சிறுவயதில் பள்ளியில் படித்த கதை ஒன்று நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு திருடன் சுவறேறி குதித்து ஒரு செல்வந்தர் வீடிட்ற்கு செல்கிறான். உண்ண உணவு தரும் செல்வந்தர் அங்கேயே தங்க இடமும் கொடுக்கிறார். இரவில் வெள்ளி தட்டை எடுத்து கொண்டு புறக்கடை கதவை திறந்து வெளியேறும் அவனிடம் குத்து விளக்குகளை தந்து இதையும் எடுத்து கொண்டு போ என்று சொல்லி உண்மையை விளக்குகிறார்.
உண்ண உணவும் இருக்க இடமும் முதலில் தேவையாய் இருக்கிறது. அதன்பின் வசதிகள் பெருக பெருக மேலும் வேண்டும் என்ற ஆசை பேராசையாக வளர்ந்து மனிதனின் அழிவுக்கே காரணம் ஆகிறது.இன்று பலருக்கு எது தேவை, எது ஆசை என்ற வித்தியாசம் புரிவதில்லை. இதைவிட தங்கள் குழந்தைகளுக்கும் ஆ சையை உடனே பூர்த்தி செய்துவிடும் இவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்வதில்லை. ஒருவேளை பொருளாதார நிலை மாறினால், கேட்டதை உடனே பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள் அதை எப்படி புரிந்து கொள்ளும் என்பதும், உடனே கிடைக்கும் என்பது ஒருவித பொறுமையின்மையை வளர்க்கும் என்பதும் சிந்தித்து பார்ப்பதில்லை.
குழந்தை முதல் பெரியவர் வரை ஒருவிதத்தில் peer pressure என்னும் கட்டுக்குள் சொல்கிறோம்.சமுதாய அல்லது நண்பர்கள் குழுவில் நமக்கு அங்கீகாரம் கிடப்பது முக்கியமாக படுகிறது. இதனால் போட்டியும், பொருள் வாங்கி குவிப்பதும் இந்த சமுதாயத்தில் பல துன்பங்களை கொண்டுவருகிறது.
இதனால் பொருள் ஒரிடத்தில் அளவுக்கு மீறி இருப்பதும், இன்னொரு இடத்தில் பற்றாக்குறையும் வருகிறது. பொருளின் அருமை அதை பயன் படுத்தும் விதத்தில் இருக்கிறது. ஒருவர் எத்தனை புடவைகள் அல்லது நகைகள் இருக்கிறது என்பதை கொண்டு அளாவிடப்படுவதில்லை. அப்படி அளவிட்டால் மதிப்பு அந்த பொருளுக்குத்தானே ஒழிய நமக்கில்லை.சமூகத்தில் இருந்து நாம் பலவற்றை பெற்று கொள்கிறோம். ஆனால் ஒருபோதும் திருப்பி ஒரு சிலவற்றையாவது கொடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.
எனக்கும் நகைகளுக்கும் வெகு தூரம். அதேபோல உடைகளுக்கும். படிக்கும் போது நகைகள் அணிய என்னிடம் அவை இருக்க வில்லை. இப்போது அவற்றை வாங்கி அணிவதில் விருப்பம் இல்லை. எப்போதாவது இந்தியாவில் அதுவும் என் கணவரின் வீட்டிற்கு போகும் போது ஒன்று என் பெட்டியில் வரும். பெரும்பாலான சமயம் பூட்டியே வைக்கும் இவற்றிற்கு மதிப்பு என்னை பொறுத்தவரை எதுவும் இல்லை. ஒரு நாள் மதியம் வீட்டிற்கு வந்த பெரியவர் ஒருவர் வருத்தமாய் அவரது பெண்ணின் திருமணாம் நின்றுவிடும், கையில் நகை வாங்க பணம் இல்லை என்றும், பிள்ளை வீட்டில் அடிப்படை அளவிற்காவது ஒரு செயினும் வளையலுமாவது வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள், என்ன செய்வேன். பெண்ணும் கல்லூரி படிப்பை தாண்டாமல் வீட்டிலேயே இருந்து பொழுதை போக்கி வருந்துவதும், பல வரன்கள் இப்படியே தடைபடுவதாகவும் சொல்லி அழுத போது என் தந்தையின் நினைவு தான் எனக்கு வந்தது. ஆனால் ஒன்று அவர் எதற்கும் கலங்கியதில்லை.
பெரும்பாலான நேரம் நான் எதுவும் பேசுவதில்லை. நான் சொல்கின்ற எதற்குமே அங்கே மதிப்பில்லை என்பதாலும் நான் ஒரு வகையில் ஜடமென்றும் எண்ணுபவர்களை மாற்ற நான் நினைப்பதும் இல்லை. நினைப்பது அவர்களின் உரிமை என்பதால். ஆனால் இந்த முறை அந்த பெரியவரிடம் என்னிடம் இருந்த நகைகளை கொடுத்து விட்டேன். அவர் என்னை நாராயணனே என் வடிவில் வந்ததாக சொன்னாலும், அதீத உணர்ச்சி வசப்படல் நம் வழக்கம் என்று நினைக்கிறேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு என் அதிக பிரசங்கித்தனம் அடுத்தவர்களால் விசாரிக்க பட்டாலும் என் அளாவில் நான் செய்தது சரியே. இப்போது சொல்லுங்கள், பூட்டிவைத்த நகைக்கு மதிப்பு அதிகமா, ஒரு ஏழை தந்தையின் கவலையை போக்கிய நகைக்கு மதிப்பு அதிகமா?
ஏற்கெனவே வாங்கிய ஸ்கூட்டர், கைனடிக் ஹோண்டா போன்றவற்றை என் சகோதரர்கள் அயல் நாடு சென்ற போது புதிதாக திருமணம் ஆகி வாழ்க்கையை துவக்குபவருக்கு கொடுத்து விட்டார்கள். இதில் தான் நாம் sunk cost பற்றி யோசிக்க வேண்டும். ஏற்கெனவே வாங்கிவிட்டதால்,சில வருடம் உபயோகிக்கவும் செய்த ஒன்றை அதை விற்பதால் வரும் பணம் நம் வாழ்க்கையின் தரத்தை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்த போவதில்லை. புதிதாக வாங்க இன்னொருவர் அதுவும் பொருளாதாரத்தில் நம்மை விட கீழான நிலையில் உள்ளவர் கடன், வட்டி என சுமக்கும் பாரம் அதிகம், என்றால் ஏன் உதவக்கூடாது? தண்ணீர் தாகம் எடுத்து உயிரே போய்விடும் என்ற நிலையில் தவிக்கும் போது, ஒரு பாட்டில் தண்ணீர் 1000ரூபாய் என்றாலும் வாங்குவோம்.
சிலர் தங்களின் $3000 பெறுமான கார்களை புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு தந்து உதவி இருக்கிறார்கள்.இன்னும் சிலர் தங்கள் கணிணிகளை தந்து உதவி இருக்கிறார்கள். இதை படிக்கும் உங்களில் சிலர் இது போல பழைய கணிணி, செல்போன், இன்னும் உப்யோகிக்காத தொலைகாட்சி பெட்டி இருந்தால், குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள் இவை இருப்பின் தயவு செய்து குழந்தைகள் இருக்கும் விடுதிக்கு தந்து உதவுங்கள். ஒரு சிறுவனின் மகிழ்ச்சி நிறைந்த கண்கள் கோடி ரூபாய் சேர்த்தற்கு சமம். இந்த சிறு உதவி நம் வாழ்க்கை தரத்தை குறைக்க போவதில்லை. ஆனால் ஒரு புது வாழ்க்கையை துவக்கும்.வருடத்திற்கு 6 புது ஆடைகள் வாங்கினால் ஒரு புது ஆடையை ஒரு ஏழைக்கு வாங்கி தருவதை வழக்கமாக கொள்ளுங்கள்.
நான் ஜிப்மரில் படிக்கும் போது இரவு உணவு உன்ண நேரம் ஆகும். எல்லா மாணாவிகளும் உண்டு முடித்திருப்பார்கள். ஆனால் மெஸ்ஸில் பணிபுரிபவர்கள் எனக்காக காத்திருப்பார்கள். நானும் அவர்களோடு சமையல் அறையிலேயே உண்பதுண்டு. அதில் வனஜா என்ற பெண்ணை பெண் பார்க்க வருவதாகவும் கட்டி கொள்ள ஒரு பட்டு புடவை வேண்டும் இரவல் தரமுடியுமா என்று கேட்டாள். என்னிடம் அப்போது பட்டென்ன பருத்தி புடவைகளே அதிகம் இல்லை.வேலைக்கு போனதும் உங்க பழைய புடவையை எனக்கு தறீங்களா என்றவளிடம், வேலைக்கு போனால் உனக்கு பழசெதற்கு புதுசே தருவேன் என்று சொன்னதே அவளுக்கு சந்தோஷமாய் இருக்கும். நான் AIIMS இல் முதல் ஊதியம் வாங்கி சில நாள் கழித்து ஊருக்கு சென்றபோது அவளுக்கு ஒரு பட்டு படவை வாங்கி அதை கொடுப்பதற்காகவும் என் துறை ஆசிரியர்களை பார்க்கவும் பாண்டிச்சேரி சென்றிருந்தேன். ஆனால் அவள் இறந்து விட்டிருந்தாள்.கொடிது கொடிது இளமையில் வறுமை அதனினும் கொடிது.
இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்றார்
மடி நிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும் என்ற வண்ணம் வாழாமல் ஒரு சிலருக்காவது ஏணிகளாய் இருப்போமே.
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeAravindan wrote:
நெஞ்சை தொட்ட பதிவு….
என் கருத்து!!!…எங்கோ இருக்குக் “உதவும் கரங்கள்.சிவனாந்த அசிரம்” போன்ற வசதியுள்ள அமைப்புகளூக்கு உதவி செய்வதை விட உங்கள் வட்டத்திலே இருக்கும் நன்பர்கள்,உறவினர்கள்,பெற்றோர் இருந்தும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் குழந்தைகள் இவர்களுக்கும் உதவி செய்யலாம்
reply to this comment
22/07 18:45:40
Ramya Nageswaran wrote:
அன்புள்ள பத்மா,
I agree with you 100%. நானும் என் கணவரும் இதை குழந்தைகளுக்கு புரிய வைக்க சில முயற்சிகள் எடுத்து வருகிறோம். உதாரணமாக அவர்களின் பிறந்த நாட்களின் பொழுது ‘உங்களுக்கு தான் எல்லாம் இருக்கிறது. இந்த முறை பரிசுகளுக்கு பதில் எல்லா நண்பர்களையும் ஒரு தொண்டு நிறுவனத்திற்காக பணம் கொண்டு வரச் சொல்லலாமா?” என்று கேட்டோம். இரண்டு தடவை தான் சம்மதம் கிடைத்தது!
இந்தியா செல்லும் பொழுது நான் போகும் தொண்டு நிறுவனங்களுக்கு சில சமயம் என் 6 வயது மகளையும் அழைத்துக் கொண்டு போவேன். இது போன்றவற்றை செய்து வந்தால் அவர்கள் ஓரளவு sensitize ஆவதோடு மட்டுமல்லாமல் தங்களுக்கு இருப்பதை வைத்து திருப்திபடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை தான்.
reply to this comment
22/07 19:53:22
ராம்கி wrote:
//ஒருவர் எத்தனை புடவைகள் அல்லது நகைகள் இருக்கிறது என்பதை கொண்டு அளாவிடப்படுவதில்லை. அப்படி அளவிட்டால் மதிப்பு அந்த பொருளுக்குத்தானே ஒழிய நமக்கில்லை.//
நல்ல வரிகள்.
//இப்போது சொல்லுங்கள், பூட்டிவைத்த நகைக்கு மதிப்பு அதிகமா, ஒரு ஏழை தந்தையின் கவலையை போக்கிய நகைக்கு மதிப்பு அதிகமா?//
நல்ல கேள்வி. ஆனால் அடிப்படைத் தேவைகளுக்கு மேல் ஊதியம் பெறும் 10 முதல் 15 சதவீத இந்தியர்களுக்கு இது சாத்தியமாக இருக்கக் கூடும்.அவர்கள் உங்களைப் போல் இருப்பதில்லை என்பது வேறு விஷயம். ஆனால் தேவைகளுக்கும் வருமானத்துக்கும் இடையில் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி கொண்ட பெரும்பான்மை மக்களிடம் இருக்கும் சொற்ப நகைகளும் ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க என்ற அளவில் தான் இருக்கின்றன என்பது எனது கருத்து. பிரச்னை, திருமணத்திற்கும் நகைகளுக்கும் உள்ள தொடர்பில்தான் இருகிறது. அந்தச் சூழலில் இருந்து வெளியேற முடியாத (99 சதவீதம் அல்லது அதற்கும் மேல் இப்படித்தான் இருக்கிறார்கள். விருப்பம் இல்லாவிட்டாலும் மரபுகளை மீறவோ கேள்வி கேட்கவோ நாம் தயாராக இல்லை) நிலையில் அந்தத் தந்தையைப் பார்க்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், நகை கேட்கும் கல்யாணம் எதற்கு என்று சிலர் வாதிடக் கூடும்.
//என்னிடம் அப்போது பட்டென்ன பருத்தி புடவைகளே அதிகம் இல்லை.//
முதல் தலைமுறையாக ஊர்ப் பகுதியைவிட்டு வெளிவரும் எல்லோருக்கும் அதுதான் நிலை என்றாலும் கூட அந்த வரிகள் தைக்கின்றன.
stationbench.blogspot.com
reply to this comment
23/07 04:18:11
Padma Arvind wrote:
ரம்யா
இந்த பதிவில் உங்கள் பதிவின் சுட்டியை கொடுக்க எண்ணி இருந்தேன்.கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
அரவிந்தன்: நன்றிகள்
reply to this comment
23/07 07:27:57
குழலி wrote:
//படிக்கும் போது நகைகள் அணிய என்னிடம் அவை இருக்க வில்லை. இப்போது அவற்றை வாங்கி அணிவதில் விருப்பம் இல்லை//
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இது பொறுந்தும், நகைகளுக்கு பதில் சட்டை, காலணிகள், மோட்டார் சைக்கிள் என அடங்கும் ஆனால் பணம் இருக்கும் போது அதிலெல்லாம் விருப்பம் குறையும்
அது சரி நீங்க பாண்டிச்சேரி ஜிப்மரிலா படித்தீர்கள்? நம்ம ஊருக்கு பக்கத்து ஊருதான் பாண்டி, நாம கடலூருங்கோ
reply to this comment
23/07 07:34:56
குழலி wrote:
இன்னொரு விடயம் இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் குழந்தைகளை சந்தோசமாக வைத்திருக்கின்றேன் என கேட்டதையெல்லாம் தேவையா இல்லையா என பார்க்காமல் வாங்கித்தந்து வருகின்றனர், தொலைக்காட்சி ரிமோட்டை தூக்கிப்போட்டு குழந்தைகள் விளையாடும்போது கண்டித்தால் அது என்ன உடைந்தால் வேறு வாங்கிக்கொள்ளலாம் அதற்காக கண்டிக்காதே என கூறும் போது இது வெறும் பொருளின் பணமதிப்பை மட்டும் பார்க்கக்கூடாது என எப்படி புரியவைப்பது
இதற்கெல்லாம் மிக எளிதாக இன்றைய இளம் தலைமுறை பெற்றோர்கள் கூறும் காரணம் நான் சின்ன வயசுல ஆசைப்பட்டு கேட்ட சட்டை வாங்கித்தரலை, பொம்மை வாங்கித்தரலை அதே நிலமை என் குழந்தைகளுக்கு வரக்கூடாது, நம்ம குழந்தைகளைக்கில்லாத பணம் வேறேதுக்கு என்று கேட்பவர்களுக்கு இது வெறும் பணத்தை மட்டும் அடிப்படையாக கொண்டதல்ல என்று எப்படி புரிய வைப்பது என்றும் எனக்கு புரியவில்லை
reply to this comment
23/07 07:41:38
Padma Arvind wrote:
ராம்கி:
கொடுப்பதற்கு பொருள் தேவை இல்லை. மனம் தான் வேண்டும்.இன்னமும் நான் ஒன்றும் கோடியில் புரளவில்லை. நான் வசிக்கிற பகுதியில் நகை கடைகளில் கூட்டம் அ லைபாய்கிறது. என்னிடம் பவளமே இல்லை அதனால் வாங்கினேன். என்றபடி வாங்கி கொண்டே இருக்கிறார்கள். இது அவரவர் விருப்பம். ஆனால் குஜராத்தி மக்களை பார்த்தால், வாங்குவது ஒருபுறம், ஊரில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு பள்ளிகள், மருத்துவமனைகள்,படிப்பு ஊக்க தொகை உதவிகள் மறுபுறம் என்று செய்கிறார்கள். நானே அவர்களுக்கு இந்த திட்டங்கள் தீட்ட உஅதவி இருக்கிறேன்.
ஒரு நாளைக்கு 1$ என்றாலும் ஒரு ஏழை குடௌம்பத்திற்கு ஒரு வேளை உணவாவது தரலாம். சரி : பொருளை விடுங்கள். எத்தனை தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தன்னார்வ தொண்டு செய்கிறார்கள். நாங்கள் சமீபத்தில் தீவிர வாதம் எதிர்ப்புக்காக தன்னார்வ தொண்டர்களை சேர்த்து, உணவும் கொடுத்து வகுப்புக்கள் எடுத்தோம். இதில் ஆசியாவிலிருந்து வந்தவர்கள் சீன நாட்டு காரர்கள் மட்டுமே. இந்திய மொழியில் பேச நான் ஒருத்தி மட்டுமே.
தொடரும்
reply to this comment
23/07 07:45:58
Padma Arvind wrote:
கணவனுடன் H4 விசாவில் வந்து வீடில் இருக்க போரடிக்கிறது என்ற மாமிகல் சிலரிடம் மருத்துவமனையில் தன்னார்வ தொண்டு செய்யௌங்களேன் என்று கூறி இருக்கிறேன். ஒரு நாளைக்கு 2 மணி நேரம். காசு தருவாளா என்ற கேள்விக்கு இல்லை என்று சொன்னதும், அட போ வேறா வேலையில்ல எனக்கு, அங்க போய் எறும் வேலை பார்க்க, ஆத்தில் படமாவது பார்க்கலாம் இது ஒருத்டர், எங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் புடிக்காது இது இன்னொருவர். இவர்களுக்கு ஆங்கிலமும் பேச தெரியும். இதே பெண்கள் மணிக்கு 8$க்கு மேசி போன்ற கடைகளில் வேலை பார்ததும், இதில் வர்ற காசில் என வேனா பண்ணுட்டார், நாங்க மூனு பேரும் ஒரே மாதிரி நெக்லஸ் வாங்கிக்க போறோம் என்று சொன்னதையும் பார்த்திருக்கிறேன்.
கடைசியா ஒன்ரு: இன்னமும் அடிபப்டை தேவைகள் பூர்த்தி செய்யபடாத நிலையில் உள்ள ஏழைகள் உடலால் நிறைய உழைக்கிறார்கள்அட போம்மா, நான் குடிக்கிற கஞ்சியில பாதி உனக்கு என்பவர்களும் ஆமா, வருத்தபடாதீங்க, இந்த காசு வந்துதான் நான் மாடிவீட்டு கட்டபோறேனாக்கும் காசு பணம் நிறைய வந்தா சொல்லுங்க நானே வந்து வாங்கிகிறேன் என்றும் உதவுபவர்கள் அதிகம்.
கோவிலில் போய் பாருங்கள்: நவரத்தின கிரீடமும், பாலும் தெளிதேனும் ஆறாய் ஓடும். அது மட்டும் இல்லை எங்க ஊர் கோவிலுக்கு தங்க கவசம், காசு சேர்க்கிறேன், நீ கொடுக்கிறாயா அதிகம் வேணாம் ஒரு 10$தான். எத்தனை பேரை காட்டட்டும். அதே எங்க ச்கூலுக்கு புக்ஸ் வாங்கனும் பணம் அனுப்ப போறேன் தரியா என்று சொல்பவர்கள் தமிழர்களில் அதிகம் இல்லை.
தொடரும்
reply to this comment
23/07 07:46:41
Padma Arvind wrote:
நான் எழுதிய என் அனுபவம் நான் இந்தியாவில் இருந்த போது, அதற்கும் முதல் தலைமுறையினருக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
என் கருத்தை வெளியிட வாய்ப்பு தந்தமைக்கு நன்றி ராம்கி.
reply to this comment
23/07 07:47:27
sethu wrote:
பொருளின் அருமை அதனை பயன்படுத்துவதில் தான் உள்ளது என்று தாங்கள் கூறிய கூற்று உண்மை. ஒரு மனிதன் எவ்வளவு தான் பொரு;ள சேர்த்தாலும் அவனது ஆசை மேலும் சேர்க்க வேண்டும் என்பதிலேயே தான் இருக்கும். அப்படியிருப்பினும் ஏழை-எளியவர்களுக்கு கொடுத்தால் அந்த ஏழைiயுமமகிழ்ச்சியில் திழைப்பார் என்பதை அனைவரும் உணர்ந்தால் நல்லது
reply to this comment
23/07 11:15:49
Padma Arvind wrote:
குழலி, சேது: நன்றிகள். குழந்தைகளை இப்போது பொறுமை இன்றி வளர்த்தால் நாளை கஷ்டபடபோகிறது அவர்களும் அவர்கள் துணையும். இதனாலேயே இதில் கவனமாக் இருக்க வேண்டும்.
நான் நிறைய முறை கடலூர் வந்திருக்கிறேன். மீண்டும் எழுத வதிருக்கிறீர்கள். மகிழ்ச்சி
reply to this comment
23/07 16:46:46
ராம்கி wrote:
உங்கள் பதிவிலும் பதிலிலும் இருக்கும் சத்திய ஆவேசத்தை-நியாயமான கோபத்தை- நான் மதிக்கிறேன். நீங்கள் தனிமனிதர்களின் மனமாற்றத்தை முன்னிறுத்துகிறீர்கள். நான் அதிலிருந்து சிறிது வேறுபட்டு அதன் பின்னணியையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். நீங்கள் திருவரங்கத்தில் நடந்ததாகக் குறிப்பிடுவது இன்னும் பல இடங்களில் தொடர்கிறது.
நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறைகள் நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தைக் காக்கிறது என்பார்கள். அந்தப் பண்பாடே இந்தியாவில் சாதிரீதியாகவும், வர்க்கரீதியாகவும் தன்னைவிட குறைந்தவர்களாக இருப்பதாகத் தான் நினைப்பவர்களிடம் மரியாதை காட்ட மறுக்கும் பண்பாடாக வெளிப்படுகிறது. அமெரிக்க உற்பத்திமுறை முதலாளிய முறை என்கிறார்கள். அதனால் அந்த வேறுபாடுகளை அலுவலகம் விட்டு வெளியில் வந்தவுடன் பார்க்க முடிவதில்லை.
இந்தியாவில் 85 கோடி மக்களை 15 கோடி மக்கள் கண்டு கொள்வதில்லை என்பதே எனது புரிதல். நீங்கள் 15 கோடியில் இருந்து கொண்டு உண்மையாக 85 கோடிக்குக் கவலைப்படுகிறீர்கள்.
//நாங்கள் சமீபத்தில் தீவிர வாதம் எதிர்ப்புக்காக தன்னார்வ தொண்டர்களை சேர்த்து, உணவும் கொடுத்து வகுப்புக்கள் எடுத்தோம். இதில் ஆசியாவிலிருந்து வந்தவர்கள் சீன நாட்டு காரர்கள் மட்டுமே. இந்திய மொழியில் பேச நான் ஒருத்தி மட்டுமே.//
இந்த வரிகள் உங்கள் கவலை வெறும் சொற்சேவை இல்லை என்பதை நிரூபிக்கிறது.
நன்றி..