»
S
I
D
E
B
A
R
«
மணமுறிவும் உதவித் தொகையும் -5
Nov 13th, 2007 by பத்மா அர்விந்த்

மணமுறிவுக்குப் பின், ஊதியம் ஏதும் இல்லாமல் வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பில் இருக்கும், சுய ஊதியம் இல்லாத ஆண் அல்லது பெண்ணுக்கு மற்றவர் வாழ்நாள் முழுதுமோ அல்லது அவர் இன்னொரு வேலையை தேடிக்கொள்வது வரையோ தரும் உதவித்தொகைதான் alimony எனப்படும் உதவித் தொகை. எவ்வளவு உதவித்தொகை என்பதும், யார் யாருக்கு தர வேண்டும் என்பதையும் நீதிமன்றம் இருதரப்பு வழக்கறிஞர்களோடு பேசி தீர்மானிக்கும்.
உதவித் தொகையின் அளவு திருமண வாழ்க்கையின் காலம், குழந்தைகள், ஒருவருக்கு வேலை கிடைக்க/பார்க்க கூடிய சாத்தியம், இன்னொருவரின் வருமான அளவு, திருமண வாழ்க்கையில் அனுபவித்த வசதிகள் ஆகியவை பொறுத்து அமையும்.

உதாரணமாக, கணவன் மனைவி இருவருமே நன்கு படித்து, நல்ல வேலையில் இருந்தவர்கள். திருமணத்திற்கு பிறகு வீட்டை நிர்வகிக்க மனைவி வேலையை விட்டுவிட்டாலும் கூட, அவர் கடைசியில் வாங்கிய ஊதியம், அந்த துறையில் இன்னொரு வேலை கிடைக்க கிடைக்கும் காலம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.

முன்னாள் ஆளுனர் மெக்ரீவியின் மனைவி, விவாகரத்திற்கு பிறகு மாதம் $56,000 ஈடாக கேட்டு இன்னமும் வழக்கு குட்ம்ப நீதிமனறத்தில் இருக்கிறது. இந்த தொகை கிடைக்குமா, அவருடைய குழந்தையின் செலவு, அவர்கள் முன்னால் வசித்த வாழ்க்கையின் வசதி, மெக்ரீவியின் சம்பாதிக்கும் திறன் இவையாவும் கணக்கில் கொள்ளப்படும். கூடுமானவரை இருவரையும் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டபோதும், முடிவுக்கு வராததால் இது இப்போது விசாரணைக்கு செல்கிறது.

பொருளீட்டும் சாத்தியக்கூறு:

ஒருவரின் ஊதியம் கணக்கில் கொள்ளப்படும் என்று சொன்னேன் அல்லவா, அதை ஏமாற்ற சிலர் முயற்சி செய்யலாம். உதாரணமாக, வந்தனா ஒரு பொறியியல் வல்லுனர், வருட வருமானம் $100,000 என்று வைத்துக்கொள்வோம். அவர் கணவரை இந்தியாவில் இருந்து மேலே படிக்க இங்கே வரவழைத்திருக்கிறார். இருவருக்கும் ஏற்பட்ட பிணக்கில் விவாகரத்துக்கு செல்கிறார்கள். திடீரென வந்தனா தன் வேலைஅயி விட்டுவிட்டு, வீட்டிலேயே வேலை செய்யப் போவதாக சொல்லி, வருட வருமானம் $20,000 காட்டுகிறார். என்றாலும் நீதிமன்றம் இதை கண்டுகொள்வதில்லை. இந்த வழக்கில் alimony கணவனுக்கு வருட வருமானம் $100000 கணக்கில் கொண்டே வழங்க உத்தரவிட்டது.

அதேபோல இருவரின் திருமண வாழ்க்கையின் காலம், குழந்தைகள் ஆகியவையும் கணாக்கில் கொள்ளப்படும். ஒரு பரபரப்பான வழக்கில், கணாவன் மனைவி இருவரும் மேலாண்மை படித்தவர்கள். இருவரும் சரிசமமான ஊதியத்துடன் வாழ்க்கையை தொடங்கினர். இரண்டு குழந்தைகள் பிறட்ந்ஹபின் மனைவி தன் வேலையை விட்டு விட்டு குழந்தகளை பார்த்து கொள்ல வீட்டை நிர்வாகிக்க, கணவனுக்கு சில உதவிகள் (பணி தொடர்பாக) செய்து வந்தார். பிள்லைகள் வழக்கறிஞராகவும் மருத்துவராகவும் பணி புரியத் தொடங்கும் வரை பள்ளி கூட்டங்கள், கல்லூரி விழாக்கள் என்று எல்லாவற்றிற்கும் மனைவி சென்று வந்ததோடு மட்டும் அல்லாமல் ஒரு வீட்டு பிரச்சினை எதையும் கணவன் தொல்லை செய்யாமலும் பார்த்து நிர்வகித்தார். ஒரு 30 வருட திருமணத்திற்கு பிறகு கணவன் அவரை விவாகரத்து செய்ய வழக்கு தொடர்ந்த போது, தான் சம்பாதித்த சொத்து அனைத்தும் தன்னுடையது என்றும் அதில் எந்த உரிமையும் மனைவிக்கு இல்லை என்றும் சொல்லி வாதாடினார். பிள்ளையே அம்மாவுக்கு ஆதரவாக வழக்காடினார். தன் அம்மா உதவி இல்லாமல் தன் தந்தை பொருளீட்டுவது முடியாது என்றும், குடும்ப பிரச்சினைகளை அம்மா பார்த்துக்கொண்டதால் மட்டுமே தந்தையால் வெற்றிகரமாக முடிந்தது எனவும், மேலும் அம்மாவாலும் சரிக்கு சமமாக அல்லது ச்ற்றேனும் குறைவாகவோ பொருளிட்டியிருக்க முடியும் எனவும் வாதாடி கடைசியில் கணவனின் 20 மில்லியன் சொத்தில் மனைவிக்கு சரிபாதி என தீர்ப்பானது.

பிடித்தம் போக வருமானம் (net income): ஒருவரின் நிகர வருமானமே உதவித் தொகை வழங்க கருத்தில் கொள்ளப்படும். இதை தெரிந்த இராம், விவாகரத்து முடியும் தருவாயில் அதிக பிடித்தம் செய்ய தன் அலுவகத்தை வினவி இருக்கிறார். வருமான வரி தவிர, சில முதலீட்டில், சில மருந்து பொருட்கள் வாங்க, கல்வி நிதி போன்றவற்றிற்கு அலுவலகத்தின் மூலமே சம்பாத்தியத்தில் பிடித்தம் செய்துகொள்ள முடியும். ஆனால் அவர் செய்த தவறு, நிகர வருமானம் கணக்கிடப்படும் போது நீதிமன்றம் வரி, மருத்துவ காப்பீடு போன்றவற்றை மட்டும் தான் கணக்கில் கொள்ளும் என்பது. எனவே அவசரமாக செய்ய சொன்ன பிடித்தங்கள் பலனில்லாமல் போனது.
நீதிமனறாத்தில் ஒருவர்ன் மாத வருமானம், செலவு ஆகியவற்றை கடந்த ஒரு வருடத்திற்கு தர சொல்லுவார்கள். சில இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், இது போன்ற உதவி தொகை தர மறுக்கும் தங்கள் பணியாளருக்கு உதவ விரும்பி ஊதியம் இந்தியாவில்தான் வழங்குகிறோன் என்ரு சான்றிதழ்கள் தருகிறார்கள். சமீபத்தில் இது போல நியுஜெர்சியில் சொன்ன ஒரு நிறுவனத்திற்கு அரசாங்கத் தரப்பில் எல்லா ஊழியர்கள் சம்பளாப்பட்டியலுடன், நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கேட்டும் ஒரு ஆணை சென்ற உடனே, சான்றிதழை திரும்ப பெற்றதோடு அவர்கள் மேல் வரு இருந்த வழக்குகள், கடவுசீட்டு பிரச்சினைகள் ன பலவற்றையும் எண்ணி ஊழியரை பணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதனால் வழக்கு முடியும் வரை ஊழியர் நியுஜெர்சியில் இருக்க இயலாத நிலை வந்து, கடவுசீட்டு பிரச்சினகல் அதிகரித்து நிலமை மேலும் சிக்கலானது.

இன்னும் குடும்ப க்டன்கள், வீட்டு வாட்கை, அல்லது சொந்தமானதாக இருந்தால் அதன் மேலுள்ள கடன், எத்தனை காலம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

OTC மருந்துகள் மூலம் போதைக்குள்ளாகும் மாணவர்கள்
Oct 12th, 2007 by பத்மா அர்விந்த்

சென்ற மாதம் ஒரு மாலை வேளையில், town Hall கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தோம்.முக்கிய விவாத பொருள், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வாங்க கூடிய மருந்துகளை குழந்தைகள், மாணவர்கள் எப்படி தவறாக பயன்படுத்தி போதை ஏற்றிக்கொள்கிறார்கள் என்பதை பற்றியதான கருத்தரங்கு. அங்கே வந்திருந்த பொதுமக்கள் பலரின் சொந்த அனுபவங்களை கேட்கும் போது அதிர்ச்சியாக இருந்தது.

போதை மருந்துகள்விற்பதும் உபயோகிப்பதும் தவறான போது, காவலர்களிடம் அகப்படாமல் எப்படி போதை ஏற்றிக்கொள்வது என்பதை சிலர் தீவிரமாக சிந்திப்பார்கள் போலும். வீட்டில் அம்மா அப்பா யாரெனும் பல் மருத்துவர்களிடம் சென்று ரூட் கானல் சிகிச்சை அல்லது விஸ்டம் பல் பிடுங்கினால், மருத்துவர் தரும் வி கோடின் அல்லது ஆக்ஸி கோடின் போன்ற மருந்துகளை மிச்சம் வைத்திருந்தாலுபயோகிப்பது, மாத்திரிகளை விற்பது, மருத்துவர் எழுதிய குறிப்புகளை விற்பது என்று பரவலாக உயர்நிலை, மத்திய பள்ளி மாணவர்கள் பழக ஆரம்பித்தனர். அமெரிக்காவில் 10.5% உயர்நிலைபள்ளி மாணவர்கள் வி கோடின், ஆக்சி கோடினை பயன் படுத்தி போதை பழகத்திற்கு அடிமையாக உள்ளனர்.

மெக்சிகோ போன்ற நாடுகளில் இருந்து இணையம் வழி இந்த மருந்துகளை பெற முடிவதால் கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன் படுத்துகின்றனர். இதில் என் தோழி லிண்டாவின் மகன் ஜேசனும் ஒருவர். அதிக விளைவால் 19 வயதில் அவர் மரணமடைந்தார்.

டெக்ஸ்ட்ரொமெதொர்பண் (dextrapmethorphan) என்னும் பொருள் 125 வகையான இருமல் மற்றும் சளிக்கான மருந்துகளில் இருக்கிறது. சுடாஃபெட் இதில் முக்கியமாக பயன் படுத்தப்படுகிறது. இவ்வகை மருந்துகள் பலருடைய வீடுகளில் சாதாரணமாக வைக்கப்பட்டிருக்கும். இவற்றை மாணவர்கள் தவறாக போதைக்காக பயன்படுத்துகிறார்கள்.

ரொபிட்டாசின், டைலினால், எக்செட்ரின் போன்ற அதிகம் உப்யோகிக்கும் பரவலாக கிடைக்கும் மருந்துகள், நைக்குவில்,விக்ஸ் ஃபர்முலா 44, சோரிசிடின் ஆகிவற்றிலும் DXM இருக்கிறது. இதற்கு மாணவர்களிடையே ரோபோ, ச்கிட்டெக்ஸ், வைட்டமின் டி, என்ற பெயர்கள் வழங்கப்படுவதால் பெற்றோருக்கு புரிவதில்லை.

வாயினில் எளிதில் கரையக்கூடிய கோரிசிடின்(coricidin) மாத்திரையில் அதிக விளைவைத் தரும் DXm இருப்பதால் ஒரு முழு பாட்டிலையும் குடிக்க வேண்டியதில்லை. எனவே நிறைய மாணவர்கள் இதை பயன்படுத்துகிறார்கள்.

ஆக்சிகாண்டின் போன்ற அருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை அபயோகிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.
OxyContin & 12th Graders
Percentage of 12th graders who reported using OxyContin in the year prior to being surveyed:
Graph
The use of OxyContin has risen by almost 40 percent among 12th graders since 2002. The powerful prescription painkiller can be highly addictive when abused. NPR Online/University of Michigan/2005 Monitoring the Future Study

இதில் அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் 55% மாணவர்கள் (13 மில்லியன்)இருமல் மருதைனை அதிகம் குடிப்பதில் அபாயம் எதுவும் இருக்காது என்று நம்புவதாக சொன்னதும், 33% மாணவர்கள் மருத்துவர் பரிந்துரை செய்யாமல் எப்போதேனும் ஒருமுறை இதுபோன்ற பரிந்துரை தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்வது தவறில்லை என்றும் கருதுகிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களும் உடல் வலி தலைவலி மாத்திரைகள் ஆபத்தானவை என்று நம்புவதில்லை. மேலும் படிக்க இங்கே சுட்டுங்கள்.
சமீபத்தில் எடிசன் பள்ளி மாணவர்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில் கிட்டதட்ட 25% மாணவர்கள் மருந்துகளையும் 10% மாணவர்கள் போதை பொருட்களை (மரிவானா வகை) பயன்படுத்துவது தெரிய வந்தது. இந்த பழக்கம் இப்போது அதிகரிப்பதும், அதிக மருந்து உட்கொண்டதால் அவசர சிகிச்சைக்கு வரும் பதின்மரின் எண்ணிக்கையும் கவலை கொள்ள வைக்கிறது.
இங்கே நியுஜெர்ஸியில் சிகரெட் போல இருமல் மருந்துப்பொருட்களை வாங்க இப்போது சில கட்டுப்பாடுகள் வந்திருக்கின்றன.

இருமல் சளி குளிர் அலர்ஜி மருந்துகள் தவிர பல உடல் இளைக்க வைக்கும் மருந்துகள், ட்ரெமமின் போன்ற மருந்துகள் போதை தரவல்லன. எனவே வீட்டில் மருந்துகளை பூட்டை வக்கவோ, மிச்சம் இருப்பதை தூக்கி போடவோ செய்வது சால சிறந்தது.

மார்பக புற்றுநோய்- Education, Early Detection
Oct 10th, 2007 by பத்மா அர்விந்த்

அக்டோபர் மாதம் உலக அளவில் மார்பக புற்று நோய் தடுப்பு மாதமாக பரிந்துரைக்க படுகிறது. முன்காலத்தில் ஆசிய பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் வந்ததில்லை என்றாலும் பழக்கங்கள், சுற்று புர சூழல் இவற்றின் மாற்றத்தால் இப்போது அதிகம் பரவலாக காணப்படுகிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவது அவசியம். இது மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். இன்று நான் மார்பக நிழல் படத்தின் முக்கியத்தைப் பற்றி பேசப் போகிறேன். நீங்களோ, உங்கள் மருத்துவரோ அறியும் முன்னே மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளைக் கண்டறிய உதவுகிறது.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நிழல் படம் எடுத்துக்கொண்டு உங்களைக் காப்பற்றுவதோடு, உங்கள் சகோதரி, அன்னை, உறவினர் அனைவருக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் நோயிலிருந்து பாதுகாக்க உதவுங்கள். ஆண்களுக்கும் மார்பக புற்று நோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்கு நிழல் படம் அவசியம் இல்லை என்று எண்ணாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவது அவசியம். மார்பக நிழற்படம் எடுப்பதை குறித்து பல வேறு கருத்துக்கள் இருந்தாலும் அமெரிக்காவின் நோய்கள் தடுக்கும் நிறுவனம் இதை பின்பற்றுகிறது.

வயதாக, வயதாக இது அவசியம். இரண்டு வருடத்திற்கொருமுறை, நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவதும், மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுவதும் அவசியம். இதனால் மார்பகப் புற்றுநோய் மூலமாக வரும் இறப்பு விகிதம் குறையும். உணவு பழக்கங்கள், வாழும் சூழல் , காற்றில் உள்ள மாசு இவற்றினால் மார்பக புற்று நோய் வர வாய்ப்பு இருக்கிறது.

இங்கே மார்பக நிழல் படம் எடுக்கத் தயாராகச் சில குறிப்புகள் தருகிறேன்.

உங்களுக்கு மாதவிலக்கு இருக்குமானால், உங்களுடைய பரிசோதனையை சற்று தள்ளி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது மார்பகங்கள் சற்றே கடினமாக இருக்கும். அதனால், வலி இருக்க கூடும்.
பரிசோதனை அன்று, அழகுப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். எந்தவித வாசனைத் திரவியங்களையும் பயன் படுத்தாதீர்கள். இவை, நிழல் படத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணும். மிக எளிதாக ஆடை மாற்ற வசதியாக உடை அணிய வேண்டும்.
உங்களுடைய மருத்துவரின் முகவரியும், தொலைபேசியின் எண்ணும், முன்பு செய்துகொண்ட பரிசோதனை முடிவுகளும் கொண்டு வருவது அவசியம்.
மார்பக நிழல் படம் எடுக்க சில நிமிடங்களே ஆகும். இது மிக எளிது.
நீங்கள் ஒரு கதிர் வீச்சு கருவியின் முன் நிறுத்தப்படுவீர்கள். உங்கள் மார்பகம் ஒரு தட்டில் வைக்கப்படும். அதன் மேல் இன்னும் ஒரு தட்டு வைத்து மார்பகத்தை சற்றே அழுத்துவார்கள்.
ஒரு சில மணித்துளிகளுக்கு உங்கள் மார்பகம் தட்டையாக இருக்க வேண்டுவது அவசியம். ஏனெனில் அப்போதுதான் கட்டிகளையும், மற்ற மாற்றங்களையும் அறிய முடியும்.
நிழல் படம் எடுக்கும் நபர் உங்கள் மார்பகங்களை இரண்டு படங்கள் எடுப்பார். ஒன்று பக்கவாட்டிலும், மற்றொன்று மேல்வாட்டிலும். நிழல் படங்கள் ஒரு மருத்துவரிடம் கொடுக்கப்படும். அவர் உங்கள் படங்களில் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா என்று பரிசோதிதுவிட்டு உங்களைத் தொடர்பு கொள்வார். நீங்கள் ஒரு வாரத்திற்குள் அழைக்கப் படவில்லையெனில், மருத்துவரைத் தொடர்பு கொள்ளவேண்டும்.
மார்பக நிழல் படங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று நோய்களைக் கண்டறியவும், மற்றொன்று வடிகட்டுவதற்கும் பயன்படுகிறது. நாம் முதலில் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் நிழல் படம் எடுப்பதைப் பற்றி அறிவோம்.

இவ்வகையான நிழல்படம் எடுக்க, மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிந்துரை செய்யப்படுகிறாள். இது மார்பகத்தின் அளவிலோ, தோலின் நிறத்திலோ, தடிமன் சற்றே அதிகறித்தாலோ, மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வடிந்தாலோ நோய்க்கான அறிகுறிகளாகக் கொள்ளப்படும்.

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால், அவசியும் மருத்துவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் அணுக வேண்டும். இந்த அறிகுறிகள் சிலசமயம் புற்று நோயில் முடிவதில்லை. ஆனாலும் பரிசோதித்து அறியவேண்டியது முக்கியம்.

இன்று நாம் இந்த வகை அறிகுறிகள் இல்லாத, வடிகட்டுதலுக்கான நிழல் படம் பற்றிப் பேசுவோம்.

மார்பக நிழல் படம் எடுக்க ஆகும் செலவு:

வடிகட்டுவதற்காக நிழல் படம் எடுக்க $150 ஆகும்.
இவை தனியார் இன்சுரன்சு அல்லது மெடிக்கர் மூலம் கட்டப்படும்.
சில இனவழி சங்கங்கள், நிகழ்ச்சிகள் இவை இலவசமாக செய்து தருவார்கள்.
உங்கள் மருத்துவரை அணுகுங்கள்:

எப்போது நீங்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், எவ்வளவு மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக்காள்ள வேண்டும் என்பதயும் மருத்துவரிடம் கேட்கவும். பிறகு ஒரு அட்டவனை செய்து கொள்ளவும், அதனை வாழ்நாள் முழுவதும் பயன் படுத்தவும்.

இன்று எல்லா பரிசோதனை நிலையங்களும் உணவு மற்றும் மருந்துகள் அனுமதிக்குழுவிடம் இருந்து அணுமதி பெறவேண்டும். இதனால் அவற்றின் தரம், கருவிகளின் நிலை, அங்கு வேலை செய்யும் மனிதர்களின் செயல் திறன், அவர்கள் வைத்து இருக்கும் படிவங்கள் ஆகியவற்றிற்கு உத்திரவாதம் தர இயலும்.

அமெரிக்காவில் உள்ளவர்கள் 1-800-4-CANCER அழைத்து உங்கள் வீட்டுக்கருகே இருக்கும் பரிசோதனை நிலையம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

காத்திருக்காமல் இன்றே மருத்துவர்களை அணுகுங்கள். ஆண்கள் தங்கள் மனிவி, சகோதரி மற்றும் அன்னையருக்கும் சொல்லுங்கள்.

மார்பக புற்று நோய் தடுக்கவல்ல காய்கறி : ப்ராக்கோலி எனப்படும் பூவகை. இதில் உள்ள இண்டோல் 3 கார்பினால் என்பது மார்பக புற்றுநோய்க்கு காரணமான ஜீன் அதிக அளவில் வீரியம் இல்லாததாக மாற்றுகிறது. எனவே வாரம் ஒருமுறை பிராக்கோலி சேர்த்து கொள்ளுங்கள். பிராக்கோலியில் நீர் அதிக உள்ளதால் இது எடை குறையவும் பயனாகிறது.இக்கட்டுரை முன்பே தமிழோவியத்திற்காக எழுதியது. மேலும் விரிவான ஆங்கில கட்டுரைக்கு இங்கே சுட்டுங்கள்.

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions