தேன் துளி » சமூகம்

வீட்டு வன்முறை, dirty Bomb, Radiation terrorism
கணவனின் வன்முறை தாங்க முடியாமல் மனைவி கொலை செய்வது ஒன்றும் புதிய செய்தி இல்லை. ஆனால் சமீபத்தில் வந்த ஒரு 911 தொலைபேசி அழைப்பை ஏற்று சென்ற காவலர்கள் முதலில் இதுவும் ஒரு வீட்டு வன்முறை வழக்கு, அது தொடர்ச்சியாக கொலையில் முடிந்திருக்கிறது என்று தான் நினைத்தார்கள். ஆனால் அந்த வீட்டின் சோதனையில் படிப்படியாக பல விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன.

சமீபகாலமாக எங்கள் துறையில் ரேடியோ கதிர்வீசு குண்டுகள் வெடித்தால் எத்தனை இழப்பு வரும் எப்படி மருத்துவ உதவி செய்ய முடியும் என்பது குறித்தெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறோம். இதுகாறும் வேதியியல் அல்லது உயிரியல் தீவிரவாதத்திற்கே அதி முக்கியத்துவம் கொடுத்திருந்த நாங்கள், கடந்த ஒரு வருடமாக ரேடியோ கதிரியக்க தீவிரவாதம் குறித்து அதற்கு தேவையான மருத்துவ செயல்பாடுகள் குறித்து திட்டமிட ஆரம்பித்திருத்தோம். பலரும் இது போல ரேடியோ கதிர்வீச்சு ஐசோடோப் பெறுவதன் சிக்கல் குறித்து பேசும் போது, உள்நாட்டு பாதுகாப்பில் அமெரிக்கா போக வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதை சொல்லாமல் சொல்லும் வீடியோ கீழே:

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/CJqmJKhWAAc&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/CJqmJKhWAAc&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/JsDzchX_GsM&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/JsDzchX_GsM&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

social Normமும் மகளிர் தினமும்
வழக்கம் போலவே என் இன்பாக்ஸ் மகளிர்தினத்தை நினைவுறுத்தும் வண்ணம் அழைப்புக்களால் நிரம்பி இருந்தன. காலை உணவு, அல்லது சின்ன கூட்டம். ஒன்றில் கொண்டாடத்தான் வேண்டுமா மற்ற நாடுகளில் எத்தனை பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், ஒரு மணிக்கு பத்தில் நான்கு பெண் ஏதேனும் ஒரு பாலியல் சித்திரவதைக்கு ஆளாகிறாள், இந்தியாவில் 19% திருமனமான 19இல் இருந்து 25 வயதுகுட்பட்ட பெண்களும் கம்போடியாவில் 35% மணமான பெண்களும் கணவனால் ஒருமுறையேனும் அடிக்கப்பட்டிருக்கிறாள், இன்னும் இந்தியாவில் விதவைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றார்கள், இங்கே முதியோர் இல்லங்களில் பெண்கள் பாலியல் கொடுமைக்கும் ஆளாகிறார்கள், இந்த நிலையில் வேண்டுமா மகளிர் தினம் யோசியுங்கள் என்ற கடிதம்.

பாஸ்நியா முதல் இன்றைய இராக், ஈழம் வரை போர்க்காலங்களில் பெண்கள் படும் அவதிகள் அதிகம். ஆண்கள் பலர் கொல்லப்படுவதால், குழந்தைகளின் பசிதீர்க்க, முதியோருக்கு உணவு வழங்க, குடும்பத்தை சற்றேனும் குறைவில்லாமல் நடத்த பெண்கள் பணிக்கு செல்கிறார்கள். முதல்முறையாக பணிக்கு செல்வதால் குறைந்த அளவு ஊதியம் கிடைக்கும் பணிகளில் இவர்கள் படும் பாலியல் தொல்லைகள் ஏராளம். போர் என்றாலே ஒரு நாட்டின் உடமைகளை கைக்கொள்வதோடு, பெண்களை பாலியியல் கொடுமைக்கு ஆளாக்குவது ஆண்கள் நிறைந்த இராணுவத்தில் ஒருவகை கொண்டாட்டமாகி இருக்கிறது. இதற்கு உளவியல் ரீதியாக பல காரணம் இருப்பினும் ஒரு வீட்டின் பெண் ஒருவகையில் இன்னும் ஒரு உடமையாகவே கருதப்படுவதால் அவளை சிதைப்பது என்பது அந்த வீட்டின் ஆணை உச்சகட்ட அவமானத்திற்கு ஆளாக்குவது முக்கிய காரணம், இரண்டாவதாக இவ்வாறான வன்புணர்வில் கருத்தரிக்கும் பெண்கள் மூலம் தங்கள் இனத்தை அங்கே வளர்க்கவும் நினைப்பது இன்னொரு காரணம். பெரும்பாலான போர்க்கால வன்புணர்வுகள் கருவில் முடிந்தால் அவர்களுக்கு அதை கலைப்பது மிகவும் முடியாத காரியம்.  அவ்வாறாக பிறந்த குழந்தைகள் அந்த வன்புணர்வு அனுபவத்தை நினைவுறுத்திக் கொண்டே இருப்பதால் சமூகத்தாலும் வெறுக்கப்படும் நிலைக்கு ஆளாவதால், போர் முடிந்த பின்னும் இன்னொரு தலைமுறைக்கு அவமானப்படுத்தப்படுகிறார்கள். இப்படியாக பல்லாயிரம் பெண்கள் அவதிப்படும் போது நிலையற்ற வாழ்க்கையில் அவரும் அவர்தம் குடும்பமும் சுழலும் போது இந்தக் கொண்டாட்டங்கள் அவசியம்தானா?

தினசரி வாழ்க்கையில் பெரும்பாலான வீடுகளில் தங்கள் மனைவியின் உடல்நல முடிவுகளைக்கூட ஆண்களே எடுக்கின்றனர். தெற்காசிய நாடுகளில் 61% ஆண்கள் முடிவின் படிதான் குடும்பத்தாரின் உடல்நல சிகிச்சைகள் கூட தெரிவு செய்யப்படுகின்றன. அதே போல அன்றாடம் நடக்கும் செலவினங்கள் தெற்காசிய நாட்டில் 34 இல் இருந்து 40% வரை ஆண்கள் முடிவெடுப்பின் படி நடக்கிறது.

இதே போல பெண்கள் கருவின் துவக்கம் முதல் கடைசி காலம் வரை ஏன் மயானத்திலும் கூட ஆண்களின் முடிவே அதிகாரம் பெற்றதாக இருக்கிறது.

ஆரம்ப நிலை படிப்பு முதல் பொது literacy வரை 100% ஆண்களுக்கு 65% பெண்களே படிக்கிறார்கள். பெண்களின் கல்வி அறிவு ஒரு குடும்பத்தின் உடல் நலம் மற்றும் அறிவுத்திறனுக்கு ஆதாரம் என்ற போதிலும் பெண்குழந்தைகளின் படிப்பு ஆண் குழந்தைகளை விட அதிகம் ஆதரவு பெறுவதில்லை. இவ்வாறாக ஓவ்வொரு துறையிலும், வேலைக்கு போகும் பெண்கள் பெறும் சற்றே visibility குறைந்த பிராஜக்ட், பொதுவாக குழந்தை வீடு என்று பெண்கள் கவனம் செலுத்த தேவை இருப்பதால் அவர்களால் நீண்ட நேரம் பணியாற்ற முடியாது என்று அனுமானித்து வேறு திட்டங்கள் கொடுப்பது, வீட்டின் அன்றாட வேலைகளில் கூட இது பெண்களே செய்ய வேண்டியது என்று அவர்கள் செய்யும் intangible பணிகளின் முக்கியத்துவத்தை கவனிக்காமல் விடுவது போல நிறைய எழுதிக்கொண்டே இருக்கலாம்.

நேற்றைய முந்தினம் நடந்த ஒரு அரசியல் தலைவர்கள் நிறைந்த கூட்டத்தில் சிறையில் பெண்கள் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற ஒரு விளக்கப்படத்தையும் பார்க்க நேரிட்டது. சிறையில் அதிலும் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணாகவோ ஹிஸ்பானிய பெண்ணாகவோ இருந்தால் இன்னும் எத்தனை மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதையும் பார்க்க நேர்ந்தது. அவர்களுக்காக போராடும் ஒரு குழு நடத்திய உரை மூலமாக மனமே கனத்துப் போனது. இதில் இன்னும் வேதனையான செய்தி என்னவென்றால், குடியுரிமை இல்லாமல் வரும் மக்கள் இமிக்ரேஷனால் பிடிக்கப்படும் போது, அதில் பெண்கள், குழந்தைகள் சிறையில் (பொதுவான குற்றவாளிகளுக்கான) கிரிமினல் குற்றவாளிகள் போல நடத்தப்படுவதும் ஆண்கள் இமிக்ரேஷன் சிறையில் அடைக்கப்படுவதும்தான். கிரிமினல் சிறையில் நிகழ்த்தப்படும் அராஜகங்கள் நிர்பந்திக்கபட்டு ஒரு கிரிமினல் குற்றவாளியைப்போல பெண்கள் நடத்தப்படுவது ஏன் என்று இன்னொரு குழு அட்டைகளை பிடித்திருந்தார்கள். ஒரே செய்கைக்கு ஆணுக்கொரு நீதியாகவும் பெண்ணுக்கொரு நீதியாகவும் இருப்பது இங்கேதான். குடியுரிமை பெறாமல் வேலை செய்யும் பெண்கள் அடையும் கொடுமைகளும் அதிகம்.

ஓரின சேர்க்கையாளர்களில் பெண்கள் நடத்தப்படும் விதம், மருத்துவர்கள் அவர்களை நடத்தும் விதம் குறித்தும் கூட நிறைய எழுதி மனம் அமைதி இழக்கலாம்.  ஆனாலும் இந்த பதிவு அதற்காக இல்லை.

14% ஆனாலும் கூட பல நாடுகளில் பெண்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள், அவர்களால் முடிவுகள் எடுக்க மாற்ற முடியும், 65% ஆனாலும் கூட படிக்க செல்லும் பெண்கள் சதவிகிதம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. 19 % பெண்கள் வன்முறைக்கு ஆளானாலும் 81% பெண்கள் தங்களைக்காத்துக்கொள்ளும் கலையை அறிந்திருக்கிறார்கள். 35% ஆனாலும் கூட உலகெங்கும் ஆண்கள் பாலியியல் சமன்பாட்டை மதிக்க துவங்கி இருக்கிறார்கள். ஆக கூடி கோப்பை நிறைய ஆரம்பித்திருக்கிறது. அது முற்றிலும் நிறைய என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க துவங்க வேண்டும்.

இதுதான் சோசியல் நார்ம் தியரி சொல்லித் தரும் பாடம். பாதிக்கோப்பை நிறைந்த நிலையில் மீதியை நிரப்ப ஒன்று சேருங்கள் என்பதன் தத்துவம். இப்போதுதான் நிறைய துவங்கி இருக்கும் கோப்பையில் நச்சை சேர்ப்பது போல பொறுப்பற்ற தன்மையில் நடப்பதும் பேசுவதும் கூடாது என்பதையும் தங்களை காப்பாற்ற வந்திருக்கும் சட்டங்களை மதித்து அதையும் கவனமாக கையாள்வதையும் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

பாலியியல் சமன்பாடு என்னும் கனவு நிறைவேற இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் என்றாலும், பாதையே இல்லாமல் இருந்து முட்காடாக இருந்த நிலத்தில் இப்போது பாதை ஒன்று புலப்படுவதே கூட நல்ல மாற்றம்தான்.  நடைப்பயணத்தில் இன்னும் நிறைய பேர் சேர்ந்து கொள்ள முடியும், சேர்ந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கை பூத்திருக்கிறது.

ஒரு சிறுமியின் சுதந்திரத்தை தேடிய கதையை இங்கே கேளுங்கள்.

பாலியியல் சமன்பாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்லும் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே

Un and UNESCO reports linked wherever needed. You can download them.

மணமுறிவும் உதவித் தொகையும் -6
உதவித்தொகை ஊதியம், வேலை பார்க்கவும், ஊதியம் பெறவும் ஆன தகுதி, திருமண காலம், குழந்தைகள், மற்றும் திருமண வாழ்க்கையின் போது இருந்த வாழ்க்கத்தரம் ஆகியவற்றைப்  பொறுத்து அமையும் என்று பார்த்தோம். ஆனால் திருமணத்தின் போது வீடு மற்றும் அட்டைகளில் கடன் இருந்தால் அது எப்படி பிரித்துக்கொள்ளப்படும் என்பதை இப்போது கவனிப்போம்.

கடன்:

வீட்டின் பேரிலோ, வாகனங்களின் பேரிலோ கடன் இருந்தால் அந்த கடன் தீர்ந்தால் யாருக்கு அதன் பலன் கிடைக்குமோ அவர் பெருவாரியான கடனையும் மற்றையவர் எத்தனை காலம் அதனை அனுபவித்தார் என்பதை பொறுத்து குறைவாகவோ கட்ட வேண்டும். வீடு வாங்கும் போது இருவரும் பணியில் இருந்ததால், மனிவியின் கடன் தரம் அதிகமாக இருந்ததால், கடன் வட்டி குறைவாக கிடைக்கும் என்பதால் மனைவியின் பேரில் வீட்டை வாங்கி விட்டு, இப்போது தன் பொருட்களை எடுத்துக் கொண்டு கணவன் வெளியேரிய போதும், அவர் கடனின் ஒரு பாதியை கட்ட வேண்டுமென்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு காரணமாக அவர்கள் திருமண வாழ்க்கை முழுதும் (7 வருடங்கள்) மனைவியே வீட்டின் கடனை கட்டி இருந்திருக்கிறார். கணவன் மற்ற செலவுகளை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் இருந்தும், வழக்கு அதை பற்றியதல்ல என்பதாலும் அவர்களிடையே எந்தவிதமான படிவங்களும், அவர்களுக்கிடையே இருந்த ஒப்பந்தம் பற்றி தெரிவிக்காததாலும், இப்போது மனைவி பணம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாலும், தீர்ப்பளிக்க வேண்டியதாகியது.

வரி: alimony ஆக வழங்கப்படும் பணத்தை ஒருவர் தன் வரிகட்டவேண்டிய ஊதியத்தில் இருந்து குறைத்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தைகளின் நலத்திற்காக, கல்விக்காக தரும் பணம் வரிக்குள்ளாலானது. இதனால் சில சமயம் சில கணவன் மனைவியர் alimonyஐ அதிகரித்தும், குழந்தைகள் ஆதரவுத் தொகையை குறைத்தும் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். இதில் கவனமாக இருக்க வேண்டிய ஒன்று: குழந்தைகள் ஆதரவு நிதி 18 வயதுவரை தந்தால் போதும், ஆனால் alimony காலம் இருவரும் ஒப்புக்கொண்ட காலம். ஆகவே சில வழக்குகளில் இது காலவரையற்று இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு வழக்கில் கணவன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைத்தால் போதும் என்று எண்ணி, மனைவி மறூபடியும் திருமணம் செய்து கொள்ளும் வரை ஆதரவுத்தொகை தருவதாகவும், வருடம் 3% அதிகரிப்பதாகவும் ஒப்புக்கொண்டார். அவர் விவாகரத்து கோரியபோது, மனைவி இன்னொருவரை காதலிப்பதாக மனமார எண்ணினார். மேலும் விவாகரத்து கோரியபோது நல்ல பணியில் இருந்து நிறைய ஊதியம் பெற்றும் வந்தார். மனைவி அதிக பணம் கேட்காமல், சரியான தொகை கேட்டதால், அதிகப்படி 3% அப்படியும் இரண்டு வருடம் தந்தால்ல் போதும் எனூற் நம்பி கையொப்பம் போட்டார். ஆனால், மனைவியோ திருமணமே செய்து கொள்லவில்லை. ஒரு 20 வருடம் கழித்து, கணவன் உடல் நலக்குறைவால் முழுநேரம் பணி செய்ய முடியாமல் போக ஊதியம் குறைந்த போதும் அதில் பெரும் அளவு முன்னாள் மனைவிக்கு போனது.கணாவனின் இரண்டாம் மனவி, அந்த திருமணம் மூலம் பெற்றுக்கோண்ட குழந்தைகள் என்று பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் பல வழக்கறிஞர்கள் ஆலோசனை பெற்றபோதும் ஓய்வும் பெற முடியாமல் திண்டாடுவது பற்றி பலருக்கும் கடிதம் எழுதி ஆலோசனை கேட்டிருந்தார். முடிவில் முன்னாள் மனைவியிடம் பேசி சரி செய்து கொள்வதே சரி என்று முயன்று கொண்டிருக்கிறார்.

எனவே ஒப்பந்தம் எழுதும் போதும், பேசும் போதும் நல்ல வழக்கறிஞர்கள் ஆலோசனை கேட்பது மிக முக்கியம்.

மனைவியையோ அல்லது கணவனையோ படிக்க வைப்பது: சில சமயம் கணவனோ அல்லது மனைவியோ இன்னொருவரை கல்லூரி அல்லது ஏதேனும் தொழில் நுட்பம கற்று தேற, பொருளாதார ரீதியில், தார்மீக ரீதியில் ஆதரவு அளித்திருப்பார்கள். இது அவர்களின் பொருள் ஈட்டும் திறனை அதிகரிக்க உதவி இருக்கும். சில மாநிலங்களில் இவை கவனத்தில் கொள்ளப்படுகிறது. சில மாநிலங்களில் இன்னமும் இது கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றாலும், அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்து ஆதரவு தொகையை குறைக்க முடியும்.

ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு போன்றவை, அதன் பயன் பெறுநர் ஆகியவற்றை மாற்றுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும். சிலர் விவாகரத்து பெற்றபின்னும், வேறு திருமணம் செய்து கொண்டபின்னும் மாற்ற மறாந்து போய்விடுவது உண்டு. இதனால், திடீரென இறந்து போக, அவரது ஆயுள் காப்பீடு அலுவலகத்தில் இருந்து முன்னாள் மனைவிக்கு வழங்கப்பட்டது. அவரின் இரண்டாம் மனைவி வழக்கு தொடர்ந்த போதும், இறந்து போன கணவன் ஏதாவது காரணத்திற்காக மாற்றாமல் இருந்திருக்கலாம் என்று சொல்லி, சட்டப்படி இதை மாற்ற இயலாது என்று சொல்லி விட்டார்கள். அதே போல வேலை பார்க்கும் நிறுவன படிவங்களில் பெயர் மாற்றம் செய்தால் தவிர, எல்லா பலன்களும் முதல் மனைவிக்கே (அவர் பெயர் இருந்தால்) கிடைக்கும்.

alimony கொடுக்க வேண்டுமமென்று சொல்லியும், அதை மாதா மாதம் சரியாக தராதவர்கள் நிறைய. இதில் அதிகம் துன்பப்படுவது வறூமையில் இருக்கும் பெண்களே. இது நீதிமனறத்திற்கு வருமானால், உடனடியாக இதுவரை தர வேண்டிய தொகையும் அதற்கான வட்டியும் சேர்த்து உடனே தர வேண்டும். இல்லை என்றால் சிறை வாசம், ஊதியத்தில் இருந்தே பிடித்தம் என்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.

மாதாந்திர உதவித் தொகை எத்தனை பேர் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் குறிக்கும் அட்டவணை கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது. Alimony2002 பிறகு உதவி தொகை பெறும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதற்கான புள்ளியியல் விவரங்கள் அதிகம் இல்லை என்றாலும் இந்த சுட்டி மேலும் பல விவரங்களைத் தரும்.

விவாகரத்திற்கு பிறகு மறுமணம் நடந்தபின்னும் உதவித்தொகை தர வேண்டுமா, நிறுத்தலாமா என்பது போன்றவற்றிற்கு நீதிமன்றத்தில் பதிந்து முந்தைய தீர்ப்பை மாற்றிக்கொள்ள முடியும். அதே போல, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இன்னும் உதவித்தொகை தேவை என்றாலும் மாற்றத்தை கோரமுடியும்.

தனக்கான உதவித் தொகை வேண்டாம் என்று மறுத்தாலும், குழந்தையின் கல்வி, வளார்ப்பு ஆகியவற்றிற்கு உதவித் தொகை வழங்கப்படுவதை பெரும்பாலும் நீதிபதிகளும் வரவேற்கிறார்கள். ஏனெனில் குழந்தையின் வளார்ப்பில் தந்தைக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதும் தார்மீக பொறுப்பும் உண்டு என்பதால். ஆனால் இது எந்த அளவிற்கு தரப்படுகிறது, தந்தாலும் மனைவி அல்லது கணாவனால் அபயோகிக்கப்படுகிறது, தந்தயர்கள் ஏன் குழந்தைகளுக்கான நிதி தருவதில் இத்தனை எதிர்ப்பை காட்டுகிறார்கள் என்பதையும் பார்க்கலாம்.

மணமுறிவும் உதவித் தொகையும் -5
மணமுறிவுக்குப் பின், ஊதியம் ஏதும் இல்லாமல் வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பில் இருக்கும், சுய ஊதியம் இல்லாத ஆண் அல்லது பெண்ணுக்கு மற்றவர் வாழ்நாள் முழுதுமோ அல்லது அவர் இன்னொரு வேலையை தேடிக்கொள்வது வரையோ தரும் உதவித்தொகைதான் alimony எனப்படும் உதவித் தொகை. எவ்வளவு உதவித்தொகை என்பதும், யார் யாருக்கு தர வேண்டும் என்பதையும் நீதிமன்றம் இருதரப்பு வழக்கறிஞர்களோடு பேசி தீர்மானிக்கும்.

உதவித் தொகையின் அளவு திருமண வாழ்க்கையின் காலம், குழந்தைகள், ஒருவருக்கு வேலை கிடைக்க/பார்க்க கூடிய சாத்தியம், இன்னொருவரின் வருமான அளவு, திருமண வாழ்க்கையில் அனுபவித்த வசதிகள் ஆகியவை பொறுத்து அமையும்.

உதாரணமாக, கணவன் மனைவி இருவருமே நன்கு படித்து, நல்ல வேலையில் இருந்தவர்கள். திருமணத்திற்கு பிறகு வீட்டை நிர்வகிக்க மனைவி வேலையை விட்டுவிட்டாலும் கூட, அவர் கடைசியில் வாங்கிய ஊதியம், அந்த துறையில் இன்னொரு வேலை கிடைக்க கிடைக்கும் காலம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.

முன்னாள் ஆளுனர் மெக்ரீவியின் மனைவி, விவாகரத்திற்கு பிறகு மாதம் $56,000 ஈடாக கேட்டு இன்னமும் வழக்கு குட்ம்ப நீதிமனறத்தில் இருக்கிறது. இந்த தொகை கிடைக்குமா, அவருடைய குழந்தையின் செலவு, அவர்கள் முன்னால் வசித்த வாழ்க்கையின் வசதி, மெக்ரீவியின் சம்பாதிக்கும் திறன் இவையாவும் கணக்கில் கொள்ளப்படும். கூடுமானவரை இருவரையும் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டபோதும், முடிவுக்கு வராததால் இது இப்போது விசாரணைக்கு செல்கிறது.

பொருளீட்டும் சாத்தியக்கூறு:

ஒருவரின் ஊதியம் கணக்கில் கொள்ளப்படும் என்று சொன்னேன் அல்லவா, அதை ஏமாற்ற சிலர் முயற்சி செய்யலாம். உதாரணமாக, வந்தனா ஒரு பொறியியல் வல்லுனர், வருட வருமானம் $100,000 என்று வைத்துக்கொள்வோம். அவர் கணவரை இந்தியாவில் இருந்து மேலே படிக்க இங்கே வரவழைத்திருக்கிறார். இருவருக்கும் ஏற்பட்ட பிணக்கில் விவாகரத்துக்கு செல்கிறார்கள். திடீரென வந்தனா தன் வேலைஅயி விட்டுவிட்டு, வீட்டிலேயே வேலை செய்யப் போவதாக சொல்லி, வருட வருமானம் $20,000 காட்டுகிறார். என்றாலும் நீதிமன்றம் இதை கண்டுகொள்வதில்லை. இந்த வழக்கில் alimony கணவனுக்கு வருட வருமானம் $100000 கணக்கில் கொண்டே வழங்க உத்தரவிட்டது.

அதேபோல இருவரின் திருமண வாழ்க்கையின் காலம், குழந்தைகள் ஆகியவையும் கணாக்கில் கொள்ளப்படும். ஒரு பரபரப்பான வழக்கில், கணாவன் மனைவி இருவரும் மேலாண்மை படித்தவர்கள். இருவரும் சரிசமமான ஊதியத்துடன் வாழ்க்கையை தொடங்கினர். இரண்டு குழந்தைகள் பிறட்ந்ஹபின் மனைவி தன் வேலையை விட்டு விட்டு குழந்தகளை பார்த்து கொள்ல வீட்டை நிர்வாகிக்க, கணவனுக்கு சில உதவிகள் (பணி தொடர்பாக) செய்து வந்தார். பிள்லைகள் வழக்கறிஞராகவும் மருத்துவராகவும் பணி புரியத் தொடங்கும் வரை பள்ளி கூட்டங்கள், கல்லூரி விழாக்கள் என்று எல்லாவற்றிற்கும் மனைவி சென்று வந்ததோடு மட்டும் அல்லாமல் ஒரு வீட்டு பிரச்சினை எதையும் கணவன் தொல்லை செய்யாமலும் பார்த்து நிர்வகித்தார். ஒரு 30 வருட திருமணத்திற்கு பிறகு கணவன் அவரை விவாகரத்து செய்ய வழக்கு தொடர்ந்த போது, தான் சம்பாதித்த சொத்து அனைத்தும் தன்னுடையது என்றும் அதில் எந்த உரிமையும் மனைவிக்கு இல்லை என்றும் சொல்லி வாதாடினார். பிள்ளையே அம்மாவுக்கு ஆதரவாக வழக்காடினார். தன் அம்மா உதவி இல்லாமல் தன் தந்தை பொருளீட்டுவது முடியாது என்றும், குடும்ப பிரச்சினைகளை அம்மா பார்த்துக்கொண்டதால் மட்டுமே தந்தையால் வெற்றிகரமாக முடிந்தது எனவும், மேலும் அம்மாவாலும் சரிக்கு சமமாக அல்லது ச்ற்றேனும் குறைவாகவோ பொருளிட்டியிருக்க முடியும் எனவும் வாதாடி கடைசியில் கணவனின் 20 மில்லியன் சொத்தில் மனைவிக்கு சரிபாதி என தீர்ப்பானது.

பிடித்தம் போக வருமானம் (net income): ஒருவரின் நிகர வருமானமே உதவித் தொகை வழங்க கருத்தில் கொள்ளப்படும். இதை தெரிந்த இராம், விவாகரத்து முடியும் தருவாயில் அதிக பிடித்தம் செய்ய தன் அலுவகத்தை வினவி இருக்கிறார். வருமான வரி தவிர, சில முதலீட்டில், சில மருந்து பொருட்கள் வாங்க, கல்வி நிதி போன்றவற்றிற்கு அலுவலகத்தின் மூலமே சம்பாத்தியத்தில் பிடித்தம் செய்துகொள்ள முடியும். ஆனால் அவர் செய்த தவறு, நிகர வருமானம் கணக்கிடப்படும் போது நீதிமன்றம் வரி, மருத்துவ காப்பீடு போன்றவற்றை மட்டும் தான் கணக்கில் கொள்ளும் என்பது. எனவே அவசரமாக செய்ய சொன்ன பிடித்தங்கள் பலனில்லாமல் போனது.

நீதிமனறாத்தில் ஒருவர்ன் மாத வருமானம், செலவு ஆகியவற்றை கடந்த ஒரு வருடத்திற்கு தர சொல்லுவார்கள். சில இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், இது போன்ற உதவி தொகை தர மறுக்கும் தங்கள் பணியாளருக்கு உதவ விரும்பி ஊதியம் இந்தியாவில்தான் வழங்குகிறோன் என்ரு சான்றிதழ்கள் தருகிறார்கள். சமீபத்தில் இது போல நியுஜெர்சியில் சொன்ன ஒரு நிறுவனத்திற்கு அரசாங்கத் தரப்பில் எல்லா ஊழியர்கள் சம்பளாப்பட்டியலுடன், நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கேட்டும் ஒரு ஆணை சென்ற உடனே, சான்றிதழை திரும்ப பெற்றதோடு அவர்கள் மேல் வரு இருந்த வழக்குகள், கடவுசீட்டு பிரச்சினைகள் ன பலவற்றையும் எண்ணி ஊழியரை பணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதனால் வழக்கு முடியும் வரை ஊழியர் நியுஜெர்சியில் இருக்க இயலாத நிலை வந்து, கடவுசீட்டு பிரச்சினகல் அதிகரித்து நிலமை மேலும் சிக்கலானது.

இன்னும் குடும்ப க்டன்கள், வீட்டு வாட்கை, அல்லது சொந்தமானதாக இருந்தால் அதன் மேலுள்ள கடன், எத்தனை காலம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

OTC மருந்துகள் மூலம் போதைக்குள்ளாகும் மாணவர்கள்
சென்ற மாதம் ஒரு மாலை வேளையில், town Hall கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தோம்.முக்கிய விவாத பொருள், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வாங்க கூடிய மருந்துகளை குழந்தைகள், மாணவர்கள் எப்படி தவறாக பயன்படுத்தி போதை ஏற்றிக்கொள்கிறார்கள் என்பதை பற்றியதான கருத்தரங்கு. அங்கே வந்திருந்த பொதுமக்கள் பலரின் சொந்த அனுபவங்களை கேட்கும் போது அதிர்ச்சியாக இருந்தது.

போதை மருந்துகள்விற்பதும் உபயோகிப்பதும் தவறான போது, காவலர்களிடம் அகப்படாமல் எப்படி போதை ஏற்றிக்கொள்வது என்பதை சிலர் தீவிரமாக சிந்திப்பார்கள் போலும். வீட்டில் அம்மா அப்பா யாரெனும் பல் மருத்துவர்களிடம் சென்று ரூட் கானல் சிகிச்சை அல்லது விஸ்டம் பல் பிடுங்கினால், மருத்துவர் தரும் வி கோடின் அல்லது ஆக்ஸி கோடின் போன்ற மருந்துகளை மிச்சம் வைத்திருந்தாலுபயோகிப்பது, மாத்திரிகளை விற்பது, மருத்துவர் எழுதிய குறிப்புகளை விற்பது என்று பரவலாக உயர்நிலை, மத்திய பள்ளி மாணவர்கள் பழக ஆரம்பித்தனர். அமெரிக்காவில் 10.5% உயர்நிலைபள்ளி மாணவர்கள் வி கோடின், ஆக்சி கோடினை பயன் படுத்தி போதை பழகத்திற்கு அடிமையாக உள்ளனர்.

மெக்சிகோ போன்ற நாடுகளில் இருந்து இணையம் வழி இந்த மருந்துகளை பெற முடிவதால் கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன் படுத்துகின்றனர். இதில் என் தோழி லிண்டாவின் மகன் ஜேசனும் ஒருவர். அதிக விளைவால் 19 வயதில் அவர் மரணமடைந்தார்.

டெக்ஸ்ட்ரொமெதொர்பண் (dextrapmethorphan) என்னும் பொருள் 125 வகையான இருமல் மற்றும் சளிக்கான மருந்துகளில் இருக்கிறது. சுடாஃபெட் இதில் முக்கியமாக பயன் படுத்தப்படுகிறது. இவ்வகை மருந்துகள் பலருடைய வீடுகளில் சாதாரணமாக வைக்கப்பட்டிருக்கும். இவற்றை மாணவர்கள் தவறாக போதைக்காக பயன்படுத்துகிறார்கள்.

ரொபிட்டாசின், டைலினால், எக்செட்ரின் போன்ற அதிகம் உப்யோகிக்கும் பரவலாக கிடைக்கும் மருந்துகள், நைக்குவில்,விக்ஸ் ஃபர்முலா 44, சோரிசிடின் ஆகிவற்றிலும் DXM இருக்கிறது. இதற்கு மாணவர்களிடையே ரோபோ, ச்கிட்டெக்ஸ், வைட்டமின் டி, என்ற பெயர்கள் வழங்கப்படுவதால் பெற்றோருக்கு புரிவதில்லை.

வாயினில் எளிதில் கரையக்கூடிய கோரிசிடின்(coricidin) மாத்திரையில் அதிக விளைவைத் தரும் DXm இருப்பதால் ஒரு முழு பாட்டிலையும் குடிக்க வேண்டியதில்லை. எனவே நிறைய மாணவர்கள் இதை பயன்படுத்துகிறார்கள்.

ஆக்சிகாண்டின் போன்ற அருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை அபயோகிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.

OxyContin & 12th Graders

Percentage of 12th graders who reported using OxyContin in the year prior to being surveyed:

The use of OxyContin has risen by almost 40 percent among 12th graders since 2002. The powerful prescription painkiller can be highly addictive when abused. NPR Online/University of Michigan/2005 Monitoring the Future Study

இதில் அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் 55% மாணவர்கள் (13 மில்லியன்)இருமல் மருதைனை அதிகம் குடிப்பதில் அபாயம் எதுவும் இருக்காது என்று நம்புவதாக சொன்னதும், 33% மாணவர்கள் மருத்துவர் பரிந்துரை செய்யாமல் எப்போதேனும் ஒருமுறை இதுபோன்ற பரிந்துரை தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்வது தவறில்லை என்றும் கருதுகிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களும் உடல் வலி தலைவலி மாத்திரைகள் ஆபத்தானவை என்று நம்புவதில்லை. மேலும் படிக்க இங்கே சுட்டுங்கள்.

சமீபத்தில் எடிசன் பள்ளி மாணவர்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில் கிட்டதட்ட 25% மாணவர்கள் மருந்துகளையும் 10% மாணவர்கள் போதை பொருட்களை (மரிவானா வகை) பயன்படுத்துவது தெரிய வந்தது. இந்த பழக்கம் இப்போது அதிகரிப்பதும், அதிக மருந்து உட்கொண்டதால் அவசர சிகிச்சைக்கு வரும் பதின்மரின் எண்ணிக்கையும் கவலை கொள்ள வைக்கிறது.

இங்கே நியுஜெர்ஸியில் சிகரெட் போல இருமல் மருந்துப்பொருட்களை வாங்க இப்போது சில கட்டுப்பாடுகள் வந்திருக்கின்றன.

இருமல் சளி குளிர் அலர்ஜி மருந்துகள் தவிர பல உடல் இளைக்க வைக்கும் மருந்துகள், ட்ரெமமின் போன்ற மருந்துகள் போதை தரவல்லன. எனவே வீட்டில் மருந்துகளை பூட்டை வக்கவோ, மிச்சம் இருப்பதை தூக்கி போடவோ செய்வது சால சிறந்தது.

மார்பக புற்றுநோய்- Education, Early Detection
அக்டோபர் மாதம் உலக அளவில் மார்பக புற்று நோய் தடுப்பு மாதமாக பரிந்துரைக்க படுகிறது. முன்காலத்தில் ஆசிய பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் வந்ததில்லை என்றாலும் பழக்கங்கள், சுற்று புர சூழல் இவற்றின் மாற்றத்தால் இப்போது அதிகம் பரவலாக காணப்படுகிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவது அவசியம். இது மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். இன்று நான் மார்பக நிழல் படத்தின் முக்கியத்தைப் பற்றி பேசப் போகிறேன். நீங்களோ, உங்கள் மருத்துவரோ அறியும் முன்னே மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளைக் கண்டறிய உதவுகிறது.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நிழல் படம் எடுத்துக்கொண்டு உங்களைக் காப்பற்றுவதோடு, உங்கள் சகோதரி, அன்னை, உறவினர் அனைவருக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் நோயிலிருந்து பாதுகாக்க உதவுங்கள். ஆண்களுக்கும் மார்பக புற்று நோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்கு நிழல் படம் அவசியம் இல்லை என்று எண்ணாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவது அவசியம். மார்பக நிழற்படம் எடுப்பதை குறித்து பல வேறு கருத்துக்கள் இருந்தாலும் அமெரிக்காவின் நோய்கள் தடுக்கும் நிறுவனம் இதை பின்பற்றுகிறது.

வயதாக, வயதாக இது அவசியம். இரண்டு வருடத்திற்கொருமுறை, நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவதும், மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுவதும் அவசியம். இதனால் மார்பகப் புற்றுநோய் மூலமாக வரும் இறப்பு விகிதம் குறையும். உணவு பழக்கங்கள், வாழும் சூழல் , காற்றில் உள்ள மாசு இவற்றினால் மார்பக புற்று நோய் வர வாய்ப்பு இருக்கிறது.

இங்கே மார்பக நிழல் படம் எடுக்கத் தயாராகச் சில குறிப்புகள் தருகிறேன்.

உங்களுக்கு மாதவிலக்கு இருக்குமானால், உங்களுடைய பரிசோதனையை சற்று தள்ளி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது மார்பகங்கள் சற்றே கடினமாக இருக்கும். அதனால், வலி இருக்க கூடும்.

பரிசோதனை அன்று, அழகுப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். எந்தவித வாசனைத் திரவியங்களையும் பயன் படுத்தாதீர்கள். இவை, நிழல் படத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணும். மிக எளிதாக ஆடை மாற்ற வசதியாக உடை அணிய வேண்டும்.

உங்களுடைய மருத்துவரின் முகவரியும், தொலைபேசியின் எண்ணும், முன்பு செய்துகொண்ட பரிசோதனை முடிவுகளும் கொண்டு வருவது அவசியம்.

மார்பக நிழல் படம் எடுக்க சில நிமிடங்களே ஆகும். இது மிக எளிது.

நீங்கள் ஒரு கதிர் வீச்சு கருவியின் முன் நிறுத்தப்படுவீர்கள். உங்கள் மார்பகம் ஒரு தட்டில் வைக்கப்படும். அதன் மேல் இன்னும் ஒரு தட்டு வைத்து மார்பகத்தை சற்றே அழுத்துவார்கள்.

ஒரு சில மணித்துளிகளுக்கு உங்கள் மார்பகம் தட்டையாக இருக்க வேண்டுவது அவசியம். ஏனெனில் அப்போதுதான் கட்டிகளையும், மற்ற மாற்றங்களையும் அறிய முடியும்.

நிழல் படம் எடுக்கும் நபர் உங்கள் மார்பகங்களை இரண்டு படங்கள் எடுப்பார். ஒன்று பக்கவாட்டிலும், மற்றொன்று மேல்வாட்டிலும். நிழல் படங்கள் ஒரு மருத்துவரிடம் கொடுக்கப்படும். அவர் உங்கள் படங்களில் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா என்று பரிசோதிதுவிட்டு உங்களைத் தொடர்பு கொள்வார். நீங்கள் ஒரு வாரத்திற்குள் அழைக்கப் படவில்லையெனில், மருத்துவரைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

மார்பக நிழல் படங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று நோய்களைக் கண்டறியவும், மற்றொன்று வடிகட்டுவதற்கும் பயன்படுகிறது. நாம் முதலில் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் நிழல் படம் எடுப்பதைப் பற்றி அறிவோம்.

இவ்வகையான நிழல்படம் எடுக்க, மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிந்துரை  செய்யப்படுகிறாள். இது மார்பகத்தின் அளவிலோ, தோலின் நிறத்திலோ, தடிமன் சற்றே அதிகறித்தாலோ, மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வடிந்தாலோ நோய்க்கான அறிகுறிகளாகக் கொள்ளப்படும்.

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால், அவசியும் மருத்துவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் அணுக வேண்டும். இந்த அறிகுறிகள் சிலசமயம் புற்று நோயில் முடிவதில்லை. ஆனாலும் பரிசோதித்து அறியவேண்டியது முக்கியம்.

இன்று நாம் இந்த வகை அறிகுறிகள் இல்லாத, வடிகட்டுதலுக்கான நிழல் படம் பற்றிப் பேசுவோம்.

மார்பக நிழல் படம் எடுக்க ஆகும்  செலவு:

வடிகட்டுவதற்காக நிழல் படம் எடுக்க $150 ஆகும்.

இவை தனியார் இன்சுரன்சு அல்லது  மெடிக்கர் மூலம் கட்டப்படும்.

சில இனவழி சங்கங்கள், நிகழ்ச்சிகள் இவை இலவசமாக செய்து தருவார்கள்.

உங்கள் மருத்துவரை அணுகுங்கள்:

எப்போது நீங்கள் மார்பக நிழல் படம் எடுத்துக்  கொள்ள வேண்டும் என்பதையும், எவ்வளவு மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக்காள்ள வேண்டும் என்பதயும் மருத்துவரிடம் கேட்கவும். பிறகு ஒரு அட்டவனை செய்து  கொள்ளவும், அதனை வாழ்நாள் முழுவதும் பயன் படுத்தவும்.

இன்று எல்லா பரிசோதனை நிலையங்களும் உணவு மற்றும் மருந்துகள் அனுமதிக்குழுவிடம் இருந்து அணுமதி  பெறவேண்டும். இதனால் அவற்றின் தரம், கருவிகளின் நிலை, அங்கு வேலை செய்யும் மனிதர்களின்  செயல் திறன், அவர்கள் வைத்து இருக்கும் படிவங்கள் ஆகியவற்றிற்கு உத்திரவாதம் தர இயலும்.

அமெரிக்காவில் உள்ளவர்கள் 1-800-4-CANCER அழைத்து உங்கள் வீட்டுக்கருகே இருக்கும் பரிசோதனை நிலையம் பற்றி அறிந்து  கொள்ளுங்கள்.

காத்திருக்காமல் இன்றே மருத்துவர்களை அணுகுங்கள். ஆண்கள் தங்கள் மனிவி, சகோதரி மற்றும் அன்னையருக்கும் சொல்லுங்கள்.

மார்பக புற்று நோய் தடுக்கவல்ல காய்கறி : ப்ராக்கோலி எனப்படும் பூவகை. இதில் உள்ள இண்டோல் 3 கார்பினால் என்பது மார்பக புற்றுநோய்க்கு காரணமான ஜீன் அதிக அளவில் வீரியம் இல்லாததாக மாற்றுகிறது. எனவே வாரம் ஒருமுறை பிராக்கோலி சேர்த்து கொள்ளுங்கள். பிராக்கோலியில் நீர் அதிக உள்ளதால் இது எடை குறையவும் பயனாகிறது.இக்கட்டுரை முன்பே தமிழோவியத்திற்காக எழுதியது. மேலும் விரிவான ஆங்கில கட்டுரைக்கு இங்கே சுட்டுங்கள்.

மண(ன) முறிவும் மற்றையவும்- 3
விவாகரத்து வழக்குகள் பல காலம் மன உளைச்சலை தரக்கூடியன, புதிது புதிதாய் வரும் குழப்பங்கள், குழந்தையை யார் பொறுப்பாக பார்த்து கொள்வது, எப்படி சேமிப்பு, கடன் இவற்றை பகிர்ந்து கொள்வது என்ற காரணங்கள், மனைவி மீதோ அல்லது கணவன் மீதோ வெறுப்பு இருந்தாலும் மனதுக்கு பிடித்த மற்ற உறவுகளை எப்படி பிரிவது, குழந்தைகளுக்கும் தாத்தா பாட்டி உறவின் தொடர்பை எப்படி வரையறுப்பது என்ற எல்லா கேள்விகளும் வரும். கடைசியாக வந்த புள்ளியியல்(அமெரிக்க மத்திய அரசின் புள்ளீயியல் கணக்கு) படி ஒரு சிக்கல் இல்லாத விவாகரத்து வழக்கு முடிய 1 முதல் இரண்டு வருடங்கள் ஆகும்.

விவாகரத்துக்கு பிறகு 380,000 பெண்கள் தங்கள் முன்னாள் கணவர்களாலும், 52,000 ஆண்கள் தங்கள் முன்னாள் மனைவியராலும் கொடுமைக்கு ஆளாகிறார்கள். எந்த ஒரு விவாகரத்து வழக்கு முடிந்தபின்னும் ஆணோ பெண்னோ வருந்தாமல் இருந்ததில்லை. பெரும்பாலானவர்கள் தங்கள் முன்னாள் துணைமீது பழி சுமப்பதைவிட தன் மீதே அதிக தவறிருப்பதாகவும், இது தன்னுடைய தனிப்பட்ட தோல்வியாகவும் I am a looser என்ற மனப்பான்மையோடு வருந்துவதாகவும் உளவியலார்கள் சொல்கிறார்கள்.

விவாகரத்து மத, இன கட்டுப்பாடுகளாலும் வேறுபடுவதை இங்கே காணலாம்.

விவாகரத்து பொதுவாக மூவகைப்படும். 1. இரண்டு பேரும் மனம் ஒப்பி விவாகரத்து பெறுவது. இவ்வகையில் மீண்டும் இருவரும் சேர்ந்து வாழவும், மறுமணம் செய்துகொள்ளவும் முடியும். பொதுவாக மனம் ஒப்பி செய்துகொள்ளும் விவாகரத்துகள் குறைவு. அப்படியே செய்துகொண்டாலும் பொருளாதார காரணங்கள் அதை கட்டுப்படுதுகின்றன. இவ்வகை விவாகரத்துகளுக்கு ஏதேனும் அந்த மாநிலம் ஒப்புக்கொள்ள கூடிய காரணங்கள் இருந்தால் போதுமானது. இங்கே யார் மீது தவறு என்பதைவிட, இந்த திருமணம் ரத்தாக வேண்டும் என்பதே நோக்கம்.

சில முக்கிய காரணங்கள்: இருவரும் சேர்ந்து வாழ்வதில்லை (கணவன், மனைவி வேறு ஊர்களில் வசிப்பது),  தவிர்க்க முடியாத பிரச்சினைகள், தீர்த்துவைக்க முடியாத மன வருத்தங்கல் போன்றவை காரணமாகும். இவ்வகை விவாகரத்துகள் பெற்றுக்கொள்ள இருவரும் சில காலம் தனித்து வாழவேண்டும். இது மாநிலங்களிடையே வேறுபடும். நியுஜெர்சியில் 18 மாதங்கள் பிரிந்து வாழ வேண்டும். ஏதேனும் மனம் ஒப்புகொள்ள கூடிய காரணம் வேண்டும். உதாரணமாக முன்பொருமுறை வலையில் பதிந்திருந்த வழக்கொன்றில், பெண் விவாகரத்து கோரியதன் முக்கிய காரணம், மாமானாரின் அத்துமீறல்கள். ஆனால் அது எங்கேயும் வழக்காக பதிந்திருக்கவில்லை, எனவே அதை விவாகரத்துக்கான காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இரண்டு வழக்கறிஞர்களும் சொன்னபின், கணவனின் வன்முறையை காரணம் காட்ட விரும்பினாள். ஆனால், அதைக் கணவன் ஒப்புக்கொள்ளவில்லை. தான் வன்முறையோடு ஒரு பெண்ணை நடத்தியதாக நிரூபணம் இல்லாமல் ஒரு சட்ட ஆவணத்தில் போடுவதை ஆண் ஒப்புக்கொள்ளவில்லை. பெண்ணுக்கு/ ஆணுக்கு திருமணத்தை மீறிய உறவிருப்பதாக எங்கேயும் சொல்லவில்லை. கடைசியாக இருவரும் ஒப்புக்கொண்ட ஒரு காரணம், குழந்தைகளை வளர்க்கும் முறையில் பேதம் இருப்பதாக. இந்த காரணமே அவர்களின் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்றால், வெளியே அன்ரு ரத்து செய்யப்பட்ட திருமணங்களும் அவற்றீற்கான காரணங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். சின்ன சின்ன காரணங்கள் விவாகரத்துக்கு ஆதாரமாக சொல்லப்படுவது இது போல, எப்படியாவது அதிக பாதிப்பு இல்லாமல் திருமண ஒப்பந்தம் ரத்தானால் சரி என்று ஏற்றுக்கொள்ளப்படுபவையே ஆகும்.

இவ்வகை விவாகரத்துகள் வழக்கில் ஈடுபடும் வழக்கறிஞர்களும் எப்படியாவது வழக்கு முடிந்தால் சரி என்று இருவரையும் அழைத்து நிபந்தனைகள், யார் குழந்தையை பார்த்துக்கொள்வது போன்ற விவகாரங்களை கூடுமானவரை தீர்க்க முயலுகிறார்கள்.

சில மாநிலங்களில் பிரிந்திருக்கும் காலம் கூடுதலாக இருக்குமேயானால், கணவனும் மனைவியும் பேசி எப்படியாவது ஒரு தவறு இருப்பதாக சொல்லி குற்றமுள்ள விவாகரத்துக்கு ஏற்பாடு செய்துகொள்கிறார்கள். இதிலும் உண்மையில்லை. இவ்வகை colludingம் சாத்தியமே. குழந்தைகளின் பொறுப்பை பெற பெற்றோர்கள் செய்யும் முயற்சிகள் இன்னும் வியப்பை தரவல்லன. இதில் குழந்தைகளை கருவியாக , பணயமாக, பொருளாக பயன்படுத்துவது அதிர்ச்சியை தரும். அதைப்பற்றி விரிவாக பிறகு. வயதுவந்த குழந்தைகள் பெற்றோரை பயன்படுத்துவதும் உண்டு.

உறவில் விரிசல் வந்தபின் குழந்தைகளுக்கு வழக்குகள், மன வருத்தங்கள் இன்னும் அதிக துன்பத்தை தரலாம் என்பதை தடுக்க இவ்வழியும் கையாளப்படும். ஆனால் இதில் சில சமயம் ஒருவர் தடம் மாறி , இன்னொருவரே ஒப்பு கொண்டுவிட்டார், ஆகவே நான் எந்த சலுகையும் தரமுடியாது என்று சொல்லவும் வழி இருக்கிறது. இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மனம் உவந்து ஒப்புக்கொள்ளும் விவாகரத்தில் பலவகை ஒபந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்படும். வழக்கறிஞர்கல் இடைபட்டு பேசி, இவற்றை ஏற்பாடு செய்வார்.

சட்ட சிக்கல்கள், தவறுள்ள விவாகரத்து (at fault divorce), முடிவான விவாகரத்து (summary divorce)பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்

மண(ன) முறிவும் மற்றையவும் – 2
விவாகரத்துக்கான காரணங்களை அலசும் முன் திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதை பார்ப்போம். நம் ஊர் திருமணங்களைப் பற்றி முன்பே பல பதிவுகளாக எழுதிவிட்டபடியால், அமெரிக்க திருமணங்களைப் பற்றி ஒரு மேலோட்டம். லாஸ்வேகாஸ் திருமணங்கள், ஹாலிவுட் திருமணங்கள் இதில் சேர்த்தி இல்லை.

நம் ஊரில் மட்டும் இல்லை இங்கேயும் திருமணம் நிறைய திட்டமிட்டே பல எதிர்பார்ப்புகளோடு நிகழ்கிறது. வாழ்நாளில் சேமித்த உழைப்பு செலவிடப்பட்டும் மிக விமரிசையாக அரங்கேறுகிறது. பெண் வீட்டினரே பெரும்பாலான செலவைச் செய்கிறார்கள், தேனிலவுக்கான பயணம் உள்பட. திருமணத்திற்கு முதல் நாள் மாலை நடக்கும் ரிகர்சல் ஒத்திகைத் திருமணச் செலவை சில சமயம் பிள்ளை வீட்டார் ஏற்பதுண்டு. மற்றபடி மேசைகளில் வைக்கும் சின்ன சின்ன  பரிசுப்பொருள் (நாம் வைத்துக்கொடுப்பது போல) முதல் மணமகனும் மணமகளும் திட்டமிட்டு நல்ல முறையில் நடக்க வேண்டுமே என்று கவலைப்பட்டு யார் மனமும் புண்படாமல் ஒரு மணமகள் தோழன், தோழியை தேர்ந்தெடுத்து அப்பாவின் இரண்டாம் மனைவியை அழைத்தால் அம்மா மனம் வருந்துவாரா என்றெல்லாம் கவலைப்பட்டு நடத்தி எந்த பயனும் இல்லாத, மிக மேலோட்டமான ரத்து செய்வார்களா? சற்றே சிந்தித்துப்பாருங்கள்.இந்தக் காரணங்கள் எப்படி வருகின்றன என்பதை விவாகரத்து வழக்குகளின் அடிப்படையைப் பார்க்கும் போது காணலாம்.

என் அலுவலக சக ஊழியர் பெண் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்த விழாவிற்கே நிறைய செலவாகிவிட்ட படியால், இப்போது திருமணத்திற்காக பொருள் சேர்க்க பகுதி நேர வேலையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆன மகிழ்ச்சி, மணமகன் நல்லவனாக இருக்க வேண்டுமமென்ற கவலை,மணமகனை பற்றி தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரிப்பது என்ற எந்த வகையிலும் நம் ஊர் தந்தைக்கு மாற்றானவர் இல்லை. இப்போதெல்லாம் பெண்களும் வேலைக்கு போய் பொருள் ஈட்டுவதால், தந்தையின் செலவிற்கு தானும் கொடுப்பதும், ஆண்களும் தேனிலவு போன்ற செல்வை பகிர்ந்து கொள்வதுமாய் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தனக்கு வாடகை கார் ஏற்பாடு செய்யவில்லை, பார்ட்டி ஃவெவர் எனப்படும் பரிசு சரியாக இல்லை (நான் கொடுத்த பரிசு 100$, அவர் திருப்பி தந்தது எங்கோ ஒரு டாலர் கடையில் இருந்து) என்பது போன்ற சண்டைகளும் உண்டு. முன்பெல்லாம் இங்கேயும் விவாகரத்துகள் அவ்வளாவாய் இல்லை என்பதை கீழ்க்காணும் ஒரு புள்ளியியல் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

Year	Divorces per 1,000 population	Year	Divorces per 1000 population

1950 ……….. 	2.6	1983 ……….. 	5.0

1955 ……….. 	2.3	1984 ……….. 	5.0

1957 ……….. 	2.2	1985 ……….. 	5.0

1960 ……….. 	2.2	1986 ……….. 	4.9

1965 ……….. 	2.5	1987 ……….. 	4.8

1970 ……….. 	3.5	1988 ……….. 	4.8

1971 ……….. 	3.7	1989 ……….. 	4.7

1972 ……….. 	4.0	1990 ……….. 	4.7

1973 ……….. 	4.3	1991 ……….. 	4.7

1974 ……….. 	4.6	1992 ……….. 	4.8

1975 ……….. 	4.8	1993 ……….. 	4.6

1976 ……….. 	5.0	1994 ……….. 	4.6

1977 ……….. 	5.0	1995 ……….. 	4.4

1978 ……….. 	5.1	1996 ……….. 	4.3

1979 ……….. 	5.3	1997 ……….. 	4.3

1980 ……….. 	5.2	1998 ………. 	4.2

1981 ……….. 	5.3	1999 ………. 	4.1

1982 ……….. 	5.1	2000 ………. 	4.2

1983 ……….. 	5.0	2001 ……….	4.0

சின்ன சின்ன கிராமங்களில் இன்னமும் எத்தனை மனசங்கடங்கள் இருந்தாலும், பாவம், சுவர்க்கம் கிடைக்காது என்றும், குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டுமமென்பதாலும் பயந்து சேர்ந்து வாழ்பவர்கள் உண்டு. ஒரு அரசாங்க வழக்கறிஞர் தன் துணைவியிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொள்வார். வாயில் துப்பாக்கியை வைத்து கொன்றுவிடுவேன் என்றெல்லாம் பயமுறுத்துவது வழக்கம். சாப்பாடு ஆறிவிட்டால்கூட எலும்புகள் உடையுமாறு அடிப்பதும் உண்டு. ஆனாலும் அந்த பென் கணவனை எதிர்த்து புகாரிடவே முடியவில்லை. முதல்காரணம், எல்லா காவலருக்கும் கணவனை தெரியும், இரண்டாவதாக நல்ல பதவியில் உள்ள கணவனின் வார்த்தைகளுக்கு முன் அவளை நம்ப யாரும் தயாரில்லை, மூன்றாவதாக மற்ற நன்பர்கள் எல்லாரிடமும் மிகவும் நல்ல மனிதன், அன்பானவன் என்று கணவன் பெயரெடுத்திருந்ததும், நல்ல அதிகாரம் உள்ள பதவியில் இருந்ததும், பொது இடங்களில் மிகவும் அன்பாக நடத்தியதும் காரணம், கடைசியாக பல வருடங்களாக கணவன் சொன்ன குற்ற சாட்டுகளை நம்பி, கடைசியில் அந்த பெண்னே தன்னை பற்றி குறைவாக மதிப்பிட்டது. ஒருநாள் எதேச்சையாக வாய்க்குள் வைத்து மிரட்டிய துப்பாக்கி வெடித்து(தவறுதலாக ட்ரிகரை மிகவும் அதிகமாக அழுத்தி பயமுருத்தியது போல செய்யும் போது) இறந்து போனபின் குழந்தைகள் சொன்ன சம்பங்களை பார்த்து பலரும் அதிர்ந்து போனார்கள். அரசாங்க வழக்கறிஞர்கள், காவலர்கள் இவர்கள் மேல் வழக்கு பதிவதென்பது மிகவும் கடினம்.பொய் வழக்குகள் நிறைய வரும், சாலையில் போகும் போது மற்ற காவலரால் வேண்டும் என்றே சின்ன குற்றங்கள் பதிவாக்கப்படும், ட்ரங்கை திறக்க சொல்லி போதை பொருள் போட்டு வழக்கு பதியப்படும் அபாயங்கள் நிறைய உண்டு.

விவாகரத்தில் நிறைய வகைகள் உண்டு. At fault, no fault என்ற இரண்டு பெரிய பிரிவுகள் உண்டு. இரண்டு பேரும் மனம் ஒன்றி விவாகரத்து கோரினாலும் நியுஜெர்ஸியில் 18 மாதங்கள் பிரிந்து இருக்க வேண்டும். இந்த வகைகளைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில்.

மண(ன) முறிவும் மற்றையவும்- 1
கொத்தானாரின் நட்சத்திர வாரத்தில் சில மணமுறிவுகள், குழந்தைகளுக்கான உதவிப்பணம் மற்றும் ஜீவானம்சம் அல்லது alimony பற்றி சில கேள்விகளை முன்வைத்திருந்தார். மிக சரியான அந்த கேள்விகளுக்கு என்னால் இயன்ற வரை நான் பார்த்த சில விவாகரத்துகள் அதன் வழக்கு விவாதங்கள் சில சட்டங்கள், அவற்றை மீற ஏமாற்ற செய்யப்படும் சில ஜாலங்கள், கிடைக்கும் உதவிப்பணத்தை அபயோகிக்கும் பெண்கள்/ஆண்கள், புத்திசாலித்தனமாக சிக்கி சுழலும் வழக்குகள், முடிந்தால் போதும் என்று ஏற்றுக்கொள்ளப்படும் பொய்யான காரணங்கள் எழுத துவங்கியதன் ஆரம்ப பதிவு இது.

இந்த பதிவு கூடுமானவரை பால் சார்ந்தோ அல்லது இனம் சார்ந்தோ இருக்காது என்று நம்புகிறேன். இங்கே மதங்களின் (எல்லா) கட்டுப்பாட்டையும் சமுதாயத்தின் சில கட்டுப்பாடுகள் எழுதப்படாத ஆனால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும்/பட்ட விதிகளையும் கோடிட்டு காட்ட எண்ணம்.

புள்ளி விவரங்களும் பட்டியலிடப்படும் ஆங்காங்கே, சில வழக்குகளும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி பெற்று பெயர் மாற்றத்தோடு வரும். மாற்று கருத்துகள் இருந்தால் தெளிவாக சொல்லுங்கள்.

உரிமை எது, எதுவரை தலையிடலாம், எது வரையறை மீறுவது என்றெல்லாம் பல குழப்பங்கள் உண்டு. மனைவி அல்லது கணவனின் விருப்பத்திற்கு குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்று சிலர் அதிக அக்கறையும் கவனமும் எடுத்துக் கொள்ள அது பாராமுகமாய், விருப்பம் இல்லாததாகவும் கருதப்பட்டு மனப்புழுக்கம் அதிகரித்து முறிவுக்கு காரணமாகிறது.

நியுக்கிளியர் குடும்பத்துக்கும் அன்னை, தந்தை என்ற நெருங்கிய உறவு வட்டத்தின் எல்லைகளும் சரியாக வரையறுக்க படாமல் அன்பென்ற வடிவில், இத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தேனே இப்போது இதை செய்யக்கூடாதா என்ற பயமுறுத்தல் வடிவில், கணவன் மனைவி உறவு வட்டத்து முக்கியத்துவ போட்டியில், குழந்தை பராமரிப்பில் என்று எல்லாவற்றிலும் குழப்பம் வருகிறது.

மனைவிக்கு ஓய்வு தர தான் வீட்டில் இருக்கும் போதெல்லாம், குழந்தையை தானே கவனித்துக்கொண்ட கணவன் மீதுகூட, நான் குழந்தை வளர்ப்ப்பது பிடிக்கவில்லை  என்று குற்றம் சாட்டும் மனைவியரும், இப்பவே குழந்தையை உன்னிடமிருந்து பிரித்துவிடப்போகிறார்கள், கவனமாய் இரு என்று சொல்லித்தரும் அன்னையரும் உண்டு. இந்தியாவில் மட்டும் என்றில்லை, அமெரிக்காவிலும் கூட கணவன், மனைவி இவர்களின் பெற்றோர், உடன் பிறந்தோரால் பிரச்சினைகல் விவாகரத்துவரை போகிறது.

இந்த குழப்பங்கள் எல்லாம் வருவதன் காரணமே சரியான உரையாடல் (communication) இல்லாததும் எது எல்லைக்கோடு என்று தெரியாததும் ஆகும்.

காதலிக்கும் போது ஒருவரை ஒருவர் மகிழ்விக்க அல்லது நல்ல நினைவை impression ஏற்படுத்த பிடிக்காத விஷ்யங்களில் கூட பொருமை காப்பவர்களும், கிடைக்கிற சிரிது காலத்தில் மகிழ்ச்சியுடன் இருப்போமே என்று ஒத்தி போடுபர்களும் திருமணம் என்று ஆனபின் தனக்கு தெரியாத இன்னொரு பிம்பத்தை, வடிவத்தை கண்டு தடுமாறுவதும்,  அலுவக நேரம் தவிர மற்ற நேரங்களில் கூடவே இருக்கும் போது சின்ன விஷயங்களில் கூட இருக்கும் வேறுபாடு மனநிலை பொருத்து தரும் சினம், ஏமாற்ரமும், இப்போது கணவன் மனைவியோடு கூடவே வரும் உறவினர் என்ற பொருப்பும் அவரவர் குனத்திற்கு ஏற்று. அல்லது சகித்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் வரும் போது, எல்லாம் குழப்பமாகிறது. திருமணமாகும் போது தன்னிச்சியாய் இருந்துவிட்டு, இப்போது இன்னொருவரின் ரசனை விருப்பம், குடும்பம் என்ற அமைப்பின் தேவைகள் சில தனி வட்டத்தை குறுக்குவதால், கணவனோ மனைவியோ அன்பென்ற பிடியில் அவரவர் individual space ஐ compromise செய்துகொள்வது அல்லது இழக்கும் போது இன்னும் அதிகமாக மூச்சு முட்டுகிறது.

இதை எல்லாம் மீறி வன்முறை அதிகமாகும் போது ஆணோ பெண்ணோ கலங்கி பொய்விடுகிறார்கள்.  நியுஜெர்ஸியில், அலுவகத்தில் மற்றூம் நண்பர்களிடத்தில் மிகவும் பொறுமைசாலி என்ற பெயர் எடுத்த ஒருவர், மனைவியை கோபத்தில் மிக பலமாக அடித்திருக்கிறார் மருத்துவமனையில் சேர்க்கும்படி. காவலர்கள் விசாரித்தவகையில் இது அடிக்கடி நிகழும் ஒன்று என்பதும் தெரியவர, மனைவியையும் குழந்தைகளையும் சட்டரீதியாக பிரித்து பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது. விவாகரத்து ஆனாலும், கணவனோ அல்லது மனைவியோ போதை பொருளுக்கு அடிமை போன்ற மிக பெரிய குற்றம் இல்லாதவரை குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரில் ஒருவர் முதன்மை காவலராகவும் மற்றொருவருக்கு வாரம் இருமுறை கவனித்துக்கொள்ளூம் visitation உரிமையும் உண்டு. என்னதான் கணவன் மீதோ அல்லது மனைவி மீதோ வெறு இருந்தாலும் சட்டப்படி ஒரு தந்தைக்கு அல்லது அன்னைக்கு இருக்கும் உரிமையை குழந்தை 18 வயதாகும் வரை யாராலும் தடுக்க முடியாது. அப்படி தன் குழந்தைகளை அழைத்து போன தந்தை அவர்கள் இருவரையும் கொன்று தானும் தர்கொலை செய்துகொண்டார். அவரது நண்பர்களால் இதை நம்பவே முடியவில்லை. நம்மிடம் சாதாரணமாக மிக நல்ல முறையில் பழகும் ஒருவர் கூட தன் துணவர் அல்லது துணைவியிடம் மிகவும் கட்டுப்பாடு அல்லது அடக்குமுறையுடன் நடந்து கொள்ள முடியும்.

இதற்கு பொருளாதார சார்பு நிலை மட்டும் அல்லாமல் இன்னும் பல காரணங்களை உளவியலார் சொல்லி இருக்கின்றனர். அமெரிக்க சட்டங்களும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். நான் எழுதுவது பெரும்பாலும் நியுஜெர்சி மாநில சட்டத்தை ஒட்டி இருக்கும். இது ஒரு முன்னுரை மட்டுமே.

முதியோர் இல்லங்கள் காலத்தின் கட்டாயம்
சமீபத்தில் மங்கை என்பவரின் பதிவில் தனித்து முதியோர் விடுதியில் இருக்கும் ஒரு பெண்னின் பிள்ளை படும் வேதனையை எழுதி இருந்தார். இந்தியாவில் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டாலும் இன்னமும்  இது போன்ற விடுதிகலில் இருப்பதை சமுதாயம் ஒரு குறையாக காண்கிறது. என்னைப்பொறுத்தவரை இது தவிர்க்க முடியாத ஒன்றாகி இருக்கிறது. நம்முடைய சமூகத்தை பொறுத்தவரை பாசம் என்பது இழுத்து பிடித்து கண்னுக்கு புலப்படாத கயிறுகளால் கட்டி  தங்கள் ஆசைகளும் விருப்பத்தையும் விட்டுகொடுத்து பொறுத்து போவதென்பதாக மாறி இருக்கிறது. எல்லா உறவுகளிடத்தும் அவரவர்க்கான இடம் (space) அவசியம் வேண்டும் அது கணவன் மனைவியானாலும் கூட. இது புரியாமல் மூச்சுதிணர அடிக்கும் போதே உறவுகளில் மனக்கசப்பு ஏற்படுகிறது.

நேற்று முன் தினம் 86 வயதான ஒரு  நோயாளியை மருத்துவமனியில், நியுஜெர்சியில் புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில் வன்புணர்ச்சி, தாக்குதல்களுக்கு ஆளாகி இருக்கிறார். அவரை கவனித்துக்கொள்கிற நர்சும் மற்ற பிற மருத்துவர்களும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் தனித்து இருக்கும்நிறைய முதியோரிடம் அவர்களுக்கு உதவுவதாக சொல்லி அவர்கள் வங்கி கணக்கில் இருந்து நிதி திருடுவது, அவர்கள் அறியாமை பயன்படுத்தி அவர்கள் மனநிலையை பாதித்து அதில் சுகம் காண்பதும் அதிகரித்திருக்கிறது. இதனாலேயே நிறைய அமெரிக்கர்கள் தங்கள் பெற்றோரை ஒரு நம்பகமான ஒருவிடுதியில் சேர்த்து கவனித்து கொள்வது சரியானது என்று நினைக்கிறார்கள். அமெரிக்காவில் நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து இருப்பது தங்கள் சுதந்திரத்திற்கு பாதகம் தரும் என்று விழைவதில்லை.

படித்துவிட்டு நிறைய இளைஞர்களும், பெண்களும் இப்போது வெளிநாடுகளில் பணிபுரிவதால், இந்தியாவிலும் இப்போது முதியோர் விடுதிகள் பெருகி விட்டதாக அறிந்தேன்.

- பெரும்பாலான இடங்களில் கணவன் மனைவி இருவரும் பணியில் இருப்பதால் கவனிக்க முடியாமல் அல்லறும் பெற்றோர்கள்

- பணி முடித்து சாப்பிட்டுவிட்டும் திரும்பும் இளையோருக்கு கவனித்துப் பார்த்துக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ள முதியோர் சுமையாகிப் போவது

- இளையவரின் வேகத்திற்கும் விருப்பத்திற்கும் மாற முடியாமல் தவிக்கும் முதியோர்

- தனிமையில் வாடும் முதியோருக்கு தம் வயதை ஒத்தவருடன் பழகும் இன்பம்

- மாறிவரும் பொருளாதர நிலையும் வளர்ச்சியும் உணராமல் அத்தியாவசியமும் அவசியமும் வேறுபட்டு மனத்தளவில் உறவுகள் வேறுபட்டு போவது இவை யாவற்றிற்கும் ஒரு ஆறுதலாக முதியோர் இல்லங்கள் இருப்பதால் இவை வேகமாக வளர்ச்சி அடைகின்றன. இவை

இ ல வ சமாகவும், சில இடங்களில் மாதாந்திர கப்பம் (fee) கொண்டும் நடத்தப்படுகின்றன. இவற்றில் கவனிப்பு நன்றாக இருப்பினும், மருத்துவ செலவு தேவைக்கும் அதிகமாக இருப்பதாக படித்தேன். (www.deccanherald.com/deccanherald/july272004/spt13.asp). முதியோர் விடுதியில் கலை நிகழ்ச்சிகள் என  பல வித கலை நிகழ்ச்சிகள் இருந்தும், தன்னுடைய மகனோ மகளோ பார்த்துக்கொள்ளாமல் தான் யாருக்கும் வேண்டாதவரகிப்போன தன்னிரக்கத்தில் இவர்கள் இறப்பை நோக்கி காத்திருக்கிறார்கள்.

வீடுகளில் இருந்தாலும் தன் கருத்தோ அல்லது விருப்பமோ மதிப்பளிக்க முடியாமல் போவதும், உடலின் சில உறுப்புகள் செயலிழந்து போவது, உடல்நல குறைபாடுகள் ஏற்படுவது, தாங்கள் உயர்ந்தது என்றும் சிறந்தது என்றும் கருதிய கருத்துக்களை மதிக்காமல் இளையதலைமுறை வாழ்வது என மனரீதியாகவும் பாதிப்படைகிறார்கள்.

இங்கே அமெரிக்காவில் இது ஒரு பாரமாகி, என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நடுத்தரவயதுள்ளோர் அதிகம். இங்கே 170,000 விடுதிகளும், 1.5 கோடி முதியோர் அவற்றில் வசிக்கவும் செய்கிறார்கள். இன்னும் 30 வருடத்தில் இது 5 கோடியை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முதியோர் விடுதியில் இவர்கள் வன்முறைக்கு ஆளாகிறார்கள். இவர்கள் அல்ட்சியப்படுத்தப்படுகிறார்கள். முதுகில் புண் வருவதால் அருவருப்பு கொண்டு இவர்களை யாரும் கவனிப்பதும் இல்லை. நர்சுகள் மிக குறைந்த எண்ணிக்கையில் வேலைக்கு அமர்த்தப்படுவதால் அவர்கள் களைத்துபோய் விடுகிறார்கள். அடிக்கடி வந்து பார்க்கும் சொந்தங்கள் இல்லாதோர் நிலை பரிதாபம். 50% சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்களில் தானாகவே நடந்து கீழெ விழுவது ஆண்டிற்கு ஒருமுறை நடக்கிறது. 20% சதவிகிதம் இவை மிக ஆபத்தான எலும்பு முறிவுகளில் முடிகிறது.

அமெரிக்காவின் மாநில அரசின் சுகாதார மையம் 1988 இல் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் 25% விடுதிகள் மருத்துவர் பரிந்துரைக்காமலேயே முதியோருக்கு மருந்துகள் தந்து உறங்க வைத்துள்ளதாக அறிகிறேன்.

மசாசூசெட்ச் மாகாணத்தில் 1200 விடுதிகள் தங்களிடம் வசிக்கும் முதியோரை மயக்க நிலையில் மருந்துகளாலோ, உடலை துன்புறுத்தியோ வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

1990ல் நடந்த கருத்துக் கணிப்பும் 40% இவ்வாறே துன்புறுத்தப்படுவதை ஊர்ஜிதம் செய்தது

1997இல் ப்ளோரிடா மாகணத்தில் இதை மக்களவைக்கு எடுத்துச் சென்று புகாரிட்டதில் பல  விடுதிகள் பரிசோதனிக்குட்படுத்தப்பட்டு தங்கள் அதிகாரத்தை இழந்தன. இப்போதெல்லாம் இவை வருடத்திற்கு இருமுறை பரிசோதனைக்குட்படுத்தப்படுகிறது என்றாலும், இன்னமும் பட்டினி போடுவதும், அடிப்பதும் நடந்துகொண்டுதானிருக்கிறது. இதனாலேயே நிறைய நடுத்தர வயதினர் தங்கள் பெற்றோரை தங்கள் வீட்டிற்கு அருகிளேயே வைத்துக் கவனித்துக்கொள்கின்றனர். பிள்ளைகள் இல்லாத பெற்றோர் 90வயதில் தனியாக இருந்து சமைக்கும் போது தீவிபத்து ஏர்பட்டு, பிறகு சட்டம் மூலம் விடுதிகளில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

தினப்படி நடவடிக்கைகள் குளிப்பது, உண்பது இவற்றிற்கு அடுத்தவரை சார்ந்து இருக்கும் முதியோருக்கு பணிவிடை செய்து, தங்கள் குழந்தைகளை கவனித்து கொண்டும்,பணியிலும் ஏற்படும் அதிக அழுத்தத்திற்கு ஈடு கொடுப்பது என்று நடுத்தர அமெரிக்கர்களுக்கு திண்டாட்டம் அதிகம். நம் ஊரைப்போல சேர்ந்திருந்தால் அவ்வளவு பாதிப்பு இருக்காது என்றலும் இவர்கள் அதை விரும்புவதில்லை. விவாகரத்து ஆனபின்னும் தங்கள் குழந்தைகள் தங்களுடைய பாட்டி தத்தாவுடன் நல்ல உறவு வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர் ஏராளம். ஆனாலும் இருபாலாரும் சேர்து இருப்பதை சுகம் என் நினைப்பதில்லை. இவர்கள் தங்கள் குழந்தைகள் மனம் வருந்தக்கூடாது என்பதற்காக தங்கள் பெற்றோரை அருகிலேயே வைத்துக் கொள்ள விரும்பினாலும் பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை. பணிப்பெண்ணுக்கு  கொடுக்க வேண்டிய செலவு மிக அதிகம். ஒரு தகுதியான நர்சு வந்து கவனித்துக் கொள்ள  ஒரு நாளைக்கு 200$ ஆகும்

வறுமைக் கோடின் கீழே உள்ளவருக்கு அரசு இலவசமாக செவிலிகளை அனுப்புவதும், measl on the wheelsதிட்டம் மூலம் வீட்டிலேயே வந்து தினமும்  உணவு தருவதும் உண்டு.விடுதியில் இருந்தாலும் அடிக்கடி போய் பார்துக்கொள்ள ஆகும் நேரம், செலவு என்பதை பொருட்படுத்தாமல் செல்வோரும் உண்டு.இப்படி செல்வதால் கவனிப்பில் குறை இருக்காது என்பது இவர்களின் ஆதங்கம். பள்ளிகளில் வருடம் ஒருநாள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு முதியோர் விடுதைகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதும், மாணவர்கள் தன்னார்வத்துடன் முதியோருக்கு புத்தகங்கள் படிப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. மறதி அதிகம் உள்ளவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏமாற்றுவதும் பணத்தை கையாடுவதும் சில இடங்களில் நடக்கிறது.

விடுதிகள் நல்லதா அல்லது வீட்டில் தனித்திருப்பது நல்லதா என்று சொல்ல தெரியவில்லை. ஆனால் வாழ்வின் காலம் மருத்துவ வளர்ச்சியானால் நீண்டு கொண்டே இருக்கும் போது, விடுதிகளின் வளர்ச்சி இன்னும் பெரிதாகும் என்று தோன்றுகிறது. விடுதிகள் தேவைக்கேற்ப பெருகினாலும், அதற்கேற்ப நிறைய பணியாளர்கலை நியமிப்பதும், தங்கள் வாடிக்கையாளரை கவனிப்பதும் அவசியம். அதேபோல முதியோரைக் கவனித்துக்கொள்ள பொறுமை மிக அவசியம். இப்போதைய அமெரிக்காவில் முதியோர் இல்ல பிரச்சினைகள் குறித்து நிறைய சட்டங்கள் செய்யப்படுகின்றன. அதேபோல கலாச்சாரம் சார்ந்த முதியோர் இல்லங்கள் தேவையாகி விட்டது. அதிலும் இந்தியா போன்ற ஆசிய நாடுகள் இருந்து இங்கே வந்து தங்கிவிட்டவர்களுக்கானவை மிக அவசியம்.

இந்தப்பதிவின் பல செய்திகள் முன்பு தோழியர் வலைப்பதிவில் பதிந்ததே.