»
S
I
D
E
B
A
R
«
20/07: உடல்நல அறிவு (Health Literacy)
Jul 20th, 2005 by பத்மா அர்விந்த்

தலைவலிக்கோர் மாத்திரை
தடுமனுக்கோர் மாத்திரை
தவறுதலா துன்னுப்புட்டா
தர்மலோக யாத்திரை
என்பது வேடிக்கையாக இருப்பினும் கண் சரியாக தெரியாத முதோரிடம் கேட்டால் தெரியும் அதில் எத்தனை உண்மை என்பதை.
உடல் நலம் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வது எல்லோருடைய உரிமையும் ஆகும்.மருத்துவரின் குறிப்புக்கள், எப்படி மருந்தை 4 வேளை எடுத்துக்கொள்ளா வேண்டும் போன்ற குறிப்புகளை பின்பற்ற நோயாளிக்கும், இவர் நாம் சொன்னதை சரியாக புரிந்து கொண்டாரா என்பது மருத்துவருக்கும் தெரிய வேண்டியது முக்கியம்.

• உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆபத்தை தருவது
• கிட்டதட்ட $10 பில்லியன் ஒரு வருடத்திற்கு செல்வை வரவழைப்பது
• இரத்த பரிசோதனை போன்றவற்ரால் கண்டுபிடிக்க முடியாது
• பல உயிர்களை குடிப்பது
• இன்னமும் மெத்தனமாக இதன் சக்தியை புரியாமல் இருப்பது

இது எது என்று கேட்டால், குறைந்த உடல் நலன் பற்றிய அறிவே அகும்( Low Health literacy).
நிறைய மருத்துவர்கள், தன்னார்வ தொண்டர்கள்,இது ஒரு தொற்றுநோயாக பரவுவதை சொல்கிறார்கள்.
உடல்நல அறிவு என்றால் என்ன? ஒரு மனிதனால் மருத்துவர் சொல்வதை புரிந்து கொள்வதும், அவர் தரும் குறிப்புகளாஇ படித்து அதை கிரகிக்க கூடிய அறிவும் ஆகும். இதற்கும் கல்லூரி படிப்பிற்கும் சம்பந்தமே இல்லை. மெத்த படித்த மேதாவிகளே பல சமயங்களில் தவறுதலாக புரிந்து கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்திருகிறார்கள்.

உலகில் உள்ள நோயாளிகள் பலரும் இந்த அபாயத்தில் இருக்கிறார்கள். தற்காலத்தில் மருத்துவ செய்திகள் புரிந்து கொள்ள மிகவும் கடினமாக, சிக்கலாக இருக்கின்றன. நிறைய செய்திகள், தொழில் நுட்பங்கள் இதில் எது சரி தவறு என்று எதுவுமே சரியாய் புரிவதில்லை.
மருத்துவர்களும் அதிக நேர கட்டுப்பாட்டில் இருப்பதாலும், காப்பீடு சட்ட சிக்கல் இவை தவிர்க்க அதிக சோதனைகள் என எல்லாமே குழப்ப மயம்.அவசரத்தில் நோயாளிக்கு புரிந்ததா இல்லையா என்பதை கண்டு கொள்வதில்லை. அதேபோல நோயாளிகளும் இனையத்தில் படித்தது, திரைப்படத்தில் பார்த்தோ, விளமபரத்தில் வருவது என தேவைக்கு அதிகமாக செய்திகளை குவித்து கொண்டு தெரிந்தவர் மாதிரி இருப்பதும், இன்னும் சிலர் கேட்க சங்கோசப்பட்டு வாளா இருப்பதும் உண்டு.சரியாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் இருப்பின் பல விளைவுகள் வரும்.

உதாரணமாக அண்டிபையாட்டிக் சாப்பிட்டால் பால் அருந்த வேண்டும். ஒரே நேரத்தில் மறக்காமல் சாப்பிட வேண்டும். மருந்தின் அளவு இரத்ததில் சரியாக சமநிலையில் இருக்க வேண்டும். 8 மணிக்கு ஒருமுறை என்றால் 8 மணிக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல முழுதும் உட்கொள்ள வேண்டும்.என்னப்பா, இருமலா சளி வருதா, எரித்ரோமய்சின் 4 சாப்பிடு என்பதெல்லாம் அதற்கான எதிர்சக்தியை அதிகரிக்கிறது. இரும்பு டானிக் சாப்பிட்டால், விடமின் சி கட்டாயம் வேண்டும். இல்லைஎனில் அது உறிஞ்சப்படாது.
மிக சிறிய எழுத்து அமைப்பில் மருந்தின் பெயர் இருந்தால், எல்லா மாத்திரைகளும் ஒரே நிறத்தில் இருந்தால் பல மாத்திரைகள் எடுத்து கொல்ளும் முதியவர் தவறான மருந்தை எடுத்து கொள்ள சாத்தியமாகிறது.” ஏன் எழவெடுக்கிற, மாத்திரைதான் வாங்கி அழ முடியும், எடுத்தா தர முடியும் என்று சத்தம் போடுவதை கேட்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு தேவை ராஜமரியாதை இல்லை. தவறாக எடுத்து கொண்டுஇறந்து விடுமோ என்ற பயம்தான்.
கண்ணும் தெரியாமல், காதும் கேளாமல் தவறிழைத்து விட்டு இன்னும் கஷ்டம் தரப்போகிறோமே என்ற பயம்தான்.
இதில் பெண்கள் பாடு இன்னும் திண்டாட்டம். ஹார்மோன்கள் நின்று எலும்பின் சக்தி குறைந்து, சிறுநீர் அடக்க மாட்டமல், கருப்பை சற்றே வெளிவர படும் அவஸ்தைகள்….
இதில் படிக்க தெரியாதவர்கள் மட்டும் முட்டாள் என்று எண்ணாதீர்கள். படித்தவர்களே மிகவும் கடினமான பரிசோதனிக்கு செல்லும் போது தவித்து போவார்கள். அதுவும் ஆயிரத்தெட்டு இணைக்கப்பட்டு பயமுறுத்தும். அதில் ஒன்று இரத்தம் செலுத்த, ஒன்று மருந்து செலுத்த ஒன்று சலைன் செலுத்த என்றாலும் பயந்துபோவார்கள். இதில் சரியாக சொல்ல வேண்டிய கட்டாயம் அம்மருத்துவருக்கு உண்டு.அதேபோல அமெரிக்காவில் உள்ள 44 மிலியன் பேருக்கு 4அம் வகுப்புக்கு மேல் கிரகிக்க சக்தி இல்லை என்பதும் 2 சிலபிள் வார்த்தைகளுக்கு மேல் புரியாது என்பதும் தெரிய வந்திருகிறது.பள்ளி அல்லது கல்லூரியில் படித்திருந்தால் நல்ல புரிந்து கொள்ளும் திறன் இருக்கும் என்பதும் ஒரு தவறான கருத்து. அதிலும் மருத்துவ கருத்துக்கள் இயற்கையிலேயே கடினம் என்பதும், மனம் கவலைப்படும் போது புரிகின்ற திறன் குறைவு என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள்.
நீரிழிவு, ஆஸ்த்மா, இரத்த கொதிப்பு போன்ற உயிர்கொல்லி நோய்மருந்துகள் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு பலர் உயிர் இழக்கிறார்கள்.50% நோயாளிகள் சரியாக மருத்துவரின் குறிப்புகளை பின்பற்றுவதில்லை.

அமெரிக்காவில் உள்ள 33% ஆசியர்கள் இதில் பலவித தவறுகளை செய்கிறார்கள். இந்நிலையில் மருத்துவரின் மொழியும் நோயாளியின் மொழியும் மாறுபட்டால் எப்படி இருக்கும்? உலகையே ஆட்டிவைக்கும் நிலையில் மருத்துவ உலகு சென்று கொண்டிருக்கிறது. இப்போது சற்றே விழித்து கொண்டு அமெரிக்கா, கனடா போன்ற இடங்களில் மொழி பெயர்ப்பாளர்களும், 4 ஆம் வகுப்பு நிலையில் புரியும் வண்ணம் எழுதப்பட்ட கையேடுகளும், எழுத்து 20 வடிவில் இருப்பதும் நடக்கிறது.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeர wrote:
‘மருத்துவர்களுக்காவது என்ன மருந்து கொடுக்கிறோம் என்று தெரிந்தால் சரிதான்’ என்ற நிலை
வராமல் இருந்தால் சரி.

reply to this comment
21/07 05:05:30
ராம்கி wrote:
The above comment is from me. Due to some error before completing the name and url the page disappeared and coment came here as from ர
Ramki. http://stationbench.blogspot.com…

reply to this comment
21/07 05:09:49
சுந்தரவடிவேல் wrote:
பயனுள்ள பதிவு. நன்றி.

மருந்துகளைத் தவறாக உட்கொள்ளுதல் ஒருபுறமிருக்கட்டும். சரியாக உட்கொள்ளப் படும் மருந்துகளின் பக்க விளைவுகள் முற்றிலுமாக அறியப்படாமலும், அறியப் பட்டவை நோயாளிகளுக்குச் சரிவர விளக்கப் படாமலிருப்பதையும் அதிகமாகக் காணலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இங்கு நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்குமான உரையாடல்கள், விளக்கங்கள் இந்தியாவை விட விளக்கமாக இருப்பதாகவே எனக்குப் படுகிறது. உதாரணமாக, உங்களுக்கு இருக்கும் வியாதிக்கு இன்னின்ன மருந்துகளிருக்கின்றன, இவற்றிலே எது வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பது போன்ற மருத்துவரின் கேள்விகள் சற்றே நம்மை வியக்க வைக்கின்றன.

பொதுவாக இந்த அல்லோபதி மருந்துகளைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. உணவே மருந்து என்ற நம் ஆன்றோரின் மருத்துவ வழியையும் “மருந்தென வேண்டாவாம் ஆக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” போன்ற கோட்பாடுகளையும் மீண்டும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்!

reply to this comment
21/07 06:29:22
Padma Arvind wrote:
சுந்தரவடிவேல், ராம்கி
நன்றிகள். இப்போது அமெரிக்காவில் மருந்து பெயர்கள் மிக பெரிய வடிவத்தில் எழுதுவதும், போத்தல்கள் பிட்க்க வயதானோரின் கைக்கு எளிதாகவும், பல வித வண்ணங்களில் இருப்பதும் இந்த தவறை போக்க.
நுகர்வோரின் கவலைகளை வேறு யாரும் இந்த அளாவுக்கு எண்ணிப்பார்த்தார்களா என்று தெரியவில்லை.

19/07: மனித கழிவு- உலகின் முக்கிய பிரச்சினை
Jul 19th, 2005 by பத்மா அர்விந்த்

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா என்ற பாடலை கேட்கும் போதெல்லாம் கவலை இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்று தோன்றும். அது போல இந்தியாவில் நிறைய இடங்களுக்கு சென்றிருக்கிறேன் கல்கத்தா தவிர. நீங்கள் செல்வது கன்னியாகுமரியானாலும், பத்ரிநாத் போன்ற இமயமலை தலமானாலும் ஒரு ஒற்றுமை நிறைந்திருப்பதை காணலாம்.

நானும் என் அன்ணனும் ஒருமுறை கங்கை நதி ஓடும் பல இடங்களின் வழியே பத்ரி நாத் சென்றோம். தேவப்பிரயாக், ருத்திர்பிரயாக் ஜ்யோதிஷ்மட் என்று எங்கும் காவி உடை மனிதர்களும், முதியவர்களும் தான். ரிஷிகெஷ் போண்ற் ஐடங்களில் சற்றே இளவயதினரை பார்க்க முடிந்தது. தப்தகுண்டம் என்னும் சுடுதண்ணீர் குளத்தில் குளிக்க ஏக போட்டி. இது அடிப்படையில் கந்தக பாறியிலிருந்து நீர் வருவதால் எப்போதும் சூடாகவே தண்னீர் இருக்கிறது. இது போன்ற எல்லா புனித தலங்களிள், உல்லாசபயணிகள் வரும் இடம் என்று வித்தியாசமே பாராமல், காலியாக உள்ள இடத்தில் எல்லாம் மனித கழிவுகள்தான். பொதுவாகவே இந்தியாவில் வீட்டில் வரவேற்பு அறையில் சுத்தம் எதிர்பார்க்கும் பலர் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன் இந்தியா சென்றபோது திருவரங்க கோவில் சுற்றியுள்ள வீதிகளில் சிறுநீரும் மலமும் பார்க்க சகிக்கவில்லை. அடிப்படை வசதி கூட இல்லை என்று பழித்துரைக்கும் முன் யோசித்து பார்த்தால், இது உலகளாவிய பிரச்சினை என்பது புரியவரும்.

தண்ணீர்மூலம் பரவும் காலரா, அமீபிக் வயிற்றுபோக்கு போன்றவற்றிற்கும் இந்த கழிவுகள் நீரில் கலப்பதும், சரியாக கை கழுவாததும் காரணம். சமீபத்தில் அமெரிக்காவில் காரில் இருந்தே உணவு உண்ணும் பலர் கைகளை கழுவுவதில்லை என்று ஒரு மருத்துவ உலகு கவலை பட்டிருக்கிறது.
1970இல் இருந்து இது குறித்து ஆராய்ந்ததில் 20க்கும் மேற்பட்ட குறைந்த செலவு உள்ள கழிப்பிடங்கள் உருவாக்க பட்டுள்ளன.இதில்கிராமப்புறங்களுக்கு குறைந்த செலவுடன் நிர்வகிக்ககூடிய காற்றுபோகும் வழியுடன் கூடிய குழிகள் போன்ற லெட்ரின்கள் மிகவும் பரிந்துரை செய்யபடுகின்றன.நகர்ப்புறங்களுக்கு பூமிக்கு கீழேமூடிய கழிவு செல்லும் குழாயும் அதில் பேடப்படும் வேதிப்பொருட்கள் அவற்றை சிதத்து நீரை பிரித்து அதை வயலுக்கு பாய்ச்சும் முறையுடன் கூடிய கழிவுநீர் குழாய்களும் பரிந்துரைக்க பட்டன.

1980இல் முதன்முறையாக உலகில் உள்ள ஏழை மக்களுக்கு பயன்படும் வண்ணம் கழிப்பறைகள் உருவாக்க பட்டன.இதன் மூலம் ஏழை மக்களுக்கு நல்ல குடிநீர் தருவதும், கழிப்பறைகள் தருவதும் முக்கிய கடமையாக கொள்ள பட்டது

ஆசியா ஆ ப்பிரிக்கா போன்ற கண்டங்களில் உள்ள முக்கிய நகரங்களில் 1 மில்லியன் மக்கள் தொகை அதிகமாக உள்ள் நகரங்களில் கூட நல்ல கழிவு அகற்றும் திட்டம் இல்லை.அதேபோல 1996 வரைக்கும் கிடதட்ட 220 மில்லியன் மக்களுக்கு நல்ல சுத்தமான குடிநீர் இல்லை.உலகில் 2.4 பில்லியன் மக்கள் கழிப்பறை வசதி இன்றியும், 2.4 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் நீரினால் பரவும் வயிற்றுபோக்கினால் இறக்கிறார்கள் என்பதும் வருத்தமான செய்தி.
ஆசியாவில் 53% குறைவான மக்களுக்கே கழிப்பறை வசதிகள் உண்டு. இதில் கிட்டதட்ட 50% நவீன கழிப்பறையும் மற்ற 25% மனிதர்கள் வந்து மலம் எடுத்து சுத்தம் செய்யும் வகையிலும், இன்னும் 12% காற்று மூலம் அசுத்த காற்று நீங்கும் வசதி உடையது என்றும், மற்றைய 12% வெளியிடங்களில் ஒரு சுவர் மட்டுமே உள்ள இடமாகவும் உள்ளன.

சபர்மதி, மீரட் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் நீண்ட தொலைவு சென்ரு மறைவிடங்களை தேடவேண்டியிருக்கிறது என்றும், இதில் பெண்கள் மிக தொல்லை அனுபவப்பதும் இதற்காகவே அவ்ர்கல் இருட்டும் நேரத்தில் செல்வதும், அப்போது பாலியல் தொல்லைகளுக்கு உள்லாவதும் உலக சுகாதார மையத்தாஇயும், மனித உரிமைகள் நிறுவனத்தையும் யோசிக்க வைத்திருக்கிறது.

அமெரிகாவில் ஒவ்வொரு வீட்டின் அடியிலிருந்தும் கழிவு குழாய்கள் செல்கின்றன. இவை மாதம் ஒருமுறை சுத்தம் செய்ய படுகின்றன. நாம் தரும் வரியில் (கழிவு நீர் வரி) 1$க்கு 0.50$ இதை மேம்படுத்தவும், புதிய குழாய்கள் இணக்கவும் பயன்படுத்தபடுகின்றன. வீடுவரியிலிருந்தும் இதன் மேம்பாட்டிற்கு பணம் செலவழிக்க படுகிறது. இதில் நீர் பிரிக்க பட்டு இரண்டு முறை நீராவியாக்கி குளிரவைத்து பாசனத்திற்கு உபயோகிக்க் படுகிறது.

இதில் வேலை செய்பவர் இந்த நிறம் இனம் என ஒதுக்க படுவதில்லை. இளநிலை படித்தவர்களுக்கு தனி பயிற்சி தரப்படுகிறது. நல்ல ஊதியமும் தருவதால் பலர் இதி வேலை பார்க்கிறார்கள். இங்கே உள்ள தனிதன்மையில் இவர்களும் மற்றா எல்லோரைப்போல மதிக்க படுகிறார்கள். உதாரணமாக ஒரு மாவட்டத்தில் 690000 டன்/ஆண்டு கழிவு நீக்க பட்டால் அரசு 1 மில்லியன் $உம், வரியிலிருந்து 1 மில்லியனும் ஒதுக்க படுகிறது.

இங்கேயும் இன்னும் சில பகுதிகளில் செப்டிக் குளம் உண்டு.அவை 6 மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய பட்டு புதிய வேதிபொருட்கள் போடப்படுகிறது.
கீழே உள்ள அட்டவணை செலவு எவ்வளவு என்று பட்டியலிடுகிறது:
நீர்விட்டு flush செய்யும் வசதியுடன் கூடிய குழிகள் மட்டும்:150$/வீடு
காற்றின் மூலம் அசுத்த காற்று வெளியேற வழி உள்ள லெட்ரின்:180$/வீடு
ஆழம் குறைவான கழிவு நீர் குழாய்: 350$/வீடு
சிறிய துளை உள்ள கழிவு நீர் குழாய்: 500$/வீடு
செப்டிக் குளம்: 200-600$ (அளவை பொறுத்து)/வீடு
அதிக ஆழம் உள்ள கழிவுநீர் குழாய்(அதிகமாக இடங்களில் உள்ளது)
$1200/வீடு

மிகவும் அத்தியாவசியமான தேவையை உலகின் பல நாடுகளில் பூர்த்தி செய்யா நிலையில் நாம் எதை நினைத்து பெருமைப்பட?

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeஅல்வாசிட்டி.வி wrote:
முக்கிய பிரச்சனையை பேசுகிறது. அருமை.

reply to this comment
20/07 00:11:11
நாராயணன் wrote:
//ஆசியா ஆ ப்பிரிக்கா போன்ற கண்டங்களில் உள்ள முக்கிய நகரங்களில் 1 மில்லியன் மக்கள் தொகை அதிகமாக உள்ள் நகரங்களில் கூட நல்ல கழிவு அகற்றும் திட்டம் இல்லை.//

இதுப் பற்றிய நகரங்களின் ஒப்பீடை எழுதலாமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். நிறைவாக எழுதியிருக்கிறீர்கள்.

reply to this comment
20/07 00:24:09
Raj wrote:
Padma, Nice post. though i am not a participant i follow the posts regularly. only yesterday i was thinking about the toilet facilities in the schools in India. the problem is more in girl’s school where they also need to dispose the sanitary napkins. i think the conditions are deplorable in schools in india. there will be maximum of 6 toilets for the whole school where the student will number 1000 plus. half the time these toilets will be blocked with the napkins as the girls have no proper place to dispose them off. that was the condition when i was studying in late 80s. hope the situation has improved now.

reply to this comment
20/07 05:47:50
Ramya Nageswaran wrote:
அன்புள்ள பத்மா,

இது நிச்சயம் ஒரு விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனை.

இந்தியாவில் சுலப் toilets பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
http://www.sulabhinternational.org/pg05.htm…

இந்தியாவில் அரசாங்க பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதி இல்லாததால் adolescent வயதை அடைந்த பெண்கள் பள்ளிகளிருந்து நின்று விடுகிறார்கள் என்ற தகவல் மெதுவாக Govt காதுகளை எட்டி உள்ளது. அதற்கான ப்ரத்யேக திட்டங்கள் தீட்டி உள்ளதாக கேள்வி. நடைமுறைபடுத்தினார்களா என்று தெரியவில்லை.

reply to this comment
20/07 06:22:21
Padma Arvind wrote:
நன்றி வஜய். நாராயணன்: நீங்கள் இனும் சிறப்பாக எழுதி இருக்ககூடும்.நான் உங்களை Gangs பற்றிய பதிவிலே எதிர்பார்த்தேன். இந்தியாவில் இவை பற்றி எழுதுவீர்கள் என்று.
ராஜ்: நன்றிகள். பெண்களின் இந்த பிரச்சினையை இன்னும் தீவிரமாக எழுத எண்ணி இருக்கிறேன்.

reply to this comment
20/07 06:24:40
Padma Arvind wrote:
ரம்யா: இன்னமும் இல்லை. இதைவிட இன்னும் சில பதின்ம வயது பெண்கள் அவமானத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதும் தெரியவந்தது. விரிவாக எழுத உள்ளேன். தங்கள் சுட்டிக்கு நன்றி. படிக்கிறேன்.

reply to this comment
20/07 06:26:28
கி.பி.அன் wrote:
முக்கயமானதும் அவசியமானதுமான பிரச்சனை தொடப்பட்டுள்ளது. ஆனால் மேலோட்டமாக சொல்லப்பட்டுள்ளதோ என்று நினைக்கின்றேன்.
ஆசிய ஆபிக்க பிரச்சனை என்று அகலக்கால் வைக்காமல் இந்தியா, தமிழ்நாடு, சென்னை, வியாசர்பாடி என்று சுருங்கி வந்து யோசித்தால் நல்லது. டெல்லியில இருந்து சென்னை செல்லும் இரயிலில் பயணம் செய்தால் இந்தியாவின் குறுக்குவெட்டு முகத்தை காணலாம்.கிராமங்கள் கிராமத்து கோலங்கள. காலை நேரத்து கிராமத்தை இரயில் கடக்கும் போது கையில் செம்புடன் இரயில் பாதை யோராததில் நடந்து செல்லும் காட்சி இயற்கையானதா, இயல்பானமதா, தவிர்க்கமுடியாததா, கலாச்சாரமா என்று கேள்வியை எழுப்பினால் பதிலைக்காணலாம். தமிழ்நாட்டு நகரங்களை இணைக்கும் விரைவுப் பேருந்துகளில் (திருவள்ளுவர் போக்குவரத்து கழகம்) பயணம் செய்கையில நகரங்களை நெருங்குகை தெருமுக்குகளில் முகத்தை மூடியபடி மலங்கழிக்கும் மனித உருக்கள் சாதாரண காட்சியாக இருக்கும். தமிழ் நாட்டு சிறு நகரங்கள் கிராமங்களில் வீடுகளில் தங்க நோந்தால் காலையில் எழுந்து ‘வெளிக்கு போகலாம்’ வாங்க என்று அழைத்து சென்று ஆளுக்காள் உரையாடியடி மலங்கழிக்கும் காட்சிகள் நிகழ்வுகள் பழக்கமற்வர்களை கூசச் செய்பவை. ஆனால் இவை இயல்பானவை கலாச்சாரத்துடன் இணைந்தவை.
இன்னமும் நிறையவே இதைப்பற்றியே பேசலாம். எழுத்தாளர் பூமணியின் சிறுகதையொன்று ‘பீ’ என்னும் தலைப்பில் இந்த அனுபவம் பற்றி பேசுகின்றது. தலைப்பு சரியானதா நினைவில்லை. ‘கூட்டாம் பீ’ என்றும நினைவு.
இப்போது இது அல்ல பிரச்சனை ஏன் இந்தியாவில் தமிழ் நாட்டில் இதை ஒரு பிரச்சனையாகவோ அல்லது நாகரிகக் கேடாகவோ, சூழலியல் பிரச்சனையாகவோ, அல்லது சுகாராக் கேடாகவே கணிக்கப்படாமல் இருப்பது என்பதுதான். அல்லது இந்தியாவுக்கு வெளியே வாழ நேர்ந்ததனால்தான் எம்போன்றோருக்கு இவை பிரச்சனையாக தெரிகின்றதா? ஆனால் அக்கறை கொள்வோர் கவனத்தில் எடுப்பது நல்லதொன்றுதான். அது சரி நம் உடலின் உறுப்புகளில் ஒன்றான குண்டி பற்றி தமிழ் சமூகம் கொண்டுள்ள கருத்துநிலை என்ன?
புரிந்தால் இந்தப் பிரச்சனையின் ஆழங்கள் தென்படலாம்.

reply to this comment
20/07 07:10:05
Ramya Nageswaran wrote:
பத்மா,

அந்த linkன் கடைசியில் சில extra புள்ளிகள் சேர்ந்து விட்டதால் work பண்ணவில்லை. புள்ளிகள் இல்லாமல் paste செய்யவும்.

ஒரு related விஷயத்தைப் பற்றியும் எழுதலாம் என்று நினைத்தேன். சற்றே deviate செய்வதற்கு மன்னிக்கவும். என் பதிவில் GOONJ பற்றி எழுதியிருந்தேன் அல்லவா? அன்ஷு குப்தாவின் அடுத்த project பற்றி goodnewsindia.comல் வெளிவந்த தகவல் இதோ:

Goonj deserves your attention and support for this single product it makes: usable material is salvaged from the discards, long palm-wide, 2 feet long strips are readied, strings are tailored in, that can go around most Indian women’s waist and be tied. These are then washed ,folded and packed with care. India’s own sanitary napkins by the thousands are now ready for distribution.

reply to this comment
20/07 07:38:22
karthikramas wrote:
நிறைவாக எழுதியிருக்கிறீர்கள்.

reply to this comment
20/07 09:19:31
மயிலாடுதுறை சி wrote:
பத்மா
சமூக கண்ணோட்டம் உள்ள நிறைவான பதிவு.
இரண்டு மாதம் முன்பு தமிழகத்தில் இருந்த வந்த மாவட்ட ஆட்சியாளர் திருமதி சாந்த ஸீலா நாயர் இது சம்பந்தமாக நிறைய பேசினார்.
கிராமத்து பள்ளிகளிலும், கிராமத்து மக்கள் இடையே கழிவறைப் பற்றி விழிப்புணர்வும், வயதிற்கு வந்த பெண்கள் நாப்கின்களை சுகாதர முறைப்படி அகற்றுவதும், மிக மலிவான விலையில் அதனை தயாரிப்பதுப் பற்றியும் விரிவாக பேசினார். நேரம் கிடைக்கும் பொழுது தனி பதிவாக போடுகிறேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா…

reply to this comment
20/07 13:15:04
Padma Arvind wrote:
நன்றிகள் கி.பி.அன்: இது பெரிய பிரச்சினையாக தோன்றாதது எழைகளி அதிகம் பாதிப்பதால்தான். மற்றபடி கலாசாரத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. நமக்கு இவ்வளவுதான் என்று ஏற்று கொண்டுவிடும் மனம்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

reply to this comment
20/07 14:10:27
Padma Arvind wrote:
ரம்யா
இது நடக்க கூடியதுதான். நானே பஞ்சு வாங்கி தைத்திருகிறேன். தகவலுக்கு நன்றிகள்.கூஞ்சின் செய்கை பாராட்டுக்குரியது. ஏதேனும் பொருள் திரட்டி டஹ்ந்தால் இலவசமாக ஏழை பெண்கலுக்கு உதவுவார்களா என்று சொல்லுங்கள்.

reply to this comment
20/07 14:12:14
Padma Arvind wrote:
நன்றிகார்த்திக், சிவா. நானே எழுத எண்னி இருந்தேன். நீங்கள் எழுதுவது ஆணின் கண்ணோட்டத்தில் இன்னும் நன்றாக அமையும். உங்கள்பதிவை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

reply to this comment
20/07 14:13:41
இராதாகிருஷ்ணன༯a> wrote:
பலகாலமாக மண்டையைக் குடைந்து கொண்டிருந்த விஷயம் இது. பதிவில் கூட ஒருமுறை ஏதோ கொஞ்சம் எழுதிவைத்தேன்.
http://nradhak.blogspot.com/2004/08/blog-post.html…

//வீட்டில் வரவேற்பு அறையில் சுத்தம் எதிர்பார்க்கும் பலர் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன் இந்தியா சென்றபோது திருவரங்க கோவில் சுற்றியுள்ள வீதிகளில் சிறுநீரும் மலமும் பார்க்க சகிக்கவில்லை.// பெரும்பாலான இடங்களில் இதுதான் நிலைமை. பொருளாதாரப் பிரச்சனையைக் காட்டிலும் பழக்கவழக்கங்களில் உள்ள மெத்தனமே கழிப்பிட வசதியின்மைக்கு முக்கிய காரணமாகக் கருதுகிறேன்.

reply to this comment
20/07 16:53:16
Dondu wrote:
அரசு கட்டிடங்களில் பார்த்தால் (முக்கியமாக C.P.W.D. ஆல் கட்டப்பட்டவை) ஒன்று புலப்படும். டாயிலட்டுகளுக்கு வெளியில்தான் water coolers நிறுவப்படுகின்றன. மிகத்துரிதமாக அந்த கூலர்கள் உபயோகத்திலிருந்து விலகிவிடுகின்றன, ஏனெனில் அவ்வளவு நாற்றம். ஏன் அவ்வாறு அமைக்கிறார்கள் என்று கேட்டால் தண்ணீர் இணைப்பு குழாய்கள் நீளத்தைக் குறைக்க என்று குரைத்துக்கொண்டே கூறுகிறார்கள்.
நான் கேட்கிறேன்: கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கட்டிடம் கட்டுகிறீர்கள். செலவோடு செலவாக ஒரு சில மீட்டர்கள் அதிக நீளத்தில் தண்ணீர் இணைப்பு பைப்களை உபயோகப்படுத்தி கூலர்களை டாயிலட்டுக்கு தூரத்தில் நிறுவக்கூடாதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

reply to this comment
24/07 22:35:51
Aarokkiyam wrote:
காஞ்சி பெரியவர் கூட மத்திய சிறையில் கழிய ரொம்ப கஷ்டப்பட்டார். ஒழுங்கான கழிப்பறை இல்லாமல் “வாழை” இழையில் கழிந்து மனிதக்கழிவை புனிதக் கழிவாக்கினார்.மற்றவர்களின் கழிவாக இருந்தால் பரவாயில்லை! ஜகத்த்குருவல்லவா? அவனின் மலம் மண்ணில் வீழ்ந்தால் ஒரு துறவிக்கு ஏற்பட்ட அவமானத்தால் இந்த ஜகம் அழிய சாபமிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

19/07: கல்யாண உற்சவமும் கன்னி பெண்களும்
Jul 19th, 2005 by பத்மா அர்விந்த்

அறிவிப்பு: இது என்னுடைய கருத்து மட்டும்தானே தவிர இதுதான் சரி என்று சொல்வது என் நோக்கம் அல்ல. ஒரு மாற்றுவழியை முன்வைத்திருக்கிறேன் எனக்கு தெரிந்தவரையில்.
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கிலா
அலகிலா விளையாட்டுடையார் –அவர்
தலைவர் அன்னவர்க்கு சரண் நாங்களே என்றபடி ஒரு சக்தி என்னையும் அறியாமல் வழிநடத்துவதாக எ ன க்கு நம்பிக்கை உண்டு. அதுவும் புகுமுக வகுப்பில் முழுசதவிகிதம் மதிப்பெண் எடுத்தும், அவளை பொறியியல் படிக்க வைக்க முடியாத நிலை இருந்தபோது, அப்படி இளநிலை படித்தால் இயற்பியல் தவிர்த்து வேறெதுவும் படிக்க மாட்டேன் என்று சொல்லி அரசினர் ஆடவர் கல்லூரியில் சேர்ந்து படித்து பின் அவளுடைய விருப்பப்படியே பொறியியலும் படித்து, பின் ஐ.ஐ.டியில் மேல்படிப்பும் படிப்பார் என்றும் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆடவர் கல்லூரியில் இயற்பியல் படிக்க 10 பெண்களாவது வந்தால் தான் முடியும் என்று நிர்வாகத்திஅனர் சொல்லிவிட்டபடியால்,அதுவும் 10 பெண்கள் இயற்பியல் படிக்க சேர்க்கும் வரை கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.. உயிர் வேதியியல் படிக்கும் போது மனித உடல் என்னை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. ஒவ்வொரு நேர்மறை அயான் சேரும் போது அதை உடலின் அமில – கார நிலை எவ்வாறு சரிசமமாக்கப்படுகிறது என்று. இதையெல்லாம் ஒழுங்குமுறையாக இருக்க இயற்கையின் திறன் முக்கியம். அந்த இயற்கையே எனக்கு இறைவனாகிறான். ஆனாலும் சிறுவயதில் கற்ற தமிழ், வடமொழி பாடல்கள் அனிச்சையாக மனதிற்குள் வந்து போகும் ஒவ்வொருமுறை செயல் துவங்கும் முன்னும்.

சிறுவயதில், 5 ஆம் வகுப்பு வரை வைத்திஸ்வரன் கோவிலில் இருந்தோம். அப்போது சன்னிதியின் வாசலில் உள்ள தபால் தந்தி அலுவலகத்தில் என் தந்தை அதிகாரியாக (Post Master)இருந்தார். கிருத்திகை அன்று கோவிலுக்கு கூட்டமாய் வரும் பெரும்பாலார், தங்கும் இடத்திற்கு பணம் செலுத்த வசதி இல்லாதவர்கள் உள்ளே நுழைந்து பைகளை வைத்துவிட்டு விட்டு, கோவிலுக்கு போவார்கள். அவர்களை எங்கள் வீட்டிலேயே குளிக்க சொல்லி, குழந்தைகளுக்கு உணவு அளிப்பதும் வழக்கமாக இருந்தது.
கோவிலில் வள்ளி தெய்வானை திருமணங்கள் சிறப்பாக நடக்கும். இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு அந்த கதைகள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அ ளவிலேயே நடக்கும். நான் சென்று நாள் முழுதும் கோவிலில் இருந்து கவனித்திருக்கிறேன்.
என் அக்கா நைஜீரியா செல்லும் முன் திருப்பதி செல்ல விரும்பியதால், நாங்கள் அனைவரும் முதல் முறையாக திருப்பதி சென்றோம். மலையே இறைவனாக மிக அழக்கான மரங்களும் மலைகளும் மனதில் இன்னும் நிறந்திருகிறது. ஆனால் அங்கே தர்ம தரிசன வரிசையில் எத்தனை நேரமாகும் என்று தெரியாமல் மாட்டி கொண்டு 12 மணிநேரம் நெரிசலில் சிக்கி நின்ற போது, அழும் குழந்தைகளும் வரிசையில் இருந்து மீள முடியாமல் வழியிலேயே மலம் கழிக்கும் சிறுவர்களுமாய் வெளியேறினால் போதும் என்று தோன்றிவிட்டது. அப்போதைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி வந்ததாலும், தர்ம தரிசன் வரிசை கதவ்டைப்பு செய்ய பட்டது. குழந்தைகளும் சிறுவர்களையும் அழைத்து வந்து பசியுடன் 12 மணி நேரம் நின்றிருந்த ஏழைகளுக்கு இறைவைன் தரிசனம் கிடைக்க வில்லை.
இப்போதெல்லாம் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய முடியும் என்றாலும் திருப்பதி செல்வதே இல்லை. ஒருவகையில் முதலில் சென்ற அந்த பயணம் எங்களுக்கு ஒரு பாடமாக இருந்தது என்று சொல்லலாம். ஒவ்வொருவராய் வேலைக்கு போக ஆரம்பித்த போதும் கோவிலுக்கு பாலும் பழமும் கொண்டு அர்ச்சனை செய்யததே இல்லை. மாதம் ஒருமுறை கோவில் வாசலில் உள்ள பிச்சைக்காரர்களுக்கோ அனாதை விடுதிகளுக்கோ உணவு வழங்கும் வழக்கம் மட்டும் இருகிறது.

கடவுளுக்கு கல்யாண உற்சவம் செய்வதும், ஒப்பிலியப்பன் கோவிலில் யாரோ ஒரு பக்தர் நவரத்தின கிரீடம் வைர முடி போன்றவை தந்ததும் என்னை பொறுத்தவரையில் இறைவனுக்கு உகந்ததாய் இருக்க முடியாது.
ஆனாலும் என் திருமணத்திற்கு பின் என் கணவன் வீட்டில் திருப்பதி சென்று கல்யாண உற்சவம் செய்ய வேண்டும் என்று சொன்னது 14 வருடங்களாக ஒத்திவைப்பில் இருக்கிறது. இபோது பக்தர்களின் வசதியின் பொருட்டு பல இடங்களில் கல்யாண உற்சவம் செய்யும் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. முன்நாளில் பங்குனி உத்திரம் அன்று பட்டும் நடந்த கல்யாண உற்சவம் இப்போது எப்போது வேண்டுமானுலும் முடியும். இதைகூட என்னால் ஒப்புக்கொள்ளமுடிவதில்லை.

சமீபத்தில் என் கண்வர் வீட்டினர் வழிபடும் கோவிலில் பெருமாளுக்கு தங்க கசம் செய்ய பணம் திரட்டிய போதும் எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. பள்ளிக்கு செல்ல கூட முடியாத நிலையில், மாற்றி போட்டுக்கொள்ளாத நிலையில் இருக்கும் பெண்கள், சிறுவர்கள், ஆண்களுக்கு கைத்தறி உடை கூட இல்லை. நான் தானமும் தர்மும் கூடாது என்று சொல்லவில்லை. தேவைபடும் இடத்து தக்க உதவிகள் செய்ய வேண்டும்.
படமாடும் கோவில் பகவற்கொன்றீயில்
நடமாடும் கோவில் நம்பற்கங்காகா
நடமாடும் கோவில் நம்பற்கொன்றீயில்
படமாடும் கோவில் பகவற்கதாமே.

நான் நகர உயர்நிலை பள்ளியில் படித்த காலம் 10 வகுப்பிற்கு மேல் பெண்கள் தாவணி அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. என் வீட்டில் அம்மவிடம் புடவைகளே அதிகம் இல்லாத நிலையில் தாவணிக்கு எங்ஏ போக? மூத்த சகோதரியின் நைந்து பழசாகிப்போன ஒரு புடவை கிழிக்க ப்ட்டு நாங்கள் இரு சகோதரிகளும் பெற்று கொள்வோம். இக்கலிங்கம் போனால் என்ன ஏகலிங்க மாமதுரை சொக்கலிங்கம் உண்டே துணை என்பது போல அதுவே பள்ளி முடியும் வரை கூட வரும். பிறகு கல்லூரி சென்ற போது கைத்தறி புடவை இல்லாமல் வேதியியல் செய்முறை வகுப்புக்களில் வெளியேற்ற பட்டிருக்கிறேன். வகுப்பின் வெளியே 3 மணி நேரம் நிற்பது அவஸ்தையானது. எப்போதாவது எனக்கும் வசதி வந்தால் இந்நிலை மாற முயற்சிக்க வேண்டும் என்று நினைத்து கொள்வேன். அதன்படி ஒரு காப்பிக்காகும் செல்வை தனியாக எடுத்து வைத்து வருட முடிவில் நகர உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியரிடம் தருமாறு என் சகோதரனிடம் சொல்ல அவனும் அதை போல இன்னும் சிறிது பணம் போட்டு அவரிடம் கொடுப்பதும் வழக்கமாகி போனது. அந்த பணத்தை வங்கியில் போட்டு வைத்து வரும் வட்டியில் சில மாணவிகளுக்கு சீருடை புத்தகங்கள் வாங்கி தருவதும், ஆதை பெற்ரு கொள்ளும் மாணவிகள் எனக்கு கடிதம் எழுதுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை தந்து
பிறர் உயர உழைத்திருக்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்பேன்
அந்த சிரிப்பினில் இறைவனை நான் பார்ப்பேன் என்பதிலும் உண்மை இருக்கிறது.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madekarupy wrote:
பத்மா நல்ல ஒரு கட்டுரை. தங்களுக்கு இருக்கும் சிறு நம்பிக்கை கூட எனக்கு இல்லை. இறைவன் என்று ஒன்றை வணங்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாதவள் நான். தாங்கள் சொல்வது போல் ஏழைகளுக்கு உதவுதல்தான் மனதிற்கு கொஞ்சமேனும் நிம்மதியைத் தரும். ஆனால் ஜெயமோகனின் “ஏழாம் உலகம்” படித்த பின்பு அதிலிருக்கும் நம்பிக்கையும் போய் விட்டது. எல்லாமே வியாபாரமாகிவிட்ட நிலையில் எதிலும் நம்பிக்கை அற்ற தன்மையே எஞ்சி நிற்கின்றது.

reply to this comment
19/07 10:19:43
வன்னியன் wrote:
சிறப்பான பதிவு.
என்னைக்கேட்டால் கோயிலுக்கான தான தர்மங்கள் எதிர்க்கப்பட வேண்டியவையே என்பது என்கருத்து. இது நான் சார்ந்த ஈழத்தின் சிக்கல்களோடு பார்க்கிறேன். இன்னும் மக்கள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களின்; கோயில்களுக்குத் தேர் செய்ய இலட்சக்கணக்கிற் பணம் திரட்டப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கில் வீடுவாசலின்றி மக்கள் அவதிப்படுகையில், படிக்க பாடசாலைக்கட்டடங்களே இல்லாத நிலையில் கோயில்களுக்கு இறைக்கப்படும் பணம் வயிற்றெரிச்சலைத்தான் தருகிறது.
அதுமட்டுமன்றி, இன்னும் சாதித்தடிப்பையும் பரம்பரைச் செருக்கையும் வெளிக்காட்டவும் கோயில்த் திருவிழாக்கள் தான் வடிகாலாயிருக்கின்றன.

reply to this comment
19/07 10:24:02
வன்னியன் wrote:
அடடே கறுப்பி!
இன்னும் இதுக்குள்ளதான் சுத்திக்கொண்டிருக்கிறியளோ?

reply to this comment
19/07 10:41:03
karthikramas wrote:
நட்சத்திரத்துக்கு வாழ்த்து.

reply to this comment
19/07 10:55:17
karupy wrote:
ஆமாம் வன்னியன் இன்னும் இங்குதான் சுத்திக்கொண்டிருக்கின்றேன். அனேகமாக வியாழக்கிழமையோடு மின்கணனி இடம்மாறிவிடும் என்று நினைக்கின்றேன். வெள்ளியோடு வேலை முடிகின்றது. வலைப்பதிவுகளை பார்வையிடுவேன். முக்கியமானது என்று படும்போது பின்னூட்டமிடுவேன். அவ்வளவே.

காதிர்காமஸ் அவ்ளோதானா?

reply to this comment
19/07 11:05:21
Mathy Kandasamy wrote:
மிகவும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் பத்மா.

இங்கே கோவில்களில் ஒவ்வொரு மாதமும் உண்டியலில் குறைந்தது பத்தாயிரம் டாலர் சேரும் என்ற செய்தியும்,

திருவிழாவுக்கு ஒவ்வொரு நாளும் நாப்பதாயிரம் வரை திரட்டி குழுக்களாகச் சேர்ந்து பொறுப்பேற்றுச் செய்கிறார்கள் என்ற செய்தியும் சமீபத்தில் கிடைத்தது.

பணத்தை, உற்றார் உறவினர் இல்லாத அனாதைக்குழந்தைகளுக்குச் செலவு செய்யவும், புதுத் தொழில்களைத் தொடங்கவும் நினைக்கும் உறவினர்கூட, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றபடி பணத்தைக் கொடுக்கிறார்கள்.

அடுத்த வார இறுதியில் Val Morin முருகன் கோயில் தேர். பத்தாயிரக் கணக்கான வாகனங்கள் முற்றுகயை¢டும்.

நீங்கள் சொல்வதை, இங்கே எவ்வளவோ சொல்லிப் பார்த்திருக்கிறேன். ம்கும் பலனில்லை.
-மதி

reply to this comment
19/07 12:43:23
Mookku Sundar wrote:
அருமையான சிந்தனை.

பிறருக்கு கெடுதல் நினைக்காமல், முடிந்தவரை நல்லவர்களாக இருந்தாலே போதும்.கடவுள் என்றாலே கடந்தும், உள்ளும் இருப்பவன் என்ற பொருளில் நாம் “உள்” ளையே மறந்து விட்டோம்.

சந்தனக்காப்பு அலங்காரமும், பஞ்சாமிர்த/பால்/பன்னீர் அபிஷேக அட்டகாசங்களும் கடவுளா கேட்கிறார்..??

தமிழ்நாட்டில் ஆத்திகம், நாத்திகம் என்று எல்லாமே – பிழைப்புதான்.

reply to this comment
19/07 13:26:54
ராம்கி wrote:
நட்சத்திரப் பதிவு.
சிறு வயதில் நன்றாகத் தமிழ் கற்றிருக்கிறீர்கள். அதுவும் ஆன்மீகத் தமிழ்..
உங்கள் எழுத்து படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. எந்தவித தத்துவ முலாமும் இன்றி போலி சவடால்கள் இன்றி வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பதிவுகள் வருவதால் சிறப்பாக இருக்கின்றன.
ராம்கி (ரஜினி ராம்கி அல்ல)
ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கி.
எலிக்குட்டியை எங்கும் வைத்துப் பார்க்கும் அவசியம் இல்லை.

reply to this comment
19/07 13:47:04
Snegethy wrote:
அண்மையில் ஆதி பராசக்தி படம் பாரத்தேன்.அதில் ஒரு காட்சியில் அம்மனுக்கு பலகாரங்கள் எல்லாம் செய்து படைத்துவிட்டு யாகம் செய்துவிட்டு முனிவர்கள் எல்லாம் இருந்து படையலை சாப்பிடுவார்கள் அம்மனோ ஒரு மீனவன் வீட்டுக்குச் சென்று பழைய கஞ்சி குடிப்பா.

கோயிலுக்கு பளிங்குக்கல் பதிக்க ஒரு சதுர அடிக்கு $25 கொடுக்கிற நேரம் சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகளைப் புனரமைக்க 3000 ரூபா கொடுப்பது எவ்வளவோ மேல்.

reply to this comment
19/07 13:58:58
இராதாகிருஷ்ணன༯a> wrote:
நட்சத்திரப் பதிவுக்கு வாழ்த்துகள்!

reply to this comment
19/07 16:15:52
துளசி கோபால் wrote:
நல்ல பதிவு பத்மா.

reply to this comment
19/07 18:11:27
Padma Arvind wrote:
கருப்பி:
ஏழைகளுக்கு உதவும்போதும் திகட்டதிகட்ட செய்தால், இருப்பதால் தான் கொடுக்கிறார்கள் என்று குறை சொல்ல நேரிடும். சுனாமியில் தூக்கி எறியப்பட்டவை பற்றி படித்தேன்.

reply to this comment
19/07 18:29:24
Padma Arvind wrote:
நன்றி வன்னியன்.நீங்கள் சொல்வதைப்போல அவர் எவ்வளவு செய்திருக்கிறார். நீ ஏன் செய்யவில்லை என்று சொல்வதையும் செருக்கை காட்டி புடவை சார்த்துவதையும் பார்த்திருக்கிறேன். பக்தி இதுவல்ல

reply to this comment
19/07 18:30:45
Padma Arvind wrote:
நன்றி மதி, சுந்தர்: கோவிலுக்கு புடவை வாங்கி தா குறைகள் அகலும் என்று பரிகாரம் சொல்லும்வரை மக்கள் நிறுத்தப்போவதில்லை.

reply to this comment
19/07 18:31:46
Padma Arvind wrote:
சினேகிதி, கார்த்திக், துளசி, இராதாகிருஷ்னன்
நன்றிகள்.பாராட்டுக்களுக்கு நன்றி ராம்கி. நான் உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன். station bench என்ற பெயரே அழகாக் இருக்கிறது

reply to this comment
19/07 18:33:39
sarah wrote:
நல்ல சிந்தனை பத்மா

இதனைப் படித்தபின்

“மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெருங்கதைகள் சேர்த்துப் – பல
கள்ளமதங்கள் பரப்புதற் கோர்முறை
காட்டவும் வல்லீரோ?”

ஆவியினுள்ளும் அறிவினிடையிளும்
அன்பை வளர்த்திடுவோம்”

என்ற பாரதியின் வரிகளோடு கூடிய சிந்தனையும் வந்தது.

மிக்க நன்றி பத்மா உங்களது அனுபவம் சார்ந்த உண்மைகளுக்கும், அதனை உரக்கக் கூறும் திறனுக்கும்.

சாரா

reply to this comment
19/07 20:38:44
மூர்த்தி wrote:
மிக நல்ல பதிவு பத்மா அவர்களே…

மனதைப் பாதித்தது நீங்கள் பகிர்ந்துகொண்ட இக்கட்டுரை. யோசிக்கவும் வைத்தது.

reply to this comment
19/07 20:39:45
Arun wrote:
நெஞ்சைத் தொடும் பதிவு. குடியரசுத் தலைவர், பிரதமர் என்று பலரால் பாராட்டப்பெற்ற தாங்கள், எப்படி படிப்படியாக படிக்கக் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது.

- அருண் வைத்யநாதன்

reply to this comment
19/07 23:11:05
mugamoodi wrote:
// Snegethy wrote: கோயிலுக்கு பளிங்குக்கல் பதிக்க ஒரு சதுர அடிக்கு $25 கொடுக்கிற நேரம் சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகளைப் புனரமைக்க 3000 ரூபா கொடுப்பது எவ்வளவோ மேல். //

அது எப்படி மேலாகும்.. எனக்கென்னவோ ரெண்டும் ஒன்று போலவே தெரிகிறது. உங்களுக்கு மாவீரர் மேலிருக்கும் கல் பெரியது, மற்றவருக்கு கல்லுக்குள் இருக்கும் கடவுள் பெரியது…

நான் இவ்வருடம் வரை காபிக்காகும் செலவை நான் படித்த உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு – பள்ளிக்கு அல்ல – தரலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்…

reply to this comment
19/07 23:33:28
mugamoodi wrote:
// இவ்வருடம் வரை // இவ்வருடம் முதல்

reply to this comment
19/07 23:34:21
அல்வாசிட்டி.வி wrote:
ஆகா! இந்த வார நட்சத்திரமா நீங்க. நான் கவனிக்கவே இல்லை பாருங்க. முதலில் வாழ்த்துக்கள்.

இந்த கட்டுரையைப் பற்றி:

பக்தி என்ற மாயையும் மீறி பொதுநலனில் அக்கறைக் கொண்டோர் கொஞ்சமாவது இதைப் பற்றி யோசிப்பதுண்டு. இதை ஒட்டிய பதிவு எழுத நினைத்து தள்ளி போய் கொண்டேயிருக்கிறது. ஆனால் நீங்கள் ரொம்ப எஃப்க்டிவாகவே எழுதியுள்ளீர்கள். “வாசிப்போம் சிங்கப்பூர்” இயக்கத்தின் வாயிலாக மறைந்த சிங்கப்பூர் எழுத்தாளர் நா.கோவிந்தசாமி அவர்களின் “வேள்வி” நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நாவல் நீங்கள் சொல்லும் இந்த கருத்தை வலியுறுத்துகிறது. சிங்கப்பூர் சுழலுக்காக இந்த கதை எழுதப்பட்டிருந்தாலும் எங்கும் இது பொருந்துமென நினைக்கிறேன்.

சிங்கப்பூரில் இந்திய கோவில்களைப் பற்றி படிப்புக்காக ஆராய்ச்சியை மேற்கொள்கிறான் ஒரு தமிழ் இளைஞன். அளவுக்கதிகமாக கோவில்களுக்கு இருக்கும் சொத்து எதற்கும் பயன்படாமல் இன்னொரு கோவிலுக்கு போட்டியாக கோவிலை அலங்கரிப்பதிலே செல்வழிக்கிறார்கள். ஆராய்ச்சி மாணவன் ஏன் அந்த பணத்தை சமுதாய முன்னேற்றத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்று கேட்டதற்கு “சாமி குத்தம்” அது இதுவென பழமை பேசுகிறார்கள். அவனை ஒதுக்குகிறார்கள். அவனது போராட்டம் பற்றி பேசும் கதை அது.

இந்த பதிவை படிக்கும் போது அந்த நாவல் தான் ஞாபகம் வந்தது

reply to this comment
20/07 00:03:34
Ramesh wrote:
Nalla Pathivu. I also felt the same thing 2 days back when I read in newspaper that Ilayaraja Donated 27 lakhs worth ornamant to Mookambigai temple.

1 crore loan irukunnu ooorula irukira thamizhar ellam avar pannina CDya vanga solli kettavaru intha panathai avara sponser pannina org.kkukku kudithiruntharnna, innum neraiya athma thirupthi kedaichirukkum

reply to this comment
20/07 00:17:16
mugamoodi wrote:
சூப்பர்….. தல சூப்பர்…. நல்ல பதிவு…. ஜமாய்ச்சுட்டீங்க….

இந்த பின்னூட்டத்தின் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. அது இங்கே இந்த பதிவில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கசுமாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்…

உங்கள் பதிவை திசை திருப்பும் எண்ணம் இல்லை… இது ஒரு ஜாலி முயற்சி அவ்வளவே… தயவு செய்து இந்த ஒரு முறை பொருத்துக்கோங்க…

reply to this comment
20/07 01:00:45
NONO wrote:
நல்ல பதிவு! சிந்திக்கவேண்டியது! ஆனால் காணிக்கை செலுத்துபவர்களை குறைகூற எனக்கு அருகதையில்லை! நான் செய்யும் “ஊதாரிச்” செலவை பார்கையில் (உ+ம்: நான் புகைக்கும் சிகரட்டின் விலை மாதம் இந்திய மதிப்பின்படி 6 502 ரூபாய், ஒருவருடம் 6502*12= 78 ஆயிரத்து 24 ரூபாய் ) அவர்கள் கானிக்கை அளிப்பது ஒன்றும் பெரிய தவறாய் எனக்கு தெரியவில்லை ஆத்தம திருத்திக்காக அப்பிடி காணிக்கை அளிக்கிறார்கள்!

“நான் இவ்வருடம் வரை காபிக்காகும் செலவை நான் படித்த உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு -
பள்ளிக்கு அல்ல – தரலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்…”
நானும் இவ் யோசனையை பின்பற்ற முயற்சி செய்கிறேன்….. காப்கிச் செலவை அல்ல.. புகைத்தல் செலவை!!!!

reply to this comment
20/07 09:54:35
kumaraess wrote:
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்,

படமாடும் கோவில் பகவற்கொன்றீயில்
நடமாடும் கோவில் நம்பற்கங்காகா
நடமாடும் கோவில் நம்பற்கொன்றீயில்
படமாடும் கோவில் பகவற்கதாமே.

சிறு வயதில் பாடசாலை சைவசமய பாடத்தில் படித்தது, வரிகள் மறந்துபோய்விட்டாலும், பொருளை மறக்காமல் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லலாம் செயல்ப்படுத்திக்கொண்டிருக்கிறேன். முடிந்தால் இந்த செயுள் தொடர்பான மேலதிக தகவல்களை தந்து உதவவும்.

reply to this comment
20/07 11:00:25
Padma Arvind wrote:
சாரா: தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. நான் இன்னும் முழுமையாக பாரதியை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அருண், மூர்த்தி: மிக்க நன்றி.
முகமூடி: உங்கள் எண்ணம் முழுமையாக வாழ்த்துக்கள்.
விஜய்: வாழ்த்துக்களுக்கு நன்றி. நான் வேள்வி புத்தகம் கிடைத்தால் படிக்கிறேன். இதுபோல படிக்க வேண்டிய பட்டியல் உங்களை போன்றோர்களால் அதிகரித்துக்கொண்டே போகிறது.
ரமேஷ்: நானும் வைரக்கற்கள் மூகாம்பிகைக்கு தந்ததை படித்தேன். இவர்கள் கண்ணில் ஏனோ தற்கொலை வரை போகிற சக தொழிலாளிகள் படுவதே இல்லை என புரியவில்லை.
நோநோ: மிக்க மகிழ்ச்சி. தீர்மானம் நிறைவேற வாழ்த்துக்கள்.
குமரேஸ்: நானும் சிறுவயதில் படித்த பாடல். இது திருமந்திரத்திலிருந்து வருகிறது என்று நினைக்கிறேன்.

reply to this comment
20/07 11:18:16
kk wrote:
Yes, it is from thirumanthiram

reply to this comment
20/07 11:20:14
Thangamani wrote:
//நானும் வைரக்கற்கள் மூகாம்பிகைக்கு தந்ததை படித்தேன். இவர்கள் கண்ணில் ஏனோ தற்கொலை வரை போகிற சக தொழிலாளிகள் படுவதே இல்லை என புரியவில்லை//

பத்மா, பின்னூட்டமிட நேரமில்லை, ஆனால் உங்கள் பதிவின் முக்கியத்துவமும் நேர்மையும் என்னை நன்றியுணர்வில் நெகிழ்த்துகின்றன.

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள த்ஹ்ருமங்கள் யாவும்
பெயர் விளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

-பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன.

நன்றிகள்!

reply to this comment
20/07 18:35:31
Jayashree Abdul Malick wrote:
Madam,
Well written article. Somehow my parents had the same thought like you and I had never seen them spending money on such donations, abishekams to temples instead they used to get books to the needy childrens (my father & mother used to daily poojas and observe all fastings). Moreover, these highlighted thoughts in your article not only will help the needy people, but also help in reducing the religious fanaticism and encourage to accept all religions.

reply to this comment

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions