இத்தனை கஷ்டங்கள் இருந்தும், தன் உறவு, குடும்பம் இவற்றை விட்டு வந்தாலும், தாதியர்கள் அதிகமாக மேலை நாடுகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். 1990களின் ஆரம்பம் முதல் 55% பெண்கள் தாதியராக மேலை நாடுகளுக்கு பிலிப்பன்ஸிலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்களால் கிடைக்கும் அன்னிய நாட்டு செலவாணி மிக அதிகம் எனவும், மின்பொருளுக்கு அப்புறம் தாதியர் ஏற்றுமதியே அதிகம் எனவும் பிலிப்பைன்ஸ் கூறுகிறது. இவ்வாறு பெண்கள் குடியேறுவது அதிகரிக்க, அதன் பலன் கண்டு மேலும் படித்தவர்கள், கல்லூரி மாணவிகள், வியாபார நிமித்தம் வருபவர்களும் தாதியராக வருவது அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் தாழ்ந்த ஒரு நாடு இது போல படித்தவர்களையும் இழப்பது மேலும் துன்பங்களை அதிகரிக்கிறது. பரனாவின் ஆராய்ச்சியில் தாதியராக வந்தவர்களில் பெரும்பாலோர் கல்லூரி பட்டதாரிகளாகவே இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதுவும் பெரும்பாலோர் திருமணமான 30 வயதுக்குள்ளான பெண்களே.
இதில் ஆண்களின் வேலை என்ன? மேல்தட்டு மனிதர்களில் ஆண்கள் குழந்தை வளர்ப்பதை பெண்களிடம் விட்டுவிடுகிறார்கள். இன்னும் சிலர் அரேபிய நாடுகளுக்கு ம் இன்னும் பிற நாடுகளுக்கும் அதிக ஊதியத்தை எதிர்பார்த்து சென்றுவிடுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஊர்களில் தங்கி இருந்து குழந்தைகளை வளர்க்கிறார்கள்.
பிற நாடுகளுக்கு வந்த பெண்கள் தாங்கள் விருப்பட்டு வந்ததைவிட ஓடி வந்தவர்கள் அதிகம் என்றும் அமெரிக்க குடியேற்ற துறை தெரிவிக்கிறது ( INS) ஒரு பெண் கீழ் கண்டவாறு சொன்னார்” நான் என் கணவரால் தினமும் அடிக்க பட்டேன். என் குழந்தைகளை பற்றி கூட நினக்க முடியாமல், எப்போதும் எப்படி தப்பிப்பது, வருவது என்றே நினைத்து கொண்டிருந்தேன். நான் கொலை செய்யப்பட்டு விடுவேன் என்பது என் நினைவாகவே இருந்தது. இல்லை என்றால் நான் அவரை கொலை செய்துவிடுவேனோ என்ற பயமும் இருந்தது. என் குழந்தைகள் என் சகோதரிகளுடன் இருக்கின்றனர். விமானத்தில் ஏறியபின், கூண்டைவிட்டு வெளியே வந்த பறவையை போல உணர்ந்தேன். என் குழந்தைகளை நினைத்தால் வருத்தமாய் இருந்தது. மற்றபடி என் ஊரை விட்டு வந்த வருத்தம் இல்லை.
இன்னும் சில ஆண்கள் தங்கள் ஊரில் இருந்து அனுப்புகின்றன பணத்தை செலவு செய்து கொண்டு அவர்களை கைவிட்டு விடுவதும், இன்னொரு பெண்ணை மணம் செய்து கொண்டு இவர்களையும் ஊரில் விட்டு வந்த குழந்தைகளையும் தவிக்க விட்டுவிடுகிறார்கள். முதலில் அடிக்கடி வரும் கடிதங்கள் காலப்போக்கில் நின்று விடுகின்றன. குழந்தைகள் எங்கே என்று தெரியாமல் மனம் க்ஷ்டப்படும். ஊருக்கு சென்று பார்க்கவும் கையில் காசில்லை, கடவு சீட்டு மீண்டும் கிடைக்காமல் போகலாம் என்று பல நிலையில்லா பிரச்சனைகளில் இவர்கள் வாழ்கிறார்கள்.
இன்னும் சில வீடுகளில் கணவன் வேறு நாட்டில் வேலை பார்த்து பிறகு ஊ ரருக்கு திரும்ப உடனே மனைவி கிளம்ப வேண்டி இருக்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். ஒர் பெண்ணின் மகன் அவளுக்கு அடிக்கடி கடிதம் எழுதும் போது ஒரு தலைமட்டும் வரைந்து அனுப்புவான். அதில் கண்ணிலிருந்து கண்ணீர் வருவதை போல படம் வரைந்து அனுப்புவதையும் சொன்னாள்.அதேபோல அடுத்த குழந்தைகள் தன் அம்மாவுடன் பொது இடத்திற்கு வருவதை பார்த்து பிள்ளைகள் மனம் வருந்துவதால், அவர்கள் வெளியிடத்திற்கு செல்வதே இல்லை என்பதையும் சொல்லி வருத்தப்பட்டாள்.
பணி இடங்களில் இவர்களுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுவதும், உடல் நல ம் முடியாமற் போகும் போது கவனிக்க ஆளின்றி அவஸ்தைப்படுவதும், உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியாமல் இளமையை தொலைப்பதும் பெரிய துரதிர்ஷ்டம்.
தாதியர் சங்கிலியின் கடைசி இணப்பு: கீழை நாடுகளில் இருந்து வரும் தாதியர்கள் மேலை நாடுகளுக்கு செல்வது, மேலை நாடுகளில் தாய்மைக்கான தேவையும் கீழைநாடுகளில் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. 6 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகள் உள்ள பெண்கள் 1950 ஊதியம் பெற்று வேலை செய்தவர்கள் 15% மட்டுமே. இண்றூ இது 65% ஆக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 45% பெண்கள் வேலை பார்க்கும் மக்கள்் தொகையை குறிக்கிறது (labor force). 18 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளை கொண்ட அன்னைகள் 75% உம், 6 வயதிற்கு குறைவாக குழந்தைகளை உடையவர்கள் 65% வேலை செய்கிறார்கள். அதேபோல ஒரு வாரத்திற்கு செய்யும் பணிநேரமும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
முன்பு பாட்டிகளும் மற்ற பெண் உறவினர்களும் குழந்தைகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.ஆனால் இப்போது பாட்டிகளும் உறவினர்களும் வேலைக்கு போவதால் காப்பகங்களும், இன்ன பிற தாதியரும் தேவையாய் இருக்கிறது.
ஆக இந்த முதல் சங்கிலியில் பெண்கள் ஒரு நல்ல தாதி கிடைத்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்கள் இதனால் தாதியர் தங்கள் நாட்டில் பெறுவதைவிட அ திகமாக ஊதியம் தர முன்வருகிறார்கள். இப்போது இது வெறும் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பணியாய் மட்டும் இல்லாமல் தங்கள் வயதான பெற்றோரை பார்த்து கொள்ளவும் உபயோகமாகிறது. இந்த வகையில் பார்த்தாலும் தங்கள் வயதான பெற்றோரை தவிக்க விட்டு இன்னொரு நாட்டில் உள்ள வயதான பெற்றோரை பார்த்து கொள்வதால் இங்கும் கவலையும் கரிசனமும் இடமாறுகிறது.
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeராம்கி wrote:
இந்தப் பின்னணியில் அம்மாக்களின் குற்ற உணர்வு (Mothers’ guilt) என்ற தலைப்பில் ஒரு டாக் ஷோ செய்தோம். ஆனால் அதில் சங்கிலியாக நீள்வதை சொல்லவில்லை. மாறாக நான் அப்போது இது குறித்து அறிந்திருக்கவில்லை.
மேலும் குற்றவுணர்வு என்ற சொல்லில் எனக்கு முழு உடன்பாடு ஏற்படவில்லை.தனது குழந்தை முதன் முதலில் கவிழ்வதை, உட்கார்வதை, நிற்பதை,நடப்பதை பாட்டியோ தாதியோ சொல்வதைவிட ஒரு தாய் முதலில் பார்த்துணர்வது மகிழ்ச்சியானது தான். ஆனால் அதற்காக வேலைக்குப் போகாமல் – சமூக உற்பத்தியில் பங்கேற்காமல் – வீட்டிலே இருக்கச் செய்வது முறையா? அதற்காக வேலைக்குப் போகும் தாய்மார்களுக்குக் குற்றவுணர்வு இருக்குமா என்று விவாதிப்பதில் சந்தேகம் இருந்தது.
மிகச் சாதாரணமாகத் தெரியும் வெளிநாட்டில் வேலைக்குப் பின்னணியில் இருக்கும் தனிமனித இழப்புகளைப் பெரும்பாலான மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. உங்கள் பதிவுகள் அதில் வெளிச்சம் பாய்ச்சுகின்றன..
reply to this comment
02/08 23:59:21
Padma Arvind wrote:
ராம்கி
உங்களுடைய டாக்ஷோ பற்றி எழுதுங்களேன். இந்த பதிவில் நான் எல்லா வேலைக்கு போகும் பெண்களையும் விட தாதியராக வரும் பெண்கள் பற்றி எழுதியதன் காரணம் இவர்கள் அதிக அளவில் வருவதும் பலவித இன்னல்களை அனுபவிப்பதும் ஆகும். பொருளாதாரத்தின் கீழ்நிலைகளில் உள்ள நாட்டிலிருந்து வரும் இவர்கள் கடவு சீட்டு சரியாக இல்லாததால் பலவித இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள். ஊரிலும் உறவுகளை தொலைக்கிறார்கள். நன்றி
reply to this comment
04/08 15:35:59
ராம்கி wrote:
தனிமடலில் விபரம் அளித்திருக்கிறேன்.
நன்றி பத்மா.