»
S
I
D
E
B
A
R
«
மண முறிவும் மற்றையவும் – 4
August 13th, 2007 by பத்மா அர்விந்த்

தாமதமாக வரும் இப்பதிவிற்கு வருந்துகிறேன். தவறுடைய விகாரத்து (at fault)முறை பற்றி பார்ப்போம். இந்த முறை விவாகரத்தில் நிறைய பிரச்சினைகள் உண்டு. திருமணம் செய்து கொண்ட இருவரில் யாரேனும் ஒருவர் குற்றம் இழைத்திருந்தால், இந்த மணமுறிவுகள் வழங்கப்படும். குற்றங்கள் பொதுவாக யாரேனும் ஒருவர் போதை பொருட்களுக்கு அடிமையாக இருந்து குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல், மண உறவை மீறிய உறவுமுறைகள் (adultry), வன்முறை, ஆதிக்கவெறி (control freak) ஆகியவை அடங்கும். இதனால் மீண்டும் இருவரும் மணம் செய்துகொள்ள முடியாது என்ற போதும், பல நன்மைகள் உண்டு. முதலாவதாக குழந்தைகளின் முக்கிய பாதுகாவலராக தகுதி கிடைக்கும். அதே நேரம் பல துன்பங்களில் இருந்து, குறிப்பாக மன உளைச்சலில் இருந்து விடுதலையும், சுய மரியாதையை மீண்டும் பெற உதவும்.

இந்த முறை விவாகரத்தில் இதுவரை சேர்த்த சொத்து (அசையும், அசையா) பிரித்தல், கடன் சுமைகலை பிரித்தல், குழந்தைகல் இருந்தால் அவர்களின் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்து செல்வுகளுக்கும் முறையாய் ஒரு நீதி எழுதுதல் ஆகியன அடங்கும். தவறிழைத்தவர் ஒப்புக்கொள்ளூம் பட்சத்தில் அவரது ஆவணங்களில் பதிவு செய்யப்படும் என்பதால் பொதுவாக யாரும் ஒப்புக்கொள்வதில்லை. எனவே மேலும் சாட்சியங்கள், விசாரணை என்று இருபாலாரும் அதிக பொருள் விரயம் செய்கின்றனர். மேலும் யாரெனும் ஒருவர் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்காததால், எப்படியாவவது உன்னை போகாமல் தடுக்கின்றேனா பார் என்று மேலும் கட்டுப்பாடுகளை விதித்து இன்னும் சிக்கல்களை உருவாக்குகின்றனர்.

இந்த முறையில் சில பெற்றோர்கள் என்னை விட்டு போகும் உஅனக்கு நீ அதிக அன்பு செலுத்தும் குழந்தையை கிடைக்காமல் செய்கிறேனா இல்லையா என்ரு போடியில் இறங்கி குழந்தைகளை பகடைக்காய்களாக பயன்படுத்துகிறார்கள். பொதுவாக 3 வயதுகுட்பட்ட குழந்தைகலின் முதன்மை பாதுகாப்பு அன்னைக்கே (அன்னை போதை பொருட்களுக்கு அடிமையாகவோ, மன நலம் குன்றியவராகவோ இல்லாவிட்டால்) தரப்படும். இதனால் ஆத்திரம் கோபம் கொள்ளும் தந்தையர்கள் அந்த குழந்தைகளை யாருக்கும் சொல்லாமல் ஊர் விட்டு ஊர்அழைத்து போய்விடுவதுண்டு .நிறைய குழந்தை கடத்தல் (amber alert)விவகாரங்கள் இத்தன்மை உடையது.

நம்முடைய குழந்தையே ஆனாலும் கணவருக்கோ மனைவிக்கோ தெரியாமல் குழந்தைகளை எங்காவது அழைத்து சென்று, இன்னொருவர் காவல் நிலையத்தில் முறையிட்டால் அது குழந்தைகள் கடத்தல் வழக்காகிவிடும். இந்த சட்ட நுணுக்கத்தை விவாகரத்து பிரச்சினையில் இருக்கும் 90 சதவிகித இந்திய பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. குறிப்பாக பெண்கள், மீண்டும் மீண்டும் நானே வேண்டாம் என்றானபின் என் குழந்தை மட்டும் எதுக்கு என்றே கேட்கிறார்கள். என்னதான் வன்முறையாளனாகவோ, மதுப்பழகத்திற்கு அடிமையானவனாகவோ இர்ந்தாலும், குழந்தையை பொருத்தமட்டில் சட்டப்படி, பயலாஜிகல் தந்தைக்கு உரிமை உண்டு. அதை யாரும் என்ன நிலையிலும் மறுக்க முடியாது. அதேபோல அன்னைக்குண்டான உரிமையையும் யாரும் மறுக்க முடியாது.

கணவனால் இந்தியாவிற்கு அனுப்பட்ட பெண், அங்கே நிறைய கொடுமைகள் நடந்ததால், அவனிடம் சொல்லாமல் குழந்தைகளுடன் அமெரிக்கா வந்துவிட அது நாடு விட்டு நாடு குழந்தைகள் கடத்திய வழக்காக மாறிவிட்டதை முன்பே எழுதி இருந்தேன். இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சமீபத்தில் விவாகரத்து பெற்ற ஒரு வழக்கில், குழந்தைகள் அன்னையின் முதன்மை பொறுப்பிலும், வாரத்திற்கு இரண்டு நாட்கள் தந்தையிடமும் போக தீர்ப்பாகி இருந்தது. தந்தையோ அன்னையோ குழந்தைகளுடன் தொலை பேச அனுமதி இருந்தது.

ஆனாலும், முதன்முதலில் தன்னைவிட்டு தந்தையிடம் போன குழந்தையிடம் பேச அன்னை தொலை பேசியபோது, பல முறை அது எடுக்கப்படவில்லை, தந்தை தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொண்டபோதும், குழந்தை தூங்குவதாக சொல்லிவிட்டார். இதற்கு சட்டப்படி எந்த தீர்ர்பும் சொல்ல முடியாது (no one can rule to say that the parent has to allow the kid to answer the phone, then we need to determine the number of calls etc, and also the urgency. For example, the kids may actually be sleeping due seperation anxiety and the father can not be ordered to wake them up).

சென்னையை சேர்ந்த ஒரு விவாகரத்து வழக்கில், தந்தையிட்ம இருந்து தாயுடன் இருந்த பிள்ளைக்கு தொலைபேசி அழைப்பு வர, அம்மா பின்னால், என் கூட அழுது தொலைச்சு இப்ப சிரிச்சா பேசர, கழுத்த முரிச்சுடுவேன் என்று பிள்ளையை மிரட்ட, மொத்த உரையாடலையும் கணவன் பதிந்து மனைவிமேல் குழந்தைக்கு கொலை மிரட்டல் என்ற வழக்கு பதிவு செய்தான். அதே போல தன் வீட்டிற்கு வந்த குழந்தைகள் பசியுடன் இருக்கும் போது பிட்சாவை முன்னால் வத்தி, அடித்து, அப்பாவுடன் இருக்க எனக்கு ஆசை, அம்மா என்ன அடிக்கறாங்க என்று குழந்தையை சொல்ல சொல்லி வீடியோ எடுக்க அது சில உடற் மொழியாளர்களால் பார்க்கப்பட்டு குழந்தையை தனியே அழைத்து பேசியதில் தந்தையின் மிரட்டல் தெரிந்தது.

இது போன்ற வழக்குகளில் தந்தையும் அன்னையும் தன்னை பக்டையாக பயன்படுத்துவதை அறிந்துகொள்ளும் சில குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாவதுண்டு. இன்னும் சில குழந்தைகள் நிலைமையை தனக்கேற்றவாரு பயன்படுத்துவதும் உண்டு. அம்மா கேட்க விரும்புவதை அம்மாவிடமும் அப்பா கேட்க விரும்புவதை அப்பாவிடமும் சொல்லி தனக்கு வேண்டியதை பெற்றுக்கொள்ளவும், மாறாக சொன்னால் செய்தால் அடி விழுமோ என்ற பயத்தில் பொய் சொல்லவும் குழந்தைகள் பழகுகிறார்கள். குழந்தைகள் ஆளாகும் மன மாற்ரங்கள், ஜீவனாம்சம், குழந்தைகளுக்கான வளர்ப்பு கட்டணம் பற்றி விரிவாக பார்க்கலாம்.


2 Responses  
  • ஜெஸிலா writes:
    August 13th, 2007 at 9:14 am

    குழந்தைகள் பாதிக்கப்படும் என்பதற்காகவே எத்தனையோ தம்பதிகள் எனக்கு தெரிந்தே பல்லைகடித்துக் கொண்டு தாம்பத்தியம் நடத்துவதாக சொல்லியிருக்கிறார்கள். இந்த பதிவெல்லாம் படிக்கும் போது உறுதி செய்கிறது.

  • குழந்தை வளர்ப்பு : பெற்றோர்களின் பொறுப்பு என்ன? « Ragowthaman’s Weblog writes:
    October 12th, 2007 at 7:41 pm

    [...] பெற்றோரின் பிரச்சினைகள் 1. மண முறிவும் மற்றையவும் :விவாகரத்து முறைகளும் அது [...]


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions