வலைப்பூக்களாக இருந்த போதே சிலருடைய பதிவுகளை படித்தும் பின்னூட்டமும் இட்டு வந்திருந்த நான், நாமே எழுதினால் என்ன என்று தோன்றியபோது, முதலில் அதற்கு விதை விதைத்தவர்கள் வெங்கட்டும், ரோசாவசந்தும்தான். வெங்கட்டின் ஒரு பதிவிற்கான என் பின்னூட்டதை பார்த்து என்னை எழுத தூண்டியவர்கள் அவர்கள். அதன் பின் காசி, மதி போன்றோரின் தொடர் ஊக்கம் என்னை செயல்படுத்த தேவையான ஆர்வத்தை தந்தது.
நா.கன்னன் எனக்கு உத வதொடங்கி பின் மதி, வெங்கட் ஆகியோர்களால் இடமும் வசதியும் கிடைத்தது. என் நன்றிகள். இவர்களுடைய ஊக்கம் விழலுக்கு இறைத்த நீரானால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பு.
எழுத துவங்கியபோது Tag line அல்லது விளக்கமாக என்ன எழுதலாம் என்று எண்ணியபோது நிஜங்களின் அவலம் என்று மட்டுமே தோன்றியது. கற்பனையில் நீராடி கனவுகளில் உடை உடுத்தி அற்புதமாக வாழ்வதிலே ஆனந்தம் என்ன உண்டு?
கனவுகளில் ஒப்பந்தகளில் கையெழுத்திட்டாலும் நிஜத்தில் போராட்டங்களை நாம் தினம் சந்திகிறோம். ஒரு குளிர்பதனப்பட்ட அறையில் கணிணிகளுடன் வேலை செய்வதில்லை என் பணி.வறுமை கோட்டிற்கும் கீழே உள்ள மக்களுடன் களத்தில் உழைப்பதே என் பணி என்பதால் பூமியின் புழுதியுடன் என் காலுக்கு உறவதிகம் (நண்றி:மேத்தா) கணிணியுடன் வேலைசெய்து மனதிற்கு திருப்தியாக இல்லததால் இந்ததுறைக்கு வந்தேன். இந்தியாவிலிருந்து வந்தவர்கள், மொழியும் சட்டமும் புரியாமல் கஷ்டபடுகிறவர்கள் அனேகம். இவர்களுக்கு என்னாலும் தனிப்பட்ட முறையில் உதவ முடிவதில் எனக்கு மகிழ்ச்சியே.
வறுமைகோட்டில் வாழ்க்கையை தொடங்கி முன்னேறிய எனக்கு அனுபவங்கள் அதிகம்.
வாழ்வில் எத்தனை மண்ணிடை கண்டேன்.அதற்காக என் நன்றிகள்.கற்றவை குறைவே. கல்லாதவையோ இப்பூமியின் பரப்பளவாகும். இந்தியாவிற்கு திரும்பி செல்வதைவிட இங்கேயே இருக்கும் இந்தியர்களுக்கு அரசு பணியில் அதிகாரியாக இருக்கும் என்னால் உதவ முடியும், அவர்தம் நலனுக்காக திட்டமிட முடியும் என்பதால் தற்போதைக்கு திரும்பி செல்லும் திட்டம் இல்லை.
இந்த வார நட்சத்திரமாக என்னை அழைத்த மதிக்கும் காசிக்கும், படித்த அனைவருக்கும் என் நன்றிகள். யாருடைய மனம் புண்பட்டிருக்குமானால் அது எழுததெரியாத தவறே அன்றி சிந்தனையில் அல்ல. மன்னிக்க வேண்டுகிறேன். கற்றவரெலாம் நல் வழிகாட்டுவோம். கன்ணியத்தை நிலை நாட்டுவோம்.
அங்கே
திருமனங்கள் சொர்கத்தில்
நிச்சயிக்கபடமாட்டாது
திருமண ங்கள் சொர்க்கத்தை நிச்சயிக்கும்
அங்கே
மணம் என்றால் பணம் கேட்கும்
ஆண்விபசாரத்தை
பிரம்மசரியத்தா
தண்டிக்கும் நீதியுண்டு
தாலிக்கயிறு ஒரு
ஆயுள் தண்டனையின்
கழுத்து விலங்காகாது
திரவ பெண்மைக்கு
திடப்பொருள் கிண்ணமாய்
ஆண்மை இருக்குமங்கே
ஆண்மையுடன் போட்டியிடும்
ஆவேசத்தில் அங்கே
மெல்லிய பெண்மை
மீசை வளர்க்காது
பெருமைக்குரிய பெண்மை
அங்கே போற்றப்படுமே அன்றி
பூஜிக்க படமாட்டாது
அங்கே
பிரமனுக்கு கட்டாய ஓய்வு
தரப்படமாட்டாது
வேண்டிய விடுமுறை தரப்படும்
சமயங்கள் தைக்கின்ற நூலாகும்
கத்தரிகொல்களின்
காரியத்தைச் செய்யாது
பக்குவ வேத
புத்தகங்களிலிருந்து
மத வாதிகள் அல்லர்
மனிதர்கள் மலர்வார்கள்
பதிவு திருமணம்
பண்னிவிட்டதலாயே
பூமிப்பெண்ணுக்கு ஒருவன்
புருஷனாக முடியாது
வுயர்வை துளிகளை
பரிசமாய் தருவோர்க்கே
மண் மகள் மனையாளாவாள்
அனைவரும் ஒர் நிறை
அல்ல
உழைக்கும் சாதியே
உயர்ந்த சாதி
அங்கே
வயிறு மட்டுமல்ல
மனமும் நிறந்திருக்கும்
சுதந்திரம் அங்கே
சுவாசமாய் இருக்கும்
பிறர்தர வாங்கும்
பிச்சையாய் இராது
கடமை அங்கே கவுரவம்
உரிமை அங்கே ஊதியம்
சத்தியம் அங்கே சமயம்
இதயம் அங்கே முகவர்
புன்னகை அங்கே பொதுமொழி.
என்ற அப்துல் ரகுமானின் கவிதையுடன் வருகிறேன் என விரைகிறேன் விடைபெறுகிறேன்.
நன்றிகள்
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeகுழலி wrote:
நட்சத்திரம் எதற்கும் தயங்காமல் மின்ன வாழ்த்துகின்றேன்…
//கனவுகளில் ஒப்பந்தகளில் கையெழுத்திட்டாலும் நிஜத்தில் போராட்டங்களை நாம் தினம் சந்திகிறோம். //
உண்மை அது தான் உங்கள் எழுத்தில் மின்னுகின்றது…
//ஒரு குளிர்பதனப்பட்ட அறையில் கணிணிகளுடன் வேலை செய்வதில்லை என் பணி.வறுமை கோட்டிற்கும் கீழே உள்ள மக்களுடன் களத்தில் உழைப்பதே என் பணி என்பதால் பூமியின் புழுதியுடன் என் காலுக்கு உறவதிகம்//
உண்மையை சொன்னால் என் போன்ற சி(ப)லர் கணிணியில் வேலை செய்து வேலையின் அலுப்பை போக்கத் தான் எழுதுகின்றோம், சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் பார்த்த, பாதித்த ஆனால் எங்களுக்கு நேரடி அனுபவமில்லாத சில நிகழ்வுகளை எழுதுகின்றோம் அதில் நிச்சயம் 100 விழுக்காடு உண்மை இருக்கும் என்பதை நான் நம்பவில்லை, உங்களுடைய எழுத்துக்கள் உண்மையை பேசுகின்றன,
ஒரு வேண்டுகோள் எப்போதுமே நீங்கள் நீங்களாக எழுதுங்கள், சமரசம் வேண்டாம், பல இடங்களில் சமரசம் செய்துகொள்ளும் போது நினைத்ததை நினைத்த மாதிரி எழுத முடியாது
reply to this comment
24/07 11:19:31
குழலி wrote:
முந்தைய பின்னூட்டம் எனது வேண்டுகோளே!
reply to this comment
24/07 11:21:28
வாசன் wrote:
பத்மா
*பதிவுகளில், உங்களுடைய மற்றும் நீங்கள் சந்திக்கும் வலிகளை சுய கழிவிரக்கம் இல்லாமல் நீங்கள் விவரித்திருந்ததாக எனக்கு உணர்வு. புது மாதிரி எழுதும் முறை.
முதிர்ச்சியான எழுத்துக்கள் அருகி வரும் தமிழ்-இணையத்தில்,உட்குழு மனப்பான்மை இன்மை மற்றும் கைதட்டல்கள் எதிர்பார்க்காமல்
எழுதுவது,பெரிதும் வரவேற்கப்பட
வேண்டியது. நன்றிகள்.
reply to this comment
24/07 11:27:30
Thangamani wrote:
தாரகை தொடர்ந்து பிரகாசிக்க வாழ்த்துகள்!
reply to this comment
24/07 12:53:26
-/பெயரிலி. wrote:
சராசரியாக எல்லாமே நல்ல பதிவுகள். நன்றி.
reply to this comment
24/07 13:33:00
S. Sankarapandi wrote:
//எழுத துவங்கியபோது Tag line அல்லது விளக்கமாக என்ன எழுதலாம் என்று எண்ணியபோது நிஜங்களின் அவலம் என்று மட்டுமே தோன்றியது. கற்பனையில் நீராடி கனவுகளில் உடை உடுத்தி அற்புதமாக வாழ்வதிலே ஆனந்தம் என்ன உண்டு? //
மிக உண்மை – உங்கள் பதிவுகள் எல்லாவற்றிலும் கனவுகளை விட்டு நிஜங்களை அலசி வருகிறீர்கள்! ஆனால் பிரச்சினைகளைப் பற்றிய உங்கள் அவதானிப்பு மட்டுமே அதிகம் தெரிந்தது, அவற்றின் காரணங்களுக்குள் செல்ல விரும்ப வில்லையோ என்று தோன்றியது. இதைக் குறையாகச் சொல்லவில்லை. ஒருவேளை நேரமின்மையாகக் கூட இருக்கலாம் – இருந்தாலும் பதிவுகளில் அனைத்திலுமே பல பயனுள்ள விசயங்களையே விவாதித்தீர்கள். நன்றியும், வாழ்த்துக்களும்!
நன்றி – சொ. சங்கரபாண்டி
reply to this comment
24/07 16:05:27
sarah wrote:
மிக்க நன்றி பத்மா.
சாரா
reply to this comment
24/07 19:41:18
Jayanthi Sankar wrote:
Dear Padma,
all your postings are eye openers. Please continue to write without compromising. Let others have their rights to opinion. That does not discourage you. Just take them only as a view.
Looking forward to reading more of yours.
Best wishes,
Jayanthi Sankar
reply to this comment
24/07 21:11:18
வெங்கட் wrote:
பத்மா – செறிவான கருத்துகள். தொடரட்டும் உங்கள் பணி.
reply to this comment
24/07 21:55:26
Draj wrote:
Padma, are you planning to stop posting ?? I wish, hope and pray that you would continue posting on your blog. Your site was very informative and I simply loved it
Cheers
Draj
reply to this comment
25/07 05:39:51
அன்பு wrote:
என்னைப் போல் வலைப்பதிவை போழுதுபோக்குக்குச் செய்யாமல், பிறருக்கு பயன்படும் வகையில் பதிந்து வருகின்றீர்கள். உங்களுடைய தொழிலில் அன்றாடும் எதிர்கொள்ளும் அனுபங்களையும், பிரச்னைகளையும் – மற்ற பலரும் தெரிந்து கற்றுக்கொள்ள ஏதுவாக உங்கள் பதிவுகளை ஒரு தவம் போல் செய்து வருகின்றீர்கள். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
மற்ற எல்லாருக்கும் அல்லாமல் உங்களைப்போன்றவர்களுக்குத்தான் இந்த வலைப்பூ வடிவம் மிக, மிக பயனுள்ளது. அதனால் தொடர்ந்து எழுதுங்கள், நன்றி.
(பி.கு: சாரி, இன்னிக்குதான் கவனித்தேன் இந்த வாரம் உங்கள் வாரமென்று… பாராட்டுக்கள் மீண்டும்).
reply to this comment
25/07 06:31:23
arul wrote:
தொடர்ந்து நன்றாக எழுதுகிறீர்கள் பத்மா. உங்கள் அனுபவங்கள் சார்ந்த எழுத்துகள் சிறப்பாக இருக்கின்றன. பதிவுகளுக்கு நன்றி.
reply to this comment
25/07 08:31:01
iraamaki wrote:
உருப்படியானதை, தங்களுக்கு உண்மையெனப் பட்டதை, எழுதுகிறீர்கள். தொடரட்டும் உங்கள் முயற்சி. இடைவிடாது படித்துக் கொண்டுதான் இருந்தேன்.
அன்புடன்,
இராம.கி.
reply to this comment
25/07 09:40:47
karthikramas wrote:
பத்மா ,
நீங்கள் எழுதிக்கொண்டிருப்பதைப் போன்றே தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். நட்சத்திரத்துக்கு நன்றி.
reply to this comment
25/07 11:33:18
அல்வாசிட்டி.வி wrote:
நட்சத்திர வாரத்தில் பல பயனுள்ள தகவல்களை அறிந்தோம். பல கோணங்களில் சிலவைகள் சிந்திக்க வைத்தது. தொடர்ந்து நல்லவைகளை எழுதி வாருங்கள். வாழ்த்துக்கள்.
reply to this comment
25/07 11:40:48
Padma Arvind wrote:
பின்னூட்டம் இட்டு கனிவான வார்த்தைகளால் ஊக்கம் தந்த அனைவருக்கும் நன்றிகள். பிரச்சினைகளை பற்றி எழுதும் போது அதை குறித்த என் பார்வையை, முடிவுகள் காண முடியுமா என்றோ அல்லது ஒரு தீர்மானத்தையோ வைக்க எண்ணியதுண்டு. அது பிறரின் மாறுபட்ட எண்ணங்களை அறிய முடியாது என்றும் தோன்றியது. இன்னும் நான் வளர வேண்டும் என்று எண்ணுகிறேன். நன்றி திரு.சங்கரபாண்டி .
reply to this comment
25/07 20:23:57
M. Sundaramoorthy wrote:
பத்மா,
ஊரில் இல்லாததால் சமீபத்தில் எழுதிய எல்லா பதிவுகளையும் இன்னும் படிக்கவில்லை. அதிகம் பின்னூட்டம் எழுதாவிட்டாலும், பொதுவாக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உங்கள் பதிவுகளை படிப்பதுண்டு. வாழ்வனுபவமும், பணியனுபவமும் நெருங்கியிருப்பதால் அவை எழுத்துக்களாக பரிணமிக்கும்போது மேற்பூச்சுகளின்றி உண்மையோடு வெளிப்படுகின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.
reply to this comment
26/07 00:13:34
thanu wrote:
பத்மா,
கடல் கடந்து செல்வதே பணம் சம்பாதிக்கவும், social statusஐ உயர்த்திக் கொள்ளவும் மட்டுமே என்ற மாயையை உடைத்தெறிகின்ற உங்கள் எழுத்துக்கள் சந்தோஷத்தைத் தருகிறது…ஓரளவு சுயசரிதை வாசிப்பதுபோல் இருந்தாலும், உங்கள் எழுத்துக்கள் நிஜ உலகத்தின் முரண்பாடுகளை தோலுரித்துக் காட்டுகிறது. மத்தியதர வர்க்கத்தின் மனதுக்குத்தான் மனித நேயம் அதிகம் என்பதை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்…வாழ்த்துக்கள்.
இன்னும் அதிகமான எதிபார்ப்புகளுடன்
அன்புத் தோழி
தாணு.