பெற்றோர் சொன்னதன் படி பள்ளி, கல்லூரி சென்று படித்த ஒரு சாதாரண பெண். அதிர்ந்து பேசாத குரல், கண்களில் தெறிக்கும் நீர் வராமல் அடக்கி ஆளும் வல்லமை , சோகம் மீறி வரும் புன்னகை என்ற அடையாளங்கள் கொண்ட ஒரு சாதாரண பெண். திருமணம் செய்து கொள் என்று பெற்றோர் சொல்ல நடந்த திருமணம். முடிந்த ஒரு வாரத்தில் அமெரிக்கா பயணம். அதற்கு முன் கணவன் வீட்டில் இருந்த போது மாமாவிற்கு மூன்று மனைவியர், ஒவொருவரும் ஒவ்வொரு வயதில் கடைசி மனைவி 44 வயது. யார் கணவனின் அம்மா என்றே தெரியவில்லை. கேட்க பயம். முதலிலே நகைகளை தா என்று சொல்லி தர நேரமானதிற்கே மாமா கொடுத்த அடி காதில் இன்னமும் ரீங்காரம் இடுகிறது.
நல்ல வேலை, படிப்பு என்ற கணவன் மீது அபார நம்பிக்கை. எப்படியும் அமெரிக்காவில்தானே இருக்க போகிறோம். பல லட்சம் கொடுத்து செய்த திருமணம், இன்னும் தங்கை வேறு , அப்பா, அம்மாவிடம் சொல்வானேன் ஏன்ற ஒரு அசட்டுத்தனம். புன்னகையுடன் அமெரிக்கா வந்தாள். வீட்டிலேயே சிறைக்காவல். கார் ஓட்ட கற்று கொள்ளட்டுமா என்ற போது எதுக்கு நீ கஷ்டப்படனும், நான் இருக்கேன் என்ற ஆதரவான பேச்சு. இதன்மூலம் அவள் நடவடிக்கைகள் கட்டுபடுத்த பட்டது. நண்பர்கள் யாரும் இல்லாமல் அவள் தனிமை படுத்த பட்டாள். ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு பார்த்தாலும் நமக்காகத்தானே என்று அடங்கி போன மனம்
ஆறுமாதத்தில் கடைசி மாமியார் வந்தபோது, தனிமை போகும் என்று எண்ணியவளுக்கு அதிர்ச்சி. அம்மா நிலையில் உள்ளவளிடம் கணவனுக்கு உறவு. ஆனால் தனியாக என்ன செய்ய முடியும், அதுவும் தங்கையின் திருமணம் முடிய வேண்டும் என்று வாய்மூடி மவுனமாக இருக்க பழகிகொண்டாள்.
குழந்தைகள் பிறந்தபின், கணவனின் நண்பர்கள் மூலம் குழந்தைகளை அவன் வெறுப்பதை புரிந்து கொண்டு கூடிய மட்டும் கணவனை பாதிக்காமல் தானே பார்த்தும் கொண்டாள். சிறைவாழ்க்கை.
திடீரென ஒருநாள் கணவன் தன் பெயரை வங்கி கணக்கிலிருந்து நீக்கியடதை தோழி ஒருத்து தொலை பேசி சொல்ல, அ திர்ந்து போனாள். அப்போதும் எதுவும் பேசவில்லை. தனக்கும் குழந்தைகளுக்கும் கிடைத்த வாழ்க்கையே போதும் என்று எண்ணி எதற்கு வீண்வம்பு என்று வாளாவிருக்க திடீரென கணவன் கையை முறிக்க முதல் முறையாய் வலி. மருத்துவரிடம் அழைத்து செல்லவில்லை. ஊருக்கு போய் குணமாக்கி கொள் என்று சொல்லி குழந்தைகளுக்கும் அவளுக்கும் ஒருவழி டிக்கெட் எடுக்க, அப்போதுதான் முதல்முறையாய் பயந்து போனாள். ஏன் என்று கேட்க, தானே இரண்டு மாதத்தில் இந்தியா வரப்போவதாகவும் சென்னையில் இனிமேல் இருக்க போவதாகவும் சொன்னான்.
சென்னையில் தாய் வீட்டில் இருந்தவளை தொலைபேசி தன் பெற்றோருடன் போய் இருக்க சொல்ல மறுத்தாள். இந்தியா வந்தாவன் அவள் வீட்டிற்கு சென்று அடிக்க, குழந்தையை தூக்கி போட கதறியவள் குரல் கேட்டு முதல் முறையாய் விபரீதம் உணர்ந்த அம்மா உள்ளே வர அவளுக்கும் அடி.
காவல் நிலையத்தில்சென்று புகார் தந்த போது முதலில் ஆதரவாய் பேசியவர் மறுநாள் அவளும் பெற்றோரும் இருக்கும் போது கனவன் வீட்டிற்கு சொல்லி அனுப்ப, காவலர் முன்னாலேயே அடி. என்னை மீறி வாழ முடியுமா பார் என்று சொன்னவர்கள், அதன்பின் தொலைபேசி பயமுறுத்துவது, மிரட்டுவது என்று தொடர்ந்து உளைச்சலை தந்தனர். பிள்ளையை பள்ளியில் விட்டுவிட்டு வந்த உடன் வரும் தொலைபேசி. உன் பிள்ளை உயிருடன் வேண்டுமானால், மாமாவீட்டில் வாழ் என்று. உன் அப்பா விபத்தில் மாட்டி கொண்டார். உடனே வா என்பது போல.
விவாகரத்து கேட்டு வழக்கு பதிவு செய்ய, நீதிபதி ஒருவர் உன் கணவருடன் அவர்கள் வீட்டில் சென்று இரு, இல்லை என்றால் அமெரிக்கா போய்விடு என்று சொல்ல இங்கே மீண்டும் வந்திருக்கிறாள்.
இங்கே அரசு அமைப்புகள், நண்பர்கள் உதவியில் வேலை தேடிக்கொண்டு வாழும் அவள் மீது இப்போது குழந்தைகளை கடத்தி வந்துவிட்டதாக புகார் கொடுத்திருக்கிறான். குழந்தைகள் காப்பீடு, அவர்கள் செலவிற்கு உதவித்தொகை எல்லாம் அரசாங்கத்திலிருந்து கிடைக்கிறது
நிறைய வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை கேட்டாகிவிட்டது. கணவனின் தந்தையிடமிருந்து வரும் பாலியல் தொல்லைகள், தன் கணவனுக்கு இன்னொரு பெண்ணிடம் உள்ள பாலியல் உறவு என்று அத்தனையும் சொல்லியும், இலவச வழக்கறிஞர்களால் அதிக நேரம் செலவழக்க முடியா நிலையில், மிகவும் சிக்கலான ஒரு வழக்கு என்பதால், ஒரு சிறப்பு வழக்கறிஞரை நாட வேண்டியுள்ளது.
அடுத்த வாரம் சில வழக்கறிஞர்களை சந்தித்து தவணை முறையில் பணம் தருவதாக பேசி பார்க்க இருக்கிறோம். என் அலுவலக நேரத்தில் எதுவும் செய்ய முடியாதாகையால், மாலை அல்லது வார இறுதியில் பேச வேண்டியுள்ளது. முடியும் என்று தோன்றுகிறது. இல்லை எனில் யாரேனும் உதவி செய்ய முன்வந்தால் அந்த பெண் நன்றி உள்ளவாளாய் இருப்பாள்.
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madePartha wrote:
AFAIK, there is no case until there is hard evidence against this man (beast). Does she have any friends who could take a stand against the guy? Someone who saw the abuse and could come up to the court and say what she saw…
reply to this comment
02/12 19:52:29
dharumi wrote:
வாடும் பெண்ணுக்கு உதவும் உங்கள் நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள். அந்த ‘அபலை’க்கு விடிவு வருமென நம்புகிறேன்.
reply to this comment
03/12 00:57:30
Thangamani wrote:
பத்மா என்ன மாதிரி உதவி செய்யமுடியும் என்று தெரியவில்லை. ஆனால் மறுபடியும் இன்னொரு இந்திய நீதிபதியிடம் மட்டும் அறிவுரை கேட்கச் சொல்லாதீர்கள்.
reply to this comment
03/12 04:40:40
sarah wrote:
பத்மா
எப்படி, எங்க இருக்காங்க.
யாருடைய தயவில்?
இதெல்லாம் எனக்கென்னமோ ரொம்ப முக்கியமாகப் படுகிறது.
அதுவும் அமெரிக்காவில், வேலை இல்லாமல்?
இந்தியப் பாரம்பரியத்தில் வந்த பெண்ணின் எண்ணங்களை நான் நன்றாகவே அறிகிறேன். எவ்வளவு நாட்கள் அந்தப் பெண் அமெரிக்காவில் இருக்க முடியும், இதுபோன்ற நீண்ட கேள்விகள்.
என்ன சொல்ல?
அதுக்கெல்லாம் மேலாக அந்தப் பெண்ணுக்கு தன்னம்பிக்கை, தன்னைப் பற்றிய எண்ணங்கள் போன்றவை முக்கியமாகப் படுகின்றன.
எவ்வளவுதான் நம்பிக்கைகள் வெளியில் இருந்து கிடைத்தாலும், அந்தப் பெண் துணிவுடனும், தன்னம்பிக்கையுடனும், சமூகம் சார்ந்த கருத்துக்கள் தனது வாழ்க்கையைக் கேள்வி எழுப்பும்பொழுதாவது அதனைப் பார்க்கும் தைரியத்தை வரவழைத்துக் கொள்வது இது போன்ற குணங்கள் இந்த நேரத்தில் அந்தப் பேன்னுக்கு மிக முக்கியமாகும். மேலும், எங்கு தங்கியிருக்கிறார்கள்? மிகக் கஷ்டமாக இருக்கிறது கேட்க. ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு சிறிது துணிச்சல் அதிகமாக இருந்தால் வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மனம் தொய்வடையாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.
என்ன சொல்ல என்று தெரியவில்லை.
நம்பிக்கையைத் தவிர வேறு உதவிகள் எதுவும் முழுப் பயன் அளிக்குமா என்ற கேள்வியும் எனக்கு வராமலில்லை.
அவர்களிடம் சொல்லுங்கள் , அவங்க மட்டும் இப்படிக் கஷ்டப் படவில்லை. நிறையப் பேர் இதுமாதிரி இருக்கிறார்கள். ஆனால், நம்பிக்கையோடு இதனை எதிர்கொண்டால் இந்தத் துன்பத்தில் இருந்து வெளி வருதல் சுலபம் என.
சாரா
reply to this comment
03/12 07:03:20
Padma Arvind wrote:
பார்த்தா: மனைவியின் பெயரில் கையொப்பமிட்டு வங்கி கணக்கிலிருந்து பெயரை நீக்கிய ஆதாரம் இருக்கிறது. சாட்சி சொல்ல வேறு யாரும் இல்லை. சென்னையில் காவலர்கள் நீதிபதியை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விட்டார்கள்.
தருமி: உங்களை போல பலரின் வாழ்த்துக்கள் அவளுக்கு வெற்றியை தரும் என்று நம்புகிறேன்
reply to this comment
03/12 09:02:08
Padma Arvind wrote:
தங்கமணி: நல்ல வேளையாக இங்கே இன்னும் இதுபோன்ற வழக்குகளில் ஊழல் வரவில்லை. இலவச சட்ட ஆலோசனைகளைவிட தமிழக கலாச்சாரமும் தெரிந்த வழக்கறிஞர் வேண்டும் என்பதால் செலவாகும். அதற்காக நிதி உதவி அளிக்க யாரேனும் முன்வந்தால், நலமாயிருக்கும். நேரடியாக வழக்கறிஞருக்கே அனுப்பலாம். பத்திரிக்கையாளர் யாரேனும் இன்னும் விவரங்களுடன் எழுதி அந்த குடும்பத்திற்கு தண்டனை, கணவனுக்கு மறுமணம் ஆகியவற்றை தடுத்து இன்னொரு பெண்ணை காப்பாற்றலாம்.
வரதட்சணை பணம், நகைகள், சான்றிதழ்கள் இவற்றை திரும்ப பெற உதவலாம். நாராயணனை தொடர்பு கொண்டிருக்கிறேன். இன்னும் விவரங்கள் அனுப்ப இருக்கிறேன்.
reply to this comment
03/12 09:43:54
Padma Arvind wrote:
சாரா
இன்னும் பாதிப்பு நிலிஅயில் இருக்கிறாள். இதிலிருந்து கோப நிலைக்கு சென்று பிறகு மாறவேண்டும். நண்பர் ஒருவரின் உணவகத்தில் வேலை தந்து ஆதரவும் தருகிறார்கள். குழந்தைகளுக்கு social service அலுவலகம் பணம் தருவதால் பிரச்சினை இல்லை. அரசின் காப்பகத்தில் மனு கொடுத்திருக்கிறாள். கிடைத்தவுடன் கவலை இல்லை.குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடும் கிடிஅத்துவிட்டது (medicaid). VCCB யில் மனு தந்திருக்கிறேன். அவர்கள் மனநிலை கவுன்சிலிங்கிற்கு குழந்தைகள், அம்மா இரண்டுபேருக்கும் பணம் தந்துவிடுவார்கள். எத்தனை நாள் வேண்டுமோ அத்தனை நாள் போகலாம். அரசு அலுவலகத்தில் தொழிற்கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யமுடியும்.தினமும் தொலைபேசுகிறேன். முடிந்தபோது சந்திக்கவும் செய்கிறேன். என் சக பணியாளர்கள் of the record கவுன்சிலிங் செய்ய விரும்புகிறார்கள்.தடுப்பூசி போன்றவை போட்டு தன்னாலும் குழந்தைகளை அன்புடன் கவனிக்க முடியும் என்ற அளவில் சில செய்கைகளை கவனிக்க சொல்லி தருகிறோம். Temporary restraining order வாங்க சில ஆலோசனைகள் வழங்கி உதவிசெய்கிறேன்.தனியாக இருக்க பயமாகவோ மனம் ஒடிந்தோ இல்லை.அவள் அனுமதியுடன் தான் எழுதினேன். சட்ட சிக்கல்கள் சரியானவுடன் தன்னுடைய அனுபவத்தில் கற்று கொண்டதை மற்றவர்களுக்கு சொல்லி எங்கே யாரை சந்திக்க வேண்டும் இன்னபிற, உதவி செய்ய அவளுக்கு ஆசை இருக்கிறது
reply to this comment
03/12 10:36:16
madhumitha wrote:
பத்மா அப்பெண்ணுக்கு இப்போதைய முதல் தேவை தன்னம்பிக்கை தான்.தேடித் தரும்உங்கள்உதவிகள் தொடரட்டும்.
reply to this comment
03/12 10:52:50
thanu wrote:
கடல் கடந்த வந்து, கஷ்டப்படும் பெண்ணுக்கு உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் தொடர்பாவது கிடைத்ததே என்பது சிறு நிம்மதி. உங்கள் நட்பு அவளுக்கு தொடர்ந்து மீட்பு கொடுக்கும் பத்மா.
reply to this comment
03/12 11:30:19
கயல்விழி wrote:
இத்தனையும் நிஜவாழ்வில் நடந்ததா..?? ஏதோ கதை வாசிக்கிறேன்
என்று முதலில் நினைத்தேன். என்ன கொடுமை இது எத்தனை கொடுமையிது
பெண்கள் அமைப்புக்களிடம் உதவி கோரமுடியாதா? பத்மா உங்கள் உதவிக்கரம்
சிறக்கட்டும்.
reply to this comment
03/12 12:59:03
துளசி கோபால் wrote:
பத்மா, ஏறக்குறைய இதே நிலமை இங்கே ஒருத்தருக்கு( ச்சின்னமாமியார் விவரம் தவிர்த்து)
எல்லோருமாச் சேர்ந்து உதவி செஞ்சுக்கிட்டு இருக்கோம்.
தைரியமா இருக்கச் சொல்லுங்க.அதுதான் இப்ப ரொம்ப முக்கியம்.
reply to this comment
03/12 14:35:31
வாசன் wrote:
பத்மா
நியு ஜெர்சி மாநிலத்தில் இப்பெண் உள்ளார் என நினைக்கிறேன்.
வலையில் தேடியதில் ஜெர்சியில் இருக்கும், இந்திய பின் புலத்துடனான சில வழக்கறிஞர்களின் பெயர்கள் கிடைத்தன.
சுட்டி
http://yp.usaindians.com/community/results.asp?zip=08837&biz=Lawyers…
மேலுள்ள சுட்டி வழியே காணக்கூடிய 12 வழக்கறிஞர்களில்
Anandarangam Venkatesan
422 E Wfield Ave
Roselle Park, NJ
(90 245-5858
என்பவரின் பெயரை பார்த்தால் தமிழர் என்பதாகத் தெரிகிறது. வேறு மாநிலத்தில் இப்பெண் வசிப்பவர் என்றால், usaindians.com ல் தேடிப் பார்க்கலாம்.
மற்றபடி நாங்கள் எப்படி உதவலாம் என்பதைப் பற்றி மின்னஞ்சலில் முடிந்தால் அனுப்புங்கள். vaasus@ஜீமெயில்.காம்
reply to this comment
03/12 15:13:33
வாசன் wrote:
விடுபட்டு போனது
http://www.aaalawyer.com/about_us.htm#venkatesan…
reply to this comment
03/12 15:17:47
Padma Arvind wrote:
துளசி, கயல்விழி, மதுமிதா, தாணு: நன்றி. இதுபோல துன்பப்படும் பெண்களுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட்டாலே நாளடைவ்வில் மாற்றம் வரும். நம்பிக்கைதானே வாழ்க்கை.
வாசன்: விவரங்களுக்கு நன்றி. மடல் அனுப்புகிறேன்
reply to this comment
03/12 17:32:01
ஜோ wrote:
என்ன கொடுமையடா இது?கற்பனை கூட பண்ண முடியாத காட்டுமிராண்டித்தனமாய் இருக்கிறதே?விரைவில் அப்பெண்ணுக்கு மன அமைதியும் நீதியும் கிடைக்கட்டும்
reply to this comment
04/12 04:46:20
sarah wrote:
Thank you Padma for the information. I will contact you through mail.
sarah
reply to this comment
04/12 04:47:21
tharasiva wrote:
Dear Padma,
This is so sad. Have you heard about Lawyer Kavitha Ramasamy? She is basically an immigration laywer, but she also runs an organization called “Mithr” to help abused immigrant women. She is based in New Jersey. You might want to contact her.
Here is the link to her contact details.
http://www.sulekha.com/classifieds/clad.aspx?cid=440362…
Thara.
reply to this comment
05/12 11:35:39
thamizhsasi wrote:
பத்மா,
நான் எப்படி இதற்கு உதவமுடியும் என்பது குறித்து மின்னஞ்சல் அனுப்புங்கள்
thamizhsasi@gmail.com
I am in New Jersey
reply to this comment
05/12 22:41:09
சேதுக்கரசி wrote:
1. Temporary ரிஸ்ட்ரெயினிங் ஆர்டர் தான் வாங்கமுடியுமா? Extended period-க்கு? அல்லது புதுப்பித்துக்கொண்டே இருக்கமுடியுமா?
2. ரிஸ்ட்ரெயினிங் ஆர்டரில் 2 வகைகள்: ஒன்று, அவன் அவளை, குழந்தைகளை சந்திக்கலாம், வீட்டுக்கு வரலாம், ஒரே இல்லத்தில் வசிக்கலாம். அவள் மேல் கை வைக்க முடியாது. இன்னொன்று, அவள் இருக்கும் இடத்தைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட radius-க்குள் வரமுடியாது. அதுவே மிகுந்த பாதுகாப்பு.
3. ரிஸ்ட்ரெயினிங் ஆர்டர் இருந்தும் சட்டத்தை மீறினால் அவனைக் கூண்டிலேற்றுவது சுலபம்.
4. ரிஸ்ட்ரெயினிங் ஆர்டர் இல்லாதபோது அவளைச் அடித்தால் அல்லது நேரிலோ தொலைபேசியிலோ மிரட்டினால் அவள் போலீசாரிடம் தெரிவித்தால் அது அவனுக்கு எதிரான சான்றாகப் பதிவாகும், அப்படிப் பதிவாகும் சான்று உபயோகமாக இருக்கும்.
5. அமெரிக்காவில் ஒருவரை அடித்தாலே அதற்கொரு வழக்குப் பதிவு செய்தால் அது சிவில் வழக்கு அல்ல. கிரிமினல் வழக்கு. கடந்த கால சம்பவங்கள் – அடி, உதை, மிரட்டல் போன்றவற்றுக்கு அவளே சாட்சி. அதுவே ஒரு வழக்குக்குப் போதுமானதாக இருக்குமே? அவள் சாட்சி சொல்ல மறுத்தால் தான் அந்த வழக்கு வலுவிழந்துபோகும்.
6. பாஸ்போட்டை அபகரித்தது, அவளை அடித்தது, ஆகியவை நீதிமன்றத்தில் செல்லும். தந்தையின் மனைவியுடனிருந்த உறவு (adultery), வங்கிக் கணக்கிலிருந்து அவள் பெயரை நீக்கியது போன்றவை கிரிமினல் குற்றமல்ல.
7. பிரிந்திருக்கும் நேரத்தில் அவன் அவளுக்கும் குழந்தைகளுக்கும் செலவுக்குப் பணம் தரவேண்டும். சாதாரண முறையில் கிடைக்கவில்லை என்றால் விவாகரத்துக்கு விண்ணப்பித்தால் அவன் நிச்சயம் செலவுக்குப் பணம் கொடுத்தாகவேண்டும். Legal separation-இல் ஒரு சிக்கல் உள்ளது: அவன் குழந்தைகளை வாரத்துக்கு இத்தனை முறை சந்திக்கலாம் என்றும், உதாரணத்துக்கு வாரத்துக்கு ஒரு முறை அவன் வீட்டுக்கு அழைத்துப் போய் மறுநாள் கொண்டுவந்து அவளிடம் விடலாமென்றும் நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புகள் அதிகம். அதற்கு அவள் சம்மதம் தரவேண்டிவரும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரி உங்கள் வலைப்பூவில் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. தெரியப்படுத்தினால் தனிமடல் அனுப்ப முயற்சிக்கிறேன். நான் வசிப்பது பாஸ்டன் அருகில்.
reply to this comment
05/12 23:44:02
Padma Arvind wrote:
ஜோ: நன்றி.
தாரா: கவிதாவை சந்திக்க முயற்சிக்கிறேன். மானவி, womens aware போன்றவை இலவச சட்ட ஆலோசனை தரமுடியுமே தவிர இலவச வழக்கறிஞர் தர இயலாது , மேலும் சட்ட சிக்கல்களில் ஈடுபட விரும்பவில்லை என்று சொல்லி விட்டார்கள்.
தமிழ்சசி,உங்களுக்கு மடல் அனுப்புகிறேன்.
சேதுக்கரசி: தற்காலிக TRO வாங்கமுடியும் 9 மாதங்களுக்கு. அதற்குபிறகு அதை நீட்டிக்கலாம். மனைவியின் கையொப்பம் தானே இட்டதால், அதை கிரிமினல் வழக்காக மாற்ற முடியும் என சொல்லுகிறார்கள். இன்று காலை நீதிமன்றத்திற்கு செல்கிறாள். வந்தவுடன் தான் விவரம் தெரியும். எனக்கு அலுவலக வேலைகள் இருப்பதால் நான் இன்றூ அவளுடன் செல்ல முடியாது. என்னை padma.arvind@gmail.com க்கு தொடர்பு கொள்லுங்கள். விவாகரத்து இப்போது படிவங்கள் தாக்கல் செய்ய முடியாது. இந்தவாரம் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்பப்படுத்தப்பட்டிருக்கிறார்களா என்றறிய மருத்துவரை கலந்தாலோசிக்க சொல்லி இருக்கிறேன்.
reply to this comment
06/12 06:42:28
பலூன் மாமா wrote:
பத்மா,
உங்களின் முயற்சிக்கும் சேவைக்கும் நன்றி.
நான் எனது நண்பர்கள் வட்டத்தில் விசாரித்து எழுதுகிறேன்.
நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
இலவச இலவச வழக்கறிஞர் ?
இலவச வழக்கறிஞர் +பண உதவி?
முடிந்தால் balloonmama at ஜிமெயில் க்கு மயில் அனுப்பவும்.
reply to this comment
06/12 08:42:26
Santhosh wrote:
எங்கே போய்க்கொண்டு இருக்கிறது மனித(???) நாகரிகம்(????). பாதாளம் முதல் வானம் வரை பணம் பணம் அய்யோ !
reply to this comment
07/12 15:24:36
ம் wrote:
பத்மா,
இந்த இணைப்புகள் தரும் அமைப்புகளோடு ஏற்கனவே தொடர்பு கொண்டிருக்காவிடின், உதவுமா என்று பாருங்கள்:
1. manavi
2. sakhi
இவை பற்றி பிபிஸியின் செய்திக்குறிப்பு:
< ahref="http://news.bbc.co.uk/2/hi/south_asia/3589899.stm">http://news.bbc.co.uk/2/hi/south_asia/3589899.stm
reply to this comment
07/12 15:54:50
Padma Arvind wrote:
santhosh, M Thanks. we have contacted Sakthi, Manavi and womens aware. They can only offer consultation and can not represent in court.Thanks
reply to this comment
07/12 16:36:40
Padma Arvind wrote:
பலூன்மாமா, வாசன்: மடல் அனுப்பி இருக்கிறேன்
reply to this comment
09/12 13:07:43
ரவி wrote:
பணம் கொடுத்து எல்லாம் உதவும் நிலையில் நான் இல்லை. வருந்துகிறேன். கடல் தாண்டி இப்படி கஷ்டப்படும் பெண்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். கஷ்டமா இருக்கு. உங்களை மாதிரி உள்ளங்களின் அறிமுகமாவது அப்பெண்ணுக்கு கிடைத்ததே..அவர்கள் வாழ்க்கை நல்ல விதமாய் அமைய என் வாழ்த்துக்கள். இப்படி எல்லாம் நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் இருக்கிறார்களான்னு கற்பனை பண்ணக் கூட முடியலே
reply to this comment
09/12 14:10:08
Jayashree wrote:
Padma,
Please let me know if she is in ned of any financial help. Are you raising funds for her?
reply to this comment
09/12 14:17:46
Padma Arvind wrote:
நன்றி ரவி. வாழ்த்துக்கள் கூட வல்லமையை தரும். ஜெயஸ்ரீ: நிதி சேர்க்கிறேன். உங்களால் முடியுமானால் என்னை (padma.arvind@gmail.com) க்கு தொடர்பு கொள்ளுங்கள்.
reply to this comment
09/12 19:10:24
சேதுக்கரசி wrote:
பொதுவாக, இதுபோன்ற வழக்குகளை மாவட்ட வழக்கறிஞரின் அலுவலகம் (District Attorney, DA’s Office) தன்னுடைய பொறுப்பாக எடுத்துக்கொள்ளும். அதில் பணிபுரியும் பொதுவழக்கறிஞர்கள் Public Prosecutor-கள் plaintiff-இன் சார்பில் வாதாடுவார்கள். அவர்களுக்கு மாவட்டம் ஊதியம் அளிக்கும். நாம் பணம் தரத் தேவையில்லை. அப்படியிருக்க, இதற்கு அதிகம் செலவாகக்கூடாது. (அதற்கும் மேல் நம் செலவில் ஒரு தனி வழக்கறிஞர் வைத்துக்கொள்வது நம் விருப்பம். அது எந்த அளவுக்கு அவசியம் என்று தான் பார்த்துக்கொள்ளவேண்டும்.) அதே சமயம் DA-வின் அலுவலகத்தைக் குறைவாக எடைபோட்டுவிடவேண்டாம். அமெரிக்க சட்டஒழுங்குமுறை விசயங்களில் மிகவும் சக்திவாய்ந்த, வலிமைமிக்க அலுவகங்களில் ஒவ்வொரு மாவட்டத்தின் DA-வின் அலுவலகமும் ஒன்று. அது யாருக்கும் சளைத்த அலுவலகமல்ல.
உண்மையைச் சொல்லப்போனால் அவன் அவளை அடித்தான் உதைத்தான் மிரட்டினான் கொடுமைப்படுத்தினான் என்றெல்லாம் அவள் புகார் செய்தால் DA-வின் அலுவலகம் அந்த வழக்கை எடுத்துக்கொண்டு நடத்தும். ஏனெனில் abuse வழக்குகள் தனிமனித வழக்கல்ல. மாநிலத்தைச் சேர்ந்த வழக்கு. It is not Her Vs Him. It is the State of New Jersey Vs Him. வழக்குத் தொடர்பான செலவுகளுக்கு அவள் பொறுப்பல்ல. மாநிலமே பொறுப்பு.
reply to this comment
13/12 12:28:43
Padma Arvind wrote:
சேதுக்கரசி
இவளுடைய வழக்கு தமிழ்நாட்டில் பதிவாகி, நிராகரிக்கப்பட்டு பிறகு குழந்தைகளை கடத்தியதாக புகார் சொல்ல பட்டு இருக்கிறால். முதலில் வழக்கை பதிந்தது கணவனே. இதனால் இந்த பெண் defensive ஆக போக வேண்டி இருக்கிறது. இங்கே Public prosecutor உடன் பேசியும் அவர்களால் செய்ய எதுவும் இல்லை. அந்த பெண் முதலில் வன்முறை, பாலியல் தொல்லை என்று புகாரிட்டிருந்தால் நீங்கள் சொல்வது சரி. அவள் தன் மேல் போடப்பட்ட குழந்தைகளை கடத்திய குர்றத்திற்கு எதிராக வாதாட வேண்டிய நிலையில் இருக்கிறாள்.தமிழ்நாட்டிலும் சரி இங்கேயும் சரி முதலில் வழக்கு தொடர்ந்தது கணவனே. இதனாலேயே அவளுக்கு சட்ட அலுவகங்கல் உதவ இயலவில்லை