Barrack Obama Domestic Violence Drinking Underage H1N1 KalhoNaHo Michael Johnson Minor drinking NJ Bloggers Obama Pop Music Radiation Terrorism Recession Snow Swine Flu USA President Womens Day அனுபவங்கள் (25) அறிவியல் (3) உடல் நல கல்வி (7) சமூகம் (39) நட்சத்திரம் (11) பெண்கள் (18) பொது (132) மருத்துவம் (9)
WP Cumulus Flash tag cloud by Roy Tanck requires Flash Player 9 or better.
இரண்டு மணிநேரமாக, இட்லிவடை பதிவில் பார்த்த அந்த புகைப்படம், ஒரு மனிதன் எரிந்து கொண்டிருக்க அதை அணைக்க முன்வராமல் எல்லாரும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற புகைப்படைத்தைப் பார்த்ததில் இருந்து வலிக்கிறது. எரிந்து போகும் மனிதனின் வலியை நினைத்து இல்லை, இறந்து கொண்டே இருக்கும் மனிதனை நினைத்து. ஒரு சக மனிதன் இறப்பதை பார்த்து கொண்டு இருக்கும் மனிதர்களை நினைத்து. நம்மை காப்பாற்றுவோர் யாரும் இல்லை என்ற உணர்வு தந்திருக்கும் வலியை நினைத்து, உடனே வராத தீயணைப்பு வீரர்களின் இல்லாத கடமை உணர்வை நினைத்து வலிக்கிறது.
இன்று 6 பேர், இன்று 7 பேர் என்று இறந்தவர் கணக்கை சொல்லும் தொலைகாட்சியோ, இன்று தீடீரென்று நடந்த துப்பாக்கி சூட்டில், இல்லை குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை, மொத்தமாய்ய் இறந்து போனவர் எல்லாம் மனிதர்கள் என்று வருந்திவிடா வண்ணம் இத்தனை ஈராக்கியர் இத்தனை அமெரிக்கர் என்று இறப்பிலும் பாகுபாட்டை சொல்லி விவாதிக்கும் செய்திக்குழுவை நினைத்து
போதும் திரும்ப வரட்டும் படைக்கள் என்று சொல்லியும் மக்கள் குரல் கொடுத்தும் தன் பிடியில் நிலையாய் இருக்கும் அமெரிக்க தலைவரை நினைத்து வலிக்கிறது. எப்படி முடியும்? ஒரு மனிதன் தீப்பிடித்து எரியும் போது காப்பாற்ற தோன்றாமல் எப்படி இருக்க முடியும்? ஒரு மனிதன் தூக்கில் இடுவதை வீடியோவில் பார்த்ததும் இராக் சண்டையில் காயப்படுவதையும் இறப்பதையும் உடனுக்குடன் தொலைகாட்சியில் காண்பித்ததும் இறந்து போகும் மனிதத்தை காட்டுகிறது. வாழ்க்கை கூட ஒரு வீடியோ விளையாட்டை போல மாறிக்கொண்டிருக்கிறது. வருத்தமாய் இருக்கிறது.
padhma, world is just that. they want news and hot news. if it is hurricane katrina one day, it is tornado another day. they get used to it and thats the worst kind of human psyche.
//போதும் திரும்ப வரட்டும் படைக்கள் என்று சொல்லியும் மக்கள் குரல் கொடுத்தும் தன் பிடியில் நிலையாய் இருக்கும் அமெரிக்க தலைவரை நினைத்து வலிக்கிறது. //
இன்னொரு அமேரிக்க தலைவி..அவர் அமேரிக்காவின் வெளியுறவுத்துறை செயலராக(Secretary of State) இருந்தார்,அவரின் பெயர் மெடலின் ஆல்பிரைட்(Madeline Albright ),அவர் ஒரு தொலைக்காட்சியில் இப்படி சொன்னார்,
” The death of half-a-million-children was an acceptable price to pay for bringing Iraq to its knees in the 1991 war ”
இந்தக் குழந்தைகள் இறந்தது அமேரிக்காவும், ஐக்கிய நாடுகள் சபையும் விதித்த பொருளாதாரத் தடைகளினால்..போரினால் அல்ல.
வலிக்கும் இடமெல்லாம் மறத்துப்போய் ரொம்ப நாள் ஆச்சுங்க
வலியின் கொடுமை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் என்பது எத்தனை உண்மை. வேடிக்கை பார்க்கும் வர்க்கமாகவே இருந்துவிட்டோம் பத்மா அவர்களே. என்ன செய்வது?
I think you have mistaken the picture. The picture didnt have a burning human. They were just burning Dinakaran and watching it burn.
may be you are refering to a different picture?
மானுடம் வாழ்கவென ஓங்கிக் குரல் கொடுப்பதைத் தவிர வேறென்ன செய்வது!
வல்லான் வகுத்ததே வாழ்வென ஆனபின்!
வலிக்கிறது…இங்கும்தான்!
//மனிதன் எரிந்து கொண்டிருக்க //
effigy கிடையாதா, நிஜ ஆளேவா? அடப்பாவிகளா.
பத்மா,
http://idlyvadai.blogspot.com/2007/05/blog-post_10.html
இந்த பதிவையா குறிப்பிடுகிறீர்கள்?
படத்தில் எரிந்துகொண்டிருப்பது கொடும்பாவி(effigy) அல்லது தினகரன் நாளிதழ்கள் என்று நினைக்கிறேன்.
மற்றபடி நீங்கள் சொல்வதில் 100% உடன்பாடே. உங்கள் பதிவைப் படித்தபின் இன்னும் வலிக்கிறது (
//வாழ்க்கை கூட ஒரு வீடியோ விளையாட்டை போல மாறிக்கொண்டிருக்கிறது. வருத்தமாய் இருக்கிறது. //
சரியாகக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஆமாம் பத்மா! சமூகக் கொடூரங்களை, அநீதிகளை இயல்பாக்க இதுதான் time tested வழி. இப்போது வீடியோ விளையாட்டு, முன்பு விதி, போன ஜன்ம விளைவு, மாயை, இப்படியான மயக்கங்களை உருவாக்குதல்.
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி. கடந்த வார ஜூனியர் விகடனில் அதே புகைப்படங்களையும், இணைந்த முழுக்கட்டுரையையும் படித்த பின் அது ஜெயஸ்ரீ ஒன்னது போல கொடும்பாவி என்றே தெரிகிறது. தவறான புரிதலுக்கு வருந்துகிறேன். ஆனாலும் இன்னமும் கோபிநாத்தின் அன்னையின் கதறலை பார்த்தபின் பொதுவான உலக வன்முறை குறித்தான வலி நீங்கவில்லை. அதிக வன்முறைக்கு நாம் எல்லாரும் பழகுகிறோம் என்றே தோன்றுகிறது. தங்கமணி: குழந்தைகள் நிரைய வீடியோ விளையாட்டில் வன்முறை கொண்டதை விளையாடும் போது சுட்டு, இரத்தம் வருவதை பார்த்து பார்த்து பழகிப்போய்விடும் என்ரு உளவியல் கூட்டங்களில் விவாதிப்பதுண்டு. சில சமயம் மிக தத்ரூபமாக காட்ட எடுக்கும் திரைப்படங்கள் போன்றவற்றில் வன்முறை, தொலைகாட்சியில் வன்முறை என்றும் பழகி எல்லாமே விளையாட்டை போல ஆகிவிட்டது.
எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? மானுடம் வென்றதம்மா என்றார் புலவர் ஒருவர். இந்தச்செய்தியை எல்லாம் படிக்கும்போது மானுடம் வீழ்ந்ததம்மா என்றுதான் சொல்லத்தோன்றுகிறது வலியின் வேதனையில்..
உலகம் இப்படித்தான் இருக்கிறது பத்மா! எரிகிறவனை வேடிக்கை பார்க்கிறவர்கள் ஒரு பக்கமென்றால் சகமனிதனை எரிக்கத் துணிகிற மனதை என்ன சொல்ல… இரக்கம் வற்றிக்கொண்டிருக்கிற இந்த உலகத்தில் வாழ்வதென்பதும்கூட ஒருவகையில் சிறுகச் சிறுக எரிதலுக்குச் சமானந்தான்.
//சில சமயம் மிக தத்ரூபமாக காட்ட எடுக்கும் திரைப்படங்கள் போன்றவற்றில் வன்முறை, தொலைகாட்சியில் வன்முறை என்றும் பழகி //
அப்படியா? அதற்குமுன் வன்முறை இல்லாம இருந்துச்சா தமிழ்நாட்டுல?
However, 1. வன்முறை படங்களில் வருவது தப்புத்தான். 2. உளவியல்முறையின் கூற்றும் சரியே. 3. நம்ம மக்களின் பிரச்சினை வேறென்று நினைக்கிறேன். சினிமா ஒரு சால்ஜாப்பு அல்லது சப்போர்ட்டு. 4. I cannot find the blog url now, but once a guy mentioned (in his blog) that he used to believe that men get more pleasure in rape than in consentual sex and he attributed it to movies.
ahhh!!!!,
“Having said that”னு போட நினைச்சு ஏன்தான் howeverனு அடிச்சிருக்கேன்னு தெரியவேயில்லை.
You are totally right about the influence of violence in TV/movie/media on people’s behaviour and their actions. ஒரு Law & Order episodeல ஒரு murder caseல defence வக்கீல், தன்னோட client இந்தமாதிரி டிவி பார்த்தும் Game விளையாண்டும் கொலை செய்வது சாதாரண செயல்களில் ஒன்று-ன்னு நினைச்சுட்டார், அது அவரோட தவறில்லை-னு வாதாடுவார். முழு caseஉமே அதை அடிப்படையாக வைத்தே வாதாடுவார்.
ஷைலஜா, தமிழ்நதி: நன்ரி. அழகாக சொல்லி இருக்கிறீர்கள். பிரேமலதா: In fact I am not saying that violence in Tv shows or movies have increased or decreased violence. some of the Movies these days are more violent and repeated video games condition the brain. In fact there was a research done on children’s behavior toward blood and this dramatically changed. One Elonel Tates a 11 year old boy beat up a girl (6 year old) and is in jail. he answered the counselor that he thought the girl would come back as they do in his games. we see this repeatedly in troubled children who are in correctional facilities. Major research is not done, but I believe that this can condition the brain due to constant reinforcement.
Name (required)
Mail (will not be published) (required)
Website