»
S
I
D
E
B
A
R
«
14/02: உதவமுடியுமா – தற்போதய நிலை
Feb 14th, 2006 by பத்மா அர்விந்த்

உதவி செய்ய முடியுமா என்ற பதிவிற்கு நிறைய வலை பதிவர்களிடம் இருந்து ஆதரவு வந்தது. வலை பதிவுகளை படிப்பதோடு மட்டும் இல்லாமல் உதவும் என்ணமும் அதற்காக நேரம் செலவழிக்க பலர் இருப்பதை கண்டு எனக்கும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

குழந்தைகளை கடத்திய வழக்கு விசாரணக்கு வந்தபோது, கணவன் இந்தியா சென்று தன் மனைவி, குழந்தைகள் இல்லாமலே முழு பொறுப்பும் பெற்று வந்திருந்தார். தமிழ்நாட்டில் அன்னை தந்தை மனநிலமை ஆராயமல், எதையுமே கேட்காமல் எப்படி அவருக்கு குழந்தைகளின் முழு பொறுப்பையும் தந்தார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், சட்ட அறிக்கையை கொண்டுவந்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனாலும் இங்கே வழக்காடுமன்றத்தில் அந்த தீர்ப்பை கவனிக்கவே இல்லை. மாறாக அன்னைக்கு முதல் பொறுப்பும் தந்தைக்கு வாரத்தில் ஒரு நாள், 15 நாட்களுக்கு ஒருமுறை இரண்டு நாட்களும் குழந்தைகளை தன்னிடமே வைத்துக்கொள்ள அனுமதியும் தரப்பட்டிருக்கிறது.

இது தற்காலிகமான தீர்ப்பு என்பதால், மனைவி இப்போது விவாகரத்து, நிரந்தர தீர்ப்பு, குழந்தைகளை பார்த்துக்கொள்ள பண உதவி கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார். கணவன் மனைவி வேலை பார்க்கும் இடத்திற்கு அடிக்கடி தொலைபேசி தொந்தரவு செய்வதும் உதவி செய்பவர்களை மிரட்டுவதும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறத்து.

சென்னை நீதிமன்றம் தந்த முழு பொறுப்பு தீர்ப்பை எதிர்த்து வழக்காட சென்ற தம்பியை வாகன ம் மோதி விபத்துக்குள்ளாக்கியது, தந்தையை மிரட்டுவது போன்றவையும் தொடர்கிறது. ஆனாலும் முடிவில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

என் மீது நம்பிக்கை கொண்டு காசோலை அனுப்பி ஆதரவற்றிருந்த பெண்ணிற்கு உதவிய தாரா, தமிழ்சசி, டீசே, தாராவின் தோழி விலாசினி,செல்வராஜ், வாசன்,ஜெயஸ்ரீ, ஷ்ரேயா ஆகியோருக்கு என் நன்றிகள் பல.செல்வராஜின் பெண் நிவேதிதா வரைந்து அனுப்பிய வாழ்த்து அட்டை மிகவும் சிறப்பாக இருந்தது. அதை படித்த பெண்ணின் கண்களில் நீர் திரையிட்டதை காண முடிந்தது. அந்த வாழ்த்து அட்டை அந்த பெண்ணிடம் இன்னமும் இருக்கிறது.

இன்னமும் சில நண்பர்கள் பலவித ஆலோசனைகள், பேச தொடர்பு கொள்ள வழக்கறிஞர்கள், காசோலை தந்து உதவி இருந்தனர். மொத்தமாக $1200 சேர்ந்திருந்தது. இது வழக்கு செலவை விட குறைவானது என்றாலும், என் மீது கொண்ட நம்பிக்கையையும் அன்பையும் காட்டுகிறது. இதற்கு நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருப்பேன். பொதுவாக நான் பண விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பேன். அதுவும் இன்னொருவரிடம் இருந்து பெறப்படும் பணம், அதை அனுப்ப அவர்கள் எடுத்து கொள்கிற நேரம்,அதன் பின்னால் உள்ள உழைப்பு அதையும் மீறி அதன் அடிப்படையாக உள்ள அக்கறைக்கு என் வணக்கங்கள்.

14/01: பாமரப்பெண்ணின் சில கருத்துகள்
Jan 14th, 2006 by பத்மா அர்விந்த்

நாடு இனம் கடந்து காலம் காலமாக திருமணம் என்பது மனப்பொருத்தை விடுத்து பணம், செல்வாக்கு, சாதி நிறம் இனம் போன்ற காரணங்களாலே பெருமளவில் நிச்சயிக்க படுகிறது. இதில் ஏதேனும் ஒன்று மாறுபட்டு இருக்குமானால் எத்தனை பிரச்சினைகள்? உண்மையான மன உணர்ச்சிகள், புரிதலை விடுத்து நமக்குத்தான் தெரியாத விதிகளின் மேல் எத்தனை மோகம். தன் மகனோ மகளோ மகிழ்வுடன் இருப்பதைவிட நாலுபேரின் மனம் இசையவேண்டும் என்று படுகிற கவலைகள்தான் எத்தனை? அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட கிறித்துவர்கள் யூதர்களையோ காகேசியன் இனத்தை சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரையோ மணந்து கொள்ள முடிவெடுக்கும்போது உற்றாராலும் பெற்றோராலும் பலவித சங்கடங்களுக்கு ஆளாகிறார்கள்.

பழக்க வழக்கங்கள் மாறி விட கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பவர்கள் மன பொருத்ததில் ஒத்த அலைவரிசை இருக்கிறதா என்று சிந்தித்தும் பார்ப்பதில்லை.படிக்கும் கல்லூரி, பணிசெய்யும் இடம் இங்கே பேசி பழகி யாரையேனும் மனதுக்கு பிடித்திருந்தால் பெற்றோர்கள் செய்யும் பயமுறுத்தல், மிரட்டல்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் கேட்டு வரும் கடிதங்கள், நமது ஆசாரங்கள் என்ன குலமென்ன அந்தஸ்தென்ன என்ற கேள்விகள், இதில் பெண்கள் கல்லூரியிலும் திரைப்படங்கள் பார்த்தும் ஒழுக்கம் கெட்டு விட்டார்கள் என்ற வருத்தமான பேச்சுகள் என்று முடிவில்லாமல் போகிறது. தன்னுடைய வயது வந்த குழந்தைகள் எடுக்கும் முடிவில் நமக்கேன் இத்தனை அவநம்பிக்கை? அதேபோல நாள், கோள் மீது ஏன் இத்தனை நம்பிக்கை, நம்மைவிட, நம்மில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைவிட இன்னும் அதிகமாக?

குலத்தினாலேயே ஒருவன் நல்லவராகவும் இன்னொருவரும் தீயவராகவும் மாறப்போவதில்லை.

கலப்பு மணம் என்ற சொல்லே ஒருவகையில் தவறு. இந்த பிரச்சினை இந்தியாவில் மட்டும் இல்லை. எனக்கு தெரிந்த காகேசியன் ஆணின் திருமணம் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கனுடன் நடக்க, இருவீட்டு பெற்றோர்களும் மறுப்பு தெரிவித்துவிட்டார்கள். பெற்றோர்கள் மனம் வருந்த, தன் அப்பா தன்னுடன் ஆடும் திருமண நடனம் போய்விடும் என்று ஏக குழப்பத்தில் ஆழ்ந்த பெண் கடைசியில் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்கிறார்கள். இன்னும் சில குடும்பங்களில் தன் விருப்பத்தை மீறி திருமணம் செய்து கொள்ளும் ஆண்களின் பெற்றோர் மருமகளுக்கு தரும் தொல்லைகள், மருமகன் படும் கஷ்டங்கள் என்று விதம்தான் வேறே தவிர பிரச்சினைகள் அதேதான்.

அடிப்படையில் மனிதர்களை மனிதர்களாக மதிக்காதவரை, கலப்பு மணங்கள் கூடாதுதான். திருமணத்திற்கு பின் கஷ்டப்படவோ வருத்தப்படவோ வேண்டாம் அல்லவா?

ஒரு குலத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக அறிவுஜீவிகளாகவும் மற்றொரு குலத்தில் பிறந்த காரணத்திற்காக முட்டாள்களாகவும் யாரும் மாறுவதில்லை.அடுத்தவருக்கு வழிகாட்டவோ ஆக்கபூர்வமாக பயன்படாத வரையிலோ அறிவுஜீவித்தனத்தாலோ சிந்தனைகளாலோ எந்தவித பயனும் இருக்க போவதில்லை பெட்டியில் பூட்டப்பட்ட பணத்தை போல. அதேபோல செய்கிற தொழிலும். செய்யும் தொழில் மூலம் குல அடையாளங்கள் சொல்வதும் தவறு. ஆனால் எம் மக்கள் மனதில் தொழிலுக்கு கூட அடையாளம் இருக்கிறது.

நான் சாணியை பொறுக்கினால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அந்த வேலையை என்னை செய்யவிட்டால் அது பாவம் என்றும், மழை வராது என்றும் சொல்வதை கேட்டிருக்கிறேன். ஓடு மாற்ற சித்தாளாக போனால், ஐயோ பாவம் என்ன பாவம் செய்தார்களோ என்ற மனவருத்தம் படர வெளிவரும் வாக்கியங்கள் கேட்டிருக்கிறேன். முடி திருத்துபவர்கள், செருப்பை சரி செய்வபர்கள் என அவர்களை ஒதுக்குவதும் தீண்டத்தகாதவர் போல நடத்துவதும் மாறி இருக்கும் என்று நினைத்த எனக்கு சமீபத்திய கூட்டங்களின் உரைகள் ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் தந்திருக்கின்றன.

சாதாரணமானவர்கள் பேசினால் அறியாமை என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் சிந்திக்க கூடிய ஆடவர்கள் (பெண்களைவிட ஆண்கள் சிந்திப்பதில் மேலானவர்கள் என்ற ஒரு கருத்தையும் பத்ரியின் பதிவின் பின்னூட்டத்தில் பார்த்தேன்) என்று அவரவர் திரைப்படங்கள், செவ்விகள் மூலம் முற்போக்கான சிந்தனைகளை காட்டி கொண்டவர்கள், பெரும்பாலான மக்களை சென்றடையும் வழிமுறைகளை (எழுத்து, திரைப்படம்) கையாள்வதில் வல்லவர்கள், உலக அளவில் பிரபலமான எழுத்தாளர்களின் எழுத்துக்களை படித்தவர்கள் சொன்னதாலேயே இன்னும் வருத்தமாக இருக்கிறது. நூல்களை படிப்பதும் தெளிவதும் இன்னும் அன்போடு மனிதத்தை புரிந்து கொள்ளவும் மேம்படவும் என்று நினைத்த எனக்கு, சட்டென்று பிரபல எழுத்தாளர்கள், அறிவியல் வல்லுனர்களை சட்டென்று மேற்கோள் காட்டும் வண்ணம் படித்தும் கருத்தை உள்வாங்காமலே ஒருவர் இருந்திருக்கிறார், குழு மனப்பான்மை என்று சொன்னாலும் ( விண்கலம் O ring இல் பழுது என்று சொன்னவர்கள் கூட குழு மனப்பான்மையால் மனம் மாறி விண்கலத்தை அனுப்பி விபத்தில் போன கட்டுரை குழுமனப்பான்மைக்கு ஒரு உதாரணம்) என்னால் சீரனிப்பது கடினமாக இருக்கிறது.புராணங்களில் கூட அறியாமல் செய்த தவறைவிட அறிந்து செய்யும் தவறு அதிக தண்டனை பெறத்தக்கது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இனியாவது மனிதத்தை வளர்க்க சற்றே முயற்சி செய்யலாம்.பொங்கலின் இனிப்பு மனதில் படர, அதன்பின் உள்ள உழைப்பை சற்றேனும் வணங்கி மனம் ஒப்ப நன்றி சொல்லலாம். நாற்று நடும் பெண்களின் பாட்டுக்களில் மட்டும்தான் சேறு படவில்லை என்று கவி எழுதி பிரபலம் ஆவதை தாண்டி உண்மையிலேயே அவர்தம் வாழ்வு உயர சற்றேனும் உழைக்கலாம்,

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeஇரத்தினவேலு wrote:
நந்தவனத்தில் உங்கள் தலைப்பின் மேல் கிளிக் செய்தால் தளம் கிடைக்கவிலலை பாருங்கள்

reply to this comment
14/01 12:11:42
சுந்தரவடிவேல் wrote:
காலையில் இதே ரீதியில், அதாவது தம்முடைய பழக்க வழக்கங்களின் மேல் பொதித்து வைத்திருக்கும் அதீதமான புனிதங்களினால் மற்றவர்களையும் அவர்களது மரபுகளையும் தீட்டாகப் பார்ப்பது பெரும் வன்முறை என்று, யோசித்துக் கொண்டிருந்தேன்.
உங்களுக்கு என் அன்பும் பொங்கல் வாழ்த்துக்களும்!

reply to this comment
14/01 12:38:21
padma wrote:
நன்றி இரத்தினவேலு. காசி முயற்சி செய்துகொண்டிருக்கிறார் சரி செய்ய தன் பணிகளுக்கு இடையே. சரியாகிவிடும்.
சுந்தரவடிவேல்: சரியாக சொன்னீர்கள். நாம் நல்லது, புனிதம் என்ரு நினைப்பதை அடுத்தவர் செய்யாததால் தீட்டாக பார்ப்பதும் ஊடகங்கள் கூட இன்னமும் பல கலாசாரங்களை கேவலமாக பேசுவதும் வன்முறையே. மாசிலனுக்கும், உங்களுக்கும், உங்கள் மனைவி மற்றும் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும்.

reply to this comment
14/01 13:10:06
Ramachandran usha wrote:
//ஆனால் சிந்திக்க கூடிய ஆடவர்கள் (பெண்களைவிட ஆண்கள் சிந்திப்பதில் மேலானவர்கள் என்ற ஒரு கருத்தையும் பத்ரியின் பதிவின் பின்னூட்டத்தில் பார்த்தேன்) //

பத்மா எந்த எழுத்தாளினி என்ன சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் முத்துகுமரனின் பதிவில் நான்
சொன்னது இதுதான் “பெண்களுக்கான பிரத்தியோக உணர்வுகள், கருத்துக்கள், எண்ணங்கள் என்று தனியாய் ஒன்று உண்டு என்பதிலேயே எனக்கு ஒப்புமையில்லை. ஆணோ பெண்ணோ அவரவர் வளர்ந்த சூழ்நிலை, படித்த படிப்புக்கள், பழகும் வட்டம் இவற்றை வைத்தே எண்ணங்கள் ஏற்படுகின்றன என்பது என் தாழ்மையான எண்ணம்.” என்று சொல்லியிருந்தேன்.
இதற்கு பொருள் பெண்களுக்கு தனிப்பட்ட சிந்தனை கிடையாது என்று நீங்கள் பொருள் கொள்ளுகிறீர்களா?

reply to this comment
14/01 13:45:20
padma wrote:
இல்லை உஷா. பால் வேறுபாடின்றி மனிதனின் சிந்தனை வளர்ந்த சூழ்நிலை,படிக்கும் நூல்கள், பழகும் நண்பர்கள் ஆகியவை ஒட்டி இருப்பதாக சொல்வதாகவே பொருள் கொள்கிறேன். குலத்தாலோ இனத்தாலோ யாரும் கீழான சிந்தனையும் மேலான சிந்தனையும் கொண்டவர்களாக இருப்பது இல்லை அதுபோலத்தான் ஆணும் பெண்ணும். பெண்களுக்கு தனிப்பட்ட சிந்தனை இல்லை என்று சொன்னதாக எனக்கு புரியவில்லை. நானும் பெண் என்பதால் எனக்கு புரிதலும் இல்லையோ என்னவோ.

reply to this comment
14/01 14:02:16
dharumi wrote:
நாம் காணும் அறிவுஜீவித்தனத்தின் ஆழம் இவ்வளவுதான் என்று அறிய வரும்போது, ‘ச்சீ, இவ்வளவுதானா இவர்கள்’ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

reply to this comment
15/01 05:02:42
hgjhg wrote:
nnbnbv bcvbcv

reply to this comment
29/01 03:52:49

27/12: முள்ளில் விழுந்த சேலை?
Dec 27th, 2005 by பத்மா அர்விந்த்

இந்த வார நட்சத்திரத்தின் பதிவுக்கான பின்னூட்டம் நீளமாகிப்போனதால் இங்கே: காலம் காலமாக பெண்கள் இன்னொருவரை தந்தை, அண்ணன், அல்லது கணவனை சார்ந்தே வாழ வேண்டும் என்பது கல்லில் வடித்த ஓவியம் போல ஆழப்பதிந்துவிட்டது.

இங்கே தனியாய் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. கணவனை விட்டு பிரிந்து வாழும் பெண்களை இன்னும் சமூகம் ஒரு கேள்விக்குறியுடன் நோக்குவதும், குழந்தைகளை வளர்க்க படும் கஷ்டங்களும் ஏராளம். சட்ட ரீதியாக இன்னும் இந்தியாவில் கணவனை பொருளுதவி செய்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஜீவனாம்சம் போன்றவையும் தரவேண்டும் என்று சட்டம் சொன்னாலும் தராதவரை எப்படி நடைமுறையில் கட்டாயப்படுத்த முடியும் என்பதும் புரியவில்லை.

திருமணத்திற்கு ஆன செலவுகள், ஏறிய கடன் சுமை இடையில் மீண்டும் பெண், தன்னுடைய குழந்தைகளுடன் வீட்டிற்கு வந்தால் அது சுமையாகி போவதே நிசம்.சமீபத்தில் வன்முறைக்கு ஆளான பெண்ணின் அன்னையை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது, அவரே என்னிடம் “இவள் ஒருத்திக்கே எத்தனை செலவு செய்யமுடியும், இவளுடைய தங்கை தம்பிக்கும் செய்ய வேண்டாமா, இவளுடைய அப்பாவும் ஓய்வு பெற்றாகிவிட்டது, பிள்ளையை சார்ந்து இருக்கும்போது எங்களை கவனித்து கொள்வதே அவனுக்கு கஷ்டம், அவன் தலையில் இவளையும் எப்படி ஏற்ற முடியும், இது இவள் தலை எழுத்து” என்று சொன்னதை கேட்க பரிதாபமாக இருந்தது.

இன்னும் பெண்னின் கல்யாண கடனே தலைக்கு மேல் இருப்பதாக சொன்னபோது, வரதட்சிணை பற்றி ஏன் புகாரிடவில்லை என்றபோது, இவங்க அப்பா ரொம்ப கவுரமா வாழ்ந்தவர், கோர்ட் கேசுன்னு போனா அவரால தாங்க முடியாது, இப்பவே உறவுக்காரங்க அரசல்புரசலா பேசிக்கிறாங்க என்று ஒரு குற்ற உணர்வுடன் பேசும்போது வருத்தங்களை சொல்வதால் பலன் ஏது இருக்க போவதில்லை என்பதும் பெண்கள் தங்கள் கஷ்டங்களை வெளியே சொல்வதில்லை.

முடிவெடுக்க தெரிந்த நமக்கு அதன் விளைவுகளை ஏற்று கொள்ள தெரிவதில்லை. எங்கே நாம் பார்த்து செய்த திருமணத்தை குற்றம் சொல்லிவிடுவாளோ என்ற முன்ஜாக்கிரதை உணர்வு இந்த பெற்றோர்களுக்கு இருப்பதை கண்டிருக்கிறேன். என் பிள்ள கூட முன்கோபக்காரந்தான், ஆனா அவன் பெண்டாட்டி எப்படி மாத்திடுச்சு, நம்ம பொண்ணுக்கு அந்த சாமர்த்திய இல்லீங்க என்ற தந்தை, இவள செல்லம் குடுத்து இவங்க அம்மாவே கெடுத்துட்டாங்க என்று பழியை தூக்கி இன்னொருவர் மீது போடுவாரே தவிர இதற்கு மாற்று என்ன என்று யோசிப்பது இல்லை.சொன்னால் கணவன் பேர் கெடுவது மட்டும் இல்லாமல் தன் மீது குற்றம் சாட்டப்படுவது ஒன்றுதான் விளையும், மாற்று அல்லது துன்பங்களுக்கு முடிவோ கிடைக்க போவது இல்லை என்பதால் சொல்லி என்ன ஆகப்போகிறது என்பது இன்னொரு காரணம்.

மூன்றாவதாக ஒருவன் தவறிழைத்துவிட்டதாக தெரிந்து பிறகு அவனே குற்றங்கள் மறந்து வாழத்துவங்கினாலும் சமூகம் இன்னும் குற்றவாளியாகவே பார்க்கிறது. இது உறவுகளுக்கும் பொருந்தும். தன் கணவரை பற்றிய தன் மனத்தாங்கல்களை சொல்வதால், வருங்காலத்தில் தன் உறவுகள் கணவனை மதிக்காமல் போய்விடுமோ என்ற ஒரு பாதுகாப்பு மனப்பான்மையும் பெண்களுக்கு அதிகம்.கணவனின் மரியாதையே பெண்களுக்கு தங்கள் சுயமரியாதையைவிட பெரிதாக இருக்கிறது. பெரும்பாலும் குடும்பங்களிலே இந்த மனப்பான்மைதான் தன் மகன் தவறு செய்வது தெரிந்தாலும் அதை மறுத்து பேசும் அன்னை, எல்லா வீட்டிலயும் நடக்கிறதுதானே, என்று அசாதரணமாக கேட்கவே மறுக்கும் தங்கை என்று உதாரணம் காட்டமுடியும். “We all try to the save the face”

பெற்றவரிடமும் மற்றவரிடமும் சொல்லி உதவிகேட்டு கடைசியில் மீண்டும் கணவனோடுதான் வாழ்க்கை என்ற பின் வன்முறை அதிகமாகுமோ என்ற பயம், ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பலரால் உதவ முடியும் ஆனால் இயந்திரகதியான வாழ்க்கையில் எத்தனை நாட்கள் உடன் செல்ல முடியும்.

சில இந்திய பெண்களுக்கு உதவும் போது தொலைபேசி எண்ணை கொடுத்து அவர்களை அழைத்து பேசு என்று சொன்னாலும் அவர்கள் பேசுவது புரியவில்லை நீங்களே பேசுங்கள், கூட வாருங்கள் என்று சொல்லும் போது பணியைவிட்டு போகவும் முடியாமல், மாலை இரவுகளில் சென்றுவிட்டு பிறகு வரும்போது எனக்கே சில சமயம் அலுப்பாகி விடும்போது முழுக்க கணவனை சார்ந்து இருக்கும் பெண்களால் என்ன செய்ய முடியும், மேலும் கணவன் வீட்டினர் உடனே உன் தோழிபோல நீயும் திமிர்பிடித்து அலையாதே என்ற சொல்லம்புகள் எறியும்போது, இந்த அவஸ்தை ஏன் அவரவர் விதி என்று பெண்கள் இருப்பதும் காரணமாய் இருக்கலாம்.எனக்கு இந்த திமிர் இருப்பதால் என்னோடு பழக தங்கள் மனைவியருக்கு அனுமதி மறுத்த கணவன்கள் இங்கே நியுஜெர்ஸியில் உண்டு!!

வன்முறைக்கு உள்ளான பெண்களும் போகப்போக கணவனின் கோபத்திற்கு நான் காரணம், என்று நம்புவது அடிப்படை காரணம். வன்முறை செய்வபர் ஒரு சுழற்சியை பின்பற்றுகிறார்கள், அதீத வன்முறை, பிறகு சிலகாலம் அமைதி, பிறகு அதீத அன்பு அதன்பின் அதீத வன்முறை என்ற சுழற்சி. இதில் வன்முறைகாலம் கூடுதல் காலம் இருந்தாலும், அதீத அன்பு இருக்கும்போது என்னை மன்னித்துவிடு, இனிமேல் இதுபோல் நடக்காது, நீ அப்படி எதிர்த்து பேசலனா அடிச்சிருக்க மாட்டேன், எனக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி, அப்ப நீ வேற பேசினயா ஒரு உரிமைல அடிச்சிட்டேன் என்று பேசி, பரிசுகளும் பூக்களும் வாங்கி மனைவியை நம்ப வைக்கிறார்கள் இதுதான் கடைசி முறை என்று. பிறகு 3 மாதம் கழித்து ஹனிமூன் முடிய ஆரம்பிக்கிறது கோபம், வன்முறை எல்லாம்.இந்த சுழற்சியில் இடைபட்ட கால சந்தோஷம் ஒரு நம்பிக்கையை தருகிறது.

கடைசியாக குழந்தைகள் நலன் முன்னிட்டு பெண் பொறுமையுடன் இருப்பதும் கஷ்டங்கள் ஒருநாள் தீரும் அதுவரை பொறுமையாய் இருப்பதே நலம் என்பதும், பொறுமையாய் இருப்பதே தியாகமாகவும், குழந்தைகளுக்காக அந்த தியாகத்தை செய்வது சரி எனவும் மனதில் கல்லில் வரைந்த ஓவியமாய் எழுதப்பட்ட எழுத்துக்கள். குழந்தைகள் இந்த பின்னனியில் வளார்ந்தால் இதுபோல ஆண் பெண்ணை வன்முறைக்குள்ளாக்குவது சரி என்ற ஒரு கருத்து மனதில் படிகிறது. தன் அன்னையின் பொறுமையை பார்த்து அப்படி இருப்பதே சரி என்று பெண்குழந்தைகள் வாழ கற்று கொள்வது என இன்னொரு சக்கரம் சுழல்கிறது. சில ஆண் குழந்தைகள் இதற்கு எதிர்மாறாக அதிக மென்மையும் அன்பும் கொண்டு வளர்ந்தாலும், பெண்கள் ஏனோ தன்னம்பிக்கை கொண்டு வளர்வதில்லை.

வன்முறையில் இருந்து விடுபடவும் முடியாது, ஆதரவும் இல்லாத நிலையில் ஒரு கட்டத்தில் அத்தனை தவறுகளுக்கும் தானே பொறுப்பு என்ற தாழ்வு மனப்பான்மை அதிகரித்து (low self esteem), தற்கொலையில் முடிகிறது. என் கணவரின் அக்கா 20 வருடங்கள் முன்பு தன்னை எரியூட்டி கொண்டபோதும் இதே குடும்ப பெயரை காக்க அந்த (தற்)கொலை மறைக்க பட்டது. இந்த மனப்பான்மையை மாற்ற மாதக்கணக்கில் ஆலோசனை சொன்னாலும் திரும்ப தாழ்வு மனப்பான்மைக்குள் செல்ல முடியும்(reversible).

மேலும் ஆண் தன் நண்பனை காக்க செய்யும் செயல்கள் பெருந்தன்மையாக கண்டுகொள்ளப்பட்டலும் அதுவே பெண் செய்யும் போது, இவன் கொடுக்கிற இடம் வீட்ட, குழந்தைகளை மறந்துட்டு இப்படி தோழிக்காக நேரம் செலவிட இவளாலதான் முடியும் என்று சில குடும்பங்கள் இன்னும் பேசுவதும் காரணமாகலாம்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeகல்வெட்டு wrote:
//எனக்கு இந்த திமிர் இருப்பதால் என்னோடு பழக தங்கள் மனைவியருக்கு அனுமதி மறுத்த கணவன்கள் இங்கே நியுஜெர்ஸியில் உண்டு!!//

முட்டி மோதி பிரச்சனையை தானே சரிசெய்வதும், பிறருக்கு உதவுவதும், சுயமாக சிந்துப்பதும்,சுய கெளரவமாக வாழ முயற்சிப்பதும்…..இந்த “திமிர்” பட்டங்கள் பட்டத்தைத்தான் பெற்றுத்தரும். இதில் கொடுமை என்னவென்றால் இந்த பட்டத்தை தருபவர்கள் பெரும்பாலும் அதே பெண்ணினமே.ஆண்கள் பெண்களுக்கு “திமிர்” பட்டம் தருவது அவர்களின் ஆளுமையிமால் வந்த பொறாமையாகத்தான் இருக்கும். பெண்களுக்கு கல்வி, பொருளாதார சுய சார்பு மர்றும் தான் நம்பிய விசயத்தை தானே கேள்விக்குள்ளாக்கி விடைதேட முயற்சிப்பது போன்றவையே விடிவைப் பெற்றுத்தரும்.

reply to this comment
27/12 14:35:44
maram wrote:
//வன்முறைக்கு உள்ளான பெண்களும் போகப்போக கணவனின் கோபத்திற்கு நான் காரணம், என்று நம்புவது அடிப்படை காரணம். வன்முறை செய்வபர் ஒரு சுழற்சியை பின்பற்றுகிறார்கள்//.

யேசிக்க வைத்தது பத்மா., நிதானமாக இப்பதிவைப் படித்துவிட்டு தனியான பதிவெழுதுகிறேன்.

reply to this comment
27/12 15:38:37
துளசி கோபால் wrote:
பத்மா,

அது வெறும் ‘திமிர்’ இல்லை.
‘சம்பாதிக்கற திமிர்’!

‘நாலு எழுத்துப் படிச்சுட்டோம்முன்னு ஆடுது’

நிறையக் கேட்டாச்சு பத்மா.

reply to this comment
27/12 15:55:44
ராம்கி wrote:
சென்னையில் மழை நின்றது. இந்தப் பதிவில் கொட்டுகிறது.

reply to this comment
27/12 21:44:25
saraswathi wrote:
//எனக்கு இந்த திமிர் இருப்பதால் என்னோடு பழக தங்கள் மனைவியருக்கு அனுமதி மறுத்த கணவன்கள் இங்கே நியுஜெர்ஸியில் உண்டு!!//

Dear Padma

I think this is a normal thinking of the society, at times we just have to ignore it ( but i am sure it is not so easy as i am saying )

sarah

reply to this comment
28/12 00:58:16
Padma Arvind wrote:
sara:
I understand, dont realy car. But many women are suppressed to access help. This is one of controlling tecnique to cut off from friends, relatives and isolate the vitim. so others will not know the situation. Maram has also mentioned about an engineer who cant even talk to her sister. I can access help an dknowledgable, some women are controlled. Thanks

reply to this comment
28/12 07:31:15
Padma Arvind wrote:
கல்வெட்டு: நீங்கள் சொன்னது நிஜம். பெண்களுக்குமே சுமரியாதையுடன் உள்ள பெண்கல் தங்களிலிருந்து மாறுபட்டு இருப்பதை கண்டவுடன் தங்கள் நிலையை ஊர்ஜிதம் செய்துகொள்ள, தங்களை ஏமாற்றி கொள்ளவும் தங்கள் நிலை சரியானது என போலியாக உணரவும் இந்த பழிபோடல் தேவையாய் இருக்கிறது. இதில் அறியாமையும், consonant disonance பண்பும் காரணம். நன்றி
மரம்: எழுதுங்கள் பலரும் படிக்க நேரிடும். நன்றி.
துளசி: உண்மை. அதிலும் ஆணைவிட கூட படித்துவிட்டாலோ, பொருளீட்டிவிட்டாலோ இன்னும் கூடுதல் பொழி வன்முறை. நன்றி
ராம்கி: நன்றி. மீண்டும் வலைப்பக்கம் வந்தமைக்கு கருத்து சொன்னதற்கும்.

reply to this comment
28/12 07:36:28
கயல்விழி wrote:
வெளியாருக்கு தங்கள் பிரச்சனைகளைச்சொல்ல அவர்களது நகைப்பு ஏளனம் போன்றவற்றிற்கு முகம் கொடுக்கப்பயப்படும் பலர் தமக்குள் புழுங்கிக்கொள்கிறார்கள். மற்றது.
பெற்றோருக்கு ஏன் வீணான வருத்தங்கள் கவலைகள் என்று சிந்திக்கும் பெண்களும் இருக்கிறார்கள். தனக்குள்ளேயே எல்லாவற்றையும் போட்டுப்பூட்டி சித்திரவதையுடன் வாழ்கிறார்கள்.

இப்படியான குடும்ப வன்முறைகளை தினம் அல்லது அடிக்கடி பார்த்து வருகின்ற பிள்ளைகள் மனரீதியாக பாதிப்புக்கு உள்ளாகவும் இடம் இருக்கிறது. அதனால் பெற்றோர்களை வெறுத்து தன்னைத்தனிமைப்படுத்தி வாழ முற்படும் குழந்தைகள் பல விபரீதங்களைச்சந்திக்க வேண்டிவரும். இவை குழந்தைகளை தங்களது அன்றாட நடவடிக்கைகளில்(படிப்பு விளையாட்டு) சரிவர கவனம் செலுத்தமுடியாமல் பண்ணிவிடவும் வாய்ப்புண்டு. நலல விடையத்தை அலசியிருக்கிறீர்கள்.

மேற்கோளுடன் எழுதியிருந்தேன். எனது பின்னூட்டம் ரூலோங் என்கிறது உங்கள் பெட்டி கருத்

reply to this comment
28/12 08:15:20
DJ wrote:
பத்மா,
நீங்கள் குறிப்பிட்ட, அதீத வன்முறை, அமைதி, அதீத அன்பு என்று ஒரு pattern இந்த வன்முறையில் இருப்பதாய் இது சம்பந்தமான ஒரு ஆய்வுக்கட்டுரையிலும் அண்மையில் வாசித்திருந்தேன். மற்றது, அடக்கப்படும்/கொடுமைப்படுத்தும் அம்மாவைப் பார்த்து அதேமாதிரி இன்னொரு வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளும் பிள்ளைகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதேசமயம், பெற்றோரைப் பார்த்து தாங்கள் அப்படியிருக்கக்கூடாது என்று சுயமாய்ச் சிந்தித்து அந்த வட்டத்தைவிட்டு வெளியேறக்கூடிய ஒரு தலைமுறையும் உருவாகக்கூடும் என்று நான் நினைக்கின்றேன்.

reply to this comment
28/12 09:56:33
Mohandoss Ilangovan wrote:
//பெரும்பாலும் குடும்பங்களிலே இந்த மனப்பான்மைதான் தன் மகன் தவறு செய்வது தெரிந்தாலும் அதை மறுத்து பேசும் அன்னை//

எங்க வீட்டில் இன்னமும் செருப்பு விளக்கமாரெல்லாம் வரும். (இதைப்பத்தி அப்புறமா எழுதுறேன்.), ஒருவேலை எங்க அம்மாவிற்கு என்மேல் பாசம் இல்லையோ என்னவோ?

reply to this comment
28/12 11:20:49
கயல்விழி wrote:
//எங்க வீட்டில் இன்னமும் செருப்பு விளக்கமாரெல்லாம் வரும். (இதைப்பத்தி அப்புறமா எழுதுறேன்.), ஒருவேலை எங்க அம்மாவிற்கு என்மேல் பாசம் இல்லையோ என்னவோ? //

அக்கறை உள்ள தாய் அதைத்தான் செய்வார். நல்லவற்றைப்பாராட்டும் நேரம் தீயவற்றை தண்டிப்பதன் மூலமே ஒரு பிள்ளை நல்ல வளர்ச்சியை அடையமுடியும்.

reply to this comment
28/12 11:31:35
Maya wrote:
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.இங்கு(dalla) இது வரைக்கும் பல குடும்பங்கள் பார்த்திருக்கிறேன்.
1)இவர்கள் இருவரையும் பார்த்தால் Made for each other போல் இருப்பார்கள்.நாங்கள்(நானும் என் மனைவியும்) பழகிய போது மிக நன்றாக பழகினார்கள்.இருவரும் மேல் படிப்பு படித்தவர்கள்.
சில மாதம் கழித்துத்தான் அந்த மனிதனின் சுய ரூபம் தெரிய வந்தது.மனைவிக்கு தினமும் அடி ,உதை.சில கொடுமைகளை என்னால் எழுத முடியாது.நாங்கள் அந்த பெண்ணிடம் police ல் பண்ணச் சொன்னோம்.அந்தப் பெண் மறுத்து விட்டாள்.இந்தியாவிற்கு போ என்றால் அதற்க்கும் மறுப்பு ஏனென்றால் கணவனுக்கு ‘அடுத்த’ தொடர்பு ஏற்ப்பட்டுவிடுமாம்.நாங்கள் அந்தக் கணவனின் குடும்பபத்தாரை தொடர்பு கொண்டு பேசினோம்.அவர்கள் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது.கல்யாணத்திற்க்கு முன்பே அவனுக்கு மனோ வியாதி.இதை மறைத்து திருமணம் செய்திருக்கிறார்கள்.திருமணம் செய்தால் சரியாகி விடும் என்று(என்றுதான் இந்த மடைமை அழியுமோ ??).

நீங்கள் கூறியவாறு சில மாதம் மன்னிப்பு பின் வேதாளம் முருங்கை மரம் ஏறும்.தற்சமயம் அவர்கள் வேறு இடத்திற்க்கு சென்று விட்டார்கள்.
2)இந்த தம்பதியர்களில் கணவன் எப்பொழுதெல்லாம் வேலை இல்லாமல்(bench) இருக்கிறாரோ அப்பொழுதெல்லாம் மனைவி ராசியில்லாதவராகிவிவார்.

போதும் பத்மா அவர்களே..படித்தவன் படிக்காதவன்,ஆண்டிப்பட்டியில் இருப்பவன்,அமெரிக்காவில் இருப்பவன் ..இந்த விஷயங்களைப் பொறுத்தவரை எல்லாரும் ஒரே ரகம் தான்(மிருகம்).

/கணவன் வீட்டினர் உடனே உன் தோழிபோல நீயும் திமிர்பிடித்து அலையாதே என்ற சொல்லம்புகள் எறியும்போது, இந்த அவஸ்தை ஏன் அவரவர் விதி என்று பெண்கள் இருப்பதும் காரணமாய் இருக்கலாம்./

100% உண்மை..நாங்களும் அனுபவித்திருக்கிறோம்…

/மாலை இரவுகளில் சென்றுவிட்டு பிறகு வரும்போது எனக்கே சில சமயம் அலுப்பாகி விடும்போது முழுக்க கணவனை சார்ந்து இருக்கும் பெண்களால் என்ன செய்ய முடியும்/

யோசிக்கும் அல்லது முடிவு எடுக்கும் போது மனதை நினைக்காமல் மூளையை மட்டும் நம்பி முடிவு எடுக்கலாம்.

மொத்ததில் உண்மையை சொல்லியிருக்கிரீர்கள்.என்ன செய்வது..சுடத்தான் செய்யும்…

அன்புடன்
மாயா

reply to this comment
28/12 12:08:37
madhumitha wrote:
///கடைசியாக குழந்தைகள் நலன் முன்னிட்டு பெண் பொறுமையுடன் இருப்பதும் கஷ்டங்கள் ஒருநாள் தீரும் அதுவரை பொறுமையாய் இருப்பதே நலம் என்பதும், பொறுமையாய் இருப்பதே தியாகமாகவும், குழந்தைகளுக்காக அந்த தியாகத்தை செய்வது சரி எனவும் மனதில் கல்லில் வரைந்த ஓவியமாய் எழுதப்பட்ட எழுத்துக்கள்///

இது தான் வேறுவழியின்றி அதே சூழலிலிருந்து விடுபடமுடியாமல் வாழவைக்கும் உண்மை பத்மா.
பெரிய பதிவா இடுற அளவில் இந்த பதிவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கதைங்க இருக்குங்க பத்மா

reply to this comment
28/12 13:59:14
madhumitha wrote:
ஒண்ணு மறந்துட்டேன்.
தலைப்பு.
எப்படியானாலும் சேலைக்கே பாதிப்பு

reply to this comment
28/12 14:00:45
karthikramas wrote:
பத்மா, “முள்ளில் விழுந்த சேலை, பாதிப்பு சேலைக்குத்தான்” என்றெல்லாம் உருவகப்படுத்துவது
(மன்னிக்க) கொஞ்சம் ஆபாசமாகப் படுகிறது. முதலில் இந்த உருவகம் எல்லாப்பெண்களுக்கும் பொருந்தாது. ஏனெனில் , தாய்தந்தையர் தவிர வேறு உதவியே இல்லாத பெண்கள் என்று எல்லோரையும் சொல்ல முடியாது. உதவி இருப்பவர்களும் வறட்டு “குடும்ப மானம், கெட்ட பேருக்கு” பயந்து அந்த உதவிகளை நாடுவதில்லை. கம்மல்,சிமிக்கி -க்கு மணிநேரங்கள் கதையடிக்கும் பெண்களும் கொஞ்சம் எதிர்காலத்தில் பிரச்சினை வந்தால் இதுவிதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முயலவேண்டும்.

அடிக்கும் வரை பிரச்சினை போனால் முதல் முறையே காவல் நிலையத்தை நாடவேண்டும். அல்லது இதுவாவது (காவல் நிலையம் என்று ஒன்று இருப்பது; மேலும் அங்கு போனால் அசிங்கம் இல்லை என்பது)அவர்களுக்கு போதிக்கப்படவேண்டும்.

இன்னொரு முனையிலிருந்து , காவல் நிலையாமும் குடும்ப நல சட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சட்டங்களும் பெண்களுக்கான விஷயங்களில் கடுமையாக கடைபிடிக்கபடவேண்டும். உதாரணமாக இங்கே அமெரிக்காவில் , 911 போன் பண்ணினால் என்ன ஆகும் என்ற பயம் எல்லா கணவன்மார்களுக்கும் ஓரளவு இருக்கும். அல்லது என்ன ஆனது என்ற கதைகளையாவது கேள்விப்பட்டிருப்பார்கள்.

முதலில் தெரிந்து கொள்ளவேண்டியதை தெரின்டு கொள்ள வேண்டும். எத்தனை பெண்கள் நம்மில் போலிஸ் கம்ப்ளெயின்ட் ஏதோ ஒரு காரணத்துக்காக தந்துள்ளீர்கள். வீட்டுக்கு வீடு “பெரியவங்க”ளோட கட்டப் பஞ்சாய்த்து வச்சி “குடும்ப கவுரவம்” காப்பாத்துறாப்புல பிரச்சினைகளை அனுகினால் இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

reply to this comment
28/12 14:24:53
Padma Arvind wrote:
கார்த்திக்: பரவலாக சொல்லப்படும் உருவகம் என்பதால் பயன்படுத்தினேன். (பிடித்து இல்லை, எனவே மன்னிப்பெல்லாம் தேவை இல்லை).தனியாய் வழும் பெண்கள் (வாழாவெட்டி என்ற பட்டத்துடன்) சமூகத்தில் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். மேலும் முதல்முறை அடிக்கும்போது பிரகு வரும் மன்னிப்பு கேட்கும் படலம் கண்டு, பெற்றவர்கள் இந்த திருமணத்திற்கு பட்ட கஷ்டங்கள் கருத்தில் கொண்டு யாரும் காவல் நிலையத்திற்கு போவதில்லை. இதில் படிக்காத பெண் முதல், வருடம் 200000$ சம்பாதிக்கும் பெண்வரை அடக்கம்.
விவாகரத்து ஆன பெண்ணை மணந்துகொள்ளும் ஆண்களும் குறைவு. அமெரிக்க பெண்களே காவல்நிலையத்திற்கு உடனே போவதில்லை. இதுபற்றியும் vitim/violence பற்றியும் அதன் உளவியல் பற்றியும் தனியாக எழுதுகிறேன்.காவலரிடம் புகார் செய்து பிறகு அதே கணவனுடன் வசிக்கும் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பது நினைப்பதற்கே கஷ்டம்.

சிலசமயம் முன் வலைப்பதிவில் பரவலாக பெண்கள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று ஒரு விவாதம் நடந்தது நினைவிருக்கலாம். நிறைய பேரிடம் அவமானப்படுவதற்கு பதில் கணவன் படுத்தும் கொடுமைகள் மேல் என்று நினைக்கும் பெண்கள், குழந்தைக்காக பொறுமையாய் இருக்கும் பெண்கள் -the list is endlessreply to this comment
28/12 15:16:09
Padma Arvind wrote:
மதுமிதா, கயல்விழி, மாயா: புரிந்துகொண்டமைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
டீசே: பெற்றோரை பார்த்து மாறி ஒரு சமூகம் உருவாகலாம். நிறைய புத்தகங்கள் படிப்பது, அனுபவ அறிவு கொண்டு சிந்திப்பது இவை வளரும் போது. ஆனால் தற்போது அத்தகைய மாற்றங்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் இல்லை. இதனாலே மனநிலை மருத்துவர்கள் ஒரு வன்முறை சூழல் குழந்தைகளுக்கு தவறான பாடத்தை கற்பிப்பதாக சொல்கிறார்கள்.
மோகந்தாஸ்: அன்னையர் கண்டிப்பது உண்மை. ஆனால் நாளை உங்கள் மனைவி உங்களை பற்றி புகாரிட்டால், உங்கள் அன்னை/உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் எங்களுக்கு தெரிந்தவரை மோகந்தாஸுக்கு கோபமே வராது என்றுதான் பேசுவார்கள். அப்படி இன்றி உங்கள் மனைவியை ஆதரித்து பேசினால், உங்கள் அன்னைக்கு என் பாராட்டுக்களும் வணக்கங்களும். நான் சொன்னது பெரும்பாலான குடும்ப வழக்கம். விதிவிலக்குகளும் நிறைய ஊண்டு ஆனால் பெருவாரியாக இல்லை. (உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன்)

reply to this comment
28/12 15:22:52

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions