அமெரிக்காவின் புற்றுநோய் மையம் வெளியிடும் அறிக்கை படி 2007 இல் 214,000 நுரையீரல் பேருக்கு புற்றுநோய் இருப்பதாக (new diagnosis cases) கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் 66% பெண்கள், அதில் 15% பெண்கள் புகைபிடிப்பவர்கள் இல்லை. பொதுவாகவே நுரையீரல் புற்றுநோய் புகைபிடிப்பவர்களுக்குத் தான் வரும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் புகைபிடிப்பதும் சிகரெட் புகையில் உள்ள புற்றுநோய் உருவாக்கக்கூடிய காரணிகளும் இதை துரிதப்படுத்தினாலும் மற்ற காரணிகளும் உண்டு.
புற்றுநோய் ஆய்வாளர்களின் ஆர்வம் இத்துறையில் அதிகரித்ததற்கும் புகை பிடிக்காதவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட இருக்கும் காரணிகளை தெரிந்து கொள்ளவும் ஊடகங்களின் ஈடுபாடு அதிகரிக்க டானா ரீவிசின் இறப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இன்னமும் நிறைய பேர் தங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் என்று அறிந்தவுடன் நினைப்பது தாங்களாகவே இந்த நோயை உருவாக்கி கொண்டோம், தேவை இல்லா பழக்கத்தால் என்ற குற்ற உணர்வும், இன்னாருக்கு நுரையீரல் புற்றுநோய் என்றவுடன் அவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததா என்று கேட்பதுவும் சர்வ சாதாரணம்.
மற்ற எல்லா புற்றுநோய்போல நுரையீரல் புற்றுநோயும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சுவாசிக்கும் காற்றில் உள்ள வேதிப்பொருட்கள், ரேடான் அளவு, மற்றவர் புகைபிடிப்பது விடும் காற்றை சுவாசிக்க நேர்வது (second hand smoking), புகைபிடிப்பது, மரபணுக்களின் தாக்கம் என்ரு பல காரணிகள் இருக்கிறது.பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், ஈஸ்ட்ரோஜன் தாங்கிகள் அளவு மாதவிலக்கு நின்றபின் குறைந்து போகின்ற காரணத்தால், நுரையீரலின் பசித்தன்மை குறவதாகவும், அதனால் நிறைய பெண்களுக்கு இந்த புற்று நோய் வருவதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள். புகைபிடிக்கின்ற ஒன்றைத் தவிர மற்ற எல்லாக்காரணிகளும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்கிற போது, இன்னும் அதிக கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் EGFR (Epidemral growth Factor receptor) இல் மாறுதல் நிகழ்வதும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
நுரையீரல் புற்று நோயில் இருவகை உண்டு. ஒன்று non small cell lung cancer மற்றொன்ரு small cell lung cancer. முதலாம் வகையில் நான்கு உட்பிரிவுகள் உண்டு. இரண்டாம் வகை 20% நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு இருக்கிறது. இது புகைபிடித்ததால் மட்டுமே வரக்கூடிய வகை. நுரையீரல் புற்றுநோய்க்கான காரணிகள், அதன் அறிகுறிகள், எப்படிபட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பவை போன்ற நான் கற்றுக்கொண்ட/ கற்றுக்கொண்டிருக்கின்ற சில செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த மாதம் Radon action month என்று அமெரிக்க சுற்றுப்புர பாதுகாப்பு மையம் அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில் வாழ்பவர்கள். தங்கள் நிலவறையில் ரேடானின் அளவை சரி பார்த்துக்கொள்ளுங்கள். இதற்கான பரிசோதனை kit $25 கிடைக்கும் இல்லை என்றால் உங்கள் மாநில சுகாதார நிறுவனத்தை அணுகி பரிசோதித்துக்கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.