தேன் துளி » நட்சத்திரம்

31/07: வலி
கிணற்றை சுற்றி ஓடிய

சிறுமியின் கையை பிடித்து

அழுத்தி வைத்தான் இஸ்திரி பெட்டி

சட்டையில்சுருக்கம்

சரியாய் போகவில்லையாம்.

கையில் விழுந்த சுருக்கம்

ஆறின பின்னும்

வலிக்கத்தான் செய்கிறது

மனதில் பட்ட வடு

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeராம்கி wrote:

சுருக்!

reply to this comment

01/08 02:31:56

thanu wrote:

பத்மா

சினிமாக்களிலும், கதைகளிலும் பார்க்கும் அவலங்கள்தான் என்றாலும் உங்கள் எழுதிலுள்ள ஆழம் அந்த வலியை நாங்களும் உணரும்படி செய்துவிடுகிறது.

தாணு

reply to this comment

01/08 11:10:09

குழலி wrote:

வலிக்கும் கவிதை

24/07: பொலிக புதியன
வலைப்பூக்களாக இருந்த போதே சிலருடைய பதிவுகளை படித்தும் பின்னூட்டமும் இட்டு வந்திருந்த நான், நாமே எழுதினால் என்ன என்று தோன்றியபோது, முதலில் அதற்கு விதை விதைத்தவர்கள் வெங்கட்டும், ரோசாவசந்தும்தான். வெங்கட்டின் ஒரு பதிவிற்கான என் பின்னூட்டதை பார்த்து என்னை எழுத தூண்டியவர்கள் அவர்கள். அதன் பின் காசி, மதி போன்றோரின் தொடர் ஊக்கம் என்னை செயல்படுத்த தேவையான ஆர்வத்தை தந்தது.

நா.கன்னன் எனக்கு உத வதொடங்கி பின் மதி, வெங்கட் ஆகியோர்களால் இடமும் வசதியும் கிடைத்தது. என் நன்றிகள். இவர்களுடைய ஊக்கம் விழலுக்கு இறைத்த நீரானால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பு.

எழுத துவங்கியபோது Tag line அல்லது விளக்கமாக என்ன எழுதலாம் என்று எண்ணியபோது நிஜங்களின் அவலம் என்று மட்டுமே தோன்றியது. கற்பனையில் நீராடி கனவுகளில் உடை உடுத்தி அற்புதமாக வாழ்வதிலே ஆனந்தம் என்ன உண்டு?

கனவுகளில் ஒப்பந்தகளில் கையெழுத்திட்டாலும் நிஜத்தில் போராட்டங்களை நாம் தினம் சந்திகிறோம். ஒரு குளிர்பதனப்பட்ட அறையில் கணிணிகளுடன் வேலை செய்வதில்லை என் பணி.வறுமை கோட்டிற்கும் கீழே உள்ள மக்களுடன் களத்தில் உழைப்பதே என் பணி என்பதால் பூமியின் புழுதியுடன் என் காலுக்கு உறவதிகம் (நண்றி:மேத்தா) கணிணியுடன் வேலைசெய்து மனதிற்கு திருப்தியாக இல்லததால் இந்ததுறைக்கு வந்தேன். இந்தியாவிலிருந்து வந்தவர்கள், மொழியும் சட்டமும் புரியாமல் கஷ்டபடுகிறவர்கள் அனேகம். இவர்களுக்கு என்னாலும் தனிப்பட்ட முறையில் உதவ முடிவதில் எனக்கு மகிழ்ச்சியே.

வறுமைகோட்டில் வாழ்க்கையை தொடங்கி முன்னேறிய எனக்கு அனுபவங்கள் அதிகம்.

வாழ்வில் எத்தனை மண்ணிடை கண்டேன்.அதற்காக என் நன்றிகள்.கற்றவை குறைவே. கல்லாதவையோ இப்பூமியின் பரப்பளவாகும். இந்தியாவிற்கு திரும்பி செல்வதைவிட இங்கேயே இருக்கும் இந்தியர்களுக்கு அரசு பணியில் அதிகாரியாக இருக்கும் என்னால் உதவ முடியும், அவர்தம் நலனுக்காக திட்டமிட முடியும் என்பதால் தற்போதைக்கு திரும்பி செல்லும் திட்டம் இல்லை.

இந்த வார நட்சத்திரமாக என்னை அழைத்த மதிக்கும் காசிக்கும், படித்த அனைவருக்கும் என் நன்றிகள். யாருடைய மனம் புண்பட்டிருக்குமானால் அது எழுததெரியாத தவறே அன்றி சிந்தனையில் அல்ல. மன்னிக்க வேண்டுகிறேன். கற்றவரெலாம் நல் வழிகாட்டுவோம். கன்ணியத்தை நிலை நாட்டுவோம்.

அங்கே

திருமனங்கள் சொர்கத்தில்

நிச்சயிக்கபடமாட்டாது

திருமண ங்கள் சொர்க்கத்தை நிச்சயிக்கும்

அங்கே

மணம் என்றால் பணம் கேட்கும்

ஆண்விபசாரத்தை

பிரம்மசரியத்தா

தண்டிக்கும் நீதியுண்டு

தாலிக்கயிறு ஒரு

ஆயுள் தண்டனையின்

கழுத்து விலங்காகாது

திரவ பெண்மைக்கு

திடப்பொருள் கிண்ணமாய்

ஆண்மை இருக்குமங்கே

ஆண்மையுடன் போட்டியிடும்

ஆவேசத்தில் அங்கே

மெல்லிய பெண்மை

மீசை வளர்க்காது

பெருமைக்குரிய பெண்மை

அங்கே போற்றப்படுமே அன்றி

பூஜிக்க படமாட்டாது

அங்கே

பிரமனுக்கு கட்டாய ஓய்வு

தரப்படமாட்டாது

வேண்டிய விடுமுறை தரப்படும்

சமயங்கள் தைக்கின்ற நூலாகும்

கத்தரிகொல்களின்

காரியத்தைச் செய்யாது

பக்குவ வேத

புத்தகங்களிலிருந்து

மத வாதிகள் அல்லர்

மனிதர்கள் மலர்வார்கள்

பதிவு திருமணம்

பண்னிவிட்டதலாயே

பூமிப்பெண்ணுக்கு ஒருவன்

புருஷனாக முடியாது

வுயர்வை துளிகளை

பரிசமாய் தருவோர்க்கே

மண் மகள் மனையாளாவாள்

அனைவரும் ஒர் நிறை

அல்ல

உழைக்கும் சாதியே

உயர்ந்த சாதி

அங்கே

வயிறு மட்டுமல்ல

மனமும் நிறந்திருக்கும்

சுதந்திரம் அங்கே

சுவாசமாய் இருக்கும்

பிறர்தர வாங்கும்

பிச்சையாய் இராது

கடமை அங்கே கவுரவம்

உரிமை அங்கே ஊதியம்

சத்தியம் அங்கே சமயம்

இதயம் அங்கே முகவர்

புன்னகை அங்கே பொதுமொழி.

என்ற அப்துல் ரகுமானின் கவிதையுடன் வருகிறேன் என விரைகிறேன் விடைபெறுகிறேன்.

நன்றிகள்

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeகுழலி wrote:

நட்சத்திரம் எதற்கும் தயங்காமல் மின்ன வாழ்த்துகின்றேன்…

//கனவுகளில் ஒப்பந்தகளில் கையெழுத்திட்டாலும் நிஜத்தில் போராட்டங்களை நாம் தினம் சந்திகிறோம். //

உண்மை அது தான் உங்கள் எழுத்தில் மின்னுகின்றது…

//ஒரு குளிர்பதனப்பட்ட அறையில் கணிணிகளுடன் வேலை செய்வதில்லை என் பணி.வறுமை கோட்டிற்கும் கீழே உள்ள மக்களுடன் களத்தில் உழைப்பதே என் பணி என்பதால் பூமியின் புழுதியுடன் என் காலுக்கு உறவதிகம்//

உண்மையை சொன்னால் என் போன்ற சி(ப)லர் கணிணியில் வேலை செய்து வேலையின் அலுப்பை போக்கத் தான் எழுதுகின்றோம், சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் பார்த்த, பாதித்த ஆனால் எங்களுக்கு நேரடி அனுபவமில்லாத சில நிகழ்வுகளை எழுதுகின்றோம் அதில் நிச்சயம் 100 விழுக்காடு உண்மை இருக்கும் என்பதை நான் நம்பவில்லை, உங்களுடைய எழுத்துக்கள் உண்மையை பேசுகின்றன,

ஒரு வேண்டுகோள் எப்போதுமே நீங்கள் நீங்களாக எழுதுங்கள், சமரசம் வேண்டாம், பல இடங்களில் சமரசம் செய்துகொள்ளும் போது நினைத்ததை நினைத்த மாதிரி எழுத முடியாது

reply to this comment

24/07 11:19:31

குழலி wrote:

முந்தைய பின்னூட்டம் எனது வேண்டுகோளே!

reply to this comment

24/07 11:21:28

வாசன் wrote:

பத்மா

*பதிவுகளில், உங்களுடைய மற்றும் நீங்கள் சந்திக்கும் வலிகளை சுய கழிவிரக்கம் இல்லாமல் நீங்கள் விவரித்திருந்ததாக எனக்கு உணர்வு. புது மாதிரி எழுதும் முறை.

முதிர்ச்சியான எழுத்துக்கள் அருகி வரும் தமிழ்-இணையத்தில்,உட்குழு மனப்பான்மை இன்மை மற்றும் கைதட்டல்கள் எதிர்பார்க்காமல்

எழுதுவது,பெரிதும் வரவேற்கப்பட

வேண்டியது. நன்றிகள்.

reply to this comment

24/07 11:27:30

Thangamani wrote:

தாரகை தொடர்ந்து பிரகாசிக்க வாழ்த்துகள்!

reply to this comment

24/07 12:53:26

-/பெயரிலி. wrote:

சராசரியாக எல்லாமே நல்ல பதிவுகள். நன்றி.

reply to this comment

24/07 13:33:00

S. Sankarapandi wrote:

//எழுத துவங்கியபோது Tag line அல்லது விளக்கமாக என்ன எழுதலாம் என்று எண்ணியபோது நிஜங்களின் அவலம் என்று மட்டுமே தோன்றியது. கற்பனையில் நீராடி கனவுகளில் உடை உடுத்தி அற்புதமாக வாழ்வதிலே ஆனந்தம் என்ன உண்டு? //

மிக உண்மை – உங்கள் பதிவுகள் எல்லாவற்றிலும் கனவுகளை விட்டு நிஜங்களை அலசி வருகிறீர்கள்! ஆனால் பிரச்சினைகளைப் பற்றிய உங்கள் அவதானிப்பு மட்டுமே அதிகம் தெரிந்தது, அவற்றின் காரணங்களுக்குள் செல்ல விரும்ப வில்லையோ என்று தோன்றியது. இதைக் குறையாகச் சொல்லவில்லை. ஒருவேளை நேரமின்மையாகக் கூட இருக்கலாம் – இருந்தாலும் பதிவுகளில் அனைத்திலுமே பல பயனுள்ள விசயங்களையே விவாதித்தீர்கள். நன்றியும், வாழ்த்துக்களும்!

நன்றி – சொ. சங்கரபாண்டி

reply to this comment

24/07 16:05:27

sarah wrote:

மிக்க நன்றி பத்மா.

சாரா

reply to this comment

24/07 19:41:18

Jayanthi Sankar wrote:

Dear Padma,

all your postings are eye openers. Please continue to write without compromising. Let others have their rights to opinion. That does not discourage you. Just take them only as a view.

Looking forward to reading more of yours.

Best wishes,

Jayanthi Sankar

reply to this comment

24/07 21:11:18

வெங்கட் wrote:

பத்மா – செறிவான கருத்துகள். தொடரட்டும் உங்கள் பணி.

reply to this comment

24/07 21:55:26

Draj wrote:

Padma, are you planning to stop posting ?? I wish, hope and pray that you would continue posting on your blog. Your site was very informative and I simply loved it

Cheers

Draj

reply to this comment

25/07 05:39:51

அன்பு wrote:

என்னைப் போல் வலைப்பதிவை போழுதுபோக்குக்குச் செய்யாமல், பிறருக்கு பயன்படும் வகையில் பதிந்து வருகின்றீர்கள். உங்களுடைய தொழிலில் அன்றாடும் எதிர்கொள்ளும் அனுபங்களையும், பிரச்னைகளையும் – மற்ற பலரும் தெரிந்து கற்றுக்கொள்ள ஏதுவாக உங்கள் பதிவுகளை ஒரு தவம் போல் செய்து வருகின்றீர்கள். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

மற்ற எல்லாருக்கும் அல்லாமல் உங்களைப்போன்றவர்களுக்குத்தான் இந்த வலைப்பூ வடிவம் மிக, மிக பயனுள்ளது. அதனால் தொடர்ந்து எழுதுங்கள், நன்றி.

(பி.கு: சாரி, இன்னிக்குதான் கவனித்தேன் இந்த வாரம் உங்கள் வாரமென்று… பாராட்டுக்கள் மீண்டும்).

reply to this comment

25/07 06:31:23

arul wrote:

தொடர்ந்து நன்றாக எழுதுகிறீர்கள் பத்மா. உங்கள் அனுபவங்கள் சார்ந்த எழுத்துகள் சிறப்பாக இருக்கின்றன. பதிவுகளுக்கு நன்றி.

reply to this comment

25/07 08:31:01

iraamaki wrote:

உருப்படியானதை, தங்களுக்கு உண்மையெனப் பட்டதை, எழுதுகிறீர்கள். தொடரட்டும் உங்கள் முயற்சி. இடைவிடாது படித்துக் கொண்டுதான் இருந்தேன்.

அன்புடன்,

இராம.கி.

reply to this comment

25/07 09:40:47

karthikramas wrote:

பத்மா ,

நீங்கள் எழுதிக்கொண்டிருப்பதைப் போன்றே தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். நட்சத்திரத்துக்கு நன்றி.

reply to this comment

25/07 11:33:18

அல்வாசிட்டி.வி wrote:

நட்சத்திர வாரத்தில் பல பயனுள்ள தகவல்களை அறிந்தோம். பல கோணங்களில் சிலவைகள் சிந்திக்க வைத்தது. தொடர்ந்து நல்லவைகளை எழுதி வாருங்கள். வாழ்த்துக்கள்.

reply to this comment

25/07 11:40:48

Padma Arvind wrote:

பின்னூட்டம் இட்டு கனிவான வார்த்தைகளால் ஊக்கம் தந்த அனைவருக்கும் நன்றிகள். பிரச்சினைகளை பற்றி எழுதும் போது அதை குறித்த என் பார்வையை, முடிவுகள் காண முடியுமா என்றோ அல்லது ஒரு தீர்மானத்தையோ வைக்க எண்ணியதுண்டு. அது பிறரின் மாறுபட்ட எண்ணங்களை அறிய முடியாது என்றும் தோன்றியது. இன்னும் நான் வளர வேண்டும் என்று எண்ணுகிறேன். நன்றி திரு.சங்கரபாண்டி .

reply to this comment

25/07 20:23:57

M. Sundaramoorthy wrote:

பத்மா,

ஊரில் இல்லாததால் சமீபத்தில் எழுதிய எல்லா பதிவுகளையும் இன்னும் படிக்கவில்லை. அதிகம் பின்னூட்டம் எழுதாவிட்டாலும், பொதுவாக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உங்கள் பதிவுகளை படிப்பதுண்டு. வாழ்வனுபவமும், பணியனுபவமும் நெருங்கியிருப்பதால் அவை எழுத்துக்களாக பரிணமிக்கும்போது மேற்பூச்சுகளின்றி உண்மையோடு வெளிப்படுகின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.

reply to this comment

26/07 00:13:34

thanu wrote:

பத்மா,

கடல் கடந்து செல்வதே பணம் சம்பாதிக்கவும், social statusஐ உயர்த்திக் கொள்ளவும் மட்டுமே என்ற மாயையை உடைத்தெறிகின்ற உங்கள் எழுத்துக்கள் சந்தோஷத்தைத் தருகிறது…ஓரளவு சுயசரிதை வாசிப்பதுபோல் இருந்தாலும், உங்கள் எழுத்துக்கள் நிஜ உலகத்தின் முரண்பாடுகளை தோலுரித்துக் காட்டுகிறது. மத்தியதர வர்க்கத்தின் மனதுக்குத்தான் மனித நேயம் அதிகம் என்பதை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்…வாழ்த்துக்கள்.

இன்னும் அதிகமான எதிபார்ப்புகளுடன்

அன்புத் தோழி

தாணு.

23/07: வேலைக்காரி என்ற ஒரு சாதி
வேலைக்காரி என்றொரு சாதி

நாம் எல்லோருமே ஒருவகையில் வேலைக்காரர்கள் தான் என்றாலும் பொதுவாக வேலைக்காரி என்பது கீழ் மட்டத்தில் தாழ்ந்த சாதிக்காரர்களை குறிக்கிறது. இது பொருளாதாரத்தை வைத்து தாழ்ந்தவர்கள் என்றாலும் அதனுள்ளே சாதி அடிப்படையில் சில வேலைகள் சிலரால்தான் செய்யபடுகிறது.

நாம் ஒரு நிறுவனத்தின் வேலைக்காரர்கள் என்றபோதும் நம்மை அந்த நிறுவனம் எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நம் வீடென்ற நிறுவனத்தில் வேலை செய்ய வருபவர்களை நடத்துவதில்லை.

அதற்கு அமெரிக்கா பரவாயில்லை. என் வீட்டை வாரம் ஒருமுறை வ ந்து சுத்தம் செய்யும் மெக்ஸிகோ நாட்டு பெண் நேரத்திற்கு வருவதும் சுத்தமாக வேலை செய்வதும் நான் வைத்து செல்கிற காசோலையை எடுத்துக்கொள்வதும் சத்தமின்றி இயல்பாக நடக்கிறது. நான் வீட்டில் இல்லாத போது தான் வருவாள் என்பதால் ஒரு சாவி உண்டு அவளிடம். அவளுடைய குழந்தைக்கு பள்ளி விடுமுறை என்றால் உடன் அழைத்து வருவாள். அலுவலகத்திலும் கடை நிலை ஊழியர் முதல் நிறுவன அதிகாரிவரை வேலை நேரம் முடிந்ததும் ஒரே தரத்தில்தான். பார்ட்டி என்றாலோ அலுவலக பிக்னிக் என்றாலும் அனைவரும் வேறுபாடு பார்ப்பதில்லை.

இன்னமும் திருவரங்கத்தில் நிறைய வீடுகளில் வேலைக்காரி வந்து சுத்தம் செய்த பாத்திரங்கள் கொல்லையிலேயே காத்திருக்கும். பூஜை முடிந்தபின் அவற்றின் மீது ஒரு கைப்பிடி நீர் தெளித்தபின் அவை உள்ளே வரும்.

வெள்ளிக்கிழமை காலையில் வேலைக்காரி தாமதமாகிவிட்டால் ஒரே கூப்பாடு. அத்வும் அவளும் இவர்களும் ஒருவர் அருகில் இன்னொருவர் வந்தால் தீட்டு என்று மனிதராக நடத்தாமல் படுத்தும் பாடு இது 21 ஆம் நூற்றாண்டுதானா என்று எண்ண வைக்கிறது. அதேபோல கோவில் பிரசாதங்கள் வீட்டிற்கு வந்தாலும் கடைசியில் மீந்தால் மட்டுமே இவர்களுக்கு. மீந்தா தரேன் ராத்திரி வா, அப்படியே பாத்திரம் கொஞ்சம் ஜாஸ்தியாஇடுத்து தேச்சு தா” என்பவர்களால் எப்படி இப்படி இருக்க முடிகிறது. பகிர்ந்துன்ணும் குணம் போனதெங்கே? கழிவிடத்தின் அருகே உணவு தருவதையும் இரண்டு வருடம் முன்னால் கண்டேன்.

சமீபத்தில் சில வார இதழ்களி ல் கூட இவர்களை கிண்டல் செய்வதை பார்க்கிறேன். நாம் சற்று பொய்வ்டெஉத்து கொண்டு காபி அருந்த போவதில்லையா, இணையத்தில் உலாவுவது இல்லையா அல்லது நம் உறவினருடன் தொலை பேசுவதில்லையா? நமது நிறுவனம் இ ல வ ச காப்பி தர வேண்டும், இன்ன சலுகைகள் தர வேண்டும் என்பதும் பண வீக்கத்திற்கு ஏற்றார்போல ஊதியம் அதிகரிக்க வேண்டும் என்றூ ஊக்க போனஸ் தகுதி போனஸ் தர வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது போல, படிப்பிற்காக இந்த சலுகைகள் என்றால், அவர்களுக்கு குறைந்த பட்சம் மனிதாபிமானமாவ து காண்பிக்கலாம்தானே.. அவர்களுக்கு நாமாவது சம்பளத்தை ஏற்றி இருக்கிறோமா? குறைந்தபட்சம் சத்தம் போடாமல் புரிந்து கொள்ளலாம் அது நம்மால் முடியும்தானே.

பெண்டாட்டி மேல் பூதம் வந்ததென்பார் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்தென்பார் என்றெல்லாம் சொன்னாலும் அது நாம் அவர்களை நன்றாக கவனித்து கொள்ளாததால்தான். இவளுக்கு வந்த திமிர் பார்த்தியா, நல்ல காப்பி வேனுங்கிறா. இப்பதான் என்னோட பொடவை வேற தந்தேன் நன்றி கெட்ட சன்மம் நம்ம கன்கொத்தி பாம்பாட்டம் பார்க்கலைன்னா அங்கியே குப்ப இருக்கும் அதனால் தான் பகவான் இவாளை இப்படி வெச்சிருக்கிறான் என்று சத்தமாக பேசிய மாமி ஒருவரை கேட்க நேர்ந்தது.

நிறைய நண்பர்கள் வேலைக்கரர்களின் குழந்தைகளுக்கு உடை எடுத்து தருவது, புத்தகங்கள் வாங்கிதருவது என்று செய்கிறார்கள். அவர்களுக்கு என் வணக்கங்கள். இப்போது நிலைமை மாறி இருக்கலாம். ஆனால் படிக்கின்ற பத்திரிக்கைகள் அப்படியான எண்ணத்தை என்னுள் உருவாக்கவில்லை. நம்மை ஒருவர் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படி நாம் அடுத்தவரை நடத்த கற்று கொள்வோம்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeThamarai wrote:

பத்மா, உங்களிடம் ஒரு கேள்வி. நீங்க தமிழ் நாட்டில் இருக்கும்போது உங்க வீட்டில் வேலையாட்கள் இருந்திருக்கிறார்களா? அவர்களை என்றாவது நீங்கள் டைனிங் டேபிளில் உட்கார வைத்து சப்பாடு போட்டிருக்கிறீர்களா? தவறாக நினைக்கதீர்கள். மிகவும் சாதாரணமாகக் கேட்கிறேன்.

தாமரை.

reply to this comment

23/07 17:20:01

Padma Arvind wrote:

தாமரை

இதில் தவறென்ன இருக்கிறது. எங்கள் வீட்டில் வேலைக்காரர்கள் இருந்ததில்லை. ஏழை என்றும் சாதி வேறுபாடு காட்டி நாங்கல் யாரையும் ஒதுக்கியதில்லை. எல்லோருமே தரையில் இன்றாய் இருந்து சாப்பிட்டிருக்கிறோம்.

reply to this comment

23/07 17:40:53

Arun wrote:

அன்புள்ள பத்மா,

நான் கூறும் விஷயத்தை நல்ல முறையில் எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்பி சொல்கிறேன். நீங்கள் சொல்வதில் அனைத்தும் நல்ல விஷயங்கள் தான்! நீங்கள் கொடுக்கும் உதாரணங்களும் உண்மையானவையாகவே இருக்கலாம்…மறுப்பதிற்கில்லை! ஆனால் வர வர உங்கள் பதிவுகள் எல்லாம் ஒரு மாதிரி ஸ்டீரியோ டைப் ஆகி வருகிறது. நீங்கள் உதாரணமாய் கொடுக்கும் அக்ரஹாரத்து மாமிகள் போல, சமூகத்தில் பலரும் அவர்கள் அவர்கள் இடத்தில் பேசியவர்களாகத் தானிருப்பார்கள். நீங்கள் இது போல உதாரணங்கள், நீங்கள் வளர்ந்த சூழ்நிலையின் காரணமாகத் தருகிறீர்கள்…ஆனால், இணையம் அனைவரும் புழங்கும் வெளி. அதுவும் குறிப்பாக பார்ப்பனர்கள், பார்ப்பனீயம் என்று குத்திக் கிழித்து, பின்னூட்டப் போர்கள் நடந்து இப்போது தான் சற்று ஓய்ந்திருக்கிறது. நீங்கள் இது போலெல்லாம் எழுதுவதால், இருபது பேர் வந்து ‘நல்ல பதிவுகள், நன்றி பத்மா’ என்று எழுதிவிட்டு செல்வார்கள். ஆனால், இருபதில் மூன்று பேராவது…இதை அவர்கள் வசதிக்கேற்றவாறு திரித்தும், உரித்தும் எழுதி விடுவார்கள்.

நீங்கள் எப்படி பல உயர்ந்த எண்ணங்களோடு பிறந்து, வளர்ந்து அவற்றைக் கடைபிடித்தும் வருகிறீர்களோ…அது போல பலர் இருந்து கொண்டே இருக்கிறார்கள், இருப்பார்கள். கொஞ்சம் முத்திரை குத்தும் விதமாகவும், ஸ்டீரியோ டைப்பாக எழுதப்படும் பதிவுகளையும் தவிர்த்தால் நன்றாயிருக்குமென்று நினைக்கிறேன்.

- அருண் வைத்யநாதன்

reply to this comment

23/07 17:56:20

Mathy Kandasamy wrote:

அதென்ன அருண், இதுபோன்ற அவசியமான பதிவுகளில்கூட நீங்கள் உங்கள் குயுக்தியான பின்னூட்டங்களை இட்டு பிரச்சினையையே திசைதிருப்புகிறீர்கள்?

என்னைப்போல சாதாரணமாகப் பார்ப்பவர்களைக்கூட, உங்களைப்போன்றவர்களின் பின்னூட்டங்கள் புருவம் நெரிக்க வைக்கிறது.

பத்மாவின் அவரின் அனுபவப் பதிவுகளை இடுவதைக்கூட, உங்களின் subtleஆன arm twisting மூலம் தடுத்து நிறுத்தப் பார்க்கிறீர்கள்.

இது என்னுடைய வெளிப்படையான எண்ணம்.

பத்மா, உங்களின் பதிவைத் திசை திருப்பும் எண்ணமில்லை. ஆனால், சொல்லவேண்டியது அவசியம் என்று கருதியதால் இந்தப் பின்னூட்டம்.

-மதி

reply to this comment

23/07 18:06:18

ஜோக்கர் wrote:

தாமரையின் பின்னூட்டமும் அருணின் பின்னூட்டமும்தான் வெவ்வேறு இடங்களிலிருந்து வரும் ஸ்டீரியோடைப்பான பார்வைகளாகத் தெரிகின்றதே தவிர, பத்மாவின் பதிவு அல்ல. உருப்படியான பதிவுகள், தொடர்ந்து எழுதவும்.

reply to this comment

23/07 18:18:58

Padma Arvind wrote:

அன்புள்ள அருண்

வெளிப்படையான கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் கருத்தும் அன்பும் புரிகிறது. மிக்க நன்றி. இன்று காலையில் நடந்த ஒரு சம்பவம் நான் இதை எழுதியதற்கு காரணம். என்னுடைய 6 மணி நேரம் நான் செலவிட்டது மருத்துவமனையில்.உலகில் நடப்பது நிறைய மாறவில்லை. இன்று காலை 12 வயது இந்திய பெண் வேலை செய்ய வந்தவளை உண்புணர்ந்த பெரியமனிதரை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். நான் இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன் மருத்துவமனையிலிருந்து. சின்னஞ்சிறு சிறுமி. வேலை செய்ய வந்த சிறுமி.இது என் தொழில் அல்ல. நான் என்னுடைய ஆ ரவ த்தினால் பேச, சட்ட உதவி கிடைக்க செய்கிறேன். கண் முன் நான் என்ன தப்பு செய்தேன் பெஹன்ஜி என்று கேட்கும் குழந்தை. என் மகனைவிட 2 வயதே பெரியவள். இதன் பாதிப்பே இந்த பதிவு. அவள் விகடனில் போன இதழில் வந்த அத்தனை சம்பவங்களும் மிகுந்த பன வேதனையை தந்தன. பார்ப்பனர்களை பற்றி மட்டுமே எழுதுவது என் நோக்கம் இலை. நான் பார்த்தவர்கள் அவர்கள்தான்.

நல்ல வேளையாக நாம் உயர்ந்த இடத்தில் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம்.

படிப்பதற்கே இவை போரடிக்கிறதே, வாழ்பவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை சிலராவது உணரவேண்டும். பின்னூட்டங்கள் வரும் வரவில்லை என்பது என் கவலை அல்ல. நிலைமை மாறவேண்டும். காலம் காலமாய் வாழ்பவர்கள் நிலை கொஞ்சமாவது தேறவேண்டும். நீங்கள் கூட இது குறித்து கவிதை எழுதி இருக்கிறீர்கள் அருண். எனக்கு தெரிந்தது இது ஒன்றுதான். கொஞ்சமாவது விழிப்புணர்வு வர எழுதுவது பேசுவது என் னாலான சிறு உதவி. இணையம் பலரும் புழங்கும் இடம் என்பதால்தான் எழுதுகிறேன்.

என்னை உயர்த்தி கொள்ளவோ பாராட்டு பத்திரம் படிப்பதற்கோ இல்லை. அது எனக்கு தேவையும் இல்லை.ஏனெனில் எனக்கு வேலையின் முடிவிலேயே ஆனந்தம் கிடைத்து விடுகிறது. உணமை வலிக்கிறது, ஆனால் வேதனையுடன் படுத்த படுக்கையாக இன்று மருத்துவமனையில் உள்ள அந்த வேலைக்கார பெண்ணின் இதயம் துடிக்கிறது.There are thousands of people who do things quietly, and I salute them. I write here so some people can look at a different side. I actually mentioned it at the intro too. Thanks again for your sincere views,

reply to this comment

23/07 18:27:47

Padma Arvind wrote:

மதி:

நன்றிகள். என்னுடைய பதிவுகளில் அதிக சீரியஸ்தன்மை இருப்பதென்னவோ உண்மைதான். நான் அறிந்ததும் அது ஒண்றுதான். அருண் நல்ல நண்பராக சொல்கிறார்.

உங்கள் ஆதரவிற்கு நன்றி

reply to this comment

23/07 18:30:34

Arun wrote:

மதி,

ஆஹா..நான் எழுதுவது குயுக்தியான பின்னூட்டம், நீங்கள் சாதாரணமாகப் பார்ப்பவர்கள்…பேஷ், பேஷ்! எத்தனையோ அவசியமான பதிவுகளில்

நல்ல முறையில் பாராட்டுகளைத் தெரிவிக்கவும் நான் தவறியதில்லை (நேரம் கிடைக்கும் போது, நான் இட்ட பின்னூட்டங்களில்). உங்களது வெளிப்படையான எண்ணம் போல, நானும் எனது வெளிப்படையான எண்ணத்தை பத்மாவிடம் சொன்னேன். எப்படி உங்களுக்கு எனது சான்றிதழ்கள் தேவையில்லையோ, அதே போல எனக்கும் உங்களின் சான்றிதழ் சத்தியமாய் தேவையில்லை!

பத்மா, உங்களுக்கு தனியாகவே இதை ஒரு இமெயிலாக போட்டிருப்பேன். பாராட்டுக்களை பதிவுகளில் தெரிவிப்பது போல, இது போன்ற வேறுபாடையும்

பதிவிலேயே தெரிவிக்கலாமே என்று தோன்றியதால் செய்தேன்.

மற்றபடி, உங்களின் மீது மரியாதைகள் நிறையவே உண்டு என்பதை நீங்கள் அறிந்தவர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை!

நான் வாதம் புரிய வரவில்லை. எனவே என்னைத் திட்டியும், இகழ்ந்தும் போடப்படும் எந்தப் பின்னூட்டத்துக்கும் அல்லது கருத்துக்களுக்கும் நான் பதில் சொல்லப் போவதுமில்லை.ஏனெனில், என்னைப் பொறுத்தவரை நேர அது விரயம்.

- அருண்

reply to this comment

23/07 18:39:37

Arun wrote:

அன்புள்ள பத்மா,

மிக்க நன்றி. நானும் கூட இது குறித்து எழுதியிருக்கிறேன். நிலைமை மாற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. நீங்களே குறிப்பிட்டது போல, நான் நல்ல நண்பனாகத் தான் சொன்னேன்.

புரிந்து கொள்ள வேண்டிய நீங்கள் இதைப் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

- அருண் வைத்யநாதன்

reply to this comment

23/07 18:46:02

Arun wrote:

பெஹன்ஜி என்ற அந்தப் பெண்ணின் நிலை படிப்பதற்கு மிகுந்த கஷ்டமாகத் தானிருக்கிறது. உங்களின் சேவை தொடரட்டும் பத்மா!

- அருண்

reply to this comment

23/07 18:50:05

Thangamani wrote:

பத்மா, நீங்கள் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு நன்றி! நீங்கள் ஒரு வகுப்பினரை திட்டுவதாகவோ, குறைசொல்வதாகவோ நான் நினைக்கவில்லை. மாறாக உரத்து உண்மைகளைச் சொல்வதற்கு உங்களுக்கு தார்மீக உரிமையும், தகுதியும் இருப்பதாகவே நினைக்கிறேன். அதைச் செய்வதற்கு உங்கள் அனுபவங்கள் செழுமைப்படுத்திய மனிதம் ஒன்றே காரணம் என்று புரிந்துகொள்கிறேன்; உங்கள் பதிவுகளை நல்லபதிவுகள் என்று நெகிழ்ந்துபோவதற்கும், நன்றியுணர்வுகொள்வதற்கும் அது ஒன்றே காரணம். மற்றபடி நீங்கள் வாரம் ஒரு பதிவு அல்லது ஆடிக்கு ஒன்று அம்மாவாசைக்கு ஒன்று என்றுதான் சீரியசான பதிவுகள் இடவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். உங்கள் பதிவுகளிலேயே எளிமையான நகைச்சுவையும், தமிழின் அழகும் உள்ளது. சில சமயங்களில் (தற்போது) சில எழுத்துப்பிழைகள் இருப்பதைத் தவிர நான் உங்கள் நடையையை இரசிக்கவே செய்கிறேன். உங்கள் கடுமையான பணிகளுக்கிடையே நீங்கள் வலைபதிவதையும், அமெரிக்க- இந்திய வாழ்முறைகளையும், அதன் விளிம்பு நிலை மனிதர்களையும் பற்றி பேசும் ஒரே வலைபதிவராக உங்களை இனங்காணுகிறேன். ஒரு குறிப்பிட்ட பருவத்தில் (காலப்பகுதியிலும் கூட) தமிழின் மேலும் வாழ்க்கையின் மேலான விழுமியங்களின் மேலும் மதிப்பும், அன்பும் கொண்டவர்களே இம்மொழி நடையையும், பார்வையையும் கைவரப்பெற முடியும் என்பதை நான் அறிவேன்.

மற்றபடி உங்கள் பதிவுகளை பாராட்டுபவர்கள் சரியான முறையில் புரிந்துகொள்கிறார்கள் என்றே நான் நம்புவேன். ஏனெனில் அவர்களை நான் பொதுவாக சந்தேகிக்க முடியாது.

நன்றி. தவறாய் இருந்தால் மன்னிக்கவும்.

reply to this comment

23/07 19:32:41

Padma Arvind wrote:

அன்புள்ள தங்கமணி

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். நீங்கள் நன்றாக சிந்திப்பவர் என்பதை நான் அறிவேன். நாம் பார்க்கிற காட்சிகள் அதிகம் பாதிப்பை தருகின்றன. இன்றைய தினம் எனக்கு அப்படியாகிவிட்டது. இன்று மட்டும் இல்லை தினமும் வலியுடன் வருபவர்கள் சந்திக்கிறேன். இப்படிக்கூட துன்பம் வரமுடியுமா என்ற முறையில் வயதான பெரியவர்களை பார்க்கும் போது வேதனையாய் இருக்கிறது. இவர்களுக்கு இறப்பு வர கூடாதா என்று தோன்றுகிறது.

பார்ப்பதும் கேட்பதும் அவலமாக இருக்கும்போது வேறு எதை எழுடினாலும் அதில் என்னையும் அறியாமல் போலித்தனம் வருகிறது. இ ப்போதும் கூட அந்த பெண்ணை பார்த்து பதிவெழுத முடிகின்ற எனக்கு என் மகனுக்கு ஒன்று ஆகி இருந்தால் அமைதியாக இருக்கமுடியுமா என்றே தோன்றுகிறது.இதுவும் கூட தவறுதானோ என்று சிந்திக்க வைக்கிறது. என் பதிவின் வரிகளே நிஜங்களின் அவலம்தானே.

எதற்காக போலியாக எழுத வேண்டும்? அதற்கு எழுதாமல் இருப்பதே மேல் அல்லவா? நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றறிந்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி.

எழுத்துப் பிழைகளுக்கு வருந்துகிறேன். சாப்பிடும் உணவில் கல்லாக கடினமாய் இருந்திருக்கும். அவசரமாய் எழுதியதால் என்றாலும் இனி கவனமாக இருக்க முயற்சிக்கிறேன் சுட்டியமைக்கும் நன்றிகள்

reply to this comment

23/07 19:51:04

arun wrote:

அன்பு தங்கமணி,

மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள், நன்றி.

நீங்களும் நானும் பல விஷயங்களில் வேறுபட்டிருப்பினும், கண்ணியமாகவே

கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளோம். அதே கண்ணியம் எல்லா நிலைகளிலும்,

எல்லாப் பதிவுகளிலும் இருக்குமாயின் கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமே இருக்கும்,

பிரச்சினைகளும் சச்சரவுகளும் அறவே இருக்காது. சமீபத்தில் சாதியின் பெயரை வைத்து,

எப்படியெல்லாம் தமிழ் இணையம் பாடாய்ப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம்.

அந்த ஆதங்கத்தில் விளைந்த மறுமொழி தான் அது. மற்றபடி, பத்மாவின் சேவை மனப்பான்மையையும், அவரின் நல்ல சிந்தனைகளையும் நான் நேரில் சந்தித்த போதே வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறேன்.

reply to this comment

23/07 19:54:15

Thangamani wrote:

நன்றி பத்மா, எழுத்துப்பிழைகளை நான் குறையாகச் சொல்லவில்லை; பிழை என்று குறிப்பிடும் அளவுக்கு அவை மட்டுமே இருப்பதாய்ச் சொல்லவே வந்தேன்.

நன்றி அருண்.

reply to this comment

23/07 20:45:30

ரஜீனிகாந்த் wrote:

ஆரம்பிச்சிட்டாங்கப்பா!!

reply to this comment

23/07 21:04:36

Ramya Nageswaran wrote:

இந்தப் பதிவு சிங்கப்பூர் சூழலுக்கும் மிகவும் தேவையான ஒரு பதிவு. நம்மூரிலாவது அவர்களுக்கு குடும்பம் இருக்கும், சுற்றார், நண்பர்கள் இருப்பார்கள். வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு போகலாம். ஆனால் இங்கே வேலை செய்ய வருபவர்கள் இரண்டு வருடங்கள் நம் குடும்பத்தோடு தங்கி வேலை செய்பவர்கள். தங்கள் நாட்டை, குடும்பத்தை, நண்பர்களை விட்டுவிட்டு நம் குடும்பத்திற்காக உழைக்கும் இவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துவது எவ்வளவு முக்கியம்? என் வீட்டில் 6 வருடமாக வேலை செய்யும் ரேணுகாவின் (ஸ்ரீலங்காவிலிருந்து வந்தவர்) மேல் எதற்காவது கோபம் வந்தால் நினைத்துக் கொள்வேன் “இவளைப் போல் கணவனை விட்டு பிரிந்து, இரண்டு குழந்தைகளைப் பிரிந்து உன்னால் பத்து நாட்கள் வேறோரு நாட்டில் வேலை செய்ய முடியுமா?’ என்று. கோபம் உடனே ஒரு constructive criticismஆக மாறிவிடும். என் இரண்டு குழந்தைகளுக்கு இரண்டாவது அம்மா அவள்.

reply to this comment

23/07 21:48:42

S. Sankarapandi wrote:

அன்புள்ள பத்மா,

எனக்கும் அருணைப்போலத்தான் தோன்றுகிறது. நீங்கள் உண்மையிலே அப்படி திட்டமிட்டு எழுதவில்லை என்றாலும், நீங்கள் காட்டும் நம் மண் உதாரணங்கள் அருண் சுட்டிக் காட்டியது போல பார்ப்பனர் மட்டுமே இப்படி நடந்து கொள்பவர்கள் என்று புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

மனிதர்களை பிறப்பின் அடிப்படையாலும், கல்வி, தொழில் மற்றும் செல்வம் அடிப்படையாலும் உயர்நிலை, இழிநிலை என நடத்தும் எண்ணம் பெரும்பாலான இந்தியரிடம் புதைந்திருக்கிற குணம். அதன் அடிப்படை பார்ப்பனியம், அந்த பார்ப்பனியத்தை எல்லாச் சாதியினரும், மதத்தினரும் உள்வாங்கிக் கொண்டுள்ளோம். எனவே பிறப்பால் பார்ப்பன சாதியில் தோன்றியவர்களை மட்டும் அவ்வாறு நடந்து கொள்வதாக சித்தரிப்பது மற்ற சாதியினர் தங்களைப் புனிதமானவர்களாகக் காட்டிக் கொள்ள மட்டுமே பயன்படும். இந்த மாதிரி வேலைக்காரி உதாரணங்களை மற்ற சாதியினரிடம் குறிப்பாக வேளாளச் சாதிகளில் இன்னும் கொஞ்சம் கொடுமை அதிகமாகவே கலந்து காண முடியும்.

பார்ப்பனியம் என்ற அதற்குறிய தத்துவப் பெயரை நான் இங்கு பயன்படுத்துவதை வைத்து அருணும், அவரது நண்பர் பி.கே.சிவக்குமாரும் என்னைச் சாதியை வைத்து சர்ச்சை செய்பவர் என்று முத்திரை குத்தி விடுவது எளிது. அவர் என்னைப் பற்றி புரிந்து கொள்ள முடியும் என முன்பு நம்பிக்கையில்லை. ஆனாலும் ஷங்கரின் ‘அன்னியன்’ படத்தில் உணராத சாதியப் பொதுமைப் படுத்தலை (ச்டெரெஒட்ய்பெ) பத்மாவின் பதிவுகளில் அருண் யோசித்துப் பார்த்தது நல்ல முன்னேற்றம்!

நன்றி – சொ. சங்கரபாண்டி

reply to this comment

23/07 22:16:49

S. Sankarapandi wrote:

முந்தையப் பின்னூட்டத்தின் இறுதியில் “பொதுமைப் படுத்தலை (stereotype)” என்று இருந்திருக்க வேண்டும்.

reply to this comment

23/07 22:21:31

arun wrote:

நண்பர் சங்கரபாண்டிக்கு,

நீங்கள் சாதியை வைத்து சர்ச்சை பண்ணுகிறீர்கள் என்று எங்கேயாவது நான் குறிப்பிட்டு,

வாதமோ அல்லது தனிப்பதிவுகளோ இட்டிருக்கிறேனா? சிவக்குமார் எனது இனிய

நண்பர். அவருடன் பல விஷயங்களில் ஒத்துப் போயிருக்கிறேன், மிகச்சில விஷயங்களில்

வேறுபட்டுமிருக்கிறேன். (அவரும் அப்படியே) அவரையும் என்னையும் சேர்த்து, ஊகமாக இப்படி செய்திருப்பார்கள்

என்றெல்லாம் இங்கே நீங்கள் எழுத வேண்டிய அவசியமே இல்லை என்பது தான் எனது கருத்து. என்னைப் புரிந்து கொள்ளமறுப்பவர்களைப் பற்றி, நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்க முடியாது. எனது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு, நான் எவற்றை எதிர்க்கிறேன் என்பதைப் புரிந்து

கொள்ள முடியும். பார்ப்பனீயம் என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் குறித்து, நான் தங்கமணியின் பதிவில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அடக்குமுறையின் அடையாளமாக நீங்கள் பார்ப்பனீயம்

என்று குறிப்பிட்டாலும், பார்ப்பனீயமும் ‘எல்லா’ பிராமணர்களும் ஒன்று தான் என்ற புரிதலில்

பலர் இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். இதைக் குறித்து விரிவாக நிறைய முறை பேசியாகி விட்டது. விடுங்கள்….பேசிப் பிரயோஜனமில்லை!

முன்னேற்றம் என்ற வார்த்தையைப் பார்த்தேன். எனது கருத்துக்கள் அப்படியே

தான் இருக்கிறது. இருப்பினும், அந்த வார்த்தைக்கும் புரிதலுக்கும் நன்றி. But I believe in two things – (1)’Life is a learning process!’

(2) ‘Day by day, in every way, Iam getting better and better’

- அன்புடன், அருண்

reply to this comment

23/07 23:21:41

Dondu wrote:

என்ன அருண் சார் புரியாமல் எழுதுகிறீர்கள். பத்மா அவர்கள் தான் பார்த்ததைப் பற்றி மட்டும்தானே எழுத முடியும்? அவ்ர பார்த்த முதலியார், செட்டியார், நாயுடு, மற்றும் பிற சாதியைச் சேர்ந்த எஜமானிகள் அன்னை தெரஸா போல இருந்திருப்பார்கள் போல.

பத்மா அவர்கள் எழுதிய இன்னொரு பதிவையும் பாருங்கள்.

“கணவனுடன் H4 விசாவில் வந்து வீடில் இருக்க போரடிக்கிறது என்ற மாமிகள் சிலரிடம் மருத்துவமனையில் தன்னார்வ தொண்டு செய்யௌங்களேன் என்று கூறி இருக்கிறேன். ஒரு நாளைக்கு 2 மணி நேரம். காசு தருவாளா என்ற கேள்விக்கு இல்லை என்று சொன்னதும், அட போ வேறா வேலையில்ல எனக்கு, அங்க போய் எறும் வேலை பார்க்க, ஆத்தில் படமாவது பார்க்கலாம் இது ஒருத்டர், எங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் புடிக்காது இது இன்னொருவர். இவர்களுக்கு ஆங்கிலமும் பேச தெரியும். இதே பெண்கள் மணிக்கு 8$க்கு மேசி போன்ற கடைகளில் வேலை பார்ததும், இதில் வர்ற காசில் என வேனா பண்ணுட்டார், நாங்க மூனு பேரும் ஒரே மாதிரி நெக்லஸ் வாங்கிக்க போறோம் என்று சொன்னதையும் பார்த்திருக்கிறேன்.”

மற்ற சாதித் தமிழ்பெண்கள் இவ்வாறு பேசுவார்களா?

தெரியாமல்தான் கேட்கிறேன், அது என்ன உதாரணங்கள் எல்லாம் ஒரு சாதியையே குறி வைத்து வருகின்றன?

இதற்கு பெயர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல என்று கூறுவார்கள். இது தெரியாமல் நீங்கள் எவ்விதமாக எழுதினாலும் சிலருடைய mindset மாறாது என்றுதான் கூற வேண்டும்.

மன்னிக்கவும் பத்மா அவர்களே, நான் என் சில வெளிப்படையான என்ணங்கள் கூறியதற்கு.

அன்புடன்,

டோண்டு ராகவன்

reply to this comment

24/07 00:27:30

Dondu wrote:

“பார்ப்பனியம் என்ற அதற்குறிய தத்துவப் பெயரை நான் இங்கு பயன்படுத்துவதை வைத்து அருணும், அவரது நண்பர் பி.கே.சிவக்குமாரும் என்னைச் சாதியை வைத்து சர்ச்சை செய்பவர் என்று முத்திரை குத்தி விடுவது எளிது.”

அது என்ன ஐயா பார்ப்பனியம் என்பது தத்துவப்பெயர் என்றெல்லாம் கூறுகிறீர்கள்? யார் வைத்தது அந்தத் தத்துவப்பெயரை? ஏன் உயர் சாதீயம் என்றால் புரியாதா? பார்ப்பனீயம் என்று எழுதிவிடுவது, பிறகு தட்டிக்கேட்டால் தத்துவப் பெயர் என்று சமாளிப்பது, என்ன இதெல்லாம்?

அன்புடன்,

டோண்டு ராகவன்

reply to this comment

24/07 00:49:04

P money wrote:

we had few domestic helps in my parents house , we always called them akka etc..and they were pretty much treated equal , we never wanted to call them anythingelse , simply with an understanding that everbody is somebody’s servant.

-P money

reply to this comment

24/07 00:57:54

mayavarathaan wrote:

இந்தப் பதிவுக்கு எதிர்வினையாக பல்வேறு உதாரணங்களுடன் பின்னூட்டம் இட முடியும். ஆனால் அது ‘மாயவரத்தான்’ இடும் பின்னூட்டம் என்பதினாலேயே விவாதம் திசை திரும்பும் ஆபத்து இருப்பதால் ‘அப்பீட்’ ஆகிக் கொள்கிறேன். ஆனாலும் அருணின் பின்னூட்டத்தை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கும் காமாலை கண்களை என்ன சொல்ல?!

reply to this comment

24/07 01:24:20

mugamoodi wrote:

// நாம் சற்று ஓய்வெடுத்து கொண்டு காபி அருந்த போவதில்லையா, இணையத்தில் உலாவுவது இல்லையா அல்லது நம் உறவினருடன் தொலை பேசுவதில்லையா? // அருமையான கருத்து… எங்கள் வீட்டில் வேலைக்காரி வைத்து கொண்டதில்லை… ஆனால் எங்கள் வீட்டுக்கு மார்கெட்டிங் செய்ய வருபவர்களை மரியாதையுடன் பேசி அனுப்புவேன்… (யுரேகா போர்ப்ஸ் விற்பனையாளருக்கு உபசரிப்பு ஒரு விதம், ஊதுபத்தி சொட்டு நீலம் விற்பவருக்கு இன்னொரு விதம் :: இது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும்) இன்று வரையிலும் டெலி மார்கெட்டிங் என்று -எல்லை மீறாமல் – தொல்லை தருபவர்களை கூட நான் மனம் புண்படாமல்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன், காரணம் சக மனிதர்கள் என்பதால்தான்… இது போன்று கார் ஓட்டுனர் என்று எத்தனையோ பேரை சொல்லலாம்.

இப்பதிவில் விவாதிக்கப்படும் மற்றுமொரு கருத்தை பற்றிய என் எண்ணம் :: என் வீட்டுக்கு எதிர் வீடு ஒரு ‘மாமி’ வீடுதான்.. அவர்கள் வேலைக்காரியை (வசந்தா) நடத்திய விதம் எங்களுக்கு ஆச்சரியம் அளித்த ஒன்று… அவர்கள் பெண்ணுக்கு தோசை ஊத்தும்போது செய்வது போலவே நெய் ஊற்றிதான் வசந்தாவுக்கும் தருவார்கள். பூஜை ரூம் தவிர எல்லா ரூமிலும் வசந்தாவிற்கு அனுமதி உண்டு (பூஜை ரூமில் அனுமதி மறுப்பது அவர்களின் உரிமை – அவர்கள் ஏதோ ஒரு விசேஷ விக்கிரகம் வைத்து வழிபடுவர்… யாருக்குமே அனாவசியமாக அனுமதி இல்லை – அதற்கும் ஜாதிக்கும் சம்பந்தம் இருப்பதாக நான் கருதவில்லை. என் வீட்டு படுக்கை அறையில் நான் அன்னியரை அனுமதிப்பதில்லை எனபது போலத்தான்) அவர்கள் வீட்டில் நகை எல்லாம் மேஜை மேல் இறைந்து கிடக்கும், வேலைக்காரியிடம் சாவி கொடுத்துவிட்டு ஊருக்கு செல்வார்கள்…. ஆக மனிதர்கள் எல்லாவிதமாகவும் இருக்கிறார்கள்…

எனவே உங்கள் கருத்தாக்கத்துக்கு தடையாக இல்லாத பட்சத்தில் நீங்கள் //சத்தமாக பேசிய மாமி ஒருவரை // என்பதற்கு பதில் //சத்தமாக பேசிய பெண்மணி ஒருவரை // என்றால் ப்ரச்னையே இல்லையே…

reply to this comment

24/07 02:05:41

NONO wrote:

நல்லபதிவு தொடருங்கள்!!!!

“சமீபத்தில் சாதியின் பெயரை வைத்து,

எப்படியெல்லாம் தமிழ் இணையம் பாடாய்ப்பட்டது”

பயப்பட்டால் எப்பிடி???? பின் விழைவுகளுக்கல்லாம் அஞ்சக்கூடாது!!! மனதுல எது தோன்றுதோ எழுத வேண்டியதுதான்!!!!

reply to this comment

24/07 02:32:41

S. Sankarapandi wrote:

அருண், முன்பு ஒருமுறை சிவக்குமார் என்னைப் பற்றி அவ்வாறாக எழுதியதற்கு பொதுவாக ஆதரித்து நீங்கள் பின்னூட்டமிட்டதை நினைவில் வைத்து அப்படி எழுதினேன். விளக்கத்துக்கு நன்றி.

//அது என்ன ஐயா பார்ப்பனியம் என்பது தத்துவப்பெயர் என்றெல்லாம் கூறுகிறீர்கள்? யார் வைத்தது அந்தத் தத்துவப்பெயரை? ஏன் உயர் சாதீயம் என்றால் புரியாதா? பார்ப்பனீயம் என்று எழுதிவிடுவது, பிறகு தட்டிக்கேட்டால் தத்துவப் பெயர் என்று சமாளிப்பது, என்ன இதெல்லாம்?//

திரு. டோண்டு ஐயா (உண்மையான டோண்டு ஐயா என்று நம்பி எழுதுகிறேன்),

வர்ணாஸ்ரம சாதிய அடுக்குமுறை தத்துவத்தை Brahminism அல்லது தமிழில் பார்ப்பனியம் என்று அழைத்தது வரலாற்று அறிஞர்கள். D D Kosambi, Romila Thapar, Bipan Chandra, R.S.Sharma and Satish Chandra போன்ற அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து எழுதியதே பின்னால் பொது வழக்கிலும் பயன் படுத்தப் பட்டு வருகிறது. பார்ப்பனியத்தையும், பார்ப்பனர் சாதியில் பிறந்தவர்களையும் அடிக்கடி போட்டுக் குழப்பிக் கொள்வது சில நேரங்களில் தவறாகவும், சில நேரங்களில் வேண்டுமென்றேவும் நடக்கின்றது. உங்களைப் போன்றவர்கள் வேண்டுமானால் சாதிய அடுக்குமுறை இந்துமதத்தை

பிராமணியம் என்று அழைக்கக் கூடாது என்று அரசுக்கு விண்ணப்பித்தோ அல்லது வழக்குத் தொடுத்தோ மாற்றலாம். உங்களது ஆதர்ஷ மனிதர் சோ இராமசாமி போன்றவர்கள் இவ்வளவு காலமாக இதைச் செய்யவில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறது.

நன்றி – சொ. சங்கரபாண்டி

reply to this comment

24/07 02:38:00

Dondu wrote:

உண்மையான டோண்டுதான் எழுதினேன், அதில் பிரச்சினையல்லை. முடிந்தால் சோ அவர்கள் எழுதிழ வெறுக்கத்தக்கதா பிராம்மணீழம் என்ற புத்தகத்தைப் படியுங்கள்.

மற்றப்படி என்னத்த கேஸு போட்டு, உருப்பட்டால் போலத்தான்.

வழக்கம் போல இந்தப் பின்னூட்டங்கள் எல்லாம் என் தனிப்பட்டப் பதிவிலும் வரும். பார்க்க

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments…

அன்புடன்,

டோண்டு ராகவன்

அன்புடன்,

டோண்டு ராகவன்

reply to this comment

24/07 02:47:24

Mathy Kandasamy wrote:

Thanks Padma.

Arun, as usual your response doest surprise me!

Padma, if anyone tries to talk about caste in a post such as this, we can only think about their humaneness.

-Mathy

reply to this comment

24/07 04:29:56

ராம்கி wrote:

வழக்கம்போல் விவாதம் திசை திரும்புகிறது.

அதுவும் பத்மா பதிவில்..

பதிவு செய்த எல்லொரும் தொடர்ந்து பத்மாவின் பதிவுகளை வாசித்து வருகிறவர்கள் என்பதும் தெரிகிறது.அப்படி இருக்கும் போது ஒரு தனிமனிதரின் அணுகுமுறை என்ற அளவில் மட்டுமே பார்க்கவேண்டிய ஒரு விஷயத்தை சாதி சார்ந்து பார்க்க வேண்டியதில்லை.

பத்மாவின் வேறொரு பதிவில் சிலகருத்துக்களை முன்வைத்திருந்தேன்.

//இந்தியாவில் 85 கோடி மக்களை 15 கோடி மக்கள் கண்டு கொள்வதில்லை என்பதே எனது புரிதல். நீங்கள் 15 கோடியில் இருந்து கொண்டு உண்மையாக 85 கோடிக்குக் கவலைப்படுகிறீர்கள்.// இந்தப் பதினைந்து கோடி என்பது பொதுவாக டோண்டு போன்றவர்கள் தட்டிக் கேட்கும் 2 முதல் 3 சதவீத மக்களை மட்டும் சேர்ந்தவர்கள் இல்லை. பலவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் சமூகம் பற்றிய கல்வியில் இந்தியாவில் வருணாசிரமக் கொள்கையை பார்ப்பனீயம் என்றே வழங்கி வருகிறார்கள். இந்தக் கொள்கையை உள்வாங்கி நடைமுறைப் படுத்துபவர்கள் பிறப்பால் பிராமணர்களாக ம்ட்டுமே இருக்க வேண்டியதில்லை. வளர்ந்த சூழலில் சிலருக்கு சில கருத்துக்கள் ஆழமான நம்பிக்கையாக உருவாகி இருக்கலாம். உலகைப் புரிந்து கொண்டு மேலும் வளரும்போது இத்தகைய கருத்துக்களும் நம்பிக்கைகளையும் விட்டொழித்தவர்களையும் நாம் காண முடிகிறது. விடாப்பிடியாக ஒருசில வாத்தைகளைப் பிடித்துக் கொண்டு விவாதத்தை வேறு திசைக்குத் திசைதிருப்புவது அவசியமில்லை என்பது எனது கருத்து.

வேலைக்காரி குறித்த பத்மாவின் நல்ல பதிவுக்கு ஆரோக்கியமான பின்னூட்டங்கள் உதவிகரமாக இருக்கும்.

தமிழ்மொழியே வஞ்சகம் செய்கிறது (புதிய சர்ச்சைக்கு அடித்தளம்?)

Domestic help என்பதற்கான தமிழாக்கமாக வேலைக்காரி இல்லை. வேலைக்காரி வரலையா என்ற கேள்வியிலேயே ஒரு ஆதிக்க உணர்வு தொனிக்கிறது.

தொடரும்

http://stationbench.blogspot.com…

reply to this comment

24/07 04:34:17

ராம்கி wrote:

சமையலறைக்குள் உள்ள “சிங்க்”கில் பாத்திரங்களைக் கழுவுவதற்கு வேலைகளுக்கு உதவுபவரை அனுமதிக்காத எத்தனையோ குடும்பங்களை எனக்குத் தெரியும். அவ்வளவு ஏன், பெற்ற பெண்களையே அந்த 3 நாட்களில் கழிப்பறை பக்கம் அமரச் செய்து உணவு கொடுக்கும் குடும்பங்களையும் எனக்குத் தெரியும்.(மகாஜனங்களே, எனது வார்த்தைகளில் கதாபாத்திரங்களின் சாதி தெரிகிறதா?) நான் பொதுவாக விவாதிக்கிறேன். பத்மா குறிப்பாக அவர் எதிர்கொண்ட சம்பவத்தில் இருந்து எழுதுகிறார். மாயவரத்தான் அனுபவத்தில் வேறு சாதியினர் ஆதிக்க இடத்தில் இருந்திருக்கக் கூடும். எனவே இதில் ஈடுபட்டவர் பிராமணரா, வேளாளரா, முதலியாரா, தேவரா, வன்னியரா, யாதவரா,தலித் பிரிவுகளில் ஒரு உட்பிரிவு இன்னொன்றின் மீதா என்பதல்ல முக்கியம். தனிமனிதர்களின் அணுகுமுறைகளில் மாற்றம் தேவை என்பதே பத்மாவின் பதிவின் நோக்கமாக இருக்க முடியும்.

எங்கோ ஒரு சிலரின் உள்ளங்களில் வலி ஏற்பட்டுவிட்டது என்று எழுதுவதை மாற்றிவிடாதீர்கள் பத்மா. (நிறுத்தி விடாதீர்கள் என்று எழுதக்கூட மனம் வரவில்லை)

http:stationbench.blogspot.com

reply to this comment

24/07 04:35:21

சுந்தரவடிவேல் wrote:

பத்மா, நல்ல பதிவு. ஆனால் உங்களது குறைந்த வலைப்பதிவு வாழ்வில்

நீங்கள் பார்ப்பனர்களின் பேச்சு வழக்கை எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம் எவற்றுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதை இன்னும் சரியாகக் கற்றுக் கொள்ளவில்லையென்றே நினைக்கிறேன். அதாவது அதை வைத்து திராவிடக் கட்சிக் காராளை, பார்ப்பனீயத்துக்கு எதிராய்ப் பேசி வருவாளை, இன்ன மாதிரி நாலு மத்தவாளைத் தாக்கியிருந்தாலோ அல்லது அதை வைத்து நாலு சினிமா போண்டா, கிரிக்கெட் வடை இந்த மாதிரி உருட்டியிருந்தாலோ உங்களுக்கு குடோஸ் கிடைத்திருக்கும். நீங்களோ இதை ஒரு வீட்டில் நடக்கும் கேட்டினைச் சுட்டிக்காட்டக் கைக் கொண்டு விட்டீர்கள். இதைப் போல் யாரும் இதற்கு முன் செய்ததில்லை. அதுதான் நீங்கள் இழைத்திருக்கும் பெருந்தவறு. இதற்காக உங்களுக்கு முதலாம் எச்சரிக்கையை அன்பாக விடுத்திருக்கிறார் அருண். துடைத்தெறிந்துவிட்டு உண்மைகளைத் தொடர்ந்து சொல்லுங்கள் பத்மா. நன்றி.

reply to this comment

24/07 06:24:52

anil wrote:

//வர்ணாஸ்ரம சாதிய அடுக்குமுறை தத்துவத்தை Brahminism அல்லது தமிழில் பார்ப்பனியம் என்று அழைத்தது வரலாற்று அறிஞர்கள். D D Kosambi, Romila Thapar, Bipan Chandra, R.S.Sharma and Satish Chandra போன்ற அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து எழுதியதே பின்னால் பொது வழக்கிலும் பயன் படுத்தப் பட்டு வருகிறது. பார்ப்பனியத்தையும், பார்ப்பனர் சாதியில் பிறந்தவர்களையும் அடிக்கடி போட்டுக் குழப்பிக் கொள்வது சில நேரங்களில் தவறாகவும், சில நேரங்களில் வேண்டுமென்றேவும் நடக்கின்றது. //

Dear S. Sankarapandi,

By the same logic, would you accept the use of the English word “pariah” (which incidentally was first recorded in the year 1613 and has been used widely by an equally impressive list of scholars)to denote anyone who is a social outcast and not a person belongging to specific caste?

reply to this comment

24/07 07:22:36

Arun wrote:

மதி…

Ausualllllllll,Your comment also doesn’t surprise me at all!

Iam very happy that your twisting didn’t work here well.

Keep up your work!

சுந்தரவடிவேல்,

அடேங்கப்பா…ஏதோ எங்களுக்குத் தெரிஞ்ச பொதுநடப்பு, வடை,பஜ்ஜி,கிரிக்கெட்,சினிமான்னு

நாலு விஷயம் எழுதிண்டு வர்றோம். அவாளுக்குத் தெரிஞ்சுது அவ்வளவு தான்..ஏதோ குடோஸ் வாங்கிட்டுப் போறான்னு விட்டுடுங்கோ! சமத்துவம், நீதி, நேர்மையெல்லாம் வளக்கறதுக்குத் தான் நீங்க இருக்கேளே…! முடிவா,நான் இதுவரைக்கும் எச்சரிக்கையெல்லாம் எங்கேயுமே விட்டது இல்லைங்காணும்….தோழி பத்மா கிட்டே எதுக்கு எச்சரிக்கையெல்லம் விடணும்?!

சுந்தரபாண்டி,

எந்தக் கட்டுரை என்று நினைவில்லை. அந்தக் கட்டுரை பொதுவாக எழுதப்பட்டது போல் ஒரு ஞாபகம். இது குறித்து, நாம் கடிதங்கள் பரிமாறிக்கொண்டதாய் கூட ஞாபகம்.

- அருண் வைத்யநாதன்

reply to this comment

24/07 07:35:17

Padma Arvind wrote:

நண்பர்களே: பின்னூட்டங்களுக்கு நன்றிகள். ராம்கி: மிக தெளிவாக எழுதுகிறீர்கள். நான் பார்த்த கேட்ட சம்பவங்களையும், அனுபவித்த சில விஷயங்களையும் எழுதினேன். எடிசனில் 9 கெஜம் கட்டி போகிற சிலர் என்ன இனம் என்பது அவர்களே குறிப்பால் உணர்த்துகிறார்கள். மற்றவர்கள் என்ன உட்பிரிவு, என்ன சாதி என்று எனக்கு தெரியது. இத்தனை உட்பிரிவுகள் இருந்ததும் இருப்பதும் கூட எனக்கு தெரியது என்பது உண்மை. இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். இன்னும் சொல்ல போனால் தமிழர்கள் பலருக்கும் அறிமுகமான ஒருவரின் மனைவி தானும் குழுவினரால் ஏற்று கொள்ள படவேண்டும் என்று அவர்களின் பழக்க வழக்கங்களை செய்ததோடு மடிசார் வரை கட்டி கொண்டதும் செய்வதும் எனக்கு தெரியும்.

டோண்டு அவர்களே: முகமூடியும் P என்பவரும் தங்களுக்கு தெரிந்ததை எழுதி இருக்கிறார்கள். அவர்களின் அனுபவம் நன்றாக இருக்கிறது. நீங்களும் அப்படி எழுதி இருக்கலாம். தெரிந்துகொள்கிறேன்.

நான் ஒரு வேலைக்காரியாக இருந்த போது பட்ட சில அனுபவங்கள் இதில் உண்டு. இங்கே பின்னூட்டமிட்ட எவருக்கும் அந்த அனுபவம் இல்லல என்று நினைக்கிறேன்.

reply to this comment

24/07 07:36:44

Padma Arvind wrote:

முகமூடி, ரம்யா, P, மற்றும் நோநோ ஆகியோருக்கு நன்றீகள். முகமூடி: நீங்கள் சொன்னதுபோல பெண்மணி என்றால் பிரச்சினை இல்லை. நான் கேட்டதை அப்படியேதான் எழுதினேன். என் விடுமுறை 10 நாட்கள் பெங்களூரிலும் 4 நாட்கள் திருவரங்கத்திலும் கழியும். பெங்களூரில் உள்ள நாட்கள் IISc, Medical Institue என்று விரைவாக போய்விடும். திருவரங்கத்தில் நான் பார்ப்பதும் கேட்பதும் இது மட்டுமே.

மாயவரத்தான்: முதன்முறையாக எனது பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.

சுந்தரவடிவேல்: தெரிந்து கொள்ள வேண்டியது எனக்கு நிறைய. அதுவும் எழுதும் முன்னால் இது சர்ச்சைக்கு உரியது, இந்த வார்த்தைகள் இன்னாரை குறிப்பிடும் என்று யோசித்து எழுத வேண்டி கற்று கொள்வது நிறைய.

reply to this comment

24/07 07:38:21

Padma Arvind wrote:

ஸ்டேஷன் பென்ச் ராம்கி: அவ்வளவு ஏன், பெற்ற பெண்களையே அந்த 3 நாட்களில் கழிப்பறை பக்கம் அமரச் செய்து உணவு கொடுக்கும் குடும்பங்களையும் எனக்குத் தெரியும் உண்மைதான். இதை செய்யாததால் நாங்கள் வீட்டில் தீட்டு கலந்து தெய்வ குற்றம் சுமத்துகிறோம் என்று வீட்டை விட்டு வெளியேற்றபட்டதும் இன்னமும் பல வாழ்நாள் அனுபவங்கள் வந்து போகின்றன.

நண்பர்களே: வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் தன்மானம் உண்டு என்று சொல்வதே இதன் நோக்கம். மேலும் வன்புணரப்பட்ட பெண் ஹிந்தி பேசுவதால் வட இந்தியர்மட்டும் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று சொல்லாதீர்கள். உங்களின் எழுத்துக்கள் எனக்கு பிடித்திருக்கிறது.

reply to this comment

24/07 07:38:57

Padma Arvind wrote:

தனிப்பட்ட எந்த ஒரு இனத்தையும் நான் குறிக்கவில்லை.

அதேபோல டோண்டு: என் முந்தைய பதிவில் இருந்து நீங்கள் உங்களுக்கு தோதுவான ஒன்றை மேற்கோளிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதில் ” என் வீட்டுக்காரருக்கு இதெல்லாம் பிடிக்காது என்று சொன்ன பெண்களையும் எழுதி இருந்தேன். அதேபோல பொதுவாக தென்னிந்தியர்களையும் குறித்திருந்தேன்.

reply to this comment

24/07 07:43:21

சுந்தரவடிவேல் wrote:

அருண்,

உங்களுக்குத் தெரிஞ்சத பேஷா எழுதுங்கோ, ஆனா அடுத்தவா எதை, எப்படி எழுதணும் எழுதப்படாதுங்கறதத் தீர்மானிச்சு அதை ‘அன்பா’ச் சொல்றேள் பாருங்கோ அங்கதான் நிக்கறேள்! உம்மை ரொம்ப காலமாத் தெரியுங்காணும்

reply to this comment

24/07 08:24:33

arun wrote:

சுந்தரவடிவேல்,

நான் யார் எப்படி எழுதணும்னு தீர்மானிக்கலை ஓய்…நல்லபடியா எழுதறதைக் கூட திரிக்கறதுக்கும்,

உரிக்கறதுக்கும் நெறைய பேரு இருக்கான்னு என்னோட ஆதங்கத்தை சொன்னேன். அதுவும் எல்லார் கிட்டேயும்

போய் சொல்லிண்டு இருக்கலை..நல்லா தெரிஞ்சவாக்கிட்டே, நல்ல விதமா எனக்குத் தெரிஞ்சதை சொன்னேன்.

உம்மையும் எமக்கு ரொம்ப காஆஆஆஆஆலமாவே பேஷா தெரியுங்காணும்!

முடிவாக, நான் சொல்ல வேண்டியதை சொல்லியாகி விட்டது. பத்மாவும், நல்ல நண்பராகத் தான் அருண்

சொல்லியிருக்கிறார் என்று அதை எடுத்துக் கொண்டாகி விட்டது. இனிமேலும் இந்த விவாதத்தை நீட்டிப்பதில்

அர்த்தமில்லை. (No more comments from my side – I have made my views very clear. Thank you padma for everything,All the best!)

reply to this comment

24/07 08:56:21

mayavarathaan wrote:

விவாதம் எப்படி வேண்டுமானாலும் செல்லட்டும். ஆனால் சுந்தரவடிவேல் கிண்டலடிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ‘ஒரு குறிப்பிட்ட பிரிவினரை கிண்டலடிக்கும்’ தொனியில் வார்த்தைகளை அள்ளி வீசுவது நியாயமா?இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

reply to this comment

24/07 09:47:17

சுந்தரவடிவேல் wrote:

அருண்,

//கொஞ்சம் முத்திரை குத்தும் விதமாகவும், ஸ்டீரியோ டைப்பாக எழுதப்படும் பதிவுகளையும் தவிர்த்தால் நன்றாயிருக்குமென்று நினைக்கிறேன்.//

இந்தச் சட்டாம்பிள்ளை வேலையை “நல்ல விதமாக, நன்றாய்த் தெரிந்தவர்களிடம்”தான் செய்கிறீர்களக்கும்? போம் ஓய்! பஞ்சாயத்துப் பஞ்சவர்ணத்தைப் பற்றி எழுதப் போகும் முன்னரே சதையாடி வந்து “நல்ல விதமாக”ச் சொல்லிச் சென்ற அன்பாளராயிற்றே நீர்! இப்போது ஒரு பார்ப்பனரே கோடாரிக் காம்பாகப் போகிறாரோ என்ற நடுக்கமே உம்மை இப்படி எழுத வைக்கிறது ஓய்!

என் அனுபவத்தில் உம்மோடு பேசுவதில் அர்த்தமில்லையென்று தெரியும், நிறுத்திக் கொள்கிறேன்.

//(1)’Life is a learning process!’

(2) ‘Day by day, in every way, Iam getting better and better’//

reply to this comment

24/07 09:47:24

Arun wrote:

என் அனுபவத்தில் உம்மோடு பேசுவதில் அர்த்தமில்லையென்று தெரியும், நிறுத்திக் கொள்கிறேன்.

Same here!

reply to this comment

24/07 15:01:18

S. Sankarapandi wrote:

//Arun asks -

Dear S. Sankarapandi,

By the same logic, would you accept the use of the English word “pariah” (which incidentally was first recorded in the year 1613 and has been used widely by an equally impressive list of scholars)to denote anyone who is a social outcast and not a person belongging to specific caste?

I am surprised whenever people like you think that they can compare the denigration of a Dalit to the criticism or hostility towards a Brahmin. The dictionary use of the word ‘pariah’ is derogatory to the Dalits. You are complaining as if the word ‘Brahmin’ is used akin to a criminal. Belittling the Pariah (Dalit) community by calling an anti-social with the name ‘pariah’ cannot in any way be compared to the embarrassment of the Brahmins by calling the divisive philosophy as Brahminism. By doing so, we further suppress the torment felt by a Dalit.

Since I disallow such a comparison, it is unnecessary to cite the appeal from the Pariah Mahajan Sabha after Independence to desist from using the word ‘pariah’ and how Indian government responded favorably. I do not recollect the specifics but I remember it in the context of when Ms. Jayalalitha (in her previous regime) filed a case against Dr. Subramaniam Swami based on the inappropriate use of the word ‘pariah’.

reply to this comment

24/07 15:19:52

ravi srinivas wrote:

சு.சுவாமி அந்த வார்த்தையினை உபயோகப்படுத்தியது புலிகள் இயக்கம் சர்வதேச அளவில் தீண்டத்தாகதாக இருக்கிறது என்ற பொருளில். ஆனால் இது தலித்களைக் கேவலப்படுத்துவதாக உள்ளது ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது தலித்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வாதாடிக் கொண்டிருந்த சு.சுவாமி இதைக் குறிப்பிட்டு தன்னை கைது செய்வதற்கு தடை உத்தரவு பெற்றார். பின்னர் உச்ச நீதி மன்றத்தில் அவ்வழக்கிற்கு தடை பெற்றார். பின்னர் அரசே அவ்வழக்கினை வாபஸ் பெற்றுவிட்டது. இதை என் நினைவிலிருந்து எழுதுகிறேன். இப்போதும் ஒருவர் என்னை அந்த வார்த்தையினைப் பயன்படுத்தி திட்டினார் அல்லது ஜாதி பெயரைக் குறிப்பிட்டு கிண்டல் செய்தார் என்று புகார் செய்தால் அச்சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

அந்த வார்த்தை ஆங்கில அகராதியில் இருக்கிறது, தீண்டத்தகாத, விலக்கி வைக்கப்பட்ட என்ற பொருளில் அதை பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்தப் பெயரில் ஒரு கணினி விளையாட்டும் இருக்கிறது. ஆகவே இப்போது அது எதைக் குறிக்க எங்கு என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனிக்காமல் ஒரே அர்த்தம்தான் இருக்கிறது என்று நினைத்துவிட முடியாது.

reply to this comment

24/07 18:02:34

ravi srinivas wrote:

wikipedia says

Pariah, originally the name of the Pariah (people) in India, has gained widespread use as an analogy, especially in the phrase “social pariah”, as a term for anyone excluded from society, such as the homeless, or a social group. This use is sometimes considered to be offensive. It has also been adopted as:

Pariah dog

Pariah comic book

Pariah computer game

Pariah band

reply to this comment

24/07 18:04:35

ravi srinivas wrote:

ஆனால் இது தலித்களைக் கேவலப்படுத்துவதாக உள்ளது ஒருவர் கொடுத்த புகாரின் பேரில்

it should be

ஆனால் இது தலித்களைக் கேவலப்படுத்துவதாக உள்ளது என்று ஒருவர் கொடுத்த புகாரின் பேரில்

reply to this comment

24/07 18:10:57

sarah wrote:

//பத்மா, உங்களிடம் ஒரு கேள்வி. நீங்க தமிழ் நாட்டில் இருக்கும்போது உங்க வீட்டில் வேலையாட்கள் இருந்திருக்கிறார்களா? அவர்களை என்றாவது நீங்கள் டைனிங் டேபிளில் உட்கார வைத்து சப்பாடு போட்டிருக்கிறீர்களா? //

நான் எனது வீட்டில் எனது வேலைக்காரம்மாவை , அம்மா என்று தான் கூப்பிடும் பழக்கம் (இந்தியாவில் இருந்தபொழுது), அவங்க தாழ்ந்த ஜாதிதான். நாங்கள் சாப்பிட்டு முடித்தபின் , எனக்கு நேரம் இருக்கும் பொழுதெல்லாம், அந்தம்மாவை டைனிங் டேபிலிள் உட்கார வைட்துப் பரிமாறி இருக்கிறேன். இதையெல்லாம் பார்திருந்தாலும், இன்றும் கூட எனது அம்மா (உயர் ஜாதி (பிராமணர் அல்ல) ) தன்னால் முடியாவிட்டாலும், தாழ்ந்த ஜாதிப் பெண்களே வேலைக்குக் கிடைப்பதால், ஓட்டலில் வாங்கிச் சாப்பிடுவதே பெருமை!!! ( கான்சர் வயப் பட்டவர்) என்று நினைக்கிறார். ஆசிரியராய் இருந்தவர், (ஜாதி இரண்டொழிய வேறில்லைனு சொல்லி மாணவனுக்குச் சொல்வீர்கலே , இப்படி நீங்களே செய்யலாமா எனக் கேட்டால் (போன மாதம் ) அவர்கள் பதில் — புத்தகத்தில் இருப்பது வாழ்க்கைக்கு உதவாது– என்ன செய்ய?. இவர்களிடம், பேசவே முடியாது பத்மா, பெற்ற அம்மாவிடமே சொல்லிப் புரியவைக்கமுடியாத பொழுது பேசமுடியாத பொழுது மற்றவர்களிடம் என்ன சொல்ல என்ற சளிப்பு பல தறுணங்களில் எனக்கு வந்தாலும், எனக்கு இது போன்ற எண்ணத்தை என்னுள் விதைத்த மிகப் பெரிய மனிதர்களுக்கு நான் திறும்பிச் செலுத்தும் நன்றியாகவே இதைப் பார்க்கிறேன். இன்றும் எனது ஊரில், பிராமணருக்கும், வன்னாருக்கும், நாசுவனுக்கும் ஒரே இடம் தான் ( அதாவது அவர்கள் முற்றம் வரைதான் வந்து போகலாம்), சக்கிலியர், பறையரொ அவர்கள் கல்வி கற்பிக்கும் ஆசிரியராய் இருந்தாலும் நிலைப்படியைக் கடந்து உள்ளே வர முடியாது.

பிராமணர் , தனது வகுப்பினரைத் தவிர அனைவரையும் கீழ் என்பதுபோல, பல மேட்டுக்குடி பண்ணையார்களும் தமது இனமே உயர்ந்தது, ஆனால் சக்கிலியர் , பறையர் இனம் தாழ்ந்தது என்று நினைக்கின்றனர்.

இதெல்லாம் இங்கு எழுதுகிற அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், எதைக் காக்கும் பொருட்டு இவ்வாறு சண்டை போடுகிறார்கள் என்பது எழுதுபவர்க்கும் தெரியும், அதை வாசித்து மறுபடி பதிலனுப்புவர்களுக்கும் தெரியும்.

(தொடரும்..)

reply to this comment

24/07 18:48:48

sarah wrote:

ஆனால், பத்மா கூற வந்த பிரச்சினை அதுவல்லவென்றே நான் நினைக்கிறேன்.

ஏனெனில் சோ காட்டாத பிராமணீயமா, பாரதி காட்டாத பிராமணக் குதர்க்கங்களா பத்மா இன்று அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு விளக்குகிறார்?. எனக்குத் தெறிந்த வகையில், நான் படித்த வரையில் அவர் வாழ்க்கையை எவ்வாறு பார்க்கிறார், எங்கெங்கு பாதிக்கப் படுகிறார், எங்கெங்கு உதவி செய்கிறார் போன்ற அனுபவங்களை எழுதுகிறார் என்றே எனக்குப் புலப்படுகிறது.

“தம்மினும் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க

தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக எற்றே இவர்க்கு நாமென்று”

கற்றல், படிப்பு மட்டுமல்ல

வாழ்கையையும் அதனைச் சார்ந்த அனுபவங்களையும்.

இவ்வளவு விரிவாகச் சண்டை போடுகிறவர்கள், ஏன் இந்தப் பிறழ்வைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?, நானும் , எனது ஜாதியைக் குறிப்பிட்டு யாராவது ஓ, நீங்களா, இந்த …. ஆரம்பிசாங்கனா, விடு ஜுட். ஆனால், தன்னை இந்த ஜாதி என்னும் ஒரு வெற்றுச் சொல்லில் (ஒரு கறுத்தாக்கம் மட்டுமே என்பதனை உணராமல்) பிணைத்து , அதற்கெல்லாம் எந்த விதத்திலும் சமனே இல்லாத உயிருள்ள மனிதர்களுடன் ஏற்றத்தாழ்வையோ , சண்டையயோ ஏன் போட்டுக் கொல்(ள்)கிறொம் என்பது எனக்கு விளங்காமலில்லை. உங்களுக்கு?

பத்மா விளக்க வந்தது மனிதர்கள், சக மனிதர்களை நடத்தும் விதத்தை என்றே நான் புரிந்துகொள்கிறேன்.

(தொடரும்..)

reply to this comment

24/07 18:49:59

sarah wrote:

//நீங்கள் இது போலெல்லாம் எழுதுவதால், இருபது பேர் வந்து ‘நல்ல பதிவுகள், நன்றி பத்மா’ என்று எழுதிவிட்டு செல்வார்கள். ஆனால், இருபதில் மூன்று பேராவது…இதை அவர்கள் வசதிக்கேற்றவாறு திரித்தும், உரித்தும் எழுதி விடுவார்கள்.//

எல்லோரும், அவரவர் வசதிக்கேற்றவாறுதான் வாழ்கிறார்கள். வாழ்க்கையைப்புரிந்துகொள்கிறார்கள். அன்று அந்தத் தச்சனைக் கொன்ற அந்த சமுகமேதான் இன்று அவன் பெயரில் காசு பார்க்கிறது, பிறனை அடக்குகிறது. அன்று பாரதியைத்தனது தெருவில் வைதிருந்தாலே அசிங்கம் என்று நினைத்த ஜாதி, இன்று அவன் பாடல்களைத் தமது பிள்ளைகளை அவன் பாடலுக்கு பாட்டுப் பாட, டான்ஸ் ஆட வைக்கிறதில் பெருமை அடைகிறது.

இதனையெல்லாம், படிக்காமல், அதைத் தன்னளவில் புரிந்து கொள்ளாமல் விட்டால் அதற்கு அந்தத் தச்சன், பாரதி எப்படிப் பொறுப்பேற்க முடியும்?. அல்லது நாம் எப்படி வாழ்கையைப் புரிந்து கொள்வது?. அடக்கப்படுபவன் தான் அடக்கப் படுகிறோம் என்பதனை உணராதவரை அடக்குபவர் ஆளுமை செய்துகொண்டேதான் இருப்பர்.

இந்தியாவில் வாழும் மிகப் பெரிய மக்கள் தொகைக்கு ராமன் ஒரு கடவுள், என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு அயோக்கியன், தன்னையே நம்பி வந்த தனது மனைவியைக் கூட பிறர் சொல்லுக்காகப் பலி கொடுத்தவன்.

இதையெல்லாம், யாரோ ஒருவர் எழுதுவதினாலேயே படிக்கமுடிந்தது, கம்பரை மட்டும் படித்திருந்தால் வேறு பார்வையில் மட்டுமே பார்த்திருப்பேன். ஆனால், இதைப் பற்றிய மீள் பார்வையை நிரையப் பேர் எழுதியதால் படிக்கமுடிந்தது. பின்னர் என்னால் ராமனைப் பற்றிய பார்வையை மாற்றி அமைக்க முடிந்தது. ( இதிலும் ராமன் ஒரு பிராமணக் கடவுள் என்று எழுதி என்னை வம்புக்கிழுக்க என்னால் அனுமதிக்கமுடியாது, ஏனெனில் கடவுளைப் பற்றிய எனது பார்வை இந்தத்தளத்தில் வாராதது).

ஆதலால், எழுதுபவரை எழுதாதே என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை ஒரு ஆக்கிரமிப்புச் செயலாகவே பார்க்கப் படுகிறது. அதுவும் எழுதுபவரே இதில் உள் நோக்கம் ஒன்றும் இல்லை என எழுதிய பின்னும் விவாதிப்பது ஒரு நல்ல விவாதமாகவே எனக்குப் படவில்லை.

(தொடரும்..)

reply to this comment

24/07 18:52:58

sarah wrote:

நமக்குத் தெறிந்து நிறையப் புத்தகங்களை நாம் படிப்பதில்லை. அதுபோல, பிடிக்கவில்லயெனில் படிக்காமல் இருக்கலாம், அல்லது ஒரு நல்ல தர்க்கரீதியான காரணங்கள் காட்டி ஏன் இப்படி என்று கேட்கலாம், அதை விடுத்து எழுதியவர் நான் அப்படி எழுதவில்லை என்ரு சொன்ன பின்னும் பின்னூட்டமிட்டுப் படுத்துவது , அல்லது தான் எழுதுவதே தவரோ என்ற பார்வைக்கு அவரைத் தள்ளுவது என்பது ஒரு நாகரீகமற்ற செயலாகவே எனக்குப் படுகிறது.

என்ன இதற்கு மேல் எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை பத்மா.

நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். இப்படிப் பட்ட சர்ச்சைகளால் மனம் புண் படாதீர்கள். எழுதுங்கள். அது நிறைய பேருக்கு வாழ்க்கையை தட்டையாகப் (ஒரு பரிமாணம்)பார்க்காமல், முழுதுமாகப் (முப்பரிமாணம்) பார்க்கிற வாய்ப்பினைத் தரும்.

சாரா

reply to this comment

24/07 18:53:44

senthil wrote:

Hats off Sarah.

Ennal Tamilil ezutha mudiyathu. But,

Naan ninachathai appadiye eluthi irukireergal.

Padma, Dont get discouragred by these type of chain comments. These people are all doing this kind of conversations, because they cant think “Out of the box”.

I didnot find any kind of stereotypeness in your blog.For eg, within one week, you wrote about Shivaji Ganeshan and Kannadasan.Also, these kind of experience sharing(like the one above) is giving more clarity in my thinking.

Personally I feel Arun should given his comments in mail. But later on he explained which is OK.After than also argument cotinues means people are trying to satisfy their ego.

Also I feel very bad about the incident happened to that 12 year girl.Did police had taken any action over the concerned??

reply to this comment

24/07 19:33:35

senthil wrote:

Read the third para like this

Personally I feel Arun should given his comments in mail. But later on he explained the reason why he mentioned here, which is OK. After than also argument cotinues means people are trying to satisfy their ego.Also nobody even concerned why,what happened to that girl

reply to this comment

24/07 19:35:44

Padma Arvind wrote:

நன்றி சாரா. விரிவாக எழுதுகிறேன். என் சிந்தனைகளை புரிந்து கொண்டமைக்கும் உண்மையாக எழுதியமைக்கும் என் நன்றிகள்.

செந்தில்: 12 வயது பெண் பற்றிய கவலையைவிட இன்னொருகுலத்தை எடுத்துக்காட்டாக சொல்லாததுதான் முக்கிய தவறு!

சிறீய பெண் மீது வன்புணர்ச்சி இருந்தது, குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பாக வேலைக்கு வைத்து கொண்டது என்ற வழக்குகள் பதிவாகி இருக்கிறது. பெண்ணின் பெற்றோர்மீதும் குழந்தையை சரியாக கவனிக்காத வழக்கு பதிவாகி இருக்கிறது. நாளை தான் தெரியும் ஜாமீன் உண்டா இல்லையா என்று. நன்றிகள் பல

reply to this comment

24/07 20:56:30

mayavarathaan wrote:

//நான் எனது வீட்டில் எனது வேலைக்காரம்மாவ, அவங்க தாழ்ந்த ஜாதிதான். நாங்கள் சாப்பிட்டு முடித்தபின் , எனக்கு நேரம் இருக்கும் பொழுதெல்லாம், அந்தம்மாவை டைனிங் டேபிலிள் உட்கார வைட்துப் பரிமாறி இருக்கிறேன். //

ஹும்.. இதிலே என்ன பெருமையைக் கண்டீர்கள் சாரா? எழுதியது தான் எழுதுகிறீர்கள்…நீங்கள் சாப்பிடும் போதே கூட உட்கார வைத்து சாப்பிடச் சொல்லுவேன் என்று எழுதினாலாவது உங்கள் மேல் ஒரு தனி இமேஜை இங்கே வளர்த்துக் கொண்டிருக்கலாம்.

reply to this comment

24/07 21:05:58

arun wrote:

அன்புள்ள சங்கரபாண்டி,

அனில் என்று கூறியவர் கருத்தை நான் கூறியதாக நினைத்து, பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

கொஞ்சம் கண்ணைத் திறந்து வைத்து, முடிந்தால் மனதையும் திறந்து வைத்து…இது போன்று

எனது பெயரை இழுப்பதற்கு முன்னால் யோசித்தால், புண்ணியமாய்ப் போகும்.

- அருண் வைத்யநாதன்

reply to this comment

24/07 22:13:28

anil wrote:

Dear S. Sankarapandi,

I agree equating an outcast (btw, the dictionary usage of the word, as Ravi Srinivas points out, is to refer to anyone who is excluded from society, such as the homeless, or a social group, and NOT someone who is anti-social as you incorrectly indicate) to the dalits is offensive to the community. Thus when Subramanya Swamy called the Tamil Tigers as international pariahs, meaning they are being shunned world over, people here for whom the word carries centuries of hurt, got rightfully outraged. My suspicion is that, Swamy was not well informed about the word usage and the present sentiments surrounding it, beyond its literal meaning. And that is to be expected, as he is product of western education and far removed from ground realities – perhaps not unlike some of the history experts that you quote in your earlier reply.

You say the word ‘pariah’ has a negative connotation and therefore is derogatory to the dalit community, but the word ‘brahmin’ (or brahminism’), which is increasingly used to denote oppressive, divisive, devious, wily, or manipulative group of individuals, is not. I am just wondering how this is not negative connotation and how it manages to be not derogatory to the brahmin community?

Perhaps the answer to that question lies in how you use the word ‘degenerating’, ‘belittling’ and ‘tormenting’ when referring to the plight of dalits, while using the words ‘criticism’, ‘hostility’ and ‘embarrassment’ while referring to the plight(!) of brahmins. Obviously you think the latter is insignificant or at least not as serious as the former.

My view is that the two are not very different and that history may well be on its way to repeating itself. Brahmins are fast becoming the new pariahs.

reply to this comment

24/07 23:39:53

S. Sankarapandi wrote:

அன்புள்ள அருண்,

நாம் இருவரும் விவாதித்துக் கொண்டிருந்ததால், இடையில் வந்த அனிலை அருண் என்று தவறாக வாசித்து எழுதி விட்டேன். மன்னித்து விடுங்கள்.

நான் எழுதிய முந்தைய பின்னூட்டத்தில், அருண் என்பதை அனில் என்று மாற்றி வாசித்துக் கொள்ளுங்கள் என்று வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி – சொ. சங்கரபாண்டி

reply to this comment

24/07 23:47:43

S. Sankarapandi wrote:

Dear Anil,

//My view is that the two are not very different and that history may well be on its way to repeating itself. Brahmins are fast becoming the new pariahs.//

If this is what you think, I have no answer; I will let others judge the veracity of your claim.

reply to this comment

24/07 23:52:53

kk wrote:

Padma,

You mentioned about the girl who was molested only while replying to arun’s comments. Had you mentioned this in your post first and then written the rest of the matter, you would have made your point very clear.

I have read each one of your posts and can recollect everything you have written even when I am not before the PC. I have read them repeatedly. Your article “manadhil urudhi vendum” was lingering in my mind for days. But of late the impact your posts make is

somewhat diminished.

Since you deal with the suffereing /affected people on a daily basis your writings carry your true feelings/pain. You remind me of some characters in Ayn Rand’s novels. You are idealistic. But not everyone can be like that.

But in real life we cannot classify people as fully good or fully bad. They are a combination of many factors.I have seen dozens of families who treat their domestic helps decently. I have seen some who treat them very badly.

(continued)

reply to this comment

25/07 00:29:11

Dondu wrote:

“தனிப்பட்ட எந்த ஒரு இனத்தையும் நான் குறிக்கவில்லை.

அதேபோல டோண்டு: என் முந்தைய பதிவில் இருந்து நீங்கள் உங்களுக்கு தோதுவான ஒன்றை மேற்கோளிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதில் ” என் வீட்டுக்காரருக்கு இதெல்லாம் பிடிக்காது என்று சொன்ன பெண்களையும் எழுதி இருந்தேன். அதேபோல பொதுவாக தென்னிந்தியர்களையும் குறித்திருந்தேன்.”

நான் என் கட்சியை நிலைநிறுத்த எழுதும்போது எனக்கு சாதகமானதைத்தான் மேற்கோள் காட்ட முடியும்? இதில் என்ன தவறு? அதைத்தானே எல்லோரும் செய்கிறார்கள். வாதம் புரிபவர் தன் கட்சிக்கு சாதகமானதைத்தான் பட்டியலிடுவார்.

உங்கள் அடுத்த பாயிண்டுக்கு வருவோம். நீங்கள் கூறுகிறீர்கள் பார்ப்பனப் பெண்மணிகளைப் பற்றிக் கூறிய அதே பதிவில் பொதுப்படையாகவும் அதாவது பார்ப்பனரல்லாதவரைப் பற்றியும் எழுதினீர்கள் என்று.

பார்ப்பனரல்லாதவர்கள் என்று ஒரு ஜாதி கிடையாது. பார்ப்பனரைப் பற்றி எழுதிய பதிவில் முதலியார், செட்டியார் என்றெல்லாம் பிரிக்காமல் தென்னிந்தியர்கள் என்று குறிப்பிட்டேன் என்கிறீர்கள். அதற்கு பேசாமல் ஒரு சாதியையும் குறிப்பிடாமல் இருப்பதுதானே. இப்போது நீங்கள் கூறுவது சப்பைகட்டாகவே தோன்றுகிறது.

அன்புடன்,

டோண்டு ராகவன்

reply to this comment

25/07 00:30:13

kk wrote:

If you can see god in your hearts, then no need to go look for him in temples. But how many of us have such a maturity and self realization? Temples and rituals are only stepping stones in realizing oneself. People are in different levels of maturity and if going to temple soothes and comforts one then why not?

The instances you have quoted in your posts, I have similar experiences with a majority north indian community (in US). Only thing I realise is WE are becoming more materialistic nowadays(irrespective of cate and community).

When a person of any other community is not referrred to by his caste/community, why only brahmins?

As a social worker, you must be interacting with all kinds of people. When you refer to a north indian (in your previous posts) you only mention if he/she is a gujarati, bihari etc. When it is tamilians, why mention the caste ( if is is a community specific issue such as UPANAYANAM it is fine).

reply to this comment

25/07 01:35:54

raj wrote:

Dear Padma,

very thoughtful post. Few years back, a movie called “KUTTY” was screened in the theaters. Of course like any other good movie it was a failure by movie standards. The movie is all about poor girls who take up housemaid jobs due to poverty. The girl who acted in the movie had done a commendable job. She works as a helper in a family where both the husband and wife are working (Actor Ramesh Aravind and Kausalya) they take care of her well, but the trouble starts when the hero’s mother (M.N. Rajam) comes to stay with them. the girls wants to leave the house at one satge but don’t know how to go to her house. She is cheated by a street vendor who sell her to Mumbai brothel brokers but telling her that she is going home. The movie ends there with her sitting in the train which is leaving to Mumbai. Very touching movie and at the end of it I was crying.

Similarly sometime last year, in “Kumudam Jyothidam’ the editor of the magazine narrated an incident. He was in a restaurant where he saw a wealthy family, they brought along a maid girl of 8-9 years old who was holding a feeding bottle for a toddler in the family. The people ate well, and all the while the girl was standing there holding the bottle and looking. Once they finished they just left and did not bother about the small girl. He was giving lot of advice in the article how to treat the workers properly. But, I don‘t know how many even bothered to change.

In my opinion, we Indians, believe in Karma theory which states that a person will live a happy blissful life or undergo hardship based on past deeds in previous births. so, many people in our country never feel any prang of guilt when they see a person suffering and it is taken for granted that a person is poor. In daily life also we see lot of people who blame it on fate for any sufferings. when a person feels like that for his/her own life, you can imagine the apathy that one have for fellow human beings. They just shrug it off and go as it is their fate and so they are suffering. It is not only the domestic helpers are abused, even the people who work at the bottom layer of the society like peons, cleaners, municipal workers are ill-treated and shunned. Only when a person’s mentality change, he/she will become compassionate and caring. Sorry for the long reply.

reply to this comment

25/07 02:32:52

Padma Arvind wrote:

Dear Mr.KK

Thanks for your kind words. I had been thinking about writin gon maids, an dsomething precipitated and I wrote when I just came home.I have not been writing much these days. When you write what actually happens, I used the exact same words. Until Arun commented, I did not realize words can be misunderstand in that blog. I ahd been away for entire mornign doing volunteering at hospital withthis girl.

I am not a social worker by job, but do it as that gives me pleasure and use my skills to help needy. I will blog whu maids get my softcorner soon. Thanks

reply to this comment

25/07 06:30:48

Padma Arvind wrote:

Dondu

I simply do not know to identify people with subcastes. Thats real. IF you do not belief, I can not help it.Thanks for your comments

reply to this comment

25/07 06:33:01

Padma Arvind wrote:

KK:

I forgot. I do not think anyone is bad. It is circumstance and ignorance make them do the way they do. We can not get angry for ignorance.As Maughm says, if merit outnumbers demerits, take it as good. I do understand grey ares and that is one of my area to concentrate

reply to this comment

25/07 06:36:04

Padma Arvind wrote:

Raj

Thanks forundersatnding. I heard about kutti but have not seen it. I had gone thorugh lots of abuse as a maid and may be one dayI will write.

reply to this comment

25/07 06:37:18

kvr wrote:

பத்மா, உங்களது இந்தப் பதிவு கண்டிப்பாக தேவையான ஒன்று. அதே சமயம், அருண் குறிப்பிடும் விஷயமும் கவனிக்கப்பட வேண்டியதே. நீங்கள் சொல்ல வரும் விஷயம் தேவையில்லாமல் ஜாதீய ரீதியாக திரும்பிவிடக்கூடும் என்ற நிலை தான் இப்பொழுது இருக்கிறது.

ராம்கி சொல்லும் அதே கருத்து தான் என்னுடையதும். ஒவ்வொரு ஜாதியினருமே அவருக்கு கீழே உள்ள ஜாதியாக நினைப்பவரை சரிசமமாக நடத்துவது இல்லை, இதில் எல்லோரையும் சொல்லவில்லை. எல்லா ஜாதியிலும் அப்படி இருக்கிறார்கள் என்றே சொல்கிறேன்.

டோண்டு சார் தான் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டது போல தோன்றுகிறது .

reply to this comment

25/07 09:14:43

Ganesh wrote:

I liked the post. Goodwork Padama

For the non stop Narayanan’s

I really don’t understand how people can be so indecent. What some people above are doing is like having a non stop verbal combat in someone else’s {padma) house. If there is great need to retaliate or to make a point please try to make the comment to their private email or in their own blogs. Do not use other person’s blog to prove your point of view. Immaturity at its best.

reply to this comment

25/07 23:26:51

மரவண்டு wrote:

<<வேலைக்காரி என்பது கீழ் மட்டத்தில் **தாழ்ந்த** சாதிக்காரர்களை குறிக்கிறது>>

அன்புள்ள பத்மா

தாழ்ந்த ஜாதி என்பதை தாழ்த்தப்பட்ட ஜாதி என்று மாற்றி எழுதுங்கள்.

இல்லாவிட்டால் யாரிடமாவது மன்னிப்பு கேட்கவேண்டியதிருக்கும்.

நன்றாக எழுதுகிறீர்கள் .. ஆனால் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் ,

சிறிது நேரம் ஒதுக்கி எழுத்துப்பிழைகளை சரிசெய்யவேண்டியது தானே !

என்றும் அன்பகலா

மரவண்டு

reply to this comment

27/07 04:44:25

ரவியா wrote:

பத்மா, எனக்கு உங்கள் பதிவு தவறாக படவில்லை..

இப்பொழுதய அசுகாதார நிலைமையில் டோண்டு சாரும் அருணும் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டது போல தோன்றுகிறது. (இருவரையும் நேரில் சந்தித்து பேசின அனுபவத்தில் உரிமையில் சொல்லுகிறேன்.)

ஆனாலும் kvr ரின் கருத்தையும் நீங்கள் பரிசீலிக்க வேண்டும் பத்மா !

reply to this comment

27/07 09:34:42

Dondu wrote:

“இப்பொழுதய அசுகாதார நிலைமையில் டோண்டு சாரும் அருணும் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டது போல தோன்றுகிறது.”

ரவியா அவர்களே, இப்போதுதான் ஒரு பெரிய சர்ச்சை இணையத்தில் முடிந்துள்ளது. தேவையற்ற இன்னொரு சர்ச்சை வேண்டாமே என்பதையே நானும் அருணும் கூற முயன்றோம்.

reply to this comment

27/07 09:54:54

Padma Arvind wrote:

நன்றி KVR, மரவண்டு, ரவியா, கணேஷ்

கருத்துக்களுக்கு நன்றீகள். இன்னும் நேரம் எடுத்து எழுத்துப்பிழைகளை கவனமாக தவிர்க்க முயல்கிறேன்.

reply to this comment

27/07 10:00:07

pandi wrote:

நல்லபதிவு தொடருங்கள்…

reply to this comment

27/07 11:53:01

Nisha wrote:

//Do not use other person’s blog to prove your point of view. Immaturity at its best.

Ganesh

Arent you doing the same thing?

You are “trying” to prove your point in this house .

Isnt this “Immaturity at its best” ??

reply to this comment

27/07 12:06:21

Ganesh wrote:

Nisha,

I had the same after thought after posting that comment. Point well taken.

reply to this comment

28/07 21:46:01

thanu wrote:

பத்மா,

உங்கள் எழுத்துக்கள் எல்லாமே உணர்தல்பூர்வமாக இருக்கிறது. பின்னூட்டங்களைப் படிக்காமல் உங்கள் எழுத்துக்களை மட்டும் வாசிக்கும்போது கிடைத்த நிறைவு அவற்றையும் வாசித்தபின்பு கொஞ்சம் எரிச்சலையே ஏற்படுத்தியது. உங்கள் எழுத்துக்களை அதன் கருத்துக்களுக்காகவும் அதில் வெளிப்படும் பகிர்தல் உணர்வுகளுக்காகவும் வாசிக்காமல், வலையில் தங்கள் பெயர் அடிக்கடி வரவேண்டுமென்று விதண்டாவாதம் பண்ணுபவர்களுக்காக உங்கள் நடையையும் சிந்தனைகளையும் மாற்றிக் கொள்ளாதீர்கள்.

பெண்கள் நகையலங்காரப் பதுமைகளாகவே சித்தரிக்கப்படுகிற சமுதாயதில் உங்கள் எழுத்துக்கள் போன்றவைதான், பெண் சமுதாயத்தின் உயரிய சிந்தனைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும்.

தமிழின் பெருமையும் பிரச்னைகளும் அதன் வெளிப்பாட்டில் தவிர்க்கமுடியாதது. She gave food to the maid in the backyard –என்று சொல்லும் போது அது, பிரச்னயை மட்டுமே காட்டும்.ஆனால் அதுவே தமிழில் எழுதப்படும்போது எத்தனை தேவையற்ற விவாதங்கள்-முடிவில் சொல்லப் பட்ட கருத்தின் நோக்கமே சிதறிப் போய்விடுகிறது. பின்னூட்டம் எழுதியதில் எத்தனை பேர் துணைக்கு சேர்க்கப்பட்ட பெண்டிர்க்கு சரி சமமாக சோறு போட்டிருப்பார்கள்?(சாதம் என்ற வார்த்தையை தவிர்த்திருக்கிறேன், அது ஜாதி சார்ந்த பதமாகிவிடுமோ என்ற தயக்கத்தில்).

நட்புடன்,

தாணு

22/07: பொருளின் மதிப்பு அதன் பயனிலே
சிறுவயதில் பள்ளியில் படித்த கதை ஒன்று நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு திருடன் சுவறேறி குதித்து ஒரு செல்வந்தர் வீடிட்ற்கு செல்கிறான். உண்ண உணவு தரும் செல்வந்தர் அங்கேயே தங்க இடமும் கொடுக்கிறார். இரவில் வெள்ளி தட்டை எடுத்து கொண்டு புறக்கடை கதவை திறந்து வெளியேறும் அவனிடம் குத்து விளக்குகளை தந்து இதையும் எடுத்து கொண்டு போ என்று சொல்லி உண்மையை விளக்குகிறார்.

உண்ண உணவும் இருக்க இடமும் முதலில் தேவையாய் இருக்கிறது. அதன்பின் வசதிகள் பெருக பெருக மேலும் வேண்டும் என்ற ஆசை பேராசையாக வளர்ந்து மனிதனின் அழிவுக்கே காரணம் ஆகிறது.இன்று பலருக்கு எது தேவை, எது ஆசை என்ற வித்தியாசம் புரிவதில்லை. இதைவிட தங்கள் குழந்தைகளுக்கும் ஆ சையை உடனே பூர்த்தி செய்துவிடும் இவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்வதில்லை. ஒருவேளை பொருளாதார நிலை மாறினால், கேட்டதை உடனே பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள் அதை எப்படி புரிந்து கொள்ளும் என்பதும், உடனே கிடைக்கும் என்பது ஒருவித பொறுமையின்மையை வளர்க்கும் என்பதும் சிந்தித்து பார்ப்பதில்லை.

குழந்தை முதல் பெரியவர் வரை ஒருவிதத்தில் peer pressure என்னும் கட்டுக்குள் சொல்கிறோம்.சமுதாய அல்லது நண்பர்கள் குழுவில் நமக்கு அங்கீகாரம் கிடப்பது முக்கியமாக படுகிறது. இதனால் போட்டியும், பொருள் வாங்கி குவிப்பதும் இந்த சமுதாயத்தில் பல துன்பங்களை கொண்டுவருகிறது.

இதனால் பொருள் ஒரிடத்தில் அளவுக்கு மீறி இருப்பதும், இன்னொரு இடத்தில் பற்றாக்குறையும் வருகிறது. பொருளின் அருமை அதை பயன் படுத்தும் விதத்தில் இருக்கிறது. ஒருவர் எத்தனை புடவைகள் அல்லது நகைகள் இருக்கிறது என்பதை கொண்டு அளாவிடப்படுவதில்லை. அப்படி அளவிட்டால் மதிப்பு அந்த பொருளுக்குத்தானே ஒழிய நமக்கில்லை.சமூகத்தில் இருந்து நாம் பலவற்றை பெற்று கொள்கிறோம். ஆனால் ஒருபோதும் திருப்பி ஒரு சிலவற்றையாவது கொடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.

எனக்கும் நகைகளுக்கும் வெகு தூரம். அதேபோல உடைகளுக்கும். படிக்கும் போது நகைகள் அணிய என்னிடம் அவை இருக்க வில்லை. இப்போது அவற்றை வாங்கி அணிவதில் விருப்பம் இல்லை. எப்போதாவது இந்தியாவில் அதுவும் என் கணவரின் வீட்டிற்கு போகும் போது ஒன்று என் பெட்டியில் வரும். பெரும்பாலான சமயம் பூட்டியே வைக்கும் இவற்றிற்கு மதிப்பு என்னை பொறுத்தவரை எதுவும் இல்லை. ஒரு நாள் மதியம் வீட்டிற்கு வந்த பெரியவர் ஒருவர் வருத்தமாய் அவரது பெண்ணின் திருமணாம் நின்றுவிடும், கையில் நகை வாங்க பணம் இல்லை என்றும், பிள்ளை வீட்டில் அடிப்படை அளவிற்காவது ஒரு செயினும் வளையலுமாவது வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள், என்ன செய்வேன். பெண்ணும் கல்லூரி படிப்பை தாண்டாமல் வீட்டிலேயே இருந்து பொழுதை போக்கி வருந்துவதும், பல வரன்கள் இப்படியே தடைபடுவதாகவும் சொல்லி அழுத போது என் தந்தையின் நினைவு தான் எனக்கு வந்தது. ஆனால் ஒன்று அவர் எதற்கும் கலங்கியதில்லை.

பெரும்பாலான நேரம் நான் எதுவும் பேசுவதில்லை. நான் சொல்கின்ற எதற்குமே அங்கே மதிப்பில்லை என்பதாலும் நான் ஒரு வகையில் ஜடமென்றும் எண்ணுபவர்களை மாற்ற நான் நினைப்பதும் இல்லை. நினைப்பது அவர்களின் உரிமை என்பதால். ஆனால் இந்த முறை அந்த பெரியவரிடம் என்னிடம் இருந்த நகைகளை கொடுத்து விட்டேன். அவர் என்னை நாராயணனே என் வடிவில் வந்ததாக சொன்னாலும், அதீத உணர்ச்சி வசப்படல் நம் வழக்கம் என்று நினைக்கிறேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு என் அதிக பிரசங்கித்தனம் அடுத்தவர்களால் விசாரிக்க பட்டாலும் என் அளாவில் நான் செய்தது சரியே. இப்போது சொல்லுங்கள், பூட்டிவைத்த நகைக்கு மதிப்பு அதிகமா, ஒரு ஏழை தந்தையின் கவலையை போக்கிய நகைக்கு மதிப்பு அதிகமா?

ஏற்கெனவே வாங்கிய ஸ்கூட்டர், கைனடிக் ஹோண்டா போன்றவற்றை என் சகோதரர்கள் அயல் நாடு சென்ற போது புதிதாக திருமணம் ஆகி வாழ்க்கையை துவக்குபவருக்கு கொடுத்து விட்டார்கள். இதில் தான் நாம் sunk cost பற்றி யோசிக்க வேண்டும். ஏற்கெனவே வாங்கிவிட்டதால்,சில வருடம் உபயோகிக்கவும் செய்த ஒன்றை அதை விற்பதால் வரும் பணம் நம் வாழ்க்கையின் தரத்தை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்த போவதில்லை. புதிதாக வாங்க இன்னொருவர் அதுவும் பொருளாதாரத்தில் நம்மை விட கீழான நிலையில் உள்ளவர் கடன், வட்டி என சுமக்கும் பாரம் அதிகம், என்றால் ஏன் உதவக்கூடாது? தண்ணீர் தாகம் எடுத்து உயிரே போய்விடும் என்ற நிலையில் தவிக்கும் போது, ஒரு பாட்டில் தண்ணீர் 1000ரூபாய் என்றாலும் வாங்குவோம்.

சிலர் தங்களின் $3000 பெறுமான கார்களை புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு தந்து உதவி இருக்கிறார்கள்.இன்னும் சிலர் தங்கள் கணிணிகளை தந்து உதவி இருக்கிறார்கள். இதை படிக்கும் உங்களில் சிலர் இது போல பழைய கணிணி, செல்போன், இன்னும் உப்யோகிக்காத தொலைகாட்சி பெட்டி இருந்தால், குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள் இவை இருப்பின் தயவு செய்து குழந்தைகள் இருக்கும் விடுதிக்கு தந்து உதவுங்கள். ஒரு சிறுவனின் மகிழ்ச்சி நிறைந்த கண்கள் கோடி ரூபாய் சேர்த்தற்கு சமம். இந்த சிறு உதவி நம் வாழ்க்கை தரத்தை குறைக்க போவதில்லை. ஆனால் ஒரு புது வாழ்க்கையை துவக்கும்.வருடத்திற்கு 6 புது ஆடைகள் வாங்கினால் ஒரு புது ஆடையை ஒரு ஏழைக்கு வாங்கி தருவதை வழக்கமாக கொள்ளுங்கள்.

நான் ஜிப்மரில் படிக்கும் போது இரவு உணவு உன்ண நேரம் ஆகும். எல்லா மாணாவிகளும் உண்டு முடித்திருப்பார்கள். ஆனால் மெஸ்ஸில் பணிபுரிபவர்கள் எனக்காக காத்திருப்பார்கள். நானும் அவர்களோடு சமையல் அறையிலேயே உண்பதுண்டு. அதில் வனஜா என்ற பெண்ணை பெண் பார்க்க வருவதாகவும் கட்டி கொள்ள ஒரு பட்டு புடவை வேண்டும் இரவல் தரமுடியுமா என்று கேட்டாள். என்னிடம் அப்போது பட்டென்ன பருத்தி புடவைகளே அதிகம் இல்லை.வேலைக்கு போனதும் உங்க பழைய புடவையை எனக்கு தறீங்களா என்றவளிடம், வேலைக்கு போனால் உனக்கு பழசெதற்கு புதுசே தருவேன் என்று சொன்னதே அவளுக்கு சந்தோஷமாய் இருக்கும். நான் AIIMS இல் முதல் ஊதியம் வாங்கி சில நாள் கழித்து ஊருக்கு சென்றபோது அவளுக்கு ஒரு பட்டு படவை வாங்கி அதை கொடுப்பதற்காகவும் என் துறை ஆசிரியர்களை பார்க்கவும் பாண்டிச்சேரி சென்றிருந்தேன். ஆனால் அவள் இறந்து விட்டிருந்தாள்.கொடிது கொடிது இளமையில் வறுமை அதனினும் கொடிது.

இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்றார்

மடி நிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும் என்ற வண்ணம் வாழாமல் ஒரு சிலருக்காவது ஏணிகளாய் இருப்போமே.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeAravindan wrote:

நெஞ்சை தொட்ட பதிவு….

என் கருத்து!!!…எங்கோ இருக்குக் “உதவும் கரங்கள்.சிவனாந்த அசிரம்” போன்ற வசதியுள்ள அமைப்புகளூக்கு உதவி செய்வதை விட உங்கள் வட்டத்திலே இருக்கும் நன்பர்கள்,உறவினர்கள்,பெற்றோர் இருந்தும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் குழந்தைகள் இவர்களுக்கும் உதவி செய்யலாம்

reply to this comment

22/07 18:45:40

Ramya Nageswaran wrote:

அன்புள்ள பத்மா,

I agree with you 100%. நானும் என் கணவரும் இதை குழந்தைகளுக்கு புரிய வைக்க சில முயற்சிகள் எடுத்து வருகிறோம். உதாரணமாக அவர்களின் பிறந்த நாட்களின் பொழுது ‘உங்களுக்கு தான் எல்லாம் இருக்கிறது. இந்த முறை பரிசுகளுக்கு பதில் எல்லா நண்பர்களையும் ஒரு தொண்டு நிறுவனத்திற்காக பணம் கொண்டு வரச் சொல்லலாமா?” என்று கேட்டோம். இரண்டு தடவை தான் சம்மதம் கிடைத்தது!

இந்தியா செல்லும் பொழுது நான் போகும் தொண்டு நிறுவனங்களுக்கு சில சமயம் என் 6 வயது மகளையும் அழைத்துக் கொண்டு போவேன். இது போன்றவற்றை செய்து வந்தால் அவர்கள் ஓரளவு sensitize ஆவதோடு மட்டுமல்லாமல் தங்களுக்கு இருப்பதை வைத்து திருப்திபடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை தான்.

reply to this comment

22/07 19:53:22

ராம்கி wrote:

//ஒருவர் எத்தனை புடவைகள் அல்லது நகைகள் இருக்கிறது என்பதை கொண்டு அளாவிடப்படுவதில்லை. அப்படி அளவிட்டால் மதிப்பு அந்த பொருளுக்குத்தானே ஒழிய நமக்கில்லை.//

நல்ல வரிகள்.

//இப்போது சொல்லுங்கள், பூட்டிவைத்த நகைக்கு மதிப்பு அதிகமா, ஒரு ஏழை தந்தையின் கவலையை போக்கிய நகைக்கு மதிப்பு அதிகமா?//

நல்ல கேள்வி. ஆனால் அடிப்படைத் தேவைகளுக்கு மேல் ஊதியம் பெறும் 10 முதல் 15 சதவீத இந்தியர்களுக்கு இது சாத்தியமாக இருக்கக் கூடும்.அவர்கள் உங்களைப் போல் இருப்பதில்லை என்பது வேறு விஷயம். ஆனால் தேவைகளுக்கும் வருமானத்துக்கும் இடையில் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி கொண்ட பெரும்பான்மை மக்களிடம் இருக்கும் சொற்ப நகைகளும் ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க என்ற அளவில் தான் இருக்கின்றன என்பது எனது கருத்து. பிரச்னை, திருமணத்திற்கும் நகைகளுக்கும் உள்ள தொடர்பில்தான் இருகிறது. அந்தச் சூழலில் இருந்து வெளியேற முடியாத (99 சதவீதம் அல்லது அதற்கும் மேல் இப்படித்தான் இருக்கிறார்கள். விருப்பம் இல்லாவிட்டாலும் மரபுகளை மீறவோ கேள்வி கேட்கவோ நாம் தயாராக இல்லை) நிலையில் அந்தத் தந்தையைப் பார்க்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், நகை கேட்கும் கல்யாணம் எதற்கு என்று சிலர் வாதிடக் கூடும்.

//என்னிடம் அப்போது பட்டென்ன பருத்தி புடவைகளே அதிகம் இல்லை.//

முதல் தலைமுறையாக ஊர்ப் பகுதியைவிட்டு வெளிவரும் எல்லோருக்கும் அதுதான் நிலை என்றாலும் கூட அந்த வரிகள் தைக்கின்றன.

stationbench.blogspot.com

reply to this comment

23/07 04:18:11

Padma Arvind wrote:

ரம்யா

இந்த பதிவில் உங்கள் பதிவின் சுட்டியை கொடுக்க எண்ணி இருந்தேன்.கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

அரவிந்தன்: நன்றிகள்

reply to this comment

23/07 07:27:57

குழலி wrote:

//படிக்கும் போது நகைகள் அணிய என்னிடம் அவை இருக்க வில்லை. இப்போது அவற்றை வாங்கி அணிவதில் விருப்பம் இல்லை//

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இது பொறுந்தும், நகைகளுக்கு பதில் சட்டை, காலணிகள், மோட்டார் சைக்கிள் என அடங்கும் ஆனால் பணம் இருக்கும் போது அதிலெல்லாம் விருப்பம் குறையும்

அது சரி நீங்க பாண்டிச்சேரி ஜிப்மரிலா படித்தீர்கள்? நம்ம ஊருக்கு பக்கத்து ஊருதான் பாண்டி, நாம கடலூருங்கோ

reply to this comment

23/07 07:34:56

குழலி wrote:

இன்னொரு விடயம் இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் குழந்தைகளை சந்தோசமாக வைத்திருக்கின்றேன் என கேட்டதையெல்லாம் தேவையா இல்லையா என பார்க்காமல் வாங்கித்தந்து வருகின்றனர், தொலைக்காட்சி ரிமோட்டை தூக்கிப்போட்டு குழந்தைகள் விளையாடும்போது கண்டித்தால் அது என்ன உடைந்தால் வேறு வாங்கிக்கொள்ளலாம் அதற்காக கண்டிக்காதே என கூறும் போது இது வெறும் பொருளின் பணமதிப்பை மட்டும் பார்க்கக்கூடாது என எப்படி புரியவைப்பது

இதற்கெல்லாம் மிக எளிதாக இன்றைய இளம் தலைமுறை பெற்றோர்கள் கூறும் காரணம் நான் சின்ன வயசுல ஆசைப்பட்டு கேட்ட சட்டை வாங்கித்தரலை, பொம்மை வாங்கித்தரலை அதே நிலமை என் குழந்தைகளுக்கு வரக்கூடாது, நம்ம குழந்தைகளைக்கில்லாத பணம் வேறேதுக்கு என்று கேட்பவர்களுக்கு இது வெறும் பணத்தை மட்டும் அடிப்படையாக கொண்டதல்ல என்று எப்படி புரிய வைப்பது என்றும் எனக்கு புரியவில்லை

reply to this comment

23/07 07:41:38

Padma Arvind wrote:

ராம்கி:

கொடுப்பதற்கு பொருள் தேவை இல்லை. மனம் தான் வேண்டும்.இன்னமும் நான் ஒன்றும் கோடியில் புரளவில்லை. நான் வசிக்கிற பகுதியில் நகை கடைகளில் கூட்டம் அ லைபாய்கிறது. என்னிடம் பவளமே இல்லை அதனால் வாங்கினேன். என்றபடி வாங்கி கொண்டே இருக்கிறார்கள். இது அவரவர் விருப்பம். ஆனால் குஜராத்தி மக்களை பார்த்தால், வாங்குவது ஒருபுறம், ஊரில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு பள்ளிகள், மருத்துவமனைகள்,படிப்பு ஊக்க தொகை உதவிகள் மறுபுறம் என்று செய்கிறார்கள். நானே அவர்களுக்கு இந்த திட்டங்கள் தீட்ட உஅதவி இருக்கிறேன்.

ஒரு நாளைக்கு 1$ என்றாலும் ஒரு ஏழை குடௌம்பத்திற்கு ஒரு வேளை உணவாவது தரலாம். சரி : பொருளை விடுங்கள். எத்தனை தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தன்னார்வ தொண்டு செய்கிறார்கள். நாங்கள் சமீபத்தில் தீவிர வாதம் எதிர்ப்புக்காக தன்னார்வ தொண்டர்களை சேர்த்து, உணவும் கொடுத்து வகுப்புக்கள் எடுத்தோம். இதில் ஆசியாவிலிருந்து வந்தவர்கள் சீன நாட்டு காரர்கள் மட்டுமே. இந்திய மொழியில் பேச நான் ஒருத்தி மட்டுமே.

தொடரும்

reply to this comment

23/07 07:45:58

Padma Arvind wrote:

கணவனுடன் H4 விசாவில் வந்து வீடில் இருக்க போரடிக்கிறது என்ற மாமிகல் சிலரிடம் மருத்துவமனையில் தன்னார்வ தொண்டு செய்யௌங்களேன் என்று கூறி இருக்கிறேன். ஒரு நாளைக்கு 2 மணி நேரம். காசு தருவாளா என்ற கேள்விக்கு இல்லை என்று சொன்னதும், அட போ வேறா வேலையில்ல எனக்கு, அங்க போய் எறும் வேலை பார்க்க, ஆத்தில் படமாவது பார்க்கலாம் இது ஒருத்டர், எங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் புடிக்காது இது இன்னொருவர். இவர்களுக்கு ஆங்கிலமும் பேச தெரியும். இதே பெண்கள் மணிக்கு 8$க்கு மேசி போன்ற கடைகளில் வேலை பார்ததும், இதில் வர்ற காசில் என வேனா பண்ணுட்டார், நாங்க மூனு பேரும் ஒரே மாதிரி நெக்லஸ் வாங்கிக்க போறோம் என்று சொன்னதையும் பார்த்திருக்கிறேன்.

கடைசியா ஒன்ரு: இன்னமும் அடிபப்டை தேவைகள் பூர்த்தி செய்யபடாத நிலையில் உள்ள ஏழைகள் உடலால் நிறைய உழைக்கிறார்கள்அட போம்மா, நான் குடிக்கிற கஞ்சியில பாதி உனக்கு என்பவர்களும் ஆமா, வருத்தபடாதீங்க, இந்த காசு வந்துதான் நான் மாடிவீட்டு கட்டபோறேனாக்கும் காசு பணம் நிறைய வந்தா சொல்லுங்க நானே வந்து வாங்கிகிறேன் என்றும் உதவுபவர்கள் அதிகம்.

கோவிலில் போய் பாருங்கள்: நவரத்தின கிரீடமும், பாலும் தெளிதேனும் ஆறாய் ஓடும். அது மட்டும் இல்லை எங்க ஊர் கோவிலுக்கு தங்க கவசம், காசு சேர்க்கிறேன், நீ கொடுக்கிறாயா அதிகம் வேணாம் ஒரு 10$தான். எத்தனை பேரை காட்டட்டும். அதே எங்க ச்கூலுக்கு புக்ஸ் வாங்கனும் பணம் அனுப்ப போறேன் தரியா என்று சொல்பவர்கள் தமிழர்களில் அதிகம் இல்லை.

தொடரும்

reply to this comment

23/07 07:46:41

Padma Arvind wrote:

நான் எழுதிய என் அனுபவம் நான் இந்தியாவில் இருந்த போது, அதற்கும் முதல் தலைமுறையினருக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

என் கருத்தை வெளியிட வாய்ப்பு தந்தமைக்கு நன்றி ராம்கி.

reply to this comment

23/07 07:47:27

sethu wrote:

பொருளின் அருமை அதனை பயன்படுத்துவதில் தான் உள்ளது என்று தாங்கள் கூறிய கூற்று உண்மை. ஒரு மனிதன் எவ்வளவு தான் பொரு;ள சேர்த்தாலும் அவனது ஆசை மேலும் சேர்க்க வேண்டும் என்பதிலேயே தான் இருக்கும். அப்படியிருப்பினும் ஏழை-எளியவர்களுக்கு கொடுத்தால் அந்த ஏழைiயுமமகிழ்ச்சியில் திழைப்பார் என்பதை அனைவரும் உணர்ந்தால் நல்லது

reply to this comment

23/07 11:15:49

Padma Arvind wrote:

குழலி, சேது: நன்றிகள். குழந்தைகளை இப்போது பொறுமை இன்றி வளர்த்தால் நாளை கஷ்டபடபோகிறது அவர்களும் அவர்கள் துணையும். இதனாலேயே இதில் கவனமாக் இருக்க வேண்டும்.

நான் நிறைய முறை கடலூர் வந்திருக்கிறேன். மீண்டும் எழுத வதிருக்கிறீர்கள். மகிழ்ச்சி

reply to this comment

23/07 16:46:46

ராம்கி wrote:

உங்கள் பதிவிலும் பதிலிலும் இருக்கும் சத்திய ஆவேசத்தை-நியாயமான கோபத்தை- நான் மதிக்கிறேன். நீங்கள் தனிமனிதர்களின் மனமாற்றத்தை முன்னிறுத்துகிறீர்கள். நான் அதிலிருந்து சிறிது வேறுபட்டு அதன் பின்னணியையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். நீங்கள் திருவரங்கத்தில் நடந்ததாகக் குறிப்பிடுவது இன்னும் பல இடங்களில் தொடர்கிறது.

நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறைகள் நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தைக் காக்கிறது என்பார்கள். அந்தப் பண்பாடே இந்தியாவில் சாதிரீதியாகவும், வர்க்கரீதியாகவும் தன்னைவிட குறைந்தவர்களாக இருப்பதாகத் தான் நினைப்பவர்களிடம் மரியாதை காட்ட மறுக்கும் பண்பாடாக வெளிப்படுகிறது. அமெரிக்க உற்பத்திமுறை முதலாளிய முறை என்கிறார்கள். அதனால் அந்த வேறுபாடுகளை அலுவலகம் விட்டு வெளியில் வந்தவுடன் பார்க்க முடிவதில்லை.

இந்தியாவில் 85 கோடி மக்களை 15 கோடி மக்கள் கண்டு கொள்வதில்லை என்பதே எனது புரிதல். நீங்கள் 15 கோடியில் இருந்து கொண்டு உண்மையாக 85 கோடிக்குக் கவலைப்படுகிறீர்கள்.

//நாங்கள் சமீபத்தில் தீவிர வாதம் எதிர்ப்புக்காக தன்னார்வ தொண்டர்களை சேர்த்து, உணவும் கொடுத்து வகுப்புக்கள் எடுத்தோம். இதில் ஆசியாவிலிருந்து வந்தவர்கள் சீன நாட்டு காரர்கள் மட்டுமே. இந்திய மொழியில் பேச நான் ஒருத்தி மட்டுமே.//

இந்த வரிகள் உங்கள் கவலை வெறும் சொற்சேவை இல்லை என்பதை நிரூபிக்கிறது.

நன்றி..

22/07: எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை- கவிஞர்
பாட்டுக்கொரு தலைவன் பாரதி என்றாலும், பாரதியை பற்றி என்னைவிட நன்றாக எழுதுபவர்களும், பாரதியய முழுமையாக படித்தவர்களும் இருப்பதால் என்னை தன் எழுத்துக்களால் கவர்ந்த இன்னொருவனை பற்றி இங்கே எழுதுகின்றேன்.

ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவதானமும் சீர் பேசும் இயல் பல்காப்பியதொகை ஓசை எழுத்துமுதலாய் ஐந்திலக்கணமும் தோய்ந்த பழுத்த தமிழ்ப்புலமை குமரகுருபரரிடமிருந்து வந்தது இவனுக்கோ என்று கேட்கும் வண்ணாம் சீராய் வார்த்தைகள் எளிய தமிழில் புரியும் வகையில் வந்து விழும் இவனுடைய கவிதைகளில். நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம்தென்றலாய் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்ட தமிழ் இவரது நாவில் நடமாடியது.

காலில் விலங்குமிட்டோம் கடமை என அழைத்தோம் நாலு விலங்குகளில் தினமும் நாட்டியமாடுகிறோம்என்று மனிதனின் இயலாமையை அழகாக எழுதியவர்.

வாழ்வின் எந்த சூழலுக்கும் பொருத்தமான ஒருபாடல் இவர் எழுத்துக்களில் கிடைக்கும். திரைபடங்களுக்கு பாடல் எழுதியதாலோ என்னவோ இவருக்கு மற்ற கவிஞர்களுக்கு கிடைத்திருக்க கூடிய தனி மரியாதை இல்லை.

பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் சில பாடல்களை எளிமைப்படுத்தி தந்தவர்.

அத்திக்காய் காய் காய், எந்த ஊர் என்றவளே போன்ற பாடலில் பல இடங்களில் இரண்டுவிதமாக பொருள் கூறும் வண்ணம் முழுப்பாடலும் அமைந்திருக்கும்.

பாகிஸ்தானுடன் போருக்கு செல்லும் முன் “

விண்ணிரண்டு பட்டதென வீறு கொண்டு எழுகவே

தோற்ற யாவும் மீட்பதென்று ஆற்றல் கொண்டு எழுகவே” உள்ளிட்ட பாடல்கள் எழுச்சியை ஊட்டுவனவாக மனதில் ஒரு உணர்ச்சியை எழுப்ப வல்லன. பாரதியை போல பல சமுதாய கருத்துக்கள், விழிப்புணர்வை தூண்டும் பாடல்கள் எழுதவில்லை என்றாலும் தன்னுடைய வாழ்வில் செய்த தவறுகள் அதன்மூலம் அறிந்த படிப்பினைகளை பாடமாக வைத்திருக்கும் வண்ணம் கவிதைகள் எழுதி இருக்கிறார்.

ஒருமுறை தவிர்க்க முடியாத காரணத்தால் ஒருவரின் வீட்டு வாசலில் காத்திருந்த போது, பல முறை தட்டியும் கதவை திறக்காமல் நானும் என் அன்ணானும் திரும்பி விட்டோம். போன முறை இந்தியா சென்றபோது எங்களை தற்செயலாக சந்தித்தவர்கள் வற்புறுத்தி தன் வீட்டிற்கு அழைத்து சென்றதும், போலித்தனமான் உபசாரங்கள் செய்ததும், என் அம்மா இல்லாமல் எந்த விழாவும் செய்வதில்லை என்று பேசுவதும் பார்த்தால்,

வாழும் போது கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா

கை வறண்டவீட்டில் உடைந்த பானையை மதித்து வந்தவன் யாரடா

என்ற பாடல் தோன்றாமல் இல்லை.

அதேபோல என்னை கவர்ந்த இன்னொரு பாடல்” தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு” பாடல் முழுதும் பல சமயங்களில் பலவிதமாக பொருள் கொள்ள தூண்டி இருக்கின்றன.

மனதில் உறுதி வேண்டும் என்ற பாரதியின் பாடல் எந்த அளவுக்கு என் மனதில் ஆழமாய் பதிந்து போனதோ அதேபோல எங்களுக்கும் காலம் வரும்

காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே என்ற பாடலும் அடிக்கடி வந்து போகும். வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைக்க தெளிந்த மனம் வேண்டும். அது மட்டும் இருந்து விட்டால் உலகம் சமநிலை அடையாதா?

பள்ளியில் படிக்கும் காலத்தில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நம்முடைய வேலையை நாமேதான் செய்ய வேண்டும் என்பதும், நம் சிலுவையை நாமே சுமக்க வேண்டும் எனப்தும் பசுமரத்தாணி போல மீண்டும் மீண்டும் சொல்லி பதிந்து போன செய்தி. இதையே கவிஞர் அழகாக”நமக்கென பூமியில் கடமைகள் உண்டு தை நமக்காக நம் கையால் செய்வது நன்று” என்று தெளிவாக எழுதுகிறார்.

கதைக்கு பொருந்த பாடல் எழுத இவரை விட்டால் ஆளில்லை. பாலும் பழமும் படத்தில் வரும் என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய், அவர்கள் படத்தில் வரும் இப்படி ஓர் தாலாட்டு நான் பாடவா” போன்றவை சில உதாரணங்கள்.

கவிஞரின் பாடல்களில் எனக்கு உடன் பாடு இல்லாத பாடல்களும், கவிதைகளும் உண்டு. அதேபோல அரசவைக்கவிஞராக ஆனபின் இவர் எழுதிய தனிமனித துதி பாடல்களும் எனக்கு பிடிக்காதவை. விளக்கு மட்டுமா சிவப்பு என்ற கதை தொடர் போன்றவை கவிஞனான இவரின் பெருமையை குறைத்தன.

வடமொழி பாடல்களை தமிழ் படுத்திய சவுந்தர்ய லஹரி, சுப்ரபாதம் போன்றவை, கிருஷ்ணன் மீது எழுதிய அந்தாதி, புதிய பாதை, இன்னும் பல கண்ணன் பாடல்கள், விசாலாட்சி பிள்ளைதமிழ் போன்றவை நன்றாகவும் எளிமையாகவும் இருக்கிறது.

பலவிதமாக நீண்ட இரவு, சுருங்கிய இரவு, மகிழ்ச்சி இரவு என்ற பாடல்கள் தமிழின் வல்லமையை உணர்த்துகின்றன.

காவியத்தாயின் இளைய மகன்

நான் காதல் பெண்களின் பெரும்தலைவன்

மனிட சாதியில் தனிமனிதன்

நான் படைப்பதால் என் பேர் இறைவன்

மானிட இனத்தை ஆட்டிவைப்பேன்

அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை

எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்று அவரே மொழிபெயர்த்து பாடிய பாடல் உண்மை என்று சொல்லாமல் சொல்லும்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madevischchu wrote:

இலங்கை வானொலி இவர் பாடல்களை ஒலிபரப்பும் போது, “கவிஞரின் பாடலுக்கு இசை” என்று தான் கூறுவார்கள்.. இன்று வரை அவர் பாடலை யாரும் விளக்கிக் கூறினால் தான் விளங்கும் என்று கூறிக் கேட்டதில்லை..

னாலாம் வகுப்பு படித்த ஒரு மனிதன், எளிய வார்த்தைகளை வைத்து சிலம்பம் ஆடும் விந்தை இவர் தான்.. கவிப்பேரரசு என்று நூறு பேர் பட்டம் போட்டுக்கொள்ளலாம்.. மக்கள் மனதில் நின்ற பேரரசர் இவர் மட்டுமே..

அன்புடன்

விச்சு

neyvelivichu.blogspot.com

reply to this comment

22/07 10:30:17

கணேசன் wrote:

நல்ல பதிவு.

இவரின் அர்த்தமுள்ள இந்துமதமும் மிக எளிய அழகான உரைநடையில் இருக்கும்.

அன்புடன்,

கணேசன்

reply to this comment

22/07 10:49:25

அல்வாசிட்டி.வி wrote:

கவிஞர் கண்ணதாசனைப் பற்றிய பதிவுக்கு நன்றி பத்மா அவர்களே.

21/07: எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை- நடிப்பு
மரணம் இல்லாத சிலரை பற்றி எழுதலாம் என்று தோன்றிய எண்ணம் இன்று காலை விகடனை பார்த்ததும் செயலாகிவிட்டது. அரங்கின்றி வட்டாடுதல் தவறு என்றாலும் ஒரு விருப்பம்தான். பல செய்திகள் அறியாமை காரணமாக விட்டு போயிருக்கலாம். படிப்பவர்களில் இத்துறையில் பலபேர் ஜாம்பவான்கள் என்று தெரிந்தாலும், தைரியமாக இதோ:

இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை நாம் எல்லோரும் நடிக்கின்றோம் என்பது உண்மையானாலும் நடிப்பு என்றால் இப்போது பலருக்கு திரைப்படங்கள் மட்டுமே நினைவுக்கு வருகிறது. நாடக கலையும் தெருக்கூத்தும் நசிந்து போகின்ற இந்நாளில் நடிப்பை பற்றி நான் எழுத ஒரு காரணம் இருக்கிறது.

கிட்டதட்ட ஒரு தலைமுறையை தன் வசன உச்சரிப்பாலும் நடிப்பாலும் கவர்ந்திருந்த நடிகன் இறந்த தினம் இன்று.

பள்ளியில் வருடநாள் போது நாடகம, நடனப்போட்டிகள் நடைபெறும். எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்வது எனக்கு பிரியமான செயல். அதிலும் பலராலும் அறியப்பட்ட வகையில் நான் எழுதி இயக்கிய நாடகங்கள் பலமுறை முதல் பரிசை பெற்றிருக்கின்றன.(ஆலையில்லாத ஊர்)

சில சமய ம் கருணாநிதியின் சில பழைய நாடகங்களையும், சிவாஜியின் திரைப்படங்களின் சில காட்சிகளையும் நடிப்பதுண்டு. அப்படி எனக்கு பரிச்சியமானவர் சிவாஜி. நல்ல தமிழ் உச்சரிப்பும் குரலும் என்னை மிகவும் கவர்ந்திருந்த காலம் உண்டு. பூசாரியை தாக்கினேன் கோவில் கூடாதென்பதற்காக இல்லை பக்தி பகல் வேஷம் ஆகிவிடக்கூடாதென்பதற்காக என்று முழக்கமிட்ட பராசக்தி, மன்னிப்பு கேட்கவேண்டுமா மனோகரன் என்ற மனோகரா, கப்பலோட்டிய தமிழனாக என்று பல கதாபத்திரங்களாகவே மாறி இருந்த அந்த கலைஞனின் தொழில் பக்தி என்னை வியக்க வைத்திருகிறது. கோடியாய் நடிகர்கள் பொருளீட்டாத காலத்தில், விருப்பத்தால் நடிப்பு துறைக்கு வந்தவர்களேஅதிகம்.இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் போன்ற பரிசுகள் கிடைக்காவில்லை.

ஆனால் சஞ்சீவ் குமார் உள்ளிட்ட பல வட இந்திய நடிகர்கள் செய்ய விரும்பிய பல கதாபாத்திரங்களை செய்திருகிறார்சிவாஜி என்றாலே பின்னாளில் ஒரு பறவையுடன் அழுது கொண்டே ஒரு சோக பாடலை பாடவேண்டிய நிர்ப்பந்தம் பாலும் பழமும் படத்தில் இருந்து தொடங்கியது. அதையே ஒரு வாய்ப்பாய் எண்ணி டிஎம்ஸ் பாடியதை சில சமயம் ரேடியோவை அணைத்து விட்டால் கூடகேட்கலாம் என்று கேலி பேசுவதுண்டு(பாலூட்டி வளர்த்தகிளி, யாருக்காக, பணம் என்னடா பணம்)

மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு என்ற சில காட்சிகள் ஒவ்வொரு படத்திலும் இருந்தாலும், உழைப்பை நம்பி உயர்ந்த ஒரு மனிதன் என்ற வகையில் எனது மரியாதைக்குரியவர்களில் ஒருவர்.

வியட்நாம் வீடு நாடகமாகவும், பிறகு திரைப்படமாகவும் பார்த்தேன்.தில்லானா மோகனாம்பாள் விகடனில் படித்த கதைக்கு உயிர் கொடுத்த நடிப்பும், பத்மினியின் நடனமும் இன்னமும் ரசிக்க கூடியவை.ஆனால் கும்பகோணத்தில் தியேட்டருக்கு எதிரே வசித்த போது அன்பைத்தேடி படம் வெளியான அன்று ரோஜாப்பூக்களால் சிவாஜியின் படத்திற்கு ஆராதனை நடந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. டயமண்ட் தியேட்டரில் காஞ்சிதலைவன் படம் வெளி வந்து கல்லூரிகள் மூடும் வரை கலாட்டா நடந்ததும் போட்டியாக அன்பைத்தேடி பரபரப்பாக்க பட்டதும் இப்போது சில திரைப்பட வரவேற்பு பற்றி படிக்கும் போது நினைவுக்கு வருகிறது. இன்னமும் தனிமனித வழிபாடு போகவில்லை போலும்.

முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற சமீப (?) கால படங்களில் இன்னமும் சிவாஜியின் நினைவை விட அந்த கதாபத்திரங்களின் நினைவு வருவதே அவரின் வெற்றி என்பேன்.

திரைப்பட செல்வாக்கை வைத்து அரசியலுக்கு வந்து அனுபவப்பட்டவர்கலில் இன்னமும் சிவாஜியின் பெயரே முதன்மையாக இருக்கிறது.பந்தடிமேடையில் கூட்டத்திற்கு அண்ணன் வருகிறார், வந்து கொண்டே இருக்கிறார் என்று அறிவிப்புக்கள் வருமே தவிர அண்ணன் வர 12 மணி நேரம் தாமதமாகிவிடும். அதற்குமுன் சிலர் எங்கள் அண்ணன் இமயமலை நீ பறங்கிமலை என்று பேசும் வீரதீர பேச்சுக்கள் காதில் விழ, எப்போது இந்த ஒலிபெருக்கி நிறுத்தப்படும் என்று காத்திருப்போம்.

இறந்த பிறகு பலரும் எழுதிய அவரின் தொழில் பக்தி, பணம் கேட்டு தயரிப்பாளார்களிடம் இல்லாதபோது அவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த கூடாது போன்ற செய்திகள் உண்மையாயின், அது அவரின் குணத்திற்கு கிடைத்த வெற்றி மாலை.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madekarupy wrote:

நடிப்பின் சிகரம் சிவாஜி கணேசன் என்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரையில் சிவாஜியின் நடிப்பு என்னை ஒருபோதும் கவர்ந்ததில்லை. ஓவர் ஆக்டிங் என்ற வகைக்குள்தான் அவரது நடிப்பு அடங்குகின்றது. தமது இயல்பான நடிப்பால் என்னைக் கவர்ந்த கடந்த கால நடிகர்கள் என்று நான் ஜெமினி கணேசனையும் எஸ்.எஸ் ஆரையும் தான் கூறுவேன். சிவாஜியின் மிதமான செயற்கை நடிப்பு எனக்குள் உணர்சியை வரவழைக்காமல் சிரிப்பைத்தான் வரவழைத்திருக்கின்றது. இருந்தும் பல தமிழ் மக்களின் நெஞ்சைக் கவர்ந்த நடிகர் அவர் என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

reply to this comment

21/07 11:29:31

Padma Arvind wrote:

கருப்பி:

இத்துறையில் இருப்பவர் என்பதாலும் நடிப்பதுடன் நடிகர்களை இயக்குவதாலும் உங்கள் கருத்தை மதிக்கிறேன். சில பாத்திரங்களில் மிக நன்றாக ஒன்றிப்போனதாக தோன்றுகிறது. சில படங்கள் என்னை பொறுத்தவரை மிகவும் செயற்கை. உதாரணம்: பட்டாக்கத்தி பரவன், லாரிடிரைவர் ராஜாகண்ணு போன்றவை…சிவாஜியின் தமிழ் உச்சரிப்பு நான் குறிப்பிட்ட படங்களில் என்னை கவர்ந்த ஒன்று.

ஜெமினிகணேசனின் சில கதாபாத்திரங்கள் பிடிக்கும், பிடிக்காதவையும் உண்டு.

reply to this comment

21/07 11:35:42

ராம்கி wrote:

எங்கெல்லாம் நீங்கள் இருந்தீர்கள்?வைத்தீஸ்வரன் கோவில்,பாண்டி,கும்பகோணம் என்று ஒவ்வொரு பதிவில் இருந்தும் ஒரு செய்தி கிடைக்கிறது.அப்பா பணி நிமித்தம் கிடைத்த மாறுதல்களா? இதனால் படிப்பில் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றி எழுதுங்களேன்.

reply to this comment

21/07 11:59:45

aruL wrote:

உங்களுடைய பல நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமிடாமல் இதற்கு மட்டும் எழுதுவது தவறுதான். இருந்தாலும் சிவாஜி என்பதால்…..

சிவாஜியின் நடிப்பு என்பது கொஞ்சம் விரிவான விஷயம். அவருக்கு underplay செய்ய வராமல் அவர் நடியோ நடியென்று நடித்துத் தீர்க்கவில்லை. அவரிடம் மற்றவர்கள் எதிர்பார்த்ததை அவர் கொடுத்தார். அதற்கு மேலும் போற போக்கில் அவர் கொடுத்ததைப் பார்க்க உன்னிப்பாய் கவனிக்க வேண்டும். ஏதாவதொரு பழைய பாடலை (’நான் பேச நினைப்பதெல்லாம்’ போன்ற ‘நடித்த’ பாடல்களை அல்ல ‘சொர்க்கம் பக்கத்தில்’ போன்ற ஜனரஞ்சக கிளாசிக்குகளை ) வீடியோவில் பாருங்கள். watch his body language and fleeting mannerisms that last a microsecond. That will show what he is capable of. As some one said you must know how to act in the first place to overact. எப்பொழுதாவது விரிவாக எழுதுகிறேன்.

அருள்

reply to this comment

21/07 12:05:55

Padma Arvind wrote:

நன்றி அருள். நான் சொன்னபடியே சிவாஜியின

20/07: உடல்நல அறிவு (Health Literacy)
தலைவலிக்கோர் மாத்திரை

தடுமனுக்கோர் மாத்திரை

தவறுதலா துன்னுப்புட்டா

தர்மலோக யாத்திரை

என்பது வேடிக்கையாக இருப்பினும் கண் சரியாக தெரியாத முதோரிடம் கேட்டால் தெரியும் அதில் எத்தனை உண்மை என்பதை.

உடல் நலம் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வது எல்லோருடைய உரிமையும் ஆகும்.மருத்துவரின் குறிப்புக்கள், எப்படி மருந்தை 4 வேளை எடுத்துக்கொள்ளா வேண்டும் போன்ற குறிப்புகளை பின்பற்ற நோயாளிக்கும், இவர் நாம் சொன்னதை சரியாக புரிந்து கொண்டாரா என்பது மருத்துவருக்கும் தெரிய வேண்டியது முக்கியம்.

• உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆபத்தை தருவது

• கிட்டதட்ட $10 பில்லியன் ஒரு வருடத்திற்கு செல்வை வரவழைப்பது

• இரத்த பரிசோதனை போன்றவற்ரால் கண்டுபிடிக்க முடியாது

• பல உயிர்களை குடிப்பது

• இன்னமும் மெத்தனமாக இதன் சக்தியை புரியாமல் இருப்பது

இது எது என்று கேட்டால், குறைந்த உடல் நலன் பற்றிய அறிவே அகும்( Low Health literacy).

நிறைய மருத்துவர்கள், தன்னார்வ தொண்டர்கள்,இது ஒரு தொற்றுநோயாக பரவுவதை சொல்கிறார்கள்.

உடல்நல அறிவு என்றால் என்ன? ஒரு மனிதனால் மருத்துவர் சொல்வதை புரிந்து கொள்வதும், அவர் தரும் குறிப்புகளாஇ படித்து அதை கிரகிக்க கூடிய அறிவும் ஆகும். இதற்கும் கல்லூரி படிப்பிற்கும் சம்பந்தமே இல்லை. மெத்த படித்த மேதாவிகளே பல சமயங்களில் தவறுதலாக புரிந்து கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்திருகிறார்கள்.

உலகில் உள்ள நோயாளிகள் பலரும் இந்த அபாயத்தில் இருக்கிறார்கள். தற்காலத்தில் மருத்துவ செய்திகள் புரிந்து கொள்ள மிகவும் கடினமாக, சிக்கலாக இருக்கின்றன. நிறைய செய்திகள், தொழில் நுட்பங்கள் இதில் எது சரி தவறு என்று எதுவுமே சரியாய் புரிவதில்லை.

மருத்துவர்களும் அதிக நேர கட்டுப்பாட்டில் இருப்பதாலும், காப்பீடு சட்ட சிக்கல் இவை தவிர்க்க அதிக சோதனைகள் என எல்லாமே குழப்ப மயம்.அவசரத்தில் நோயாளிக்கு புரிந்ததா இல்லையா என்பதை கண்டு கொள்வதில்லை. அதேபோல நோயாளிகளும் இனையத்தில் படித்தது, திரைப்படத்தில் பார்த்தோ, விளமபரத்தில் வருவது என தேவைக்கு அதிகமாக செய்திகளை குவித்து கொண்டு தெரிந்தவர் மாதிரி இருப்பதும், இன்னும் சிலர் கேட்க சங்கோசப்பட்டு வாளா இருப்பதும் உண்டு.சரியாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் இருப்பின் பல விளைவுகள் வரும்.

உதாரணமாக அண்டிபையாட்டிக் சாப்பிட்டால் பால் அருந்த வேண்டும். ஒரே நேரத்தில் மறக்காமல் சாப்பிட வேண்டும். மருந்தின் அளவு இரத்ததில் சரியாக சமநிலையில் இருக்க வேண்டும். 8 மணிக்கு ஒருமுறை என்றால் 8 மணிக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல முழுதும் உட்கொள்ள வேண்டும்.என்னப்பா, இருமலா சளி வருதா, எரித்ரோமய்சின் 4 சாப்பிடு என்பதெல்லாம் அதற்கான எதிர்சக்தியை அதிகரிக்கிறது. இரும்பு டானிக் சாப்பிட்டால், விடமின் சி கட்டாயம் வேண்டும். இல்லைஎனில் அது உறிஞ்சப்படாது.

மிக சிறிய எழுத்து அமைப்பில் மருந்தின் பெயர் இருந்தால், எல்லா மாத்திரைகளும் ஒரே நிறத்தில் இருந்தால் பல மாத்திரைகள் எடுத்து கொல்ளும் முதியவர் தவறான மருந்தை எடுத்து கொள்ள சாத்தியமாகிறது.” ஏன் எழவெடுக்கிற, மாத்திரைதான் வாங்கி அழ முடியும், எடுத்தா தர முடியும் என்று சத்தம் போடுவதை கேட்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு தேவை ராஜமரியாதை இல்லை. தவறாக எடுத்து கொண்டுஇறந்து விடுமோ என்ற பயம்தான்.

கண்ணும் தெரியாமல், காதும் கேளாமல் தவறிழைத்து விட்டு இன்னும் கஷ்டம் தரப்போகிறோமே என்ற பயம்தான்.

இதில் பெண்கள் பாடு இன்னும் திண்டாட்டம். ஹார்மோன்கள் நின்று எலும்பின் சக்தி குறைந்து, சிறுநீர் அடக்க மாட்டமல், கருப்பை சற்றே வெளிவர படும் அவஸ்தைகள்….

இதில் படிக்க தெரியாதவர்கள் மட்டும் முட்டாள் என்று எண்ணாதீர்கள். படித்தவர்களே மிகவும் கடினமான பரிசோதனிக்கு செல்லும் போது தவித்து போவார்கள். அதுவும் ஆயிரத்தெட்டு இணைக்கப்பட்டு பயமுறுத்தும். அதில் ஒன்று இரத்தம் செலுத்த, ஒன்று மருந்து செலுத்த ஒன்று சலைன் செலுத்த என்றாலும் பயந்துபோவார்கள். இதில் சரியாக சொல்ல வேண்டிய கட்டாயம் அம்மருத்துவருக்கு உண்டு.அதேபோல அமெரிக்காவில் உள்ள 44 மிலியன் பேருக்கு 4அம் வகுப்புக்கு மேல் கிரகிக்க சக்தி இல்லை என்பதும் 2 சிலபிள் வார்த்தைகளுக்கு மேல் புரியாது என்பதும் தெரிய வந்திருகிறது.பள்ளி அல்லது கல்லூரியில் படித்திருந்தால் நல்ல புரிந்து கொள்ளும் திறன் இருக்கும் என்பதும் ஒரு தவறான கருத்து. அதிலும் மருத்துவ கருத்துக்கள் இயற்கையிலேயே கடினம் என்பதும், மனம் கவலைப்படும் போது புரிகின்ற திறன் குறைவு என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள்.

நீரிழிவு, ஆஸ்த்மா, இரத்த கொதிப்பு போன்ற உயிர்கொல்லி நோய்மருந்துகள் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு பலர் உயிர் இழக்கிறார்கள்.50% நோயாளிகள் சரியாக மருத்துவரின் குறிப்புகளை பின்பற்றுவதில்லை.

அமெரிக்காவில் உள்ள 33% ஆசியர்கள் இதில் பலவித தவறுகளை செய்கிறார்கள். இந்நிலையில் மருத்துவரின் மொழியும் நோயாளியின் மொழியும் மாறுபட்டால் எப்படி இருக்கும்? உலகையே ஆட்டிவைக்கும் நிலையில் மருத்துவ உலகு சென்று கொண்டிருக்கிறது. இப்போது சற்றே விழித்து கொண்டு அமெரிக்கா, கனடா போன்ற இடங்களில் மொழி பெயர்ப்பாளர்களும், 4 ஆம் வகுப்பு நிலையில் புரியும் வண்ணம் எழுதப்பட்ட கையேடுகளும், எழுத்து 20 வடிவில் இருப்பதும் நடக்கிறது.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeர wrote:

‘மருத்துவர்களுக்காவது என்ன மருந்து கொடுக்கிறோம் என்று தெரிந்தால் சரிதான்’ என்ற நிலை

வராமல் இருந்தால் சரி.

reply to this comment

21/07 05:05:30

ராம்கி wrote:

The above comment is from me. Due to some error before completing the name and url the page disappeared and coment came here as from ர

Ramki. http://stationbench.blogspot.com…

reply to this comment

21/07 05:09:49

சுந்தரவடிவேல் wrote:

பயனுள்ள பதிவு. நன்றி.

மருந்துகளைத் தவறாக உட்கொள்ளுதல் ஒருபுறமிருக்கட்டும். சரியாக உட்கொள்ளப் படும் மருந்துகளின் பக்க விளைவுகள் முற்றிலுமாக அறியப்படாமலும், அறியப் பட்டவை நோயாளிகளுக்குச் சரிவர விளக்கப் படாமலிருப்பதையும் அதிகமாகக் காணலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இங்கு நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்குமான உரையாடல்கள், விளக்கங்கள் இந்தியாவை விட விளக்கமாக இருப்பதாகவே எனக்குப் படுகிறது. உதாரணமாக, உங்களுக்கு இருக்கும் வியாதிக்கு இன்னின்ன மருந்துகளிருக்கின்றன, இவற்றிலே எது வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பது போன்ற மருத்துவரின் கேள்விகள் சற்றே நம்மை வியக்க வைக்கின்றன.

பொதுவாக இந்த அல்லோபதி மருந்துகளைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. உணவே மருந்து என்ற நம் ஆன்றோரின் மருத்துவ வழியையும் “மருந்தென வேண்டாவாம் ஆக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” போன்ற கோட்பாடுகளையும் மீண்டும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்!

reply to this comment

21/07 06:29:22

Padma Arvind wrote:

சுந்தரவடிவேல், ராம்கி

நன்றிகள். இப்போது அமெரிக்காவில் மருந்து பெயர்கள் மிக பெரிய வடிவத்தில் எழுதுவதும், போத்தல்கள் பிட்க்க வயதானோரின் கைக்கு எளிதாகவும், பல வித வண்ணங்களில் இருப்பதும் இந்த தவறை போக்க.

நுகர்வோரின் கவலைகளை வேறு யாரும் இந்த அளாவுக்கு எண்ணிப்பார்த்தார்களா என்று தெரியவில்லை.

19/07: மனித கழிவு- உலகின் முக்கிய பிரச்சினை
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா என்ற பாடலை கேட்கும் போதெல்லாம் கவலை இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்று தோன்றும். அது போல இந்தியாவில் நிறைய இடங்களுக்கு சென்றிருக்கிறேன் கல்கத்தா தவிர. நீங்கள் செல்வது கன்னியாகுமரியானாலும், பத்ரிநாத் போன்ற இமயமலை தலமானாலும் ஒரு ஒற்றுமை நிறைந்திருப்பதை காணலாம்.

நானும் என் அன்ணனும் ஒருமுறை கங்கை நதி ஓடும் பல இடங்களின் வழியே பத்ரி நாத் சென்றோம். தேவப்பிரயாக், ருத்திர்பிரயாக் ஜ்யோதிஷ்மட் என்று எங்கும் காவி உடை மனிதர்களும், முதியவர்களும் தான். ரிஷிகெஷ் போண்ற் ஐடங்களில் சற்றே இளவயதினரை பார்க்க முடிந்தது. தப்தகுண்டம் என்னும் சுடுதண்ணீர் குளத்தில் குளிக்க ஏக போட்டி. இது அடிப்படையில் கந்தக பாறியிலிருந்து நீர் வருவதால் எப்போதும் சூடாகவே தண்னீர் இருக்கிறது. இது போன்ற எல்லா புனித தலங்களிள், உல்லாசபயணிகள் வரும் இடம் என்று வித்தியாசமே பாராமல், காலியாக உள்ள இடத்தில் எல்லாம் மனித கழிவுகள்தான். பொதுவாகவே இந்தியாவில் வீட்டில் வரவேற்பு அறையில் சுத்தம் எதிர்பார்க்கும் பலர் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன் இந்தியா சென்றபோது திருவரங்க கோவில் சுற்றியுள்ள வீதிகளில் சிறுநீரும் மலமும் பார்க்க சகிக்கவில்லை. அடிப்படை வசதி கூட இல்லை என்று பழித்துரைக்கும் முன் யோசித்து பார்த்தால், இது உலகளாவிய பிரச்சினை என்பது புரியவரும்.

தண்ணீர்மூலம் பரவும் காலரா, அமீபிக் வயிற்றுபோக்கு போன்றவற்றிற்கும் இந்த கழிவுகள் நீரில் கலப்பதும், சரியாக கை கழுவாததும் காரணம். சமீபத்தில் அமெரிக்காவில் காரில் இருந்தே உணவு உண்ணும் பலர் கைகளை கழுவுவதில்லை என்று ஒரு மருத்துவ உலகு கவலை பட்டிருக்கிறது.

1970இல் இருந்து இது குறித்து ஆராய்ந்ததில் 20க்கும் மேற்பட்ட குறைந்த செலவு உள்ள கழிப்பிடங்கள் உருவாக்க பட்டுள்ளன.இதில்கிராமப்புறங்களுக்கு குறைந்த செலவுடன் நிர்வகிக்ககூடிய காற்றுபோகும் வழியுடன் கூடிய குழிகள் போன்ற லெட்ரின்கள் மிகவும் பரிந்துரை செய்யபடுகின்றன.நகர்ப்புறங்களுக்கு பூமிக்கு கீழேமூடிய கழிவு செல்லும் குழாயும் அதில் பேடப்படும் வேதிப்பொருட்கள் அவற்றை சிதத்து நீரை பிரித்து அதை வயலுக்கு பாய்ச்சும் முறையுடன் கூடிய கழிவுநீர் குழாய்களும் பரிந்துரைக்க பட்டன.

1980இல் முதன்முறையாக உலகில் உள்ள ஏழை மக்களுக்கு பயன்படும் வண்ணம் கழிப்பறைகள் உருவாக்க பட்டன.இதன் மூலம் ஏழை மக்களுக்கு நல்ல குடிநீர் தருவதும், கழிப்பறைகள் தருவதும் முக்கிய கடமையாக கொள்ள பட்டது

ஆசியா ஆ ப்பிரிக்கா போன்ற கண்டங்களில் உள்ள முக்கிய நகரங்களில் 1 மில்லியன் மக்கள் தொகை அதிகமாக உள்ள் நகரங்களில் கூட நல்ல கழிவு அகற்றும் திட்டம் இல்லை.அதேபோல 1996 வரைக்கும் கிடதட்ட 220 மில்லியன் மக்களுக்கு நல்ல சுத்தமான குடிநீர் இல்லை.உலகில் 2.4 பில்லியன் மக்கள் கழிப்பறை வசதி இன்றியும், 2.4 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் நீரினால் பரவும் வயிற்றுபோக்கினால் இறக்கிறார்கள் என்பதும் வருத்தமான செய்தி.

ஆசியாவில் 53% குறைவான மக்களுக்கே கழிப்பறை வசதிகள் உண்டு. இதில் கிட்டதட்ட 50% நவீன கழிப்பறையும் மற்ற 25% மனிதர்கள் வந்து மலம் எடுத்து சுத்தம் செய்யும் வகையிலும், இன்னும் 12% காற்று மூலம் அசுத்த காற்று நீங்கும் வசதி உடையது என்றும், மற்றைய 12% வெளியிடங்களில் ஒரு சுவர் மட்டுமே உள்ள இடமாகவும் உள்ளன.

சபர்மதி, மீரட் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் நீண்ட தொலைவு சென்ரு மறைவிடங்களை தேடவேண்டியிருக்கிறது என்றும், இதில் பெண்கள் மிக தொல்லை அனுபவப்பதும் இதற்காகவே அவ்ர்கல் இருட்டும் நேரத்தில் செல்வதும், அப்போது பாலியல் தொல்லைகளுக்கு உள்லாவதும் உலக சுகாதார மையத்தாஇயும், மனித உரிமைகள் நிறுவனத்தையும் யோசிக்க வைத்திருக்கிறது.

அமெரிகாவில் ஒவ்வொரு வீட்டின் அடியிலிருந்தும் கழிவு குழாய்கள் செல்கின்றன. இவை மாதம் ஒருமுறை சுத்தம் செய்ய படுகின்றன. நாம் தரும் வரியில் (கழிவு நீர் வரி) 1$க்கு 0.50$ இதை மேம்படுத்தவும், புதிய குழாய்கள் இணக்கவும் பயன்படுத்தபடுகின்றன. வீடுவரியிலிருந்தும் இதன் மேம்பாட்டிற்கு பணம் செலவழிக்க படுகிறது. இதில் நீர் பிரிக்க பட்டு இரண்டு முறை நீராவியாக்கி குளிரவைத்து பாசனத்திற்கு உபயோகிக்க் படுகிறது.

இதில் வேலை செய்பவர் இந்த நிறம் இனம் என ஒதுக்க படுவதில்லை. இளநிலை படித்தவர்களுக்கு தனி பயிற்சி தரப்படுகிறது. நல்ல ஊதியமும் தருவதால் பலர் இதி வேலை பார்க்கிறார்கள். இங்கே உள்ள தனிதன்மையில் இவர்களும் மற்றா எல்லோரைப்போல மதிக்க படுகிறார்கள். உதாரணமாக ஒரு மாவட்டத்தில் 690000 டன்/ஆண்டு கழிவு நீக்க பட்டால் அரசு 1 மில்லியன் $உம், வரியிலிருந்து 1 மில்லியனும் ஒதுக்க படுகிறது.

இங்கேயும் இன்னும் சில பகுதிகளில் செப்டிக் குளம் உண்டு.அவை 6 மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய பட்டு புதிய வேதிபொருட்கள் போடப்படுகிறது.

கீழே உள்ள அட்டவணை செலவு எவ்வளவு என்று பட்டியலிடுகிறது:

நீர்விட்டு flush செய்யும் வசதியுடன் கூடிய குழிகள் மட்டும்:150$/வீடு

காற்றின் மூலம் அசுத்த காற்று வெளியேற வழி உள்ள லெட்ரின்:180$/வீடு

ஆழம் குறைவான கழிவு நீர் குழாய்: 350$/வீடு

சிறிய துளை உள்ள கழிவு நீர் குழாய்: 500$/வீடு

செப்டிக் குளம்: 200-600$ (அளவை பொறுத்து)/வீடு

அதிக ஆழம் உள்ள கழிவுநீர் குழாய்(அதிகமாக இடங்களில் உள்ளது)

$1200/வீடு

மிகவும் அத்தியாவசியமான தேவையை உலகின் பல நாடுகளில் பூர்த்தி செய்யா நிலையில் நாம் எதை நினைத்து பெருமைப்பட?

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeஅல்வாசிட்டி.வி wrote:

முக்கிய பிரச்சனையை பேசுகிறது. அருமை.

reply to this comment

20/07 00:11:11

நாராயணன் wrote:

//ஆசியா ஆ ப்பிரிக்கா போன்ற கண்டங்களில் உள்ள முக்கிய நகரங்களில் 1 மில்லியன் மக்கள் தொகை அதிகமாக உள்ள் நகரங்களில் கூட நல்ல கழிவு அகற்றும் திட்டம் இல்லை.//

இதுப் பற்றிய நகரங்களின் ஒப்பீடை எழுதலாமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். நிறைவாக எழுதியிருக்கிறீர்கள்.

reply to this comment

20/07 00:24:09

Raj wrote:

Padma, Nice post. though i am not a participant i follow the posts regularly. only yesterday i was thinking about the toilet facilities in the schools in India. the problem is more in girl’s school where they also need to dispose the sanitary napkins. i think the conditions are deplorable in schools in india. there will be maximum of 6 toilets for the whole school where the student will number 1000 plus. half the time these toilets will be blocked with the napkins as the girls have no proper place to dispose them off. that was the condition when i was studying in late 80s. hope the situation has improved now.

reply to this comment

20/07 05:47:50

Ramya Nageswaran wrote:

அன்புள்ள பத்மா,

இது நிச்சயம் ஒரு விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனை.

இந்தியாவில் சுலப் toilets பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

http://www.sulabhinternational.org/pg05.htm…

இந்தியாவில் அரசாங்க பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதி இல்லாததால் adolescent வயதை அடைந்த பெண்கள் பள்ளிகளிருந்து நின்று விடுகிறார்கள் என்ற தகவல் மெதுவாக Govt காதுகளை எட்டி உள்ளது. அதற்கான ப்ரத்யேக திட்டங்கள் தீட்டி உள்ளதாக கேள்வி. நடைமுறைபடுத்தினார்களா என்று தெரியவில்லை.

reply to this comment

20/07 06:22:21

Padma Arvind wrote:

நன்றி வஜய். நாராயணன்: நீங்கள் இனும் சிறப்பாக எழுதி இருக்ககூடும்.நான் உங்களை Gangs பற்றிய பதிவிலே எதிர்பார்த்தேன். இந்தியாவில் இவை பற்றி எழுதுவீர்கள் என்று.

ராஜ்: நன்றிகள். பெண்களின் இந்த பிரச்சினையை இன்னும் தீவிரமாக எழுத எண்ணி இருக்கிறேன்.

reply to this comment

20/07 06:24:40

Padma Arvind wrote:

ரம்யா: இன்னமும் இல்லை. இதைவிட இன்னும் சில பதின்ம வயது பெண்கள் அவமானத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதும் தெரியவந்தது. விரிவாக எழுத உள்ளேன். தங்கள் சுட்டிக்கு நன்றி. படிக்கிறேன்.

reply to this comment

20/07 06:26:28

கி.பி.அன் wrote:

முக்கயமானதும் அவசியமானதுமான பிரச்சனை தொடப்பட்டுள்ளது. ஆனால் மேலோட்டமாக சொல்லப்பட்டுள்ளதோ என்று நினைக்கின்றேன்.

ஆசிய ஆபிக்க பிரச்சனை என்று அகலக்கால் வைக்காமல் இந்தியா, தமிழ்நாடு, சென்னை, வியாசர்பாடி என்று சுருங்கி வந்து யோசித்தால் நல்லது. டெல்லியில இருந்து சென்னை செல்லும் இரயிலில் பயணம் செய்தால் இந்தியாவின் குறுக்குவெட்டு முகத்தை காணலாம்.கிராமங்கள் கிராமத்து கோலங்கள. காலை நேரத்து கிராமத்தை இரயில் கடக்கும் போது கையில் செம்புடன் இரயில் பாதை யோராததில் நடந்து செல்லும் காட்சி இயற்கையானதா, இயல்பானமதா, தவிர்க்கமுடியாததா, கலாச்சாரமா என்று கேள்வியை எழுப்பினால் பதிலைக்காணலாம். தமிழ்நாட்டு நகரங்களை இணைக்கும் விரைவுப் பேருந்துகளில் (திருவள்ளுவர் போக்குவரத்து கழகம்) பயணம் செய்கையில நகரங்களை நெருங்குகை தெருமுக்குகளில் முகத்தை மூடியபடி மலங்கழிக்கும் மனித உருக்கள் சாதாரண காட்சியாக இருக்கும். தமிழ் நாட்டு சிறு நகரங்கள் கிராமங்களில் வீடுகளில் தங்க நோந்தால் காலையில் எழுந்து ‘வெளிக்கு போகலாம்’ வாங்க என்று அழைத்து சென்று ஆளுக்காள் உரையாடியடி மலங்கழிக்கும் காட்சிகள் நிகழ்வுகள் பழக்கமற்வர்களை கூசச் செய்பவை. ஆனால் இவை இயல்பானவை கலாச்சாரத்துடன் இணைந்தவை.

இன்னமும் நிறையவே இதைப்பற்றியே பேசலாம். எழுத்தாளர் பூமணியின் சிறுகதையொன்று ‘பீ’ என்னும் தலைப்பில் இந்த அனுபவம் பற்றி பேசுகின்றது. தலைப்பு சரியானதா நினைவில்லை. ‘கூட்டாம் பீ’ என்றும நினைவு.

இப்போது இது அல்ல பிரச்சனை ஏன் இந்தியாவில் தமிழ் நாட்டில் இதை ஒரு பிரச்சனையாகவோ அல்லது நாகரிகக் கேடாகவோ, சூழலியல் பிரச்சனையாகவோ, அல்லது சுகாராக் கேடாகவே கணிக்கப்படாமல் இருப்பது என்பதுதான். அல்லது இந்தியாவுக்கு வெளியே வாழ நேர்ந்ததனால்தான் எம்போன்றோருக்கு இவை பிரச்சனையாக தெரிகின்றதா? ஆனால் அக்கறை கொள்வோர் கவனத்தில் எடுப்பது நல்லதொன்றுதான். அது சரி நம் உடலின் உறுப்புகளில் ஒன்றான குண்டி பற்றி தமிழ் சமூகம் கொண்டுள்ள கருத்துநிலை என்ன?

புரிந்தால் இந்தப் பிரச்சனையின் ஆழங்கள் தென்படலாம்.

reply to this comment

20/07 07:10:05

Ramya Nageswaran wrote:

பத்மா,

அந்த linkன் கடைசியில் சில extra புள்ளிகள் சேர்ந்து விட்டதால் work பண்ணவில்லை. புள்ளிகள் இல்லாமல் paste செய்யவும்.

ஒரு related விஷயத்தைப் பற்றியும் எழுதலாம் என்று நினைத்தேன். சற்றே deviate செய்வதற்கு மன்னிக்கவும். என் பதிவில் GOONJ பற்றி எழுதியிருந்தேன் அல்லவா? அன்ஷு குப்தாவின் அடுத்த project பற்றி goodnewsindia.comல் வெளிவந்த தகவல் இதோ:

Goonj deserves your attention and support for this single product it makes: usable material is salvaged from the discards, long palm-wide, 2 feet long strips are readied, strings are tailored in, that can go around most Indian women’s waist and be tied. These are then washed ,folded and packed with care. India’s own sanitary napkins by the thousands are now ready for distribution.

reply to this comment

20/07 07:38:22

karthikramas wrote:

நிறைவாக எழுதியிருக்கிறீர்கள்.

reply to this comment

20/07 09:19:31

மயிலாடுதுறை சி wrote:

பத்மா

சமூக கண்ணோட்டம் உள்ள நிறைவான பதிவு.

இரண்டு மாதம் முன்பு தமிழகத்தில் இருந்த வந்த மாவட்ட ஆட்சியாளர் திருமதி சாந்த ஸீலா நாயர் இது சம்பந்தமாக நிறைய பேசினார்.

கிராமத்து பள்ளிகளிலும், கிராமத்து மக்கள் இடையே கழிவறைப் பற்றி விழிப்புணர்வும், வயதிற்கு வந்த பெண்கள் நாப்கின்களை சுகாதர முறைப்படி அகற்றுவதும், மிக மலிவான விலையில் அதனை தயாரிப்பதுப் பற்றியும் விரிவாக பேசினார். நேரம் கிடைக்கும் பொழுது தனி பதிவாக போடுகிறேன்.

நன்றி

மயிலாடுதுறை சிவா…

reply to this comment

20/07 13:15:04

Padma Arvind wrote:

நன்றிகள் கி.பி.அன்: இது பெரிய பிரச்சினையாக தோன்றாதது எழைகளி அதிகம் பாதிப்பதால்தான். மற்றபடி கலாசாரத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. நமக்கு இவ்வளவுதான் என்று ஏற்று கொண்டுவிடும் மனம்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

reply to this comment

20/07 14:10:27

Padma Arvind wrote:

ரம்யா

இது நடக்க கூடியதுதான். நானே பஞ்சு வாங்கி தைத்திருகிறேன். தகவலுக்கு நன்றிகள்.கூஞ்சின் செய்கை பாராட்டுக்குரியது. ஏதேனும் பொருள் திரட்டி டஹ்ந்தால் இலவசமாக ஏழை பெண்கலுக்கு உதவுவார்களா என்று சொல்லுங்கள்.

reply to this comment

20/07 14:12:14

Padma Arvind wrote:

நன்றிகார்த்திக், சிவா. நானே எழுத எண்னி இருந்தேன். நீங்கள் எழுதுவது ஆணின் கண்ணோட்டத்தில் இன்னும் நன்றாக அமையும். உங்கள்பதிவை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

reply to this comment

20/07 14:13:41

இராதாகிருஷ்ணன༯a> wrote:

பலகாலமாக மண்டையைக் குடைந்து கொண்டிருந்த விஷயம் இது. பதிவில் கூட ஒருமுறை ஏதோ கொஞ்சம் எழுதிவைத்தேன்.

http://nradhak.blogspot.com/2004/08/blog-post.html…

//வீட்டில் வரவேற்பு அறையில் சுத்தம் எதிர்பார்க்கும் பலர் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன் இந்தியா சென்றபோது திருவரங்க கோவில் சுற்றியுள்ள வீதிகளில் சிறுநீரும் மலமும் பார்க்க சகிக்கவில்லை.// பெரும்பாலான இடங்களில் இதுதான் நிலைமை. பொருளாதாரப் பிரச்சனையைக் காட்டிலும் பழக்கவழக்கங்களில் உள்ள மெத்தனமே கழிப்பிட வசதியின்மைக்கு முக்கிய காரணமாகக் கருதுகிறேன்.

reply to this comment

20/07 16:53:16

Dondu wrote:

அரசு கட்டிடங்களில் பார்த்தால் (முக்கியமாக C.P.W.D. ஆல் கட்டப்பட்டவை) ஒன்று புலப்படும். டாயிலட்டுகளுக்கு வெளியில்தான் water coolers நிறுவப்படுகின்றன. மிகத்துரிதமாக அந்த கூலர்கள் உபயோகத்திலிருந்து விலகிவிடுகின்றன, ஏனெனில் அவ்வளவு நாற்றம். ஏன் அவ்வாறு அமைக்கிறார்கள் என்று கேட்டால் தண்ணீர் இணைப்பு குழாய்கள் நீளத்தைக் குறைக்க என்று குரைத்துக்கொண்டே கூறுகிறார்கள்.

நான் கேட்கிறேன்: கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கட்டிடம் கட்டுகிறீர்கள். செலவோடு செலவாக ஒரு சில மீட்டர்கள் அதிக நீளத்தில் தண்ணீர் இணைப்பு பைப்களை உபயோகப்படுத்தி கூலர்களை டாயிலட்டுக்கு தூரத்தில் நிறுவக்கூடாதா?

அன்புடன்,

டோண்டு ராகவன்

reply to this comment

24/07 22:35:51

Aarokkiyam wrote:

காஞ்சி பெரியவர் கூட மத்திய சிறையில் கழிய ரொம்ப கஷ்டப்பட்டார். ஒழுங்கான கழிப்பறை இல்லாமல் “வாழை” இழையில் கழிந்து மனிதக்கழிவை புனிதக் கழிவாக்கினார்.மற்றவர்களின் கழிவாக இருந்தால் பரவாயில்லை! ஜகத்த்குருவல்லவா? அவனின் மலம் மண்ணில் வீழ்ந்தால் ஒரு துறவிக்கு ஏற்பட்ட அவமானத்தால் இந்த ஜகம் அழிய சாபமிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

19/07: கல்யாண உற்சவமும் கன்னி பெண்களும்
அறிவிப்பு: இது என்னுடைய கருத்து மட்டும்தானே தவிர இதுதான் சரி என்று சொல்வது என் நோக்கம் அல்ல. ஒரு மாற்றுவழியை முன்வைத்திருக்கிறேன் எனக்கு தெரிந்தவரையில்.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கிலா

அலகிலா விளையாட்டுடையார் –அவர்

தலைவர் அன்னவர்க்கு சரண் நாங்களே என்றபடி ஒரு சக்தி என்னையும் அறியாமல் வழிநடத்துவதாக எ ன க்கு நம்பிக்கை உண்டு. அதுவும் புகுமுக வகுப்பில் முழுசதவிகிதம் மதிப்பெண் எடுத்தும், அவளை பொறியியல் படிக்க வைக்க முடியாத நிலை இருந்தபோது, அப்படி இளநிலை படித்தால் இயற்பியல் தவிர்த்து வேறெதுவும் படிக்க மாட்டேன் என்று சொல்லி அரசினர் ஆடவர் கல்லூரியில் சேர்ந்து படித்து பின் அவளுடைய விருப்பப்படியே பொறியியலும் படித்து, பின் ஐ.ஐ.டியில் மேல்படிப்பும் படிப்பார் என்றும் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆடவர் கல்லூரியில் இயற்பியல் படிக்க 10 பெண்களாவது வந்தால் தான் முடியும் என்று நிர்வாகத்திஅனர் சொல்லிவிட்டபடியால்,அதுவும் 10 பெண்கள் இயற்பியல் படிக்க சேர்க்கும் வரை கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.. உயிர் வேதியியல் படிக்கும் போது மனித உடல் என்னை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. ஒவ்வொரு நேர்மறை அயான் சேரும் போது அதை உடலின் அமில – கார நிலை எவ்வாறு சரிசமமாக்கப்படுகிறது என்று. இதையெல்லாம் ஒழுங்குமுறையாக இருக்க இயற்கையின் திறன் முக்கியம். அந்த இயற்கையே எனக்கு இறைவனாகிறான். ஆனாலும் சிறுவயதில் கற்ற தமிழ், வடமொழி பாடல்கள் அனிச்சையாக மனதிற்குள் வந்து போகும் ஒவ்வொருமுறை செயல் துவங்கும் முன்னும்.

சிறுவயதில், 5 ஆம் வகுப்பு வரை வைத்திஸ்வரன் கோவிலில் இருந்தோம். அப்போது சன்னிதியின் வாசலில் உள்ள தபால் தந்தி அலுவலகத்தில் என் தந்தை அதிகாரியாக (Post Master)இருந்தார். கிருத்திகை அன்று கோவிலுக்கு கூட்டமாய் வரும் பெரும்பாலார், தங்கும் இடத்திற்கு பணம் செலுத்த வசதி இல்லாதவர்கள் உள்ளே நுழைந்து பைகளை வைத்துவிட்டு விட்டு, கோவிலுக்கு போவார்கள். அவர்களை எங்கள் வீட்டிலேயே குளிக்க சொல்லி, குழந்தைகளுக்கு உணவு அளிப்பதும் வழக்கமாக இருந்தது.

கோவிலில் வள்ளி தெய்வானை திருமணங்கள் சிறப்பாக நடக்கும். இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு அந்த கதைகள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அ ளவிலேயே நடக்கும். நான் சென்று நாள் முழுதும் கோவிலில் இருந்து கவனித்திருக்கிறேன்.

என் அக்கா நைஜீரியா செல்லும் முன் திருப்பதி செல்ல விரும்பியதால், நாங்கள் அனைவரும் முதல் முறையாக திருப்பதி சென்றோம். மலையே இறைவனாக மிக அழக்கான மரங்களும் மலைகளும் மனதில் இன்னும் நிறந்திருகிறது. ஆனால் அங்கே தர்ம தரிசன வரிசையில் எத்தனை நேரமாகும் என்று தெரியாமல் மாட்டி கொண்டு 12 மணிநேரம் நெரிசலில் சிக்கி நின்ற போது, அழும் குழந்தைகளும் வரிசையில் இருந்து மீள முடியாமல் வழியிலேயே மலம் கழிக்கும் சிறுவர்களுமாய் வெளியேறினால் போதும் என்று தோன்றிவிட்டது. அப்போதைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி வந்ததாலும், தர்ம தரிசன் வரிசை கதவ்டைப்பு செய்ய பட்டது. குழந்தைகளும் சிறுவர்களையும் அழைத்து வந்து பசியுடன் 12 மணி நேரம் நின்றிருந்த ஏழைகளுக்கு இறைவைன் தரிசனம் கிடைக்க வில்லை.

இப்போதெல்லாம் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய முடியும் என்றாலும் திருப்பதி செல்வதே இல்லை. ஒருவகையில் முதலில் சென்ற அந்த பயணம் எங்களுக்கு ஒரு பாடமாக இருந்தது என்று சொல்லலாம். ஒவ்வொருவராய் வேலைக்கு போக ஆரம்பித்த போதும் கோவிலுக்கு பாலும் பழமும் கொண்டு அர்ச்சனை செய்யததே இல்லை. மாதம் ஒருமுறை கோவில் வாசலில் உள்ள பிச்சைக்காரர்களுக்கோ அனாதை விடுதிகளுக்கோ உணவு வழங்கும் வழக்கம் மட்டும் இருகிறது.

கடவுளுக்கு கல்யாண உற்சவம் செய்வதும், ஒப்பிலியப்பன் கோவிலில் யாரோ ஒரு பக்தர் நவரத்தின கிரீடம் வைர முடி போன்றவை தந்ததும் என்னை பொறுத்தவரையில் இறைவனுக்கு உகந்ததாய் இருக்க முடியாது.

ஆனாலும் என் திருமணத்திற்கு பின் என் கணவன் வீட்டில் திருப்பதி சென்று கல்யாண உற்சவம் செய்ய வேண்டும் என்று சொன்னது 14 வருடங்களாக ஒத்திவைப்பில் இருக்கிறது. இபோது பக்தர்களின் வசதியின் பொருட்டு பல இடங்களில் கல்யாண உற்சவம் செய்யும் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. முன்நாளில் பங்குனி உத்திரம் அன்று பட்டும் நடந்த கல்யாண உற்சவம் இப்போது எப்போது வேண்டுமானுலும் முடியும். இதைகூட என்னால் ஒப்புக்கொள்ளமுடிவதில்லை.

சமீபத்தில் என் கண்வர் வீட்டினர் வழிபடும் கோவிலில் பெருமாளுக்கு தங்க கசம் செய்ய பணம் திரட்டிய போதும் எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. பள்ளிக்கு செல்ல கூட முடியாத நிலையில், மாற்றி போட்டுக்கொள்ளாத நிலையில் இருக்கும் பெண்கள், சிறுவர்கள், ஆண்களுக்கு கைத்தறி உடை கூட இல்லை. நான் தானமும் தர்மும் கூடாது என்று சொல்லவில்லை. தேவைபடும் இடத்து தக்க உதவிகள் செய்ய வேண்டும்.

படமாடும் கோவில் பகவற்கொன்றீயில்

நடமாடும் கோவில் நம்பற்கங்காகா

நடமாடும் கோவில் நம்பற்கொன்றீயில்

படமாடும் கோவில் பகவற்கதாமே.

நான் நகர உயர்நிலை பள்ளியில் படித்த காலம் 10 வகுப்பிற்கு மேல் பெண்கள் தாவணி அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. என் வீட்டில் அம்மவிடம் புடவைகளே அதிகம் இல்லாத நிலையில் தாவணிக்கு எங்ஏ போக? மூத்த சகோதரியின் நைந்து பழசாகிப்போன ஒரு புடவை கிழிக்க ப்ட்டு நாங்கள் இரு சகோதரிகளும் பெற்று கொள்வோம். இக்கலிங்கம் போனால் என்ன ஏகலிங்க மாமதுரை சொக்கலிங்கம் உண்டே துணை என்பது போல அதுவே பள்ளி முடியும் வரை கூட வரும். பிறகு கல்லூரி சென்ற போது கைத்தறி புடவை இல்லாமல் வேதியியல் செய்முறை வகுப்புக்களில் வெளியேற்ற பட்டிருக்கிறேன். வகுப்பின் வெளியே 3 மணி நேரம் நிற்பது அவஸ்தையானது. எப்போதாவது எனக்கும் வசதி வந்தால் இந்நிலை மாற முயற்சிக்க வேண்டும் என்று நினைத்து கொள்வேன். அதன்படி ஒரு காப்பிக்காகும் செல்வை தனியாக எடுத்து வைத்து வருட முடிவில் நகர உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியரிடம் தருமாறு என் சகோதரனிடம் சொல்ல அவனும் அதை போல இன்னும் சிறிது பணம் போட்டு அவரிடம் கொடுப்பதும் வழக்கமாகி போனது. அந்த பணத்தை வங்கியில் போட்டு வைத்து வரும் வட்டியில் சில மாணவிகளுக்கு சீருடை புத்தகங்கள் வாங்கி தருவதும், ஆதை பெற்ரு கொள்ளும் மாணவிகள் எனக்கு கடிதம் எழுதுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை தந்து

பிறர் உயர உழைத்திருக்கும் ஏழை

அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்பேன்

அந்த சிரிப்பினில் இறைவனை நான் பார்ப்பேன் என்பதிலும் உண்மை இருக்கிறது.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madekarupy wrote:

பத்மா நல்ல ஒரு கட்டுரை. தங்களுக்கு இருக்கும் சிறு நம்பிக்கை கூட எனக்கு இல்லை. இறைவன் என்று ஒன்றை வணங்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாதவள் நான். தாங்கள் சொல்வது போல் ஏழைகளுக்கு உதவுதல்தான் மனதிற்கு கொஞ்சமேனும் நிம்மதியைத் தரும். ஆனால் ஜெயமோகனின் “ஏழாம் உலகம்” படித்த பின்பு அதிலிருக்கும் நம்பிக்கையும் போய் விட்டது. எல்லாமே வியாபாரமாகிவிட்ட நிலையில் எதிலும் நம்பிக்கை அற்ற தன்மையே எஞ்சி நிற்கின்றது.

reply to this comment

19/07 10:19:43

வன்னியன் wrote:

சிறப்பான பதிவு.

என்னைக்கேட்டால் கோயிலுக்கான தான தர்மங்கள் எதிர்க்கப்பட வேண்டியவையே என்பது என்கருத்து. இது நான் சார்ந்த ஈழத்தின் சிக்கல்களோடு பார்க்கிறேன். இன்னும் மக்கள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களின்; கோயில்களுக்குத் தேர் செய்ய இலட்சக்கணக்கிற் பணம் திரட்டப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கில் வீடுவாசலின்றி மக்கள் அவதிப்படுகையில், படிக்க பாடசாலைக்கட்டடங்களே இல்லாத நிலையில் கோயில்களுக்கு இறைக்கப்படும் பணம் வயிற்றெரிச்சலைத்தான் தருகிறது.

அதுமட்டுமன்றி, இன்னும் சாதித்தடிப்பையும் பரம்பரைச் செருக்கையும் வெளிக்காட்டவும் கோயில்த் திருவிழாக்கள் தான் வடிகாலாயிருக்கின்றன.

reply to this comment

19/07 10:24:02

வன்னியன் wrote:

அடடே கறுப்பி!

இன்னும் இதுக்குள்ளதான் சுத்திக்கொண்டிருக்கிறியளோ?

reply to this comment

19/07 10:41:03

karthikramas wrote:

நட்சத்திரத்துக்கு வாழ்த்து.

reply to this comment

19/07 10:55:17

karupy wrote:

ஆமாம் வன்னியன் இன்னும் இங்குதான் சுத்திக்கொண்டிருக்கின்றேன். அனேகமாக வியாழக்கிழமையோடு மின்கணனி இடம்மாறிவிடும் என்று நினைக்கின்றேன். வெள்ளியோடு வேலை முடிகின்றது. வலைப்பதிவுகளை பார்வையிடுவேன். முக்கியமானது என்று படும்போது பின்னூட்டமிடுவேன். அவ்வளவே.

காதிர்காமஸ் அவ்ளோதானா?

reply to this comment

19/07 11:05:21

Mathy Kandasamy wrote:

மிகவும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் பத்மா.

இங்கே கோவில்களில் ஒவ்வொரு மாதமும் உண்டியலில் குறைந்தது பத்தாயிரம் டாலர் சேரும் என்ற செய்தியும்,

திருவிழாவுக்கு ஒவ்வொரு நாளும் நாப்பதாயிரம் வரை திரட்டி குழுக்களாகச் சேர்ந்து பொறுப்பேற்றுச் செய்கிறார்கள் என்ற செய்தியும் சமீபத்தில் கிடைத்தது.

பணத்தை, உற்றார் உறவினர் இல்லாத அனாதைக்குழந்தைகளுக்குச் செலவு செய்யவும், புதுத் தொழில்களைத் தொடங்கவும் நினைக்கும் உறவினர்கூட, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றபடி பணத்தைக் கொடுக்கிறார்கள்.

அடுத்த வார இறுதியில் Val Morin முருகன் கோயில் தேர். பத்தாயிரக் கணக்கான வாகனங்கள் முற்றுகயை¢டும்.

நீங்கள் சொல்வதை, இங்கே எவ்வளவோ சொல்லிப் பார்த்திருக்கிறேன். ம்கும் பலனில்லை.

-மதி

reply to this comment

19/07 12:43:23

Mookku Sundar wrote:

அருமையான சிந்தனை.

பிறருக்கு கெடுதல் நினைக்காமல், முடிந்தவரை நல்லவர்களாக இருந்தாலே போதும்.கடவுள் என்றாலே கடந்தும், உள்ளும் இருப்பவன் என்ற பொருளில் நாம் “உள்” ளையே மறந்து விட்டோம்.

சந்தனக்காப்பு அலங்காரமும், பஞ்சாமிர்த/பால்/பன்னீர் அபிஷேக அட்டகாசங்களும் கடவுளா கேட்கிறார்..??

தமிழ்நாட்டில் ஆத்திகம், நாத்திகம் என்று எல்லாமே – பிழைப்புதான்.

reply to this comment

19/07 13:26:54

ராம்கி wrote:

நட்சத்திரப் பதிவு.

சிறு வயதில் நன்றாகத் தமிழ் கற்றிருக்கிறீர்கள். அதுவும் ஆன்மீகத் தமிழ்..

உங்கள் எழுத்து படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. எந்தவித தத்துவ முலாமும் இன்றி போலி சவடால்கள் இன்றி வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பதிவுகள் வருவதால் சிறப்பாக இருக்கின்றன.

ராம்கி (ரஜினி ராம்கி அல்ல)

ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கி.

எலிக்குட்டியை எங்கும் வைத்துப் பார்க்கும் அவசியம் இல்லை.

reply to this comment

19/07 13:47:04

Snegethy wrote:

அண்மையில் ஆதி பராசக்தி படம் பாரத்தேன்.அதில் ஒரு காட்சியில் அம்மனுக்கு பலகாரங்கள் எல்லாம் செய்து படைத்துவிட்டு யாகம் செய்துவிட்டு முனிவர்கள் எல்லாம் இருந்து படையலை சாப்பிடுவார்கள் அம்மனோ ஒரு மீனவன் வீட்டுக்குச் சென்று பழைய கஞ்சி குடிப்பா.

கோயிலுக்கு பளிங்குக்கல் பதிக்க ஒரு சதுர அடிக்கு $25 கொடுக்கிற நேரம் சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகளைப் புனரமைக்க 3000 ரூபா கொடுப்பது எவ்வளவோ மேல்.

reply to this comment

19/07 13:58:58

இராதாகிருஷ்ணன༯a> wrote:

நட்சத்திரப் பதிவுக்கு வாழ்த்துகள்!

reply to this comment

19/07 16:15:52

துளசி கோபால் wrote:

நல்ல பதிவு பத்மா.

reply to this comment

19/07 18:11:27

Padma Arvind wrote:

கருப்பி:

ஏழைகளுக்கு உதவும்போதும் திகட்டதிகட்ட செய்தால், இருப்பதால் தான் கொடுக்கிறார்கள் என்று குறை சொல்ல நேரிடும். சுனாமியில் தூக்கி எறியப்பட்டவை பற்றி படித்தேன்.

reply to this comment

19/07 18:29:24

Padma Arvind wrote:

நன்றி வன்னியன்.நீங்கள் சொல்வதைப்போல அவர் எவ்வளவு செய்திருக்கிறார். நீ ஏன் செய்யவில்லை என்று சொல்வதையும் செருக்கை காட்டி புடவை சார்த்துவதையும் பார்த்திருக்கிறேன். பக்தி இதுவல்ல

reply to this comment

19/07 18:30:45

Padma Arvind wrote:

நன்றி மதி, சுந்தர்: கோவிலுக்கு புடவை வாங்கி தா குறைகள் அகலும் என்று பரிகாரம் சொல்லும்வரை மக்கள் நிறுத்தப்போவதில்லை.

reply to this comment

19/07 18:31:46

Padma Arvind wrote:

சினேகிதி, கார்த்திக், துளசி, இராதாகிருஷ்னன்

நன்றிகள்.பாராட்டுக்களுக்கு நன்றி ராம்கி. நான் உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன். station bench என்ற பெயரே அழகாக் இருக்கிறது

reply to this comment

19/07 18:33:39

sarah wrote:

நல்ல சிந்தனை பத்மா

இதனைப் படித்தபின்

“மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து

வெருங்கதைகள் சேர்த்துப் – பல

கள்ளமதங்கள் பரப்புதற் கோர்முறை

காட்டவும் வல்லீரோ?”

ஆவியினுள்ளும் அறிவினிடையிளும்

அன்பை வளர்த்திடுவோம்”

என்ற பாரதியின் வரிகளோடு கூடிய சிந்தனையும் வந்தது.

மிக்க நன்றி பத்மா உங்களது அனுபவம் சார்ந்த உண்மைகளுக்கும், அதனை உரக்கக் கூறும் திறனுக்கும்.

சாரா

reply to this comment

19/07 20:38:44

மூர்த்தி wrote:

மிக நல்ல பதிவு பத்மா அவர்களே…

மனதைப் பாதித்தது நீங்கள் பகிர்ந்துகொண்ட இக்கட்டுரை. யோசிக்கவும் வைத்தது.

reply to this comment

19/07 20:39:45

Arun wrote:

நெஞ்சைத் தொடும் பதிவு. குடியரசுத் தலைவர், பிரதமர் என்று பலரால் பாராட்டப்பெற்ற தாங்கள், எப்படி படிப்படியாக படிக்கக் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது.

- அருண் வைத்யநாதன்

reply to this comment

19/07 23:11:05

mugamoodi wrote:

// Snegethy wrote: கோயிலுக்கு பளிங்குக்கல் பதிக்க ஒரு சதுர அடிக்கு $25 கொடுக்கிற நேரம் சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகளைப் புனரமைக்க 3000 ரூபா கொடுப்பது எவ்வளவோ மேல். //

அது எப்படி மேலாகும்.. எனக்கென்னவோ ரெண்டும் ஒன்று போலவே தெரிகிறது. உங்களுக்கு மாவீரர் மேலிருக்கும் கல் பெரியது, மற்றவருக்கு கல்லுக்குள் இருக்கும் கடவுள் பெரியது…

நான் இவ்வருடம் வரை காபிக்காகும் செலவை நான் படித்த உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு – பள்ளிக்கு அல்ல – தரலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்…

reply to this comment

19/07 23:33:28

mugamoodi wrote:

// இவ்வருடம் வரை // இவ்வருடம் முதல்

reply to this comment

19/07 23:34:21

அல்வாசிட்டி.வி wrote:

ஆகா! இந்த வார நட்சத்திரமா நீங்க. நான் கவனிக்கவே இல்லை பாருங்க. முதலில் வாழ்த்துக்கள்.

இந்த கட்டுரையைப் பற்றி:

பக்தி என்ற மாயையும் மீறி பொதுநலனில் அக்கறைக் கொண்டோர் கொஞ்சமாவது இதைப் பற்றி யோசிப்பதுண்டு. இதை ஒட்டிய பதிவு எழுத நினைத்து தள்ளி போய் கொண்டேயிருக்கிறது. ஆனால் நீங்கள் ரொம்ப எஃப்க்டிவாகவே எழுதியுள்ளீர்கள். “வாசிப்போம் சிங்கப்பூர்” இயக்கத்தின் வாயிலாக மறைந்த சிங்கப்பூர் எழுத்தாளர் நா.கோவிந்தசாமி அவர்களின் “வேள்வி” நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நாவல் நீங்கள் சொல்லும் இந்த கருத்தை வலியுறுத்துகிறது. சிங்கப்பூர் சுழலுக்காக இந்த கதை எழுதப்பட்டிருந்தாலும் எங்கும் இது பொருந்துமென நினைக்கிறேன்.

சிங்கப்பூரில் இந்திய கோவில்களைப் பற்றி படிப்புக்காக ஆராய்ச்சியை மேற்கொள்கிறான் ஒரு தமிழ் இளைஞன். அளவுக்கதிகமாக கோவில்களுக்கு இருக்கும் சொத்து எதற்கும் பயன்படாமல் இன்னொரு கோவிலுக்கு போட்டியாக கோவிலை அலங்கரிப்பதிலே செல்வழிக்கிறார்கள். ஆராய்ச்சி மாணவன் ஏன் அந்த பணத்தை சமுதாய முன்னேற்றத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்று கேட்டதற்கு “சாமி குத்தம்” அது இதுவென பழமை பேசுகிறார்கள். அவனை ஒதுக்குகிறார்கள். அவனது போராட்டம் பற்றி பேசும் கதை அது.

இந்த பதிவை படிக்கும் போது அந்த நாவல் தான் ஞாபகம் வந்தது

reply to this comment

20/07 00:03:34

Ramesh wrote:

Nalla Pathivu. I also felt the same thing 2 days back when I read in newspaper that Ilayaraja Donated 27 lakhs worth ornamant to Mookambigai temple.

1 crore loan irukunnu ooorula irukira thamizhar ellam avar pannina CDya vanga solli kettavaru intha panathai avara sponser pannina org.kkukku kudithiruntharnna, innum neraiya athma thirupthi kedaichirukkum

reply to this comment

20/07 00:17:16

mugamoodi wrote:

சூப்பர்….. தல சூப்பர்…. நல்ல பதிவு…. ஜமாய்ச்சுட்டீங்க….

இந்த பின்னூட்டத்தின் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. அது இங்கே இந்த பதிவில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கசுமாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்…

உங்கள் பதிவை திசை திருப்பும் எண்ணம் இல்லை… இது ஒரு ஜாலி முயற்சி அவ்வளவே… தயவு செய்து இந்த ஒரு முறை பொருத்துக்கோங்க…

reply to this comment

20/07 01:00:45

NONO wrote:

நல்ல பதிவு! சிந்திக்கவேண்டியது! ஆனால் காணிக்கை செலுத்துபவர்களை குறைகூற எனக்கு அருகதையில்லை! நான் செய்யும் “ஊதாரிச்” செலவை பார்கையில் (உ+ம்: நான் புகைக்கும் சிகரட்டின் விலை மாதம் இந்திய மதிப்பின்படி 6 502 ரூபாய், ஒருவருடம் 6502*12= 78 ஆயிரத்து 24 ரூபாய் ) அவர்கள் கானிக்கை அளிப்பது ஒன்றும் பெரிய தவறாய் எனக்கு தெரியவில்லை ஆத்தம திருத்திக்காக அப்பிடி காணிக்கை அளிக்கிறார்கள்!

“நான் இவ்வருடம் வரை காபிக்காகும் செலவை நான் படித்த உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு -

பள்ளிக்கு அல்ல – தரலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்…”

நானும் இவ் யோசனையை பின்பற்ற முயற்சி செய்கிறேன்….. காப்கிச் செலவை அல்ல.. புகைத்தல் செலவை!!!!

reply to this comment

20/07 09:54:35

kumaraess wrote:

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்,

படமாடும் கோவில் பகவற்கொன்றீயில்

நடமாடும் கோவில் நம்பற்கங்காகா

நடமாடும் கோவில் நம்பற்கொன்றீயில்

படமாடும் கோவில் பகவற்கதாமே.

சிறு வயதில் பாடசாலை சைவசமய பாடத்தில் படித்தது, வரிகள் மறந்துபோய்விட்டாலும், பொருளை மறக்காமல் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லலாம் செயல்ப்படுத்திக்கொண்டிருக்கிறேன். முடிந்தால் இந்த செயுள் தொடர்பான மேலதிக தகவல்களை தந்து உதவவும்.

reply to this comment

20/07 11:00:25

Padma Arvind wrote:

சாரா: தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. நான் இன்னும் முழுமையாக பாரதியை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அருண், மூர்த்தி: மிக்க நன்றி.

முகமூடி: உங்கள் எண்ணம் முழுமையாக வாழ்த்துக்கள்.

விஜய்: வாழ்த்துக்களுக்கு நன்றி. நான் வேள்வி புத்தகம் கிடைத்தால் படிக்கிறேன். இதுபோல படிக்க வேண்டிய பட்டியல் உங்களை போன்றோர்களால் அதிகரித்துக்கொண்டே போகிறது.

ரமேஷ்: நானும் வைரக்கற்கள் மூகாம்பிகைக்கு தந்ததை படித்தேன். இவர்கள் கண்ணில் ஏனோ தற்கொலை வரை போகிற சக தொழிலாளிகள் படுவதே இல்லை என புரியவில்லை.

நோநோ: மிக்க மகிழ்ச்சி. தீர்மானம் நிறைவேற வாழ்த்துக்கள்.

குமரேஸ்: நானும் சிறுவயதில் படித்த பாடல். இது திருமந்திரத்திலிருந்து வருகிறது என்று நினைக்கிறேன்.

reply to this comment

20/07 11:18:16

kk wrote:

Yes, it is from thirumanthiram

reply to this comment

20/07 11:20:14

Thangamani wrote:

//நானும் வைரக்கற்கள் மூகாம்பிகைக்கு தந்ததை படித்தேன். இவர்கள் கண்ணில் ஏனோ தற்கொலை வரை போகிற சக தொழிலாளிகள் படுவதே இல்லை என புரியவில்லை//

பத்மா, பின்னூட்டமிட நேரமில்லை, ஆனால் உங்கள் பதிவின் முக்கியத்துவமும் நேர்மையும் என்னை நன்றியுணர்வில் நெகிழ்த்துகின்றன.

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

பின்னருள்ள த்ஹ்ருமங்கள் யாவும்

பெயர் விளங்கி யொளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

-பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன.

நன்றிகள்!

reply to this comment

20/07 18:35:31

Jayashree Abdul Malick wrote:

Madam,

Well written article. Somehow my parents had the same thought like you and I had never seen them spending money on such donations, abishekams to temples instead they used to get books to the needy childrens (my father & mother used to daily poojas and observe all fastings). Moreover, these highlighted thoughts in your article not only will help the needy people, but also help in reducing the religious fanaticism and encourage to accept all religions.

reply to this comment

18/07: அடையாளம் இல்லாத குழந்தைகளும் குழுக்களும் (Gangs)
சமீபத்தில் நான் காவலர்கள் தந்த ஒரு பயிற்சிகூடத்திற்கு சென்றிருந்தேன். அதில் பல கொடூரமான விடியோக்களை பார்க்க நேரிட்டது. 14 வயதிற்குள் உள்ள குழந்தைகள் குழுக்களில் சேர்ந்து அனுபவிக்கும் கொடுமைகள் கண்டதன் விளைவே இந்த சிந்தனை.

இங்கேயே பிறந்து காப்பகங்களுக்கு சென்ற குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது அவ்வளவாக பிரச்சினைகள் வருவதில்லை. ஆனால் திடீரென 3 ஆம் அல்லது 4ஆம் படிவத்தில் வந்து சேர்கின்ற குழந்தைகள் கண்ணை காட்டி காட்டில் விட்டது போல தடுமாறுவதும் மற்றைய மாணவர்களால் கேலி பேசப்படுவதும் அதிகம்.

இத்தனை நாள் கற்று கொண்ட முறையிலிருந்து மாறுபட்டு இருப்பதும் நண்பர்களை விட்டு பிரிந்து வருவதும் புதிய நாடு போன்ற யாவும் அவர்களை பயமுறுத்துகிறது. இதில் பெற்றோர்கள் அதிகம் நேரம் செலவு செய்து அவர்களுக்கு விளக்குவதும் இல்லை. இதில் பெரும்பாலும் பெண்கள் வீட்டில் சில காலம் இருக்க நேரிடுகிறது.

பிடுங்கி நட்ட மரமாக எல்லாவற்றையும் ஆரம்காலம் போல வாழ்க்கையை துவங்குவது ஆண்களுக்கும் ஒரு பெரிய சுமை. பிடிபட சில காலம் ஆகும். அதற்குள் பள்ளியில் குழுக்களில் இடம் பிடிக்க எதனையும் ஏற்றுக்கொள்ள இந்த குழந்தைகள் செய்யும் பிரயத்தனங்கள் அதிகம். இவர்கள் இங்கேயே இந்திய பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுடன் கூட ஒட்ட முடிவதில்லை. ஏனெனில் இங்கே பிறந்த குழந்தைகள் தாய் மொழியில் அவ்வளாவாய் பேசவோ அந்த ரசனைகள் பாடல்கள் விளையாட்டு என எதிலும் ஆர்வம் காட்டுவதும் இல்லை.

இந்த குறுகிய காலத்துள் இவர்கள் மனம் தடுமாறுகிறார்கள். இவர்களுக்கு அடையாளம் இருக்கிறது. தாய் மொழியில் பேசவும் எழுதவும் படிக்கவும் தெரிந்திருகிறது. இந்திய பண்டிகைகள் விழாக்கள் திரைப்படங்களென எல்லாவற்றிலும் ஒரு விருப்பமும் அறிதலும் இருக்கிறது. அதே இங்கே பிறந்த குழந்தைகளுக்கு அமெரிக்க படங்கள், பாடல்கள் என விருப்பம் சற்றே மாறி இருக்கிறது. இங்கேயே பிறந்த குழந்தைகளுக்கு ஒரு தனித்த அடையாளம் இல்லை. நிறம் மாறி இருப்பதால் அமெரிக்கர்களாக முழுதும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதே சமயம் மொழி மற்றும் அனைத்திலும் வேறுபட்டு இருப்பதால் புதிதாக வந்த இந்தியக்குழந்தைகளிடமும் அன்னியப்பட்டு இருக்கிறார்கள். பெற்றவர்கள் விரும்பி புறக்கணித்ததால் இவர்கள் அமெரிக்கர்களாகவும் அல்லாமல் இந்தியர்களாகவும் இல்லாமல் வேறுபட்டு இருக்கிறார்கள்.

எனக்கே இன்னும் இந்தியனாக இருப்பது என்ன என்று புரியவில்லை. மனிதனாக இருப்பது தெரியும்.இந்திய உணவை சமைத்து இந்திய மொழிகள் பேசி, இந்தியர்களுக்கு தேடி உதவி வாழும் போதும் நீ அமெரிக்கனாக மாறிவிட்டாய் என்று சொல்லும் கணவனின் உறவினர்கள் உண்டு. இந்தியனாக இருப்பது என்றால் உணவு உடை ஆகியவற்றில் இந்தியருக்கான அடையாளத்தை பின்பற்றுவதா? அல்லது சடங்குகள் சம்பிரதாயங்கள் இவற்றில் வளர்ந்த போது செய்ததை செய்வதா எது என புரியவில்லை. இந்தியாவில் பிறந்ததால் நான் இந்தியன் என்பது சட்டப்படியான விளக்கம் மட்டுமே. அப்படி இருக்கும் போது பிறப்பால் அமெரிக்கனாக இருக்கும் என் பிள்ளைக்கு என்ன தெரியும்? சடங்குகள் பழக்கங்கள் இவையே சரி எது தவறு எது என்று இன்னும் நான் அறியவில்லை. எனக்கு நினைவு தடங்கள் இருக்கிறது சிறு வயதில் பொங்கலன்று இப்படி செய்தோம் கார்த்திகை அன்று இப்படி செய்தோம் என. . அந்த நினைவுகள் கூட என் பிள்ளைக்கு இல்லை. இந்திய விழாக்கள் எல்லாவற்றிலும் வேறுபட்டு அந்நியப்பட்டு இருக்கிறார்கள். புரிந்தும் புரியாமலும். வெகுநாட்களாக இங்கே வசிப்பவர்களுக்கு ஆரம்ப காலத்தில் எதுவும் கிடைக்காமல் தனித்து வாழ்ந்து பழகியதும் தொடர்பு விட்டு போய் பல காலம் ஆனதனாலும் இப்போது எல்லாம் கிடைத்தும் எதிலுமே நாட்டம் இருப்பதில்லை. இந்திய உணவை உண்பதும், விடுமுறைக்கு இந்தியா செல்வதும், கோவிலுக்கு போவதும், இந்திய இசையை கேட்பதும் செய்யும் பிள்ளைகள் இந்தியர்கள் என்றால் அவர்களால் தங்கு தடையின்றி தமிழ் பேச தெரியவில்லை. ஆனால் அவர்கள் தாய் மொழியாக காகிதங்களில் ஆங்கிலம் குறிக்க பட்டிருக்கிறது. தமிழ் என்று நான் எழுதிய போது பள்ளியில் நீண்ட விவாதத்தின் பின் ஆங்கிலமாக மாறிவிட்டது. எத்தனை குழப்பங்கள் நமக்கே. இதில் குழந்தைகள் இன்னமும் அதிக குழப்பத்தில்.

வேண்டிய விளையாட்டு பொருள் கிடைக்காமல் பள்ளியில் பலரும் கேலி செய்வதை பொருட்படுத்தாமல் இருக்கும் மன திடம் இல்லாதவர்கள், முரட்டு மாணவர்களால் கேலி செய்யப்படும் போது எப்படியாவது அந்த குழுவில் இடம் பிடிக்க துடிக்கிறார்கள். இந்த குழப்பத்தில் சில குழந்தைகள் தடம் மாறி போகிறார்கள்.

இதை உபயோகித்து சிலர் “gangs” இவர்களை சேர்த்து கொள்கிறார்கள். தவறு என்று புரிந்து இவர்கள் விலகுவதற்குள் மீள முடியாத தூரத்தில் சிக்கலில் மாட்டி கொள்கிறார்கள். இந்தியர்கள் அதிகம் வாழும் எடிசன் போன்ற இடத்தில் மட்டும் 5000 குழந்தைகள் புதிய அங்கத்தினர்களாக சேர்ந்துள்ளனர். இப்போது மிக மும்முரமாக அங்கத்தினர் சேர்க்கும் பணி தொடங்கி இருக்கிறது.

அமெரிக்காவில் கிட்டதட்ட 1 மில்லியன் பள்ளி மாணவர்கள் 7 வயது முதல் 15 வயது வரை உள்ளவர்கள் அடக்கம். நியுஜெர்ஸியில் மட்டும் 65000 அங்கத்தினர். இந்த குழுக்களில் சேர சதி மத நிற வேறுபாடு இல்லை. ஒருவரை கொலை செய்தோ, போதப்பொருளை திருடியோ கொண்டுவர வேண்டும். பெண்கள் பலருடன் கலவி கொள்ள வற்புறுத்த படுகிறார்கள். ஏழு அங்கத்தினருடன் உறவு கொண்ட 8 வயது பெண் பின் மனம் மாறி நான் உங்கள் குழுவில் இருக்க விரும்பவில்லை என்று சொன்ன போதும் அடையாளம் காட்டிவிடுவாள் என்று கொலை செய்து விட்டனர். சமீபகாலத்தில் மூன்று பள்ளிகளில் குழந்தைகள் துப்பாக்கி விற்பதாக புகார் வந்திருக்கிறது.

எடிசனில் நல்ல புகழ் பெற்ற ஒரு பள்ளியில் ஒரு இந்திய மாணவன் ஒரு பெண்ணை கடத்தி தன் பிடியில் வைத்திருந்ததாக கைது செய்ய பட்டான்.

பெருபாலான நேரம் பெற்றோர் இதை ஒத்து கொள்வதில்லை. என் பிள்ளை அப்படி இல்லை என்று மறுக்க வே செய்கிறார்கள். ஆதாரம் காட்டி அடியும் உதையும் வாங்கி பிள்ளை காவலரிடம் ஒப்பு கொண்டதை பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். ஒரு விளையாட்டு ஷூக்களுக்காக தன் அண்டை வீட்டு காரருக்கு ஒரு மென்பொருளை தரவிறக்கி கொடுத்திருக்கிறான் ஒரு சீக்கிய மாணவன். இது தன்னிச்சையாக போட்டி நிறுவனத்தில் தொடர்ந்து இணைப்பு தந்து அதன் சர்வரை செயலிழக்க செய்து வியாபாரத்தை குறைத்திருக்கிறது. இந்த சிறுவன் இப்போது சிறையில். ஷூக்கள் கேட்ட போது அதை மறுத்த பெற்றோர் தொடர்ந்து தீவிரமாக இருந்த பிள்ளையிடம் விளக்கி இருக்கலாம். எது தேவை எது ஆசை என்பதும் சிந்திக்க அல்லது மனம் விட்டு பேசி இது செய்யலாமா என்றாவது கேட்க கூடிய நட்பு சூழல் இருந்திருக்கலாம்.

பக்கத்து வீட்டுக்காரரோ நான் ஆசையாக ஷூக்கள் கொடுத்தேனே தவிர நான் இப்படி செய்ய சொல்லவில்லை. ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு விட , வயது வந்த வாலிபனாக இந்த பிள்ளை விசாரிக்க பட இருக்கிறான்.

பெற்றோர்களே: எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை என்ன செய்கிறான் என்பதிலும் காட்டுங்கள். தேவைக்கும் ஆசைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சொல்லுங்கள். மாறுபட்ட சூழல் உங்களுக்கு மட்டும் இல்லை பிள்ள்களுக்கும் பயத்தை தரும்.

பொதுவாக gangஇல் சேர்பவர்கள் ஒரே நிறத்தை (சிவப்பு, நீலம், கருப்பு) தேர்ந்தெடுப்பதும், சில எண்களை உடலில் எழுதிக்கொள்வதும் (13,6, 666, 14), திடீரென மதங்களில் அதிக ஆர்வம் காட்டுவதும் நடக்கும். கைவிரல்களால் பேசுவதும், சில குறியீடுகளை எழுதி இருப்பதிலும் ஆரம்பிக்கிறது.

A B C D E F G H I J K L M N

O P Q R S T U V W X Y Z என்று எழுதி அதில் B க்கு நேர் கீழே உள்ள எழுத்தான P என்று எழுதி பாருங்கள். BLOOD என்பதனை P Y AAR என்று எழுதி இருப்பார்கள். Support of local 81 என்று எழுதிய சட்டைகளை திடீரென வீட்டிற்கு கொண்டுவந்தால் சந்தேகியுங்கள். தன் பிள்ளையின் உடலில் கத்தியால் கீறிய CK 13 என்ற எண் சீழ் பிடித்தது கூட பெற்றோருக்கு தெரியவில்லை. உடனே இது அமெரிக்கர்கள் என்று எண்ண வேண்டாம்.

என்ன வேலை என்றாலும் பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது மிக முக்கியம்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeSnegethy wrote:

புலம்பெயர்ந்து வாழும் எங்களுக்கு மிகவும் தேவையான ஒரு பதிவு.

\\திடீரென 3 ஆம் அல்லது 4ஆம் படிவத்தில் வந்து சேர்கின்ற குழந்தைகள் கண்ணை காட்டி காட்டில் விட்டது போல தடுமாறுவதும் மற்றைய மாணவர்களால் கேலி பேசப்படுவதும் அதிகம்.\\

கனடாவில் ஒரு ஆரம்பப்பள்ளிவகுப்பிலிருந்து திடீரென தாய் மொழியில் கத்தி கலாட்டா செய்த ஒரு ஈரானிய மாணவனைப் பற்றி வாசித்திருக்கிறேன

reply to this comment

18/07 13:47:22

Radha Sriram wrote:

Dear padma,

wonderful article…. i came to the US with a grown up son.Whenever i spoke with people here about the curriculum they said that he was goingt o breeze through his academics,but nothing such happend with him.he struggled and had to learn many things.

The first year was quite traumatic inspite of California being a very friendly state…..Your write up reflects a very genuine side of relocation….parents do please think again before you bring yr school going kids to a diffrent country and dont you ever fool yourself by giving reasons as better life style and exposure!!!!

Radha

reply to this comment

18/07 22:30:47

Thangamani wrote:

தேவையான நல்ல பதிவு! நன்றிகள்!

reply to this comment

19/07 01:22:45

ஷ்ரேயா wrote:

பிள்ளைகளின் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் பெற்றோருக்கும், மற்றோருக்கும் உண்மையை உணர்த்தும் பதிவு.

வாழும் சூழலுக்கு இசைவாக்கமடைந்தோ அல்லது அதிலிருந்து தப்பிக்கும் முகமாகவோ பிள்ளைகள் ஈடுபடக்கூடியதைச் சொல்லியிருக்கிறீர்கள். படிப்பில் மட்டுமல்லாது பிள்ளைகளின் வாழ்வில் எல்லா அங்கங்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது.

reply to this comment

19/07 02:56:23

வாசன் wrote:

சிந்தனையை தூண்டும் பதிவு. நன்றிகள்.

ஒரு தகவலுக்கு

வெகு குறைவாக இந்தியர்கள் வாழும் மாநிலத்தில், அதிலும் சொற்ப எண்ணிக்கையில் தமிழர்கள் இருக்கும் இந்த நியு மெக்சிக்கோவில் 23 & 18 வருடங்களாய் வாழ்ந்து வருகிறோம். இங்கு பிறந்த எங்கள் மகனை அமேரிக்கன் என்பதாகவே வளர்த்து வருகிறோம். அவருடைய நண்பர்களில் இந்தியர்கள் இல்லை. நிற வேற்றுமை இதுவரை ஏதும் இக்கட்டை விஷ்ணுவுக்கு கொடுத்தில்லை. பெரும்பான்மை ஹிஸ்பேனிக்ஸ் என்பது காரணமாய் இருக்கலாம்.சமயம் வாய்க்கும் போதெல்லாம் வற்புறுத்தலாய் இல்லாமல் அவருடைய பெற்றோர்களான எங்களது பிறந்து,வளர்ந்த கதைகளை அளவாக சொல்வோம்! அவருக்கும் இது பிடித்துள்ளதாகவேத் தோன்றுகிறது.

மற்றொன்று,

இந்தியர்கள்/தெற்காசியர்கள் நிறைய வாழும் மாநிலத்தில் வாழாமல் இருப்பது நல்லதாகவேத் தோன்றுகிறது. நன்றி எடிசன் பற்றிய தகவலுக்கு.

reply to this comment

19/07 12:06:42

Padma Arvind wrote:

பினூட்டமிட்ட நண்பர்களுக்கும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டவர்களுக்கும் நன்றிகள்.

ராதா: பல பெற்றோர் இங்கே கல்வியில் இந்திய குழந்தைகள் எளிதாக முதல்நிலை பெறலாம் என்று நினைக்கிறார்கள். அது பெரும் தவறு. இன்னும் சிலர் அமெரிக்க கல்விமுறை இந்தியாவைவிட மிக தாழ்ந்தது என்றும் தவறெண்ணம் கொண்டிருக்கிறார்கள். உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.

reply to this comment

19/07 12:24:23

Padma Arvind wrote:

வாசன்: நீங்கள் சொல்வதில் அதிக உண்மை இருப்பதாக நம்புகிறேன். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடத்த்ஹில் இருப்பவர்கள் இன்னமும் இந்தியாவில் இருப்பதைபோலவே தங்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள். அது மிக பெரிய மன கவலையை இவர்களிடம் உர்வாக்குவதை பள்ளி கவுன்சிலர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.நன்றிகள்

reply to this comment

19/07 12:26:07

ராம்கி wrote:

என்ன சொல்ல, நல்ல பதிவு என்று பதிவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.நீங்கள் ஆங்கிலம் மட்டும் பேசும் அமரிக்க நிலை பற்றி எழுதியுள்ளீர்கள். ஜெர்மன்,ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் போயுள்ள குழந்தைகள் மொழிப் பிரச்னையிலும் தவிக்கிறார்கள்.

உலகமெங்கும் ஒரே மொழி.குழந்தைகளைக் கவனிக்க பெற்றோருக்கு நேரம் இல்லை என்ற மொழிதான் அது. எச்சரிக்கையாக இருந்தது உங்கள் பதிவு.

ராம்கி

http://stationbench.blogspot.com…

reply to this comment

19/07 14:44:09

NONO wrote:

தன் தாய்மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பிள்ளைளுக்கு புகட்டுவது பெற்ரேரின் கடமை…, அதைத்தான் பின்பற்றவேண்டும் அல்லது பிள்ளைகளின் மீது தினிப்பதுதான் கூடாது!!! வளந்து பெரியவர்கள் ஆனதும் குழந்தைகள் தங்களுக்கு பிடித்ததையோ அல்லது இரண்டிலும் சிறந்ததாக அவர்கள் கருதுவதை தெரிந்து எடுக்க இலவாக இருக்கும் என்பது எனது கருத்து!.

reply to this comment

19/07 21:15:26

chandravathanaa wrote:

நல்ல பதிவு

reply to this comment

20/07 01:39:02

Padma Arvind wrote:

ராம்கி, சந்திரவதனா, னோனோ: நன்றி.பிள்ளைகள் இரண்டும் அறிவது நலம் என்பதையும் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையும் வேண்டும் என்பதும் நல்ல கருத்துக்கள்.