»
S
I
D
E
B
A
R
«
மண(ன) முறிவும் மற்றையவும்- 1
June 23rd, 2007 by பத்மா அர்விந்த்

கொத்தானாரின் நட்சத்திர வாரத்தில் சில மணமுறிவுகள், குழந்தைகளுக்கான உதவிப்பணம் மற்றும் ஜீவானம்சம் அல்லது alimony பற்றி சில கேள்விகளை முன்வைத்திருந்தார். மிக சரியான அந்த கேள்விகளுக்கு என்னால் இயன்ற வரை நான் பார்த்த சில விவாகரத்துகள் அதன் வழக்கு விவாதங்கள் சில சட்டங்கள், அவற்றை மீற ஏமாற்ற செய்யப்படும் சில ஜாலங்கள், கிடைக்கும் உதவிப்பணத்தை அபயோகிக்கும் பெண்கள்/ஆண்கள், புத்திசாலித்தனமாக சிக்கி சுழலும் வழக்குகள், முடிந்தால் போதும் என்று ஏற்றுக்கொள்ளப்படும் பொய்யான காரணங்கள் எழுத துவங்கியதன் ஆரம்ப பதிவு இது.

இந்த பதிவு கூடுமானவரை பால் சார்ந்தோ அல்லது இனம் சார்ந்தோ இருக்காது என்று நம்புகிறேன். இங்கே மதங்களின் (எல்லா) கட்டுப்பாட்டையும் சமுதாயத்தின் சில கட்டுப்பாடுகள் எழுதப்படாத ஆனால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும்/பட்ட விதிகளையும் கோடிட்டு காட்ட எண்ணம்.

புள்ளி விவரங்களும் பட்டியலிடப்படும் ஆங்காங்கே, சில வழக்குகளும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி பெற்று பெயர் மாற்றத்தோடு வரும். மாற்று கருத்துகள் இருந்தால் தெளிவாக சொல்லுங்கள்.

உரிமை எது, எதுவரை தலையிடலாம், எது வரையறை மீறுவது என்றெல்லாம் பல குழப்பங்கள் உண்டு. மனைவி அல்லது கணவனின் விருப்பத்திற்கு குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்று சிலர் அதிக அக்கறையும் கவனமும் எடுத்துக் கொள்ள அது பாராமுகமாய், விருப்பம் இல்லாததாகவும் கருதப்பட்டு மனப்புழுக்கம் அதிகரித்து முறிவுக்கு காரணமாகிறது.

நியுக்கிளியர் குடும்பத்துக்கும் அன்னை, தந்தை என்ற நெருங்கிய உறவு வட்டத்தின் எல்லைகளும் சரியாக வரையறுக்க படாமல் அன்பென்ற வடிவில், இத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தேனே இப்போது இதை செய்யக்கூடாதா என்ற பயமுறுத்தல் வடிவில், கணவன் மனைவி உறவு வட்டத்து முக்கியத்துவ போட்டியில், குழந்தை பராமரிப்பில் என்று எல்லாவற்றிலும் குழப்பம் வருகிறது.

மனைவிக்கு ஓய்வு தர தான் வீட்டில் இருக்கும் போதெல்லாம், குழந்தையை தானே கவனித்துக்கொண்ட கணவன் மீதுகூட, நான் குழந்தை வளர்ப்ப்பது பிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டும் மனைவியரும், இப்பவே குழந்தையை உன்னிடமிருந்து பிரித்துவிடப்போகிறார்கள், கவனமாய் இரு என்று சொல்லித்தரும் அன்னையரும் உண்டு. இந்தியாவில் மட்டும் என்றில்லை, அமெரிக்காவிலும் கூட கணவன், மனைவி இவர்களின் பெற்றோர், உடன் பிறந்தோரால் பிரச்சினைகல் விவாகரத்துவரை போகிறது.

இந்த குழப்பங்கள் எல்லாம் வருவதன் காரணமே சரியான உரையாடல் (communication) இல்லாததும் எது எல்லைக்கோடு என்று தெரியாததும் ஆகும்.

காதலிக்கும் போது ஒருவரை ஒருவர் மகிழ்விக்க அல்லது நல்ல நினைவை impression ஏற்படுத்த பிடிக்காத விஷ்யங்களில் கூட பொருமை காப்பவர்களும், கிடைக்கிற சிரிது காலத்தில் மகிழ்ச்சியுடன் இருப்போமே என்று ஒத்தி போடுபர்களும் திருமணம் என்று ஆனபின் தனக்கு தெரியாத இன்னொரு பிம்பத்தை, வடிவத்தை கண்டு தடுமாறுவதும், அலுவக நேரம் தவிர மற்ற நேரங்களில் கூடவே இருக்கும் போது சின்ன விஷயங்களில் கூட இருக்கும் வேறுபாடு மனநிலை பொருத்து தரும் சினம், ஏமாற்ரமும், இப்போது கணவன் மனைவியோடு கூடவே வரும் உறவினர் என்ற பொருப்பும் அவரவர் குனத்திற்கு ஏற்று. அல்லது சகித்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் வரும் போது, எல்லாம் குழப்பமாகிறது. திருமணமாகும் போது தன்னிச்சியாய் இருந்துவிட்டு, இப்போது இன்னொருவரின் ரசனை விருப்பம், குடும்பம் என்ற அமைப்பின் தேவைகள் சில தனி வட்டத்தை குறுக்குவதால், கணவனோ மனைவியோ அன்பென்ற பிடியில் அவரவர் individual space ஐ compromise செய்துகொள்வது அல்லது இழக்கும் போது இன்னும் அதிகமாக மூச்சு முட்டுகிறது.
இதை எல்லாம் மீறி வன்முறை அதிகமாகும் போது ஆணோ பெண்ணோ கலங்கி பொய்விடுகிறார்கள். நியுஜெர்ஸியில், அலுவகத்தில் மற்றூம் நண்பர்களிடத்தில் மிகவும் பொறுமைசாலி என்ற பெயர் எடுத்த ஒருவர், மனைவியை கோபத்தில் மிக பலமாக அடித்திருக்கிறார் மருத்துவமனையில் சேர்க்கும்படி. காவலர்கள் விசாரித்தவகையில் இது அடிக்கடி நிகழும் ஒன்று என்பதும் தெரியவர, மனைவியையும் குழந்தைகளையும் சட்டரீதியாக பிரித்து பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது. விவாகரத்து ஆனாலும், கணவனோ அல்லது மனைவியோ போதை பொருளுக்கு அடிமை போன்ற மிக பெரிய குற்றம் இல்லாதவரை குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரில் ஒருவர் முதன்மை காவலராகவும் மற்றொருவருக்கு வாரம் இருமுறை கவனித்துக்கொள்ளூம் visitation உரிமையும் உண்டு. என்னதான் கணவன் மீதோ அல்லது மனைவி மீதோ வெறு இருந்தாலும் சட்டப்படி ஒரு தந்தைக்கு அல்லது அன்னைக்கு இருக்கும் உரிமையை குழந்தை 18 வயதாகும் வரை யாராலும் தடுக்க முடியாது. அப்படி தன் குழந்தைகளை அழைத்து போன தந்தை அவர்கள் இருவரையும் கொன்று தானும் தர்கொலை செய்துகொண்டார். அவரது நண்பர்களால் இதை நம்பவே முடியவில்லை. நம்மிடம் சாதாரணமாக மிக நல்ல முறையில் பழகும் ஒருவர் கூட தன் துணவர் அல்லது துணைவியிடம் மிகவும் கட்டுப்பாடு அல்லது அடக்குமுறையுடன் நடந்து கொள்ள முடியும்.

இதற்கு பொருளாதார சார்பு நிலை மட்டும் அல்லாமல் இன்னும் பல காரணங்களை உளவியலார் சொல்லி இருக்கின்றனர். அமெரிக்க சட்டங்களும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். நான் எழுதுவது பெரும்பாலும் நியுஜெர்சி மாநில சட்டத்தை ஒட்டி இருக்கும். இது ஒரு முன்னுரை மட்டுமே.


4 Responses  
  • துளசி கோபால் writes:
    June 23rd, 2007 at 4:52 pm

    சிலசமயங்களில் என்ன ஏதுன்னு புரியாத குழப்பங்களினாலும் மண(ன)முறிவு ஏற்பட்டுருது பத்மா.

    உங்க பதிவை ஆவலோடு வரவேற்கிறோம். புரிதல் ஏற்பட்டால்
    எல்லாருக்குமே ஒரு சமயத்தில் உதவும்தானே?

  • Lakshmi writes:
    June 25th, 2007 at 10:13 am

    //நம்மிடம் சாதாரணமாக மிக நல்ல முறையில் பழகும் ஒருவர் கூட தன் துணவர் அல்லது துணைவியிடம் மிகவும் கட்டுப்பாடு அல்லது அடக்குமுறையுடன் நடந்து கொள்ள முடியும். //
    இது ரொம்ப இயல்பா காணக்கிடைக்கிற ஒரு விஷயம்தான் பத்மா. ரொம்ப போக வேண்டாம், தன் பெண்ணை மருமகன் எப்படி நடத்தவேண்டும் என்று ஒவ்வொரு தந்தையும் எதிர்பார்க்கிறார்களோ அப்படியேதானா அவர்கள் தங்கள் மனைவியை நடத்தினார்கள் என்று எண்ணிப் பார்க்க சொல்லுங்கள் பார்ப்போம். ஹ்ம்ம்… நல்ல நண்பனா, நல்ல அப்பாவா இருக்கறவங்க கூட நல்ல கணவனா இருக்கறது அபூர்வம்தான்.

  • இலவசக்கொத்தனார் writes:
    June 25th, 2007 at 11:41 am

    நல்ல ஆரம்பம் பத்மா. உண்மையில் அதிக பேர் பங்கேற்று கருத்து சொல்லி இருக்க வேண்டிய பதிவு அது. நட்சத்திர வாரத்தில், ஒரு நாளைக்கு ஒரு பதிவு என இட்டதில் காணாமல் போய் விட்டது. ஆனால் இங்கு நல்ல ஒரு கருத்துப் பரிமாற்றம் செய்ய ஒரு தளம் ஏற்படுத்தித் தந்தமைக்கு நன்றி.

  • இலவசக்கொத்தனார் writes:
    June 25th, 2007 at 11:56 am

    லக்ஷ்மி,
    //ரொம்ப போக வேண்டாம், தன் பெண்ணை மருமகன் எப்படி நடத்தவேண்டும் என்று ஒவ்வொரு தந்தையும் எதிர்பார்க்கிறார்களோ அப்படியேதானா அவர்கள் தங்கள் மனைவியை நடத்தினார்கள் என்று எண்ணிப் பார்க்க சொல்லுங்கள் பார்ப்போம். ஹ்ம்ம்… நல்ல நண்பனா, நல்ல அப்பாவா இருக்கறவங்க கூட நல்ல கணவனா இருக்கறது அபூர்வம்தான்.//

    நியாயமான கேள்விதான். ஆனால் நண்பர்களுக்கு இடையிலோ, ஒரு தகப்பனுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலேயோ இருப்பதைவிட ஒரு கணவன் மனைவியிடையே ஈகோ என்பது மிக பெரிதாக வருவது. மாமனார் மருமகன் தகராறு என்பதை விட மாமியார் மருமகள் சண்டைகளைத்தானே அதிகம் பார்க்கிறோம். அதுவும் இந்த ஈகோ மேட்டர்தான்.

    நீங்கள் ஒரு கணவனைப் பற்றி சொன்னவுடன் எனக்கு பதில் சொல்லத் தோன்றுகிறதே. இந்த உணர்வின் பெயர் என்ன? நல்ல நண்பியா, நல்ல அம்மாவா இருக்கிறவங்க கூட நல்ல மனைவியா இருக்கறது ஏன் பெரிய விஷயமா இருக்குன்னு பதில் கேள்வி கேட்க தோணுதே,இது ஏன்?

    ஆனாலும் நல்ல கணவன் அபூர்வம் அப்படின்னு சொல்லறது கொஞ்சம் ஓவராத் தெரியலையா?


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions