»
S
I
D
E
B
A
R
«
வீட்டு வன்முறை, dirty Bomb, Radiation terrorism
Mar 22nd, 2009 by பத்மா அர்விந்த்

கணவனின் வன்முறை தாங்க முடியாமல் மனைவி கொலை செய்வது ஒன்றும் புதிய செய்தி இல்லை. ஆனால் சமீபத்தில் வந்த ஒரு 911 தொலைபேசி அழைப்பை ஏற்று சென்ற காவலர்கள் முதலில் இதுவும் ஒரு வீட்டு வன்முறை வழக்கு, அது தொடர்ச்சியாக கொலையில் முடிந்திருக்கிறது என்று தான் நினைத்தார்கள். ஆனால் அந்த வீட்டின் சோதனையில் படிப்படியாக பல விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன.

சமீபகாலமாக எங்கள் துறையில் ரேடியோ கதிர்வீசு குண்டுகள் வெடித்தால் எத்தனை இழப்பு வரும் எப்படி மருத்துவ உதவி செய்ய முடியும் என்பது குறித்தெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறோம். இதுகாறும் வேதியியல் அல்லது உயிரியல் தீவிரவாதத்திற்கே அதி முக்கியத்துவம் கொடுத்திருந்த நாங்கள், கடந்த ஒரு வருடமாக ரேடியோ கதிரியக்க தீவிரவாதம் குறித்து அதற்கு தேவையான மருத்துவ செயல்பாடுகள் குறித்து திட்டமிட ஆரம்பித்திருத்தோம். பலரும் இது போல ரேடியோ கதிர்வீச்சு ஐசோடோப் பெறுவதன் சிக்கல் குறித்து பேசும் போது, உள்நாட்டு பாதுகாப்பில் அமெரிக்கா போக வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதை சொல்லாமல் சொல்லும் வீடியோ கீழே:

social Normமும் மகளிர் தினமும்
Mar 8th, 2009 by பத்மா அர்விந்த்

வழக்கம் போலவே என் இன்பாக்ஸ் மகளிர்தினத்தை நினைவுறுத்தும் வண்ணம் அழைப்புக்களால் நிரம்பி இருந்தன. காலை உணவு, அல்லது சின்ன கூட்டம். ஒன்றில் கொண்டாடத்தான் வேண்டுமா மற்ற நாடுகளில் எத்தனை பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், ஒரு மணிக்கு பத்தில் நான்கு பெண் ஏதேனும் ஒரு பாலியல் சித்திரவதைக்கு ஆளாகிறாள், இந்தியாவில் 19% திருமனமான 19இல் இருந்து 25 வயதுகுட்பட்ட பெண்களும் கம்போடியாவில் 35% மணமான பெண்களும் கணவனால் ஒருமுறையேனும் அடிக்கப்பட்டிருக்கிறாள், இன்னும் இந்தியாவில் விதவைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றார்கள், இங்கே முதியோர் இல்லங்களில் பெண்கள் பாலியல் கொடுமைக்கும் ஆளாகிறார்கள், இந்த நிலையில் வேண்டுமா மகளிர் தினம் யோசியுங்கள் என்ற கடிதம்.

பாஸ்நியா முதல் இன்றைய இராக், ஈழம் வரை போர்க்காலங்களில் பெண்கள் படும் அவதிகள் அதிகம். ஆண்கள் பலர் கொல்லப்படுவதால், குழந்தைகளின் பசிதீர்க்க, முதியோருக்கு உணவு வழங்க, குடும்பத்தை சற்றேனும் குறைவில்லாமல் நடத்த பெண்கள் பணிக்கு செல்கிறார்கள். முதல்முறையாக பணிக்கு செல்வதால் குறைந்த அளவு ஊதியம் கிடைக்கும் பணிகளில் இவர்கள் படும் பாலியல் தொல்லைகள் ஏராளம். போர் என்றாலே ஒரு நாட்டின் உடமைகளை கைக்கொள்வதோடு, பெண்களை பாலியியல் கொடுமைக்கு ஆளாக்குவது ஆண்கள் நிறைந்த இராணுவத்தில் ஒருவகை கொண்டாட்டமாகி இருக்கிறது. இதற்கு உளவியல் ரீதியாக பல காரணம் இருப்பினும் ஒரு வீட்டின் பெண் ஒருவகையில் இன்னும் ஒரு உடமையாகவே கருதப்படுவதால் அவளை சிதைப்பது என்பது அந்த வீட்டின் ஆணை உச்சகட்ட அவமானத்திற்கு ஆளாக்குவது முக்கிய காரணம், இரண்டாவதாக இவ்வாறான வன்புணர்வில் கருத்தரிக்கும் பெண்கள் மூலம் தங்கள் இனத்தை அங்கே வளர்க்கவும் நினைப்பது இன்னொரு காரணம். பெரும்பாலான போர்க்கால வன்புணர்வுகள் கருவில் முடிந்தால் அவர்களுக்கு அதை கலைப்பது மிகவும் முடியாத காரியம். அவ்வாறாக பிறந்த குழந்தைகள் அந்த வன்புணர்வு அனுபவத்தை நினைவுறுத்திக் கொண்டே இருப்பதால் சமூகத்தாலும் வெறுக்கப்படும் நிலைக்கு ஆளாவதால், போர் முடிந்த பின்னும் இன்னொரு தலைமுறைக்கு அவமானப்படுத்தப்படுகிறார்கள். இப்படியாக பல்லாயிரம் பெண்கள் அவதிப்படும் போது நிலையற்ற வாழ்க்கையில் அவரும் அவர்தம் குடும்பமும் சுழலும் போது இந்தக் கொண்டாட்டங்கள் அவசியம்தானா?

தினசரி வாழ்க்கையில் பெரும்பாலான வீடுகளில் தங்கள் மனைவியின் உடல்நல முடிவுகளைக்கூட ஆண்களே எடுக்கின்றனர். தெற்காசிய நாடுகளில் 61% ஆண்கள் முடிவின் படிதான் குடும்பத்தாரின் உடல்நல சிகிச்சைகள் கூட தெரிவு செய்யப்படுகின்றன. அதே போல அன்றாடம் நடக்கும் செலவினங்கள் தெற்காசிய நாட்டில் 34 இல் இருந்து 40% வரை ஆண்கள் முடிவெடுப்பின் படி நடக்கிறது.

இதே போல பெண்கள் கருவின் துவக்கம் முதல் கடைசி காலம் வரை ஏன் மயானத்திலும் கூட ஆண்களின் முடிவே அதிகாரம் பெற்றதாக இருக்கிறது.
ஆரம்ப நிலை படிப்பு முதல் பொது literacy வரை 100% ஆண்களுக்கு 65% பெண்களே படிக்கிறார்கள். பெண்களின் கல்வி அறிவு ஒரு குடும்பத்தின் உடல் நலம் மற்றும் அறிவுத்திறனுக்கு ஆதாரம் என்ற போதிலும் பெண்குழந்தைகளின் படிப்பு ஆண் குழந்தைகளை விட அதிகம் ஆதரவு பெறுவதில்லை. இவ்வாறாக ஓவ்வொரு துறையிலும், வேலைக்கு போகும் பெண்கள் பெறும் சற்றே visibility குறைந்த பிராஜக்ட், பொதுவாக குழந்தை வீடு என்று பெண்கள் கவனம் செலுத்த தேவை இருப்பதால் அவர்களால் நீண்ட நேரம் பணியாற்ற முடியாது என்று அனுமானித்து வேறு திட்டங்கள் கொடுப்பது, வீட்டின் அன்றாட வேலைகளில் கூட இது பெண்களே செய்ய வேண்டியது என்று அவர்கள் செய்யும் intangible பணிகளின் முக்கியத்துவத்தை கவனிக்காமல் விடுவது போல நிறைய எழுதிக்கொண்டே இருக்கலாம்.

நேற்றைய முந்தினம் நடந்த ஒரு அரசியல் தலைவர்கள் நிறைந்த கூட்டத்தில் சிறையில் பெண்கள் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற ஒரு விளக்கப்படத்தையும் பார்க்க நேரிட்டது. சிறையில் அதிலும் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணாகவோ ஹிஸ்பானிய பெண்ணாகவோ இருந்தால் இன்னும் எத்தனை மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதையும் பார்க்க நேர்ந்தது. அவர்களுக்காக போராடும் ஒரு குழு நடத்திய உரை மூலமாக மனமே கனத்துப் போனது. இதில் இன்னும் வேதனையான செய்தி என்னவென்றால், குடியுரிமை இல்லாமல் வரும் மக்கள் இமிக்ரேஷனால் பிடிக்கப்படும் போது, அதில் பெண்கள், குழந்தைகள் சிறையில் (பொதுவான குற்றவாளிகளுக்கான) கிரிமினல் குற்றவாளிகள் போல நடத்தப்படுவதும் ஆண்கள் இமிக்ரேஷன் சிறையில் அடைக்கப்படுவதும்தான். கிரிமினல் சிறையில் நிகழ்த்தப்படும் அராஜகங்கள் நிர்பந்திக்கபட்டு ஒரு கிரிமினல் குற்றவாளியைப்போல பெண்கள் நடத்தப்படுவது ஏன் என்று இன்னொரு குழு அட்டைகளை பிடித்திருந்தார்கள். ஒரே செய்கைக்கு ஆணுக்கொரு நீதியாகவும் பெண்ணுக்கொரு நீதியாகவும் இருப்பது இங்கேதான். குடியுரிமை பெறாமல் வேலை செய்யும் பெண்கள் அடையும் கொடுமைகளும் அதிகம்.

ஓரின சேர்க்கையாளர்களில் பெண்கள் நடத்தப்படும் விதம், மருத்துவர்கள் அவர்களை நடத்தும் விதம் குறித்தும் கூட நிறைய எழுதி மனம் அமைதி இழக்கலாம். ஆனாலும் இந்த பதிவு அதற்காக இல்லை.

14% ஆனாலும் கூட பல நாடுகளில் பெண்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள், அவர்களால் முடிவுகள் எடுக்க மாற்ற முடியும், 65% ஆனாலும் கூட படிக்க செல்லும் பெண்கள் சதவிகிதம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. 19 % பெண்கள் வன்முறைக்கு ஆளானாலும் 81% பெண்கள் தங்களைக்காத்துக்கொள்ளும் கலையை அறிந்திருக்கிறார்கள். 35% ஆனாலும் கூட உலகெங்கும் ஆண்கள் பாலியியல் சமன்பாட்டை மதிக்க துவங்கி இருக்கிறார்கள். ஆக கூடி கோப்பை நிறைய ஆரம்பித்திருக்கிறது. அது முற்றிலும் நிறைய என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க துவங்க வேண்டும்.

இதுதான் சோசியல் நார்ம் தியரி சொல்லித் தரும் பாடம். பாதிக்கோப்பை நிறைந்த நிலையில் மீதியை நிரப்ப ஒன்று சேருங்கள் என்பதன் தத்துவம். இப்போதுதான் நிறைய துவங்கி இருக்கும் கோப்பையில் நச்சை சேர்ப்பது போல பொறுப்பற்ற தன்மையில் நடப்பதும் பேசுவதும் கூடாது என்பதையும் தங்களை காப்பாற்ற வந்திருக்கும் சட்டங்களை மதித்து அதையும் கவனமாக கையாள்வதையும் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

பாலியியல் சமன்பாடு என்னும் கனவு நிறைவேற இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் என்றாலும், பாதையே இல்லாமல் இருந்து முட்காடாக இருந்த நிலத்தில் இப்போது பாதை ஒன்று புலப்படுவதே கூட நல்ல மாற்றம்தான். நடைப்பயணத்தில் இன்னும் நிறைய பேர் சேர்ந்து கொள்ள முடியும், சேர்ந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கை பூத்திருக்கிறது.

ஒரு சிறுமியின் சுதந்திரத்தை தேடிய கதையை இங்கே கேளுங்கள்.

பாலியியல் சமன்பாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்லும் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே

Un and UNESCO reports linked wherever needed. You can download them.

மணமுறிவும் உதவித் தொகையும் -6
Dec 4th, 2007 by பத்மா அர்விந்த்

உதவித்தொகை ஊதியம், வேலை பார்க்கவும், ஊதியம் பெறவும் ஆன தகுதி, திருமண காலம், குழந்தைகள், மற்றும் திருமண வாழ்க்கையின் போது இருந்த வாழ்க்கத்தரம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும் என்று பார்த்தோம். ஆனால் திருமணத்தின் போது வீடு மற்றும் அட்டைகளில் கடன் இருந்தால் அது எப்படி பிரித்துக்கொள்ளப்படும் என்பதை இப்போது கவனிப்போம்.

கடன்:
வீட்டின் பேரிலோ, வாகனங்களின் பேரிலோ கடன் இருந்தால் அந்த கடன் தீர்ந்தால் யாருக்கு அதன் பலன் கிடைக்குமோ அவர் பெருவாரியான கடனையும் மற்றையவர் எத்தனை காலம் அதனை அனுபவித்தார் என்பதை பொறுத்து குறைவாகவோ கட்ட வேண்டும். வீடு வாங்கும் போது இருவரும் பணியில் இருந்ததால், மனிவியின் கடன் தரம் அதிகமாக இருந்ததால், கடன் வட்டி குறைவாக கிடைக்கும் என்பதால் மனைவியின் பேரில் வீட்டை வாங்கி விட்டு, இப்போது தன் பொருட்களை எடுத்துக் கொண்டு கணவன் வெளியேரிய போதும், அவர் கடனின் ஒரு பாதியை கட்ட வேண்டுமென்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு காரணமாக அவர்கள் திருமண வாழ்க்கை முழுதும் (7 வருடங்கள்) மனைவியே வீட்டின் கடனை கட்டி இருந்திருக்கிறார். கணவன் மற்ற செலவுகளை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் இருந்தும், வழக்கு அதை பற்றியதல்ல என்பதாலும் அவர்களிடையே எந்தவிதமான படிவங்களும், அவர்களுக்கிடையே இருந்த ஒப்பந்தம் பற்றி தெரிவிக்காததாலும், இப்போது மனைவி பணம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாலும், தீர்ப்பளிக்க வேண்டியதாகியது.

வரி: alimony ஆக வழங்கப்படும் பணத்தை ஒருவர் தன் வரிகட்டவேண்டிய ஊதியத்தில் இருந்து குறைத்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தைகளின் நலத்திற்காக, கல்விக்காக தரும் பணம் வரிக்குள்ளாலானது. இதனால் சில சமயம் சில கணவன் மனைவியர் alimonyஐ அதிகரித்தும், குழந்தைகள் ஆதரவுத் தொகையை குறைத்தும் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். இதில் கவனமாக இருக்க வேண்டிய ஒன்று: குழந்தைகள் ஆதரவு நிதி 18 வயதுவரை தந்தால் போதும், ஆனால் alimony காலம் இருவரும் ஒப்புக்கொண்ட காலம். ஆகவே சில வழக்குகளில் இது காலவரையற்று இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு வழக்கில் கணவன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைத்தால் போதும் என்று எண்ணி, மனைவி மறூபடியும் திருமணம் செய்து கொள்ளும் வரை ஆதரவுத்தொகை தருவதாகவும், வருடம் 3% அதிகரிப்பதாகவும் ஒப்புக்கொண்டார். அவர் விவாகரத்து கோரியபோது, மனைவி இன்னொருவரை காதலிப்பதாக மனமார எண்ணினார். மேலும் விவாகரத்து கோரியபோது நல்ல பணியில் இருந்து நிறைய ஊதியம் பெற்றும் வந்தார். மனைவி அதிக பணம் கேட்காமல், சரியான தொகை கேட்டதால், அதிகப்படி 3% அப்படியும் இரண்டு வருடம் தந்தால்ல் போதும் எனூற் நம்பி கையொப்பம் போட்டார். ஆனால், மனைவியோ திருமணமே செய்து கொள்லவில்லை. ஒரு 20 வருடம் கழித்து, கணவன் உடல் நலக்குறைவால் முழுநேரம் பணி செய்ய முடியாமல் போக ஊதியம் குறைந்த போதும் அதில் பெரும் அளவு முன்னாள் மனைவிக்கு போனது.கணாவனின் இரண்டாம் மனவி, அந்த திருமணம் மூலம் பெற்றுக்கோண்ட குழந்தைகள் என்று பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் பல வழக்கறிஞர்கள் ஆலோசனை பெற்றபோதும் ஓய்வும் பெற முடியாமல் திண்டாடுவது பற்றி பலருக்கும் கடிதம் எழுதி ஆலோசனை கேட்டிருந்தார். முடிவில் முன்னாள் மனைவியிடம் பேசி சரி செய்து கொள்வதே சரி என்று முயன்று கொண்டிருக்கிறார்.
எனவே ஒப்பந்தம் எழுதும் போதும், பேசும் போதும் நல்ல வழக்கறிஞர்கள் ஆலோசனை கேட்பது மிக முக்கியம்.

மனைவியையோ அல்லது கணவனையோ படிக்க வைப்பது: சில சமயம் கணவனோ அல்லது மனைவியோ இன்னொருவரை கல்லூரி அல்லது ஏதேனும் தொழில் நுட்பம கற்று தேற, பொருளாதார ரீதியில், தார்மீக ரீதியில் ஆதரவு அளித்திருப்பார்கள். இது அவர்களின் பொருள் ஈட்டும் திறனை அதிகரிக்க உதவி இருக்கும். சில மாநிலங்களில் இவை கவனத்தில் கொள்ளப்படுகிறது. சில மாநிலங்களில் இன்னமும் இது கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றாலும், அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்து ஆதரவு தொகையை குறைக்க முடியும்.

ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு போன்றவை, அதன் பயன் பெறுநர் ஆகியவற்றை மாற்றுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும். சிலர் விவாகரத்து பெற்றபின்னும், வேறு திருமணம் செய்து கொண்டபின்னும் மாற்ற மறாந்து போய்விடுவது உண்டு. இதனால், திடீரென இறந்து போக, அவரது ஆயுள் காப்பீடு அலுவலகத்தில் இருந்து முன்னாள் மனைவிக்கு வழங்கப்பட்டது. அவரின் இரண்டாம் மனைவி வழக்கு தொடர்ந்த போதும், இறந்து போன கணவன் ஏதாவது காரணத்திற்காக மாற்றாமல் இருந்திருக்கலாம் என்று சொல்லி, சட்டப்படி இதை மாற்ற இயலாது என்று சொல்லி விட்டார்கள். அதே போல வேலை பார்க்கும் நிறுவன படிவங்களில் பெயர் மாற்றம் செய்தால் தவிர, எல்லா பலன்களும் முதல் மனைவிக்கே (அவர் பெயர் இருந்தால்) கிடைக்கும்.

alimony கொடுக்க வேண்டுமமென்று சொல்லியும், அதை மாதா மாதம் சரியாக தராதவர்கள் நிறைய. இதில் அதிகம் துன்பப்படுவது வறூமையில் இருக்கும் பெண்களே. இது நீதிமனறத்திற்கு வருமானால், உடனடியாக இதுவரை தர வேண்டிய தொகையும் அதற்கான வட்டியும் சேர்த்து உடனே தர வேண்டும். இல்லை என்றால் சிறை வாசம், ஊதியத்தில் இருந்தே பிடித்தம் என்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.

மாதாந்திர உதவித் தொகை எத்தனை பேர் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் குறிக்கும் அட்டவணை கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது. Alimony2002 பிறகு உதவி தொகை பெறும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதற்கான புள்ளியியல் விவரங்கள் அதிகம் இல்லை என்றாலும் இந்த சுட்டி மேலும் பல விவரங்களைத் தரும்.

விவாகரத்திற்கு பிறகு மறுமணம் நடந்தபின்னும் உதவித்தொகை தர வேண்டுமா, நிறுத்தலாமா என்பது போன்றவற்றிற்கு நீதிமன்றத்தில் பதிந்து முந்தைய தீர்ப்பை மாற்றிக்கொள்ள முடியும். அதே போல, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இன்னும் உதவித்தொகை தேவை என்றாலும் மாற்றத்தை கோரமுடியும்.

தனக்கான உதவித் தொகை வேண்டாம் என்று மறுத்தாலும், குழந்தையின் கல்வி, வளார்ப்பு ஆகியவற்றிற்கு உதவித் தொகை வழங்கப்படுவதை பெரும்பாலும் நீதிபதிகளும் வரவேற்கிறார்கள். ஏனெனில் குழந்தையின் வளார்ப்பில் தந்தைக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதும் தார்மீக பொறுப்பும் உண்டு என்பதால். ஆனால் இது எந்த அளவிற்கு தரப்படுகிறது, தந்தாலும் மனைவி அல்லது கணாவனால் அபயோகிக்கப்படுகிறது, தந்தயர்கள் ஏன் குழந்தைகளுக்கான நிதி தருவதில் இத்தனை எதிர்ப்பை காட்டுகிறார்கள் என்பதையும் பார்க்கலாம்.

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions