»
S
I
D
E
B
A
R
«
இருப்பும் இல்லாமையும்
November 13th, 2008 by பத்மா அர்விந்த்

திருமணம் முடிந்து இன்றோடு பதினேழு வருடங்கள் கடந்துவிட்டது என்பதுகூட வருடக்கணக்கை கொண்டு மட்டுமே அறியமுடிகிறது. நம் கனவுகளின் நிறங்கள் கூட ஒன்றாக மாறி இருக்கிறது இந்த நீண்ட காலத்தில். சுவாசிக்கும் காற்றைப்போல எனக்கு நீ.
மூச்சுவிடுவதை உணர்கிறபோதே உடல்நலம் பாதிக்கப்பட்டது என்பது புரிவது போல, நீ இருக்கும் உணர்வு எனக்கு புரிகிறபோதே அதை இழந்துவிடுவேனோ என்ற ஒரு கவலை அடிக்கோடாக இருப்பது புரிகிறது. இத்தனை நாள் அதை நான் உணர்ந்ததே இல்லை. எப்போது வருவாய் எனக்குறித்து கவலை ஏதும் கொண்டதில்லை, ஆனால் நீ வந்துவிடுவாய் என்ற ஒரு உன்னதமான ஒரு தைரியம் இருந்தது.

வீடு வாங்குவதோ விடுமுறைக்கு போவதோ, வாகனம் வாங்குவதோ என் முடிவில் எனக்கிருந்த நம்பிக்கையைவிட உனக்கு இருந்தது அதிகம்.

இப்போதும் மருத்துவர்களை சந்திப்பது முதல், சிகிச்சை முறைகளை பரீசீலிப்பதுவரை நானே தீர்மானிக்கிறேன். என் மீது நானே நம்பிக்கை இழக்காமல் இருக்கவாவது எனக்கொரு துணைவனாக நீ இருக்க வேண்டும் இன்னும் ஒரு யுகம். சுகமான இந்த பயணத்தில் துணையாக தொடர்வதற்கு என் வந்தனங்கள். குணமாகி வா, வராவிட்டாலும் கூட பாதகம் இல்லை, உன் நினைவுகளே கூட போதுமெனக்கு, ஆனால் ஒருக்காலும் உடல்சக்தியும் உன் கம்பீரமும் இழந்து வாழும் வாழ்வுனக்கு வேண்டாம், அது எனக்கு மிகவும் துன்பத்தை தரும்.


14 Responses  
  • பாலராஜன்கீதா writes:
    November 13th, 2008 at 8:04 pm

    பத்மா அரவிந்த் இருவருக்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்.

  • Balaji writes:
    November 13th, 2008 at 9:09 pm

    எல்லாம் சரியாயிடும்!

  • துளசி கோபால் writes:
    November 13th, 2008 at 10:50 pm

    இனிய வாழ்த்து(க்)கள் பத்மா.

    என்னில் பாதி:-))))

  • ரவி ஸ்ரீநிவாஸ் writes:
    November 14th, 2008 at 5:41 am

    நீங்கள் எழுதியிருப்பது சரியாகப் புரியவில்லை.ஆனால் ஒரு சோக உணர்ச்சி இருப்பதும்,யாருக்கோ
    உடல் நலம் சரியில்லை என்றும்
    ஊகிக்க முடிகிறது.உங்கள் தரப்பில்
    அனைவரும் நலமா?.

  • இலவசக்கொத்தனார் writes:
    November 14th, 2008 at 12:51 pm

    வாழ்த்துகள் அக்கா!

  • R A J A writes:
    November 16th, 2008 at 8:30 pm

    இன்றுதான் முதன் முதலாக உங்களுடைய (ஒரு சில) பதிவுகளை படித்தேன். ஏதோ ஒரு மென்சோகம் அனைத்திலும் இழையோடி இருக்கிறது….இந்த ‘இருப்பும் இல்லாமையும்’ ஏதோ ஒன்றை நினைத்து எழுதியதா? அல்லது உங்களுடைய personal lifeவுடன் தொடர்புடையதா என்று சரியாக என்னால் பிரித்துப்பார்க்க இயலவில்லை. ஆனால் படிக்க நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • DJ writes:
    November 17th, 2008 at 3:50 pm

    எல்லாம் இனிதாகும்.
    இத‌மான‌ வாழ்த்து இருவ‌ருக்கும்!

  • ila writes:
    November 17th, 2008 at 5:16 pm

    வாழ்த்துக்கள்!

  • Balaji.paari writes:
    November 17th, 2008 at 6:05 pm

    Dear Padma,
    Best wishes.

    anbudan
    Balaji.paari

  • பாலு writes:
    November 17th, 2008 at 7:44 pm

    மணநாள் வாழ்த்துக்கள் பத்மா

  • செல்வராஜ் writes:
    November 17th, 2008 at 8:18 pm

    வாழ்த்துக்கள் பத்மா. உங்களில் யாருக்கேனும் நலக்குறைவெனில் விரைவில் மீண்டு வரவும் வேண்டுகிறேன்.

  • dharumi writes:
    November 18th, 2008 at 11:33 am

    என்னங்க பத்மா இது.

    என்ன சொல்ல …?

  • Swami writes:
    November 19th, 2008 at 12:56 pm

    Dear Padma,

    Hope and pray things turn alright for you. Irrespective, best wishes to you and hubby on the 17th anniversary. The emotional capital will last you a lifetime.

    Swami

  • பத்மா அர்விந்த் writes:
    November 19th, 2008 at 1:41 pm

    வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions