»
S
I
D
E
B
A
R
«
பல்வலியால் படும் பாடு
Apr 3rd, 2006 by பத்மா அர்விந்த்

என் வீட்டில் எல்லோருக்கும் பற்கள் கரும்பை கடித்து தின்கின்ற ரகம் இல்லை. ஈறுகளின் அறுவை சிகிச்சை செய்து, இப்போது நலத்துடன் இருந்தாலும் பேகல் போன்றவை உண்ணவே யோசிக்கும் ரகம். என் மகன் 3 வயதிலேயே பால்பற்களை கூட பிடுங்கி பற்கள் இல்லாமல் திரவ உணவில் 7 வயதுவரை வளர்ந்தவன். அதிலும் முகம் வீங்கி, கேவர்னஸ் சைனஸ் வழியாக கிருமிகள் பரவியிருக்குமோ என்ற ஐயத்தில் அவசர சிகிச்சை பிரிவில் இரவை கழிக்க நேரிட்டது. பற்களை இழந்துவிட்டால் உண்ண முடியாமல், சக்தி இல்லாமல் எந்த வேலையும் செய்யவும் முடியாமல் திணறிப்போகிறது. ஈறுகளில் நோய் வருமேயானால், அது சைனஸ் மூலமாக மூளைக்கும் பரவ வாய்ப்பு உண்டு. இதனால் தன்னுடைய மாக்ஸிலரி சைனஸ் பாதிக்கப்பட்டு நல்ல சுரத்தில் என் மகன் பல நாட்கள் அவதிப்பட்டான்.

இப்போது அதே நிலையில் அர்விந்த். ஈறுகளில் வீக்கம் கண்டு அது புரையோடி முகம் முழுதும் வீங்கி, கடந்த வாரம் உண்ணவும் முடியாமல் பேசவும் முடியாமல், அதையும்விட வேலைகளை செய்யவும் முடியாமல் ஒரே அவஸ்தை. இத்தனைக்கும் சானிகேட்டர் பிரஷும், பார்த்து வாங்கிய பற்பசையும், இரண்டு வேளையும் பல் துலக்குவதும் உண்டு.ஒருமுறை மிக மோசமான விபத்துக்கு பிறகு பற்கள், தாடை எலும்பு அறுவை சிகிச்சையால் சரிசெய்தும் அடிக்கடி வரும் தாகுதல்தான் என்றாலும் எல்லோரும் கஷ்டப்பட்டது கடந்த வாரம் இன்னும் அதிக பிரச்சினையாகிவிட்டது.

இங்கே 4 வயதிலேயே முதம் முறை பல்மருத்துவரிடம் அழைத்து போய் வருவது வழக்கமாக இருக்கிறது.(well baby visit)மிக முக்கியமாக பதின்ம வயதில் பல் வரிசையை ஒழுங்குபடுத்த இன்னபிற சுத்தம் செய்ய என்று ஒரு வரிசைக்கிரமத்தில் நடந்தே ஆகவேண்டி இருக்கிறது. இல்லை என்றால் பள்ளி நர்ஸிடமிருந்து தொலைபேசிகள் வருவதும் உண்டு. இங்கே பள்ளியிலும் வருடம் இரண்டுமுரை பற்களை பரிசோதிக்கிறார்கள். பல் துலக்கும் முறை சொல்லி தருவது, ஒரு இலவச ப்ரஷ், பற்பசை, நைலான் நூல்( floss) எல்லாம் தருவார்கள்.
இப்போது கோக் போன்ற பானங்களை குடிப்பவர்கள் அதில் உள்ள பாஸ்பாரிக் அமிலத்தின் விளைவால் பல் எனாமல் மெல்ல அழிவதனால் இன்னும் பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள்.
ஆரோக்கியம் இல்லாத பற்களும் ஈறுகளும் இதய நோய் வரக்கூட காரணமாகலாம். நுண்ணிய பாக்டீரியாக்கள் பல்லின் இடையில் தங்கும் சர்க்கரை, உணவு துகளில் இருந்து பெருகி, இரத்தம் மூலம் இதயத்தை அடந்து அங்கே நோய் உண்டாக்கும். இதுபோல ஈறுகளில் ஏதேனும் பாக்டீரியாக்கள் இருந்து ஜிஞ்ஜிவைடிஸ் என்ற நோய் வந்தால், அது சைனஸ் குழாய் வழியே மூளையில் உள்ள கேவர்னஸ் சைனஸை தாக்கி மூளை காய்ச்சலை வரவழைக்க கூடும். முகம் வீங்கி, மருத்துவமனைக்கு வருவோர் உண்டு.

இலட்சணக்கான மக்கள் பல்வலியால் (சாதாரணது முதல் ஈறுகளில் புற்றுநோய்வரை) துன்பப்படுவதை கண்டால் வருத்தமாக இருக்கிறது. மனிதனுக்கு வரும் உபாதைகளில் பல்வலிதான் முற்றிலும் தவிர்க்க கூடியது.

20% சதவிதம் 2-4 வயதுக்குள்ளான குழந்தைகள் பல்லில் ஓட்டைவந்து அவதிப்படுகின்றனர். இதற்கு அவர்களுக்கு தரப்படும் மிட்டாய்களில் உள்ள சர்க்கரையே காரணம் ஆகும். 60% 15 வயதுக்குள் உள்ள குழந்தைகள் பல்வலியால் மிகவும் துன்பப்படுகிறார்கள். இதில் ஏழை வீட்டில் உள்ள குழந்தைகள் இந்த ஓட்டைகள் சீர் செய்யப்படாமல் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் பல் மருத்துவ காப்பீடு பெறுவதில்லை. இந்த வலியால் பள்ளிக்கு சரியாக செல்ல முடியாத நிலை, முகத்தின் அழகான தோற்றம் குறைவு, சொல்லின் பேச்சின் சீரான தன்மை குறைவு, வாயில் வீசும் துர்நாற்றம் இவை ஒரு குழந்தையின் தன்னம்பிக்கையை குறைக்க வல்லன.

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோர் 95% பேர் பல்வலியால் துன்பப்படுகின்றனர். இதில் பலர் பற்களை இழந்து பொய்பற்கள் கொண்டு இன்னும் திண்டாடுகின்றனர். இன்னும் பலர் ஈறுகளில் வரும் உபாதை இன்ன பிறவற்றால் துன்பப்படுகின்றனர். பற்களை இழப்பது ஒரு அழகுணர்ச்சி பிரச்சினை மட்டும் இல்லை. சரியாக உச்சரிக்க இயலாமை, சில வகை உணவுகளை கடித்து உண்ண முடியாமை போன்று பொதுவான உடல் நலத்திற்கு கூட பாதிப்பு வரக்கூடும்.

இதையும் தவிர்த்து வாய், தொண்டை இவற்றில் வரும் புற்றுநோயால் வருடத்திற்கு 28,000 பேர் துன்பப்படுகின்றனர். இதில் வருடாவருடம் 7200 பேர் இறக்கின்றனர். வாயில் வரும் புற்றுநோய் இந்தியர்களை பெருமளவில் பாதிக்கிறது. பாக்கு வெற்றிலை அதிகம் உண்பதால், அதன் சாற்றை துப்பாமல் சிலர் உட்கொள்வதால், அதிக நேரம் பான் பராக், பாக்கு போன்றவற்றை வாயில் அதக்கி கொள்வதால் இந்த புற்று நோய் ஏற்படுவதாக அண்மையில் நியுஜெர்ஸியில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் சில அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.மேலும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதிக மது (ஒரு நாளைக்கு 4, 12 அவுன்ஸ் பியருக்கு மேல்)அருந்துபவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு.

அமெரிக்காவில் கடந்த வருடம் கிட்டதட்ட 78 பில்லியன் டாலர்கள் வரை பல் மருத்துவர்களுக்கு செலவு செய்துள்ளனர், 500 மிலியன் தடவை பல்மருத்துவர்களை மக்கள் சந்தித்திருக்கின்றனர். ஆயினும் பெருவாரியான மக்கள் பற்களை சுத்தம் செய்து கொள்ள செல்வதில்லை. பல் துலக்கும் போதும் பற்களின் இடையே சிக்கி யுள்ள உணவு துகள்களை (floss) சரிவர அகற்றுவதில்லை.

அமெரிக்காவில் கிட்டதட்ட 100 மிலியன் மக்களுக்கு சரியான ப்ளுரைடு உள்ள தண்ணீர் கிடடப்பதில்லை(www.cdc.gov).

இதை தவிர்க்க என்ன செய்யலாம்? பாஸ்பாரிக் அமிலம் உள்ள கோக் போன்ற பானங்களை குழந்தைகளுக்கு தராமல் இருக்கலாம். மேலும் பழஜூஸ் குடித்தாலோ சாக்லேட் போன்றவை தின்றாலோ உடனே பற்களை சுத்தம் செய்வது, அல்லது நீர் விட்டு கொப்பளிப்பது போன்றவற்றை செய்ய பழக்கலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை பற்களை சுத்தம் செய்ய பழக்கலாம். செயற்கை பற்களை வெண்மையாக்கும் பெயிண்ட், gum போன்றவற்றை சுவைப்பதை நிறுத்தலாம். இது பற்களின் எனாமலுக்கு ஆபத்தானது.

அமெரிக்காவில் மாநில மத்திய அரசு நிறுவங்களுடன் சேர்ந்து ப்ளூரைடின் அளவை சரிபார்த்து தண்ணீர் வழங்கவும், இதற்காக ஒரு இணையதளம் நிறுவி, மாநிலை அரசு தண்ணீரில் உள்ள ப்ளூரைடின் அளாவை சரிபார்ப்பதை கட்டாயப்படுத்தியும் இருக்கிறார்கள்.

மாநில தண்னீர் தன்மையை சரிபார்க்கும் பொறியியல் வல்லுனர்கள், அதிகாரிகளுக்கு ப்ளூரைடின் தன்மை பரிசோதிக்க பயிற்சி தருகிறார்கள்.

நியுஜெர்ஸி 2010 திட்டப்படி ஒரு sealant பற்களில் போட்டு குழந்தைகளின் பற்களை பேண அரசு திட்டம் தீட்டி உள்ளது. எல்லா குழந்தைகளுக்கும் இந்த sealant போடப்படும். இது சர்க்கரை மூலம் எனாமல் கரைவதையும், பாக்டீரியா சேர்வதை தவிர்க்கவும் பயன் படும்.

மேலும் மாநில அரசு இதற்காக மான்யம் ஒதுக்கி மக்களுக்கு பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மக்களுக்கு எடுத்து சொல்ல பல உடல்நல துறை வல்லுனர்களை பயன் படுத்துகிறது.

காப்பீடுகள் வருடம் இரண்டு முறை இலவசமாக பற்களை சுத்தம் செய்து கொள்வதை தூண்டுகிறது. அதற்காக 100% செலவையும் திருப்பி தருகிறது.
பள்ளிகளில் உள்ள செவிலிகள் இதற்காக வருடம் இரண்டு முறை பற்களின் ஆரோக்கியம் பற்றி சொல்லித்தருவதோடு, பற்களை பரிசோதிக்கவும் செய்கிறார்கள்.
ரட்கர்ஸ் பல்கலை கழகம், மாநில அரசுடன் சேர்ந்து பற்களின் ஆரோக்கியம், மற்றும் பால் அருந்துவது, பற்களை துலக்குவது, கால்சியம் சேர்த்து கொள்வதன் அவசியம் பற்றி பள்ளிகளில் பாடம் எடுக்கிறார்கள்.

12/11: மருத்துவ காப்பீடு இல்லதவர்களுக்காக
Nov 12th, 2005 by பத்மா அர்விந்த்

மருத்துவ காப்பீடுகளின் கட்டனமும் மருத்துவ செலவும் அதிகமாகி கொண்டே போகின்றன. அமெரிக்காவில் நிறைய பணி இடங்களில் இவற்றை ஊதியத்துடன் தருகின்ற போதும், பல மென்பொருளாளர்கள், மணிக்கு ஊதியம் பெற்று நிறுவனத்தின் Consultant ஆக இருப்பவர்களுக்கு சில சமயம் இந்த உதவி கிடைப்பதில்லை. தானே சந்தாகட்டினால் மாத கட்டணம் இன்னும் அதிகம் என்பதால் பெரும்பாலோர் ஒரு project இல் இருந்து இன்னொன்றுக்கு மாறும் இடைக்காலத்தில் காப்பீடு இல்லாமல் இருக்கின்றனர். அதேபோல சொந்தமாக தொழில் நடத்தும் பலர் இது போல காப்பீடுகள் பெற்றிருப்பதில்லை.

காப்பீடுகளில் பலவகை உண்டு. இவை மருத்துவருக்கு எப்படி அவர்கள் செயல்களுக்கு ஊதியம் தருகின்றது என்பதையும் எந்த காப்பீடு உசிதமானது என்பதை தெரிந்து கொள்ளும் விவரம், இந்த காப்பீடு தரம், இவற்றில் எப்படி சில மருத்துவர்கள் இடம் பெறுகிறார்கள் என்பதை பற்றியும் வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

இந்த பதிவில் காப்பீடே இல்லாமல் இருப்பவர்கள் எங்கே உதவி பெற முடியும் என்பதை அவசியம் கருதி எழுதுகிறேன்.

காப்பீடு இல்லாதவர்கள் , ஊரிலிருந்து வந்திருக்க்கும் பெற்றோர்கள் இவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால்: உடல் நல துறை நடத்தும் சில மருத்துவமனைகளுக்கு செல்லலாம். இவை பெரும்பாலும் walk in clinicகுகளே. உதாரணமாக நியு ஜெர்ஸியில் Chandler மருத்துவமனைகள் நியுப்ரன்ஸ்விக், நியுவர்க் போன்ற இடங்களில் இருக்கிறது. இங்கே கட்டணம் எதுவும் இல்லை.

திடீரென மாரடைப்பு போன்ற அவசர மருத்துவ உதவிகள் வேண்டும் என்றால் 911 கூப்பிட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லவும். அங்கே ஆரம்பத்திலேயே நோயாளிக்கு காப்பீடு பலன் இல்லை என்பதை சொல்லிவிடுங்கள். அங்கே உள்ள charity care க்கு விண்ணப்பிக்கவும் . என்ன பெரிய அறுவை சிகிச்சையானாலும் இந்த charity care பணம் தந்துவிடும். நீங்கள் கவலை பட தேவை இல்லை.

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஸ்மித் க்லைம் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த நண்பரின் பெற்றோர் வந்திருந்தனர். அவருடைய ஊதையம் 100000 $ என்றபோதிலும் அவருடைய பெற்றோருக்கு காப்பீடு இல்லை. திடீரென மாரடைப்பு வந்த தந்தையை மருத்துவ மனையில் சேர்த்து, தமனிகளில் அடைப்பு இருப்பதை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்தார்கள். அதன் பின் பல சிகிச்சைகள், வாராவாரம் பரிசோதனைகள் என்று மருத்துவ கட்டணம் மிக அதிகமாகி போனது. சில மாதங்கள் நன்றாக இருந்த அவர் இறந்துவிட்டார். மருத்துவமனைல் இருந்து வந்த கட்டணம் மிக அதிகம். நண்பர் மருத்துவமனையின் அலுவலகத்திற்கு நேரில் சென்று த ன் ஊதிய விவரங்கள், செலவு எல்லாம் விவரித்து தன்னால் மாதம் $200 மட்டுமே கட்ட முடியும் என்று சொல்ல, மருத்துவமனை அவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. நண்பர் இருக்கும் வரை மாதம் 200$ கட்டுவதாகவும் இந்த கடனால் அவருடையை மனைவி, குழந்தைகள் எந்த வித கட்டுமானங்களுக்கும் உள்ளாக மாட்டார்கள் என்று. ஒருவருடம் பணம் கட்டியபின், மருத்துவமனை மீதி தொகையை ரத்து செய்து விட்டது.

மருத்துவமனையில் இருந்து வரும் கட்டணம் கண்டு மலைக்காமல் அவர்களுடன் நேரிடையாக பேசவோ எழுதவோ செய்தால், மருத்துவமனைகள் இந்த செலவீனங்களை ரத்து செய்யும்.

சாதாரண சுரம் போன்ற கோளாறுகளுக்கு, அல்லது இரத்த அழுத்தம் போன்று தொடர்ந்து மருந்து எடுத்து கொள்பவர்கள் இலவசமாக மருந்து பெற்று கொள்ள உங்கள் மாநில உடல்நலதுறைக்கு தொலை பேசி விவரங்கள் கேட்கவும். என்னிடம் சில பொதுவான தகவல்களும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரங்களும் உண்டு. அதை தனியாக கொடுக்கிறேன்.

மாதா மாதம் பொது நலதுறையில் பல்வேறு நகரங்களில் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்கிறார்கள். ஏதேனும் ஆபத்து இருந்தால் அவர்களே மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வார்கள். அப்போது அது தொடர்பான கட்டணம் கட்டுவதோ உதவி பெறுவதோ அவர்களின் வேலை. மாதாமாதம் எங்கே கிளினிக்குகள் நடக்கிறது என்ற அட்டவனை தயாரிக்க படுகிறது. நீங்கள் உங்கள் பொதுநல துறையை தொடர்பு கொண்டால் அதை வீட்டு முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள். இதுபோன்ற கிளினிக்குகளில் பரிசோதனைகள், மாமோகிராம், prostate exam, rectal exam, chest xray, blood test ஆகிய அனைத்தும் செய்ய படும்.we also run STD, TB clincs, and offer free conseling.

கண்கள், பற்கள் இவற்றை பரிசோதிக்கவும் பல இடங்களில் வசதி உண்டு. நீங்கள் தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள கண் மருத்துவரின் பெயரும் தொலைபேசி எண்ணும் அனுப்புவார்கள். நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம். அத்தோடு வயதானவர்களுக்கு இலவச கண்ணாடியும் கிடைக்கும். காது கேட்காத முதியவர்களுக்கு இந்த பரிசோதனையும் ஹியரிங் எய்டும் கிடைக்கும். இதுபோன்ற வசதிகளுக்கு பொதுநலதுறை, முதியோர்களுக்கான அலுவலகம் இவற்றை தொடர்பு கொள்ளவும். இந்த எண்கள் உங்கள் தொலைபேசி புத்தகத்தில் இருக்கும்.

குழந்தைகளுக்கு காப்பீடு இல்லை என்றால் உடனே சோஷியல் அலுவலகத்தை தொடர்பு கொண்டால், இங்கே பிறந்தவர்களானால் 1 வாரத்துக்குள் மெடிக்கெய்ட் அட்டையும், இங்கே பிறக்காதவர்களுக்கு மாநில குழந்தைகள் உடல் நல பாதுகாப்பு அட்டையும் அனுப்பபடும்.

எந்த ஊரில், நாட்டில் பிறந்திருந்தாலும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்க படும். இதன் அட்டவணையும் எங்கே கிளினிக்குகள் நடத்த படுகின்றன என்பதையும் உங்கள் ஊரில் உள்ள உடல் நல துறையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கல்.செண்ட்ரல் நியுஜெர்ஸியில் இருப்பவர்கள் 732 745 3100 தொடர்பு கொண்டால் என் காரியதரிசிகள் 40 பக்கம் கொண்ட ஒரு புத்தகம் அனுப்புவார்கள். அதில் எந்த உடல் நிலைக்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் போன்ற விவரங்கள் இருக்கும். குழந்தைகள் உடல் நலம், மன நலம் பற்றிய இ ல வ ச சிகிச்சைகளுக்கு children’s directory என்ற புத்தகத்தை கேட்டு பெற்று கொள்ளுங்கள். 169 பக்கம் கொண்ட இதில் நியுஜெர்ஸியில் உள்ள பல இ ல வ ச கிகிச்சை இடங்களும் தொலைபேசி எண்களோடு தரபட்டிருக்கிறது. இதை சமீபத்தில்தான் தயாரித்து முடித்தேன். 211 தொடர்பு கொண்டால் நியுஜெர்சியில் உள்ள பல மருத்துவ சிகிச்சை கிளினிக்குகளை அறிந்து கொள்ள முடியும்.

இதையும் மீறி உங்களுக்கு காப்பீடு அவசியம் வேண்டும், இல்லை என்றால் பாதுகாப்பு இல்லாதது போல இருக்கிறது என்றால், family care நிறுவனத்தை தொடர்பு கொண்டால் அவர்கள் மாத கட்டணம் 5$ முதல் 50 வரை வசூலித்து உங்கள் குடும்பத்திற்கு காப்பீடு வழங்குவார்கள். இது 4 பேர் கொண்ட குடும்பத்தின் மாத வருமானம் 5000$க்குள் உள்ளவர்களுக்கு. அதற்கு மேல் வருமானம் இருப்பவர்கள் கட்டணம் சற்றே கூடுதலாக இருக்கும்.

பிறவியிலே குறைபாடுள்ள குழந்தைகள் இருந்தால், அரசே அத்தனையும் செய்யும். அவர்களே உங்களை அணுகுவார்கள். வீட்டிற்கு எங்கள் ஊழியர் வந்து எல்லாவற்றைம் பரிசோதித்து தேவையான ஏற்பாடுகள் செய்வார்கள். காது முழுதும் கேட்காதவர்கள் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் உங்கள் பெயரை சேர்ப்பது அவசியம். அருகில் ஏதேனும் தீவிபத்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை பாதுகாப்பது, தொலை பேசி அடித்தால் விளக்குகள் எரிவது போன்ற ஏற்பாடுகளை இலவசமாக செய்து தருவார்கள். இந்த குழந்தைகள் பற்றி விவரமாக தனியாக எழுதுகிறேன்.

அதுபோல மனைவி கருவுற்றிருக்கும் ஓது காப்பீட்டை இழக்க நேரிட்டால் அதற்கும் தனி உதவிகள் உண்டு. இதை planned parenthoodடன் சேர்ந்து செய்கிறோம்.

மருத்துவ உதவிகளும் காப்பீடும் மிக சிறந்தது இல்லை என்றாலும் பலவகைகளில் அமெரிக்கா முயற்சி செய்கிறது. விவரங்கள் பலருக்கு தெரிவதில்லை என்பதுதான் மிக பெரிய குறை. உங்கள் வீட்டில் புகுந்துவிட்ட பூனையை பிடிப்பது முதல் புல் வெட்டுவதுவரை உதவி பெற முடியும்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madePriya wrote:
மிகவும் பயனுள்ள தகவல்களை நன்கு விவரித்துச் சொல்லியிருக்கிறீர்கள் பத்மா. Thanks for thinking about various aspects of life in a foreign country and taking the time to write/explain about tackling the various issues.

reply to this comment
12/11 14:31:55
thangam wrote:
Thagavalkalukku Nanri!!

reply to this comment
12/11 21:55:47
padma arvind wrote:
நன்றி பிரியா, தங்கம். தங்கம் : வெகுநாட்களாக நீங்கள் பதிவு எழுதவில்லையா?

காப்பீடு தருவதற்கும் அதிகமாக மருந்துகளுக்கு செலவழிக்க நேர்ந்தால், காப்பீடு இல்லாதவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்திலிருந்து விவரங்களை பெறலாம்.http://www.freemedicineprogram.com/,… http://www.freemedicinefoundation.com…

reply to this comment
13/11 07:38:04
Manjula wrote:
மிகவும் உபயோகமான பதிவு. தகவல்களுக்கு நன்றி பத்மா.

reply to this comment
13/11 21:53:26
uma r sankar wrote:
Hi Padhma
I am uma and I’m living in singapore. I’m reading your blogs regularly. Your articles are very informative.
My parents are with my brother in maryland. I would like to gather more information about medical help for my parents.
If you can give me your email id or telephone no my sister in law can get those information from you. Sorry for the trouble.
Thanks for your help
Regards
uma

reply to this comment
14/11 01:09:04
Maya wrote:
பத்மா அவர்களுக்கு,
வணக்கம்
/மருத்துவ உதவிகளும் காப்பீடும் மிக சிறந்தது இல்லை என்றாலும் பலவகைகளில் அமெரிக்கா முயற்சி செய்கிறது. விவரங்கள் பலருக்கு தெரிவதில்லை என்பதுதான் மிக பெரிய குறை. /

100% சரியாகச் சொன்னீர்கள்.உங்களைப் போன்றோர்கள் சிரத்தை எடுத்து மற்றவர்களுக்கு தெரிவிக்கிரீர்கள்..அனைத்து தகவல்களும் மிக உபயோகமானவை.

/காப்பீடு இல்லாதவர்கள் , ஊரிலிருந்து வந்திருக்க்கும் பெற்றோர்கள் இவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால்../
ஒரு வாரத்திற்க்கு முன்னால் நடந்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..எனக்குத் தெரிந்தவரின் தாய்,தந்தை இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள்.தாய் இருதய நோயாளி.எல்லாரும் சேர்ந்து அர்கான்சா சென்றிருக்கிறார்கள்.அன்றைய இரவில் தாய்க்கு மாரடைப்பு..911 கூப்பிட்டு மருத்துவமனையில் அனுமத்திரார்கள்.தற்சமயம் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.இன்னும் மருத்துவமனையில் இருந்து பில் வரவில்லை..
அவர்களுக்கு காப்பீடும் கிடையாது..

இந்தியாவில் எடுக்கும் காப்பீடு இங்கு எந்த அளவிற்கு உபயோக்ப்படும்..அப்படி ஒன்று இருந்தால் தாங்கள் ஒரு நல்ல காப்பீடு நிறுவனத்தை பரிந்துரைக்க முடியுமா?? இந்தியாவில் இருந்து இங்கு வருபவர்கள் எந்த விதமான காப்பீடு எடுக்க வேண்டும் ?? போன்ற விபரங்களுக்கு உங்களிடமிருந்து ஒரு தனி பதிவை எதிர்பார்க்கிறேன்.

தாங்கள் தங்கள் துறை சார்ந்த பயனுள்ள தகவல்களைத் தருகிரீர்கள்..நன்றி கலந்த பாராட்டுகள்..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

reply to this comment
15/11 10:57:49
Padma Arvind wrote:
அன்புள்ள மாயா,
உங்கள் நண்பரை அந்த மருத்த்வமனையை தொடர்பு கொண்டு charity care இருக்கிறதா என்று கேட்டு அதற்கு விண்ணப்பிக்க சொல்லுங்கள். சில படிவங்கள் கேட்பார்கள், உதாரணமாக காப்பீடு இருக்கிறதா, தற்சமயம் பணியில் இருக்கிறார்களா, பிள்ளையால் பணம் கட்ட முடியுமா என்று கேட்டு, தெளிவாக கடிதம் எழுதி சொன்னால் அவர்களே ஆவன செய்வார்கள். இந்தியாவில் பெறப்படும் காப்பீடுகள் பற்றி எழுதுகிறேன்.
உமா: மடல் அனுப்பி இருக்கிறேன்.
நன்றி மஞ்சுளா.

reply to this comment
15/11 11:19:12
thangam wrote:
Due to some reasons, I am not in a position to access the web frequently.
Sontha kanini illai..Office-la work pannumpothu,appappa etti paakurathoda sari..

reply to this comment
15/11 17:09:06
Murali wrote:
Dear Padma

Very useful info. Thanks. I really appreciate it.

Murali
KS, USA

reply to this comment
15/11 23:16:49
uma r sankar wrote:
Hi padma
Sorry to trouble you. I did’n receive your email. Can you please resend the same to my gmail id.
Thanks
uma

reply to this comment
16/11 04:31:24
அன்பு wrote:
தகவல்களுக்கு நன்றி. பதிவைப் பார்த்த் அன்றே எழுதநினைத்து, அவசரத்தில் விட்டு பின்னர் மறந்துவிட்டேன்

Congenital Disease தொடர்பானவை காப்புறுதியின்கீழ் வராது என்று சொல்கின்றார்களே… இது ஒவ்வொரு திட்டத்தைப்பொருத்தா அல்லது பொதுவாக எந்தத்திட்டத்தின் கீழும் பிறவிக்கோளாறு வராதா? நாம் திட்டம் எடுக்கும்போது எவ்விதக்குறையுமில்லையென்ற உறுதியின்பேரிலோ அல்லது மருத்துவப்பரிசோதனை முடிவின்பெரிலோதானே பிரீமியம் கட்டுகிறோம். அதன்பின்னர் வரும் எல்லா நோயும் ஏன் அதன்கீழ் வராது!?

reply to this comment
16/11 04:52:11
அன்பு wrote:
பின்னூட்டத்தின் கடைசிவரி இப்படி இருக்கவேண்டும்:
அதன்பின்னர் வரும் அல்லது கண்டறியப்படும எல்லா நோயும் ஏன் அதற்கு முன்னர் எடுத்த காப்பீட்டின்கீழ் வராது!?

reply to this comment
16/11 04:53:33
ravisrinivas wrote:
very useful information. But i think that something is fundamentally wrong with the medical system in USA. How many can really afford to know all these details and seek treatment.Often lack of insurance results in postponing treatment and what you will
get is subject to so many conditions.
So unless there is a radical change all
these good efforts will not mean much.
The paradox is USA spends maximum on health in terms of % of GNP yet so many
millions are not covered or not fully
insured.A professor from India was a visiting prof in an university.She had
a medical problem which needed surgery and treatment. Her doctor advised her to get it done after returning to India.

reply to this comment
16/11 05:57:44
padma arvind wrote:
அன்பு
இப்போதெல்லாம் காப்பீடுகளில் congenitive disorder உம் சேர்க்கப்பட்டுள்ளது. இங்கே இதுபோன்ற குறைகளை முழுசெலவையும் அரசாங்கமே எடுத்து கொள்கிறது. ஆனால் மருத்துவரிடம் சொல்லி state registry யில் சேர்த்து கொள்ளவேண்டும்.

Ravi,
It is very true that both Govt and private sector spend a lot of money on this healthcare. unfortunately the system is not very efficient. We are working on closing the gaps, and I am personally involved in revising some of the minimum standards for doctors and hospitals. Even those services that are provided, we as immigrants are not aware off. I am pursuading health dept to increase awareness among public and provide brochure to people who enter into the country of these facilities. I am going to write step by step on these issues and try to create some sort of a brochure.

reply to this comment
16/11 06:22:38
அன்பு wrote:
தகவலுக்கு நன்றி. இங்கு காப்பீடு நிறுவனம் கைவிரிக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட 50-60% வரை சுகாதார அமைச்சு, ரெனோல்ட் மெக்டொனால்ட் நிதி போன்ற பிற நிதியிலிருந்து மருத்துவமனையின் MSW பிரிவு நோயாளிகளின் அவசியத்துக்கேற்ப ஏற்பாடு செய்கிறது.

முக்கியமான பணியில் ஈடுபட்டுள்ளீர்கள்… தொடர்ந்து வெற்றிகரமாக செய்யுங்கள். பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

reply to this comment

19/11: நீரிழிவு நோய்- சில அடிப்படைகள்
Nov 9th, 2005 by பத்மா அர்விந்த்

இந்த மாதம் நீரிழிவு நோய் தடுப்பு மாதமாக கருதப்படுகிறது. தற்போது நிறைய சிறுவர்கள்/மிகள் மற்றும் பதின்ம வயதினர் இந்நோயால் பாதிக்கப்படுவதால் சில அடிபடை கருத்துகள் தமிழோவியத்தில் எழுதியது. இங்கேயும் அவசியம் கருதி பதிக்கிறேன்.

நீரிழிவு நோய் என்பது இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதால் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதால் வரும் நோய். இதை மருந்துகளின் மூலமும், உடற்பயிற்சிகள் மூலமும் கட்டு பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும் பலவித நோய்கள் மற்றும் சிக்கல்களை உருவாக்குவதால் குறைந்த வயதில் அகால மரணம் ஏற்பட வழிவகுக்கிறது.

நீரிழிவு நோயில் இரண்டு வகை உண்டு. முதலாம் வகை இன்சுலின் நம்பியுள்ள நீரிழிவு நோய் என அழைக்க படுகிறது. இது குழந்தையாக இருக்கும் போதே ஏற்படக்கூடியது ஆகும்.

இரண்டாம் வகை வயதான பின் வரும் நோய். இதில் இன்சுலினை நம்பி சர்க்கரை அளவு அதிகமாதல் நடப்பதில்லை. இது பெரும்பாலும் மருந்துகள், மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும் வகை.

முதலாம் வகை சில உடல் எதிர்ப்பு சக்தியால் பாங்கிரியாஸின் β செல்கள் அழிக்க படுவதால் இன்சுலின் அளவு குறைந்தும் இன்னும் சிலருக்கு இன்சுலினை மிகவும் வீரியம் உள்ளதாக்க வைக்கும் சக்தி குறைவதாலும் உண்டாகுகிறது. இதற்கு சர்க்கரை அளவை அவ்வப்போது சரி பார்த்து இன்சுலின் ஊசி போட்டு கொள்ள வேண்டும். இது குழந்தைகளையும் இளவயதினரையும் தாக்கும். மரபணு குறைபாடு, சுற்று புரம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் இவ்வகை நீரிழிவு நோய்க்கு எந்த வித தடுப்பும் உபயோகப்படாது. 5இல் இருந்து 10% நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த வகை நோயை கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாம் வகை நீரிழிவு நோய்: நீரிழிவு நோய் உள்ளவர்களில் 90% இவ்வகை நீரிழிவு நோய் கொண்டிருக்கிறார்கள். இன்சுலினுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாவதால் இந்நோய் வருகிறது. இன்சுலினுக்கு தேவை அதிகரிக்க அதிகரிக்க பான்க்கிரியாஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், சர்க்கரை செரிமான குறைவு, குடும்பத்தில் ஏற்கெனவே சர்க்கரை நோய் இருந்தால், அதிக உடல் இயக்கம் (physical activity) இல்லாதது போன்றவை இதற்கு காரணம். இப்போது அமெரிக்காவில் குழந்தைகள் அதிக உடற்பயிற்சி செய்யாமல் எடை அதிகரிப்பதால் இந்நோயால் பீடிக்க படுகிறார்கள். ஒருவகையில் ஆசிய அமெரிக்கன், ஹிச்பானியர், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இந்நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.

மூன்றாவது வகை நீரிழிவு நோய் கருத்தரிக்கும் போது வரும். சில பெண்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், அவர்களின் குடும்ப வரலாறு பொறுத்து இந்த நீழிவு நோய் வர வாய்ப்புண்டு.குழந்தை பிறந்த பின் இதில் 5% பெண்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரக்கூடும்.

நீரிழிவு நோய்க்கான மருந்து:

முதலாம் வகை நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் ஊசி அல்லது ஒரு பம்ப் கொண்டு மருந்து எடுத்து கொள்ளவேண்டும். இரண்டாம் வகை நோய் உல்ளவர்கள் உடற்பயிற்சி மூலம் எடை யை குறைப்பதோடு சில மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். இதை தவிர்த்து கொலஸ்டிரால் குறைக்கவும் மாத்திரை எடுத்து கொள்ளவேண்டும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% மக்கள் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% மாத்திரைகளும் 17% இரண்டும் உபயோகிக்கிறார்கள்.

நீரிழிவு நோய்க்கு முதலாம் நிலை: இந்நிலையில் உள்ளவர்கள் சர்க்கரை அளவு இரத்தத்தில் சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும். ஆனால் அதே சமயம் இவர்களை நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றும் சொல்ல முடியாது.

இவர்களுக்கு உணவு உண்பதற்கு முன் சர்க்கரை அளவு பாதிக்கப்பட்டிருக்கும். அதேபோல இவர்களின் முன் இரவு முழுதும் சாப்பிடாமல் இருந்து மறுநாள் காலை அளவு பார்க்க படும் சர்க்கரை அளவு 100-120 மில்லிகிராம்/ டெசிலிட்டர் இருக்கும். இது சாதாரணமானவர்களின் அளவை விட அதிகம்.

அமெரிக்காவில் பலரின் சர்க்கரை அளவை சரிபார்த்ததில் 41 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய்க்கான முன்நிலையில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

2005 ஆம் ஆண்டு மட்டும் 20வயதுக்கும் மேலானவர்களில் 1.5 மில்லியன் (புதிதாக கண்டுபிடிக்க பட்டவர்கள்)பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

நீரிழிவு நோய் இருந்தால் இன்னும் பல நோய்கள் வர கூடும்.

இதய நோய், பக்கவாதம் (Heart disease, stroke):

நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றவர்களை விட 4 மடங்கு அதிகமாக இ தய நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு பெறுகிறார்கள். இதில் இ தய நோய், பக்கவாதம் வந்தபின் 65% இறந்து போகிறார்கள்.

அதேபோல ஸ்ட்ரோக் வரக்கூடிய வாய்ப்பும் 4 மடங்கு அதிகமாகிறது.

இரத்த அழுத்தம்: 75% நீரிழிவு நோய் உள்ளவர்கள் 130/90 க்கு மேல் இரத்த அழுத்தம் கொண்டு மருந்து உட்கொள்கிறார்கள்.

கண்பார்வை போதல்: 20 வயதிலிருந்து 74 வயதுக்குள்ளான நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் பார்வையை இழக்கிறார்கள். ஆண்டொன்றுக்கு 24000 பேர் புதிதாக கண் பார்வையை இழப்பதாக சொல்கிறார்கள்.

சிறுநீரக கோளாறு: நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறு வர முதல் காரணம் ஆகிறது. ஆண்டொன்றுக்கு 44% புதிய சிறுநீரக கோளாறு உள்ள நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்.

2002 ஆம் ஆண்டு நீரிழிவு நோய் உள்ளவர்களில் 150000க்கும் அதிகமானோர் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு டையாலிஸ் செய்து கொள்ள மருத்துவமனையில் சேர்க்க பாட்டிருந்ததாக புள்ளி விவரம் கூறுகிறது.

நரம்பு சம்பந்தமான நோய்கள்:

60 முதல் 70% வரையான நீரிழிவு நோய் உள்ளவர்கள் நரம்பு சம்பந்தமான நோய்க்கு உள்ளாகிறார்கள். கை கால் விரல்களில் உணர்ச்சி அற்று போதல், உணவு செரிமான சக்தி குறைவது போன்றவை ஏற்படுகின்றன.

மிக அதிக பட்சம் சிலருக்கு கால்கள் நீக்க படவேண்டிய நிலைகூட வருகிறது.

விபத்து இல்லாமல் கால்களை நீக்குதல் நீரிழிவு நோயால் மட்டுமே வருகிறது.

பற்களும் அதிக அளவு பாதிக்க படுகிறது. இதையும் தவிர அமில கார தன்மையை சீர்குலைக்க செய்து, கீட்டோன்களின் அளவை அதிகரித்து கோமா உண்டாக்கவும் வல்லது. பெரும்பாலோருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோயே அதிகம் ஏற்படுகிறது என்பதால் சீரான உடற்பயிற்சி, உணவு கட்டுபாடு மூலம் நீரிழிவு நோயை தடுக்க முயற்சி செய்யலாம். இந்த மாதம் நீரிழிவு நோய் தடுப்பு மாதம் என்பதால், குறைந்த பட்சம் உடற்பயிற்சி செய்யவோ அல்லது நடக்கவோ செய்ய ஆரம்பிப்பது நமக்கு நல்லது.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeThangamani wrote:
பயனுள்ள பதிவு!

reply to this comment
19/11 21:37:23
Dubukku wrote:
பயனுள்ள பதிவு.
குடும்பத்தில் இந்த நோய் இருந்துவந்தால் எனக்கும் கட்டாயம் வருமா இல்லை இது என் உடம்பைப் பொறுத்ததா? தடுக்க என்னென்ன செய்யலாம்? (உணவு பழக்கங்கள்?) நான் பொதுவாகவே பாதி சர்கரை தான் உண்வில் சேர்த்துக் கொள்கிறேன். இதனால் எதாவது பயன் உள்ளதா?

reply to this comment
21/11 16:44:45
Padma Arvind wrote:
தங்கமணி: தொடர்ந்து அளித்துவரும் ஊக்கத்திற்கு நன்றிகள்.
ரங்கா: ஒருவகையில் இது ஜீன்கள் மூலம் வரக்கூடும் என்றாலும், தடுக்க கூடிய ஒன்றே. நீங்கள் அதிகம் கொழுப்பு உள்ள உணவை உண்பதையும் குறைத்து கொள்ள வேண்டும். சில சமயம் அதிக காவீன் கூட சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். காவீன் கல்லீரலில் கிளைகோஜனை சர்க்கரையாக மாற்றி இரத்தத்தில் சேர்ப்பதால். உடற்பயிற்சி (20 நிமிட நடை) செய்தாலே உடல் எடை கூடுவதை தவிர்த்து இரண்டாம்வகை நீரிழிவு நோய் வருவதை தடுக்கலாம்.

reply to this comment
21/11 18:54:03
துளசி கோபால் wrote:
பயனுள்ள நல்ல பதிவு பத்மா.

கொலஸ்ட்ரால்அளவு 5 . ஆனாலும் இது வருமா?

reply to this comment
21/11 19:34:31
Padma Arvind wrote:
துளசி: நன்றி. கொலஸ்டிரால்ல் LDl, HDl இவற்றின் அளவு தெரிய வேண்டும். மொத்தம் 130 மைக்ரோகிராம்/ டெசிலிட்டருக்கு மேல் இருந்தால்(பெண்களுக்கு)அது நீரிழிவு நோயில் முடியவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் HDL/LDl விகிதம் தெரிந்திருத்தலும் அவசியம். 5 என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று விளக்குங்களேன் தனிமடலில்.

reply to this comment
21/11 20:20:27
வெளிகண்ட நாதர் wrote:
நமக்கு அரிசி சாப்டற பழக்கம் இன்னும் போகலிங்க, இந்த ப்ரொவுன் ரைஸ் சாப்பிட்ட நீரிழிவு நோய்யை கட்டு பாட்ல வச்சுக்க முடியும்ங்களா?

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions