தேன் துளி » பெண்கள்

Menopause
மாதவிலக்கு முற்றிலும் நிற்கும் நிலையே menopause ஆகும். இதில் pre, peri and menopause என்று மூன்று நிலைகள் உண்டு. அவரவர் குடும்ப மரபணு பொறுத்து சிலருக்கு மூன்று நிலைகளும் உடனுக்குடனேயே அல்லது இரண்டு வருடங்கள் போல நீடித்தோ இருக்கலாம்.

கருப்பை சுருங்க ஆரம்பித்து, முட்டைகள் வருவது நிற்கும் போது, ஹார்மோனகளில் மாறுதல் ஏற்படும். அதுவரை ஈஸ்ட்ரோஜென் பிரொஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோனள் இந்த மாத சுழற்சியை கொண்டுவரும். இந்த இரண்டு ஹார்மோன்களும் சுரக்க காரணமாக பிட்யூட்டரி சுரப்பி என்ற மூளையின் பகுதி FSH (Follicle stimuluating Hormone)சுரக்கும். இதுவும் LH ன்ற ஹார்மோனும் கருப்பையை தூண்டும், முட்டை உருவாக வழி செய்யும். மாதவிடாயின் போது, இரத்தத்தில் ஈச்ட்ரோஜன்/ஈஸ்ட்ரடையால் அதிகரிக்க, FSH சுரப்பை கட்டுப்படுத்து. ஆனால் பிரிமெனோபாஸ் போது இரத்தத்தில் ஈஸ்ட்ரடையால் அளவு குறயும். அது FSH சுரப்பதை தடை செய்யாமல், அது எப்போது அதிக அளவிலேயே இருக்கும். பெரி மெனோபாஸ் போது (35 வயது முதல் ஆரம்பிக்கலாம்) மாதவிலக்கு மூன்று மாதங்களுக்கொருமுறை என்று நாளாகி ஆரம்பித்து நிறைய உதிரப்போக்கு இருக்கும்.

ப்ரி மெனோபாஸ் போது தலை முடி உதிருதல், அடிக்கடி கோபம் அல்லது அழுகை போன்ற உணர்வுகள், வரட்சியான சருமம்,அதிக உடல் சூடு போல ஒரு உணர்வு வரும். கொலஸ்டிராலில் இருந்து ஈச்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உருவாக  NADPH என்ற ஒரு என்சைம் உதவும். மாதவிலக்கு நிற்கும் நிலையில் இந்த என்சைம் ஈஸ்ட்ரோஜன் தயாரிப்புக்கு பதிலாக கொலஸ்டிராலின் உப பொருட்களை தரும். ஆகவே மாதவிலக்கு நிற்கும் பெண்களின் கொலஸ்டிரால் கூட வாய்ப்பு இருக்கிறது. இதுவும் ஹாட் பிளாஷஸ் வர ஒரு காரணம். இதனாலேயே பெண்கள் செரிக்கும் திறன் குறையவும், உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகிறது. மேலும் உணர்வு பூர்வமாக சில பிரச்சினைகள் வரும் போது, உண்பது சிலருக்கு ஒரு மகிழ்ச்சியை தரும் (soul food, comforting food) ஏற்கெனவே குறைந்த செரிமானம் இருப்பதால் இது உடல் எடையை இன்னும் அதிகரிக்கும். இந்த ஹார்மோன் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல், நடுத்தர பெண்கள் உடல் எடை அதிகரிப்பதை பொதுவாக கேலி செய்யும் போக்கை காணலாம். இதனை சரிக்கட்ட கூடுதல் உடல்பயிற்சி, உணவில் இன்னும் அதிக கட்டுப்பாடு தேவையாய் இருக்கும்.

ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி் இதில் ஈடுபட்டிருப்பதால் ஸ்ட்ரெஸ் இந்த உடல் வெப்பத்தை அதிகரிக்கும் நிலை (உண்ர்வு) ஏற்படுகிறது. இதை குறைக்க என்ன செய்யலாம்?

ஸ்ட்ரெஸ் அதிகமாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். இரவு உறங்கும் முன் இளஞ்சூடாக பால் அருந்தி பிரகு மனதுக்கு பிடித்த வேலைகளில் ஈடுபடுதல் நலம்.

2. உணவு பொருட்களில் எண்ணெய் நெய் குறைக்க வேண்டும். வறுத்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவினை தவிர்த்தல் நலம்

3. கால்சியம் இயல்பாகவே சூட்டை தரும். ஆகையால் செயற்கையாக இதை எடுத்துக் கொள்ளாமல், பால் தயிர் போன்றவை சேர்த்துக்கொள்ளவும்.

4. பாலி பீனால், ஃப்ளேவனாய்ட் இருக்கும் பழங்கள் திராட்சை, பைன் ஆப்பிள் சேர்த்துக்கொள்ளலாம். அவை ஈஸ்ட்ரோஜனின் தன்மைகளை கொண்டிருப்பதால் பலனளிக்கும்.

5.கொழுப்பு தவிர்த்து அவரைக்காய், மொச்சை, ராஜ்மா அல்லது பொட்டுக்கடலை, கொத்துக்கடலை சேர்த்து சமைக்கலாம். இவற்றில் ஃப்ளேவனாய்ட் அதிகம். இதில்தான் சோய் புரதமும் வருகிறது. ஆனால் சீன பெண்களுக்கு மெனோபாஸ் பிரச்சினை நிறைய வர அவர்கள் அதிகம் பன்றிக்கரி உணபதும் காரணமாகலாம் என்று சொல்லப்படுகிறது.

6. அதிக நார்ச்சத்து உள்ள பொருட்கள் குறிப்பாக வாழைத்தண்டு, பீன்ஸ் போன்றவை சேர்த்து கொள்வதும் பலன் தரும்.

7. சப்பாத்தி செய்யும் போது முழுகோதுமை மாவு,அல்லது ராகி  போன்றவை அதிகம் சேர்த்து கொள்வதும் பலன் தரும்.

8. நிறைய பேரீச்சை பழங்கள், கீரை சேர்த்துக் கொள்ளவும். இது உடலின் இரத்த இரும்பு சத்தை அதிகரித்து, மெனொபாச் நிலையில் அதிக உணர்ச்சி மாறுதல் மற்றும் இரவு வியர்ப்பது, அல்லது உள் காய்ச்சலை தடுக்கும்.

இனி வருடம் ஒருமுறை மறக்காமல் பாப் டெஸ்ட், மற்றும் மாமாகிராம் செய்து கொள்ளவும். அதே போல போன் டென்சிட்டி பரிசோதனை செய்து கொண்டு அதற்கேற்றார் போல கால்சியம் சேர்த்துக்கொள்வது முக்கியம். குடும்பத்தில் புற்று நோய் சரித்திரம் இல்லாவிட்டாலும் மாறு பட்ட உணவு முறை, மற்றும் சுற்றுப்புறம் போன்றவை நம் புற்று நோய் வாய்ப்பை அதிகரித்திருக்கிறது.

நம் ஊரில் பெண்கள் ஏதேனும் உடல் உபாதை இல்லை என்றால் மருத்துவரிடம் செல்வதே இல்லை. ஆனால் மாதவிலக்கு நின்றபின் வருடம் ஒருமுறை கட்டாயம் மருத்துவரிடம் செல்வது அவசியம்.

signs and Symptoms of Menopause

social Normமும் மகளிர் தினமும்
வழக்கம் போலவே என் இன்பாக்ஸ் மகளிர்தினத்தை நினைவுறுத்தும் வண்ணம் அழைப்புக்களால் நிரம்பி இருந்தன. காலை உணவு, அல்லது சின்ன கூட்டம். ஒன்றில் கொண்டாடத்தான் வேண்டுமா மற்ற நாடுகளில் எத்தனை பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், ஒரு மணிக்கு பத்தில் நான்கு பெண் ஏதேனும் ஒரு பாலியல் சித்திரவதைக்கு ஆளாகிறாள், இந்தியாவில் 19% திருமனமான 19இல் இருந்து 25 வயதுகுட்பட்ட பெண்களும் கம்போடியாவில் 35% மணமான பெண்களும் கணவனால் ஒருமுறையேனும் அடிக்கப்பட்டிருக்கிறாள், இன்னும் இந்தியாவில் விதவைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றார்கள், இங்கே முதியோர் இல்லங்களில் பெண்கள் பாலியல் கொடுமைக்கும் ஆளாகிறார்கள், இந்த நிலையில் வேண்டுமா மகளிர் தினம் யோசியுங்கள் என்ற கடிதம்.

பாஸ்நியா முதல் இன்றைய இராக், ஈழம் வரை போர்க்காலங்களில் பெண்கள் படும் அவதிகள் அதிகம். ஆண்கள் பலர் கொல்லப்படுவதால், குழந்தைகளின் பசிதீர்க்க, முதியோருக்கு உணவு வழங்க, குடும்பத்தை சற்றேனும் குறைவில்லாமல் நடத்த பெண்கள் பணிக்கு செல்கிறார்கள். முதல்முறையாக பணிக்கு செல்வதால் குறைந்த அளவு ஊதியம் கிடைக்கும் பணிகளில் இவர்கள் படும் பாலியல் தொல்லைகள் ஏராளம். போர் என்றாலே ஒரு நாட்டின் உடமைகளை கைக்கொள்வதோடு, பெண்களை பாலியியல் கொடுமைக்கு ஆளாக்குவது ஆண்கள் நிறைந்த இராணுவத்தில் ஒருவகை கொண்டாட்டமாகி இருக்கிறது. இதற்கு உளவியல் ரீதியாக பல காரணம் இருப்பினும் ஒரு வீட்டின் பெண் ஒருவகையில் இன்னும் ஒரு உடமையாகவே கருதப்படுவதால் அவளை சிதைப்பது என்பது அந்த வீட்டின் ஆணை உச்சகட்ட அவமானத்திற்கு ஆளாக்குவது முக்கிய காரணம், இரண்டாவதாக இவ்வாறான வன்புணர்வில் கருத்தரிக்கும் பெண்கள் மூலம் தங்கள் இனத்தை அங்கே வளர்க்கவும் நினைப்பது இன்னொரு காரணம். பெரும்பாலான போர்க்கால வன்புணர்வுகள் கருவில் முடிந்தால் அவர்களுக்கு அதை கலைப்பது மிகவும் முடியாத காரியம்.  அவ்வாறாக பிறந்த குழந்தைகள் அந்த வன்புணர்வு அனுபவத்தை நினைவுறுத்திக் கொண்டே இருப்பதால் சமூகத்தாலும் வெறுக்கப்படும் நிலைக்கு ஆளாவதால், போர் முடிந்த பின்னும் இன்னொரு தலைமுறைக்கு அவமானப்படுத்தப்படுகிறார்கள். இப்படியாக பல்லாயிரம் பெண்கள் அவதிப்படும் போது நிலையற்ற வாழ்க்கையில் அவரும் அவர்தம் குடும்பமும் சுழலும் போது இந்தக் கொண்டாட்டங்கள் அவசியம்தானா?

தினசரி வாழ்க்கையில் பெரும்பாலான வீடுகளில் தங்கள் மனைவியின் உடல்நல முடிவுகளைக்கூட ஆண்களே எடுக்கின்றனர். தெற்காசிய நாடுகளில் 61% ஆண்கள் முடிவின் படிதான் குடும்பத்தாரின் உடல்நல சிகிச்சைகள் கூட தெரிவு செய்யப்படுகின்றன. அதே போல அன்றாடம் நடக்கும் செலவினங்கள் தெற்காசிய நாட்டில் 34 இல் இருந்து 40% வரை ஆண்கள் முடிவெடுப்பின் படி நடக்கிறது.

இதே போல பெண்கள் கருவின் துவக்கம் முதல் கடைசி காலம் வரை ஏன் மயானத்திலும் கூட ஆண்களின் முடிவே அதிகாரம் பெற்றதாக இருக்கிறது.

ஆரம்ப நிலை படிப்பு முதல் பொது literacy வரை 100% ஆண்களுக்கு 65% பெண்களே படிக்கிறார்கள். பெண்களின் கல்வி அறிவு ஒரு குடும்பத்தின் உடல் நலம் மற்றும் அறிவுத்திறனுக்கு ஆதாரம் என்ற போதிலும் பெண்குழந்தைகளின் படிப்பு ஆண் குழந்தைகளை விட அதிகம் ஆதரவு பெறுவதில்லை. இவ்வாறாக ஓவ்வொரு துறையிலும், வேலைக்கு போகும் பெண்கள் பெறும் சற்றே visibility குறைந்த பிராஜக்ட், பொதுவாக குழந்தை வீடு என்று பெண்கள் கவனம் செலுத்த தேவை இருப்பதால் அவர்களால் நீண்ட நேரம் பணியாற்ற முடியாது என்று அனுமானித்து வேறு திட்டங்கள் கொடுப்பது, வீட்டின் அன்றாட வேலைகளில் கூட இது பெண்களே செய்ய வேண்டியது என்று அவர்கள் செய்யும் intangible பணிகளின் முக்கியத்துவத்தை கவனிக்காமல் விடுவது போல நிறைய எழுதிக்கொண்டே இருக்கலாம்.

நேற்றைய முந்தினம் நடந்த ஒரு அரசியல் தலைவர்கள் நிறைந்த கூட்டத்தில் சிறையில் பெண்கள் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற ஒரு விளக்கப்படத்தையும் பார்க்க நேரிட்டது. சிறையில் அதிலும் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணாகவோ ஹிஸ்பானிய பெண்ணாகவோ இருந்தால் இன்னும் எத்தனை மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதையும் பார்க்க நேர்ந்தது. அவர்களுக்காக போராடும் ஒரு குழு நடத்திய உரை மூலமாக மனமே கனத்துப் போனது. இதில் இன்னும் வேதனையான செய்தி என்னவென்றால், குடியுரிமை இல்லாமல் வரும் மக்கள் இமிக்ரேஷனால் பிடிக்கப்படும் போது, அதில் பெண்கள், குழந்தைகள் சிறையில் (பொதுவான குற்றவாளிகளுக்கான) கிரிமினல் குற்றவாளிகள் போல நடத்தப்படுவதும் ஆண்கள் இமிக்ரேஷன் சிறையில் அடைக்கப்படுவதும்தான். கிரிமினல் சிறையில் நிகழ்த்தப்படும் அராஜகங்கள் நிர்பந்திக்கபட்டு ஒரு கிரிமினல் குற்றவாளியைப்போல பெண்கள் நடத்தப்படுவது ஏன் என்று இன்னொரு குழு அட்டைகளை பிடித்திருந்தார்கள். ஒரே செய்கைக்கு ஆணுக்கொரு நீதியாகவும் பெண்ணுக்கொரு நீதியாகவும் இருப்பது இங்கேதான். குடியுரிமை பெறாமல் வேலை செய்யும் பெண்கள் அடையும் கொடுமைகளும் அதிகம்.

ஓரின சேர்க்கையாளர்களில் பெண்கள் நடத்தப்படும் விதம், மருத்துவர்கள் அவர்களை நடத்தும் விதம் குறித்தும் கூட நிறைய எழுதி மனம் அமைதி இழக்கலாம்.  ஆனாலும் இந்த பதிவு அதற்காக இல்லை.

14% ஆனாலும் கூட பல நாடுகளில் பெண்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள், அவர்களால் முடிவுகள் எடுக்க மாற்ற முடியும், 65% ஆனாலும் கூட படிக்க செல்லும் பெண்கள் சதவிகிதம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. 19 % பெண்கள் வன்முறைக்கு ஆளானாலும் 81% பெண்கள் தங்களைக்காத்துக்கொள்ளும் கலையை அறிந்திருக்கிறார்கள். 35% ஆனாலும் கூட உலகெங்கும் ஆண்கள் பாலியியல் சமன்பாட்டை மதிக்க துவங்கி இருக்கிறார்கள். ஆக கூடி கோப்பை நிறைய ஆரம்பித்திருக்கிறது. அது முற்றிலும் நிறைய என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க துவங்க வேண்டும்.

இதுதான் சோசியல் நார்ம் தியரி சொல்லித் தரும் பாடம். பாதிக்கோப்பை நிறைந்த நிலையில் மீதியை நிரப்ப ஒன்று சேருங்கள் என்பதன் தத்துவம். இப்போதுதான் நிறைய துவங்கி இருக்கும் கோப்பையில் நச்சை சேர்ப்பது போல பொறுப்பற்ற தன்மையில் நடப்பதும் பேசுவதும் கூடாது என்பதையும் தங்களை காப்பாற்ற வந்திருக்கும் சட்டங்களை மதித்து அதையும் கவனமாக கையாள்வதையும் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

பாலியியல் சமன்பாடு என்னும் கனவு நிறைவேற இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் என்றாலும், பாதையே இல்லாமல் இருந்து முட்காடாக இருந்த நிலத்தில் இப்போது பாதை ஒன்று புலப்படுவதே கூட நல்ல மாற்றம்தான்.  நடைப்பயணத்தில் இன்னும் நிறைய பேர் சேர்ந்து கொள்ள முடியும், சேர்ந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கை பூத்திருக்கிறது.

ஒரு சிறுமியின் சுதந்திரத்தை தேடிய கதையை இங்கே கேளுங்கள்.

பாலியியல் சமன்பாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்லும் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே

Un and UNESCO reports linked wherever needed. You can download them.

கருவுறுதலில் பெண்களின் முடிவெடுக்கும் உரிமை
விவாகரத்து வழக்கொன்றில் நான் மொழிபெயர்ப்பாளராக ஒரு பெண்ணுடன் போய் இருந்தேன். அந்த பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள். கணவனுடன் நல்ல உறவு இல்லை, கொடுமைக்காரனாக அடக்குமுறை கொண்டவனாக இருந்தவன் என்று தெரிந்தும் ஏன் இரண்டு பிள்ளை பெற்றுக்கொண்டாய் என்று கேட்கும் உறவினர், அன்னை, சகோதரி கூட்டம். இந்த நாளில் எத்தனை கர்ப்பத்தடை வழிகள் உண்டு ஆனாலும் இத்தனை முட்டாளாக ஒரு பெண்ணா என்று பேசும் நண்பர் கூட்டம் என்று அத்தனையும் உண்டு.

13 குழந்தைகள் கொண்ட பென்ணை கேலி பேசுவதும், அதேபோல குழந்தை இல்லாத பெண்ணை குறை கூறுவதும், மங்களகரமான நிகழ்வுகளில் இருந்து விலக்கி வைப்பதும் எத்தனை குரூர செயல். இன்னமும் கருவைத்தாங்கும் பெண்களுக்கு நம் நாட்டில் முழு உரிமை இல்லை என்பதை யாரேனும் உணர்வார்களா?

திருமணம் ஆனபின், கணாவனுடன் உறவு கொள்வதற்கு திருமணத்தில் பேசிய தொகை முழுதும் வராதவரை இல்லை என்று சொல்லி தடை சொல்பவரிலிருந்து, இன்று விசேஷ நாள் (விரத நாள்) என்று சொல்லி தடை விதித்து, மனைவி கண  வனுடன் கூட செல்லும் நாளில் அவரின் மாத சுழற்சியில் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம் இல்லாமல் போவதால் குழந்தை பிறக்கவில்லை என்று மருத்துவர்கள் சொன்ன போதும், பிடிவாதமாக இருந்து கடைசியில் மலடி என்ற பெயரோடு வாழ்ந்தவர்கள் உண்டு. என் சகோதரியின் உறவினர் ஒருவர் கணவனின் அன்னையின் காவலில் இருந்தே 35 வயதாகிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக அன்னையும், கணவனும்  ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட, இப்போது தனியாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

இன்னொருபக்கம் கவனக்குறைவால் கருத்தரித்து, குடும்ப நிதி நிலைமை அதற்கு இடம் தராததால் ஊசி கொண்டும், செயற்கையாக தகுந்த திறமை இல்லாதவரிடம் சென்று கருக்கலைப்பு செய்து கொள்ள வற்பூறுத்தி, மாட்டேன் என்று மனைவி அழுது கெஞ்சினால் நான் வேண்டுமா இந்த பிள்ளை வேண்டுமா என்று முடிவு செய்து கொள் என்று பயமுறுத்தி பணியவைப்பது இன்னொரு ரகம்.

இன்னும் சில குடும்பங்களில் கணவன் நிறைய முடிக்க வேண்டிய கடமை இருந்தால், அக்கா தங்கை திருமணம், வீட்டு கடன் என்று முடியும் வரை பிள்ளை பெற்று கொள்ள பெண்னுக்கு உரிமை இல்லை. தவ  றி கருத்தரித்துவிட்டால், நமக்கென்ன வயசா ஆயிடுத்து, இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் என்று முடிவெடுப்பதும் கணவனே. இதே மனைவியின் உடல் நலம் கருக்கலைப்புகளால் அல்லது தடை மாத்திரைகளால் கெட்டுவிடும் என்ற அக்கறை கூட இல்லாமல் சுயநலத்துடன் நடந்து கொள்பவர்களை என்ன சொல்ல?

கருத்தரித்தபின் முதல் குழந்தை ஆணாக வேண்டும். பெண்ணாக பிறந்துவிட்டால், அந்த பெண் அடையும் துன்பங்கள் இன்னமும் நிறைய இடங்களில் மாறவில்லை. ஆண் குழந்தை பிறக்கும் வரை அடுத்தடுத்து உருவாகும் கருக்கள் அவள் உடல் நலனை அடியோடு கெடுத்துவிடும். இந்த பழக்கம் இங்கே யூதர்களிடமும் இருக்கிறது.

சில பெண்கள் விரும்பாமலே கணவன் உறவு கொள்வது சாதாரணம். அதிலும் வாய்வழி உறவு கொள்வதை அருவெறுப்பாக நினைக்கும் பெண்களுக்கு, அதனால் நோய்வாய்ப்பட நேருமோ என்ற அச்சம் உள்ளவர்களிடம் அதுபற்றிய கல்வி தராமல் கட்டாயப்படுத்தும் போது மன உளைச்சலுக்கு ஆளாவதும் அதிகம்.

நிறைய பெண்களிடம் தங்கள் உரிமைகளை பற்றிய குறைந்த பட்ச அறிவு கூட இல்லை. பெண் கணவனின் உடைமை என்றே பலரும் நினைக்கிறார்கள். உடல் வலி, மன உளைச்சல் இதை பொருட்படுத்தாமல் கடமை போல பயத்தினால் உடன் படுகிற  பெண்கள் அதிகம். நாம் வேண்டாம் என்று சொன்னால் வேறெங்காவது கவனம் போய் கணவனை இழந்துவிடுமோ என்ற பயம் பெண்களை உடன் பட வைக்கிறது.

கட்டாயப்படுத்தி உறவு கொண்டு, தற்காப்பும் இல்லாமல் கடைசியில் அந்த பெண் கர்ப்பமானால் எள்ளி நகையாடுவது எப்போது மாறும்? இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் தற்போது ஒரு குழந்தை, இந்த நிலை மாறிவிட்டது என்று சொல்பவர்கள் தமிழக, மெட்ரோபாலிட்டன் நகரங்களை தாண்டி வெளியே வாருங்கள். கிராமப்புறங்கள், குறிப்பாக மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பஞ்சாப், மற்றும் பீஹார் போன்ற இடங்களுக்கு , கிராமங்களுக்கு சென்று பார்த்தால் இதன் கொடுமை தெரியும். இங்கே நியுஜெர்ஸியிலேயே அப்படி வரிசையாக குழந்தை பெற்று கொண்டு திண்டாடும் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

தயங்கி தயங்கி அவமானமும் வெட்கமும் மேலிட, அவர் ரொம்ப கட்டாயப்படுத்திதான் நடந்தது. எல்லாரும் என்ன தப்பு சொல்றாங்க: என்று கண்ணீருடன் சொல்லும் பெண்ணிடம் பேசினால் தெரியும் நாம் மனைவியின் உணர்வுகளுக்கு எத்தனை உரிமை தருகிறோம் என்று. ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே என்று பாடிவிட்டு பாவிமகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா என்றும் கேலிபேசுவதும் அதே இனம்தானே.

கருக்கலைப்பை பற்றியும் அதில் இருக்கிற உரிமைகளையும் அதில் மதங்கள் தலையிடுவதையும் பற்றி பேசவில்லை. அதற்கெல்லாமல் ஆதார உறவினிலேயே இருக்கும் அடக்குமுறை பற்றி மட்டுமே இங்கே கூறி இருக்கிறேன்.

இந்த  நிலையில் இந்தியாவில் பல இடங்களில் பெண்கள் தினம் கொண்டாடப்படலாம். அவர்கள் விழாக்கொண்டாட்டம் இடையே விழிப்புணர்வு சற்றேனும் ஏற்படுத்துவார்களானால் அதுவே பெண்களுக்கு உதவியாக இருக்கும்.

தொடர்புடைய சுட்டி: பெண்களின் நெருக்கமான பகைவன்

14/02: உதவமுடியுமா – தற்போதய நிலை
உதவி செய்ய முடியுமா என்ற பதிவிற்கு நிறைய வலை பதிவர்களிடம் இருந்து ஆதரவு வந்தது. வலை பதிவுகளை படிப்பதோடு மட்டும் இல்லாமல் உதவும் என்ணமும் அதற்காக நேரம் செலவழிக்க பலர் இருப்பதை கண்டு எனக்கும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

குழந்தைகளை கடத்திய வழக்கு விசாரணக்கு வந்தபோது, கணவன் இந்தியா சென்று தன் மனைவி, குழந்தைகள் இல்லாமலே முழு பொறுப்பும் பெற்று வந்திருந்தார். தமிழ்நாட்டில் அன்னை தந்தை மனநிலமை ஆராயமல், எதையுமே கேட்காமல் எப்படி அவருக்கு குழந்தைகளின் முழு பொறுப்பையும் தந்தார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், சட்ட அறிக்கையை கொண்டுவந்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனாலும் இங்கே வழக்காடுமன்றத்தில் அந்த தீர்ப்பை கவனிக்கவே இல்லை. மாறாக அன்னைக்கு முதல் பொறுப்பும் தந்தைக்கு வாரத்தில் ஒரு நாள், 15 நாட்களுக்கு ஒருமுறை இரண்டு நாட்களும் குழந்தைகளை தன்னிடமே வைத்துக்கொள்ள அனுமதியும் தரப்பட்டிருக்கிறது.

இது தற்காலிகமான தீர்ப்பு என்பதால், மனைவி இப்போது விவாகரத்து, நிரந்தர தீர்ப்பு, குழந்தைகளை பார்த்துக்கொள்ள பண உதவி கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார். கணவன் மனைவி வேலை பார்க்கும் இடத்திற்கு அடிக்கடி தொலைபேசி தொந்தரவு செய்வதும் உதவி செய்பவர்களை மிரட்டுவதும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறத்து.

சென்னை நீதிமன்றம் தந்த முழு பொறுப்பு தீர்ப்பை எதிர்த்து வழக்காட சென்ற தம்பியை வாகன ம் மோதி விபத்துக்குள்ளாக்கியது, தந்தையை மிரட்டுவது போன்றவையும் தொடர்கிறது. ஆனாலும் முடிவில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

என் மீது நம்பிக்கை கொண்டு காசோலை அனுப்பி ஆதரவற்றிருந்த பெண்ணிற்கு உதவிய தாரா, தமிழ்சசி, டீசே, தாராவின் தோழி விலாசினி,செல்வராஜ், வாசன்,ஜெயஸ்ரீ, ஷ்ரேயா ஆகியோருக்கு என் நன்றிகள் பல.செல்வராஜின் பெண் நிவேதிதா வரைந்து அனுப்பிய வாழ்த்து அட்டை மிகவும் சிறப்பாக இருந்தது. அதை படித்த பெண்ணின் கண்களில் நீர் திரையிட்டதை காண முடிந்தது. அந்த வாழ்த்து அட்டை அந்த பெண்ணிடம் இன்னமும் இருக்கிறது.

இன்னமும் சில நண்பர்கள் பலவித ஆலோசனைகள், பேச தொடர்பு கொள்ள வழக்கறிஞர்கள், காசோலை தந்து உதவி இருந்தனர். மொத்தமாக $1200 சேர்ந்திருந்தது. இது வழக்கு செலவை விட குறைவானது என்றாலும், என் மீது கொண்ட நம்பிக்கையையும் அன்பையும் காட்டுகிறது. இதற்கு நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருப்பேன். பொதுவாக நான் பண விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பேன். அதுவும் இன்னொருவரிடம் இருந்து பெறப்படும் பணம், அதை அனுப்ப அவர்கள் எடுத்து கொள்கிற நேரம்,அதன் பின்னால் உள்ள உழைப்பு அதையும் மீறி அதன் அடிப்படையாக உள்ள அக்கறைக்கு என் வணக்கங்கள்.

14/01: பாமரப்பெண்ணின் சில கருத்துகள்
நாடு இனம் கடந்து காலம் காலமாக திருமணம் என்பது மனப்பொருத்தை விடுத்து பணம், செல்வாக்கு, சாதி நிறம் இனம் போன்ற காரணங்களாலே பெருமளவில் நிச்சயிக்க படுகிறது. இதில் ஏதேனும் ஒன்று மாறுபட்டு இருக்குமானால் எத்தனை பிரச்சினைகள்? உண்மையான மன உணர்ச்சிகள், புரிதலை விடுத்து நமக்குத்தான் தெரியாத விதிகளின் மேல் எத்தனை மோகம். தன் மகனோ மகளோ மகிழ்வுடன் இருப்பதைவிட நாலுபேரின் மனம் இசையவேண்டும் என்று படுகிற கவலைகள்தான் எத்தனை? அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட கிறித்துவர்கள் யூதர்களையோ காகேசியன் இனத்தை சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரையோ மணந்து கொள்ள முடிவெடுக்கும்போது உற்றாராலும் பெற்றோராலும் பலவித சங்கடங்களுக்கு ஆளாகிறார்கள்.

பழக்க வழக்கங்கள் மாறி விட கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பவர்கள் மன பொருத்ததில் ஒத்த அலைவரிசை இருக்கிறதா என்று சிந்தித்தும் பார்ப்பதில்லை.படிக்கும் கல்லூரி, பணிசெய்யும் இடம் இங்கே பேசி பழகி யாரையேனும் மனதுக்கு பிடித்திருந்தால் பெற்றோர்கள் செய்யும் பயமுறுத்தல், மிரட்டல்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் கேட்டு வரும் கடிதங்கள், நமது ஆசாரங்கள் என்ன குலமென்ன அந்தஸ்தென்ன என்ற கேள்விகள், இதில் பெண்கள் கல்லூரியிலும் திரைப்படங்கள் பார்த்தும் ஒழுக்கம் கெட்டு விட்டார்கள் என்ற வருத்தமான பேச்சுகள் என்று முடிவில்லாமல் போகிறது. தன்னுடைய வயது வந்த குழந்தைகள் எடுக்கும் முடிவில் நமக்கேன் இத்தனை அவநம்பிக்கை? அதேபோல நாள், கோள் மீது ஏன் இத்தனை நம்பிக்கை, நம்மைவிட, நம்மில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைவிட இன்னும் அதிகமாக?

குலத்தினாலேயே ஒருவன் நல்லவராகவும் இன்னொருவரும் தீயவராகவும் மாறப்போவதில்லை.

கலப்பு மணம் என்ற சொல்லே ஒருவகையில் தவறு. இந்த பிரச்சினை இந்தியாவில் மட்டும் இல்லை. எனக்கு தெரிந்த காகேசியன் ஆணின் திருமணம் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கனுடன் நடக்க, இருவீட்டு பெற்றோர்களும் மறுப்பு தெரிவித்துவிட்டார்கள். பெற்றோர்கள் மனம் வருந்த, தன் அப்பா தன்னுடன் ஆடும் திருமண நடனம் போய்விடும் என்று ஏக குழப்பத்தில் ஆழ்ந்த பெண் கடைசியில் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்கிறார்கள். இன்னும் சில குடும்பங்களில் தன் விருப்பத்தை மீறி திருமணம் செய்து கொள்ளும் ஆண்களின் பெற்றோர் மருமகளுக்கு தரும் தொல்லைகள், மருமகன் படும் கஷ்டங்கள் என்று விதம்தான் வேறே தவிர பிரச்சினைகள் அதேதான்.

அடிப்படையில் மனிதர்களை மனிதர்களாக மதிக்காதவரை, கலப்பு மணங்கள் கூடாதுதான். திருமணத்திற்கு பின் கஷ்டப்படவோ வருத்தப்படவோ வேண்டாம் அல்லவா?

ஒரு குலத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக அறிவுஜீவிகளாகவும் மற்றொரு குலத்தில் பிறந்த காரணத்திற்காக முட்டாள்களாகவும் யாரும் மாறுவதில்லை.அடுத்தவருக்கு வழிகாட்டவோ ஆக்கபூர்வமாக பயன்படாத வரையிலோ அறிவுஜீவித்தனத்தாலோ சிந்தனைகளாலோ எந்தவித பயனும் இருக்க போவதில்லை பெட்டியில் பூட்டப்பட்ட பணத்தை போல. அதேபோல செய்கிற தொழிலும். செய்யும் தொழில் மூலம் குல அடையாளங்கள் சொல்வதும் தவறு. ஆனால் எம் மக்கள் மனதில் தொழிலுக்கு கூட அடையாளம் இருக்கிறது.

நான் சாணியை பொறுக்கினால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அந்த வேலையை என்னை செய்யவிட்டால் அது பாவம் என்றும், மழை வராது என்றும் சொல்வதை கேட்டிருக்கிறேன். ஓடு மாற்ற சித்தாளாக போனால், ஐயோ பாவம் என்ன பாவம் செய்தார்களோ என்ற மனவருத்தம் படர வெளிவரும் வாக்கியங்கள் கேட்டிருக்கிறேன். முடி திருத்துபவர்கள், செருப்பை சரி செய்வபர்கள் என அவர்களை ஒதுக்குவதும் தீண்டத்தகாதவர் போல நடத்துவதும் மாறி இருக்கும் என்று நினைத்த எனக்கு சமீபத்திய கூட்டங்களின் உரைகள் ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் தந்திருக்கின்றன.

சாதாரணமானவர்கள் பேசினால் அறியாமை என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் சிந்திக்க கூடிய ஆடவர்கள் (பெண்களைவிட ஆண்கள் சிந்திப்பதில் மேலானவர்கள் என்ற ஒரு கருத்தையும் பத்ரியின் பதிவின் பின்னூட்டத்தில் பார்த்தேன்) என்று அவரவர் திரைப்படங்கள், செவ்விகள் மூலம் முற்போக்கான சிந்தனைகளை காட்டி கொண்டவர்கள், பெரும்பாலான மக்களை சென்றடையும் வழிமுறைகளை (எழுத்து, திரைப்படம்) கையாள்வதில் வல்லவர்கள், உலக அளவில் பிரபலமான எழுத்தாளர்களின் எழுத்துக்களை படித்தவர்கள் சொன்னதாலேயே இன்னும் வருத்தமாக இருக்கிறது. நூல்களை படிப்பதும் தெளிவதும் இன்னும் அன்போடு மனிதத்தை புரிந்து கொள்ளவும் மேம்படவும் என்று நினைத்த எனக்கு, சட்டென்று பிரபல எழுத்தாளர்கள், அறிவியல் வல்லுனர்களை சட்டென்று மேற்கோள் காட்டும் வண்ணம் படித்தும் கருத்தை உள்வாங்காமலே ஒருவர் இருந்திருக்கிறார், குழு மனப்பான்மை என்று சொன்னாலும் ( விண்கலம் O ring இல் பழுது என்று சொன்னவர்கள் கூட குழு மனப்பான்மையால் மனம் மாறி விண்கலத்தை அனுப்பி விபத்தில் போன கட்டுரை குழுமனப்பான்மைக்கு ஒரு உதாரணம்) என்னால் சீரனிப்பது கடினமாக இருக்கிறது.புராணங்களில் கூட அறியாமல் செய்த தவறைவிட அறிந்து செய்யும் தவறு அதிக தண்டனை பெறத்தக்கது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இனியாவது மனிதத்தை வளர்க்க சற்றே முயற்சி செய்யலாம்.பொங்கலின் இனிப்பு மனதில் படர, அதன்பின் உள்ள உழைப்பை சற்றேனும் வணங்கி மனம் ஒப்ப நன்றி சொல்லலாம். நாற்று நடும் பெண்களின் பாட்டுக்களில் மட்டும்தான் சேறு படவில்லை என்று கவி எழுதி பிரபலம் ஆவதை தாண்டி உண்மையிலேயே அவர்தம் வாழ்வு உயர சற்றேனும் உழைக்கலாம்,

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeஇரத்தினவேலு wrote:

நந்தவனத்தில் உங்கள் தலைப்பின் மேல் கிளிக் செய்தால் தளம் கிடைக்கவிலலை பாருங்கள்

reply to this comment

14/01 12:11:42

சுந்தரவடிவேல் wrote:

காலையில் இதே ரீதியில், அதாவது தம்முடைய பழக்க வழக்கங்களின் மேல் பொதித்து வைத்திருக்கும் அதீதமான புனிதங்களினால் மற்றவர்களையும் அவர்களது மரபுகளையும் தீட்டாகப் பார்ப்பது பெரும் வன்முறை என்று, யோசித்துக் கொண்டிருந்தேன்.

உங்களுக்கு என் அன்பும் பொங்கல் வாழ்த்துக்களும்!

reply to this comment

14/01 12:38:21

padma wrote:

நன்றி இரத்தினவேலு. காசி முயற்சி செய்துகொண்டிருக்கிறார் சரி செய்ய தன் பணிகளுக்கு இடையே. சரியாகிவிடும்.

சுந்தரவடிவேல்: சரியாக சொன்னீர்கள். நாம் நல்லது, புனிதம் என்ரு நினைப்பதை அடுத்தவர் செய்யாததால் தீட்டாக பார்ப்பதும் ஊடகங்கள் கூட இன்னமும் பல கலாசாரங்களை கேவலமாக பேசுவதும் வன்முறையே. மாசிலனுக்கும், உங்களுக்கும், உங்கள் மனைவி மற்றும் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும்.

reply to this comment

14/01 13:10:06

Ramachandran usha wrote:

//ஆனால் சிந்திக்க கூடிய ஆடவர்கள் (பெண்களைவிட ஆண்கள் சிந்திப்பதில் மேலானவர்கள் என்ற ஒரு கருத்தையும் பத்ரியின் பதிவின் பின்னூட்டத்தில் பார்த்தேன்) //

பத்மா எந்த எழுத்தாளினி என்ன சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் முத்துகுமரனின் பதிவில் நான்

சொன்னது இதுதான் “பெண்களுக்கான பிரத்தியோக உணர்வுகள், கருத்துக்கள், எண்ணங்கள் என்று தனியாய் ஒன்று உண்டு என்பதிலேயே எனக்கு ஒப்புமையில்லை. ஆணோ பெண்ணோ அவரவர் வளர்ந்த சூழ்நிலை, படித்த படிப்புக்கள், பழகும் வட்டம் இவற்றை வைத்தே எண்ணங்கள் ஏற்படுகின்றன என்பது என் தாழ்மையான எண்ணம்.” என்று சொல்லியிருந்தேன்.

இதற்கு பொருள் பெண்களுக்கு தனிப்பட்ட சிந்தனை கிடையாது என்று நீங்கள் பொருள் கொள்ளுகிறீர்களா?

reply to this comment

14/01 13:45:20

padma wrote:

இல்லை உஷா. பால் வேறுபாடின்றி மனிதனின் சிந்தனை வளர்ந்த சூழ்நிலை,படிக்கும் நூல்கள், பழகும் நண்பர்கள் ஆகியவை ஒட்டி இருப்பதாக சொல்வதாகவே பொருள் கொள்கிறேன். குலத்தாலோ இனத்தாலோ யாரும் கீழான சிந்தனையும் மேலான சிந்தனையும் கொண்டவர்களாக இருப்பது இல்லை அதுபோலத்தான் ஆணும் பெண்ணும். பெண்களுக்கு தனிப்பட்ட சிந்தனை இல்லை என்று சொன்னதாக எனக்கு புரியவில்லை. நானும் பெண் என்பதால் எனக்கு புரிதலும் இல்லையோ என்னவோ.

reply to this comment

14/01 14:02:16

dharumi wrote:

நாம் காணும் அறிவுஜீவித்தனத்தின் ஆழம் இவ்வளவுதான் என்று அறிய வரும்போது, ‘ச்சீ, இவ்வளவுதானா இவர்கள்’ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

reply to this comment

15/01 05:02:42

hgjhg wrote:

nnbnbv bcvbcv

reply to this comment

29/01 03:52:49

27/12: முள்ளில் விழுந்த சேலை?
இந்த வார நட்சத்திரத்தின் பதிவுக்கான பின்னூட்டம் நீளமாகிப்போனதால் இங்கே: காலம் காலமாக பெண்கள் இன்னொருவரை தந்தை, அண்ணன், அல்லது கணவனை சார்ந்தே வாழ வேண்டும் என்பது கல்லில் வடித்த ஓவியம் போல ஆழப்பதிந்துவிட்டது.

இங்கே தனியாய் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. கணவனை விட்டு பிரிந்து வாழும் பெண்களை இன்னும் சமூகம் ஒரு கேள்விக்குறியுடன் நோக்குவதும், குழந்தைகளை வளர்க்க படும் கஷ்டங்களும் ஏராளம். சட்ட ரீதியாக இன்னும் இந்தியாவில் கணவனை பொருளுதவி செய்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஜீவனாம்சம் போன்றவையும் தரவேண்டும் என்று சட்டம் சொன்னாலும் தராதவரை எப்படி நடைமுறையில் கட்டாயப்படுத்த முடியும் என்பதும் புரியவில்லை.

திருமணத்திற்கு ஆன செலவுகள், ஏறிய கடன் சுமை இடையில் மீண்டும் பெண், தன்னுடைய குழந்தைகளுடன் வீட்டிற்கு வந்தால் அது சுமையாகி போவதே நிசம்.சமீபத்தில் வன்முறைக்கு ஆளான பெண்ணின் அன்னையை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது, அவரே என்னிடம் “இவள் ஒருத்திக்கே எத்தனை செலவு செய்யமுடியும், இவளுடைய தங்கை தம்பிக்கும் செய்ய வேண்டாமா, இவளுடைய அப்பாவும் ஓய்வு பெற்றாகிவிட்டது, பிள்ளையை சார்ந்து இருக்கும்போது எங்களை கவனித்து கொள்வதே அவனுக்கு கஷ்டம், அவன் தலையில் இவளையும் எப்படி ஏற்ற முடியும், இது இவள் தலை எழுத்து” என்று சொன்னதை கேட்க பரிதாபமாக இருந்தது.

இன்னும் பெண்னின் கல்யாண கடனே தலைக்கு மேல் இருப்பதாக சொன்னபோது, வரதட்சிணை பற்றி ஏன் புகாரிடவில்லை என்றபோது, இவங்க அப்பா ரொம்ப கவுரமா வாழ்ந்தவர், கோர்ட் கேசுன்னு போனா அவரால தாங்க முடியாது, இப்பவே உறவுக்காரங்க அரசல்புரசலா பேசிக்கிறாங்க என்று ஒரு குற்ற உணர்வுடன் பேசும்போது வருத்தங்களை சொல்வதால் பலன் ஏது இருக்க போவதில்லை என்பதும் பெண்கள் தங்கள் கஷ்டங்களை வெளியே சொல்வதில்லை.

முடிவெடுக்க தெரிந்த நமக்கு அதன் விளைவுகளை ஏற்று கொள்ள தெரிவதில்லை. எங்கே நாம் பார்த்து செய்த திருமணத்தை குற்றம் சொல்லிவிடுவாளோ என்ற முன்ஜாக்கிரதை உணர்வு இந்த பெற்றோர்களுக்கு இருப்பதை கண்டிருக்கிறேன். என் பிள்ள கூட முன்கோபக்காரந்தான், ஆனா அவன் பெண்டாட்டி எப்படி மாத்திடுச்சு, நம்ம பொண்ணுக்கு அந்த சாமர்த்திய இல்லீங்க என்ற தந்தை, இவள செல்லம் குடுத்து இவங்க அம்மாவே கெடுத்துட்டாங்க என்று பழியை தூக்கி இன்னொருவர் மீது போடுவாரே தவிர இதற்கு மாற்று என்ன என்று யோசிப்பது இல்லை.சொன்னால் கணவன் பேர் கெடுவது மட்டும் இல்லாமல் தன் மீது குற்றம் சாட்டப்படுவது ஒன்றுதான் விளையும், மாற்று அல்லது துன்பங்களுக்கு முடிவோ கிடைக்க போவது இல்லை என்பதால் சொல்லி என்ன ஆகப்போகிறது என்பது இன்னொரு காரணம்.

மூன்றாவதாக ஒருவன் தவறிழைத்துவிட்டதாக தெரிந்து பிறகு அவனே குற்றங்கள் மறந்து வாழத்துவங்கினாலும் சமூகம் இன்னும் குற்றவாளியாகவே பார்க்கிறது. இது உறவுகளுக்கும் பொருந்தும். தன் கணவரை பற்றிய தன் மனத்தாங்கல்களை சொல்வதால், வருங்காலத்தில் தன் உறவுகள் கணவனை மதிக்காமல் போய்விடுமோ என்ற ஒரு பாதுகாப்பு மனப்பான்மையும் பெண்களுக்கு அதிகம்.கணவனின் மரியாதையே பெண்களுக்கு தங்கள் சுயமரியாதையைவிட பெரிதாக இருக்கிறது. பெரும்பாலும் குடும்பங்களிலே இந்த மனப்பான்மைதான் தன் மகன் தவறு செய்வது தெரிந்தாலும் அதை மறுத்து பேசும் அன்னை, எல்லா வீட்டிலயும் நடக்கிறதுதானே, என்று அசாதரணமாக கேட்கவே மறுக்கும் தங்கை என்று உதாரணம் காட்டமுடியும். “We all try to the save the face”

பெற்றவரிடமும் மற்றவரிடமும் சொல்லி உதவிகேட்டு கடைசியில் மீண்டும் கணவனோடுதான் வாழ்க்கை என்ற பின் வன்முறை அதிகமாகுமோ என்ற பயம், ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பலரால் உதவ முடியும் ஆனால் இயந்திரகதியான வாழ்க்கையில் எத்தனை நாட்கள் உடன் செல்ல முடியும்.

சில இந்திய பெண்களுக்கு உதவும் போது தொலைபேசி எண்ணை கொடுத்து அவர்களை அழைத்து பேசு என்று சொன்னாலும் அவர்கள் பேசுவது புரியவில்லை நீங்களே பேசுங்கள், கூட வாருங்கள் என்று சொல்லும் போது பணியைவிட்டு போகவும் முடியாமல், மாலை இரவுகளில் சென்றுவிட்டு பிறகு வரும்போது எனக்கே சில சமயம் அலுப்பாகி விடும்போது முழுக்க கணவனை சார்ந்து இருக்கும் பெண்களால் என்ன செய்ய முடியும், மேலும் கணவன் வீட்டினர் உடனே உன் தோழிபோல நீயும் திமிர்பிடித்து அலையாதே என்ற சொல்லம்புகள் எறியும்போது, இந்த அவஸ்தை ஏன் அவரவர் விதி என்று பெண்கள் இருப்பதும் காரணமாய் இருக்கலாம்.எனக்கு இந்த திமிர் இருப்பதால் என்னோடு பழக தங்கள் மனைவியருக்கு அனுமதி மறுத்த கணவன்கள் இங்கே நியுஜெர்ஸியில் உண்டு!!

வன்முறைக்கு உள்ளான பெண்களும் போகப்போக கணவனின் கோபத்திற்கு நான் காரணம், என்று நம்புவது அடிப்படை காரணம். வன்முறை செய்வபர் ஒரு சுழற்சியை பின்பற்றுகிறார்கள், அதீத வன்முறை, பிறகு சிலகாலம் அமைதி, பிறகு அதீத அன்பு அதன்பின் அதீத வன்முறை என்ற சுழற்சி. இதில் வன்முறைகாலம் கூடுதல் காலம் இருந்தாலும், அதீத அன்பு இருக்கும்போது என்னை மன்னித்துவிடு, இனிமேல் இதுபோல் நடக்காது, நீ அப்படி எதிர்த்து பேசலனா அடிச்சிருக்க மாட்டேன், எனக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி, அப்ப நீ வேற பேசினயா ஒரு உரிமைல அடிச்சிட்டேன் என்று பேசி, பரிசுகளும் பூக்களும் வாங்கி மனைவியை நம்ப வைக்கிறார்கள் இதுதான் கடைசி முறை என்று. பிறகு 3 மாதம் கழித்து ஹனிமூன் முடிய ஆரம்பிக்கிறது கோபம், வன்முறை எல்லாம்.இந்த சுழற்சியில் இடைபட்ட கால சந்தோஷம் ஒரு நம்பிக்கையை தருகிறது.

கடைசியாக குழந்தைகள் நலன் முன்னிட்டு பெண் பொறுமையுடன் இருப்பதும் கஷ்டங்கள் ஒருநாள் தீரும் அதுவரை பொறுமையாய் இருப்பதே நலம் என்பதும், பொறுமையாய் இருப்பதே தியாகமாகவும், குழந்தைகளுக்காக அந்த தியாகத்தை செய்வது சரி எனவும் மனதில் கல்லில் வரைந்த ஓவியமாய் எழுதப்பட்ட எழுத்துக்கள். குழந்தைகள் இந்த பின்னனியில் வளார்ந்தால் இதுபோல ஆண் பெண்ணை வன்முறைக்குள்ளாக்குவது சரி என்ற ஒரு கருத்து மனதில் படிகிறது. தன் அன்னையின் பொறுமையை பார்த்து அப்படி இருப்பதே சரி என்று பெண்குழந்தைகள் வாழ கற்று கொள்வது என இன்னொரு சக்கரம் சுழல்கிறது. சில ஆண் குழந்தைகள் இதற்கு எதிர்மாறாக அதிக மென்மையும் அன்பும் கொண்டு வளர்ந்தாலும், பெண்கள் ஏனோ தன்னம்பிக்கை கொண்டு வளர்வதில்லை.

வன்முறையில் இருந்து விடுபடவும் முடியாது, ஆதரவும் இல்லாத நிலையில் ஒரு கட்டத்தில் அத்தனை தவறுகளுக்கும் தானே பொறுப்பு என்ற தாழ்வு மனப்பான்மை அதிகரித்து (low self esteem), தற்கொலையில் முடிகிறது. என் கணவரின் அக்கா 20 வருடங்கள் முன்பு தன்னை எரியூட்டி கொண்டபோதும் இதே குடும்ப பெயரை காக்க அந்த (தற்)கொலை மறைக்க பட்டது. இந்த மனப்பான்மையை மாற்ற மாதக்கணக்கில் ஆலோசனை சொன்னாலும் திரும்ப தாழ்வு மனப்பான்மைக்குள் செல்ல முடியும்(reversible).

மேலும் ஆண் தன் நண்பனை காக்க செய்யும் செயல்கள் பெருந்தன்மையாக கண்டுகொள்ளப்பட்டலும் அதுவே பெண் செய்யும் போது, இவன் கொடுக்கிற இடம் வீட்ட, குழந்தைகளை மறந்துட்டு இப்படி தோழிக்காக நேரம் செலவிட இவளாலதான் முடியும் என்று சில குடும்பங்கள் இன்னும் பேசுவதும் காரணமாகலாம்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeகல்வெட்டு wrote:

//எனக்கு இந்த திமிர் இருப்பதால் என்னோடு பழக தங்கள் மனைவியருக்கு அனுமதி மறுத்த கணவன்கள் இங்கே நியுஜெர்ஸியில் உண்டு!!//

முட்டி மோதி பிரச்சனையை தானே சரிசெய்வதும், பிறருக்கு உதவுவதும், சுயமாக சிந்துப்பதும்,சுய கெளரவமாக வாழ முயற்சிப்பதும்…..இந்த “திமிர்” பட்டங்கள் பட்டத்தைத்தான் பெற்றுத்தரும். இதில் கொடுமை என்னவென்றால் இந்த பட்டத்தை தருபவர்கள் பெரும்பாலும் அதே பெண்ணினமே.ஆண்கள் பெண்களுக்கு “திமிர்” பட்டம் தருவது அவர்களின் ஆளுமையிமால் வந்த பொறாமையாகத்தான் இருக்கும். பெண்களுக்கு கல்வி, பொருளாதார சுய சார்பு மர்றும் தான் நம்பிய விசயத்தை தானே கேள்விக்குள்ளாக்கி விடைதேட முயற்சிப்பது போன்றவையே விடிவைப் பெற்றுத்தரும்.

reply to this comment

27/12 14:35:44

maram wrote:

//வன்முறைக்கு உள்ளான பெண்களும் போகப்போக கணவனின் கோபத்திற்கு நான் காரணம், என்று நம்புவது அடிப்படை காரணம். வன்முறை செய்வபர் ஒரு சுழற்சியை பின்பற்றுகிறார்கள்//.

யேசிக்க வைத்தது பத்மா., நிதானமாக இப்பதிவைப் படித்துவிட்டு தனியான பதிவெழுதுகிறேன்.

reply to this comment

27/12 15:38:37

துளசி கோபால் wrote:

பத்மா,

அது வெறும் ‘திமிர்’ இல்லை.

‘சம்பாதிக்கற திமிர்’!

‘நாலு எழுத்துப் படிச்சுட்டோம்முன்னு ஆடுது’

நிறையக் கேட்டாச்சு பத்மா.

reply to this comment

27/12 15:55:44

ராம்கி wrote:

சென்னையில் மழை நின்றது. இந்தப் பதிவில் கொட்டுகிறது.

reply to this comment

27/12 21:44:25

saraswathi wrote:

//எனக்கு இந்த திமிர் இருப்பதால் என்னோடு பழக தங்கள் மனைவியருக்கு அனுமதி மறுத்த கணவன்கள் இங்கே நியுஜெர்ஸியில் உண்டு!!//

Dear Padma

I think this is a normal thinking of the society, at times we just have to ignore it ( but i am sure it is not so easy as i am saying )

sarah

reply to this comment

28/12 00:58:16

Padma Arvind wrote:

sara:

I understand, dont realy car. But many women are suppressed to access help. This is one of controlling tecnique to cut off from friends, relatives and isolate the vitim. so others will not know the situation. Maram has also mentioned about an engineer who cant even talk to her sister. I can access help an dknowledgable, some women are controlled. Thanks

reply to this comment

28/12 07:31:15

Padma Arvind wrote:

கல்வெட்டு: நீங்கள் சொன்னது நிஜம். பெண்களுக்குமே சுமரியாதையுடன் உள்ள பெண்கல் தங்களிலிருந்து மாறுபட்டு இருப்பதை கண்டவுடன் தங்கள் நிலையை ஊர்ஜிதம் செய்துகொள்ள, தங்களை ஏமாற்றி கொள்ளவும் தங்கள் நிலை சரியானது என போலியாக உணரவும் இந்த பழிபோடல் தேவையாய் இருக்கிறது. இதில் அறியாமையும், consonant disonance பண்பும் காரணம். நன்றி

மரம்: எழுதுங்கள் பலரும் படிக்க நேரிடும். நன்றி.

துளசி: உண்மை. அதிலும் ஆணைவிட கூட படித்துவிட்டாலோ, பொருளீட்டிவிட்டாலோ இன்னும் கூடுதல் பொழி வன்முறை. நன்றி

ராம்கி: நன்றி. மீண்டும் வலைப்பக்கம் வந்தமைக்கு கருத்து சொன்னதற்கும்.

reply to this comment

28/12 07:36:28

கயல்விழி wrote:

வெளியாருக்கு தங்கள் பிரச்சனைகளைச்சொல்ல அவர்களது நகைப்பு ஏளனம் போன்றவற்றிற்கு முகம் கொடுக்கப்பயப்படும் பலர் தமக்குள் புழுங்கிக்கொள்கிறார்கள். மற்றது.

பெற்றோருக்கு ஏன் வீணான வருத்தங்கள் கவலைகள் என்று சிந்திக்கும் பெண்களும் இருக்கிறார்கள். தனக்குள்ளேயே எல்லாவற்றையும் போட்டுப்பூட்டி சித்திரவதையுடன் வாழ்கிறார்கள்.

இப்படியான குடும்ப வன்முறைகளை தினம் அல்லது அடிக்கடி பார்த்து வருகின்ற பிள்ளைகள் மனரீதியாக பாதிப்புக்கு உள்ளாகவும் இடம் இருக்கிறது. அதனால் பெற்றோர்களை வெறுத்து தன்னைத்தனிமைப்படுத்தி வாழ முற்படும் குழந்தைகள் பல விபரீதங்களைச்சந்திக்க வேண்டிவரும். இவை குழந்தைகளை தங்களது அன்றாட நடவடிக்கைகளில்(படிப்பு விளையாட்டு) சரிவர கவனம் செலுத்தமுடியாமல் பண்ணிவிடவும் வாய்ப்புண்டு. நலல விடையத்தை அலசியிருக்கிறீர்கள்.

மேற்கோளுடன் எழுதியிருந்தேன். எனது பின்னூட்டம் ரூலோங் என்கிறது உங்கள் பெட்டி கருத்

reply to this comment

28/12 08:15:20

DJ wrote:

பத்மா,

நீங்கள் குறிப்பிட்ட, அதீத வன்முறை, அமைதி, அதீத அன்பு என்று ஒரு pattern இந்த வன்முறையில் இருப்பதாய் இது சம்பந்தமான ஒரு ஆய்வுக்கட்டுரையிலும் அண்மையில் வாசித்திருந்தேன். மற்றது, அடக்கப்படும்/கொடுமைப்படுத்தும் அம்மாவைப் பார்த்து அதேமாதிரி இன்னொரு வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளும் பிள்ளைகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதேசமயம், பெற்றோரைப் பார்த்து தாங்கள் அப்படியிருக்கக்கூடாது என்று சுயமாய்ச் சிந்தித்து அந்த வட்டத்தைவிட்டு வெளியேறக்கூடிய ஒரு தலைமுறையும் உருவாகக்கூடும் என்று நான் நினைக்கின்றேன்.

reply to this comment

28/12 09:56:33

Mohandoss Ilangovan wrote:

//பெரும்பாலும் குடும்பங்களிலே இந்த மனப்பான்மைதான் தன் மகன் தவறு செய்வது தெரிந்தாலும் அதை மறுத்து பேசும் அன்னை//

எங்க வீட்டில் இன்னமும் செருப்பு விளக்கமாரெல்லாம் வரும். (இதைப்பத்தி அப்புறமா எழுதுறேன்.), ஒருவேலை எங்க அம்மாவிற்கு என்மேல் பாசம் இல்லையோ என்னவோ?

reply to this comment

28/12 11:20:49

கயல்விழி wrote:

//எங்க வீட்டில் இன்னமும் செருப்பு விளக்கமாரெல்லாம் வரும். (இதைப்பத்தி அப்புறமா எழுதுறேன்.), ஒருவேலை எங்க அம்மாவிற்கு என்மேல் பாசம் இல்லையோ என்னவோ? //

அக்கறை உள்ள தாய் அதைத்தான் செய்வார். நல்லவற்றைப்பாராட்டும் நேரம் தீயவற்றை தண்டிப்பதன் மூலமே ஒரு பிள்ளை நல்ல வளர்ச்சியை அடையமுடியும்.

reply to this comment

28/12 11:31:35

Maya wrote:

நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.இங்கு(dalla) இது வரைக்கும் பல குடும்பங்கள் பார்த்திருக்கிறேன்.

1)இவர்கள் இருவரையும் பார்த்தால் Made for each other போல் இருப்பார்கள்.நாங்கள்(நானும் என் மனைவியும்) பழகிய போது மிக நன்றாக பழகினார்கள்.இருவரும் மேல் படிப்பு படித்தவர்கள்.

சில மாதம் கழித்துத்தான் அந்த மனிதனின் சுய ரூபம் தெரிய வந்தது.மனைவிக்கு தினமும் அடி ,உதை.சில கொடுமைகளை என்னால் எழுத முடியாது.நாங்கள் அந்த பெண்ணிடம் police ல் பண்ணச் சொன்னோம்.அந்தப் பெண் மறுத்து விட்டாள்.இந்தியாவிற்கு போ என்றால் அதற்க்கும் மறுப்பு ஏனென்றால் கணவனுக்கு ‘அடுத்த’ தொடர்பு ஏற்ப்பட்டுவிடுமாம்.நாங்கள் அந்தக் கணவனின் குடும்பபத்தாரை தொடர்பு கொண்டு பேசினோம்.அவர்கள் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது.கல்யாணத்திற்க்கு முன்பே அவனுக்கு மனோ வியாதி.இதை மறைத்து திருமணம் செய்திருக்கிறார்கள்.திருமணம் செய்தால் சரியாகி விடும் என்று(என்றுதான் இந்த மடைமை அழியுமோ ??).

நீங்கள் கூறியவாறு சில மாதம் மன்னிப்பு பின் வேதாளம் முருங்கை மரம் ஏறும்.தற்சமயம் அவர்கள் வேறு இடத்திற்க்கு சென்று விட்டார்கள்.

2)இந்த தம்பதியர்களில் கணவன் எப்பொழுதெல்லாம் வேலை இல்லாமல்(bench) இருக்கிறாரோ அப்பொழுதெல்லாம் மனைவி ராசியில்லாதவராகிவிவார்.

போதும் பத்மா அவர்களே..படித்தவன் படிக்காதவன்,ஆண்டிப்பட்டியில் இருப்பவன்,அமெரிக்காவில் இருப்பவன் ..இந்த விஷயங்களைப் பொறுத்தவரை எல்லாரும் ஒரே ரகம் தான்(மிருகம்).

/கணவன் வீட்டினர் உடனே உன் தோழிபோல நீயும் திமிர்பிடித்து அலையாதே என்ற சொல்லம்புகள் எறியும்போது, இந்த அவஸ்தை ஏன் அவரவர் விதி என்று பெண்கள் இருப்பதும் காரணமாய் இருக்கலாம்./

100% உண்மை..நாங்களும் அனுபவித்திருக்கிறோம்…

/மாலை இரவுகளில் சென்றுவிட்டு பிறகு வரும்போது எனக்கே சில சமயம் அலுப்பாகி விடும்போது முழுக்க கணவனை சார்ந்து இருக்கும் பெண்களால் என்ன செய்ய முடியும்/

யோசிக்கும் அல்லது முடிவு எடுக்கும் போது மனதை நினைக்காமல் மூளையை மட்டும் நம்பி முடிவு எடுக்கலாம்.

மொத்ததில் உண்மையை சொல்லியிருக்கிரீர்கள்.என்ன செய்வது..சுடத்தான் செய்யும்…

அன்புடன்

மாயா

reply to this comment

28/12 12:08:37

madhumitha wrote:

///கடைசியாக குழந்தைகள் நலன் முன்னிட்டு பெண் பொறுமையுடன் இருப்பதும் கஷ்டங்கள் ஒருநாள் தீரும் அதுவரை பொறுமையாய் இருப்பதே நலம் என்பதும், பொறுமையாய் இருப்பதே தியாகமாகவும், குழந்தைகளுக்காக அந்த தியாகத்தை செய்வது சரி எனவும் மனதில் கல்லில் வரைந்த ஓவியமாய் எழுதப்பட்ட எழுத்துக்கள்///

இது தான் வேறுவழியின்றி அதே சூழலிலிருந்து விடுபடமுடியாமல் வாழவைக்கும் உண்மை பத்மா.

பெரிய பதிவா இடுற அளவில் இந்த பதிவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கதைங்க இருக்குங்க பத்மா

reply to this comment

28/12 13:59:14

madhumitha wrote:

ஒண்ணு மறந்துட்டேன்.

தலைப்பு.

எப்படியானாலும் சேலைக்கே பாதிப்பு

reply to this comment

28/12 14:00:45

karthikramas wrote:

பத்மா, “முள்ளில் விழுந்த சேலை, பாதிப்பு சேலைக்குத்தான்” என்றெல்லாம் உருவகப்படுத்துவது

(மன்னிக்க) கொஞ்சம் ஆபாசமாகப் படுகிறது. முதலில் இந்த உருவகம் எல்லாப்பெண்களுக்கும் பொருந்தாது. ஏனெனில் , தாய்தந்தையர் தவிர வேறு உதவியே இல்லாத பெண்கள் என்று எல்லோரையும் சொல்ல முடியாது. உதவி இருப்பவர்களும் வறட்டு “குடும்ப மானம், கெட்ட பேருக்கு” பயந்து அந்த உதவிகளை நாடுவதில்லை. கம்மல்,சிமிக்கி -க்கு மணிநேரங்கள் கதையடிக்கும் பெண்களும் கொஞ்சம் எதிர்காலத்தில் பிரச்சினை வந்தால் இதுவிதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முயலவேண்டும்.

அடிக்கும் வரை பிரச்சினை போனால் முதல் முறையே காவல் நிலையத்தை நாடவேண்டும். அல்லது இதுவாவது (காவல் நிலையம் என்று ஒன்று இருப்பது; மேலும் அங்கு போனால் அசிங்கம் இல்லை என்பது)அவர்களுக்கு போதிக்கப்படவேண்டும்.

இன்னொரு முனையிலிருந்து , காவல் நிலையாமும் குடும்ப நல சட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சட்டங்களும் பெண்களுக்கான விஷயங்களில் கடுமையாக கடைபிடிக்கபடவேண்டும். உதாரணமாக இங்கே அமெரிக்காவில் , 911 போன் பண்ணினால் என்ன ஆகும் என்ற பயம் எல்லா கணவன்மார்களுக்கும் ஓரளவு இருக்கும். அல்லது என்ன ஆனது என்ற கதைகளையாவது கேள்விப்பட்டிருப்பார்கள்.

முதலில் தெரிந்து கொள்ளவேண்டியதை தெரின்டு கொள்ள வேண்டும். எத்தனை பெண்கள் நம்மில் போலிஸ் கம்ப்ளெயின்ட் ஏதோ ஒரு காரணத்துக்காக தந்துள்ளீர்கள். வீட்டுக்கு வீடு “பெரியவங்க”ளோட கட்டப் பஞ்சாய்த்து வச்சி “குடும்ப கவுரவம்” காப்பாத்துறாப்புல பிரச்சினைகளை அனுகினால் இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

reply to this comment

28/12 14:24:53

Padma Arvind wrote:

கார்த்திக்: பரவலாக சொல்லப்படும் உருவகம் என்பதால் பயன்படுத்தினேன். (பிடித்து இல்லை, எனவே மன்னிப்பெல்லாம் தேவை இல்லை).தனியாய் வழும் பெண்கள் (வாழாவெட்டி என்ற பட்டத்துடன்) சமூகத்தில் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். மேலும் முதல்முறை அடிக்கும்போது பிரகு வரும் மன்னிப்பு கேட்கும் படலம் கண்டு, பெற்றவர்கள் இந்த திருமணத்திற்கு பட்ட கஷ்டங்கள் கருத்தில் கொண்டு யாரும் காவல் நிலையத்திற்கு போவதில்லை. இதில் படிக்காத பெண் முதல், வருடம் 200000$ சம்பாதிக்கும் பெண்வரை அடக்கம்.

விவாகரத்து ஆன பெண்ணை மணந்துகொள்ளும் ஆண்களும் குறைவு. அமெரிக்க பெண்களே காவல்நிலையத்திற்கு உடனே போவதில்லை. இதுபற்றியும் vitim/violence பற்றியும் அதன் உளவியல் பற்றியும் தனியாக எழுதுகிறேன்.காவலரிடம் புகார் செய்து பிறகு அதே கணவனுடன் வசிக்கும் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பது நினைப்பதற்கே கஷ்டம்.

சிலசமயம் முன் வலைப்பதிவில் பரவலாக பெண்கள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று ஒரு விவாதம் நடந்தது நினைவிருக்கலாம். நிறைய பேரிடம் அவமானப்படுவதற்கு பதில் கணவன் படுத்தும் கொடுமைகள் மேல் என்று நினைக்கும் பெண்கள், குழந்தைக்காக பொறுமையாய் இருக்கும் பெண்கள் -the list is endlessreply to this comment

28/12 15:16:09

Padma Arvind wrote:

மதுமிதா, கயல்விழி, மாயா: புரிந்துகொண்டமைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

டீசே: பெற்றோரை பார்த்து மாறி ஒரு சமூகம் உருவாகலாம். நிறைய புத்தகங்கள் படிப்பது, அனுபவ அறிவு கொண்டு சிந்திப்பது இவை வளரும் போது. ஆனால் தற்போது அத்தகைய மாற்றங்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் இல்லை. இதனாலே மனநிலை மருத்துவர்கள் ஒரு வன்முறை சூழல் குழந்தைகளுக்கு தவறான பாடத்தை கற்பிப்பதாக சொல்கிறார்கள்.

மோகந்தாஸ்: அன்னையர் கண்டிப்பது உண்மை. ஆனால் நாளை உங்கள் மனைவி உங்களை பற்றி புகாரிட்டால், உங்கள் அன்னை/உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் எங்களுக்கு தெரிந்தவரை மோகந்தாஸுக்கு கோபமே வராது என்றுதான் பேசுவார்கள். அப்படி இன்றி உங்கள் மனைவியை ஆதரித்து பேசினால், உங்கள் அன்னைக்கு என் பாராட்டுக்களும் வணக்கங்களும். நான் சொன்னது பெரும்பாலான குடும்ப வழக்கம். விதிவிலக்குகளும் நிறைய ஊண்டு ஆனால் பெருவாரியாக இல்லை. (உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன்)

reply to this comment

28/12 15:22:52

02/12: உதவ முடியுமா
பெற்றோர் சொன்னதன் படி பள்ளி, கல்லூரி சென்று படித்த ஒரு சாதாரண பெண். அதிர்ந்து பேசாத குரல், கண்களில் தெறிக்கும் நீர் வராமல் அடக்கி ஆளும் வல்லமை , சோகம் மீறி வரும் புன்னகை என்ற அடையாளங்கள் கொண்ட ஒரு சாதாரண பெண். திருமணம் செய்து கொள் என்று பெற்றோர் சொல்ல நடந்த திருமணம். முடிந்த ஒரு வாரத்தில் அமெரிக்கா பயணம். அதற்கு முன் கணவன் வீட்டில் இருந்த போது மாமாவிற்கு மூன்று மனைவியர், ஒவொருவரும் ஒவ்வொரு வயதில் கடைசி மனைவி 44 வயது. யார் கணவனின் அம்மா என்றே தெரியவில்லை. கேட்க பயம். முதலிலே நகைகளை தா என்று சொல்லி தர நேரமானதிற்கே மாமா கொடுத்த அடி காதில் இன்னமும் ரீங்காரம் இடுகிறது.

நல்ல வேலை, படிப்பு என்ற கணவன் மீது அபார நம்பிக்கை. எப்படியும் அமெரிக்காவில்தானே இருக்க போகிறோம். பல லட்சம் கொடுத்து செய்த திருமணம், இன்னும் தங்கை வேறு , அப்பா, அம்மாவிடம் சொல்வானேன் ஏன்ற ஒரு அசட்டுத்தனம். புன்னகையுடன் அமெரிக்கா வந்தாள். வீட்டிலேயே சிறைக்காவல். கார் ஓட்ட கற்று கொள்ளட்டுமா என்ற போது எதுக்கு நீ கஷ்டப்படனும், நான் இருக்கேன் என்ற ஆதரவான பேச்சு. இதன்மூலம் அவள் நடவடிக்கைகள் கட்டுபடுத்த பட்டது. நண்பர்கள் யாரும் இல்லாமல் அவள் தனிமை படுத்த பட்டாள். ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு பார்த்தாலும் நமக்காகத்தானே என்று அடங்கி போன மனம்

ஆறுமாதத்தில் கடைசி மாமியார் வந்தபோது, தனிமை போகும் என்று எண்ணியவளுக்கு அதிர்ச்சி. அம்மா நிலையில் உள்ளவளிடம் கணவனுக்கு உறவு. ஆனால் தனியாக என்ன செய்ய முடியும், அதுவும் தங்கையின் திருமணம் முடிய வேண்டும் என்று வாய்மூடி மவுனமாக இருக்க பழகிகொண்டாள்.

குழந்தைகள் பிறந்தபின், கணவனின் நண்பர்கள் மூலம் குழந்தைகளை அவன் வெறுப்பதை புரிந்து கொண்டு கூடிய மட்டும் கணவனை பாதிக்காமல் தானே பார்த்தும் கொண்டாள். சிறைவாழ்க்கை.

திடீரென ஒருநாள் கணவன் தன் பெயரை வங்கி கணக்கிலிருந்து நீக்கியடதை தோழி ஒருத்து தொலை பேசி சொல்ல, அ திர்ந்து போனாள். அப்போதும் எதுவும் பேசவில்லை. தனக்கும் குழந்தைகளுக்கும் கிடைத்த வாழ்க்கையே போதும் என்று எண்ணி எதற்கு வீண்வம்பு என்று வாளாவிருக்க திடீரென கணவன் கையை முறிக்க முதல் முறையாய் வலி. மருத்துவரிடம் அழைத்து செல்லவில்லை. ஊருக்கு போய் குணமாக்கி கொள் என்று சொல்லி குழந்தைகளுக்கும் அவளுக்கும் ஒருவழி டிக்கெட் எடுக்க, அப்போதுதான் முதல்முறையாய் பயந்து போனாள். ஏன் என்று கேட்க, தானே இரண்டு மாதத்தில் இந்தியா வரப்போவதாகவும் சென்னையில் இனிமேல் இருக்க போவதாகவும் சொன்னான்.

சென்னையில் தாய் வீட்டில் இருந்தவளை தொலைபேசி தன் பெற்றோருடன் போய் இருக்க சொல்ல மறுத்தாள். இந்தியா வந்தாவன் அவள் வீட்டிற்கு சென்று அடிக்க, குழந்தையை தூக்கி போட கதறியவள் குரல் கேட்டு முதல் முறையாய் விபரீதம் உணர்ந்த அம்மா உள்ளே வர அவளுக்கும் அடி.

காவல் நிலையத்தில்சென்று புகார் தந்த போது முதலில் ஆதரவாய் பேசியவர் மறுநாள் அவளும் பெற்றோரும் இருக்கும் போது கனவன் வீட்டிற்கு சொல்லி அனுப்ப, காவலர் முன்னாலேயே அடி. என்னை மீறி வாழ முடியுமா பார் என்று சொன்னவர்கள், அதன்பின் தொலைபேசி பயமுறுத்துவது, மிரட்டுவது என்று தொடர்ந்து உளைச்சலை தந்தனர். பிள்ளையை பள்ளியில் விட்டுவிட்டு வந்த உடன் வரும் தொலைபேசி. உன் பிள்ளை உயிருடன் வேண்டுமானால், மாமாவீட்டில் வாழ் என்று. உன் அப்பா விபத்தில் மாட்டி கொண்டார். உடனே வா என்பது போல.

விவாகரத்து கேட்டு வழக்கு பதிவு செய்ய, நீதிபதி ஒருவர் உன் கணவருடன் அவர்கள் வீட்டில் சென்று இரு, இல்லை என்றால் அமெரிக்கா போய்விடு என்று சொல்ல இங்கே மீண்டும் வந்திருக்கிறாள்.

இங்கே அரசு அமைப்புகள், நண்பர்கள் உதவியில் வேலை தேடிக்கொண்டு வாழும் அவள் மீது இப்போது குழந்தைகளை கடத்தி வந்துவிட்டதாக புகார் கொடுத்திருக்கிறான். குழந்தைகள் காப்பீடு, அவர்கள் செலவிற்கு உதவித்தொகை எல்லாம் அரசாங்கத்திலிருந்து கிடைக்கிறது

நிறைய வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை கேட்டாகிவிட்டது. கணவனின் தந்தையிடமிருந்து வரும் பாலியல் தொல்லைகள், தன் கணவனுக்கு இன்னொரு பெண்ணிடம் உள்ள பாலியல் உறவு என்று அத்தனையும் சொல்லியும், இலவச வழக்கறிஞர்களால் அதிக நேரம் செலவழக்க முடியா நிலையில், மிகவும் சிக்கலான ஒரு வழக்கு என்பதால், ஒரு சிறப்பு வழக்கறிஞரை நாட வேண்டியுள்ளது.

அடுத்த வாரம் சில வழக்கறிஞர்களை சந்தித்து தவணை முறையில் பணம் தருவதாக பேசி பார்க்க இருக்கிறோம். என் அலுவலக நேரத்தில் எதுவும் செய்ய முடியாதாகையால், மாலை அல்லது வார இறுதியில் பேச வேண்டியுள்ளது. முடியும் என்று தோன்றுகிறது. இல்லை எனில் யாரேனும் உதவி செய்ய முன்வந்தால் அந்த பெண் நன்றி உள்ளவாளாய் இருப்பாள்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madePartha wrote:

AFAIK, there is no case until there is hard evidence against this man (beast). Does she have any friends who could take a stand against the guy? Someone who saw the abuse and could come up to the court and say what she saw…

reply to this comment

02/12 19:52:29

dharumi wrote:

வாடும் பெண்ணுக்கு உதவும் உங்கள் நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள். அந்த ‘அபலை’க்கு விடிவு வருமென நம்புகிறேன்.

reply to this comment

03/12 00:57:30

Thangamani wrote:

பத்மா என்ன மாதிரி உதவி செய்யமுடியும் என்று தெரியவில்லை. ஆனால் மறுபடியும் இன்னொரு இந்திய நீதிபதியிடம் மட்டும் அறிவுரை கேட்கச் சொல்லாதீர்கள்.

reply to this comment

03/12 04:40:40

sarah wrote:

பத்மா

எப்படி, எங்க இருக்காங்க.

யாருடைய தயவில்?

இதெல்லாம் எனக்கென்னமோ ரொம்ப முக்கியமாகப் படுகிறது.

அதுவும் அமெரிக்காவில், வேலை இல்லாமல்?

இந்தியப் பாரம்பரியத்தில் வந்த பெண்ணின் எண்ணங்களை நான் நன்றாகவே அறிகிறேன். எவ்வளவு நாட்கள் அந்தப் பெண் அமெரிக்காவில் இருக்க முடியும், இதுபோன்ற நீண்ட கேள்விகள்.

என்ன சொல்ல?

அதுக்கெல்லாம் மேலாக அந்தப் பெண்ணுக்கு தன்னம்பிக்கை, தன்னைப் பற்றிய எண்ணங்கள் போன்றவை முக்கியமாகப் படுகின்றன.

எவ்வளவுதான் நம்பிக்கைகள் வெளியில் இருந்து கிடைத்தாலும், அந்தப் பெண் துணிவுடனும், தன்னம்பிக்கையுடனும், சமூகம் சார்ந்த கருத்துக்கள் தனது வாழ்க்கையைக் கேள்வி எழுப்பும்பொழுதாவது அதனைப் பார்க்கும் தைரியத்தை வரவழைத்துக் கொள்வது இது போன்ற குணங்கள் இந்த நேரத்தில் அந்தப் பேன்னுக்கு மிக முக்கியமாகும். மேலும், எங்கு தங்கியிருக்கிறார்கள்? மிகக் கஷ்டமாக இருக்கிறது கேட்க. ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு சிறிது துணிச்சல் அதிகமாக இருந்தால் வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மனம் தொய்வடையாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.

என்ன சொல்ல என்று தெரியவில்லை.

நம்பிக்கையைத் தவிர வேறு உதவிகள் எதுவும் முழுப் பயன் அளிக்குமா என்ற கேள்வியும் எனக்கு வராமலில்லை.

அவர்களிடம் சொல்லுங்கள் , அவங்க மட்டும் இப்படிக் கஷ்டப் படவில்லை. நிறையப் பேர் இதுமாதிரி இருக்கிறார்கள். ஆனால், நம்பிக்கையோடு இதனை எதிர்கொண்டால் இந்தத் துன்பத்தில் இருந்து வெளி வருதல் சுலபம் என.

சாரா

reply to this comment

03/12 07:03:20

Padma Arvind wrote:

பார்த்தா: மனைவியின் பெயரில் கையொப்பமிட்டு வங்கி கணக்கிலிருந்து பெயரை நீக்கிய ஆதாரம் இருக்கிறது. சாட்சி சொல்ல வேறு யாரும் இல்லை. சென்னையில் காவலர்கள் நீதிபதியை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விட்டார்கள்.

தருமி: உங்களை போல பலரின் வாழ்த்துக்கள் அவளுக்கு வெற்றியை தரும் என்று நம்புகிறேன்

reply to this comment

03/12 09:02:08

Padma Arvind wrote:

தங்கமணி: நல்ல வேளையாக இங்கே இன்னும் இதுபோன்ற வழக்குகளில் ஊழல் வரவில்லை. இலவச சட்ட ஆலோசனைகளைவிட தமிழக கலாச்சாரமும் தெரிந்த வழக்கறிஞர் வேண்டும் என்பதால் செலவாகும். அதற்காக நிதி உதவி அளிக்க யாரேனும் முன்வந்தால், நலமாயிருக்கும். நேரடியாக வழக்கறிஞருக்கே அனுப்பலாம். பத்திரிக்கையாளர் யாரேனும் இன்னும் விவரங்களுடன் எழுதி அந்த குடும்பத்திற்கு தண்டனை, கணவனுக்கு மறுமணம் ஆகியவற்றை தடுத்து இன்னொரு பெண்ணை காப்பாற்றலாம்.

வரதட்சணை பணம், நகைகள், சான்றிதழ்கள் இவற்றை திரும்ப பெற உதவலாம். நாராயணனை தொடர்பு கொண்டிருக்கிறேன். இன்னும் விவரங்கள் அனுப்ப இருக்கிறேன்.

reply to this comment

03/12 09:43:54

Padma Arvind wrote:

சாரா

இன்னும் பாதிப்பு நிலிஅயில் இருக்கிறாள். இதிலிருந்து கோப நிலைக்கு சென்று பிறகு மாறவேண்டும். நண்பர் ஒருவரின் உணவகத்தில் வேலை தந்து ஆதரவும் தருகிறார்கள். குழந்தைகளுக்கு social service அலுவலகம் பணம் தருவதால் பிரச்சினை இல்லை. அரசின் காப்பகத்தில் மனு கொடுத்திருக்கிறாள். கிடைத்தவுடன் கவலை இல்லை.குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடும் கிடிஅத்துவிட்டது (medicaid). VCCB யில் மனு தந்திருக்கிறேன். அவர்கள் மனநிலை கவுன்சிலிங்கிற்கு குழந்தைகள், அம்மா இரண்டுபேருக்கும் பணம் தந்துவிடுவார்கள். எத்தனை நாள் வேண்டுமோ அத்தனை நாள் போகலாம். அரசு அலுவலகத்தில் தொழிற்கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யமுடியும்.தினமும் தொலைபேசுகிறேன். முடிந்தபோது சந்திக்கவும் செய்கிறேன். என் சக பணியாளர்கள் of the record கவுன்சிலிங் செய்ய விரும்புகிறார்கள்.தடுப்பூசி போன்றவை போட்டு தன்னாலும் குழந்தைகளை அன்புடன் கவனிக்க முடியும் என்ற அளவில் சில செய்கைகளை கவனிக்க சொல்லி தருகிறோம். Temporary restraining order வாங்க சில ஆலோசனைகள் வழங்கி உதவிசெய்கிறேன்.தனியாக இருக்க பயமாகவோ மனம் ஒடிந்தோ இல்லை.அவள் அனுமதியுடன் தான் எழுதினேன். சட்ட சிக்கல்கள் சரியானவுடன் தன்னுடைய அனுபவத்தில் கற்று கொண்டதை மற்றவர்களுக்கு சொல்லி எங்கே யாரை சந்திக்க வேண்டும் இன்னபிற, உதவி செய்ய அவளுக்கு ஆசை இருக்கிறது

reply to this comment

03/12 10:36:16

madhumitha wrote:

பத்மா அப்பெண்ணுக்கு இப்போதைய முதல் தேவை தன்னம்பிக்கை தான்.தேடித் தரும்உங்கள்உதவிகள் தொடரட்டும்.

reply to this comment

03/12 10:52:50

thanu wrote:

கடல் கடந்த வந்து, கஷ்டப்படும் பெண்ணுக்கு உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் தொடர்பாவது கிடைத்ததே என்பது சிறு நிம்மதி. உங்கள் நட்பு அவளுக்கு தொடர்ந்து மீட்பு கொடுக்கும் பத்மா.

reply to this comment

03/12 11:30:19

கயல்விழி wrote:

இத்தனையும் நிஜவாழ்வில் நடந்ததா..?? ஏதோ கதை வாசிக்கிறேன்

என்று முதலில் நினைத்தேன். என்ன கொடுமை இது எத்தனை கொடுமையிது

பெண்கள் அமைப்புக்களிடம் உதவி கோரமுடியாதா? பத்மா உங்கள் உதவிக்கரம்

சிறக்கட்டும்.

reply to this comment

03/12 12:59:03

துளசி கோபால் wrote:

பத்மா, ஏறக்குறைய இதே நிலமை இங்கே ஒருத்தருக்கு( ச்சின்னமாமியார் விவரம் தவிர்த்து)

எல்லோருமாச் சேர்ந்து உதவி செஞ்சுக்கிட்டு இருக்கோம்.

தைரியமா இருக்கச் சொல்லுங்க.அதுதான் இப்ப ரொம்ப முக்கியம்.

reply to this comment

03/12 14:35:31

வாசன் wrote:

பத்மா

நியு ஜெர்சி மாநிலத்தில் இப்பெண் உள்ளார் என நினைக்கிறேன்.

வலையில் தேடியதில் ஜெர்சியில் இருக்கும், இந்திய பின் புலத்துடனான சில வழக்கறிஞர்களின் பெயர்கள் கிடைத்தன.

சுட்டி

http://yp.usaindians.com/community/results.asp?zip=08837&biz=Lawyers…

மேலுள்ள சுட்டி வழியே காணக்கூடிய 12 வழக்கறிஞர்களில்

Anandarangam Venkatesan

422 E Wfield Ave

Roselle Park, NJ

(90 245-5858

என்பவரின் பெயரை பார்த்தால் தமிழர் என்பதாகத் தெரிகிறது. வேறு மாநிலத்தில் இப்பெண் வசிப்பவர் என்றால், usaindians.com ல் தேடிப் பார்க்கலாம்.

மற்றபடி நாங்கள் எப்படி உதவலாம் என்பதைப் பற்றி மின்னஞ்சலில் முடிந்தால் அனுப்புங்கள். vaasus@ஜீமெயில்.காம்

reply to this comment

03/12 15:13:33

வாசன் wrote:

விடுபட்டு போனது

http://www.aaalawyer.com/about_us.htm#venkatesan…

reply to this comment

03/12 15:17:47

Padma Arvind wrote:

துளசி, கயல்விழி, மதுமிதா, தாணு: நன்றி. இதுபோல துன்பப்படும் பெண்களுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட்டாலே நாளடைவ்வில் மாற்றம் வரும். நம்பிக்கைதானே வாழ்க்கை.

வாசன்: விவரங்களுக்கு நன்றி. மடல் அனுப்புகிறேன்

reply to this comment

03/12 17:32:01

ஜோ wrote:

என்ன கொடுமையடா இது?கற்பனை கூட பண்ண முடியாத காட்டுமிராண்டித்தனமாய் இருக்கிறதே?விரைவில் அப்பெண்ணுக்கு மன அமைதியும் நீதியும் கிடைக்கட்டும்

reply to this comment

04/12 04:46:20

sarah wrote:

Thank you Padma for the information. I will contact you through mail.

sarah

reply to this comment

04/12 04:47:21

tharasiva wrote:

Dear Padma,

This is so sad. Have you heard about Lawyer Kavitha Ramasamy? She is basically an immigration laywer, but she also runs an organization called “Mithr” to help abused immigrant women. She is based in New Jersey. You might want to contact her.

Here is the link to her contact details.

http://www.sulekha.com/classifieds/clad.aspx?cid=440362…

Thara.

reply to this comment

05/12 11:35:39

thamizhsasi wrote:

பத்மா,

நான் எப்படி இதற்கு உதவமுடியும் என்பது குறித்து மின்னஞ்சல் அனுப்புங்கள்

thamizhsasi@gmail.com

I am in New Jersey

reply to this comment

05/12 22:41:09

சேதுக்கரசி wrote:

1. Temporary ரிஸ்ட்ரெயினிங் ஆர்டர் தான் வாங்கமுடியுமா? Extended period-க்கு? அல்லது புதுப்பித்துக்கொண்டே இருக்கமுடியுமா?

2. ரிஸ்ட்ரெயினிங் ஆர்டரில் 2 வகைகள்: ஒன்று, அவன் அவளை, குழந்தைகளை சந்திக்கலாம், வீட்டுக்கு வரலாம், ஒரே இல்லத்தில் வசிக்கலாம். அவள் மேல் கை வைக்க முடியாது. இன்னொன்று, அவள் இருக்கும் இடத்தைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட radius-க்குள் வரமுடியாது. அதுவே மிகுந்த பாதுகாப்பு.

3. ரிஸ்ட்ரெயினிங் ஆர்டர் இருந்தும் சட்டத்தை மீறினால் அவனைக் கூண்டிலேற்றுவது சுலபம்.

4. ரிஸ்ட்ரெயினிங் ஆர்டர் இல்லாதபோது அவளைச் அடித்தால் அல்லது நேரிலோ தொலைபேசியிலோ மிரட்டினால் அவள் போலீசாரிடம் தெரிவித்தால் அது அவனுக்கு எதிரான சான்றாகப் பதிவாகும், அப்படிப் பதிவாகும் சான்று உபயோகமாக இருக்கும்.

5. அமெரிக்காவில் ஒருவரை அடித்தாலே அதற்கொரு வழக்குப் பதிவு செய்தால் அது சிவில் வழக்கு அல்ல. கிரிமினல் வழக்கு. கடந்த கால சம்பவங்கள் – அடி, உதை, மிரட்டல் போன்றவற்றுக்கு அவளே சாட்சி. அதுவே ஒரு வழக்குக்குப் போதுமானதாக இருக்குமே? அவள் சாட்சி சொல்ல மறுத்தால் தான் அந்த வழக்கு வலுவிழந்துபோகும்.

6. பாஸ்போட்டை அபகரித்தது, அவளை அடித்தது, ஆகியவை நீதிமன்றத்தில் செல்லும். தந்தையின் மனைவியுடனிருந்த உறவு (adultery), வங்கிக் கணக்கிலிருந்து அவள் பெயரை நீக்கியது போன்றவை கிரிமினல் குற்றமல்ல.

7. பிரிந்திருக்கும் நேரத்தில் அவன் அவளுக்கும் குழந்தைகளுக்கும் செலவுக்குப் பணம் தரவேண்டும். சாதாரண முறையில் கிடைக்கவில்லை என்றால் விவாகரத்துக்கு விண்ணப்பித்தால் அவன் நிச்சயம் செலவுக்குப் பணம் கொடுத்தாகவேண்டும். Legal separation-இல் ஒரு சிக்கல் உள்ளது: அவன் குழந்தைகளை வாரத்துக்கு இத்தனை முறை சந்திக்கலாம் என்றும், உதாரணத்துக்கு வாரத்துக்கு ஒரு முறை அவன் வீட்டுக்கு அழைத்துப் போய் மறுநாள் கொண்டுவந்து அவளிடம் விடலாமென்றும் நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புகள் அதிகம். அதற்கு அவள் சம்மதம் தரவேண்டிவரும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி உங்கள் வலைப்பூவில் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. தெரியப்படுத்தினால் தனிமடல் அனுப்ப முயற்சிக்கிறேன். நான் வசிப்பது பாஸ்டன் அருகில்.

reply to this comment

05/12 23:44:02

Padma Arvind wrote:

ஜோ: நன்றி.

தாரா: கவிதாவை சந்திக்க முயற்சிக்கிறேன். மானவி, womens aware போன்றவை இலவச சட்ட ஆலோசனை தரமுடியுமே தவிர இலவச வழக்கறிஞர் தர இயலாது , மேலும் சட்ட சிக்கல்களில் ஈடுபட விரும்பவில்லை என்று சொல்லி விட்டார்கள்.

தமிழ்சசி,உங்களுக்கு மடல் அனுப்புகிறேன்.

சேதுக்கரசி: தற்காலிக TRO வாங்கமுடியும் 9 மாதங்களுக்கு. அதற்குபிறகு அதை நீட்டிக்கலாம். மனைவியின் கையொப்பம் தானே இட்டதால், அதை கிரிமினல் வழக்காக மாற்ற முடியும் என சொல்லுகிறார்கள். இன்று காலை நீதிமன்றத்திற்கு செல்கிறாள். வந்தவுடன் தான் விவரம் தெரியும். எனக்கு அலுவலக வேலைகள் இருப்பதால் நான் இன்றூ அவளுடன் செல்ல முடியாது. என்னை padma.arvind@gmail.com க்கு தொடர்பு கொள்லுங்கள். விவாகரத்து இப்போது படிவங்கள் தாக்கல் செய்ய முடியாது. இந்தவாரம் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்பப்படுத்தப்பட்டிருக்கிறார்களா என்றறிய மருத்துவரை கலந்தாலோசிக்க சொல்லி இருக்கிறேன்.

reply to this comment

06/12 06:42:28

பலூன் மாமா wrote:

பத்மா,

உங்களின் முயற்சிக்கும் சேவைக்கும் நன்றி.

நான் எனது நண்பர்கள் வட்டத்தில் விசாரித்து எழுதுகிறேன்.

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

இலவச இலவச வழக்கறிஞர் ?

இலவச வழக்கறிஞர் +பண உதவி?

முடிந்தால் balloonmama at ஜிமெயில் க்கு மயில் அனுப்பவும்.

reply to this comment

06/12 08:42:26

Santhosh wrote:

எங்கே போய்க்கொண்டு இருக்கிறது மனித(???) நாகரிகம்(????). பாதாளம் முதல் வானம் வரை பணம் பணம் அய்யோ !

reply to this comment

07/12 15:24:36

ம் wrote:

பத்மா,

இந்த இணைப்புகள் தரும் அமைப்புகளோடு ஏற்கனவே தொடர்பு கொண்டிருக்காவிடின், உதவுமா என்று பாருங்கள்:

1. manavi

2. sakhi

இவை பற்றி பிபிஸியின் செய்திக்குறிப்பு:

< ahref="http://news.bbc.co.uk/2/hi/south_asia/3589899.stm">http://news.bbc.co.uk/2/hi/south_asia/3589899.stm

reply to this comment

07/12 15:54:50

Padma Arvind wrote:

santhosh, M Thanks. we have contacted Sakthi, Manavi and womens aware. They can only offer consultation and can not represent in court.Thanks

reply to this comment

07/12 16:36:40

Padma Arvind wrote:

பலூன்மாமா, வாசன்: மடல் அனுப்பி இருக்கிறேன்

reply to this comment

09/12 13:07:43

ரவி wrote:

பணம் கொடுத்து எல்லாம் உதவும் நிலையில் நான் இல்லை. வருந்துகிறேன். கடல் தாண்டி இப்படி கஷ்டப்படும் பெண்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். கஷ்டமா இருக்கு. உங்களை மாதிரி உள்ளங்களின் அறிமுகமாவது அப்பெண்ணுக்கு கிடைத்ததே..அவர்கள் வாழ்க்கை நல்ல விதமாய் அமைய என் வாழ்த்துக்கள். இப்படி எல்லாம் நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் இருக்கிறார்களான்னு கற்பனை பண்ணக் கூட முடியலே

reply to this comment

09/12 14:10:08

Jayashree wrote:

Padma,

Please let me know if she is in ned of any financial help. Are you raising funds for her?

reply to this comment

09/12 14:17:46

Padma Arvind wrote:

நன்றி ரவி. வாழ்த்துக்கள் கூட வல்லமையை தரும். ஜெயஸ்ரீ: நிதி சேர்க்கிறேன். உங்களால் முடியுமானால் என்னை (padma.arvind@gmail.com) க்கு தொடர்பு கொள்ளுங்கள்.

reply to this comment

09/12 19:10:24

சேதுக்கரசி wrote:

பொதுவாக, இதுபோன்ற வழக்குகளை மாவட்ட வழக்கறிஞரின் அலுவலகம் (District Attorney, DA’s Office) தன்னுடைய பொறுப்பாக எடுத்துக்கொள்ளும். அதில் பணிபுரியும் பொதுவழக்கறிஞர்கள் Public Prosecutor-கள் plaintiff-இன் சார்பில் வாதாடுவார்கள். அவர்களுக்கு மாவட்டம் ஊதியம் அளிக்கும். நாம் பணம் தரத் தேவையில்லை. அப்படியிருக்க, இதற்கு அதிகம் செலவாகக்கூடாது. (அதற்கும் மேல் நம் செலவில் ஒரு தனி வழக்கறிஞர் வைத்துக்கொள்வது நம் விருப்பம். அது எந்த அளவுக்கு அவசியம் என்று தான் பார்த்துக்கொள்ளவேண்டும்.) அதே சமயம் DA-வின் அலுவலகத்தைக் குறைவாக எடைபோட்டுவிடவேண்டாம். அமெரிக்க சட்டஒழுங்குமுறை விசயங்களில் மிகவும் சக்திவாய்ந்த, வலிமைமிக்க அலுவகங்களில் ஒவ்வொரு மாவட்டத்தின் DA-வின் அலுவலகமும் ஒன்று. அது யாருக்கும் சளைத்த அலுவலகமல்ல.

உண்மையைச் சொல்லப்போனால் அவன் அவளை அடித்தான் உதைத்தான் மிரட்டினான் கொடுமைப்படுத்தினான் என்றெல்லாம் அவள் புகார் செய்தால் DA-வின் அலுவலகம் அந்த வழக்கை எடுத்துக்கொண்டு நடத்தும். ஏனெனில் abuse வழக்குகள் தனிமனித வழக்கல்ல. மாநிலத்தைச் சேர்ந்த வழக்கு. It is not Her Vs Him. It is the State of New Jersey Vs Him. வழக்குத் தொடர்பான செலவுகளுக்கு அவள் பொறுப்பல்ல. மாநிலமே பொறுப்பு.

reply to this comment

13/12 12:28:43

Padma Arvind wrote:

சேதுக்கரசி

இவளுடைய வழக்கு தமிழ்நாட்டில் பதிவாகி, நிராகரிக்கப்பட்டு பிறகு குழந்தைகளை கடத்தியதாக புகார் சொல்ல பட்டு இருக்கிறால். முதலில் வழக்கை பதிந்தது கணவனே. இதனால் இந்த பெண் defensive ஆக போக வேண்டி இருக்கிறது. இங்கே Public prosecutor உடன் பேசியும் அவர்களால் செய்ய எதுவும் இல்லை. அந்த பெண் முதலில் வன்முறை, பாலியல் தொல்லை என்று புகாரிட்டிருந்தால் நீங்கள் சொல்வது சரி. அவள் தன் மேல் போடப்பட்ட குழந்தைகளை கடத்திய குர்றத்திற்கு எதிராக வாதாட வேண்டிய நிலையில் இருக்கிறாள்.தமிழ்நாட்டிலும் சரி இங்கேயும் சரி முதலில் வழக்கு தொடர்ந்தது கணவனே. இதனாலேயே அவளுக்கு சட்ட அலுவகங்கல் உதவ இயலவில்லை

31/10: தனியாக வாழும் தாய்களின் சில பிரச்சினைகள்
கருவை சுமந்து ஈன்றெடுப்பதால் பெண்களுக்கு தங்கள் குழந்தைகளிடம் அதிக ஈர்ப்பு இருக்கிறது. இதனாலேயே குழந்தைகள் நன்மையை கருத்தில் கொண்டு அடங்கி போவதும், அமைதியாய் இருப்பதும் நடக்கிறது.

தனியாய் வளரும் குழைந்தைகளை ஏற்று கொள்ளும் அமெரிக்காவில்கூட தந்தையை போல நல்ல ஆண் ரோல் மாடல் வேண்டும் என்று வலிய போய் இன்னொருவனை காதலிப்பதும், அந்த பலவீனத்தை புரிந்து கொண்டு ஒரு சிலர் அடக்கு முறை செய்வதும் சகஜம். தனியாக குழந்தைகளை வளர்க்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் படும் பாடும் அதிகம். என் சக அலுவலர் ஒரு காகேசியன் இனத்தை சேர்ந்தவர், அவருடைய ஆண் நண்பன் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்தவன். இருவருக்கும் பிறந்த பெண் தந்தையை போல இருக்கிறாள். ஆண் நண்பன் கைவிட்டுவிட 14 வருடம் கஷ்டப்பட்டு பெண்னை வளர்க்க அவர் பட்ட கஷ்டங்கள் பல. இப்போது உடல் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவரை கவனித்து கொள்ள ஒரு துணையும் இன்றி அவர் தனிமையாய் உணரும் போது வருத்தமாக இருக்கிறது. அந்த பெண்ணோ ஆப்பிரிக்க இனத்தின் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் படும் கஷ்டத்தை படுவதையும், அன்னையின் நண்பர்கள் அனைவரும் காகேசியனாக இருப்பதால் ஏளனத்துக்குள்ளாவதுபோல உணர்ந்திருக்கிறார். இந்த பெண் சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்த போது அதிர்ச்சியாய் இருந்தது.

இந்தியா போன்ற நாடுகளில் சமூகம் குழந்தைகளை தந்தையின்றி ஏற்று கொள்வதில்லை, பெரும்பாலான தாயும் தந்தையை சார்ந்து இருப்பதால் பணிக்கு செல்வதோ, சுயமாக குழந்தைகளை வளர்ப்பதோ இயலாமல் ஒருவித கணக்கு போட்டு சரியென்று படுவதால் வன்முறையை பொறுத்து போகிறார்கள். ஆனால் அந்த தாய்மை என்ற பலவீனத்தை சாட்டையாக்கி உன் குழந்தைகளை கொன்று விடுவேன் , மரியாதையாக விலகி விடு, நகைகளையும் சொத்துக்களையும் கொடுக்கிறாயா இல்லையா என்று மிரட்டுதலும் நடக்கும் போது கண் எதிரே வன்முறையை பார்த்து வளரும் குழந்தைகள் தவறான கருத்தை மனதில் பதித்து கொள்கின்றனர். முக்கியமாக பெண் குழந்தைகள் அடங்கி இருபதும் அடிப்பது தவறாகாது என்ற எண்ணத்தையும் கொள்கின்றனர்.

ஆண் குழந்தைகள் நம் அம்மா பட்ட கஷ்டங்கள் இன்னொரு பெண் படக்கூடாது என்ற எண்ணமும் அன்னையிடம் நெருக்கமாக இல்லாத குழந்தைகள் பின்னாளில் வன்முறையில் ஈடுபடவும் செய்கின்றனர். இது குழந்தைகளுக்கு செய்யும் தவறான வழிகாட்டுதல் ஆகும்.

சாண்டி என்றொரு 24வயது பெண், இரண்டு குழந்தைகளுக்கு தாய். ஒரு பனி இரவில் கணவனால் உயிருக்கு ஆபத்து நேர்ந்த வேளையில் குழந்தைகளையும் தூக்கி கொண்டு செருப்பு கூட இல்லாமல் காவலர் நிலையம் ஓடிவந்தவர். சில அமைப்புகள் மூலம் விடுதியில் சில காலம் தங்கி, தன்னுடைய படிப்பை முடித்து போராடி இன்று ஒரு நிலையான வருமானம் வரும் வேலையில் இருக்கிறார். தந்தையின் வன்முரை, பின் கணவனின் வன்முறை இதனால் பழகிய அவருக்கு மீண்டும் ஒரு ஆண்நண்பன் கிடைத்தான். அவனின் அடக்குமுறை பழகிப்போய் அவனுடன் திருமணம் செய்ய இருந்தவருக்கு அவன் ஏற்கெனவே திருமணம் ஆனவன் என்று அவனுடைய மனைவி மூலம் தெரிய வர, அதிர்ச்சி அடைந்தவர் மதுவிற்கு அடிமையாக, இப்போது மதுவின் பிடியில் இருந்து மீள முடியாமல் மருத்துவரை நாடி இருக்கிறார். அவருடைய மன அழுத்தம் அதிகமாகி குழந்தைகளை பாதிக்குமோ என்று குழந்தைகளை மாற்று பெற்றோரிடம் விட்டிருக்கிறார்கள். இதில் தண்டனை கஷ்டப்பட்ட அந்த victimற்கு தான்.

உறவு கொள்வது இருவரானாலும் பல காரணங்களால் பெண்கள் அலைக்கழிக்க படுவதும் அவதிக்குள்ளாவதும் அதற்கும் மேல் குற்றவாளிகளாகப்படுவதும் சமூகம் பொறுத்து கொண்டிருக்கிறது. ஆண்- எந்த பாதிப்பும் இல்லாமல் இன்னொரு பெண்ணுடன் . இது கூட ஒரு உலகளாவிய பிரச்சினைதான்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments mademaram wrote:

சிறிய வயதில் பெண்கள் சிங்கிள் பேரண்ட் ஆகும் கொடுமையும் நடக்கிறது பத்மா.

reply to this comment

31/10 20:33:25

சிவா wrote:

victim என்ற பதத்திற்க்கு சற்று முயன்று சரியான தமிழ் சொல் கண்டறிந்து இடுங்களேன்.

முழுஅளவில் தமிழில் படித்து விட்டு இந்த ஒரு வார்த்தை ஆங்கிலம் என்பது சற்றே நிரடலாக உள்ளது.

குறை அர்த்தம் எனினும் தமிழ் பரவாயில்லை. இல்லை ஒரு அலங்கார வகைக்காகவா…??!!

மற்றபடி தங்களின் பலகட்டுரைக‍ளை படித்து சிந்தித்தது உண்டு. சில ஏற்புடன்,

சில ஏற்பின்றி. இருப்பினும் ஏற்பில்லாதவைகள் கருத்துரு என்ற அளவில் கவனத்தை

கவருவதாகவே உள்ளது. வாழ்த்துகள்.

reply to this comment

31/10 22:02:56

ராம்கி wrote:

//குழந்தைகள் நன்மையை கருத்தில் கொண்டு அடங்கி போவதும், அமைதியாய் இருப்பதும் நடக்கிறது.//

//உறவு கொள்வது இருவரானாலும் பல காரணங்களால் பெண்கள் அலைக்கழிக்க படுவதும் அவதிக்குள்ளாவதும் அதற்கும் மேல் குற்றவாளிகளாகப்படுவதும் சமூகம் பொறுத்து கொண்டிருக்கிறது//

அடக்கி வைக்க ஆயிரம் காரணங்கள்! அதில் குழந்தை நலனும் ஒன்று.

reply to this comment

31/10 22:23:05

Rasikow Gnaniyar wrote:

இறைவன் தாய்மையை ஆணுக்கு மாற்றினால் இந்த கொடுமைகள் தடுக்கப்படலாமோ..?

இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

reply to this comment

31/10 22:57:33

padma arvind wrote:

நன்றி மரம்.சிறிய வயதில் சிங்கில் பேரண்ட் ஆகி படும் கஷ்டம் இந்தியாவில் இன்னும் அதிகம். அப்படி யாரேனும் மணம் செய்து கொண்டால் அது பெரும் தியாகமாக கருதப்படுகிறது. இங்கே குழந்தைகள் படும் கஷ்டம் இன்னும் அதிகம்.

ராம்கி: உண்மை

நன்றி ரசிகவ் ஞானியார்

reply to this comment

01/11 17:54:32

padma arvind wrote:

சிவா, பாதிக்கப்பட்டவர் என்பதைவிட விக்டிம் என்ற சொல்லுக்கு இன்னும் ஆழம் அதிகம் என்று தோன்றியது. பாதிக்கபட்டதை எதற்கு வேண்டுமானாலும் சொல்லலாம். சரியான தமிழ் சொல்லிற்கு முயற்சிக்கிறேன். கருத்துக்கள் மாறி இருப்பதும் சிந்தனை வேறாய் இருப்பதும் நல்ல ஆரோக்கியம் அல்லவா?

நன்றிகள்

27/10: அமெரிக்காவில் வாழும் ஆதரவற்ற பெண்களுக்காக -
திருமணமாகி அமெரிக்கா வரும் பெண்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் கணவர், உங்களுடைய சோஷியல் செச்யூரிடி எண்ணை அறிந்து கொள்வதுதான். எல்லாம் அவரே பார்த்து பார்த்து செய்துவிட்டார் என்று எண்ணி பெருமை படாதீர்கள். எனக்கு தெரிந்து ஒரு பெண்ணும் அவர் கணவரும் ஒரே வங்கி கடனட்டை வைத்திருந்தனர். இது எல்லா வீட்டிலும் நடப்பதுதான். ஆனால் பணி நிமித்தம் புகைவண்டியில் சென்றவர் பர்ஸை காணடித்துவிட்டு, வங்கிக்கு தொலைபேசி கடனட்டையை முடக்க சொல்லி இருக்கிறார். மனைவி கடைக்கு போகப்போவதில்லை, அப்புறம் தொலைபேசிக்கொள்ளலாம் என்று இருக்க, அன்று பார்த்து அவர் மனைவி கடையில் உபயோகித்திருக்கிறார். அது எச்சரிக்கை தர, கடை சிப்பந்திகள் செக்யூரிட்டியை வரவழைக்க, வங்கி கணவனின் பெயரில் அக்கவுண்ட் துவக்கி இருப்பதால், அவருடைய அனுமதி இல்லாமல் எதையும் செய்ய மாட்டோம் என்றூ சொல்லி இருக்கிறார்கள். கணவனின் சோஷியல் செக்யூரிட்டி எண், மற்றும் முக்கிய கடவு சொல் எதுவுமே தெரியாமல் பேந்த பேந்த முழித்த மனைவி, கணவனை தொலைபேசியில் பிடித்து விடுபட்டது தனி கதை. இது போன்ற விவரங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

30வயதுக்குள் அமெரிக்கா வரநேர்ந்தால், படிக்க 30000$ வர அரசு உதவி தொகை வழங்கும். இதற்காக ஒரு படிவம், ஒரு கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். திறமை அடிப்படையில் இது வழங்க படுகிறது.

இந்தியாவில்B Sc, Bcom போன்றவை படித்திருந்தால், இங்கே அது ஒரு இளநிலை படிப்புக்கு ஒருவருடம் குறைவாக இருப்பதால், அதை கல்லூரி படிப்பாக கொள்ள மாட்டார்கள். இதற்கு நியுயார்க்கில் உலக கல்வி தரம் சொல்லும் நிலையம் இருக்கிறது. அங்கே அனுப்பினால் உங்கள் சான்றிதழ்கள், மதிப்பெண் ஆகியவை தீர விசாரித்து அமெரிக்க கல்லூரி தகுதியில் உங்களுக்கு ஒரு சான்றிதழ் அனுப்புவார்கள். இதை கொண்டு நீங்கள் கல்லூரியில் சேர்ந்து மீதம் ஒருவருடம் படித்து முடிக்கலாம். இதில் மதிப்பெண் கொண்டு A, A+ என்ற அளவும் தருவார்கள். இதை முக்கியமாக செய்து கொள்ளுதல் வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நலம்.

ஏதேனும் காரணத்தால் உங்கள் கணவன் கைவிட்டுவிட்டு திடீரென்று இந்தியா சென்று விட்டால், அவருடைய அலுவலகம் சென்று இந்த எண்ணை கொடுத்து நீங்கள் அவருடைய மனைவி என்பதால் அவரின் ஓய்வு சேமிப்பில் பங்கு பெற முடியும். இந்த விதி மாநிலத்திற்கு மாநிலம் மாறும் என்றாலும், நியுஜெர்ஸியை பொறுத்தமட்டில் கணவனின் சம்பாத்தியத்தில் 50% மனைவிக்கு சட்டப்படி உரிமை உண்டு. இந்தியாவிற்கு நிரந்தரமாக சென்றுவிட்டார் என்பது உறுதியான நிலையில் நீங்கள் சோஷியல் அலுவலகம் சென்று அவர் கட்டிய பணத்தில் உதவி பெறலாம். மாதாமாதம் 0.062% இதற்காக கட்டப்படுகிறது.

உடனடியாக சோஷியல் அலுவலகம் தொடர்பு கொண்டால், வீட்டு வாடகையின் சிறுபகுதி, குழந்தைகளுக்கு உடனடி மருத்துவ காப்பீடு (விசா, இந்த நாட்டு குடியுரிமை அவசியம் இல்லை, இருந்தால் எளிது), மனநல கவுன்சிலிங், மற்றும் உணவுக்கு உதவி தொகை உடனடியாக கிடைக்கும்.No child is left behind திட்டப்படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

இ ல வ ச மாக குழந்தைகள் காப்பகத்தில் இடம் கிடைக்கும். உடனே கிடைக்காது என்றாலும் சிலவாரங்களில் கிடைக்கும். அவர்களே குழந்தைகளுக்கு காலை, மதிய உணவு தருவார்கள்.

உங்கள் வேலைபார்க்கும் திறமையை அளந்தரிய ஒரு நேரம் வாங்கி கொள்ளுங்கள். அதன் அடிப்படையில் அரசாங்க வேலை காலியாக இருப்பின் உங்களை பரிந்துரை செய்வார்கள். இல்லை எனில், வேலை திறனுக்கான ஒரு சான்றிதழ் தருவார்கள்.

நியுஜெர்ஸி போன்ற இடங்களில் இந்திய பெண்களுக்கான விடுதிகள் உண்டு. இதில் இடம் கிடைப்பது கடினம் என்றாலும் தகுதி அடிப்படையில் கிடைக்கும். இலவச வழக்கறிஞர் உதவி கிடைக்கும்.

நியுஜெர்ஸி மாநில இணையதளத்திற்கு சென்றால் இது போன்ற பெண்களுக்கு இலவச தொழில் கல்வி அளிக்கப்படும் விவரங்களை அறியலாம். உடனே தொடர்பு கொண்டால், படிவங்கள் அனுப்பி வைப்பார்கள். அதன்பின் நீங்கள் இலவசமாக தொழிற்கல்வி பெற முடியும்.

கணவனே போய்விட்டான் இனி என்ன என்று வாளாஇருக்காதீர்கள். அவனுடைய சோஷியம் எண்ணை தந்து புகார் செய்யுங்கள். மீண்டும் அமெரிக்கா வர நேர்ந்தால், சட்டப்படி உங்களுக்கு ஜீவனாம்சம், குழந்தைகள் செலவுக்கான உதவி கிடைக்க உதவுவார்கள்.

அடிக்கடி வன்முறை இருந்தால் காவலரிடம் புகார் சொல்ல பயமாய் இருந்தால், நம்பிக்கை உள்ள ஒருவரிடம் சொல்வது அவசியம். பின்னாளில் சட்டம் வழக்கு என்று வந்தால் இது ஒரு முன்மாதிரியை நிர்ணயிக்க உதவும். மனநிலை தளர்ச்சி இருந்தால், பொதுநலத்துறைக்கு தொலைபேசினால், உடனே மனநிலை கவுன்சிலிங்க் நீங்கள் விரும்பும் வரை இலவசமாக அளிக்கப்படும்.

இந்த மாதம் வீட்டு வன்முறையை வெளியேற்ற முயற்சி செய்யும் மாதம் என்பதால் இந்த பதிவு.வன்மூறைக்கு அடிபணிய மாட்டேன் என்று சொல்லி நிமிர்ந்து நில்லுங்கள். வானம் தொட்டுவிடும் தூரம்தான்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeதுளசி கோபால் wrote:

XLNT PADMA

reply to this comment

27/10 20:09:23

வாசன் wrote:

http://www.manavi.org/ அமைப்புடன் நீங்கள் செயல்படுகிறீர்களா..

reply to this comment

27/10 20:39:37

naalrodu wrote:

Social Security Number h4 விசாவில் வருபவர்களுக்கு கிடையாது. அவர்களுக்கு ஏதும் வழி இருக்கிறதா?

reply to this comment

27/10 21:09:11

Priya wrote:

Á¢ì¸ ¿ýÈ¢ ÀòÁ¡, -for everything!

reply to this comment

27/10 22:57:01

Pari wrote:

30வயதுக்குள் அமெரிக்கா வரநேர்ந்தால், படிக்க 30000$ வர அரசு உதவி தொகை வழங்கும்.

கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா? அல்லது சுட்டி?

reply to this comment

28/10 00:09:19

Go.Ganesh wrote:

இவ்வளவு விஷயங்கள் இருக்குங்களா. ஆனா பாருங்க பெண்கள் படித்திருந்தாலும் சில விஷயங்களை கேட்க தயங்குகின்றனர். படிக்காத பெண்களுக்கோ பாஸ்போர்ட் எதற்கென்பதே தெரியாது. இது போன்ற பதிவுகள் நிறைய விஷயங்களை விளக்கும்.

பரி அவர்களின் கேள்விக்கு தங்களின் விடையைக் கேட்க ஆவலாக உள்ளேன்

reply to this comment

28/10 00:45:28

தாணு wrote:

மெத்தப் படித்துவிட்டோமென்று இருப்பாவர்கள்கூட சில சமயங்களில் இது போன்ற காரியங்களில் அறியாமையுடன் தான் இருக்கிறோம். LEARNING SKILLS/ LIFE SKILLS ரெண்டும் ஒரே கோட்டில் செல்வதில்லை. உங்கள் வேலைப் பளுவிலும் இது போன்ற தகவல்களைச் சொல்ல நேரம் ஒதுக்குவதற்கு நன்றி.

கணேஷ் மாதிரி நானும் மேல்கருத்துகளுக்கு காத்திருக்கிறேன்

reply to this comment

28/10 04:47:54

மூர்த்தி wrote:

பயனுள்ள ஆக்கமிது பத்மா அவர்களே. நிறையபேருக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியாது. தங்களின் படைப்பு நிச்சயம் அவர்களுக்கு பயனுள்ளதாய் அமையும்.

reply to this comment

28/10 07:38:44

Dubukku wrote:

No child is left behind திட்டப்படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

இ ல வ ச மாக குழந்தைகள் காப்பகத்தில் இடம் கிடைக்கும்.

- Is this for everyone ? Here childcare costs a fortune

reply to this comment

28/10 08:00:12

Padma Arvind wrote:

துளசி: நன்றி

வாசன்: நான் அரசாங்க பொதுநலதுறையில் பணியாற்ருகிறேன். எங்களுடைய வன்புணர்வு ஆலோசனை மையத்தில் மானவியுடன் ஒரு தொடர்பு இருக்கிறது. இந்திய பெண்களுக்கு ஆலோசனை வழங்க அவர்களை உபயோகிக்கிரோம். அத்துடன் women aware என்ற அமைப்புடன் சேர்ந்து வேலை, மேலும் இலவசமாக தொழிற் கல்வி இவை அளிக்கிறோம்.

reply to this comment

28/10 09:19:01

Padma Arvind wrote:

பரி:

இதில் 3 வகை உண்டு. ஒன்ரு: திருப்பி தர வேண்டாத grant. இரண்டாம் வகை: வட்டி இல்லாமல் வேலை கிடைத்தவுடன் திருப்பி தரும் அரசாங்க கடன்

மூன்றாவது: படிப்புக்கு கொஞ்சம், உணவு தங்குமிடம் இதற்கு என்று திருப்பி தரவேண்டாத உதவி. இது கீழ்நிலை படிப்புக்கு. இதற்கான சுட்டி:http://www.fafsa.ed.gov/ இதில் கவனமாக புதிதாக வந்த பெண்கள் இணப்புக்கு சென்று படிவங்கலாஇ தரவிறக்கி கொள்ளலாம். தொடரும்

reply to this comment

28/10 09:22:41

Padma Arvind wrote:

பரி: இந்தியாவில் இளநிலை படிப்பு முடிந்து வருபவர்கள் கீழ் உள்ள தகவல்படி $30000 வரை மேல்நிலை படிப்புக்கு பெற முடியும்.

The Paul & Daisy Soros Fellowships for New Americans

( http://pdsoros.org/ ) is an annual fellowship program

designed to provide opportunities for new Americans to

achieve leadership positions in their chosen fields.

For the purposes of this program, a “new American” is an

individual who (1) is a resident alien, i.e., holds a

Green Card; or (2) has been naturalized as a U.S. citizen;

or (3) is the child of two parents who are both

naturalized citizens.

The fellowships provide grants for up to two years of

graduate study in the United States. The fellow receives

an annual maintenance grant of $20,000 and a tuition grant

of one-half the tuition cost of the U.S. graduate program

attended by the fellow. Thirty fellowships will be awarded

each year.

A fellow may pursue a graduate degree in any professional

field (e.g., engineering, medicine, law, social work,

etc.) or scholarly discipline in the arts, humanities,

social sciences, and sciences.

The applicant must either have a bachelor’s degree or be

in her/his final year of undergraduate study. Those who

have a bachelor’s degree may already be pursuing graduate

study and may receive fellowship support to continue that

study. Individuals who are in the third, or subsequent,

year of study in the same graduate program are not

eligible for the competition.

To be eligible, an applicant must not be older than thirty

years of age as of November 1, each year

Candidates must demonstrate the relevance of graduate

education to their long-term career goals and potential in

enhancing their contributions to society. Fellowships are

not solely awarded on the basis of academic record. A

successful candidate will give evidence of at least two of

the following three criteria for selection: (1) creativity,

originality, and initiative demonstrated in any area of

her/his life; (2) a commitment to and capacity for

accomplishment demonstrated through activity that has

required drive and sustained effort; and (3) a commitment

to the values expressed in the U.S. Constitution and the

Bill of Rights.

See the Soros Fellowships Web site for complete program

information and an application form.

RFP Link: http://pdsoros.org/

reply to this comment

28/10 09:24:57

Padma Arvind wrote:

தாணு, பிரியா, மூர்த்தி: நன்றிகள்.

H4 விசாவில் வருபவர்கள் சோஷியல் செக்யூரிட்டி அலுவலகத்தில் ஒரு Tax payer எண் பெற்று கொள்ள முடியும். ஊரிலிருந்து வருகிற பெற்றோருக்கும் இந்த எண் பெற முடியும். இவர்களுக்கு அரசு செய்கிற உதவிகளையும் விரைவில் எழுதுகிறேன்.

reply to this comment

28/10 09:27:03

Padma Arvind wrote:

ரங்கா: நான் சொன்ன திட்டம் பெரும்பாலும் ஆண்டு வருமானம் 30,000 கீழ் உள்ளவர்களுக்கு. நடுத்தர மக்களுக்கு பள்லிக்கு முன் latch key என்ற திட்டம் இருக்கிறது. இதில் காலை உணவு தரப்படுகிரது. மாலையிலும் இந்த குழந்தைகள் கவனிப்பு உண்டு. இலவசமாக எல்லாருக்கும் ஏற்ற ஒரு திட்டம்.

அதுபோல 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு headstart என்ற திட்டம் உண்டு. இதுவும் இடம் உள்ள வரை அனைவருக்கும் ஏற்றது.

reply to this comment

28/10 09:31:14

Padma Arvind wrote:

job assessment முடிந்தவுடன் அரசாங்கமே இலவசமாக தொழிற்கல்வி தருவதுடன், பணியில் அமர்த்த ஆவன செய்கிறார்கள்.வன்முறையை பார்த்த குழந்தைகளுக்கும் இலவச கவுன்சிலிங் உண்டு. இதற்கு VCCB(victims of crime compensation board) பொறுப்பேற்று பண உதவி வழங்குகிறது. இதற்காக யாரையும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. தொலைபேசினாலே போதும்.

reply to this comment

28/10 09:35:40

Padma Arvind wrote:

கணேஷ்

நன்றி. மேற்சொன்ன தகவல்களும் மேலே விவரங்கள் தேவை எனில் முடிந்த மட்டும் விளக்கி சொல்கிறேன்.

reply to this comment

28/10 09:37:13

Padma Arvind wrote:

please read that the applicant must be under the age of 30 by nov 1, year of application and not each year

Also even the moether or father is H1 or H4 if they have two children who are born in this country they are eligible to apply.

reply to this comment

28/10 09:40:36

Pari wrote:

தகவலுக்கு நன்றி பத்மா.

H4 விசாவில் வருபவர்கள் சோஷியல் செக்யூரிட்டி அலுவலகத்தில் ஒரு Tax payer எண் பெற்று கொள்ள முடியும்.

புதிய செய்தியாக இருக்கிறதே! H4 என்றாலே ஒரு “மண்ணும்” கெடையாதுன்னு முத்திரை குத்தி அனுப்புறாங்களே. அதனால வேற வழி இல்லாம “ஜெயில்” வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்காங்க

இவர்களுக்கு அரசு செய்கிற உதவிகளையும் விரைவில் எழுதுகிறேன்.

காத்திருக்கிறேன்.

reply to this comment

28/10 09:41:50

Padma Arvind wrote:

பரி

h4 விசாவில் வருபவர்கள் பெயரை நீங்கள் tax returnஇல உங்களை சார்ந்தவர்களாக போட இந்த எண் உதவும். அதையும்விட ஒரு history ஏற்படுத்தவும் உதவும். உங்கள் மாநிலத்தில் இருப்பவர்களை நேரடியாக தொடர்பு கொண்டால் நிச்சயம் உதவுவார்கள். அதேபோல இது instate tution பெறவும் உதவும்.I got this PIN even for my parents who visited here on visitors visa.

reply to this comment

28/10 09:59:43

Padma Arvind wrote:

Pari: this is for your information: Who needs an ITIN?

IRS issues ITINs to foreign nationals and others who have federal tax reporting or filing requirements and do not qualify for SSNs. A non-resident alien individual not eligible for an SSN, who is required to file a U.S. tax return only to claim a refund of tax under the provisions of a U.S. tax treaty, needs an ITIN.

Examples of individuals who need ITINs include:

Non-resident alien filing a U.S. tax return and not eligible for an SSN

U.S. resident alien (based on days present in the United States) filing a U.S. tax return and not eligible for an SSN

Dependent or spouse of a U.S. citizen/resident alien

Dependent or spouse of a non-resident alien visa holder

If anyone moves back to India, we can get SStax, and school district tax refunded.

reply to this comment

28/10 10:11:17

Pari wrote:

You continue to provide surprising information

I’m still last or ignorant how anyone who can not legally work will have “tax obligation” to IRS to obtain ITIN. I will dig up and find out more.

As you said, building “history” is so essential. The sooner you start, the better.

IRS page on ITIN:

http://www.irs.gov/individuals/article/0,,id=96287,00.html…

Thanks again.

reply to this comment

28/10 10:40:47

Padma Arvind wrote:

pari, H4 visa person does not have tax obligation, Bu tif they are depending on a H1 visa, they can be declared and shoul dbe. In that case, you get tax break and also if something happens to the H1 visa holder, his spouse is eligible for SS benefits and the kids get monetary help from Social security office.

reply to this comment

28/10 11:18:57

maram wrote:

நல்ல தகவல்கள் பத்மா.

reply to this comment

29/10 14:22:58

Manjula wrote:

>>.I got this PIN even for my parents who visited here on visitors visa.

Can you please tell whats the use of getting PIN for parents (coming on visitor visa)?

(Sorry for typing in english)

reply to this comment

31/10 18:33:12

padma wrote:

மரம், மஞ்சுளா; நன்றி. பெற்றோர் ஒரு வருடம் அல்லது 6 மாதம் தங்கினாலும் pin இருந்தால் golden pass பெற்றூ கொள்ள முடியும். இது பல இடங்களுக்கு சுற்றுலா செல்லும் போது, கண், காது சிகிச்சை மற்றும் சில மருத்துவ உதவிகள் பெற, வரியிலிருந்து ஒரு break கிடைக்க உதவும்.

reply to this comment

31/10 19:17:16

Padma Arvind wrote:

Priya

Can you please call me? I donot have your contact info.

reply to this comment

09/11 09:21:39

Partha wrote:

Hi Padma,

//H4 விசாவில் வருபவர்கள் சோஷியல் செக்யூரிட்டி அலுவலகத்தில் ஒரு Tax payer எண் பெற்று கொள்ள முடியும். ஊரிலிருந்து வருகிற பெற்றோருக்கும் இந்த எண் பெற முடியும். இவர்களுக்கு அரசு செய்கிற உதவிகளையும் விரைவில் எழுதுகிறேன்.

Small correction related to the ITIN info. Social Security Services office issues only a “Denial of SSN” letter for the dependent visa holders. For ITIN we need to apply to IRS.

IRS allots ITIN only when you file for tax returns. For example, if I (in H1) come to US with my wife (in H4) for the first time I will not be able to get the ITIN from my wife till I file my return. But if you already have tax returns filed in US and you are bringing in new dependents, then you can apply for ITIN for them using your older tax return forms.

reply to this comment

09/11 10:42:19

ravisrinivas wrote:

very useful information. Can you please compile such useful information

and put them together as a small

book.Or atleast give the links under different heads.If the various associations like tamil sangams or tamil associations can bring out a

book with such information it will be

useful to those who are arriving to USA

as dependents as well as to visitors.

I know that many women who are well educated in India find it difficult to

get such information in USA or do not know what to do when they face an emergency or crisis in family. Most universities help the new students

and faculty members to get familiarised

with such rules and regulations.For those who are outside the educational

sector such information is not easy to get.

reply to this comment

09/11 11:12:40

Padma Arvind wrote:

பார்த்தா: தகவலுக்கு நன்றி. H1 இல் வந்தாலும் உங்கள் மனைவியை சேர்த்தே வருமானவரி கட்டுவது உசிதம். இதனால், நாளாஇ ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் போது, H1இல் இருப்பவர்களின் மனைவியருக்கு அரசாங்கம் தரும் சில நன்மைகள் சலுகைகள் கிடைக்க வழியாகும்.

சமீப காலம் வரை SS அலுவலகம் ITIN தந்து கொண்டிருந்தது.

reply to this comment

09/11 13:42:18

Padma Arvind wrote:

நன்றி ரவி. கையேடாக தயாரித்து சில தமிழ்சங்கங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

07/10: சட்டங்கள் செய்வதும்…
டீசே போன்ற கவிஞர்கள் மன்னிக்கவும்

கங்கையைத் தலையிலும் மங்கையை உடலிலும்

கொண்டவன் ஒர் சிவன்

மங்கை தேவானை மணந்தபின் வள்ளியை

கவர்ந்ததும் அவன் மகனே

போற்றுவோம் அவர்தமை துதிபாடி பாமாலை

சாற்றுவோம் இருவரும் ஆண்மகனே

கற்பெனும் விதிமுறை இவரிடம் தானிலை

கவலை கொள்ளாதிரு மனமே!

கெளரவர் தலைவன் நிலைதடுமாற

சிரித்தனள் பாஞ்சாலி என- அவள்

கெளரவம் தனை துகிலுரிந்து

நகைத்தவன் அவன் தம்பி

சலவைத் தொழிலாளி குரலினில் ஐயம்

கேட்டதும் ராமனென்னும் அரசன்

பலர் துடித்திட அனுப்பினான் வனத்திற்கு

கருவுற்ற தன் துணையை

சட்டமும் திட்டமும் யுகம் யுகமாய்

வேறுபட்டதும் ஏனடியோ

சட்டமும் திட்டமும் ஆடவர் இட்டம்

என்பதால் தானடியே

இந்நிலை மாறிட என்ன செய்வாயென

சொல்லிடுவாய் தோழி

பலகலை கற்று புது சட்டங்கள் செய்வோம்

புயலென புறப்படுவீர் தோழி

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madepremalatha wrote:

Hi,

Isn’t the shiva with Ganges is a represention of the Himalayas?

and,

Isn’t Shiva as half female is a representation that conveys equivality even in God?

Murugan with Devayaanai and valli is a representation of social mixing of tribal community (valli) and another community (devayaanai)?

Gods were alright, it is just how and what is told to us were twisted.

reply to this comment

07/10 09:39:21

karthikramas wrote:

பத்மா , கவிதை எளிமையாக நன்றாகத்தான் உள்ளது.

reply to this comment

07/10 09:48:52

Ramachandran usha wrote:

பத்மா, பெண்ணீய கருத்துள்ள கவிதை என்று நீங்கள் படைத்தாலும், பலமுறை நான் யோசிப்பது தவறு நம் மேல்தான். விலங்குகள் நாமே பூட்டிக் கொண்டு இருக்கிறோம். அவை விலங்கு என்று தெரியாமல் மூளைசலவை செய்யப்பட்டிருந்தாலும், அதை உடைக்க நம்மால் மட்டுமே முடியும். இன்றைய தலைமுறையில் நல்ல மாற்றங்கள் பார்க்கிறேன். உரிமைகளை ஏன் கேட்க வேண்டும்? நமக்கு தேவையானதை நாமே எடுத்துக் கொள்வோம்!

reply to this comment

07/10 10:14:32

(maama)sami wrote:

What about Bill Clinton ?

reply to this comment

07/10 11:14:34

தாணு wrote:

பத்மா,

கவிதை நல்லா இருக்கு.//மங்கையை உடலில் கொண்டவன்// போதித்தது சமதர்மம்தான்-ப்ரேமலதா சொன்னதுபோல்.

//உரிமைகளை ஏன் கேட்கவேண்டும், நாமே எடுத்துக் கொள்வோம்// கேட்டாலே கிடைப்பதில்லை 33% இட ஒதுக்கீடு மாதிரி. ஆனாலும் இந்த தலைமுறை அதை முன்வைத்துப் போராடவாவது முடிகிறது. அடுத்த தலைமுறை தாமே எடுத்துக்கொள்ளும்.

reply to this comment

07/10 11:39:17

விச்சு wrote:

நல்ல கருத்து..

தானே எடுத்துக் கொள்வதில் சில பிரச்சினைகள் இருக்கின்றன.. பாருங்கள் குஷ்பு சொன்னதும் கலாசார கேடான விஷயம் அதற்குமுன் கமலகாசன் சொன்ன போது பெரிய விஷயமாகவில்லையே. ஆக ஒரு பெண் செய்தால் குற்றம்.

இரண்டாவது, வெற்றி பெற்ற எத்தனை பெண்கள் தாங்களாகவே முடிவெடுத்து செயலாற்றுகிறார்கள்..ஒன்று அவர்களது உறவினர்கள் மூக்கை நுழைக்கிறார்கள் அல்லது உறவினர்கள் இல்லாமல் (அதாவது ஆண்களுக்கு பினாமி) பெண்களால் செயலாற்றா வே முடிவதில்லை.. (ராபரி ஒரு உதாரணம்).

கல்வி அறிவு மட்டும் போதாது.. தனியாகச் செயலாற்றும் திறன் வளரவேண்டும்.. அதற்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும்.. சம்பாதித்த பணத்தை கணவனிடம் கணக்கு சொல்லி ஒப்படைக்கும் நிலை மாறும் வரை பெரிய மாறுதல்கள் தென்படப் போவதில்லை.

அவ்வளவு தூரம் போய் கடவுள் களை உதாரணமாகக் காட்ட வேண்டாம் பத்மா.. நம்ம தலைவர்களே போதுமே.. இரண்டு கல்யாணம் கட்டிக் கொண்டு, இரண்டாவது மனைவிக்கு அந்த அந்தஸ்து கூட தர மறுப்பவர்கள்.. இதே ஒரு பெண் இரண்டு பேரை ஒரே நேரத்தில் மணம் செய்து கொண்டால் என்ன ஆகும் தமிழ் நாட்டில்.. கலாசாரம் எல்லம் பெண்களுக்குத்தான்..

அன்புடன் விச்சு

reply to this comment

07/10 12:15:24

paruppu wrote:

/இதே ஒரு பெண் இரண்டு பேரை ஒரே நேரத்தில் மணம் செய்து கொண்டால் என்ன ஆகும் தமிழ் நாட்டில்.. /

aval peyar Vesi

reply to this comment

07/10 12:27:02

ராம்கி wrote:

//சட்டமும் திட்டமும் ஆடவர் இட்டம்

மாற்ற முனைந்தால் ஆடுவர் ஆட்டம்

மீறியும் பேசினால் உடன் போராட்டம்

ஆதரிப்போர்க்கு அவதூறுப் பட்டம்

பெண்விடுதலையோடுதான் நிற்கும் ஆம்பளை ஆட்டம்.

reply to this comment

07/10 12:46:38

Padma Arvind wrote:

ப்ரேம்லதா:

உண்மைதான். சக்திக்கு பாதி இடம் தந்ததில் சம உரிமை உள்ளதாக கதைகள் உண்டு. நான் சொன்னது ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை பற்ரித்தான்.

சிவனே பார்வதியை சாபமிட்டு பிரிந்ததாக படித்திருக்கிறேன் தன் தந்தைக்கு ஆதரவாக போனதால்.

காரணம் எதுவானாலும் இருதார மணம் ஆதரித்த அதே புராண கதைகள் ஒரு பெண் நிழலை பார்த்ததற்கே கண்டித்ததையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

reply to this comment

07/10 12:58:48

Padma Arvind wrote:

கார்த்திக்: ஊக்கத்திற்கு நன்றிகள்.

தாணு:அடுத்த தலைமுறைக்கு இப்போதே சிந்தனை தேவை. அபோதுதான் அது வளாரும்போதே உரத்தை தரும்.

உஷா: இன்றூ விகடனில் குஷ்புவின் வாக்கு மூலம் பார்த்தீர்களா. தனது வியாபாரத்திற்கோ வாழ்விற்கோ தடங்கல் வரக்கூடாது என்பதற்காக தன் கருத்தை தானே மறுக்க வேண்டிய நிலை. இதற்கு பின் குடும்பமோ இல்லை வேறூ யாராவதோ இருக்கலாம். ஆனாலும் மனதில் நிறைய பெண்களிடம் இன்னும் உறுதி இல்லை. குடும்பத்தில் குழப்பம் வேண்டாம் என்று நினைத்து சரியானாலும் மறக்கடிக்க செய்கிறார்கள். அது மாற சிந்தனை கூடிய துணை வேண்டும்.

reply to this comment

07/10 13:02:39

Padma Arvind wrote:

ராம்கி: கவிதை பினூட்டத்திற்கு நன்றிகள்.

விச்சு: நல்ல விளக்கம். “கல்வி அறிவு மட்டும் போதாது.. தனியாகச் செயலாற்றும் திறன் வளரவேண்டும்.. அதற்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும்.. சம்பாதித்த பணத்தை கணவனிடம் கணக்கு சொல்லி ஒப்படைக்கும் நிலை மாறும் வரை பெரிய மாறுதல்கள் தென்படப் போவதில்லை” உண்மை. விகடனில் . கதாவிலாசம் பகுதியில் வரும் அம்பையின் கதை விளக்கமும், வெளியே வேலைக்கு போவது சகஜமான நிலையிலும் இன்னமும் வீடுகளில் ஆணாதிக்கம் இருப்பதை அழகாக சொல்லி இருக்கிறார். உங்கள் கருத்தை போலவே.

reply to this comment

07/10 13:05:47

chiththan wrote:

இது ஆணாதிக்க சமுதாயமாகத்தோன்றினாலும்

ஒரு பெண்னைப்போல் ஆண்களால் தனித்து

செயல்படவோ வாழவோமுடியாது என்பதே

உண்மை.அதற்க்காகத்தான் அவனுக்குசாதகமான

கதைகள் சட்டங்கள் ஆக்கினான் போலும்.

உடல் வழுவிருந்தாலும் மனதளவில் ஆண்கள்

கோழைகளே! ஒரு பெண்னின் நிழலின்றி

எந்த ஆணுமில்லை எனவே நீங்கள்

கர்வத்துடன் நடக்கலாம்.[இதற்க்குப்பெயர்

ICE வைத்தல் இல்லை]

reply to this comment

12/10 14:51:52

gganesh wrote:

பத்மா எழுதியவர்களை விட்டுவிட்டீர்களே???

கடவுள் என்று உருவகப்படுத்தி அவர்களை இப்படி சித்தரித்த அந்த சித்தர்களை என்ன செய்வது??