»
S
I
D
E
B
A
R
«
Ticket BlitZ
March 1st, 2009 by பத்மா அர்விந்த்

அமெரிக்க மாநிலங்கள் பலவற்றில் இப்போது தனியாக நிதி ஒதுக்கி போக்குவரத்து போலீஸ்களை அதிகரித்திருக்கிறார்கள். டிக்கெட் பிலிட்ஸ் மூலமாக பல மில்லியன் டாலர்கள் வருட இறுதிக்குள் சேர்க்க திட்டம். கூடுதல் நேரம் வேலை பார்க்கும் காவலர்களுக்காக வருமானம் தர இந்த நிதி பயன் படும். இதனால் ஆகும் செலவைவிட வருமானம் பன்மடங்கு அதிகம். ஒரு நாளைக்கு 100 டிக்கெட் தந்தாலும் ஒரு ஆண்டுக்கு $1.8 மில்லியன் டாலர்கள் வருமானம் வரும். ஹோபொக்கன் என்ற நகரில் பிப்ரவரி 8 ஆம் தேதி இரவு மட்டுமே கிட்டதட்ட 1000 டிக்கெட்கள் (சாலை ஓரம் சற்றே கோணலாக நிறுத்தப்பட்ட கார்கள் முதல்) தரப்பட்டதாக தெரிய வருகிறது

நியுயார்க்கில் இந்த திட்டம் அறிமுகமானதைத் தொடர்ந்து நியுஜெர்ஸியிலும் வெற்றிகரமாக துவங்கப்பட்டுவிட்டது. 25 மைல் சாலையில் 30 மைலில் போனால் அதிகம் கண்டுகொள்ளாமல் விட்டவர்கள் இப்போது டிக்கெட் அளித்து நிதி சேர்க்கிறார்கள். நியுஜெர்சி சாலை பார்க்கிங் வரி கட்டவேண்டும் என்று கவர்னர் சொன்னதற்கு எதிர்ப்பு குரல்கள் எழும்பிய நிலையிலும் பார்க் அண்ட் ரைட் போன்ற இடங்களில் கட்டணத்தை அதிகப்படுத்தி உள்ளார்கள்.

நியுப்ரன்ஸ்விக், பிர்ட்ஜ்வாட்டர், கடற்கரைப் பகுதிகள் போன்ற நிறைய நகரங்களில் சாலையில் கடைகள் முன் வாகனங்களை நிறுத்த குறைந்த பட்ச கட்டணம் $0.25/ கால் மணியில் இருந்து $1.50/மணிக்கு () ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அங்கேயே வாழ்பவர்களுக்கு 4 இலவச பார்க்கிங் அட்டை தரப்படும் என்றும் மற்ற நகரங்களில் இருந்து வருபவர்கள் குறைந்த பட்ச கட்டணம் செலுத்தியே நிறுத்த வேண்டும் என்று நகர சபைகள் தீர்மானித்துவிட்டன. பெரும்பாலான கடை உரிமையாளர்கள் தங்கள் வருமானம் குறைந்துவிடும் என்று எதிர்ப்பு தெரிவித்தாலும், வேறு வழியில்லாமல் இவை செயல்படுத்தப்பட இருக்கின்றன. வெகுவிரைவில் இஸ்லினிலும் இந்த முறை பின்பற்றப்பட இருக்கிறது.

இது அல்லாமல் நிறைய விளக்குகளில் (signal) இப்போது தானியங்கி காமிராக்கல் நிறுவி, எப்போதெனும் சிவப்பு விளக்கை தாண்டினால், வேகமாக சென்றால் வீடுதேடி அபராத தொகை மடல்கள் அனுப்பவும் முடிவாகி இருக்கிறது. ஆகையால் வாகனங்கள் செலுத்தும் போது கவனமாய் இருங்கள். வேக மாக செல்வது ஆபத்தானதென்றாலும் சின்ன சின்ன தவறுகள் கூட செய்யாமல் கவனமாய் இருப்பது முக்கியம். ஏனென்றால் நாம் எல்லாரும் கண்காணிக்கபடுகிறோம்.


4 Responses  
  • dharumi writes:
    March 2nd, 2009 at 8:21 am

    எங்க ஊர் செளகரியம் இப்ப மக்களுக்குப் புரியுதா? நாங்களும் எப்ப்டி வேணும்னாலும் சாலையில போவோம்; கோவில் மாடுகளும்தான் .. சுதந்திரம்னா அது ..!

  • dyno writes:
    March 3rd, 2009 at 1:11 pm

    >25 மைல் சாலையில் 30 மைலில் போனால் அதிகம் கண்டுகொள்ளாமல்<

    I agree that safe driving is essential, but isn’t this defeating the whole purpose? This is a classic example of government misusing its power to increase revenue. If they want less traffic, they should invest in increasing public transportation. This is the reason that government should not be given powers!

    d

  • பத்மா அர்விந்த் writes:
    March 3rd, 2009 at 1:20 pm

    dyno
    I dont agree with this one either.
    Hoboken residents got tickets just for improper parking (even it was slightly away from lines). They issued 1000 tickets on a single night. I understand that these minigrants say the ticket amount for each little details. Last month they issued more than 10,000 in NJ including for not turning on indicator when made right turn. They are told to issue tickets for not turning on and off indicator lights when making a turn, speeding, improper parking, parking near store (blockbuster for ex) with hazard lights on, for not coming to full stop at stop sign (you can not reduce speed and wait and go, have to stop). There are mini grants awarded to each county and minicipality to ensure these rules. Even if youaverage $50 per ticket, 10,000 tickets result in $500,000.

  • பத்மா அர்விந்த் writes:
    March 3rd, 2009 at 1:49 pm

    தருமி, ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கிறதில மகிழ்ச்சி. நம்ம் ஊரும் ரொபவே மாறிப்போனதா கேள்விப்பட்டேன்.


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions