»
S
I
D
E
B
A
R
«
My child arrived just the other day
November 17th, 2006 by பத்மா அர்விந்த்

வருண், நீ வீட்டிலெயே இரு, வீட்டுபாடம் முடிச்சுட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கோ. நான் வர ரொம்ப லேட்டாகும் என்றாலும் விட மாட்டான். நானும் உன்னுடன் வருவேன், உனக்கு உதவிசெய்ய. Focus group ஆரம்பிச்சப்புறம் நூலகத்தில இருந்து வீட்டு பாடம் செய்கிறேன் என்று அவன் நிழலாய்த் தொடராத நாட்கள் இல்லை.

அர்விந்த் சில கூட்டங்களுக்காக ஏதேனும் பவர்பாயிண்ட் தயாரித்துக்கொண்டிருந்தால், allow me dad, என்று அங்கேயும் அவன் உதவி இருக்கும்.பனியைத் தள்ளுவதானாலும், சமையலறையை கூட்டி சுத்தம் செய்வதானாலும், வார இறுதியில் துணிகள் துவைத்து மடிப்பதானாலும், கதவுக்கு பூட்டு மாற்ற , சுவருக்கு வர்ணம் பூச என்று அவன் கைவண்ணம் படராத வேலைகளே இல்லை.

தாத்தாவிற்கு தன் வயதில் 10 வருடங்களை தருகிறேன் என்று பங்கு போடுவதானாலும், இருக்கும் மாம்பழத்தை தர மனம் வராமல் இறைவனிடம் உனக்கு பாதி எனக்கு பாதி என்று சொல்லி வெட்டி அதை நரசிம்மரின் சிலை முன் வைப்பதானாலும் சரி இன்னமும் அவன் குழந்தைத்தனம் தெரியும்.

பாட்டிக்கு பிடித்த பாடல்களை போட்டு அவளுடன் ரசிப்பதானாலும், நூல் வேலைகள் கற்றுக்கொண்டு அவளுடன் அவற்றை செய்வதானாலும் சரி, பாட்டியின் கால்களுக்கு lotion தடவி மசாஜ் செய்வதிலும் சரி அவளை கவர்ந்தவன்.

கையில் அடிபட்ட ஆசிரியருக்கு தேடி மருந்து கடையில் மருந்து வாங்கி கொண்டு செல்வதிலும், தன்னைவிட சிறிய மாணவர்களுக்கு பள்ளியில் உதவுவதிலும் ஆசிரியர் வியந்து எனக்கு நன்றி சொல்லி மடல்கள் அனுப்புவதுண்டு. நேற்று ஆசிரியர்கள் பெற்றோர் சந்திப்புக்கு சென்ற போது அவன் ஆசிரியர் ஒருவர் அவனின் சமுதாய அக்கறை திறன் குறித்து சிலாகித்த போது இந்த நோக்கை இவன் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை மட்டும் எழுந்தது.Mr.Knowledge, Mr.Humanity என்ற விருதுகளை பள்ளியில் வருடா வருடம் பெறுபவன்.

ஐபாடோ கேம்கூயூபோ வாங்கும் முன் பல பொருட்களின் விலை, எங்கே மலிவாக கிடைக்கும் என்பது முதல், பொருள் நுகர்வோர் விமரிசனங்கள் படித்து அதைப்பற்றிய குறிப்பு எழுதி அவன் கேட்கும் விதமே தனி. வாங்கித்தருகிறேன் என்று சொன்னாலும் பிறகு உடனே செல்ல முடியாவிட்டாலும் கூட அவன் ஏமாந்து வருத்தமடைந்ததும் இல்லை.

விடுமுறைக்குச் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்து கிளம்பும் முதல் நாளே ஆசை ஆசையாய் துணிகளை மடித்து எடுத்து விடுமுறைக்கு தயாராகும் பிள்ளை மறு நாள் அர்விந்த்தின் அலுவலக பணி நிமித்தம் செல்ல முடியாத நிலை வந்தாலும் வருத்தம் தெரிவிக்கும் தந்தையிடம் பக்குவமாய், I understand dad என்று சொல்லும் போது முதிர்ச்சி தெரியும்.

இதயடத்தின் ஓட்டத்தை கண்காணிக்க நாள் முழுதும் வைத்து கொள்ளும் lead ஐ காலையில் குளிக்கும் முன் எடுக்கும் போது தோலின் கீழாய் எட்டி பார்க்கும் துளி இரத்தம் எனக்கு தரும் பதற்றம் கண்டு அவசரமாய் துடைத்து இன்னொரு lead ஐ ஒட்ட வைத்து என்னை சமாதானம் செய்யும் பிள்ளையிடம் என்ன சொல்ல? மருத்துவமனையில் இரத்தம் எடுக்க வருவோரும் சலைன் செலுத்த வருவோரிடம் அவர்கள் இடைவிடாமல் வெலைச் எய்வதை பாராட்டி நன்றி சொல்லாமல் அவன் இருந்ததில்லை. இவனின் வலியும் உபாதைகளும் எனக்கு மாற்றம் செய்விக்க முடிந்தால் எத்தனை எளிதாக இருக்கும்.

உடற்பயிற்சி என்றாலும் சங்கீத வகுப்பென்றாலும் காய்கறி கடையானாலும் மாலை வேளைகளில் செல்லும் பெண்கள் விடுதியானாலும் சிரித்த முகத்துடன் உடன் வரும் பிள்ளை படும் துன்பம் கண்டு சில சமயங்களில் வருத்தமாய்த்தான் இருக்கிறது. 12 வருடங்கள் முன் ஒரு நவம்பர் 17 இல் பிறந்த இவன் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேற வேண்டும் என்ற வாழ்த்துக்கள் தவிர தரக்கூடியது எதுவும் இல்லை. காலம் தான் எத்தனை விரைவாக கடந்து போகிறது இதோ இந்த பாடல் சொல்வதைப்போல:
My child arrived just the other day
Came to the world in the usual way
But there were planes to catch and bills to pay
He learned to walk while I was away
He was talkin’ ‘fore I knew it
And as he grew he said,
‘I’m gonna be like you, Dad,
You know I’m gonna be like you.’

And the cat’s in the cradle and the silver spoon,
Little boy blue and the man ‘n the moon.
‘When you comin’ home?’
‘Son, I don’t know when. We’ll get together then.
You know we’ll have a good time then.’

Well, my son turned ten just the other day.
He said, ‘Thanks for the ball, Dad. Come on, let’s play.
Could you teach me to throw?’
I said, ‘Not today. I got a lot to do.’
He said, ‘That’s okay.’ And he walked away and he smiled and he said,
‘You know, I’m gonna be like him, yeah.
You know I’m gonna be like him.’

Well, he came from college just the other day,
So much like a man I just had to say,
‘I’m proud of you. Could you sit for a while?’
He shook his head and he said with a smile,
‘What I’d really like, Dad, is to borrow the car keys.’
See you later. Can I have them please?

I’ve long since retired, my son’s moved away.
I called him up just the other day.
‘I’d like to see you, if you don’t mind.’
He said, ‘I’d love to, Dad, if I could find the time.
You see my new job’s a hassle and the kids have the flu,
But it’s sure nice talkin’ to you, Dad.
It’s been sure nice talkin’ to you.’
And as I hung up the phone it occurred to me,
He’d grown up just like me.
My boy was just like me.


27 Responses  
  • smg writes:
    November 17th, 2006 at 12:14 pm

    Good post and you r lucky to have a child like this. All the best to varun and u…

    http://internetbazaar.blogspot.com

  • thanu writes:
    November 17th, 2006 at 12:16 pm

    convey my heartfelt wishes to varun , Padma! 2marrw being my daughters b’dy, i think I will remember his also hereafter.

  • மங்கை writes:
    November 17th, 2006 at 12:20 pm

    வருணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

    இது கண்களில் நீர் வரவைத்த பதிவு பத்மா… அவன் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன்..பல வெற்றிகள் காணவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்குறேன்…

  • பாலராஜன்கீதா writes:
    November 17th, 2006 at 12:22 pm

    வருண் அர்விந்த் அவர்களுக்கு எங்களின் இனிய பி
    றந்த நாள் வாழ்த்துகள்

  • ravi srinivas writes:
    November 17th, 2006 at 12:25 pm

    wonderful boy.many more happy returns of the day

  • dharumi writes:
    November 17th, 2006 at 12:28 pm

    like mother like son.

    பெருமைக்குரிய தாய்.

    வருண் நல்ல உடல் நலத்தோடு நீடு வாழ …

    ஒரு தாத்தாவாக…HAPPY BIRTHDAY
    AND MANY MANY HAPPY RETURNS OF THE DAY, VARUN.

  • அகத்தீ writes:
    November 17th, 2006 at 1:32 pm

    நல்ல துணைவர்.
    நல்ல பிள்ளை.
    நீடூழி வாழ்க.

  • திரு writes:
    November 17th, 2006 at 2:10 pm

    வருண் உடல் நலத்துடன் இனிதாய் பல்லாண்டு பல்லாண்டு வாழ பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வருணின் மனிதநேயம் என்னை சிலிர்க்க வைக்கிறது. இனிதே வாழட்டும் இந்த மனித பண்பாளர்!

  • Jayashree writes:
    November 17th, 2006 at 2:11 pm

    //கையில் அடிபட்ட ஆசிரியருக்கு தேடி மருந்து கடையில் மருந்து வாங்கி கொண்டு செல்வதிலும், தன்னைவிட சிறிய மாணவர்களுக்கு பள்ளியில் உதவுவதிலும் ஆசிரியர் வியந்து எனக்கு நன்றி சொல்லி மடல்கள் அனுப்புவதுண்டு. நேற்று ஆசிரியர்கள் பெற்றோர் சந்திப்புக்கு சென்ற போது அவன் ஆசிரியர் ஒருவர் அவனின் சமுதாய அக்கறை திறன் குறித்து சிலாகித்த போது இந்த நோக்கை இவன் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை மட்டும் எழுந்தது.Mr.Knowledge, Mr.Humanity என்ற விருதுகளை பள்ளியில் வருடா வருடம் பெறுபவன்.//

    இதைப்போல ‘ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்” அனுபவம் இன்னும் பலநூறு முறை உங்களுக்கு ஏற்படட்டும். வருண் நீண்ட ஆயுளும், உடல் நலமும், , நற்பண்புகளும் அறிவும் பொருளும் புகழும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

    Have a Wonderful b’day Varun.

  • Jayashree writes:
    November 17th, 2006 at 2:13 pm

    //கையில் அடிபட்ட ஆசிரியருக்கு தேடி மருந்து கடையில் மருந்து வாங்கி கொண்டு செல்வதிலும், தன்னைவிட சிறிய மாணவர்களுக்கு பள்ளியில் உதவுவதிலும் ஆசிரியர் வியந்து எனக்கு நன்றி சொல்லி மடல்கள் அனுப்புவதுண்டு. நேற்று ஆசிரியர்கள் பெற்றோர் சந்திப்புக்கு சென்ற போது அவன் ஆசிரியர் ஒருவர் அவனின் சமுதாய அக்கறை திறன் குறித்து சிலாகித்த போது இந்த நோக்கை இவன் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை மட்டும் எழுந்தது.Mr.Knowledge, Mr.Humanity என்ற விருதுகளை பள்ளியில் வருடா வருடம் பெறுபவன்.//

    இதைப்போல ‘ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்” அனுபவம் இன்னும் பலநூறு முறை உங்களுக்கு ஏற்படட்டும். வருண் நீண்ட ஆயுளும், உடல் நலமும், , நற்பண்புகளும் அறிவும் பொருளும் புகழும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

    Have a Wonderful b’day Varun.
    //கையில் அடிபட்ட ஆசிரியருக்கு தேடி மருந்து கடையில் மருந்து வாங்கி கொண்டு செல்வதிலும், தன்னைவிட சிறிய மாணவர்களுக்கு பள்ளியில் உதவுவதிலும் ஆசிரியர் வியந்து எனக்கு நன்றி சொல்லி மடல்கள் அனுப்புவதுண்டு. நேற்று ஆசிரியர்கள் பெற்றோர் சந்திப்புக்கு சென்ற போது அவன் ஆசிரியர் ஒருவர் அவனின் சமுதாய அக்கறை திறன் குறித்து சிலாகித்த போது இந்த நோக்கை இவன் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை மட்டும் எழுந்தது.Mr.Knowledge, Mr.Humanity என்ற விருதுகளை பள்ளியில் வருடா வருடம் பெறுபவன்.//

    இதைப்போல ‘ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்” அனுபவம் இன்னும் பலநூறு முறை உங்களுக்கு ஏற்படட்டும். வருண் நீண்ட ஆயுளும், உடல் நலமும், , நற்பண்புகளும் அறிவும் பொருளும் புகழும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

    Have a Wonderful b’day Varun.

  • துளசி கோபால் writes:
    November 17th, 2006 at 2:32 pm

    அது என்ன.. ஆங்கிலத் தலைப்பு வச்சா வலையிலே 50 % கழிவான்னு
    கேட்டு கலாட்டா பண்ணலாமுன்னு வந்தால்………………

    மனசு அப்படியே இளகிருச்சு பத்மா. குழந்தை ஆரோக்கியத்தோடும்,
    பூரண ஆயுசோடும் இருப்பான். கவலையை விடுங்க.

    பிறந்தநாள் வாழ்த்துகள் மை (ஜெண்டில்) ச்சைல்ட்!!

  • வைசா writes:
    November 17th, 2006 at 3:02 pm

    வருணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • Bala Subra writes:
    November 17th, 2006 at 3:04 pm

    வாழ்க வளமுடன்! :-)

    —மாம்பழத்தை தர மனம் வராமல் இறைவனிடம் உனக்கு பாதி எனக்கு பாதி என்று சொல்லி வெட்டி அதை நரசிம்மரின் சிலை முன் வைப்பதானாலும் சரி —

    மகனின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நிறைவாக வெளிப்படுத்தும் பதிவுக்கு நன்றிகளும்…

  • பத்மா அர்விந்த் writes:
    November 17th, 2006 at 3:56 pm

    நன்றி SMG.

    தாணு; வாங்க. வலைப்பதிவுக்கு மீண்டும் வருகை தருவதற்கு. நலமா?

    மங்கை, வைசா: வாழ்த்துக்களை சொல்கிறேன்.

    பாலராஜன் கீதா, ரவி: வாழ்த்துக்களுக்கு நன்றி

  • பத்மா அர்விந்த் writes:
    November 17th, 2006 at 4:01 pm

    தருமி அவனுக்கு கிடைத்த இன்னொரு தாத்தாவின் வாழ்த்துக்களைவிட சிறந்த பரிசென்ன இருக்க முடியும். நன்றி

    திரு:நன்றி

    துளசி: இப்பவும் கலாய்க்கலாம்தானே. உங்கள் பதிவு மலையாளம் ஹிந்தி என்று பன்மொழிகளில் வருது. அந்த ஞாபகமா:)

    உங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி

  • பத்மா அர்விந்த் writes:
    November 17th, 2006 at 4:02 pm

    ஜெயஸ்ரீ, பாலா: வாழ்த்துக்களுக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி

  • premalatha writes:
    November 18th, 2006 at 5:30 am

    beautiful poem.

    Happy Birthday to Varun and all the wishes in the world to Varun’s mom and dad.

  • arul writes:
    November 18th, 2006 at 6:04 am

    have a great day varun. .another november child. ofcourse we are special.

  • Ramachandranusha writes:
    November 18th, 2006 at 10:29 am

    வருணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், பத்மா,எம்டி நெஸ்ட் சின்ரோம்க்கு தயாராகுவதுபோல் உள்ளது கவிதை. குழந்தைக்கு என்ன உடம்புக்கு, படிக்கும்பொழுது வருத்தமாய் இருந்தது. நமக்கு வரும் நோயை தாங்கும் மனது பிள்ளைகளுக்கு ஒன்றென்றால் துடித்துப் போகிறது :-(

  • kannabiran, RAVI SHANKAR (KRS) writes:
    November 18th, 2006 at 9:16 pm

    Happy Birthday Varun Boy!
    -from my Shravan Boy.

    //இருக்கும் மாம்பழத்தை தர மனம் வராமல் இறைவனிடம் உனக்கு பாதி எனக்கு பாதி என்று சொல்லி வெட்டி அதை நரசிம்மரின் சிலை முன் வைப்பதானாலும் சரி இன்னமும் அவன் குழந்தைத்தனம் தெரியும்//

    Wow, இது நல்ல ஐடியாவா இருக்கே; இது தெரிந்திருந்தால் முருகன் பழத்துக்கு அவ்ளோ அல்லாடியிருக்க மாட்டாரே!:-)

    குழந்தை, பூரண ஆரோக்யத்துடன், Mr.H & Mr.K ஆக வளர்ந்து, பெற்றோர் பூரிக்க, வேங்கடவன் நல்லருளும், வைத்ய வீரராகவன் ஆசியும் என்றும் உண்டு!
    Enjoy your day!

  • பொன்ஸ் writes:
    November 20th, 2006 at 11:36 am

    வருணுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  • பங்காளி writes:
    November 20th, 2006 at 11:53 am

    நான் கடவுளாய்க் கூட இருக்கலாம்…..யார் கண்டது…

    விரைவில் வலியும்,வேதனையும் மறைந்து மகிழ்ச்சி தங்கும்…

    இது நடக்கும் போது என் நினைவு வரும் உங்களுக்கு

  • ரவியா writes:
    November 21st, 2006 at 7:32 am

    வருணுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் பத்மா !

    தமிழ் படங்கள்/பத்திரிக்கைகள் போல் வள வள என்றில்லாமல்( P.வாசு சென்ட்டிமண்டில்லாமல்) கண்ணியமான பதிவு. SIMPLICITY AND DIGNITY WITHOUT ANY SELF PITY.

    BONNE SANTE TO VARUN

  • பத்மா அர்விந்த் writes:
    November 26th, 2006 at 10:11 am

    பிரேம்லதா, பொன்ஸ்,உஷா: நன்றி. தாமதமான பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன். பிரேம்லதா, இந்த பாட்டை பல பாடகர்களும் பாடி இருக்கிறார்கள். ஒவ்வொருமுறை கேட்கும்போதும் நெகிழ வைக்கும்.
    ரவியா: மெர்சி. பாராட்டுக்களுக்கு நன்றி

    பங்காளி: உங்கள் பதிவுகளையும் படித்தேன். தொடர்ந்து எழுதுங்கள்.
    ரவி: வேங்கடவனின் வாழ்த்துக்களை தவிர வேறென்ன வேண்டும்? சுப்ரபாதம் வேகமாக போவது போல பிள்ளைத்தமிழ் இன்னும் வளரவில்லை போல் தெரிகிறதே

  • ராம்கி writes:
    November 27th, 2006 at 12:20 am

    வருணுக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • kannabiran, RAVI SHANKAR (KRS) writes:
    November 28th, 2006 at 2:46 pm

    //ரவி: சுப்ரபாதம் வேகமாக போவது போல பிள்ளைத்தமிழ் இன்னும் வளரவில்லை போல் தெரிகிறதே//

    தத்தித் தத்தி நடக்கிறாள் பிள்ளைத்தமிழ்! :-)
    அடுத்த பதிவு போட்டாச்சுங்க பத்மா; உஷ்! அன்னை மீனாட்சி தூங்குகிறாள்! வந்து பாருங்க :-)

  • அன்பு writes:
    November 28th, 2006 at 9:39 pm

    பத்மா இன்றுதான் இந்தப் பதிவை வாசித்தேன். வருண் – எழிலுக்கு எல்லாவிதத்திலும் அண்ணா!
    (காலங்காத்தால) கண்களில் நீர் முட்டியது.
    விதையொண்ணு போட்டா செடியொன்னா முளைக்கும்:)


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions