தேன் துளி » உடல் நல கல்வி

மார்பக புற்றுநோய்- Education, Early Detection
அக்டோபர் மாதம் உலக அளவில் மார்பக புற்று நோய் தடுப்பு மாதமாக பரிந்துரைக்க படுகிறது. முன்காலத்தில் ஆசிய பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் வந்ததில்லை என்றாலும் பழக்கங்கள், சுற்று புர சூழல் இவற்றின் மாற்றத்தால் இப்போது அதிகம் பரவலாக காணப்படுகிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவது அவசியம். இது மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். இன்று நான் மார்பக நிழல் படத்தின் முக்கியத்தைப் பற்றி பேசப் போகிறேன். நீங்களோ, உங்கள் மருத்துவரோ அறியும் முன்னே மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளைக் கண்டறிய உதவுகிறது.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நிழல் படம் எடுத்துக்கொண்டு உங்களைக் காப்பற்றுவதோடு, உங்கள் சகோதரி, அன்னை, உறவினர் அனைவருக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் நோயிலிருந்து பாதுகாக்க உதவுங்கள். ஆண்களுக்கும் மார்பக புற்று நோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்கு நிழல் படம் அவசியம் இல்லை என்று எண்ணாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவது அவசியம். மார்பக நிழற்படம் எடுப்பதை குறித்து பல வேறு கருத்துக்கள் இருந்தாலும் அமெரிக்காவின் நோய்கள் தடுக்கும் நிறுவனம் இதை பின்பற்றுகிறது.

வயதாக, வயதாக இது அவசியம். இரண்டு வருடத்திற்கொருமுறை, நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவதும், மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுவதும் அவசியம். இதனால் மார்பகப் புற்றுநோய் மூலமாக வரும் இறப்பு விகிதம் குறையும். உணவு பழக்கங்கள், வாழும் சூழல் , காற்றில் உள்ள மாசு இவற்றினால் மார்பக புற்று நோய் வர வாய்ப்பு இருக்கிறது.

இங்கே மார்பக நிழல் படம் எடுக்கத் தயாராகச் சில குறிப்புகள் தருகிறேன்.

உங்களுக்கு மாதவிலக்கு இருக்குமானால், உங்களுடைய பரிசோதனையை சற்று தள்ளி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது மார்பகங்கள் சற்றே கடினமாக இருக்கும். அதனால், வலி இருக்க கூடும்.

பரிசோதனை அன்று, அழகுப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். எந்தவித வாசனைத் திரவியங்களையும் பயன் படுத்தாதீர்கள். இவை, நிழல் படத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணும். மிக எளிதாக ஆடை மாற்ற வசதியாக உடை அணிய வேண்டும்.

உங்களுடைய மருத்துவரின் முகவரியும், தொலைபேசியின் எண்ணும், முன்பு செய்துகொண்ட பரிசோதனை முடிவுகளும் கொண்டு வருவது அவசியம்.

மார்பக நிழல் படம் எடுக்க சில நிமிடங்களே ஆகும். இது மிக எளிது.

நீங்கள் ஒரு கதிர் வீச்சு கருவியின் முன் நிறுத்தப்படுவீர்கள். உங்கள் மார்பகம் ஒரு தட்டில் வைக்கப்படும். அதன் மேல் இன்னும் ஒரு தட்டு வைத்து மார்பகத்தை சற்றே அழுத்துவார்கள்.

ஒரு சில மணித்துளிகளுக்கு உங்கள் மார்பகம் தட்டையாக இருக்க வேண்டுவது அவசியம். ஏனெனில் அப்போதுதான் கட்டிகளையும், மற்ற மாற்றங்களையும் அறிய முடியும்.

நிழல் படம் எடுக்கும் நபர் உங்கள் மார்பகங்களை இரண்டு படங்கள் எடுப்பார். ஒன்று பக்கவாட்டிலும், மற்றொன்று மேல்வாட்டிலும். நிழல் படங்கள் ஒரு மருத்துவரிடம் கொடுக்கப்படும். அவர் உங்கள் படங்களில் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா என்று பரிசோதிதுவிட்டு உங்களைத் தொடர்பு கொள்வார். நீங்கள் ஒரு வாரத்திற்குள் அழைக்கப் படவில்லையெனில், மருத்துவரைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

மார்பக நிழல் படங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று நோய்களைக் கண்டறியவும், மற்றொன்று வடிகட்டுவதற்கும் பயன்படுகிறது. நாம் முதலில் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் நிழல் படம் எடுப்பதைப் பற்றி அறிவோம்.

இவ்வகையான நிழல்படம் எடுக்க, மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிந்துரை  செய்யப்படுகிறாள். இது மார்பகத்தின் அளவிலோ, தோலின் நிறத்திலோ, தடிமன் சற்றே அதிகறித்தாலோ, மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வடிந்தாலோ நோய்க்கான அறிகுறிகளாகக் கொள்ளப்படும்.

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால், அவசியும் மருத்துவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் அணுக வேண்டும். இந்த அறிகுறிகள் சிலசமயம் புற்று நோயில் முடிவதில்லை. ஆனாலும் பரிசோதித்து அறியவேண்டியது முக்கியம்.

இன்று நாம் இந்த வகை அறிகுறிகள் இல்லாத, வடிகட்டுதலுக்கான நிழல் படம் பற்றிப் பேசுவோம்.

மார்பக நிழல் படம் எடுக்க ஆகும்  செலவு:

வடிகட்டுவதற்காக நிழல் படம் எடுக்க $150 ஆகும்.

இவை தனியார் இன்சுரன்சு அல்லது  மெடிக்கர் மூலம் கட்டப்படும்.

சில இனவழி சங்கங்கள், நிகழ்ச்சிகள் இவை இலவசமாக செய்து தருவார்கள்.

உங்கள் மருத்துவரை அணுகுங்கள்:

எப்போது நீங்கள் மார்பக நிழல் படம் எடுத்துக்  கொள்ள வேண்டும் என்பதையும், எவ்வளவு மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக்காள்ள வேண்டும் என்பதயும் மருத்துவரிடம் கேட்கவும். பிறகு ஒரு அட்டவனை செய்து  கொள்ளவும், அதனை வாழ்நாள் முழுவதும் பயன் படுத்தவும்.

இன்று எல்லா பரிசோதனை நிலையங்களும் உணவு மற்றும் மருந்துகள் அனுமதிக்குழுவிடம் இருந்து அணுமதி  பெறவேண்டும். இதனால் அவற்றின் தரம், கருவிகளின் நிலை, அங்கு வேலை செய்யும் மனிதர்களின்  செயல் திறன், அவர்கள் வைத்து இருக்கும் படிவங்கள் ஆகியவற்றிற்கு உத்திரவாதம் தர இயலும்.

அமெரிக்காவில் உள்ளவர்கள் 1-800-4-CANCER அழைத்து உங்கள் வீட்டுக்கருகே இருக்கும் பரிசோதனை நிலையம் பற்றி அறிந்து  கொள்ளுங்கள்.

காத்திருக்காமல் இன்றே மருத்துவர்களை அணுகுங்கள். ஆண்கள் தங்கள் மனிவி, சகோதரி மற்றும் அன்னையருக்கும் சொல்லுங்கள்.

மார்பக புற்று நோய் தடுக்கவல்ல காய்கறி : ப்ராக்கோலி எனப்படும் பூவகை. இதில் உள்ள இண்டோல் 3 கார்பினால் என்பது மார்பக புற்றுநோய்க்கு காரணமான ஜீன் அதிக அளவில் வீரியம் இல்லாததாக மாற்றுகிறது. எனவே வாரம் ஒருமுறை பிராக்கோலி சேர்த்து கொள்ளுங்கள். பிராக்கோலியில் நீர் அதிக உள்ளதால் இது எடை குறையவும் பயனாகிறது.இக்கட்டுரை முன்பே தமிழோவியத்திற்காக எழுதியது. மேலும் விரிவான ஆங்கில கட்டுரைக்கு இங்கே சுட்டுங்கள்.

தண்ணீர்
அமெரிக்காவில் வசந்தம்/கோடை தொடங்கிவிட்டதால் எங்கும் சிறுவர்கள் விளையாட்டும், உடற்பயிற்சிக்காக ஓடுபவர்கள், நடப்பவர்கள் என்று வாழ்க்கை சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டது.பூத்துக்குலுங்கும் செடிகளும் மரங்களும் கூவி பாடும் பறவைகளுமாய் வாழ்க்கையின் இனிமைக்காலம் இது. பசுமையான புல்வெளியும் பூக்கள் நிறைந்து வாசனையுடன் கூடிய தோட்டமும் வீட்டிற்கும் ஒரு அழகைத்தந்திருக்கிறது. உடல் இயக்கங்கள் அதிகரிக்க நீர் பருகும் தேவை அதிகமாகிவிட்டது.

ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அலவும் குறைவாக இருக்கும். ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன் கிட்டதட்ட 10 காலன் தண்ணீர் இருக்கிறது. அதில் 7 காலன் செல்களில் இருக்கிறது, இன்னும் இரண்டு காலன் திசுக்களிலும் ஒரு காலன் இரத்தத்திலும் இருக்கிறது. தண்ணீர் உடலில் ஒவ்வொரு பாகமும் சரிவர இயங்க காரணம் எனவே தேவையான அ ளவு இருக்கும் வரை உடலினுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

தண்ணீர் இழக்கும் அளவு அருந்த வேண்டியது அவசியம். இல்லை எனில் தண்ணீர் இழப்பு (dehydaration) ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கும் உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறாமலும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 8 கோப்பை தண்ணீர் அருந்துவது மிக அவசியம். அதிக அளவில் அருந்துவதால் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீரகங்கள் அவற்றை சிறுநீராக்கி வெளியேற்றிவிடும். எனவே அதிக தண்ணீர் குடிப்பதை பழகிக்கொள்ள வேண்டும்.

உடலுக்கு தண்ணீர் அருந்துவதாலும் சில உணவுப்பொருட்களை செரிக்கும் போது உப பொருளாக உற்பத்தியாவதாலும் கிடைக்கிறது. அதிக உடல் பயிற்சியின் போதும் வெளியே வெப்ப நிலை அதிகம் இருக்கும் போது தண்ணீர் வியர்வையாய் உப்புடன் சேர்ந்து வெளியேறுகிறது. வியர்வை ஆவியாகி வெளியேறும்போது உடலின் வெப்பத்தை உபயோகிப்பதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. அதே சமயம் குளிர் அதிகம் இருக்கும் போது சிறுநீராக அதிக அளவில் வெளியேறுகிறது. அதிக அளவில் வாந்தி எடுத்ததலும் வயிற்று போக்கு ஏற்பட்டாலும் தண்ணீர் வெளியேறுவதால் உடனே நிறைய நீர் குடிக்க வேண்டியது அவசியமாகிறது.

சோடியம் பொட்டாசியம் போன்ற சில மிக முக்கியமான தனிமங்கள் நீருடன் சேர்ந்து வெளியேறுவதால் இவை உடலின் அமில காரத்தன்மை மற்றும் நீரின் அளவை சரியாக வைத்திருக்க அதிக நீர் அருந்துவது அவசியமாகும். உடலும் இந்த மின்ணுக்களின் அளவை சரியாக்கி கொள்ள மிகவும் உழைக்கிறது. உதாரணமாக அதிக சோடியம் மின்னணு உடலில் சேர்ந்துவிட்டால், உடனே தாகம் எடுத்து நாம் நீர் அருந்தி அதை சரிப்படுத்துவோம். உடனே மூளை சிறுநீரகத்திற்கு ஒரு செய்தி அனுப்பி, சிறுநீர் வெளியேறுவது குறைந்து சோடியம் அளவு  சரியாகிவிடும். சோடியம் அளவு குறைவாக இருந்தால், சிறுநீர் அதிகமாக வெளியேறி இரத்ததில் நீரின் அளவைக் குறைந்து, சோடியம் அளவை  சரிப்படுத்துகிறது. தாகம் எடுப்பது உடலின் நீர் அளவு குறைந்திருப்பதைக்காட்டுகிறது. அதேபோல பிட்யூட்டரி என்ற உறுப்பும், சிறுநீரகமும் தண்ணீர் மின்னணுக்கள் அளவை சரியாக அவைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

உடலில் தண்ணீர் அளவு குறையும் போது மூளை வாசோப்பெரெஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது சிறுநீரகங்கள் அதிக சிறுநீர் வெளியேற்றுவதை தடுக்கிறது. உடலில் தண்ணீர் குறையும் போது திசுக்களில் உள்ள தண்ணீர் செல் சவ்வுகளில் இருந்து வெளியேறி இரத்தத்தில் கலக்கிறது. தண்ணீர் அளவு அதிகமாகும் போது இரத்ததில் இருந்து திசுக்களுக்கு உள்ளே சென்று தண்ணீர் அளவை கட்டுப்படுத்துகிறது.

சில சமயம் அல்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் சரிவர சுரக்காமல் போகும் போது தண்ணீர் வெளியேறி மனிதன் இறக்கும் நிலை கூட வரலாம். இதற்கு நீரிழிவு இன்ஸிபெடஸ் என்ற பெயர்.

மிக சிறிய கைக்குழந்தைகள், அதிலும் பிரசவ காலத்திற்கு முன்னே பிறந்தவர்கள், வயதானவர்கள்  நீர் சரிசம நிலையில் வைத்திருக்க முடியாமல் சங்கடப்படுவார்கள். அதே சமயம் மருத்துவமனையில் இரத்த சிறைகள் மூலமாக நீர் செலுத்தினால் அதிக நீர் சேர்ந்து பிரச்சினை வரும். எனவே வீட்டிலேயே கொஞ்சம் கொஞ்சமாக நீர் அருந்துவது அவசியமாகும்.

வயதானவர்கள் தண்ணீர் இழக்கும் போது குழப்பம், தெளிவின்மை போன்றவற்றிற்கு ஆளாவதால் தனியாக கோடை காலங்களில் வெளியே செல்லும் போது கவனம் தேவை. தாகம் எடுப்பதை உணரக்கூட முடியாமல் வயதாக வயதாக திண்டாட நேரிடும். எனவே அவர்களை பார்த்துக்கொள்பவர்கள் பார்த்து நீர் தருவது அவசியமாகும். தாகம் எடுப்பதை உணர முடியாமல் தண்ணீர் அளவு குறைந்து போய் இவர்கள் கஷ்டப்படலாம். அப்போது சிறுநீர் வெளியேறுவது குறைந்துவிடும் எனவே சிறுநீரக கற்கள் உண்டாகும் சாத்தியம் அதிகமாகிறது. வியர்ப்பது குறைந்து சோடியம், யூரியா போன்றவை உடலிலேயே தங்கிவிடும். இன்னும் அதிக நீர் இழப்பு இருந்தால் திசுக்கள் சுருங்கி சரிவர வேலை செய்யாது. மூளை இதயம் சிறுநீரகங்கள் சரிவர வேலை செய்ய இயலாது. எல்லா உறுப்புகளும் ஒருவித அதிர்ச்சிக்கு உட்பட்டு இறக்க நேரிடும். அதிக கோடை காலம், உடற்பயிற்சி போன்ற சமயங்களில் தண்ணீர் அருந்துவது மிக முக்கியம். தண்ணீர் அருந்தி உடலை மென்மையாக வைத்திருப்பது எளிதானது. அதேபோல நீரின் அளாவு அதிகமாகும் போதும் சோடியம் பொட்டாஸியம் போன்ற மின்னணுக்கள் அளவு குறைந்து இரத்தம் நீர்த்து போய் பிரச்சினைகள் வருகின்றன. திசுக்கள் நீர் அதிகம் கொண்டு சரிவர வேலை செய்வதில்லை. இந்த பிரச்சினைகள் சிறுநீரக குறைபாட்டால் ஏற்படலாம்.

அதிக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இருப்பவர்கள் அதேபோல நீர் அருந்துவதும் முக்கியம். மருந்துகளில் தேவை இல்லாத வேதிப்பொருட்களை கல்லீரல் நீரில் கரைத்தே வெளியேற்றுகிறது.

நீர் அருந்தும் போது அதை காப்பி, தேநீர், கோக், பெப்ஸி போன்ற குளிர்/சூடான பானங்களால் நிரப்ப நினைத்தால் அது தவறானது. தேநீர் காப்பி போன்ற பானங்கள் சிறுநீர் வெளியேற உதவுவதால், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில்லை. மென்பானங்களோ அதில் உள்ள பாஸ்பாரிக் அமிலத்தால் எலும்புகள், பற்களை கரைக்கிறது. அதில் உள்ள சர்க்கரை உடலின் எடையை கூட்டுவதோடு இன்னும் சில நோய்களை தரவல்லது. தண்ணீருக்கு நிகர் எதுவும் இல்லை !!

ஒரு நாளைக்கு தேவையான நீரை எப்படி அருதுவது என்பதற்கு மருத்துவர்கள் ஒரு எளிய வழி சொல்கிறார்கள். காலை உணவுக்கு முன் ஒரு கோப்பை, காலை உணவு உண்ட 2 மணி கழித்து ஒரு கோப்பை, மதிய உணவிற்கு அரை மணி முன் ஒரு கோப்பை, மதிய உணவு உண்ட 2 மணி கழித்து ஒரு கோப்பை, இரவு உணவிற்கு அரை மணி முன் ஒரு கோப்பையும் இரவு உணவு உண்ட ஒரு மணி கழித்து ஒரு கோப்பை என்றும் பழகிக்கொள்ளலாம். அதிக நீர் அருந்துவது தோலை வறட்சியாக்காமல் இருக்கவும் உதவும்.

குழந்தைகள் முன்னிலையில் புகைபிடிப்பதை நிறுத்துவது எப்படி
ஒருவர் புகை பிடிக்கும் போது அதிலிருந்தும், புகைப்பவரின் சுவாச காற்றிலும் இருந்த்து வெளிப்படும் புகை second hand smoke என்று அழைக்க படுகிறது. இதன் விளைவால் வருடத்திற்கு 150,000 குழந்தைகள் முற்றிய நுரையீரல் நோயால் பாதிக்கப் படுவதோடு ஆண்டொன்றுக்கு 3000 குழந்தைகள்  இறக்கிறார்கள். உலகளவில் இது இன்னமும் அதிர்ச்சியூட்டும் எண்களைத்தரலாம்.

புகைபிடிப்பவரின் அருகில் இருப்போருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இவர்களியும் மருத்துவ உலகு  passive smokers என்றே அழைக்கிறது.

சிகரெட் புகையில் 4000 விதமான புற்று நோய், மற்றும் வெகு துன்பம் தரக் கூடிய உடல் நலனுக்கு பாதகம்  விளைவிக்கை கூடிய வேதி பொருட்கள் கலந்திருக்கின்றன.

அடிக்கடி காது வலி, ஆஸ்த்மா எனப்படும் மூச்சிழுப்பு, பொதுவான அலர்ஜி, இருமல், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது.

கருவுற்ற பெண்மணியின் அருகில் புகை பிடிப்பதால், வருடத்திற்கு அமெரிக்காவில் 18,600 குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்கின்றன. 300000 குழந்தைகளுக்கு இருமலும்,  bronchitis உம் வருகின்றது. 1.6 மில்லியன் குழந்தைகள் காதில் கிருமிகள் வளர்வதால், காது வலியும் சீழும் ஏற்படிகிறது. வெளியே பால்கனியில் புகை பிடித்தாலும், கார் கராஜில் பிடித்தாலும் உள்ளே வந்த 5 மணித்துளிகளில் புகைப்பவரின் சுவாசத்திலிருந்து இந்த வேதி பொருட்கள் வெளிப்படுகிண்றன. என்னுடைய மகன் சென்று வந்த காப்பகத்தில் ஒரு பெண் வெளியே சென்று புகைத்து விட்டு வரும் பழக்கம் உடையவர். அவர் வந்து முத்தமிடுகின்ற நாட்களில் என் மகனின் கன்னங்களில் சிவந்திருக்கும். இதை கவனித்து வந்து காப்பகத்தில் புகார் கொடுத்து பிறகு புகைத்த பின் அவர் குழந்தைகளுடன் இருப்பதை நிறுத்தினார்கள். இப்போதெல்லாம் இங்கு குழந்தைகள் காப்பகத்தில் புகைப்பது குற்றம். சட்டப்படி அது தடை செய்யப்பட்டு விட்டது. இதை விட காரில் நெடுந்தூரம் பயணிப்பவர்கள் புகைக்கும் போது பின் இருக்கையில் உள்ள குழந்தை அந்த காற்றை சுவாசிக்க நேருகிறது.

இதை எப்படி குறைப்பது என்பதை சென்ற HBM 6 நிலைகளில் கவனிப்போம்.

1. மனதில் தோன்றும் எண்ணம் :  புகை பிடிப்பது தவிர எத்தனையோ பழக்கங்கள் இருந்தாலும் இது ஒரு stigma ஆகிவிட்டது. எந்த நோய் வந்தாலும் இதுவே கரணம் என்று சொல்வது ஊடகங்களுக்கும் பழகிப்போய்விட்டது. நான் வீட்டிற்கு வெளியேதான் புகை படிக்கிறேன். குழந்தைக்கு உடம்பிற்கு வந்ததற்கு வேறுகாரணம் இருக்ககூடும் என புகைபிடிப்பவர் மனதில் சமாதானமாக எண்ணங்கள் தோன்றும்.

2. நோயின் தீவிரம் குறித்து எண்ணங்கள் :  ஒருவேளை குழந்தையை காரில் அழைத்து செல்லும் போது புகைபிடிப்பது காரணமாக இருக்கலாம். நம்மால் குழந்தைக்கு காதுவலி வந்து ஏன் அவஸ்தைபடவேண்டும்? ஒரு வேளை அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். மருத்துவரிடம் பேச வேண்டும் என்பது போன்ற எண்ணங்கள் மனதில் ஹோன்றும். புகைபிடிப்பதன் மீது அதிக தீவிரம் இருந்தால் முந்தைய எண்ணம் வெற்றி பெற்று நிறுத்துவதற்கான முயற்சிகலை தடை செய்யும்.

3. நன்மைகள் :  புகைப்பதை நிறுத்திவிட்டால் நமக்குமே உடலுக்கு நல்லது அதிகமாக களைப்பாகாமல் இருக்கும். இதனால் தினம் செலவாகும் $5ம் மிச்சம். குழந்தைக்காகவாவது புகைப்பதை நிறுத்திவிடவேண்டும்.

இதைப்போல நன்மைகளை எடுத்து சொல்வதும் மீண்டும் அந்த நன்மைகளை வலியுறுத்துவதும் நல்ல மாறுதலை ஏற்படுத்தும்.

4. செயல்படுத்த தோன்றும் தடங்கல்கள் :  ஒரு சிகரெட்ட்டுக்காக வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டும். குளிர்காலத்தில் அத்தனை உடைகளையும் பொட்டுகொண்டு வெளியே போய் ஒரு சிகரெட் பிடிப்பது நடக்காத காரியம். வெளியூருக்கு போகும் போது போக்குவரத்து நெரிசலில் மாட்டிகொண்டு தவிக்கும் போது ஒரு சிகரெட் இருந்தால் பரவாயில்லை. இந்த குழந்தைக்காக எப்படி வெளியே புகை பிடிக்க முடியும். நாம் நிறுத்தினாலும் வெளியிடத்தில் மற்றவர்கள் புகைக்காமலா போய்விடுவார்கள். இந்த ஒரு சிகரெட்டால் என்ன வந்துவிடப்போகிறது போன்ற நினைப்புகளும் சமாதானங்களும் தோன்றும்.

5. செயல்படுத்த தூண்டுபவை :  புகைபடிப்பதை முழுதுமாக நிறுத்தாவிட்டால் என்ன. குறைந்தபட்சம் குழந்தைக்காக காரில், வீட்டினுள் நிறுத்தினால் குழந்தை நலமாவது மிஞ்சும். பாவம் ஒவ்வொருமுறை காது வலியும், இருமலும் வரும் போது என்னமாய் கஷ்டப்படுகிறது. இனிமேல் அடைந்த இடத்துள் புகைபிடிக்க மாட்டேன் என்பன போன்ற எண்ணங்கள் ஏற்படுவதும் அவ்வாறு ஏற்படுமாறு நண்பர்களோ துணைவி துணைவரோ பேசுவதும் ஊக்குவிப்பதும் நலம் பயக்கும். இதுபோல செய்வது பிறகு நாளாவட்டத்தில் புகைப்பதையே முழுதுமாக நிறுத்த வழிவகுக்கும்.

6. இதை தடுக்க காரில், வீட்டில் புகைக்காதீர்கள். புகைப்பதை நிறுத்துவது மிகவும் நல்லது. முடியாதவர்கள் குறைந்த அளவில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்ளுவது சிறந்தது. புகைப்பவர் அருகில் குழந்தைகளை இருக்க விடாதீர்கள்.

குழந்தைகளின் உடல் நலன் அவர்களின் வளர்ச்சிக்கு அடிப்படை.

இக்கட்டுரை தமிழோவியத்தில் முன்னர் வெளியானது.

உடல் நலத்தை மாற்றும் செய்முறைகளின் அடிப்படை மாதிரி (Health belief Model – HBM)
கிட்டதட்ட 50 வருடங்களாக பழக்கத்திலிருக்கும் HBM  இன்று பெரும்பாலான மனநல  மருத்துவர்கள் மற்றும் உடல் நலம் பற்றி சொல்லித்தரும் ஆர்வலர்களால் பயன் படுத்தப்படுகிறது. இதன் நல்லதும் அல்லதும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு இப்போது ஒரு நல்ல முன் மாதிரியாக செயல்படுகிறது.

1950 இல் உளவியல் வல்லுனர்களால் இந்த செயல் முறையும் திட்டமும் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது.மக்கள் நோயை தடுக்க வரும் திட்டங்களில் ஏன் அதிக அளவில் பங்கு பெற வரவில்லை என்பதை ஆராய மேற்கொண்ட முயற்சியின் விளைவே இந்த கருத்தும் மாதிரியும்.

உளவியல் வல்லுனர்கள் முதலில் மனிதனுக்கு புதிய ஒரு தொழில் நுட்பம் பற்றி அறியாமையால் ஏற்படும் ஒருவித தயக்கமே மருத்துவ துறையின் புதிய பரிசோதனைகளுக்கு உள்ளாவதை தடுக்கிறது என்று கூறினர். இது இன்னமும் உண்மையாகும். ஒரு கருவி வாங்கும் முன் அதன் பலன்கள், உபயோகிக்க எளிதானதா, அதிக நாட்கள் வருமா, நம்மால் உபயோகிக்க முடியுமா, கொடுத்த பணத்திற்கு ஈடானதா என்றெல்லாம் நாம் மன தினுள்ளேயே ஆராய்வதும், பின் அதிக அளவில் பயன் படுதிய பின் மற்றவருக்கு சொல்வதை போல, உடல் நல  பழக்கங்களிலும் தயக்கம் ஏற்பட அறியாமையே காரணம் என்கிறார் வாட்சன் மற்றும் ஹில்ல.

இதையே இன்னும் ஒருபடி மேலே போய், ஒரு பழக்கத்தால் வரும் நன்மைகளை எடுத்து சொன்னால், கற்றுக் கொள்ள இருக்கும் ஆரம்ப பயம் போய்விடும், மக்கள் இன்னமும் அதிக ஆர்வத்துடன் கற்று கொள்வார்கள் என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்த உளவியல் வல்லுனர்கள் கூறினர். மார்பக புற்றுநோய் வரும் அறிகுறி தெரியும் முன்னே நிழல்படம் எடுத்துக்கொண்டோமானால் (Mammography), புற்று நோய் வருவதை தவிர்க்க முடியும் என்பது விளங்கினால், புற்று நோய் வந்தால் அனுபவிக்கக்கூடிய  துன்பங்களை ஒற்று நோக்கில், நிழற்படம் எடுக்கும் போது தெரியும் வலியும் துன்பமும் மிக குறைவு என்பதும் புரிந்தால் பெருவாரியான பெண்கள் தங்களை இப்பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வர்.

இதைத்தான் HBM சொல்கிறது. இது அடிப்படையில் பலன்களை எதிர்பார்த்து செயல் புரியும் மனித மனத்தின் விருப்பத்தை அடிப்படையாக கொண்டது.

1. உடல் நலக்குறைவு ஏற்படாதிருத்தல் (பலன்)

2. ஒரு பழக்கம் இந்த நோய் வராமல் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை (எதிர்பார்ப்பு) ஆரம்ப காலத்தில் மக்களை நோய் தடுக்க நிழல் படம் எடுக்க ஊக்கம் தர பயன் பட்ட இந்த நிலைப்பாட்டை,  காலப்போக்கில் நோய்வாய்ப்படும் போதான பழக்கங்கள், திருந்துகின்ற முறைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ஊக்கப்படுத்த, அலுவலகத்தில் வேலை செய்வோரை மேலும் உற்சாகப்படுத்த என்று எண்ணற்ற முறைகளில் பயன் படுத்த துவங்கியிருக்கிறார்கள்.

இந்நிலைப்பாடு 6 படிகளை கொண்டது.

1. மனதில் தோன்றும் எண்ணங்கள்: ஒரு மனிதன் தனக்கு நோய் வருமோ என்று மனதில் நினைப்பது. உதாரணமாக நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஒருவன் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களை பார்த்துவிட்டு அது போல தனக்கும் உடல் நலம் குன்றுமோ என்று எண்ணுவது.  ஒருவனுக்கு நுரையீரலில் புற்றுநோய் வருவதாக பார்த்துவிட்டு , தானும் புகை பிடிப்பதால் தனக்கும் வருமோ என்று எண்ணி பயப்படுவது. விளம்பரத்தின் உத்தியே புகை பிடிப்பவர்களை பயமுறுத்தி அவர்களை அப்பழக்கத்தை விட்டுவிட தூண்டுவதுதான். மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்வது, தன்னுடைய உடல் நலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்கொள்ளுதல் போன்ற செயல்களில் இந்த சலனம் ஈடுபடுத்தும்.

2. நோயின் தீவிரம் குறித்தான எண்ணங்கள்: ஆரம்ப நிலையில் அடிக்கடி இருமலோ, காய்ச்சலோ வருமாயின், மருத்துவர் மிகவும் ஆபத்தாக எதுவும் இல்லை என்று சொன்னாலும் மனம் நிம்மதியாய் இராமல், இணையத்தில் நோய் பற்றிய குறிப்புகளை படிக்கவோ, அல்லது புகைப்பதால் வரும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்ளவோ தூண்டும். இது நோயின் தீவிரத்தை பற்றிய கருத்துக்களை மனதில் தோற்றுவிக்கும். தன  க்கு நோய் வந்து இறந்து விட்டால் தன் குழந்தைகள், மனைவி எப்படி துன்பப்படுவார்கள் என்றெல்லாம் அச்சப்பட ஆரம்பிக்கும் போது நோயின் தீவரம் குறித்தான எண்ணங்கள் ஒருவித அச்சுறுத்தலாக மாறும்.

3. நன்மைகளை குறித்து மனதில் தோன்றும் எண்ணம்: இப்போது பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் அதை மாற்றுவதால் வரக்கூடிய நன்மைகளை மனம் எண்ணிப்பார்க்க ஆரம்பிக்கிறது. நன்மை தீமைகளை கணக்கிடவும் செய்கிறது. புகைப்பதை விட வேண்டும் என்றால் தனக்கு மன உறுதி உண்டா, இதனால் ஒருவித தகைவு ஏற்பட்டு வீட்டில் அல்லது அலுவலகத்தில் எரிச்சலைடைந்து என்னுடைய உறவில் குழப்பம் வருமா, அதிகம் உண்ணத்தோன்றுமா, இதனால் அதிகம் செலவாகுமா, எடை கூடுமா, அந்த நேரத்தில் என்ன செய்யலாம், சிந்திக்கின்றபோது, உணவு உண்டபின் கையில் சிகரெட் வைத்துக் கொண்டு பழக்கமாகி விட்டதே, இப்போது என்ன செய்யலாம் போன்ற பலவும் சிந்தனையில் தோன்றும்.

4. தடங்கல்களாக மனதில் தோன்றுபவை: இங்கே தன்னுடைய பழக்கத்தை மாற்ற ஆகும் செலவு, வேறு பொழுதுபோக்கு வேண்டுமென்றால் அதற்கான நேரம், உடல் நலத்தின் நன்மைகளை மனதில் கொண்டு செய்யவேண்டிய சில செய்கைகள் என்று மனம் எண்ணினாலும் சில தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக இத்தனை நாள் நண்பர்களுடன் அலுவலகத்தி புகை பிடித்து மற்ற விஷயங்களை அலசிக் கொண்டிருந்து விட்டு மறுநால் அதே நண்பர்கள் அழைக்கும் போது உறுதி இன்மை, வேதி பொருள்கள் உடலில் தோற்றுவிக்கும் சலனங்கள், மனதில் தோன்றும் குழப்பங்கள் போன்றவை தடங்கல்களாக இருக்கும்.

5. செயல்பட வேண்டிய குறிப்புகள் (cues to Action): பழக்கத்தை மாற்ற வேண்டிய சில குறிப்புகளை அறிந்து கொள்ளுதல், புகைப்பதை நிறுத்தும் போது எப்படி இருக்கும் என்ன தோன்றும் போன்ற சில முன்னெச்சரிக்கைகள், ஏற்கென  வே நிறுத்தியவர்கள் என்ன முறையை கையாண்டார்கள் போன்ற அனுபவ குறிப்புகள் உதவும். இங்கே ஊடகங்களும் ஒருவகையில் மக்களுக்கு தேவையான குறிப்புகளை தருகின்றன.

6. தன்னம்பிக்கையும் தன்னால் முடியும் என்ற சுய எண்ணமும்: தன்னால் முடியுமா என்ற அவநம்பிக்கை வரும் போதெல்லாம் ஊக்குவிக்கவும் உதவி செய்யவௌம் நண்பர்கள் துணை அவசிய வேண்டும். புகை பிடிப்பதை ஒரு வாரம் நிறுத்திவிட்டு மீண்டும் நிறைய பேர் உடனே துவக்குவதற்கு வேதிபொருட்களின் தூண்டுதலுக்கு பழகிய மனம் அதிலிருந்து விடுபட மறுப்பதுதான்.

குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் வழிமுறைகள்
குழந்தைகள் இரண்டு வயது முதற்கொண்டு நாம் சொல்வதை புரிந்து கொள்ளவும் சிந்திக்கவும் ஆரம்பிக்கிறது. அழுகின்ற போதெல்லாம் அம்மாவின் கவனிப்பு கிடைக்கும் என  தெரிந்தால் கீழே விட்டவுடனே அழும். அழட்டும் என்று சில நிமிடங்கள் விட்டு விட்டால், அழுகையை நிறுத்திவிட்டு தான்பாட்டுக்கு விளையாட ஆரம்பித்துவிடும். அதேபோல குழந்தைக் காப்பகங்களில் விடும் போது அழும் குழந்தை நீங்கள் நகர்ந்ததும் விளையாடி மகிழ்ச்சி அடையும்.

குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் நேரடியாக பலன்களை சொல்ல வேண்டும். உதாரணமாய் வேலை செய்ய விடாமல் தொணதொணக்கும் குழந்தையிடம், அம்மா வேலை முடிக்கும்வரை அமைதியாய் இருந்தால் நாம் இருவரும் 1 மணி விளையாடலாம். இப்படி பண்ணினால் வேலையும் முடியாது, விளையாடவும் முடியாது என்று சொல்லி பாருங்கள். இரண்டு குழந்தைகள் இருக்கும் போது, எல்லா அன்பும் தனது தம்பி/தங்கைக்கே கிடைக்கிறது என்று உணரும் குழந்தை, தனது தம்பியை தொல்லை படுத்த ஆரம்பிக்கிறான்/ள். அப்போது தொடாதே என்று நீங்கள் கூறினால் அது நேர்மறையான வினையை துவக்குகிறது. கடிந்து கொண்டாலும் கவனிப்பு கிடைப்பதால் அதை மேலும் மேலும் செய்ய, உங்கள் கோபம் அதிகமாகி அடித்து வருத்தத்தை விளைவிக்கிறீர்கள். இதற்கு மாறாக, தங்கை/தம்பி பிறக்கும் முன்னேயே மூத்த குழந்தையையும் ஈடுபடுத்தினால், அதன் பின்னும் துணைக்கு அழைத்து பேசினால் அன்பும் வளரும், மனமும் அமைதியுறும்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தானாகவே வீட்டு பாடம் செய்ய, நேரத்தில் கிளம்ப, முந்தைய இரவே எல்லாவற்றையும் எடுத்துவைத்துக் கொள்ளும் போது மனநிலையை பாதிக்காது என்பதை சொல்லி பழக்கப்படுத்த வேண்டும். சின்ன சின்ன கைவேலைகளும் செய்து பழக்க வேண்டும். தனது துணிமணிகளை மடித்து வைத்தல், தனது அறையை சுத்தம் செய்தல், சமையலறையை தூசி துடைத்தல் போன்று வயதுக்கு ஏற்ற வேலைகள்பெண், ஆண் என்று இருபாலாருக்கும் நாம் வேலை செய்யும் போது கூடவே செய்யச் சொன்னால் பின்னாளில் எந்த வேலையையும் செய்ய முடியும். தன்னைவிட சிறிய குழந்தைகளுக்கு உதவி செய்தல், பணிவாக இருத்தல், பெரியோரிடம் அன்புடன் இருத்தல் போன்றவை எந்த வயதுக்கும் ஏற்ற கல்வியே ஆகும்.

சமீபத்தில் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது அவளுடைய 3 வயது மகன் திடீரென வந்து, mommy, I am upset, என்றவுடன் என்ன விஷயம் என்று விசாரித்து பார்த்ததில் இன்னொரு குழந்தை தன்னுடைய விளையாட்டு பொம்மையை மற்ற குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள மறுக்கிறான் என்றான். வயதென்னவோ 3தான். ஆனாலும் நினைத்தை கோர்வையாக, வருந்துகிறேன் என்பதையும் எதனால் வருந்துகிறேன் என்பதையும் சொல்ல அறிந்திருக்கிறது. இந்த பழக்கம் இல்லாமல் போனால், பின்னாளில் அலுவலகக் கோபத்தை அடுத்தவரிடம் காண்பிக்கும் பழக்கம் வரும். கோபம் கொள்வதில் தவறே இல்லை, அதை சரியாக சொல்லவும் செய்யவும் கற்றுத்தர வேண்டும். மனநிலை பயிற்சியாளர்கள் குழந்தைகள் வருந்தும் போது அதை ஒரு காகிதத்தில் எழுதவோ, படம் வரையவோ அல்லது க்ரேயானால் கிறுக்கவோ சொல்கிறார்கள். இது அவர்களுடைய மனநிலையை அறிய உதவும்.

இரண்டு வருடம் முன்பு என் மகனின் பள்ளியில் ஒரு சிறுவன் கையில் மீனுடன் இவனை துரத்த, மீன் வாசம் பிடிக்காத என் மகன் கத்திக்கொண்டே ஒடியிருக்கிறான். அவனின் பயம் ஒரு விளையாட்டாக மாற, அந்த சிறுவன் இன்னும் துரத்தியிருக்கிறான். பள்ளி கவுன்சிலர் இருவரையும் அழைத்து இதை எவ்வாறு தடுத்திருக்கலாம் என்பதை இருவரையும் யோசிக்க சொல்லியிருக்கிறார். என் மகன் அவனிடம் தெளிவாக மீன் எனக்கு பிடிக்காது, ஆகையால் எனக்கு வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் என்று எழுதித்தர, அந்த மாணவன் தான் செய்தது தவறு, ஏன் தவறு என்பதையும், அடுத்தவரின் உணர்ச்சிகளை, விருப்பு வெறுப்புகளை புரிந்து கொள்ளல் வேண்டும் என்றும் உணர்ந்து எழுதித்தந்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள இருவரும் கைகுலுக்கி நண்பர்களாக பிரிந்தனர். இன்னமும் என் மகன் அதை சொல்வது உண்டு. சரி தவறு என்பதை நாமே சொல்வதைவிட, அவர்களை சிந்திக்க சொல்லி ஒரு காகிதத்தில் எழுதவும் சொல்லிப்பாருங்கள். பிறகு உங்கள் கருத்தை  சொன்னால் மனதில் நன்கு படியும்.

திடீரென்று பேசாமல் அமைதியாகும் பதின்ம வயதினரை அவர்கள் உணர்வை மதிக்கவும் பழக வேண்டும். பள்ளியில் உள்ள சக வயதினருடன் ஏதேனும் மனத்தாங்கல்கள் வந்திருக்கலாம், இல்லையெனில் தன் தோற்றம் பற்றிய கருத்தும் கவலையும் வந்திருக்கலாம். பெற்றோரிடம் சொன்னால் தவறாக நினைப்பார்களோ என்ற ஏக்கத்தால் பேசாமல் இருக்கலாம். குழந்தைகள் சொல்வதை கவனமாககேட்பதே முதல் படியாகும். எங்கள் காலத்தில் என்று ஆரம்பித்து கதை சொல்லாமல் அவனுடைய உணர்வுகளை அறிந்து அதற்கேற்றார்போல அரவணைத்து நடக்க வேண்டும்.

சின்ன வயதில் மனதில் வரும் குழப்பமும், காயமும் பின்னாளில் பலத்த விளைவுகளை ஏற்படுத்தும். சக மாணவனுக்கு உடல் நிலை குறைவு என்றாலும் அளவுக்கு மீறி வருந்துகிற குழந்தைகள் உண்டு. பதின்ம வயதினருடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் கழிப்பதுபற்றி நிறைய கையேடுகள் உண்டு. (How to Enjoy Life with a Preadolescent HELP) என்ற கையேடில் பல  அற்புதமான நடைமுறைக்கு உட்பட்ட கருத்துக்கள் உண்டு. இவை peer pressure போன்றவையை சமாளிக்கும் வழிகள் பற்றியும் சொல்கின்றன. குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள்.

அறிவுரைகள் சொல்லும் வழிகள்
சொல்லுதல் யாவர்க்கும் எ ளிய- அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

என்பது போல  நாள் தோறும் நமக்கு கிடைக்கும் அறிவுரைகளுக்கு பஞ்சமே இல்லை. தொட்டதெற்கெல்லாம் வீட்டில், அலுவலகத்தில், நண்பர்களிடத்தில் என்று எல்லோரும் எல்லாவற்றிலும் தங்கள் கருத்தை, அறிவுரையைச் சொல்வதை நீங்கள் கூட அனுபவப்பட்டிருப்பீர்கள். பெரும்பாலான சமயம் நாம் பதின்ம வயதினரை போல நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு என்பது போல நடந்து கொள்கிறோம். அதே அறிவுறை தொடர்ந்து வருமென்றால், ஒருவித கோபத்திற்கு உள்ளாகி மனத்தாங்கல்கள் வருகின்றன. இதற்கு மேலும் என் அறிவுரையை நீ கேட்காவிட்டால், உன்னுடன் பேசுவதில்லை என்பது போல கணவன் மனைவியிடத்து, பெற்றோர்கள் பிள்ளையிடத்து கட்டளைகள் போடும் இடத்தில் இது இன்னும் அடங்காத மனதின் வடிகாலாய், “நான் செய்தே தீருவேன் அதை கேட்க நீ யார்” என்று ஈகோ சண்டையில் போய் முடியும். இதற்காக நாம் அக்கறைபடுபவரிடத்து அறிவுரை கூறக் கூடாது என்றில்லை, அதை ஒரு வித பக்குவத்தோடு சொல்ல வேண்டும் என்கிறார் நியுஜெர்ஸி மருத்துவ, பல் விஞ்ஞான பல்கலை கழக பேராசிரியரும், மன நிலை மருத்துவருமான Dr.Pat Clifford.

உடல் நல  பழக்க வழக்கங்களில் உடல் பயிற்சி, நல்ல உணவு உண்ணுதல் போன்றவற்றில் அறிவுறை கூறுதலும் அதை பயன் படுத்துவதும் எளிது. ஆனால் குடிப்பது, தொலை காட்சி பார்ப்பது, வீடியோ விளையாட்டு விளையாடுவது, புகைப்பது போன்றவைகளில் இது மிகவும் கடினம். இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு, குழந்தை வளர்ப்பை பற்றி எடுத்து சொல்ல சென்ற செவிலித்தாயிடம் அந்த பெண் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக கேள்விப் பட்டு விசாரித்ததில், அளவுக்கதிகமான அறிவுறைகள் கேட்டு கேட்டு அந்த பெண்ணுக்கு தான் செய்வது எதுவுமே சரியில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை வளர்ந்துவிட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில், அந்த செவிலி பெண்ணிடம் கடுமையாக நடக்க இதுவே காரணமாகிவிட்டது. புதிதாக வீட்டிற்கு வந்த மருமகளிடம் மாமியார் அறிவுரை கூற போக, எனக்கென்ன ஒன்றுமே தெரியாதா என்ன என்று மருமகள் மனதில் நினைக்க அதுவே பின்னாளில் பிரச்சினையாக உருவெடுக்கிறது.

அறிவுரை கூறுவது இரண்டு பிரிவுகள் உண்டு.

ஒன்று ஒரு செயலை பற்றிய செய்திகளை மட்டுமே கூறுவது (informative)

உதாரணமாக புகை பிடிப்பதால் வரும் தீமைகள் அதன் விளைவுகள் இதைப் பற்றிய  செய்திகளை மட்டுமே சொல்வது. எதிரிலிருக்கும் புகை படிப்பவரின் செயல்களைப் பற்றி சிறிதும் அதில் சேர்க்காமல். இந்த நடைமுறை குடிப்பவர், புகை பிடிப்பவர், AIDS நோய் உள்ளவர் ஆகியோரிடத்து கடைபிடிக்க வேண்டிய முறை ஆகும். ஏனெனில் சம்பந்த பட்டவரின் நடவடிக்கையை இதில் சேர்த்து குழப்பினோமென்றால், என் விருப்பத்தை குறை கூற நீயும் சேர்ந்து கொண்டாயா என்ற தன்னிரக்கமே மிகும். இங்கே நோயாளியிடம் அறிவுரை கூறுபவர் அந்த துறையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக, ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளும் ஒரே நோக்கம்தான் இருக்க வேண்டும். இந்த முறையில் பழக்கம் எந்தவகை தீமைகளை தரும் என்பதையும் சொல்லி மனதில் பயத்தை விளைவிக்கவும் செய்யலாம்.

மற்றொரு முறையில், அறிவுரை கூறுபவர் ஊக்கம் ஊட்டுபவராகவும் இருத்தல் அவசியம். (persuasive)

ஒரு 55 வயது நீரிழிவு நோய் உள்ளவரிடம் மருத்துவர் அவர் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், இனிப்புகளை சேர்க்க கூடாது, தினமும் தன்னுடைய சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும் என்று எத்தனை முறை சொல்லியும் பயனில்லாமல் போனது. மருத்துவர் ஒரு உடல் நல படிப்பாளியை அணுக அவரால் நோயாளியின் நடவடிக்கைகளை மாற்ற முடிந்தது.  இது எப்படி சாத்தியமானது என்பதற்கு கீழ்க்கண்ட உரையாடலை கவனியுங்கள்:

Health Educator : உங்களுக்கு உலகிலேயே அதிக மகிழ்ச்சியை தரும் ஒன்றை மட்டும் கூறுங்கள்.

நோயாளி: சந்தோஷமாக இருக்க வேண்டும்

Health Educator: உங்களுக்கு எது சந்தோஷம் தரும்

நோயாளி: அலுவலக பணி உயர்வு, பிள்ளைகளுடன் விளையாடுவது, வீட்டில் மனைவியின் உடல் நலம், அமைதி

Health Educator: உங்கள் பிள்ளையுடன் விளையாடுவதுண்டா

நோயாளி: நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுவேன். இப்போதெல்லாம் அவனுக்கு ஈடு கொடுக்க என்னால் முடிவதில்லை. தளர்ச்சி அடைந்துவிடுகிறேன்

Health Educator: எனக்கும் ஒரு மகன் உண்டு. அவன் மனதிற்கு மகிழ்ச்சி தரும் படிப்பு படித்து நல்ல நிலையில் இருப்பதைக்காண எனக்கு மிகவும் ஆசை. உங்களுக்கும் அப்படிப்பட்ட கனவுகள் உண்டுதானே ?

நோயாளி: என்னுடைய மகன் கல்லூரியில் படித்து முடித்து நல்ல நிலையில் வாழ்வதை பார்த்தல் (குழந்தைகள் உள்ள பெரும்பான்மையான பெற்றோர் தரும் கருத்து) என்னுடைய ஒரே கனவு. கடவுள் புன்ணியத்தில் எனக்கு கிடைக்காத வாய்ப்புக்கள் அவனுக்கு கிடைக்குமாயின் அதை அடைவதில் அவனுக்கு உறுதுணையாக இருக்கவும் முயற்சி செய்வேன்.

Health Educator: உங்கள் பிள்ளை கல்லூரிக்கு செல்லும் வரை நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்றும் அதற்கான செயல்களை செய்வீர்கள் என்றும் நம்புகிறேன்.

நோயாளி: ஆமாம். எனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அவன் மிக கஷ்டப்படுவான். நீங்கள் சொல்வது சரி. ஒரு பெற்றோரால்தான் அடுத்தவர் மனத்தை புரிந்து கொள்ள முடியும். எனக்கென்ன பொறுப்பில்லையா.

Health Educator: அப்படி யார் சொன்னது. உங்களுக்கு பொறுப்பில்லாமல் இருக்குமா என்ன? (மீண்டும் ஒருமுறை) உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள். எதனால் தளர்ச்சி வருகிறது? அலுவலகத்தில் வேலை அதிகமோ?

நோயாளி: இல்லை, எனக்கு நீரிழிவு நோய் ஆரம்ப நிலையில் உள்ளது. அது சில சமயம் அளவிற்கதிகமாக போய்விடுகிறது அதனால் தான் இருக்கும். தினமும் சர்க்கரை அளவை சரிபார்க்க நினைக்கிறேன் முடியவில்லை. மறந்து போய் விடுகிறது. பிறகு என் மனைவியடமும் மருத்துவரிடமும் பேச்சு கேட்க வேண்டியிருக்கிறது.

Health Educator: இப்படித்தான் என்னுடைய நண்பர் ஒருவர் சொல்வார். சர்க்கரை அதிகமாகி, கோமா வந்துவிட்டால் அவருடைய பிள்ளையல்லவா கஷ்டப்படும். அதனால், காலையில் பல் விளக்கியவுடன் குளியலறையிலேயே சரி பார்த்துவிடுகிறார். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். சரி, எனக்கு நேரமாகிறது. உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் எனக்கு தொலை பேசுங்கள்.

இம்முறையில், நோயின் தீவிரம் மட்டுமே பேசப்படுவதில்லை. ஆனால் அதே சமயம் அதன் விளைவுகள், எது சந்தோஷம் என்பது போல சில விஷயங்கள் நோயாளிக்கு புரிய வைக்கப்பட்டது. சர்க்கரை சரிபார்க்க எளிய முறையும் போதிக்கப் பட்டது என்பதையும் கவனித்து கொள்ளுங்கள். பல் விளக்குவது போல சர்க்கரை அளவை சரிபார்ப்பது ஒரு நித்திய பழக்கத்தில் கொண்டு வரப்பட்டது. இங்கே அறிவுரை சொல்லப்பட்டபோதும் அது நோயாளியின் முடிவாகவே திரித்து சொல்லப் பட்டது.

20/07: உடல்நல அறிவு (Health Literacy)
தலைவலிக்கோர் மாத்திரை

தடுமனுக்கோர் மாத்திரை

தவறுதலா துன்னுப்புட்டா

தர்மலோக யாத்திரை

என்பது வேடிக்கையாக இருப்பினும் கண் சரியாக தெரியாத முதோரிடம் கேட்டால் தெரியும் அதில் எத்தனை உண்மை என்பதை.

உடல் நலம் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வது எல்லோருடைய உரிமையும் ஆகும்.மருத்துவரின் குறிப்புக்கள், எப்படி மருந்தை 4 வேளை எடுத்துக்கொள்ளா வேண்டும் போன்ற குறிப்புகளை பின்பற்ற நோயாளிக்கும், இவர் நாம் சொன்னதை சரியாக புரிந்து கொண்டாரா என்பது மருத்துவருக்கும் தெரிய வேண்டியது முக்கியம்.

• உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆபத்தை தருவது

• கிட்டதட்ட $10 பில்லியன் ஒரு வருடத்திற்கு செல்வை வரவழைப்பது

• இரத்த பரிசோதனை போன்றவற்ரால் கண்டுபிடிக்க முடியாது

• பல உயிர்களை குடிப்பது

• இன்னமும் மெத்தனமாக இதன் சக்தியை புரியாமல் இருப்பது

இது எது என்று கேட்டால், குறைந்த உடல் நலன் பற்றிய அறிவே அகும்( Low Health literacy).

நிறைய மருத்துவர்கள், தன்னார்வ தொண்டர்கள்,இது ஒரு தொற்றுநோயாக பரவுவதை சொல்கிறார்கள்.

உடல்நல அறிவு என்றால் என்ன? ஒரு மனிதனால் மருத்துவர் சொல்வதை புரிந்து கொள்வதும், அவர் தரும் குறிப்புகளாஇ படித்து அதை கிரகிக்க கூடிய அறிவும் ஆகும். இதற்கும் கல்லூரி படிப்பிற்கும் சம்பந்தமே இல்லை. மெத்த படித்த மேதாவிகளே பல சமயங்களில் தவறுதலாக புரிந்து கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்திருகிறார்கள்.

உலகில் உள்ள நோயாளிகள் பலரும் இந்த அபாயத்தில் இருக்கிறார்கள். தற்காலத்தில் மருத்துவ செய்திகள் புரிந்து கொள்ள மிகவும் கடினமாக, சிக்கலாக இருக்கின்றன. நிறைய செய்திகள், தொழில் நுட்பங்கள் இதில் எது சரி தவறு என்று எதுவுமே சரியாய் புரிவதில்லை.

மருத்துவர்களும் அதிக நேர கட்டுப்பாட்டில் இருப்பதாலும், காப்பீடு சட்ட சிக்கல் இவை தவிர்க்க அதிக சோதனைகள் என எல்லாமே குழப்ப மயம்.அவசரத்தில் நோயாளிக்கு புரிந்ததா இல்லையா என்பதை கண்டு கொள்வதில்லை. அதேபோல நோயாளிகளும் இனையத்தில் படித்தது, திரைப்படத்தில் பார்த்தோ, விளமபரத்தில் வருவது என தேவைக்கு அதிகமாக செய்திகளை குவித்து கொண்டு தெரிந்தவர் மாதிரி இருப்பதும், இன்னும் சிலர் கேட்க சங்கோசப்பட்டு வாளா இருப்பதும் உண்டு.சரியாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் இருப்பின் பல விளைவுகள் வரும்.

உதாரணமாக அண்டிபையாட்டிக் சாப்பிட்டால் பால் அருந்த வேண்டும். ஒரே நேரத்தில் மறக்காமல் சாப்பிட வேண்டும். மருந்தின் அளவு இரத்ததில் சரியாக சமநிலையில் இருக்க வேண்டும். 8 மணிக்கு ஒருமுறை என்றால் 8 மணிக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல முழுதும் உட்கொள்ள வேண்டும்.என்னப்பா, இருமலா சளி வருதா, எரித்ரோமய்சின் 4 சாப்பிடு என்பதெல்லாம் அதற்கான எதிர்சக்தியை அதிகரிக்கிறது. இரும்பு டானிக் சாப்பிட்டால், விடமின் சி கட்டாயம் வேண்டும். இல்லைஎனில் அது உறிஞ்சப்படாது.

மிக சிறிய எழுத்து அமைப்பில் மருந்தின் பெயர் இருந்தால், எல்லா மாத்திரைகளும் ஒரே நிறத்தில் இருந்தால் பல மாத்திரைகள் எடுத்து கொல்ளும் முதியவர் தவறான மருந்தை எடுத்து கொள்ள சாத்தியமாகிறது.” ஏன் எழவெடுக்கிற, மாத்திரைதான் வாங்கி அழ முடியும், எடுத்தா தர முடியும் என்று சத்தம் போடுவதை கேட்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு தேவை ராஜமரியாதை இல்லை. தவறாக எடுத்து கொண்டுஇறந்து விடுமோ என்ற பயம்தான்.

கண்ணும் தெரியாமல், காதும் கேளாமல் தவறிழைத்து விட்டு இன்னும் கஷ்டம் தரப்போகிறோமே என்ற பயம்தான்.

இதில் பெண்கள் பாடு இன்னும் திண்டாட்டம். ஹார்மோன்கள் நின்று எலும்பின் சக்தி குறைந்து, சிறுநீர் அடக்க மாட்டமல், கருப்பை சற்றே வெளிவர படும் அவஸ்தைகள்….

இதில் படிக்க தெரியாதவர்கள் மட்டும் முட்டாள் என்று எண்ணாதீர்கள். படித்தவர்களே மிகவும் கடினமான பரிசோதனிக்கு செல்லும் போது தவித்து போவார்கள். அதுவும் ஆயிரத்தெட்டு இணைக்கப்பட்டு பயமுறுத்தும். அதில் ஒன்று இரத்தம் செலுத்த, ஒன்று மருந்து செலுத்த ஒன்று சலைன் செலுத்த என்றாலும் பயந்துபோவார்கள். இதில் சரியாக சொல்ல வேண்டிய கட்டாயம் அம்மருத்துவருக்கு உண்டு.அதேபோல அமெரிக்காவில் உள்ள 44 மிலியன் பேருக்கு 4அம் வகுப்புக்கு மேல் கிரகிக்க சக்தி இல்லை என்பதும் 2 சிலபிள் வார்த்தைகளுக்கு மேல் புரியாது என்பதும் தெரிய வந்திருகிறது.பள்ளி அல்லது கல்லூரியில் படித்திருந்தால் நல்ல புரிந்து கொள்ளும் திறன் இருக்கும் என்பதும் ஒரு தவறான கருத்து. அதிலும் மருத்துவ கருத்துக்கள் இயற்கையிலேயே கடினம் என்பதும், மனம் கவலைப்படும் போது புரிகின்ற திறன் குறைவு என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள்.

நீரிழிவு, ஆஸ்த்மா, இரத்த கொதிப்பு போன்ற உயிர்கொல்லி நோய்மருந்துகள் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு பலர் உயிர் இழக்கிறார்கள்.50% நோயாளிகள் சரியாக மருத்துவரின் குறிப்புகளை பின்பற்றுவதில்லை.

அமெரிக்காவில் உள்ள 33% ஆசியர்கள் இதில் பலவித தவறுகளை செய்கிறார்கள். இந்நிலையில் மருத்துவரின் மொழியும் நோயாளியின் மொழியும் மாறுபட்டால் எப்படி இருக்கும்? உலகையே ஆட்டிவைக்கும் நிலையில் மருத்துவ உலகு சென்று கொண்டிருக்கிறது. இப்போது சற்றே விழித்து கொண்டு அமெரிக்கா, கனடா போன்ற இடங்களில் மொழி பெயர்ப்பாளர்களும், 4 ஆம் வகுப்பு நிலையில் புரியும் வண்ணம் எழுதப்பட்ட கையேடுகளும், எழுத்து 20 வடிவில் இருப்பதும் நடக்கிறது.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Comments madeர wrote:

‘மருத்துவர்களுக்காவது என்ன மருந்து கொடுக்கிறோம் என்று தெரிந்தால் சரிதான்’ என்ற நிலை

வராமல் இருந்தால் சரி.

reply to this comment

21/07 05:05:30

ராம்கி wrote:

The above comment is from me. Due to some error before completing the name and url the page disappeared and coment came here as from ர

Ramki. http://stationbench.blogspot.com…

reply to this comment

21/07 05:09:49

சுந்தரவடிவேல் wrote:

பயனுள்ள பதிவு. நன்றி.

மருந்துகளைத் தவறாக உட்கொள்ளுதல் ஒருபுறமிருக்கட்டும். சரியாக உட்கொள்ளப் படும் மருந்துகளின் பக்க விளைவுகள் முற்றிலுமாக அறியப்படாமலும், அறியப் பட்டவை நோயாளிகளுக்குச் சரிவர விளக்கப் படாமலிருப்பதையும் அதிகமாகக் காணலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இங்கு நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்குமான உரையாடல்கள், விளக்கங்கள் இந்தியாவை விட விளக்கமாக இருப்பதாகவே எனக்குப் படுகிறது. உதாரணமாக, உங்களுக்கு இருக்கும் வியாதிக்கு இன்னின்ன மருந்துகளிருக்கின்றன, இவற்றிலே எது வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பது போன்ற மருத்துவரின் கேள்விகள் சற்றே நம்மை வியக்க வைக்கின்றன.

பொதுவாக இந்த அல்லோபதி மருந்துகளைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. உணவே மருந்து என்ற நம் ஆன்றோரின் மருத்துவ வழியையும் “மருந்தென வேண்டாவாம் ஆக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” போன்ற கோட்பாடுகளையும் மீண்டும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்!

reply to this comment

21/07 06:29:22

Padma Arvind wrote:

சுந்தரவடிவேல், ராம்கி

நன்றிகள். இப்போது அமெரிக்காவில் மருந்து பெயர்கள் மிக பெரிய வடிவத்தில் எழுதுவதும், போத்தல்கள் பிட்க்க வயதானோரின் கைக்கு எளிதாகவும், பல வித வண்ணங்களில் இருப்பதும் இந்த தவறை போக்க.

நுகர்வோரின் கவலைகளை வேறு யாரும் இந்த அளாவுக்கு எண்ணிப்பார்த்தார்களா என்று தெரியவில்லை.