»
S
I
D
E
B
A
R
«
Family Assistance Fair, Coping with the Recession தொடர்ச்சி
March 9th, 2009 by பத்மா அர்விந்த்

சென்ற வாரம் கவர்னர் கோர்சைனின் சிறப்பு உரையுடன் குடும்பங்களின் பொருளாதார உதவி கூட்டம் நடைபெற்றது. இங்கே அரசாங்கத்தின் பல அமைப்புகளும், வங்கிகளும் தங்களுடைய நிறுவனத்தில் என்ன உதவி கிடைக்க கூடும் என்பதை விளக்கினார்கள்.

வீட்டுக் கடனின் வட்டி விகிதம் குறைக்க, மற்ற முயற்சிகளுக்கு இலவச ஆலோசனை பெற இங்கே செல்லவும். இங்கே குறைந்த செலவில் வாடகைக்கு வீடு கிடைப்பது பற்றியும், Mortgage Assistance Pilot திட்டம் பற்றியும் விவரமாக காணலாம். கட்டுரையில் NJ HOPE இணைய தளம் பற்றியும் அதில் கிடைக்க கூடிய உதவிகள் பற்றியும் இருக்கிறது.

வீட்டிற்கு ஆகும் மின்சார வெப்ப நிலையை அதிகரிக்க அல்லது குறைக்க ஆகும் செலவு கட்ட இயலாதவர்கள், வேலை இழந்தவர்கள் உடனடியாக வேலை தேட உதவி, வேலை இழந்தவர்கள் மேலும் தங்களது திறனை அதிகரிக்க உதவி, அவர்கள் மனைவி வேலை இல்லாமல் இருந்தால் குறைந்த செலவில் அல்லது இலவசமாக கிடைக்கும் பயிற்சிகள் (division on women) இந்த தளத்தில் காணலாம்.

நீங்கள் சிறுதொழில் நடத்துபவரா அல்லது தொழில் ஆரம்பிக்க வட்டியில்லா அல்லது மிக குறைந்த வட்டியில் கடன் அல்லது பொருளாதார உதவி வேண்டுமானாலும் இங்கே மேலும் விவரங்கள் கிடைக்கும். http://www.recovery.nj.gov/

வேலை இழந்தவர்கள் தங்கள் குழந்தைக்கான மருத்துவ காப்பீட்டை இலவசமாக பெற இயலும். தங்கள் வரி படிவத்தில் குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு இல்லை என்றால் அதை தெரியப்படுத்தினால் இலவச மருத்துவ காப்பீடும், ஊதியம் இல்லாதவர்களுக்கு சலுகை முறையில் காப்பீடும் பெற இங்கே செல்லவும். இங்கே மாதாந்திர வருமானம் (அவர்களுடைய அசையா சொத்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை) தற்காலிகமாக வேலை இழந்தவர்கள் கூட காப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.

குழந்தைகள் தடுப்பூசி, தற்போது கட்டாயமாக்கப்பட்ட ப்ளூ தடுப்பூசி, சிறப்பு குழந்தைகளுக்கான உடல்நல உதவி, அவர்களை பார்த்துக்கொள்ள பெற்றோர்களுக்கு கிடைக்கும் செவிலிகளின் உதவி ஆகியவை மாநில பொதுநல துறையில் ஏற்பாடு செய்து கொள்ள முடியும்.

வரும் ஜூன் மாதம் நியுஜெர்ஸியில் உள்ள எல்லா நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் ஒண்றிணைத்து ஒரு Job summit நடத்த ஆளுநரின் அலுவகம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. மேலும் தகவல்கள் வந்தால் பதிவு செய்கிறேன்.

பல மருந்து நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் குறைந்த விலைக்கு கிடைப்பது பற்றியும், காது கண் ஆகியவை இலவசமாக சிகிச்சை செய்துகொள்ள சில காப்பீடு நிறுவனங்களுடன் பேசி ஏற்பாடு செய்யவும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் தள்ளுபடி பெற அட்டைகள் தரப்படுகின்றன.விரைவில் மற்றவையும் ஏற்பாடு செய்யப்படும்.

முதியோருக்கான உதவிகள், மருந்துகள், உணவு ஆகியவை இன்னும் அதிகமாக்க பபட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஆளுநரின் முழு உரையையும் இங்கே
கேட்கக் கிடைக்கும்.


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions