்குள் உள்ள குழந்தைகள்  பல்வலியால் மிகவும் துன்பப்படுகிறார்கள். இதில் ஏழை வீட்டில் உள்ள குழந்தைகள் இந்த ஓட்டைகள் சீர் செய்யப்படாமல் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் பல் மருத்துவ காப்பீடு பெறுவதில்லை. இந்த வலியால் பள்ளிக்கு சரியாக செல்ல முடியாத நிலை, முகத்தின் அழகான தோற்றம் குறைவு, சொல்லின் பேச்சின் சீரான தன்மை குறைவு, வாயில் வீசும் துர்நாற்றம் இவை ஒரு குழந்தையின் தன்னம்பிக்கையை குறைக்க வல்லன.

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோர் 95% பேர் பல்வலியால் துன்பப்படுகின்றனர். இதில் பலர் பற்களை இழந்து பொய்பற்கள் கொண்டு இன்னும் திண்டாடுகின்றனர். இன்னும் பலர் ஈறுகளில் வரும் உபாதை இன்ன பிறவற்றால் துன்பப்படுகின்றனர். பற்களை இழப்பது ஒரு அழகுணர்ச்சி பிரச்சினை மட்டும் இல்லை. சரியாக உச்சரிக்க இயலாமை, சில வகை உணவுகளை கடித்து உண்ண முடியாமை போன்று பொதுவான உடல் நலத்திற்கு கூட பாதிப்பு வரக்கூடும்.

இதையும் தவிர்த்து வாய், தொண்டை இவற்றில் வரும் புற்றுநோயால் வருடத்திற்கு 28,000 பேர் துன்பப்படுகின்றனர். இதில் வருடாவருடம் 7200 பேர் இறக்கின்றனர். வாயில் வரும் புற்றுநோய் இந்தியர்களை பெருமளவில் பாதிக்கிறது. பாக்கு வெற்றிலை அதிகம் உண்பதால், அதன் சாற்றை துப்பாமல் சிலர் உட்கொள்வதால், அதிக நேரம் பான் பராக், பாக்கு போன்றவற்றை வாயில் அதக்கி கொள்வதால் இந்த புற்று நோய் ஏற்படுவதாக அண்மையில் நியுஜெர்ஸியில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் சில அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.மேலும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதிக மது (ஒரு நாளைக்கு 4,  12 அவுன்ஸ் பியருக்கு மேல்)அருந்துபவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு.

அமெரிக்காவில் கடந்த வருடம் கிட்டதட்ட 78 பில்லியன் டாலர்கள் வரை பல் மருத்துவர்களுக்கு  செலவு செய்துள்ளனர், 500 மிலியன் தடவை பல்மருத்துவர்களை மக்கள் சந்தித்திருக்கின்றனர். ஆயினும் பெருவாரியான மக்கள் பற்களை சுத்தம் செய்து கொள்ள செல்வதில்லை. பல் துலக்கும் போதும் பற்களின் இடையே சிக்கி யுள்ள உணவு துகள்களை (floss) சரிவர அகற்றுவதில்லை.

அமெரிக்காவில் கிட்டதட்ட 100 மிலியன் மக்களுக்கு சரியான ப்ளுரைடு உள்ள தண்ணீர் கிடடப்பதில்லை(www.cdc.gov).

இதை தவிர்க்க என்ன செய்யலாம்? பாஸ்பாரிக் அமிலம் உள்ள கோக் போன்ற பானங்களை குழந்தைகளுக்கு தராமல் இருக்கலாம். மேலும் பழஜூஸ் குடித்தாலோ சாக்லேட் போன்றவை தின்றாலோ உடனே பற்களை சுத்தம் செய்வது, அல்லது நீர் விட்டு கொப்பளிப்பது போன்றவற்றை செய்ய பழக்கலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை பற்களை சுத்தம் செய்ய பழக்கலாம். செயற்கை பற்களை வெண்மையாக்கும் பெயிண்ட், gum போன்றவற்றை சுவைப்பதை நிறுத்தலாம். இது பற்களின் எனாமலுக்கு ஆபத்தானது.

அமெரிக்காவில் மாநில மத்திய அரசு நிறுவங்களுடன் சேர்ந்து ப்ளூரைடின் அளவை சரிபார்த்து தண்ணீர் வழங்கவும்,   இதற்காக ஒரு இணையதளம் நிறுவி, மாநிலை அரசு தண்ணீரில் உள்ள ப்ளூரைடின் அளாவை சரிபார்ப்பதை கட்டாயப்படுத்தியும் இருக்கிறார்கள்.

மாநில தண்னீர் தன்மையை சரிபார்க்கும் பொறியியல் வல்லுனர்கள், அதிகாரிகளுக்கு ப்ளூரைடின் தன்மை பரிசோதிக்க பயிற்சி தருகிறார்கள்.

நியுஜெர்ஸி 2010 திட்டப்படி ஒரு sealant பற்களில் போட்டு குழந்தைகளின் பற்களை பேண அரசு திட்டம் தீட்டி உள்ளது. எல்லா குழந்தைகளுக்கும் இந்த sealant போடப்படும். இது சர்க்கரை மூலம் எனாமல் கரைவதையும், பாக்டீரியா சேர்வதை தவிர்க்கவும் பயன் படும்.

மேலும் மாநில அரசு இதற்காக மான்யம் ஒதுக்கி மக்களுக்கு பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மக்களுக்கு எடுத்து சொல்ல பல  உடல்நல துறை வல்லுனர்களை பயன் படுத்துகிறது.

காப்பீடுகள் வருடம் இரண்டு முறை இலவசமாக பற்களை சுத்தம் செய்து கொள்வதை தூண்டுகிறது. அதற்காக 100% செலவையும் திருப்பி தருகிறது.

பள்ளிகளில் உள்ள செவிலிகள் இதற்காக வருடம் இரண்டு முறை பற்களின் ஆரோக்கியம் பற்றி சொல்லித்தருவதோடு, பற்களை பரிசோதிக்கவும் செய்கிறார்கள்.

ரட்கர்ஸ் பல்கலை கழகம், மாநில அரசுடன் சேர்ந்து பற்களின் ஆரோக்கியம், மற்றும் பால் அருந்துவது, பற்களை துலக்குவது, கால்சியம் சேர்த்து கொள்வதன் அவசியம் பற்றி பள்ளிகளில் பாடம் எடுக்கிறார்கள்.

12/11: மருத்துவ காப்பீடு இல்லதவர்களுக்காக
மருத்துவ காப்பீடுகளின் கட்டனமும் மருத்துவ செலவும் அதிகமாகி கொண்டே போகின்றன. அமெரிக்காவில் நிறைய பணி இடங்களில் இவற்றை ஊதியத்துடன் தருகின்ற போதும், பல மென்பொருளாளர்கள், மணிக்கு ஊதியம் பெற்று நிறுவனத்தின் Consultant ஆக இருப்பவர்களுக்கு சில சமயம் இந்த உதவி கிடைப்பதில்லை. தானே சந்தாகட்டினால் மாத கட்டணம் இன்னும் அதிகம் என்பதால் பெரும்பாலோர் ஒரு project இல் இருந்து இன்னொன்றுக்கு மாறும் இடைக்காலத்தில் காப்பீடு இல்லாமல் இருக்கின்றனர். அதேபோல சொந்தமாக தொழில் நடத்தும் பலர் இது போல காப்பீடுகள் பெற்றிருப்பதில்லை.

காப்பீடுகளில் பலவகை உண்டு. இவை மருத்துவருக்கு எப்படி அவர்கள் செயல்களுக்கு ஊதியம் தருகின்றது என்பதையும் எந்த காப்பீடு உசிதமானது என்பதை தெரிந்து கொள்ளும் விவரம், இந்த காப்பீடு தரம், இவற்றில் எப்படி சில மருத்துவர்கள் இடம் பெறுகிறார்கள் என்பதை பற்றியும் வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

இந்த பதிவில் காப்பீடே இல்லாமல் இருப்பவர்கள் எங்கே உதவி பெற முடியும் என்பதை அவசியம் கருதி எழுதுகிறேன்.

காப்பீடு இல்லாதவர்கள் , ஊரிலிருந்து வந்திருக்க்கும் பெற்றோர்கள் இவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால்: உடல் நல துறை நடத்தும் சில மருத்துவமனைகளுக்கு செல்லலாம். இவை பெரும்பாலும் walk in clinicகுகளே. உதாரணமாக நியு ஜெர்ஸியில் Chandler மருத்துவமனைகள் நியுப்ரன்ஸ்விக், நியுவர்க் போன்ற இடங்களில் இருக்கிறது. இங்கே கட்டணம் எதுவும் இல்லை.

திடீரென மாரடைப்பு போன்ற அவசர மருத்துவ உதவிகள் வேண்டும் என்றால் 911 கூப்பிட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லவும். அங்கே ஆரம்பத்திலேயே நோயாளிக்கு காப்பீடு பலன் இல்லை என்பதை சொல்லிவிடுங்கள். அங்கே உள்ள charity care க்கு விண்ணப்பிக்கவும் . என்ன பெரிய அறுவை சிகிச்சையானாலும் இந்த charity care பணம் தந்துவிடும். நீங்கள் கவலை பட தேவை இல்லை.

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஸ்மித் க்லைம் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த நண்பரின் பெற்றோர் வந்திருந்தனர். அவருடைய ஊதையம் 100000 $ என்றபோதிலும் அவருடைய பெற்றோருக்கு காப்பீடு இல்லை. திடீரென மாரடைப்பு வந்த தந்தையை மருத்துவ மனையில் சேர்த்து, தமனிகளில் அடைப்பு இருப்பதை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்தார்கள். அதன் பின் பல சிகிச்சைகள், வாராவாரம் பரிசோதனைகள் என்று மருத்துவ கட்டணம் மிக அதிகமாகி போனது. சில மாதங்கள் நன்றாக இருந்த அவர் இறந்துவிட்டார். மருத்துவமனைல் இருந்து வந்த கட்டணம் மிக அதிகம். நண்பர் மருத்துவமனையின் அலுவலகத்திற்கு நேரில் சென்று த ன் ஊதிய விவரங்கள், செலவு எல்லாம் விவரித்து தன்னால் மாதம் $200 மட்டுமே கட்ட முடியும் என்று சொல்ல, மருத்துவமனை அவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. நண்பர் இருக்கும் வரை மாதம் 200$ கட்டுவதாகவும் இந்த கடனால் அவருடையை மனைவி, குழந்தைகள் எந்த வித கட்டுமானங்களுக்கும் உள்ளாக மாட்டார்கள் என்று. ஒருவருடம் பணம் கட்டியபின், மருத்துவமனை மீதி தொகையை ரத்து செய்து விட்டது.

மருத்துவமனையில் இருந்து வரும் கட்டணம் கண்டு மலைக்காமல் அவர்களுடன் நேரிடையாக பேசவோ எழுதவோ செய்தால், மருத்துவமனைகள் இந்த செலவீனங்களை ரத்து செய்யும்.

சாதாரண சுரம் போன்ற கோளாறுகளுக்கு, அல்லது இரத்த அழுத்தம் போன்று தொடர்ந்து மருந்து எடுத்து கொள்பவர்கள் இலவசமாக மருந்து பெற்று கொள்ள உங்கள் மாநில உடல்நலதுறைக்கு தொலை பேசி விவரங்கள் கேட்கவும். என்னிடம் சில பொதுவான தகவல்களும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரங்களும் உண்டு. அதை தனியாக கொடுக்கிறேன்.

மாதா மாதம் பொது நலதுறையில் பல்வேறு நகரங்களில் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்கிறார்கள். ஏதேனும் ஆபத்து இருந்தால் அவர்களே மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வார்கள். அப்போது அது தொடர்பான கட்டணம் கட்டுவதோ உதவி பெறுவதோ அவர்களின் வேலை. மாதாமாதம் எங்கே கிளினிக்குகள் நடக்கிறது என்ற அட்டவனை தயாரிக்க படுகிறது. நீங்கள் உங்கள் பொதுநல துறையை தொடர்பு கொண்டால் அதை வீட்டு முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள். இதுபோன்ற கிளினிக்குகளில் பரிசோதனைகள், மாமோகிராம், prostate exam, rectal exam, chest xray, blood test ஆகிய அனைத்தும் செய்ய படும்.we also run STD, TB clincs, and offer free conseling.

கண்கள், பற்கள் இவற்றை பரிசோதிக்கவும் பல இடங்களில் வசதி உண்டு. நீங்கள் தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள கண் மருத்துவரின் பெயரும் தொலைபேசி எண்ணும் அனுப்புவார்கள். நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம். அத்தோடு வயதானவர்களுக்கு இலவச கண்ணாடியும் கிடைக்கும். காது கேட்காத முதியவர்களுக்கு இந்த பரிசோதனையும் ஹியரிங் எய்டும் கிடைக்கும். இதுபோன்ற வசதிகளுக்கு பொதுநலதுறை, முதியோர்களுக்கான அலுவலகம் இவற்றை தொடர்பு கொள்ளவும். இந்த எண்கள் உங்கள் தொலைபேசி புத்தகத்தில் இருக்கும்.

குழந்தைகளுக்கு காப்பீடு இல்லை என்றால் உடனே சோஷியல் அலுவலகத்தை தொடர்பு கொண்டால், இங்கே பிறந்தவர்களானால் 1 வாரத்துக்குள் மெடிக்கெய்ட் அட்டையும், இங்கே பிறக்காதவர்களுக்கு மாநில குழந்தைகள் உடல் நல பாதுகாப்பு அட்டையும் அனுப்பபடும்.

எந்த ஊரில், நாட்டில் பிறந்திருந்தாலும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்க படும். இதன் அட்டவணையும் எங்கே கிளினிக்குகள் நடத்த படுகின்றன என்பதையும் உங்கள் ஊரில் உள்ள உடல் நல துறையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கல்.செண்ட்ரல் நியுஜெர்ஸியில் இருப்பவர்கள் 732 745 3100 தொடர்பு கொண்டால் என் காரியதரிசிகள் 40 பக்கம் கொண்ட ஒரு புத்தகம் அனுப்புவார்கள். அதில் எந்த உடல் நிலைக்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் போன்ற விவரங்கள் இருக்கும். குழந்தைகள் உடல் நலம், மன நலம் பற்றிய இ ல வ ச சிகிச்சைகளுக்கு children’s directory என்ற புத்தகத்தை கேட்டு பெற்று கொள்ளுங்கள். 169 பக்கம் கொண்ட இதில் நியுஜெர்ஸியில் உள்ள பல இ ல வ ச கிகிச்சை இடங்களும் தொலைபேசி எண்களோடு தரபட்டிருக்கிறது. இதை சமீபத்தில்தான் தயாரித்து முடித்தேன். 211 தொடர்பு கொண்டால் நியுஜெர்சியில் உள்ள பல மருத்துவ சிகிச்சை கிளினிக்குகளை அறிந்து கொள்ள முடியும்.

இதையும் மீறி உங்களுக்கு காப்பீடு அவசியம் வேண்டும், இல்லை என்றால் பாதுகாப்பு இல்லாதது போல இருக்கிறது என்றால், family care நிறுவனத்தை தொடர்பு கொண்டால் அவர்கள் மாத கட்டணம் 5$ முதல் 50 வரை வசூலித்து உங்கள் குடும்பத்திற்கு காப்பீடு வழங்குவார்கள். இது 4 பேர் கொண்ட குடும்பத்தின் மாத வருமானம் 5000$க்குள் உள்ளவர்களுக்கு. அதற்கு மேல் வருமானம் இருப்பவர்கள் கட்டணம் சற்றே கூடுதலாக இருக்கும்.

பிறவியிலே குறைபாடுள்ள குழந்தைகள் இருந்தால், அரசே அத்தனையும் செய்யும். அவர்களே உங்களை அணுகுவார்கள். வீட்டிற்கு எங்கள் ஊழியர் வந்து எல்லாவற்றைம் பரிசோதித்து தேவையான ஏற்பாடுகள் செய்வார்கள். காது முழுதும் கேட்காதவர்கள் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் உங்கள் பெயரை சேர்ப்பது அவசியம். அருகில் ஏதேனும் தீவிபத்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை பாதுகாப்பது, தொலை பேசி அடித்தால் விளக்குகள் எரிவது போன்ற ஏற்பாடுகளை இலவசமாக செய்து தருவார்கள். இந்த குழந்தைகள் பற்றி விவரமாக தனியாக எழுதுகிறேன்.

அதுபோல மனைவி கருவுற்றிருக்கும் ஓது காப்பீட்டை இழக்க நேரிட்டால் அதற்கும் தனி உதவிகள் உண்டு. இதை planned parenthoodடன் சேர்ந்து செய்கிறோம்.

மருத்துவ உதவிகளும் காப்பீடும் மிக சிறந்தது இல்லை என்றாலும் பலவகைகளில் அமெரிக்கா முயற்சி செய்கிறது. விவரங்கள் பலருக்கு தெரிவதில்லை என்பதுதான் மிக பெரிய குறை. உங்கள் வீட்டில் புகுந்துவிட்ட பூனையை பிடிப்பது முதல் புல் வெட்டுவதுவரை உதவி பெற முடியும்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madePriya wrote:

மிகவும் பயனுள்ள தகவல்களை நன்கு விவரித்துச் சொல்லியிருக்கிறீர்கள் பத்மா. Thanks for thinking about various aspects of life in a foreign country and taking the time to write/explain about tackling the various issues.

reply to this comment

12/11 14:31:55

thangam wrote:

Thagavalkalukku Nanri!!

reply to this comment

12/11 21:55:47

padma arvind wrote:

நன்றி பிரியா, தங்கம். தங்கம் : வெகுநாட்களாக நீங்கள் பதிவு எழுதவில்லையா?

காப்பீடு தருவதற்கும் அதிகமாக மருந்துகளுக்கு செலவழிக்க நேர்ந்தால், காப்பீடு இல்லாதவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்திலிருந்து விவரங்களை பெறலாம்.http://www.freemedicineprogram.com/,… http://www.freemedicinefoundation.com…

reply to this comment

13/11 07:38:04

Manjula wrote:

மிகவும் உபயோகமான பதிவு. தகவல்களுக்கு நன்றி பத்மா.

reply to this comment

13/11 21:53:26

uma r sankar wrote:

Hi Padhma

I am uma and I’m living in singapore. I’m reading your blogs regularly. Your articles are very informative.

My parents are with my brother in maryland. I would like to gather more information about medical help for my parents.

If you can give me your email id or telephone no my sister in law can get those information from you. Sorry for the trouble.

Thanks for your help

Regards

uma

reply to this comment

14/11 01:09:04

Maya wrote:

பத்மா அவர்களுக்கு,

வணக்கம்

/மருத்துவ உதவிகளும் காப்பீடும் மிக சிறந்தது இல்லை என்றாலும் பலவகைகளில் அமெரிக்கா முயற்சி செய்கிறது. விவரங்கள் பலருக்கு தெரிவதில்லை என்பதுதான் மிக பெரிய குறை. /

100% சரியாகச் சொன்னீர்கள்.உங்களைப் போன்றோர்கள் சிரத்தை எடுத்து மற்றவர்களுக்கு தெரிவிக்கிரீர்கள்..அனைத்து தகவல்களும் மிக உபயோகமானவை.

/காப்பீடு இல்லாதவர்கள் , ஊரிலிருந்து வந்திருக்க்கும் பெற்றோர்கள் இவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால்../

ஒரு வாரத்திற்க்கு முன்னால் நடந்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..எனக்குத் தெரிந்தவரின் தாய்,தந்தை இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள்.தாய் இருதய நோயாளி.எல்லாரும் சேர்ந்து அர்கான்சா சென்றிருக்கிறார்கள்.அன்றைய இரவில் தாய்க்கு மாரடைப்பு..911 கூப்பிட்டு மருத்துவமனையில் அனுமத்திரார்கள்.தற்சமயம் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.இன்னும் மருத்துவமனையில் இருந்து பில் வரவில்லை..

அவர்களுக்கு காப்பீடும் கிடையாது..

இந்தியாவில் எடுக்கும் காப்பீடு இங்கு எந்த அளவிற்கு உபயோக்ப்படும்..அப்படி ஒன்று இருந்தால் தாங்கள் ஒரு நல்ல காப்பீடு நிறுவனத்தை பரிந்துரைக்க முடியுமா?? இந்தியாவில் இருந்து இங்கு வருபவர்கள் எந்த விதமான காப்பீடு எடுக்க வேண்டும் ?? போன்ற விபரங்களுக்கு உங்களிடமிருந்து ஒரு தனி பதிவை எதிர்பார்க்கிறேன்.

தாங்கள் தங்கள் துறை சார்ந்த பயனுள்ள தகவல்களைத் தருகிரீர்கள்..நன்றி கலந்த பாராட்டுகள்..

அன்புடன்

மாயக்கூத்தன் கிருஷ்ணன்

reply to this comment

15/11 10:57:49

Padma Arvind wrote:

அன்புள்ள மாயா,

உங்கள் நண்பரை அந்த மருத்த்வமனையை தொடர்பு கொண்டு charity care இருக்கிறதா என்று கேட்டு அதற்கு விண்ணப்பிக்க சொல்லுங்கள். சில படிவங்கள் கேட்பார்கள், உதாரணமாக காப்பீடு இருக்கிறதா, தற்சமயம் பணியில் இருக்கிறார்களா, பிள்ளையால் பணம் கட்ட முடியுமா என்று கேட்டு, தெளிவாக கடிதம் எழுதி சொன்னால் அவர்களே ஆவன செய்வார்கள். இந்தியாவில் பெறப்படும் காப்பீடுகள் பற்றி எழுதுகிறேன்.

உமா: மடல் அனுப்பி இருக்கிறேன்.

நன்றி மஞ்சுளா.

reply to this comment

15/11 11:19:12

thangam wrote:

Due to some reasons, I am not in a position to access the web frequently.

Sontha kanini illai..Office-la work pannumpothu,appappa etti paakurathoda sari..

reply to this comment

15/11 17:09:06

Murali wrote:

Dear Padma

Very useful info. Thanks. I really appreciate it.

Murali

KS, USA

reply to this comment

15/11 23:16:49

uma r sankar wrote:

Hi padma

Sorry to trouble you. I did’n receive your email. Can you please resend the same to my gmail id.

Thanks

uma

reply to this comment

16/11 04:31:24

அன்பு wrote:

தகவல்களுக்கு நன்றி. பதிவைப் பார்த்த் அன்றே எழுதநினைத்து, அவசரத்தில் விட்டு பின்னர் மறந்துவிட்டேன்

Congenital Disease தொடர்பானவை காப்புறுதியின்கீழ் வராது என்று சொல்கின்றார்களே… இது ஒவ்வொரு திட்டத்தைப்பொருத்தா அல்லது பொதுவாக எந்தத்திட்டத்தின் கீழும் பிறவிக்கோளாறு வராதா? நாம் திட்டம் எடுக்கும்போது எவ்விதக்குறையுமில்லையென்ற உறுதியின்பேரிலோ அல்லது மருத்துவப்பரிசோதனை முடிவின்பெரிலோதானே பிரீமியம் கட்டுகிறோம். அதன்பின்னர் வரும் எல்லா நோயும் ஏன் அதன்கீழ் வராது!?

reply to this comment

16/11 04:52:11

அன்பு wrote:

பின்னூட்டத்தின் கடைசிவரி இப்படி இருக்கவேண்டும்:

அதன்பின்னர் வரும் அல்லது கண்டறியப்படும எல்லா நோயும் ஏன் அதற்கு முன்னர் எடுத்த காப்பீட்டின்கீழ் வராது!?

reply to this comment

16/11 04:53:33

ravisrinivas wrote:

very useful information. But i think that something is fundamentally wrong with the medical system in USA. How many can really afford to know all these details and seek treatment.Often lack of insurance results in postponing treatment and what you will

get is subject to so many conditions.

So unless there is a radical change all

these good efforts will not mean much.

The paradox is USA spends maximum on health in terms of % of GNP yet so many

millions are not covered or not fully

insured.A professor from India was a visiting prof in an university.She had

a medical problem which needed surgery and treatment. Her doctor advised her to get it done after returning to India.

reply to this comment

16/11 05:57:44

padma arvind wrote:

அன்பு

இப்போதெல்லாம் காப்பீடுகளில் congenitive disorder உம் சேர்க்கப்பட்டுள்ளது. இங்கே இதுபோன்ற குறைகளை முழுசெலவையும் அரசாங்கமே எடுத்து கொள்கிறது. ஆனால் மருத்துவரிடம் சொல்லி state registry யில் சேர்த்து கொள்ளவேண்டும்.

Ravi,

It is very true that both Govt and private sector spend a lot of money on this healthcare. unfortunately the system is not very efficient. We are working on closing the gaps, and I am personally involved in revising some of the minimum standards for doctors and hospitals. Even those services that are provided, we as immigrants are not aware off. I am pursuading health dept to increase awareness among public and provide brochure to people who enter into the country of these facilities. I am going to write step by step on these issues and try to create some sort of a brochure.

reply to this comment

16/11 06:22:38

அன்பு wrote:

தகவலுக்கு நன்றி. இங்கு காப்பீடு நிறுவனம் கைவிரிக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட 50-60% வரை சுகாதார அமைச்சு, ரெனோல்ட் மெக்டொனால்ட் நிதி போன்ற பிற நிதியிலிருந்து மருத்துவமனையின் MSW பிரிவு நோயாளிகளின் அவசியத்துக்கேற்ப ஏற்பாடு செய்கிறது.

முக்கியமான பணியில் ஈடுபட்டுள்ளீர்கள்… தொடர்ந்து வெற்றிகரமாக செய்யுங்கள். பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

reply to this comment

19/11: நீரிழிவு நோய்- சில அடிப்படைகள்
இந்த மாதம் நீரிழிவு நோய் தடுப்பு மாதமாக கருதப்படுகிறது. தற்போது நிறைய சிறுவர்கள்/மிகள் மற்றும் பதின்ம வயதினர் இந்நோயால் பாதிக்கப்படுவதால் சில அடிபடை கருத்துகள் தமிழோவியத்தில் எழுதியது. இங்கேயும் அவசியம் கருதி பதிக்கிறேன்.

நீரிழிவு நோய் என்பது இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதால் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதால் வரும் நோய். இதை மருந்துகளின் மூலமும், உடற்பயிற்சிகள் மூலமும் கட்டு பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும் பலவித நோய்கள் மற்றும் சிக்கல்களை உருவாக்குவதால் குறைந்த வயதில் அகால மரணம் ஏற்பட வழிவகுக்கிறது.

நீரிழிவு நோயில் இரண்டு வகை உண்டு. முதலாம் வகை இன்சுலின் நம்பியுள்ள நீரிழிவு நோய் என அழைக்க படுகிறது. இது குழந்தையாக இருக்கும் போதே ஏற்படக்கூடியது ஆகும்.

இரண்டாம் வகை வயதான பின் வரும் நோய். இதில் இன்சுலினை நம்பி சர்க்கரை அளவு அதிகமாதல் நடப்பதில்லை. இது பெரும்பாலும் மருந்துகள், மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும் வகை.

முதலாம் வகை சில உடல் எதிர்ப்பு சக்தியால் பாங்கிரியாஸின் β செல்கள் அழிக்க படுவதால் இன்சுலின் அளவு குறைந்தும் இன்னும் சிலருக்கு இன்சுலினை மிகவும் வீரியம் உள்ளதாக்க வைக்கும் சக்தி குறைவதாலும் உண்டாகுகிறது. இதற்கு சர்க்கரை அளவை அவ்வப்போது சரி பார்த்து இன்சுலின் ஊசி போட்டு கொள்ள வேண்டும். இது குழந்தைகளையும் இளவயதினரையும் தாக்கும். மரபணு குறைபாடு, சுற்று புரம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் இவ்வகை நீரிழிவு நோய்க்கு எந்த வித தடுப்பும் உபயோகப்படாது. 5இல் இருந்து 10% நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த வகை நோயை கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாம் வகை நீரிழிவு நோய்: நீரிழிவு நோய் உள்ளவர்களில் 90% இவ்வகை நீரிழிவு நோய் கொண்டிருக்கிறார்கள். இன்சுலினுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாவதால் இந்நோய் வருகிறது. இன்சுலினுக்கு தேவை அதிகரிக்க அதிகரிக்க பான்க்கிரியாஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், சர்க்கரை செரிமான குறைவு, குடும்பத்தில் ஏற்கெனவே சர்க்கரை நோய் இருந்தால், அதிக உடல் இயக்கம் (physical activity) இல்லாதது போன்றவை இதற்கு காரணம். இப்போது அமெரிக்காவில் குழந்தைகள் அதிக உடற்பயிற்சி செய்யாமல் எடை அதிகரிப்பதால் இந்நோயால் பீடிக்க படுகிறார்கள். ஒருவகையில் ஆசிய அமெரிக்கன், ஹிச்பானியர், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இந்நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.

மூன்றாவது வகை நீரிழிவு நோய் கருத்தரிக்கும் போது வரும். சில பெண்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், அவர்களின் குடும்ப வரலாறு பொறுத்து இந்த நீழிவு நோய் வர வாய்ப்புண்டு.குழந்தை பிறந்த பின் இதில் 5% பெண்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரக்கூடும்.

நீரிழிவு நோய்க்கான மருந்து:

முதலாம் வகை நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் ஊசி அல்லது ஒரு பம்ப் கொண்டு மருந்து எடுத்து கொள்ளவேண்டும். இரண்டாம் வகை நோய் உல்ளவர்கள் உடற்பயிற்சி மூலம் எடை யை குறைப்பதோடு சில மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். இதை தவிர்த்து கொலஸ்டிரால் குறைக்கவும் மாத்திரை எடுத்து கொள்ளவேண்டும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% மக்கள் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% மாத்திரைகளும் 17% இரண்டும் உபயோகிக்கிறார்கள்.

நீரிழிவு நோய்க்கு முதலாம் நிலை: இந்நிலையில் உள்ளவர்கள் சர்க்கரை அளவு இரத்தத்தில் சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும். ஆனால் அதே சமயம் இவர்களை நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றும் சொல்ல முடியாது.

இவர்களுக்கு உணவு உண்பதற்கு முன் சர்க்கரை அளவு பாதிக்கப்பட்டிருக்கும். அதேபோல இவர்களின் முன் இரவு முழுதும் சாப்பிடாமல் இருந்து மறுநாள் காலை அளவு பார்க்க படும் சர்க்கரை அளவு 100-120 மில்லிகிராம்/ டெசிலிட்டர் இருக்கும். இது சாதாரணமானவர்களின் அளவை விட அதிகம்.

அமெரிக்காவில் பலரின் சர்க்கரை அளவை சரிபார்த்ததில் 41 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய்க்கான முன்நிலையில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

2005 ஆம் ஆண்டு மட்டும் 20வயதுக்கும் மேலானவர்களில் 1.5 மில்லியன் (புதிதாக கண்டுபிடிக்க பட்டவர்கள்)பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

நீரிழிவு நோய் இருந்தால் இன்னும் பல நோய்கள் வர கூடும்.

இதய நோய், பக்கவாதம் (Heart disease, stroke):

நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றவர்களை விட 4 மடங்கு அதிகமாக இ தய நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு பெறுகிறார்கள். இதில் இ தய நோய், பக்கவாதம் வந்தபின் 65% இறந்து போகிறார்கள்.

அதேபோல ஸ்ட்ரோக் வரக்கூடிய வாய்ப்பும் 4 மடங்கு அதிகமாகிறது.

இரத்த அழுத்தம்: 75% நீரிழிவு நோய் உள்ளவர்கள் 130/90 க்கு மேல் இரத்த அழுத்தம் கொண்டு மருந்து உட்கொள்கிறார்கள்.

கண்பார்வை போதல்: 20 வயதிலிருந்து 74 வயதுக்குள்ளான நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் பார்வையை இழக்கிறார்கள். ஆண்டொன்றுக்கு 24000 பேர் புதிதாக கண் பார்வையை இழப்பதாக சொல்கிறார்கள்.

சிறுநீரக கோளாறு: நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறு வர முதல் காரணம் ஆகிறது. ஆண்டொன்றுக்கு 44% புதிய சிறுநீரக கோளாறு உள்ள நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்.

2002 ஆம் ஆண்டு நீரிழிவு நோய் உள்ளவர்களில் 150000க்கும் அதிகமானோர் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு டையாலிஸ் செய்து கொள்ள மருத்துவமனையில் சேர்க்க பாட்டிருந்ததாக புள்ளி விவரம் கூறுகிறது.

நரம்பு சம்பந்தமான நோய்கள்:

60 முதல் 70% வரையான நீரிழிவு நோய் உள்ளவர்கள் நரம்பு சம்பந்தமான நோய்க்கு உள்ளாகிறார்கள். கை கால் விரல்களில் உணர்ச்சி அற்று போதல், உணவு செரிமான சக்தி குறைவது போன்றவை ஏற்படுகின்றன.

மிக அதிக பட்சம் சிலருக்கு கால்கள் நீக்க படவேண்டிய நிலைகூட வருகிறது.

விபத்து இல்லாமல் கால்களை நீக்குதல் நீரிழிவு நோயால் மட்டுமே வருகிறது.

பற்களும் அதிக அளவு பாதிக்க படுகிறது. இதையும் தவிர அமில கார தன்மையை சீர்குலைக்க செய்து, கீட்டோன்களின் அளவை அதிகரித்து கோமா உண்டாக்கவும் வல்லது. பெரும்பாலோருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோயே அதிகம் ஏற்படுகிறது என்பதால் சீரான உடற்பயிற்சி, உணவு கட்டுபாடு மூலம் நீரிழிவு நோயை தடுக்க முயற்சி செய்யலாம். இந்த மாதம் நீரிழிவு நோய் தடுப்பு மாதம் என்பதால், குறைந்த பட்சம் உடற்பயிற்சி செய்யவோ அல்லது நடக்கவோ செய்ய ஆரம்பிப்பது நமக்கு நல்லது.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeThangamani wrote:

பயனுள்ள பதிவு!

reply to this comment

19/11 21:37:23

Dubukku wrote:

பயனுள்ள பதிவு.

குடும்பத்தில் இந்த நோய் இருந்துவந்தால் எனக்கும் கட்டாயம் வருமா இல்லை இது என் உடம்பைப் பொறுத்ததா? தடுக்க என்னென்ன செய்யலாம்? (உணவு பழக்கங்கள்?) நான் பொதுவாகவே பாதி சர்கரை தான் உண்வில் சேர்த்துக் கொள்கிறேன். இதனால் எதாவது பயன் உள்ளதா?

reply to this comment

21/11 16:44:45

Padma Arvind wrote:

தங்கமணி: தொடர்ந்து அளித்துவரும் ஊக்கத்திற்கு நன்றிகள்.

ரங்கா: ஒருவகையில் இது ஜீன்கள் மூலம் வரக்கூடும் என்றாலும், தடுக்க கூடிய ஒன்றே. நீங்கள் அதிகம் கொழுப்பு உள்ள உணவை உண்பதையும் குறைத்து கொள்ள வேண்டும். சில சமயம் அதிக காவீன் கூட சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். காவீன் கல்லீரலில் கிளைகோஜனை சர்க்கரையாக மாற்றி இரத்தத்தில் சேர்ப்பதால். உடற்பயிற்சி (20 நிமிட நடை) செய்தாலே உடல் எடை கூடுவதை தவிர்த்து இரண்டாம்வகை நீரிழிவு நோய் வருவதை தடுக்கலாம்.

reply to this comment

21/11 18:54:03

துளசி கோபால் wrote:

பயனுள்ள நல்ல பதிவு பத்மா.

கொலஸ்ட்ரால்அளவு 5 . ஆனாலும் இது வருமா?

reply to this comment

21/11 19:34:31

Padma Arvind wrote:

துளசி: நன்றி. கொலஸ்டிரால்ல் LDl, HDl இவற்றின் அளவு தெரிய வேண்டும். மொத்தம் 130 மைக்ரோகிராம்/ டெசிலிட்டருக்கு மேல் இருந்தால்(பெண்களுக்கு)அது நீரிழிவு நோயில் முடியவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் HDL/LDl விகிதம் தெரிந்திருத்தலும் அவசியம். 5 என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று விளக்குங்களேன் தனிமடலில்.

reply to this comment

21/11 20:20:27

வெளிகண்ட நாதர் wrote:

நமக்கு அரிசி சாப்டற பழக்கம் இன்னும் போகலிங்க, இந்த ப்ரொவுன் ரைஸ் சாப்பிட்ட நீரிழிவு நோய்யை கட்டு பாட்ல வச்சுக்க முடியும்ங்களா?

அமெரிக்காவில் மருத்துமனை, காப்பீடுகள்-சில குறிபபுகள்
08/11:

மருத்துவர்களின் பணி காலத்திற்கேற்ப மாறுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவு பல துறை வல்லுனர்கள். சமீபத்தில் சேர்ந்து கொண்ட பாதங்களுக்கான podiatrist, chiropractor போன்ற எல்லாவற்றிற்கும் தனி வல்லுனர்கள். அமெரிக்கா என்றாலே நல்ல கவனிப்பு என்றோ இல்லை அதிக வளர்ச்சி அடைந்த நாடு என்றோ இங்கே வரும் அரசியல்வாதிகள் சாதாரணமாக பொதுமக்களிடம் ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்திவிட்டதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் சில பதிவுகளில் இங்கே உள்ள மருத்துவமனைகள், மருத்துவர்கள், இந்தியாவில் மருத்துவம் படித்து இப்போது வருபவர்கள், 80க்கும் முன் வந்தவர்கள் பற்றியும் இந்தியாவில் மருத்துவமனைகள் பற்றியும் உடல் நல கவனிப்பு திட்டங்கள் பற்றியும் (கனடாவை போல சிறந்தது இல்லை என்றாலும்) எழுதலாம் என்ற எண்ணத்தில் முன்னுரையாக ஒரு பதிவு. வழக்கம் போல தனி அனுபவத்தோடு )

இங்கே மருத்துவ சிகிச்சை பெற செல்பவர்கள் மொழி பிரச்சினை இருந்தால் ஒரு மொழி பெயர்ப்பாளரை கேட்டு கொள்ளலாம். அமெரிக்க அரசின் திட்டம் படி மொழி தெரியவில்லல என்ற காரணத்திற்காக யாருக்கும் மருத்துவ உதவிகள் புறக்கணிக்க படக்கூடாது .அதேபோல ஆண் மருத்துவரிடம் செல்லும் போது ஒரு பெண் நர்சை உடனிருக்க சொல்லலாம்.

இந்த பதிவு காப்பீடுகள் பெரும்பாலும் பணியிடத்தில் கிடைக்கும் என்றாலும் குடும்ப உறுப்பினர்களுக்கு சில இடங்களில் நாம் பணம் கட்ட வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு சற்றே சகாய மாத கட்டணத்தில் கிடைக்கும். மற்றபடி பல இடங்களில் நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு இந்த சலுகைகள் கிடைப்பதில்லை. இங்கே மருத்துவ செலவு மிக அதிகம் என்பதால் காப்பீடு இல்லாமல் சிகிச்சைக்கு செல்வது அதிக கடினம்.

ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால், நோயாளி மருத்துவமனையை வழக்காட வாய்ப்பு இருப்பதால், மருத்துவர்கள் பேரில் மருத்துவமனையும், தனியாக பயிற்சி செய்பவர்கள் malpractize காப்பீடும் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு மாதாந்திர கட்டணம் அதிகம்.

மருத்துவ காப்பீடு இருப்பதாலும் எந்த ஒரு அறிகுறியையும் தவறவிட்டுவிட்டு பிறகு அது ஆபத்தில் முடிந்துவிடுமோ என்பதலோ என்னவோ சாதாரணமாகவே பலவித பரிசோதனைகளும் செய்ய படுகின்றன. இதுவும் பலவிதசெயற்கை முறையில் கருத்தரிக்கும் முயற்சிகளும், சில சமயம் life supportஇல பல நோயாளிகளை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் செயற்கையாக உயிரோடு வைத்திருக்க செய்யும் முயற்சிகளும் காப்பீடுகளின் மாத கட்டணத்தை அதிகமாக்குகின்றன. ஆகையால் பலருக்கு இந்த காப்பீடு வைத்திருப்பது கடினமாகிறது.

அமெரிக்காவில் பிறந்த வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கும், மற்ற நாட்டு குடியுரிமை உள்ள பெற்றோருக்கு பிறந்தவர்களானாலும் வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க படுகிறது.

இங்கேயும் பல நேரத்தில் மருத்துவர்கள் நோயாளிகளால் முடியாது என்பது தெரிந்தால் அவர்கள் தரவேண்டிய கட்டணத்தின் பகுதியை வாங்கி கொள்ளாமலே விட்டுவிடுவது உண்டு. மருத்துவமனையில் நடக்கும் தவறுகளால் நோயாளிகள் துன்புற நேருமானால் வழக்காட இலவசமாக இங்கே உள்ள சில அமைப்புகள் உதவி செய்கின்றன.

நடிகை ஸ்ரீதேவியின் அன்னை இங்கே உள்ள ஸ்லோன் கேட்டரிங் மருத்தவமனையில் சேர்க்க பட்டிருந்தார். அப்போது அவரின் மூளையில் கட்டியை நீக்க செய்யப்பட இருந்த அறுவை சிகிச்சை தவறுதலாக செய்யப்பட்டதால், மேலும் துன்பத்துக்குள்ளானார். அதன் பின் நியுயார்க் மருத்துவமனை பொறுப்பேற்று கொண்டு சரியான அறுவை சிகிச்சையை செய்து முடித்தாலும், சில மாதங்களுக்குள்ளாகவே அவர் இறந்து விட்டார்.அப்போது அந்த தவறுக்கு பொறுப்பேற்று கொள்ள ஒரு XRay technician மாற்றி வைத்து விட்டதாக பொறுப்பேற்று கொள்ள நிர்பந்திக்க பட்டு மருத்துவமனையிலிருந்து ஈடும் பெற்று கொண்டு முன்வந்து ஓய்வு பெற்று கொண்டதோடு வழக்கு முடிந்துவிட்டது. ஸ்ரீதேவி வழக்கு மனறத்தில் நஷ்ட ஈடு கேட்டு போட்ட வழக்கும் அவருடைய அம்மா உயிரோடு இருந்திருந்தாலும் ஸ்ரீதேவிக்கு அதனால் வருமானம் வர வாய்ப்பு இல்லை, மன அழுத்தம் + இழப்புக்கு மாறாக நியுயார்க் மருத்துவமனையில் இலவசமாக செய்த அறுவை சிகிச்சை, அவர்கள் (ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர்) தங்கும் இட,ம் அவர்கள் தங்கிய போது ஆ ன உணவு செலவு ஆகியவற்றை பார்த்து கொண்டதோடு சரியாகி விட்டது என்று சொல்லி விட்டதாக அறிந்தேன். அ ப்போதெல்லாம் ஸ்ரீதேவி உணவகத்திற்கு வரும் போதுதான் எல்லோருக்குமே பசி எடுக்கும் பதினாறு வயதினிலே முதல் Mr. India வரை பேசி அவரை போரடித்த பல ஆய்வாளர்களுக்கு அது ஒரு மாறுதலாக இருந்தது.

இந்த வழக்குகள் அதிக பரபரப்பு தந்து மருத்துவமனைக்கு கெட்ட பெயர் வாங்கி தரும் என்றால் அவர்களே தவறு இருந்தாலும் இல்லாவிட்டாலும் வழக்குக்கு தகுந்த மாதிரி 25000 முதல் 75000 வரை தந்து வழக்கை நிறுத்திவிடுவார்கள். இங்கேயும் பாதிக்க படும் நோயாளிகளும் உண்டு. ஒருவருக்கொருவர் நோயாளிகளை அனுப்பி (referral) மூலம் பணம் சேர்க்கும் மருத்துவர்களும் உண்டு.

இந்தியாவில் இருந்து வயதான பெற்றோரை காப்பீடு இல்லாமல் அழைத்து வரும் போது பல இ ல வ ச பரிசோதனைகள் அரசு தரப்பில் செய்ய பட்டாலும், அறுவை சிகிச்சை போன்றவை செய்ய நேரிட்டால் மருத்துவமனையில் பேசி உதவி பெற்று கொள்ளலாம். தேர்ந்தெடுக்கும் மருத்துவர், மருத்துவமனை இவற்றின் விவரங்கள் எங்கே படித்தார்கள், ஏதேனும் வழக்குகள் உள்ளனவா போன்ற விவரங்கள் காப்பீடு நிறுவனத்தில் அல்லது AMA இடமிருந்து பெறமுடியும்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madethanu wrote:

பாதங்களுக்கான Podiatrist துறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது எனக்கே புதிய செய்திதான். காப்பீடும், அது சார்ந்த வைத்தியமும் தீவிரமான நோய்களுக்கு உகந்தது என்றாலும், சாதாரண தலைவலி , காய்ச்சலுக்குக் கூட தனிப்பட வைத்தியம் செய்துகொள்ள முடியாதது கஷ்டம்தான் இல்லையா பத்மா? என் கோ-சிஸ்டர் எல்ட்ராக்ஸின் என்ற மாத்திரை எடுப்பவள். அது முடிந்தபோது, காப்பீடும் கிடைக்காத நேரத்தில், வெளியில் வாங்க முடியாமல், சக நண்பரிடமிருந்து மாத்திரை `கடன்’ வாங்கி சாப்பிட்டதாகச் சொன்னாள்.

reply to this comment

08/11 23:41:38

மூர்த்தி wrote:

//அமெரிக்காவில் பிறந்த வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கும், மற்ற நாட்டு குடியுரிமை உள்ள பெற்றோருக்கு பிறந்தவர்களானாலும் வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க படுகிறது.//

பத்மா அவர்களே,

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இங்கே எல்லாம் குடியுரிமை பெற்றவர்களுக்குத்தான் சிறப்புச் சலுகை. மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் எல்லாம் கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கிறார்கள்!!!

அப்புறன் இந்த தவறான அறுவை சிகைச்சை பற்றி:-

கோழி கூவுது விஜி முதல் பலருக்கும் தவறான அறுவை சிகைச்சை செய்யப் பட்டுள்ளது. அறுவை முடிந்து கத்திரை உள்வைத்துத் தைத்த மருத்துவர்களின் கதையை அடிக்கடி சொல்லிச் சொல்லிச் சிரிப்போம். வலப்பக்கம் அறுக்கச் சொன்னால் இடப்பக்கம் அறுத்துபின் வாங்கிக் கட்டிக் கொண்டவர்களும் உண்டு.

நகைச்சுவைக்காக பத்திரிகைகளில் துணுக்காக வெளிவரும் முன்பெல்லாம். இப்போது செயலிலும் காட்டுகிறார்கள் போலும்.

reply to this comment

09/11 00:28:07

Padma Arvind wrote:

தாணு

பெரும்பாலோர் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் பொருளாதார ரிதியில் காப்பீடு இல்லை என்றால் பல மருத்துவமனைகள் உதவும். மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி போன்ற இடங்அளில் இலவச மருத்துவ உதவி உண்டு. பல இடங்களில் இலவச பரிசோதனைகள் வழக்கமாக கிளினிக்குகள் நடத்த படுகின்றன. இன்னும் விவரம் தெரிந்தால், யாரை அணுக வேண்டும் என்று சொல்லலாம். இங்கே பிறந்தவர்களுக்கு மெடிக்கெய்டு, மற்ரும் family care (illegal immigrantsக்கும்) உதவுவார்கள்.

reply to this comment

09/11 12:29:50

Padma Arvind wrote:

மூர்த்தி,

தவறான அறுவை சிகச்சை: ஜிப்மரில் நான் இருந்த போது நடந்த முதல் இதய(Open heart) அறுவை சிகிச்சை தேவையே இல்லாத நோயாளிக்கு செய்ய பட்டது. அதேபோல AIIMS இல் ஒரு மத்திய மந்திரியின் மகன் கத்தரிக்கோலை உள்ளே வைத்து தைத்துவிட்ட வழக்கும் நடந்தது.

இங்கே யாருக்கேனும் பரவக்கூடிய நோய் இருந்தால் எல்லாரையும் பாதிக்கும் என்பதால் அனைவருக்கும் சலுகை உண்டு. அதுவும் illegal immigrant கருவுற்ற பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம்.

reply to this comment

09/11 12:33:14

Maya wrote:

நன்றி பத்மா அவர்களே..

ஒரு காய்ச்சல் என்றால் உடனே மருத்துவரிடம் போய் சிக்கிச்சை எடுப்பது தானே நல்லது..அமெரிக்காவில் அப்படி இல்லையே..

முதலில் appointment ..அந்த மருத்துவர் in network ல் இருக்கவேண்டும்..appointment கிடைக்க குறைந்தது இரண்டு நாள் ஆகும்..இதற்க்குள் காய்ச்சல் தானாக போய் விடும்..

சரி..உடனேயே போக வேண்டுமா?? emergency க்குதான் போக வேண்டும்..அதன் பிறகு வருமே ஒர் கட்ரினா(பில்லை சொன்னேன்)..

என்னைப் பொறுத்த வரை அமெரிக்காவில் மருத்துவம்,insuracnce மிகப் பெரிய வியாபாரம்.சேவை என்று சொல்லி விடாதீர்கள்..

sue பன்னுவார்கள் என்று சொல்லி சொல்லியே premium ,bill ஏற்றி விடுவார்கள்..

அன்புடன்

மாயக்கூத்தன் கிருஷ்ணன்

reply to this comment

09/11 14:22:48

padma arvind wrote:

உண்மைதான். என் பதிவிலேயே கூட இருக்கிறது. உடனே பார்க்க வேண்டும் என்றால், நீங்கல் PCP ஐ தேர்ந்தெடுக்கும் போதே walk in clinic இருக்கிறவராக தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதேபோல நல்ல காய்ச்சல் இருந்து அவசர சிகிச்சைக்கு போனால், காப்பீடே பணம் கட்டிவிடும். நீங்கள் மேலோட்டமாக சொல்கிறீர்கள். சமீபத்தில் ஒரு குழந்தைக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சை +20 நாட்கள் + இன்னொரு சிகிச்சை அட்ரீனல்+ 250,000$. காப்பீடு இல்லை. பணம் கட்டியது எங்கள் துறை. இது போல வருடத்திற்கு நாங்கள் செலவழிக்கும் பணம் கிட்டதட்ட 1 பில்லியன் $. இவை ஏழைகளுக்கு. மற்றபடி என் பதிவில் சேவை என்றெல்லாம் நான் மிகைபடுத்தி எழுதவில்லை.

reply to this comment

09/11 15:47:08

Maya wrote:

பத்மா அவர்களே ,

தயவு செய்து தவறாக நினைத்து விடாதீர்கள்.இந்தியாவில் இந்தப் பொருளாதாரத்திலும் இலவச மருத்துவமனை உண்டு.தரம் வேண்டுமானால் அமெரிக்கா அள்விற்கு இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அமெரிக்கா உலகிலேயே பொருளாதாரத்தில் மிக உயர்ந்து இருந்தாலும் காப்பிடு

ஒருவனுக்கு இல்லை என்றால் அவன், அவன் சார்ந்த குடும்பங்களின் கதி என்னவாகும்..

இங்கு எத்தைனையோ பேர்கள் அடுத்த வேலை கிடைக்கும் வரை காப்பிடு இல்லாமல் கஷ்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்..உங்களுக்குத் தெரியாதா ?? cஒப்ரா இருந்தாலும் அதுக்கு உண்டான ப்ரெமிஉம் உங்களுக்குத் தெரிந்திருக்குமே…

நீங்கள் கூறுவது போல் நான் மேலோட்டமாகப் பேசலாம்..நானும் ஒத்துக்கொள்கிறேன்..உங்களுடைய பதிவுகளையும் படித்து வருபவன்..உங்கள் மூலம் விஷயங்களை அறிந்தும் கொள்கிறேன்..கண்டிப்பாக் உங்களைப் போன்றவர்களின் சேவை தேவை.

தயவு செய்து உங்களையோ உங்கள் எழுத்துக்களையோ நான் குறை கூறவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

அன்புடன்

மாயக்கூத்தன் கிருஷ்ணன்.

reply to this comment

09/11 17:00:19

padma arvind wrote:

மாயக்கூத்தன்

தவறாக நினைக்க எதுவும் இல்லை. காப்பீடு இல்லாமல் கச்டப்படுகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவு படுத்த இருக்கிறேன். இங்கே உள்ள குறைகளையும் சொல்ல இருக்கிறேன்.நம்மைப்போல உள்ளவர்களுக்கு பல வாய்ப்புகள் இருப்பது தெரிவதில்லை. இங்கே இலவச மருத்துவ வசதிகளும் உண்டு.40 மில்லியனுக்கும் அதிகமானோர் இங்கே காப்பீடு வைத்திருக்கவில்லை. இதை பற்றி இன்னும் விவரமாக, தொலைபேசி எண்களோடு எழுதுகிறேன்.

இந்த ஒரு கருத்துக்கும் மாறுபட்ட கருத்து உண்டு. நான் உங்கள் பின்னூட்டங்களை பிரரின் பதிவுகளிலும் படித்து இருக்கிறேன்.இது இன்னும் 4 பதிவுகளாக எழுத இருக்கிறேன். அதேபோல இந்திய மருத்துவமனைகள் பற்றியும் அவற்றில் உள்ள சில நல்ல தன்மைகளை பற்றியும் எழுத இருக்கிறேன்

reply to this comment

09/11 19:48:08

Maya wrote:

மிக்க நன்றி பத்மா அவர்களே

உங்களுடைய பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

அன்புடன்

மாயக்கூத்தன் கிருஷ்ணன்

11/10: மார்பக புற்று நோய் தடுப்பு மாதம்
NIH மற்றும் center for disease control க்காகவும் நான் தயாரித்த மார்பக புற்று நோய் பற்றிய கையேட். தமிழோவியத்தில் வந்தாலும் இந்த நோயின் முக்கியத்துவம் கருதி இங்கே தருகிறேன். வரும் ஞாயிறன்று நியுஜெர்ஸியில் உட்பிரிட்ஜ் மாலில் இதற்காக நடை திட்டமிடப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் உலக அளவில் மார்பக புற்று நோய் தடுப்பு மாதமாக பரிந்துரைக்க படுகிறது. முன்காலத்தில் ஆசிய பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் வந்ததில்லை என்றாலும் பழக்கங்கள், சுற்று புர சூழல் இவற்றின் மாற்றத்தால் இப்போது அதிகம் பரவலாக காணப்படுகிறது.

நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவது அவசியம். இது மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். இன்று நான் மார்பக நிழல் படத்தின் முக்கியத்தைப் பற்றி பேசப் போகிறேன்.

நீஙகளோ, உஙகள் மருத்துவரோ அறியும் முன்ணே மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளைக் கண்டறிய உதவுகிறது.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நிழல் படம் எடுத்துக்கொண்டு உஙகளைக் காப்பற்றுவதோடு, உஙகள் சகோதரி, அன்னை, உறவினர் அனைவருக்கும் தெரியப் படுத்தி அவர்களையும் நோயிலிருந்து பாதுகாக்க உதவுங்கள். ஆண்களுக்கும் மார்பக புற்று நோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்கு நிழல் படம் அவசியம் இல்லை என்று எண்ணாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவது அவசியம். மார்பக நிழற்படம் எடுப்பதை குறித்து பல வேறு கருத்துக்கள் இருந்தாலும் அமெரிக்காவின் நோய்கள் தடுக்கும் நிறுவனம் (Center for disease control) இதை பின்பற்றுகிறது.

வயதாக, வயதாக இது அவசியம். இரண்டு வருடத்திற்கொருமுறை, நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவதும், மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுவதும் அவசியம். இதனால் மார்பகப் புற்றுநோய் மூலமாக வரும் இறப்பு விகிதம் குறையும். உணவு பழக்கங்கள், வாழும் சூழல் , காற்றில் உள்ள மாசு இவற்றினால் மார்பக புற்று நோய் வர வாய்ப்பு இருக்கிறது.

இங்கே மார்பக நிழல் படம் எடுக்கத் தயாராகச் சில குறிப்புகள் தருகிறேன்.

உங்களுக்கு மாதவிலக்கு இருக்குமானால், உங்களுடைய பரிசோதனையை சற்று தள்ளி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது மார்பகங்கள் சற்றே கடினமாக இருக்கும். அ தனால், வலி இருக்க கூடும்.

பரிசோதனை அன்று, அழகுப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். எந்தவித வாசனைத் திரவியங்களையும் பயன் படுத்தாதீர்கள்.இவை, நிழல் படத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணும். மிக எளிதாக ஆடை மாற்ற வசதியாக உடை அணிய வேண்டும்.

மார்பக நிழல் படஙகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று நோய்களைக் கண்டறியவும், மற்றொன்று வடிகட்டுவதற்கும் பயன்படுகிறது. நாம் முதலில் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் நிழல் படம் எடுப்பதைப் பற்றி அறிவோம்.

உங்களுடைய மருத்துவரின் முகவரியும், தொலைபேசியின் எண்ணும், முன்பு செய்துகொண்ட பரிசோதனை முடிவுகளும் கொண்டு வருவது அவசியம்.

மார்பக நிழல் படம் எடுக்க சில நிமிடங்களே ஆகும். இது மிக எளிது.

நீங்கள் ஒரு கதிர் வீச்சு கருவியின் முன் நிறுத்தப்படுவீர்கள். உங்கள் மார்பகம் ஒரு தட்டில் வைக்கப்படும். அதன் மேல் இன்னும் ஒரு தட்டு வைத்து மார்பகத்தை சற்றே அழுத்துவார்கள்.

ஒரு சில மணித்துளிகளுக்கு உங்கள் மார்பகம் தட்டையாக இருக்க வேண்டுவது அவசியம். மார்பகங்கள் தட்டையாக இருக்க வேண்டுவது அவசியம்.ஏனெனில் அப்போதுதான் கட்டிகளையும், மற்ற மாற்றங்களையும் அறிய முடியும்.

நிழல் படம் எடுக்கும் நபர் உங்கள் மார்பகங்களை இரண்டு படங்கள் எடுப்பார். ஒன்று பக்கவாட்டிலும், மற்றொன்று மேல்வாட்டிலும்.நிழல் படங்கள் ஒரு மருத்துவரிடம் கொடுக்கப் படும். அவர் உங்கள் படங்களில் ஏதெனும் குறைகள் இருக்கின்றனவா என்று பரிசோதிதுவிட்டு உங்களைத் தொடர்பு கொள்வார்.

நீங்கள் ஒரு வாரத்திற்குள் அழைக்கப் படவில்லையெனில், மருத்துவரைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

இவ்வகையான நிழல்படம் எடுக்க, மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிந்துரை செய்யப் படுகிறாள்…இது மார்பகத்தின் அளவிலோ, தோலின் நிறத்திலோ, தடிமன் சற்றே அதிகறித்தாலோ, மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வடிந்தாலோ நோய்க்கான அறிகுறிகளாகக் கொள்ளப் படும்.

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால், அவசியும் மருத்துவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் அணுக வேண்டும்.

இந்த அறிகுறிகள் சிலசமயம் புற்று நோயில் முடிவதில்லை. ஆனாலும் பரிசோதித்து அறியவேண்டியது முக்கியம்.

இன்று நாம் இந்த வகை அறிகுறிகள் இல்லாத, வடிகட்டுதலுக்கான நிழல் படம் பற்றிப் பேசுவோம்.

மார்பக நிழல் படம் எடுக்க ஆகும் செலவு:

வடிகட்டுவதற்காக நிழல் படம் எடுக்க $150 ஆகும்.

இவை தனியார் இன்சுரன்சு அல்லது மெடிக்கர் மூலம் கட்டப்படும்.

சில இனவழி சங்கங்கள், நிகழ்ச்சிகள் இவை இலவசமாக செய்து தருவார்கள்.

உங்கள் மருத்துவரை அணுகுங்கள்:

எப்போது நீங்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், எவ்வளவு மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மருத்துவரிடம் கேட்கவும். பிறகு ஒரு அட்டவனை செய்து கொள்ளவும், அதனை வாழ்நாள் முழுவதும் பயன் படுத்தவும்.

இன்று எல்லா பரிசோதனை நிலையங்களும் உணவு மற்றும் மருந்துகள் அனுமதிக்குழுவிடம் இருந்து அணுமதி பெறவேண்டும். இதனால் அவற்றின் தரம், கருவிகளின் நிலை, அங்கு வேலை செய்யும் மனிதர்களின் செயல் திறன், அவர்கள் வைத்து இருக்கும் படிவங்கள் ஆகியவற்றிற்கு உத்திரவாதம் தர இயலும்.

நீங்கள் அமெரிக்காவில் வாழ்பவர் என்றால் 1-800-4-கேன்சர் அழைத்து உங்கள் வீட்டுக்கருகே இருக்கும் பரிசோதனை நிலையம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

காத்திருக்காமல் இன்றே மருத்துவர்களை அணுகுங்கள். இது உங்கள் வாழ்வு.

மார்பக புற்று நோய் தடுக்கவல்ல காய்கறி: ப்ராக்கோலி எனப்படும் பூவகை. இதில் உள்ள இண்டோல் 3 சார்பினால் என்பது மார்பக புற்றுநோய்க்கு காரணமான ஜீன் அதிக அளவில் வீரியம் இல்லாததாக மாற்றுகிறது. எனவே வாரம் ஒருமுறை பிராக்கோலி சேர்த்து கொள்ளுங்கள். பிராக்கோலியில் நீர் அதிக உள்ளதால் இது எடை குறையவும் பயனாகிறது.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeKannan wrote:

இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி!

reply to this comment

11/10 23:30:18

R. Valavan wrote:

Dear authour,

Your article on breast cancer is very good and informative. Keept it up.

reply to this comment

12/10 02:55:13

thanu wrote:

பத்மா

இத்துடன் periodic self examination of the breast பற்றியும் சில வரிகள் சொல்லியிருக்கலாம். பின்னூட்டத்தில் சொல்லிவிடுங்கள்.

reply to this comment

12/10 03:51:43

asalamone wrote:

Thanks Lot for your article about breast cancer.

Please keep some more update in future that we expect from you.

thanks and regards

asalamone

Bahrain

reply to this comment

18/10 04:12:59

Padma Arvind wrote:

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றிகள். தாணு: சுய பரிசோதனி செய்யும் முன் தங்கள் மார்பகங்கள் எப்படி இருக்கின்றன என்பதையும் உணர வேண்டும். இல்லை எனில் பல பயங்களை தோற்றுவிக்க கூடும் என்பதால்தான் எழுதவில்லை. நான் ஒரு அட்டை தயாரித்திருக்கிறேன் சுயபரிசோதனை செய்து கொள்ளும் முறைகள், விளக்க படங்களுடன். விரும்புகிறவர்கள் தொடர்பு கொண்டால் அனுப்பிவைக்க இயலும்.

reply to this comment

18/10 08:18:39

கல்வெட்டு wrote:

பத்மா நல்ல தவல்கள்.

X-Ray யைத்தானே நிழல் படம் என்கிறீர்கள்?

reply to this comment

18/10 08:44:37

DJ wrote:

பத்மா, இப்போதுதான் இதை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. தேவையான பதிவு. நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஆசியப்பெண்களுக்கும் இந்நோய் இப்போது அதிகமாய் வருகின்றது என்று நினைக்கின்றேன். இங்கும் எனக்குத் தெரிந்த பலர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இன்னமும் இது குரித்து சரியான அறிவும், மார்பகப் புற்றுநோய் வந்தால் சமூகம் எப்படி தங்களை பார்க்கும் என்ற தயக்கமும் பலரைப் பரிசோதனைனைகளில் ஈடுபடாமல் தவிர்க்கச் செய்கின்றது. அமெரிக்கா போலல்லாது (விரைவில் சுகாதார சேவைகளை கட்டணமாக்கவேண்டும் என்று விவாதம் நடந்துகொண்டிருந்தாலும்) இலவசமாக இப்பரிசோதனைகளை குடும்ப வைத்தியர்களின் சிபாரிசுகளில் மூலம் செய்யலாம். வலைப்பதிவுகளில் எழுதப்படும் இவ்வாறான விழிப்புணர்வுக்கட்டுரைகளை விரிவான தளத்தில் சமூகத்துக்குள் கொண்டு சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

04/10: குழந்தைகள் நன்றாக படிக்கவில்லையா?
குழந்தைகளின் அறிவு மதிப்பெண்களால் நிச்சயிக்க படுகிறது என்பதில் ஓரளவாயினும் உண்மை இருக்கிறது. என் பெண்/பிள்ளை நல்ல மதிப்பெண் எடுக்க என்ன செய்யவேண்டும் என்ற கேள்விகளை மருத்தவரின் கேள்வி பதில் முதல் ஜோதிட கேள்வி பதில் வரை பார்க்கிறேன். அந்த பெண்ணைவிட உனக்கு எல்லா வசதிகளும் இருக்கு, அதே க்ளாஸ்தான் ஒரே டீச்சர்தான் ஏன் உன்னால மார்க்கு வாங்க முடியல என்பதில் தொடங்கி வீட்டுக்குள்ளேயே சகோதர சகோதரிகளிடையே வெறுப்பு வரும் வரை இந்த ஒற்று நோக்குதலும் நடக்கிறது. உண்மையில் இது ஒரு உடல்தன்மையாக கூட இருக்க கூடும்.

டிஸ்லெக்ஸியா என்பது ஒரு நரம்புமண்டலத்தை சார்ந்த ஒருவகை மாற்றம். இதனை நோய் என்று சொல்வதைவிட நேர்முறைக்கு மாறான ஓட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இதன் அடிப்படை அறிகுறி ஒ ருவருக்கு படிப்பதில் அல்லது எழுதுவதில் உள்ள தடுமாற்றமே ஆகும். இது சில உயிர்வேதியியல் மற்றும் மரபணுக்களின் குறியீடு மாற்றத்தால் வரும் ஒரு மாறுபட்ட சிந்தனை ஆகும். ஆனால் சிலர் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்க பட்டிருந்தாலும் நன்றாக சரளமாக படிக்க கூடும். இவர்களின் சிந்தனை ஓட்டம் சற்றே தடை பட்டு இருக்கும்.

1887 இல் முதன் முதலாக இம்மாதிரி மாற்றங்களுக்கு டிஸ்லெக்சிக் என்ற பெயர் சூட்டப்பட்டது. இப்படி பட்ட மாற்றங்கள் உள்ளவர் அவரை ஒத்த மற்றவரைவிட எழுத படிக்க யோசிப்பதில் என்று ஒரு தரம் தாழ்ந்திருப்பதாக அறியப்படுகிறது.

கண் பார்வை சரியில்லாமல் போனால் இத்தகு மாற்றம் ஏற்படுமா அல்லது வேறு ஏதாவது நுண்ணிய நரம்பு மண்டல மாற்றங்களால் ஏற்படுகிறதா என்றூ ஆராய்ந்ததில், மூளையின் அமைப்பில் வெளி தோற்றத்தில் சில மாறுதல்கள் இருப்பது தெரியவந்தது. டிஸ்லெக்ஸியா இருப்பவர்கள் சரியாக உச்சரிக்க கூடிய சக்தியை குறைவாக பெற்றிருப்பார்கள். டிஸ்லெக்ஸிக் உள்ளவர்கள் கீழே உள்ள பட்டியலில் ஏதேனும் சில அறிகுறிகளை கொண்டிருப்பார்கள். இவை நிமிடத்திற்கு நிமிட ம் மாறக்கூடும். அல்லது நாளாக நாளாக இன்னும் குழப்பமும் தெளிவின்மையும் அதிகரிக்க கூடும்.

பொது(general)அறிகுறிகள்

•பார்க்க நல்ல புத்திசாலிபோலவும், நல்ல ஆற்றொழுக்கு பேச்சும் உடையவராக இருக்க கூடும். ஆனால் அவரின் வகுப்பு மாணவர்களை போல எழுத படிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.

•சோம்பேறி என்றோ, இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் உன்னால் முடியும் ஆனால் நீ உழைப்பதிலை என்று சொல்லும் வண்ணம் இருப்பார்கள்.

•சில சமயம் நல்ல பொது ஞானம், அ றிவு உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் எந்த தேர்வும் நன்றாக எழுத மாட்டார்கள். ஆனால் அதே சமயம் கேள்விகள் கேட்டால் நன்றாக பதில் சொல்வர்கள்.

•முட்டாளை போல தோற்றமும். தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவும், தனியே இருப்பதை விரும்புவராகவும் இருப்பார்கள்

•நல்ல தொழில் திறமை கொண்டிருப்பார்கள். பாடுவது, ஓவிய வரைவது போன்ற கலைகளில் அல்லது நல்ல கருவிகளில் (Mechanics) தேர்ச்சி உடையவராக இருப்பார்கள்.

•பகற்கனவு காண்பவராக இருக்க கூடும்

•நல்ல படங்களுடன் கூடிய பாடங்கள், தானாகவே செய்யும் சோதனைகள் மூலம் கற்றல் இவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் சிந்தனை படங்களையும் பார்க்க கூடிய விளக்கங்களாலும் மேலும் நுணுக்கம் பெறுகிறது.

பார்வை, படித்தல், மற்றும் எழுத்துப்பிழைகள்:

•படிக்கும் போது தலை வலிப்பதாகவும் தலை சுற்றுவதாகவும் சொல்வார்கள்.

•எழுத்துக்கள், எண்கள், சொற்கள் இவற்றில் பல குழப்பங்கள் இருக்கும்

•திரும்ப திரும்ப வரும் சொற்களில் குழப்பம், மாறிவரும் எழுத்துக்களின் தடுமாற்றம், எழுத்துக்களை மாற்றி படித்தல் இவை சாதாரண நிகழ்வுகள்.

•கண்களில் குறை இருப்பதாக சொல்வார்கள். ஆனால் கண்களிலோ பார்வையில் ஒரு குறையும் இருக்காது

கேட்டல், பேசுதல்:

அதிக நேரம் கேட்பதுபோல உணர்வார்கள், சொல்லாததை சொன்னதாகவோ சின்ன சின்ன சப்தங்கள் கூட கவனத்தை சிதைக்க கூடியதாக உணர்வார்கள். அதிக மன அழுத்தம் இருப்பின் தவறுகள் அதிகம் செய்வார்கள். மேலும் முழுமையான வாக்கியங்கள் அமைக்க மிகவும் கஷ்டப்படுவார்கள்.

எழுதுதல் மற்ரும் இயக்க திறமைகள் ( Motor skills):

பென்சிலை பிடித்து கொள்வதில் மாற்றம் இருக்கும். கை எழுத்து நன்றாக இருக்காது. புரிந்து கொள்வது மிகவும் கடினம்.

இடமிருந்து வலமாக எழுதுவதோ அல்லதுஇடது கை பழக்கம் உள்ளவராக இருக்க கூடும்.

நேரம் தவறாமை, அல்லது நேர நிர்வாகம்:

இவர்களுக்கு நேரம் சொல்வது கடினம். ஒரு வரிசை கிரமத்தில் வேலைகள் செய்வதும் நினைவில் வைத்து கொள்வதும் கடினம்.

பண விஷயத்தில் கவனம் போதாது. எண்னுதல் மிகவும் கடினமான செயல்.

கணக்கில் விவரங்களுடன் கூடிய கணக்குகளை போட சிரமப்படுவார்கள்.

நினைவுத்திறனும் புரிந்து கொள்ளும் திறனும்

நீண்டநாட்களுக்கு முன் நடந்ததை எல்லா விவரங்களுடனும் நினைவு வவத்திருப்பார்கள். மனித முகங்கள், நிகழ்வுகளை நினவு கொள்ளும் இவர்களால் பெயர்களையோ அல்லது சற்றே எண்களுடன் கூடிய விவரங்களையோ நினைவு படுத்த முடியாது.

சில உண்மைகளும் புள்ளிவிவரங்களும்

5 இலிருந்து 15% மக்கள் டிஸ்லெக்ஸிக் என்று சொல்ல பட்டாலும் நல்ல மருந்துகள், கவனம் இவற்றால் இதை குணப்படுத்த முடியும். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.

ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகள் நன்றாக வாய்விட்டு படிக்க தடுமாறும் போது டிஸ்லெக்சியா இருப்பது பெரும்பாலும் கண்டுபிடிக்க படுகிறது. இது கண் பார்க்கும் எழுத்து வடிவத்திற்கும், மனதில் பதிந்துள்ள ஒலி வடிவத்தையும் பொறுத்தி பார்க்க தாமதம் ஆவதால் ஏற்படும் தடுமாற்றம் ஒரு காரணம். இதற்கு பெரும்பாலும் பிறக்கும் போதே நடக்கூடிய நிகழ்வுதான் காரணம் என்பதால் சுற்று புர சூழலோ மற்ற வேதி பொருட்களின் தன்மையோ காரணம் இல்லை. இவர்களின் இடது பக்க மூளளயில் நடக்கும் செயல்கள் சற்றே தாமதமாக செயல் படுவது காரணமாக சொல்ல படுகிறது.

எப்படி குணப்படுத்த முடியும்?இப்படிப்பட்ட குறையுள்ள குழந்தைகளுக்கு வார்த்தைகளை பிரித்து பொருள் சொல்லி தருவதை வழக்கமாக கொள்ள வேண்டும். வார்த்தைகளை பிரிக்கும் போது ஒலியில் வரும் சிறிய மாற்றங்களை உணரும் வண்ணம் சொல்லி தந்தால் நாளாவட்டத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

.இடது பக்க மூளை வடிவங்கள் அவற்றின் அமைப்புகள் இவற்றில் திறன் கொண்டது. இது இடது டெம்ப்போ பெரைடல் மூளைக்கு அருகில் உள்ளது. எனவே படங்களுடன் கூடிய வார்த்தைகளை அவற்றின் ஒலியை புரிந்து கொள்ளுதல் எளிதாக வரும். மிக இளைய வயதிலேயே கண்டறியப்பட்டால் இது பூரணமாக குணமாக வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு வயதுக்கேற்ப சில வேலைகளை சொல்லி தாருங்கள். அவற்றை செய்யும் போது அவற்றுடன் கூட நேரம், அவற்றின் வடிவம் இவற்றையும் பதிய வைக்க முயற்சி செய்யுங்கள். ஒரு அறை யில் உள்ள தொலை பெட்டியை சுத்தம் செய்தால் அதன் வடிவம் மனதில் பதிய வைக்க முடியும். துடைக்கும் பொது கைகளால் அதன் வடிவத்தை ஒற்று நோக்குவதால் வடிவம் புலப்படும். மேலும் இது போன்ற சின்ன செய்கைகள் அவர்களின் தாழ்வு மனப்பானமையை போக்குவதோடு, அவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுகிறது.

ஒரு முக்கிய குறை இரு கண்களையும் ஒரு நேரத்தில் ஒரு சொல்லில் குவிப்பது. இது பலநேரங்களில் டிஸ்லெக்ஸிச் மானவர்கள் எழுத்துக்கள், எண்கள் இவற்ரின் வரிசை கிரமத்தில் குழப்பம் அடைவதை விளக்குகிறது. வலது கண் சொல்லின் ஆரம்பத்திலும் இடது கண் சொல்லின் முடிவிலும் ஆரம்பித்து இரண்டையும் ஒன்றாக பார்க்கிறார்கள். இதற்கு கண்ணில் ஒருவித கறுப்பு patch அணிந்து கொண்டு படித்தால் சரியாவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

மேலும் கண்களின் தொடர்பான சில நியுரான்கள் குவிக்க படுவதால் மூளையில் உள்ள பார்வை மையத்தில் தொடர்பு ஏறபட தாமதம் ஆகிறது. அதேபோல க்ரோமோசோம் 1, 6 இவற்றில் உள்ள மூலக்கூறுகளின் அமைப்பிற்கும் டிஸ்லெக்ஸிற்கும் தொடர்பு இருக்க கூடும்.

இது போல சில குறைபாடுகளால் குழந்தைகள் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். அல்லது நன்றாக படிக்க முடியாமல் போகலாம். அடிப்படை குறைபாடுகளை புரிந்து கொள்ளாமல் நன்றாக பழகுவதில்லை, படிப்பதில்லை, கவனம் போதாது என்று குறை கூராமல், குறைகளை களைய அறிவியல் ரீதியில் முயன்றால் நிச்சயம் குழந்தைகள் நன்றி உடையவர்களாக இருப்பார்கள்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeசுரேஷ் wrote:

டிஸ்லெக்ஸியா என்றால் 19 என்பதை 91 என படிப்பதோ இல்லை எழுதுவதோ என்பது போன்ற குறை உள்ளவர்கள் என எண்ணியிருந்தேன். உங்கள் பதிவு தெளிவுபடுத்தியுள்ளது. நன்றி பத்மா.

reply to this comment

04/10 20:29:31

துளசி கோபால் wrote:

இங்கே இந்தமாதிரி இருக்கற குழந்தைகளுக்கு நாங்கள்

பேரண்ட் ஹெல்ப்பர்ஸ் பள்ளிகளிலே உதவிசெய்யறோம்.

ஒன் டு ஒன் பேசிஸ்லே தனியா அவுங்களுக்குப் படிச்சுக் காட்டுறது,

எழுத வைக்கிறதுன்னு.

இது ஆரம்பப் பள்ளிகளில் மட்டும்தான்.

நல்ல பதிவு பத்மா.

reply to this comment

04/10 20:59:39

thanu wrote:

இப்போ எங்க ஊர் மாதிரியான சின்ன டவுணில் கூட இத்தைகைய குழந்தைகளை கண்டுபிடித்து தனிப்பட்ட முரையில் பயிற்சி கொடுக்கிறார்கள். அத்தைகைய தெரிவு செய்வதற்கு வேண்டிய பயிற்சி ஆசிரியர்களுக்கும் தரப் படுகிறது. ஆரம்பத்தில் தங்கள் குழந்தை இவ்வாறு தெரிவு செய்வதை எதிர்த்த பெற்றோரும் , ஓரளவு விழிப்புணர்ச்சி பெற்று பயிற்சிக்குக் கூட்டி செல்கிறார்கள். இது சம்பந்தமாக ஏதேனும் தகவல் அட்டைகள் இருந்தால் மெயிலில் அனுப்புங்கள் பத்மா.

reply to this comment

05/10 11:06:00

Padma Arvind wrote:

நன்றி சுரேஷ். துளசி: இங்கே பள்ளிகளி அவர்களுக்கு மாலையில் இலவசமாக தனி வகுப்பு எடுக்கிறார்கள். பெற்றோர்களுக்கும் அறிவுறை வழங்க படுகிறது

தாணு: கையேடுகள் உண்டு. விரைவில் அனுப்புகிறேன்

07/06: மார்பகங்கள் அழகா அவஸ்தையா
பெண்பால் என்பதும் பெண்மை என்பதும் வெவ்வேறானது. சமுதாயத்தில் பெண்மை என்பது ஒரு சில கடமைகளை குறிக்கிறது.பெண் என்றால் சில கட்டாயங்களும் அழகின் அளவுகளும் வரையறுக்கப்பட்டன. பெண்களின் மார்பகங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டவே என்றாலும் இனப்பெருக்கத்தின் ஒரு உப அங்கமாக இருப்பதால் பெரும்பாலும் விமரிசினத்திற்கும், விவரிப்புக்களுக்கும் ஆளாகிவிட்டது.

கருத்தன எந்தைதன் கண்ணன வண்ண கனக வெற்பிற்

பெருத்தன பாலழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்

திருத்தனபாரமும் என்று துதிக்கும் பாடலாகட்டும், பாலிருக்கும் கிண்ணம் மேலிருக்கும் வண்ணம் என்று சொல்லும் திரைபட பாடலாகட்டும், வாடுவது மின்னார் மருங்குல் (முலைகளின் பாரம் தாங்காமல்) என்று சொல்லும் இலக்கியமாகட்டும் மார்பங்கள் வர்ணிக்க படுவது அதிகம்.

அறிவியல் ரீதியாக பல தவறானகருத்துக்கள் படித்தவரிடையேகூட பரவுகிறது.சமீபத்தில் மதனின் கேள்வி பதில் பகுதியில் கருவிலேயே குழந்தையின் இன்ப்பெருக்க உறுப்பௌகள் வளரத்தொடங்கிய உடனேயே மார்பக வளர்ச்சி ஆண்களுக்கு முடிந்துவிடுவதாக படித்தேன். இது சரியல்ல.

ஆண்களின் மார்பகங்கள் ஈச்ட்ரொஜன், ப்ரொஜெச்டிரொன் போன்ற பெண் தன்மை ஹார்மோன்கள் இல்லாமையால் அவளர்வது இல்லை. சில சமயம் பதின்ம வயதில் டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் காலம், சிறுவர்களுக்கு மார்பகங்கள் சற்றே வளர்ந்து பின் தனிந்து விடுவதை காணலாம்.இப்போது முன்னைவிட அதிகமான ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதும்கூட மருத்துவ உலகில் காணலாம்.

பெண்களுக்கு இது இனப்பெருக்கம், பால் ஊட்டும் பயன் ஆகியவற்றைவிட ஒரு அழகின் அம்சமாக பலராலும் பார்க்க படுகிறது.சமூகத்தில் பெரிய மார்பகங்கள் ஒரு கட்டாயமாக பார்க்கப்பட்டு அதன் மூலம் பென்கள் பலவித இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

எப்போது வாய்ப்பு கிடைக்கும் தொட்டு துன்புறுத்தலாம் என்று காத்திருக்கும் சில நடுத்தரவயது ஆண்கள்,கேலி செய்து பேசி அந்த சில நிமிடங்களே ஆனாலும் மோதி சுகம் காணும் சில கீழ்த்தரமான ஆண்கள், பிளவைகாட்டும் விதம் உடை உடுத்த வைத்து படம் எடுத்து தள்ளும் நிருபர்கள் என மார்பங்களால் கிறுகிறுத்து போனவர்கள் ஏராளம். மாதாமதம் அதே மார்பகங்கள் வலிக்கும்போதும் இந்த கலை உலக , மாடலுலக பெண்களுக்கு விடுப்பு கிடப்பதில்லை. கிடைத்தால் வாய்ப்பு போய்விடுமோ என்று அல்லலுறும் கட்டாயம். பலருக்கு என் சிறிய மார்பகங்கள் இருப்பின் பால் அதிகமாக சுரக்காது போன்ற தவறான கருத்துக்கள் ஒரு புறம். பிறந்தநாளுக்கு கார் வேண்டுமா என்றால் இல்லை மார்பக அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் என்று அல்லலுக்கு உள்ளாகும் பெண்கள், மார்பகங்களை பெரிதாக்க வழி சொல்கிறேன் என்று காசு பார்க்கும் சில அழகுத்துறை அறுவை சிகிச்சையாளர்கள், மற்றும் செயற்கை மார்பகங்களை செய்கிறேன் என்று இலாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள், இந்த பசையை தடவிக்கொள், இந்த மருந்தை சாப்பிடு என்று பொருளீட்டும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இவை யாவும் வெள்ளை மாளிகையில் தங்கி தங்களுக்கு பாதகமாக எந்த கொள்கையும் வரவிடாமல் தடுக்கும் பண முதலைகளும், ஊ டகங்கள் மூலம் அதிக பணம் செலவழித்து பெண்ணின் அழகை நிர்ணயிக்கும் இந்த கூட்டம் மறுபுறம்.

சாதரணப் பெண்களுக்கு இந்த நிலை என்றால், மார்பக புற்றுநோய் வந்து ஒரு மார்பகத்தை இழந்த பெண்ணை சமூகம் பார்க்கும் பார்வை கொடியது. கை, கால் இல்லாதவர்களிடம் காட்டும் அக்கறை இல்லை என்றால் கூட பரவாயில்லை. இந்த பெண்களை செயற்கை முறை மார்பகங்களை பொறுத்திக்கொள்ள சொல்லி ஒவ்வொருமுறையும் கருத்து தரும் மருத்துவர், நண்பர்கள் என இவர்களின் மன உளைச்சலுக்கு அளவில்லை. அட்ரே லார்ட்ஸ் என்ற பெண் உளவியல் நிபுணர், கறுப்பின பெண்களுக்கு ஆதரவாய் போரிடுபவர் தன்னுடைய மார்பகத்தில் புற்று நோய் வந்து அதை நீக்கி கொண்டபோது, அவர் செயற்கை மார்பகத்தை வைத்து கொள்ள வில்லை என்று பல இடங்களில் அனுமதி மறுக்க பட்டதை எழுதியிருந்தார். மார்பக நிழற்படம் எடுக்கும் இடத்தில் சட்டையின்றி பல நேரம் காத்திருந்த பெண், ஒரு கட்டத்தில் சினத்துடன் அப்படியே பார்வையாளர் இருக்கும் இட்த்திற்கு வந்து சப்தம் போட்டிருக்கிறர். பலரும் (மருத்துவமனை ஊழியர்கள்) என்னை காக்க வைத்து உற்று நோக்கும் மார்பங்களை நீங்களும் பாருங்கள் என்று சொன்ன அந்த பெண் காவலர் கொண்டு நீக்க பட்டதும், மருத்துவமனிக்கு டீசண்டான நோயளிகள் வருவது இது போன்றவர்களால் பாதிக்க படலாம் என்றும் சொல்லி அந்த பெண் மீது குற்றம் சாட்டபட்டது.

டாலி பர்டன் தன்னுடைய செயற்கை மார்பங்களை வைத்து கொண்டு சிலிகான் பரவி புற்று நோயால் அவதிப்பட்ட போது அவருடைய ஆதரவாளர்கள் அவருடைய செயற்கை மார்பகங்கள் நீக்கினால் அவருடைய கலை வாழ்வு தோல்வி அடந்துவிடும் என்று சொன்னதாகவும் வருந்தியதை படித்திருக்கிறேன்.

இவை யாவும் இப்போது ஏன் எழுதுகிறேன் என்றால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு பெண், 60 வயதிருக்கும். ஒரு உடல் நல கூட்டத்தின் போது கோவிலுக்கு வந்தவருக்கு சோதனை செய்ய கட்டி இருப்பது போல இருந்ததால், நிழற்படம் எடுத்துக்கொள்ள அனுப்பி இருந்தோம். கட்டி உறுதி படவே அவருடைய கணவரைஅணுகி கட்டியை நீக்க வேண்டிய அவசியத்தை சொன்னோம். மார்பகங்களை நீக்குவதன் மூலம் தன் மனைவி பெண்மையை இழந்து விடுவதாக பலர் நம்புவதாலும், பெண்கள் தங்கள் கணவன் தன்னை விட்டு விடுவான் என்ற பயத்தினாலும் கட்டி என்று சொன்னாலும் நம்ப தயராயில்லை. புற்று நோய்க்கும் பின் மார்பகங்களை நீக்க நேர்ந்தால் இவர்கள் படும் மன உளைச்சல் அதிகம். குழந்தை பிறந்த பிறகு பால் சுரக்கும் போதும், அது சீராக வெளிவருவதன் முன் பெண்கள் படும் வேதனையும் வலியும் அளவிட முடியாது.இப்போதாவது செயற்கை சாதங்களும் மருத்துவ மனை செவிலிகளின் ஒத்துழைப்பும் உதவியும், அனுசரணையாக இருக்கும் கண வ மார்களும் உண்டு. மூன்று பிள்ளைகளை பெற்று பாலூட்டி வளர்த்தவளுக்கு கட்டி என்றும் அதை நீக்க வேண்டும் இல்லை எனில் புற்று நோயாய் மாறிவிடும் என்றும் சொல்லியும் மறுத்து விட்ட கணவன், அன்னையின் வலியை வேதனையை பொருட்படுத்தாத பிள்ளைகள் என்று அவர் மிகவும் உதாசீனப்பட்டு போனார். தனக்கு அதிகம் உடலுக்கு வந்து விட்டால் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று எண்ணி தன் அமெரிக்க அடுத்த வீட்டுகார பெண்ணிடம் சொல்லி அழுதிருக்கிறார்.நோய்வாய்ப்பட்ட பெண்னின் கணவர் 9 மணிக்கு அலுவலகம் சென்றுவிடுவார் என்பதால், அவர் சென்றபின், அந்த பெண்ணை அழைத்துவர எங்கள் மருத்துவரிடம் நேரம் ஒதுக்கி வாங்கி அமெரிக்க பெண் அவரை அழைத்து வந்தார். 2 மணி நேரம் ஒய்வுக்கு பின் மீண்டும் எதுவும் நடக்காதது போல பெண் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். அன்றே வழக்கம் போல இரவு உணவும் படைத்திருக்கலாம்.

இதுவே ஓரின சேர்க்கையில் விருப்பம் உள்ள பெண்களாய் இருப்பின் சில மருத்துவர்கள் சாதரண கட்டிக்கே கூட உங்களுக்கு மார்பகங்கள் எதற்கு என்று சொல்லி அவற்றை நீக்கிவிடுவதாகவும் பல புகார்கள் உண்டு. இவர்களுக்கு ஆதரவாக இப்போது ஹிலரி கிளிண்ட்டன் முதல் பலர் போரிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeபொடிச்சி wrote:

–இவை யாவும் வெள்ளை மாளிகையில் தங்கி தங்களுக்கு பாதகமாக எந்த கொள்கையும் வரவிடாமல் தடுக்கும் பண முதலைகளும், ஊ டகங்கள் மூலம் அதிக பணம் செலவழித்து பெண்ணின் அழகை நிர்ணயிக்கும் இந்த கூட்டம் மறுபுறம்–

–இதுவே ஓரின சேர்க்கையில் விருப்பம் உள்ள பெண்களாய் இருப்பின் சில மருத்துவர்கள் சாதரண கட்டிக்கே கூட உங்களுக்கு மார்பகங்கள் எதற்கு என்று சொல்லி அவற்றை நீக்கிவிடுவதாகவும் பல புகார்கள் உண்டு–

நன்றி பத்மா. நல்ல பதிவு. எப்பவும் தண்டனை தரத் தயாராய் இருக்கும் சமூகம். பெண்ணை தன்னுடைய தோற்றம் பற்றிய மிதமான கவலைகளில் நிறுத்தி மேலே செல்லவிடாமல் தமது நலன்களை பூர்த்தி செய்தபடி இருக்கிறார்கள்.

reply to this comment

07/06 20:48:32

குழலி wrote:

என்ன பின்னூட்டம் இடுவது என எனக்குத்தெரியவில்லை, ஆனாலும் பெண்களின் பிரச்சினையின் இன்னொரு பரிமாணம் புரிகின்றது

reply to this comment

07/06 21:10:55

துளசி கோபால் wrote:

அன்புள்ள பத்மா,

மார்பகங்கள் அழகே கிடையாது. பெரும்பாலும் அவஸ்தைதான்!

reply to this comment

07/06 21:32:42

அல்வாசிட்டி.வி wrote:

பத்மா, நல்ல பதிவு. முதலில் இந்த கருத்தை வெளிக் கொண்டுவந்ததற்கு வாழ்த்துக்கள்.

பிறந்த உடன் பசி போக்க தாயின் மார்பங்களை தேடுபவர்கள் வளர்ந்த பின் பார்வை மாறி சுகத்துக்காக பிறர் மார்புக்காக அலையும் அவல நிலை. உயிர் ஜனிப்புக்கு எதிர்பாலிடம் தோன்றும் கவர்ச்சிக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் சில உறுப்புகள் இருக்கிறது என்ற அறிவியல் சொல்லலாம். இந்த பார்வை மாற்றத்துக்கு ஹார்மோன் என்று அறிவியல் பூர்வமாக சொல்லப்பட்டாலும் இனப்பெருக்கத்துக்கு மட்டுமே எதிர்பாலிடம் தோன்ற வேண்டிய அந்த இனகவர்ச்சியை வக்கிர புத்தியாக மாற்றி யாரை பார்த்தாலும் அதே வக்கிர புத்தியோடு பார்க்க வைப்பதில் மீடியாக்களும், புத்தகங்களும் தவறுவதில்லை.

என் அத்தை மார்பக புற்றுநோய் வந்து சிறிது சிறிதாக ரத்தம் வடிந்து, கட்டி பரவி,அழுகிய நாற்றத்தில் வாழ்ந்து இறந்துப் போனதை கண்கூடாக பார்த்து பாதிக்கப்பட்டவன். வக்கிர பார்வை தோன்றும் போது அந்த பாதிப்பு என்னை பயமுறுத்தி மீண்டும் மீண்டும் வக்கிரபார்வையிலிருந்து மீளச்செய்கிறது.

மீடியாக்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை வலியுறுத்த எழுதிய என் http://halwacity.blogspot.com/2005/06/blog-post_111816007671502502.html… இந்த பதிவு அறைகுறையாக எழுதி ஏறக்குறைய குமுதத்துக்கு விளம்பரம் மாதிரி ஆகிப்போனது.

reply to this comment

07/06 21:38:20

தங்கமணி wrote:

நல்ல பதிவு பத்மா. இது பற்றி பதிவு செய்யப்பட்டவைகள் ஆண்களின் நோக்கிலேயே என்பதாலேயே கோவில் சிற்பங்கள் தொடங்கி கவிதைகள் வரை வெறும் கவன ஈர்ப்பு பிரதேசங்களாகவே இருக்கின்றன. முலைகள் என்ற கவிதையும், பெண்மொழியும் தமிழர்களை அதிர்ச்சி அடையச்செய்ததுடன், தங்களது நம்பிக்கைகள் கலைகின்றது என்ற பயத்தில் ஓலமிடவும், கண்டனம் செய்யவும் தூண்டுகின்ற நிலையில் நமது பார்வை இறுகிப்போய் இருக்கிறது.

reply to this comment

07/06 21:44:39

நாராயணன் wrote:

நல்ல பதிவு பத்மா. செயற்கை மார்பகங்கள் வைத்துக் கொள்ளுதல் ஒரு தலைமுறையின் அடையாளமாக மாறிப் போனது அமெரிக்க வாழ்வின் அலங்கோலம். சில மாதங்களுக்கு முன் “டெமகரசி நொவு” இதழில் செயற்கை மார்பகங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களும், அது சமூக கலாச்சார வெளியில் உண்டாக்கும் மாறுதல்கள் பற்றிய ஒரு கட்டுரையினைப் படித்தேன். நீங்கள் சொன்ன கறுப்பின இனவாதம் இன்னமும் முழுதுமாக போகவில்லை என்பதை அக்கட்டுரையும் உணர்த்தியது.

வொண்டர் பிரா என்கிற நிறுவனம் இன்னமும் அதிகமாக பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஊடகங்கள் மார்பகங்களை கையாளும் முறைதான். விஜய்யின் பதிவில் நயன்தாரா பற்றி எழுதிய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. குமுதம் வக்கிரபுத்தி படைத்தது என்பது உலகறிந்தது. இதனை படம்போட்டு காட்டி மேலும், கிளர்ச்சியுற வைத்தல் தேவையில்லாதது. ஆனால், இந்திய, உலக சினிமாக்களில் எல்லா நடிகைகளும் மார்பு, தொடை, இடை என்கிற அளவில்தான் கணிக்கப் படுகிறார்கள்.

[contd..]

reply to this comment

07/06 23:28:10

நாராயணன் wrote:

ஆதிக்குடிகள், மலைவாழ் மக்கள் இதனை மிகச்சரியாக கையாளுகிறார்கள் என்று தோன்றுகிறது. அங்கே மார்பகங்கள் ஒரு கிளர்ச்சியூற்றும் அங்கமேயில்லை. அவரவர்கள் அவரவர் வேலைகளை சர்வசாதாரணமாக பார்க்கிறார்கள். சில சமயங்களில் பெரிதாக எதையும் தெரிந்து கொள்ளாமலிருப்பது கூட சந்தோஷம் என்று தோன்றுகிறது. Ignorance is bliss.

ஊடகங்களும், ஆண் சார்பியல் பார்வைகளும், அழகுப் பொருள் நிறுவனங்களும் தான் மார்பகங்களை கிளர்ச்சியாக முன்னிறுத்துக்கின்றன. அவை மக்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அதிகம். இந்தியப் பெண்கள், உலக அழகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்பும் கூட, இத்தகைய நிறுவனங்களின் பங்கிருக்கிறது என்பதை சொல்லாமல் இருக்கமுடியாது. இன்றைக்கு தெருவுக்கு தெரு பியுட்டி பார்லர்களும், மார்பக சீர் நிலையங்களும் இருப்பதன் காரணம் ஊடகங்கள் ஏற்படுத்திய கவர்ச்சி. ஆகவே மிக எளிதில் இக்கவர்ச்சியினை மாற்ற இயலாது, அதுவும் தமிழ் சினிமா இருக்கும்வரை.

[contd....]

reply to this comment

07/06 23:28:41

நாராயணன் wrote:

கொஞ்சம் off topic, //முலைகள் என்ற கவிதையும், பெண்மொழியும் தமிழர்களை அதிர்ச்சி அடையச்செய்ததுடன்,//குட்டி ரேவதி, தீராநதியில் ஆண் இலக்கியவாதிகளை குற்றம் சொன்ன சுகிர்த ராணி, சல்மா இவர்களைப் பற்றி அடுத்த தீராநதியில் மாலதி மைத்ரி எழுதியது முக்கியமானது. தனியாக அதைப் பற்றி எழுதுகிறேன்.

[over and out]

reply to this comment

07/06 23:29:40

Kannan wrote:

பதிவுக்கு நன்றி

reply to this comment

07/06 23:30:21

அல்வாசிட்டி.வி wrote:

//விஜய்யின் பதிவில் நயன்தாரா பற்றி எழுதிய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. குமுதம் வக்கிரபுத்தி படைத்தது என்பது உலகறிந்தது. இதனை படம்போட்டு காட்டி மேலும், கிளர்ச்சியுற வைத்தல் தேவையில்லாதது. //

நானும் முதலில் படம் போட ரொம்ப யோசித்தேன். கொஞ்சம் ஆழ யோசித்ததில் படங்கள் கொச்சையாகப் பட்டதால் படங்களை எடுத்துவிட்டேன். அப்புறம் குமுதம் படித்து 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் திடீரென புத்தகவடிவில் படித்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி தான். இனிமேல் அந்த புத்தகம் அடிக்கடி படிக்க, எனக்கும் அந்த அதிர்ச்சி சிறிது காலத்தில் அடங்கி விட்டு “குமுதம் தானே… அவன் இப்படிதாம்பா” என்றாகி விடுவேன். )

reply to this comment

07/06 23:45:06

அல்வாசிட்டி.சம wrote:

நல்ல பதிவு பத்மா அவர்களே.

அந்த அந்த பாலரின் பார்வையிலேயே பிரச்சனையின் உண்மையான ஆழம் புரியும் என்பதை நீங்கள் மறுபடியும் காண்பித்துள்ளீர்கள்.

சென்னையில் வேலை பார்த்த காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி பெண்கள் நிரம்பி வழியும் பேருந்துகளில் படும் அவஸ்தகளை பார்த்து நான் வெறுத்துபோயிருக்கிறேன்.

இந்த மாதிரி ஆண்கள் தாங்களாக திருந்தினால்தான் உண்டு.

reply to this comment

07/06 23:48:21

அல்வாசிட்டி.சம wrote:

மன்னிக்கவும் சொல்ல மறந்த கருத்து,

துளசியக்கா கருத்துடன் நான் ஒத்துப்போகவில்லை.

அழகு என்பது பார்ப்பவர்கள் மற்றும் அழகு இருப்பவர்களின் மனநிலையை பொறுத்தது. ஆனால் துளசியக்காவே மார்பகங்கள் அவஸ்தைதான் என்று கூறுவது வருத்தமளிக்கிறது.

மார்பகங்களின் பயன் 40 வயதுக்கு மேல் இல்லாமல் இருக்கலாம், ஆனால் குழந்தைபேரு காலத்தில் அது இல்லாமல்?

மனைவி குழந்தைக்கு பால் கொடுக்கும் போது அவள் முகத்தில் தெரியும் நிம்மதியை, அழகை, சந்தோசத்தை ரசித்தவர்கள் எத்தைபேரன எனக்கு தெரியாது. ஆனால் அந்த ஒரு காட்சிக்காகவாவது மார்பகங்கள் அழகுதான் என்பது என் கருத்து(நெறிய எழுதனும்னு நெனச்சேன் முடியலை).

reply to this comment

07/06 23:59:42

நல்லடியார் wrote:

//–இவை யாவும் வெள்ளை மாளிகையில் தங்கி தங்களுக்கு பாதகமாக எந்த கொள்கையும் வரவிடாமல் தடுக்கும் பண முதலைகளும், ஊடகங்கள் மூலம் அதிக பணம் செலவழித்து பெண்ணின் அழகை நிர்ணயிக்கும் இந்த கூட்டம்//

மிகச் சரியான வார்த்தைகள் பத்மா,

பெண்ணுரிமை பற்றிய எனது பதிவிலும் இதை இதை எழுதியுள்ளேன்.

ஆண்-பெண் இரு பாலரும் அழகான படைப்பாக இருந்த போதிலும், ஊடகங்களின் பார்வையில் பெண்மை மட்டுமே வியாபார மயமாக்கப்படுகின்றது. பெண்கள் அழகை வெளிக்காட்டினால்தான் அத்தகைய பண முதலைகளின் வயிறு நிரம்பும்.

reply to this comment

08/06 01:47:56

மூர்த்தி wrote:

பண்டைய காலம்தொட்டே மார்பகங்களைக் காட்சிப்பொருளாக்கி கலைப்பொருட்களாக்கி மகிழ்ந்து வந்திருக்கிறார்கள்!

ரம்பா, ஊர்வசி, மேனகைக்கும் மார்புக்கு சிறு கச்சை மட்டுமே கொடுத்து ஆடச்சொன்னதாக படித்திருக்கிறேன்.

கோயில்களிலும் சிற்பங்களிலும்கூட ஆண்களைவிட பெண்சிலைகளின் பாகங்களே தத்ரூபமாக செதுக்கி இருப்பார்கள். கேட்டால் கலை என்பார்கள். அக்காலத்தில் சிற்பியாக பெண்கள் எங்கே இருந்தனர்? ஏன் இக்காலத்திலும்கூட பெரும்பாலும் சிற்பிகள் ஆண்களே. எனவே அதனை ஆணுடைய ஆழ்மனத்தின் வெளிப்பாடு எனலாம்.

இந்த இல்லாதவங்களுக்கு வைக்றது, அலிகளுக்கு மார்பகங்களாக சிலிக்கானை வைப்பது, உறுப்பினை அறுத்துவிட்டு துளையிடுவது போன்ற அதிமுக்கியமான செயல்களை எல்லாம் தாய்லாந்தில்தான் செய்கிறார்கள். அது இதுக்கென்றே இருவான நாடு போலும்!

அப்புறம் வச்சிகிட்டே வஞ்சகம் செய்யும் தனங்களை அறுத்து நாய்க்குப் போடவேண்டும் என நானே ஒருமுறை சினந்து எழுதினேன். அதாவது பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் பெண்களைக் கடிந்து எழுதினேன்.

reply to this comment

08/06 02:36:12

jafar ali wrote:

அருமையான பதிவு! தொடருங்கள் பத்மா வர்களே!

reply to this comment

08/06 04:04:13

VM wrote:

பத்மா அவர்களே,

நல்ல பதிவு

reply to this comment

08/06 10:48:41

karupy wrote:

நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். பெண்கள் உடலமைப்பு இப்படியாகத்தான் இருந்தால் அழகாக இருக்கும் என்று மிகவும் பிரஸர் கொடுப்பதால் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் தங்களைத் தாமே தண்டித்துக் கொள்வது போல் உடலைக் கூறு போடுவதும் உண்ணாமல் இருப்பதும் மிகவும் வருந்தக் கூடிய விடையம்.

ஆண்கள் பெரிதாக அலட்டிக் கொள்வார்கள். ஆனால் தமக்கென்று வரும்போது அனேகமாக அழகிற்கும் உடலமைப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்துத்தான் தமது துணையைத் தேடுகின்றார்கள் என்பது வருந்தத்தக்க விடையமே.

reply to this comment

08/06 11:08:15

Padma Arvind wrote:

கல்யாண சந்தையில் விலை போக பெண்கள் இதனை நம்பி தங்களைத்தானே துன்புறுத்தி கொள்கிறார்கள்.நன்றி பொடிச்சி

reply to this comment

08/06 15:56:18

Padma Arvind wrote:

குழலி

இதுபோல பிரச்சினைகள் புரிந்தாலே மாறுதல்கள் வரும். புரிந்து கொண்டமைக்கு நன்றி

reply to this comment

08/06 15:57:18

Padma Arvind wrote:

மார்பகங்கள் அழகும் இல்லை அவஸ்தையும் இல்லை. அதையும் மற்ற உறுப்புகள் போல எண்ணி செயல்பட்டால். அது இல்லாமல் போகத்தான் அவஸ்தையாக மாறுகிறது என்று நினைக்கிறேன் துளசி.

reply to this comment

08/06 15:58:47

Padma Arvind wrote:

விஜய்

உங்கள் பதிவை படித்தேன். மார்பக புற்று நோய் வரும் பெண்கள் படும் உடல் வலியைவிட உள்ள துயரமே மிக அதிகம். உங்கள் எண்ணத்தை படித்தபோதே புரிந்து கொண்டேன். நடிகைகள் மற்றும் விளம்பரங்களில் வரும் பெண்களின் மன உணர்வுகளும் வலிகளும் பற்றி படித்திருக்கிறேன்.நன்றி

reply to this comment

08/06 16:01:20

Padma Arvind wrote:

தங்கமணி

நம்பிக்கைகள் கலையவிடக்கூடாது என்பதும் அது இருக்கும் வரை தான் அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்தலாம் என்பது பெண்ணியம் முதல் மதங்கள் வரை பரவிக்கிடக்கிறது. ஒரு நாள் பெண்கள் விழித்துக்கொள்வார்கள். அதன் பின் புற அழகின் பரிணாமங்கள் மாறும். நன்றி

reply to this comment

08/06 16:04:24

Padma Arvind wrote:

நாராயணன்

நான் சொல்ல நினைத்த சில விஷயங்களை தெளிவு படுத்தி இருக்கிறீர்கள். ஊடகங்கள் நிறுவனக்களின் இலாபத்தை பெருக்க செயற்கை பொருட்களின் விற்பனையை அதிகரிக்க உதவுகின்றன. அவை தானே நிதி உதவிசெய்யும். “புற அழகின் பரினாமங்கள் மாறவேண்டும். அங்கே மார்பகங்கள் ஒரு கிளர்ச்சியூற்றும் அங்கமேயில்லை. அவரவர்கள் அவரவர் வேலைகளை சர்வசாதாரணமாக பார்க்கிறார்கள்” உண்மை

reply to this comment

08/06 16:08:10

Padma Arvind wrote:

கன்னன், ஜாவர் அலி, VM

நன்றிகள்.

reply to this comment

08/06 16:09:05

Balaganesan S wrote:

Great article. Thanks a bunch!

reply to this comment

08/06 16:25:40

padma wrote:

அல்வாசிட்டி சங்கர்,

ஆண்கள் திருந்த வேண்டும் என்பது கூட இரண்டாம் நிலைதான். பெண்களுக்கு இன்னும் எதிர்ப்பு சக்தியும், தன்னம்பிக்கையும் வரவேண்டும். பேருந்தில் தவறி நடப்பவனிடம் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இது தன் தவறு என்று அமைதையாய் போவதால் தவறுகள் அதிகரிக்கின்றன. 40 வயதுக்கு மேல் ஹார்மோன்களுக்கு மற்ற பலன்கள் உண்டு.

பாலகணேசன்

நன்றிகள்

கறுப்பி

முன்பே கூறியபடி வேண்டியது எது என்று தெரியாமல் பெண்கள் பலவாறாக முயற்சி செய்கிறார்கள். பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் தமக்கு என்ன வேண்டும் என்றே சரியாக புரியவில்லை. வாழ்வின் சந்தோஷங்கள் சின்ன சின்ன செய்திகளில் அடங்கிவிடுகிம்றன. இது பலமும் பலவீனமும் கூட. இன்னமும் வாழ்க்கை துணைவியை தேர்ந்தெடுக்க பெற்றோரின் விருப்பமும் தேவையாய் இருக்கிறது. நீங்கள்சொன்னது போல பார்க்க லட்சணமாக இருந்தால்தான் அடுத்தகட்டத்திற்கு போகலாம்

reply to this comment

08/06 19:14:06

மாக்கான் wrote:

பத்மா,

மார்பகங்கள் உடல் உறுப்புகள்தான். பின் எதற்கு அதில் பாதி தெரியுமாறு உடை உடுத்த வேண்டும்? அது தொங்கினால் என்ன, தொங்காவிட்டால் என்ன? எதற்கு அதனைத் தூக்கி நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்? நாங்கள் எப்போதாவது தூக்கி நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டதுண்டா? காம்பை மட்டும் விட்டுவிட்டு மீதியெல்லாம் வெளித்தெரிய உடை உடுத்துகிறீர்களே? நாங்கள் எல்லாம் அவ்வாறா உடுத்துகிறோம்? நாங்கள் குனியும்போதோ அல்லது நிமிரும்போதோ எங்களுடையது வெளிப்பிதுங்கி தெரிகிறதா? நிமிடத்துக்கு 300முறை புடவையையோ தாவணியையோ இழுத்து மூடுவது போன்ற பாசாங்குகள் செய்து எங்கள் கவனத்தை திசை திருப்புவதில்லையா? விபத்துகள் சாலையில் மட்டும் அல்ல சேலையிலும் கூடத்தான் என்ற புதுக்கவிதையை படித்தது உண்டா? முதலில் பெண்களிடம் இருந்துதான் விழிப்புணர்ச்சி தொடங்க வேண்டும். அதன்பின்னர் ஆண்கள் நாங்கள் தானாகத் திருந்துவோம்.

reply to this comment

08/06 21:33:59

நாராயணன் wrote:

//மார்பகங்கள் உடல் உறுப்புகள்தான். பின் எதற்கு அதில் பாதி தெரியுமாறு உடை உடுத்த வேண்டும்? அது தொங்கினால் என்ன, தொங்காவிட்டால் என்ன? எதற்கு அதனைத் தூக்கி நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்? நாங்கள் எப்போதாவது தூக்கி நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டதுண்டா? காம்பை மட்டும் விட்டுவிட்டு மீதியெல்லாம் வெளித்தெரிய உடை உடுத்துகிறீர்களே? நாங்கள் எல்லாம் அவ்வாறா உடுத்துகிறோம்? நாங்கள் குனியும்போதோ அல்லது நிமிரும்போதோ எங்களுடையது வெளிப்பிதுங்கி தெரிகிறதா? நிமிடத்துக்கு 300முறை புடவையையோ தாவணியையோ இழுத்து மூடுவது போன்ற பாசாங்குகள் செய்து எங்கள் கவனத்தை திசை திருப்புவதில்லையா?//

அட போங்கய்யா, உங்களுக்குக்காக எத்தனை தடவை விளக்கறது. பத்மா, கஷ்டப்பட்டு பொறுமையா, மார்பகங்களும் ஒரு அங்கம் அவ்வளவுதான் என்று எழுதினால், உங்களுக்குள் இருக்கும் ஆண்புத்தி விழித்துக் கொள்கிறது. நீங்கள் மார்பகங்களை கிளர்ச்சியங்கமாக பார்ப்பதானால்தானே பெண்கள் அதனை மறைக்க சிரமப்படுகிறார்கள். ஆக பிரச்சனை பெண்களிடத்திலில்லை. ஆண்களிடத்தில் இருக்கிறது.

நமக்கென்ன, மார்பாய் இருந்தால் என்ன, வந்த வழியான தொப்புளாய் இருந்தாலென்ன, அவையெல்லாம் ஆம்லெட் போடத்தானே. நாம திருந்துவோங்கற நம்பிக்கை எனக்கில்லை மாக்கான்.

reply to this comment

09/06 11:27:30

karthikramas wrote:

பத்மா இந்தப்பதிவு முக்கியமானது.

1. பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லா அங்கங்களும்தான் பாடப்பட்டிருக்கின்றன.

உதாரணமாய், “அங்கையற்கண்ணி” என்பதைச் சொல்லலாம். “பொற்பாதங்கள்” என்றும்

பொற்பதம் என்றும் பாடப்பட்டுள்ளன. நீங்கள் வெறுமனே , ‘முலைகளையும்’, ‘அல்குல்களையும்’ மட்டுமே எடுத்துக்கொண்டு இந்தக் காலத்து ஆணாதிக்கப் பார்வைக்கு ஏதுவாக சாட்சி சொல்வது எப்படி பொருந்தும் என்று தெரியவில்லை.

2. இன்றைய சினிமாப்பாடல்களை அணுகுவது போல், அன்றைய பழம் பாடல்களை அணுகுகிறீர்களோ என்று ஒரு எண்ணம் வருகிறது , அது சரியெனப்படவில்லை.

3. / மார்பகங்களை பெரிதாக்க வழி சொல்கிறேன் /

பல நேரங்களில் , இவை மார்பகங்கள் தொங்குவதை தடுக்கத்தான் செய்ய்ப்படுகின்றன.

இதில் ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புகளில் வாறுபாடுகள் உல்ளது. அமெரிக்காவிலேயே

பார்பக அறுவைச்சிகிச்சைக்கு ஆதரவாக சிலரும் , எதிராக சிலரும் தேர்வி செய்கின்றனர். எனவே இது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பைச்சேர்ந்தது. பொதுவாக சரி என்றோ , தவறு என்று *நாம்* சொல்ல்முடியாது அல்லது பொதுக்கருத்துக்கு வரமுடியாது.

reply to this comment

10/06 14:18:47

சுந்தரவடிவேல் wrote:

இப்பதிவுக்கு நன்றி. அமெரிக்கக் கடற்கரைகளில் ஐந்தாறு வயதுப் பிஞ்சுக் குழந்தைகளுக்குக் கூட ‘ப்ரா’ மாட்டிவிடுவதைக் கண்டு புரையோடிப் போயிருக்கும் மார்புசார் வக்கிரத்தை நினைத்துக் கொண்டேன். பழங்குடியினர், ஆதிவாசிகளைப் பற்றிய நாராயணின் கருத்துதான் எனக்கும்.

reply to this comment

10/06 14:33:28

kajazvizi wrote:

நல்ல ஒரு விடயம் அலசியிருக்கிறீர்கள். குறிப்பிட்ட வயதை அடைந்தவர்களை மார்பக பரிசோதனைக்கு 5 நிமிடம் செலவிடுங்கள் என்று பல வைத்திய துறை சார்ந்த இடங்களில் பார்த்திருக்கிறேன். இதை அலட்டிக்காது விட்டால் பின்னர் கஸ்டம் தான். விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு நன்றிகள்.

reply to this comment

10/06 14:57:54

Padma Arvind wrote:

கார்த்திக்

நீங்கள் சொல்வதைப்போல பெண்களின் எல்லா அங்கங்களுமே பாடப்பட்டிருக்கின்றன. மூக்கை சரி செய்து கொள்ளா அறுவை சிகிச்சை செய்து கொள்வது கூட நடக்கிறது. சில cosmetic industries தங்களுடைய ஆதாயத்திற்காக ஊடகங்கள் மூலம் தவறான கருத்தை திணிப்பது என் வருத்தம்.

புற்று நோய் காரணமாக மார்பகங்களை இழந்த பெண், மார்பகம் இல்லாத காரணத்தால் சில இடங்களில் அனுமதி மறுக்க பட்டது சரியாகுமா?

மார்பகத்தை இழந்த பெண்ணை கணவன் விவாகரத்து செய்வதும் சரியாகுமா? ஆஸ்த்மா வந்த பெண்ணிற்கே தெரியாமல் விவாகரத்து செய்த கணவனை பற்றி அவள் விகடனில் எழுதி இருக்கிறார்கள். நீ ஒர்ரின சேர்க்கை செய்பவள் உனக்கேன் மார்பகம் என்று வேறு சிகிச்சைக்காக வரும் பெண்ணின் மார்பகத்தை எடுப்பது என்ன நியாயம்?

மார்பகங்கள் கண்கள் போல் என்றால், பேருந்தில் வந்து மேலே விழுவதும் தொட்டு கிள்ளுவதும் ஏனோ?

மார்பக நிழல் படமெடுக்க வந்தவரை உட்காரவைத்து விட்டு போவோரும் வருவோரும் வேடிக்கை பார்ப்பது எனோ

reply to this comment

10/06 17:34:18

Padma Arvind wrote:

சுந்தரவடிவேல்

நேர்று நானும் ஒரு சிறுமிக்கு பிரா அணிவித்து மெல்லிய சட்டை அணிவித்திருந்த காட்சியை கண்டு மனம் வருந்தினேன். நன்றி

கயல்விழி

நன்றிகள்

reply to this comment

10/06 17:37:46

Padma Arvind wrote:

நாராயணன்

மிக்க நன்றி. நீங்கள் சொல்வது மிக சரியான் ஒன்று.

reply to this comment

10/06 17:40:37

Padma Arvind wrote:

மாக்காண்

இதே போல் பிற்படுத்தப்பட்டோர் தானாக முன்னேறினால் மேல் சாதிக்க்காரர்கள் திருந்துவார்கள். லஞ்சம் கொடுப்பவர்கள் முதலில் நிறுத்தட்டும். அதன்பின் ஊழலை பற்றி பேசுவோம்.

reply to this comment

10/06 17:44:06

Raja wrote:

” வாழ்வின் சந்தோஷங்கள் சின்ன சின்ன செய்திகளில் அடங்கிவிடுகிம்றன. ”

What do you mean