இந்த மாத திசைகளில் வெளியான ஒரு கடிதம். என் நண்பர்களில் பலர் தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இந்தியா சென்று உபநயனம் செய்வித்தலும் அந்த பிள்ளைகளின் மன நிலையை பற்றி தெரிந்ததும் இதனை எழுத தூண்டியது.
அன்புள்ள அம்மா
நலம் நலமறிய நாட்டம். உனக்கு கடிதம் எழுதி எத்தனை நாட்களாகி விட்டது. தொலைபேசி வந்த பின் நினைக்கும் போதெல்லாம் கூப்பிட முடிவதால் மடல் எழுத தோன்றவேயில்லை. உனக்கு நான் கடிதம் எழுதினாலோ அல்லது அணணன்களில் யாரேனும் எழுதினாலோ விஷயம் ஏதுமில்லை என்றாலும் திரும்ப திரும்ப படிப்பதை பார்த்திருக்கிறேன். உன் கடிதங்களும் அப்படித்தான். ஜிப்மரில் இருக்கும் போது எத்தனை முறை படித்திருப்பேன்.
இப்போது நிறைய பேர் இணையத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.தமிழ் மொழி இணைய உலகில் வருவது மிக சிறந்த முறையில் பயன் படுத்திக்கொள்ள முடியும் என்றாலும் அதை பொழுது போக்காகவே இப்போதைக்கு பயன் படுத்துவதாக படுகிறது. சில விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
வருன் வகுப்பில் படிக்கும் தோழனுக்கு பூணூல் போடப்போகிறார்களாம். இப்போது அமெரிக்கா வாழும் இந்தியர்கள் இதை ஒரு கடமை போல் செய்கிறார்கள். 11 வயதிற்குள் பூணுல் போடவேண்டும் இல்லையென்றால் பெற்றோர் வருத்தப்டபோகிறார்கள் என்று இதை மறுப்பதில்லை. தன்னுடைய பெற்றோரை சந்தோஷப்படுத்த தங்களின் பிள்ளைகளின் விருப்பத்தை காவு கொடுக்கிறார்கள்.
பெற்றோர்களுக்கும் இதில் விருப்பமில்லாவிட்டாலும் செய்யாவிட்டால் “அமெரிக்கனாக மாறிவிட்டாய் என்ற குற்றசாட்டை சந்திக்க நேரும் என்பதும், தங்களுடைய பெற்றோரை மன வருத்ததிற்குள்ளாக்க நேரிடும் என்றும் பயப்படுகிறார்கள். இதை அறிந்துகொண்ட பெற்றோரும் “imotional blackmail” செய்ய தயங்குவதில்லை.
நம்மை நம்பியிருக்கிற நம் குழந்தைகளின் மகிழ்ச்சியைவிட வாழ்ந்து முடிந்த ஒருவரின் விருப்பம் எப்படி முக்கியமாகும்? நம்முடைய விருப்பத்தை நாம் ஏன் மற்றவரிடம் திணிக்கிறோம். எது சரி, தவறு, வாழ்கின்ற இடம், காலம் இது முக்கியமாக ஏன் படவில்லை. பூணூல் போட்டுகொண்டு குடிப்பதும், புலால் உன்ணுவதும் சரியென்கின்றபோது, வேலை அவசரத்தில் சந்தியாவந்தனங்களும் குறைக்கப்படும் போது இது மட்டும் ஏன் கட்டாயமாகிறது. பிள்ளைகளுக்கு இது தர்ம சங்கடத்தை தருகிறது. விளையாட்டு வகுப்பு முன் ஆடை மாற்றும் போது locker room கலாட்டாக்களும், சட்டென்று தனக்கும் இந்திய பெற்றோரை கொண்ட இன்னொரு மாணவனுக்கும் இடையே ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதும் தெரிய ஆரம்பிக்கிறது. அமெரிக்காவில் நாம் அனைவருமே இந்தியர்தான். ஆனால் இதுபோன்ற பழக்கத்தால் “எங்கள் வகுப்பில் உள்ள இன்னொரு இந்தியனை அறிவேன் அவனுக்கு இந்த சடங்கு இல்லையே” என்னும் போது நீ அவனிலிருந்து மாறுபட்டவன் என்று சொல்லிகொடுக்கப்படுகிறது. இது அவசியம்தானா?
இதையேதான் யூதர்களும் பார்மிட்சுவா என்ற பெயரிலும் கிறித்தவர்கள் கம்யூனியன் என்ற பெயரிலும் செய்கிறார்கள். இதெல்லாம் இருக்கும் வரை சாதி மத வேறுபாடு எப்படி போகும்? இங்கே பிறந்து, வாழ்கின்ற சிறுவர்கள் தமிழும் சரியாக தெரியாதபோது திடீரென்று வேறு ஒரு சடங்கிற்கு உள்ளாக்கப்படும் போது, அதை சரிவர செய்ய சொல்லிக்கொடுக்க நேரம், அறிவு இவை இரண்டும் பெற்றோருக்கு இருக்குமா என்று தெரியவில்லை. செய்வது திருந்த செய்ய வேண்டாமா? பூணூலும் சமசரணமும் இருந்த காலம் போல வேதமும் பாராயணமும் போதுமா? பொறியியலுல் அறிவியலும் தேவையென ஆன பின், காரும் மாளிகையும், எப்போதாவது குடிப்பதும் பரவாயில்லை என்றான பின் இந்த வெளிவேஷம் எதற்காக? மூலையில் போடப்படும் சடங்காக ஒரு “formality” என்று சொன்னால் இது யாரை ஏமாற்ற என்றும் தோன்றுகிறது. நாம் ஏன் இப்படி அடுத்தவருக்காக வாழ்கிறோம்? எங்களை நீயும் அப்பாவும் அப்படிவளர்த்தேயில்லை. எங்கள் விருப்பம் அறிந்து செய்ததை நினைக்கும் போது இன்னும் உன் மேல் ஆசை வருகிறது.
வாழ்க்கை முன்னோக்கி போய்கொண்டிருக்கிறது. Genaration goes forward, and you learn from your kids என்ற கலீல்ஜிப்ரனின் கவிதை நினைவுக்கு வருகிறது.
நமக்கு அடங்கிய குழந்தைகள்தானே என்று அவர்களின் எண்ணப்போக்கை உணராமல், முயற்சிக்க கூட இல்லாமல் பெற்றவரே முடிவெடுப்பது வேதனையானது. வருண் என்னிடம் கேட்டபோது நான் அவனிடம் எப்படி சொல்வது எதை விளக்குவது என்று யோசித்துகொண்டு இருக்கிறேன். சாதியும் பேதமும் தெரியாத குழந்தையிடம் அதை சொல்வது எங்களுக்கு தவறாக படுகிறது. இருப்பினும் சரித்திரம் அவனுக்கு தெரிய வேண்டும் என்பதால் சொல்லவும் அதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்பதிலும், சடங்கின் தன்மைகளை மட்டும் சொல்ல ஆர்வமாக இருக்கிறது. கோவிலுக்கு சென்று கூத்தாட தேவையில்லை. கும்பிடும் தெய்வம் கொள்கை என்று கண்டு கொள் என்று சொன்ன கவிஞனின் குரல் காற்றில் கேட்கிறது.இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று எழுதேன்.
உபபாண்டவம் படித்தாக சொன்னாயே. என்ன நினைக்கிறாய் என்றும் எழுது.
என்றும் உன்
பத்மா
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madev m wrote:
// ஆனால் இதுபோன்ற பழக்கத்தால் “எங்கள் வகுப்பில் உள்ள இன்னொரு இந்தியனை அறிவேன் அவனுக்கு இந்த சடங்கு இல்லையே” என்னும் போது நீ அவனிலிருந்து மாறுபட்டவன் என்று சொல்லிகொடுக்கப்படுகிறது. இது அவசியம்தானா? //
சிந்திக்க வேண்டிய விஷயம்.. அருமை.. ! ரசித்து படித்தேன் .. நல்லதொரு பதிவிற்கு நன்றி !
வீ .எம்
reply to this comment
02/06 08:57:26
சுந்தரவடிவேல் wrote:
தொடும் கடிதம்.
வேற்று தேயத்துக்கு வந்துவுடனேயே தம்மை மாற்றிக் கொள்வதென்பது முடியாதல்லவா? இன்னும் சொல்லப் போனால் சமூகத் தனிமை அதிகரித்து நிற்கும் இந்நிலையில் சடங்குகள் மூலம் தன் வேரோடு உறவு கொள்ளத் துடிப்பது இயல்பென்றே நினைக்கிறேன். ஆனால்…அத்தகைய முறைகளை நம் கலாச்சாரம் என்று சொல்லி அளவுக்கதிகமாகப் பிள்ளைகள் மேல் செலுத்தும் போக்கை இங்கே பல தரப்பு இந்தியர்களிடமும் காண்கிறோம். அல்லது எந்தப் பெரிய கேள்விகளுமின்றி உள்ளூர்ச் சமரசத்துக்கு ஆளாகிப் போகிறோம். இதிலே உள்ளேயொன்று வெளியேயொன்று என அதிகமாகச் சிக்குவது பிள்ளைகளே. என்னைக் கேட்டால் இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, சாதிகளையும் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளைத் தம்பட்டமடிக்கும் எந்தச் சின்னத்தையும் உடலில் அணிந்து திரிவது வருந்தத் தக்கதே.
கொசுறாய் இன்னொரு சேதி: Pubmed இணையத்தளத்திலே அதிகபட்ச எண்ணிக்கையில் சாதிப்பெயரைக் கடைசிப் பெயராகச் சுமந்திருக்கும் தமிழகச் சாதி எது என்று பார்த்தால், அது Iyer, followed by Iyengar. இவர்கள் விஞ்ஞானிகள்! கரையேறிவிட்டதாக வேதம் புதிது தேவர்களிடம் வாய்ச்சவடால் பேசிவிட்டு, அக்கரைக்கு வந்ததும் கழற்றியதையெல்லாம் மாட்டிக் கொள்கிறார்கள். பார்த்துக் கொண்டேயிருங்கள் இந்தப் பூணூலுக்கு வியாக்கியானம் எங்கிருந்தாவது வெடித்துக் கிளம்பும்!
reply to this comment
02/06 09:22:13
Chandrasekaran wrote:
Padma Arvind, touching article. In fact, I had the same thoughts and asked the person who did poonal for his 7yr old son. His reply was simply “oorla amma appa aasai padara, 7 vayasukkula podanumnu. adhan”.
reply to this comment
02/06 10:26:57
Balaganesan S wrote:
Nalla article. Yosikka vaikirathu.
I met a Figi-American of Indian origin lately. One of his family member had died and they followed all the rituals we follow in India. Considering he is a second generation Figian, it was interesting for me to note his strict adherence to our rituals. I believe we try to stay connected to where we came from via these rituals and formalities and nothing more. It is part of our identity. What do you think?
reply to this comment
02/06 10:28:01
Balaji-paari wrote:
padma,
thanks for the nice writeup.
The lines of Gibran was quoted very very aptly. Thank you very much.
(sorry for english. My e-kalappai is not ploughing)
reply to this comment
02/06 11:26:35
தங்கமணி wrote:
பத்மா, நெருக்கமான கடிதம். இந்த மாதிரியான சாதி அடிப்படையிலான அடையாளங்களைச் சுமப்பதும், சடங்குகளைப் பின்பற்றுவதும் கலாச்சார வேரை பற்றியிருத்தல் என்பதற்கு முற்றிலும் முரண்பட்டது. வெளிநாட்டில் மட்டுமல்ல, தாய் நாட்டில் இருக்கும் தமிழர்களும் இது போன்ற அர்த்தமற்ற (ஆமாம், பிறப்பின் அடிப்படையில் அல்லாத த்விஜனன் என்ற பொருளில் தான் பிராமணத்துவம் அர்த்தமும், நியாயமும் பெறுகிறது; ஆனால் தற்போது பிராமணர் என்பது சாதியாக மாறியிருக்கும் நிலையில்) சடங்குகள் போலியான பிரிவினையையும், வெற்று பெருமிதத்தையும் தூக்கிப் பிடிக்கவே பயன் படுகின்றன. இதை உணராமல் நண்பர்கள் சிலர் இதை தனிப்பட்ட ஒருவரின் சடங்குகள், நம்பிக்கைகளில் தலையிடுகிற செயல் என்று கருதுகிறார்கள். நீங்கள் இதை சரியான கோணத்தில் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள்.
reply to this comment
02/06 13:52:56
ஞானபீடம் wrote:
இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன…
ஐந்தே மாதத்தில் இதயம் துடித்தேன் உனக்கென்ன…
ஏழாம் வயதில் ‘உபநயனம்’ செய்தால்…
யாருக்கென்ன வந்தது இங்கே?
reply to this comment
02/06 15:19:13
அஞ்ஞானப்பீடம் wrote:
//யாருக்கென்ன வந்தது இங்கே?//
ஞானப்பீடம் அவர்களே,
“உனக்கென்ன”
“உனக்கென்ன”-வை நீங்கள் உங்களை கேட்டுகொண்டால் என்ன?
உபநயனத்தை அமெரிக்கவில் செய்யாவிட்டால் உனக்கென்ன?
வலைப்பதிவில் எழுதினால் உனக்கென்ன?
நாங்கள் அழுதால் உனக்கென்ன?
reply to this comment
02/06 15:31:17
சுந்தரவடிவேல் wrote:
//ஐந்தே மாதத்தில்//
மன்னிக்கனும், இது ரொம்ப ரொம்ப லேட்!
reply to this comment
02/06 15:39:07
venkat wrote:
பத்மா – இதே விஷயத்தை இதே தொனியில் நானும் சொல்லியிருக்கிறேன். ஆனால் என் பெற்றோர்களிடம் இல்லை (அந்தத் தேவையில்லை), உறவினர்களிடம்.
>பரவாயில்லை என்றான பின் இந்த வெளிவேஷம் எதற்காக? மூலையில் போடப்படும் சடங்காக ஒரு “formality” என்று சொன்னால் இது யாரை ஏமாற்ற என்றும் தோன்றுகிறது. நாம் ஏன் இப்படி அடுத்தவருக்காக வாழ்கிறோம்?
இயன்ற அளவு அடுத்தவர்களுக்காகத்தான் வாழ வேண்டியிருக்கிறது. நானும் மற்றவர்கள் சந்தோஷம் என்று என் சந்தோஷங்களைப் புதைத்திருக்கிறேன். ஆனால் ஒரு எல்லையில் இதை நிறுத்தியாக வேண்டியிருக்கிறது.
பெரிய வருத்தம் என்னவென்றால் இதைப் புரியவைக்கப் பொறுமையாக முயற்சி செய்தால், புரிந்துகொள்ள அவர்களுக்குப் பொறுமையிருப்பதில்லை. இதற்காக அவர்கள் எண்ணத்தில் பிழை என்றில்லை. பெரிதும் சமூகத்தினால் மழுங்கடிக்கப்பட்ட மூளைகள் என்றுதான் தோன்றுகிறது.
இதுபோன்ற நேரங்களில் பிரயோகிக்கப்படும் பிரம்மாஸ்திரத்தில்தான் நான் நிலைகுலைந்துபோகிறேன். “நாலு எழுத்து படிச்சுட்டான்னு தலைகீழ நிக்கறான்”. – இதற்கு மேல் எந்த வாதமும் எடுபடாது.
reply to this comment
02/06 15:49:19
padma wrote:
சுந்தரவடிவேல்
பிள்ளைகள் நிறைய கஷ்டப்படுவதாக தோன்றுகிறது. மத அடையாள சின்னங்கள் தேவையே இல்லை. இத்தகு சின்னங்கள் பறைசாற்றத்தான் என்று தோன்றுகிறது. இதன் மூலம் வேற்றுமைகளை வளர்க்கிறோம், பேதங்களை நிலை நிறுத்துகிறோம்.நானும் pubmed ஐயர், ஐயங்கார் கடைசி பெயர்களை பார்த்து வியந்திருக்கிறேன்.நன்றி
reply to this comment
02/06 16:02:01
padma wrote:
சந்திரசேகரன்
பெற்றோர்கள் பிள்ளைகளை பிள்ளைகளை கட்டாயப்படுத்துதலை நிறுத்தும் காலம் வருமா? பிள்ளைகளும் அவர்களை கஷ்டபடுத்த வேண்டாம் என்று பிள்ளைகளை வற்புறுத்துகிறார்கள்.நன்றி
reply to this comment
02/06 16:03:35
padma wrote:
பாலகணேசன்
இதை அடையாளாம் என்று சொல்வது தவறு என்று எனக்கு தோன்றுகிறது. அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் போலித்தனம் நிறைந்த உலகில், இந்தியாவில் வாழ்பவர்கள் தங்களை தவறாக நினைத்து விடக்கூடாதே என்ற எண்ணத்தில் வாழ்வதாக எனக்கு படுகிறது.
reply to this comment
02/06 16:05:31
padma wrote:
பாலாஜி, வீ எம்
கருத்துக்களுக்கு நன்றி
reply to this comment
02/06 16:06:02
padma wrote:
தங்கமணி
பரிதாபத்துக்குரிய நிலையே பொருள் விளங்காமல் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடை பிடிப்பது மட்டுமின்றி, வருங்கால தலைமுறை மீதும் செலுத்துவது தான்.வருந்த வேண்டிய செய்கை, நாம் நம்மை நம்பியிருக்கிற பிள்ளைகள் மேல் அடையாளங்களை திணிப்பது. அவர்கள் மறுக்க மாட்டார்களென்று அவர்களின் உணர்ச்சிகளாஇ புரிந்து கொள்ள மறுப்பதும் சரியான திடமான் நிலைபாடும் இல்லாமை. காலம் ஒரு நாள் மாறும்.அப்போது விருப்பத்துடன் சுதந்திரமாக செயல் பட முடியும்.
நன்றிகள் பல.
reply to this comment
02/06 16:09:15
karupy wrote:
பத்மா நல்ல கட்டுரை. இந்த ஒன்று மட்டுமல்ல இப்படி பல உள்ளன. இங்கே கனடாவில் நான் ஊரில் இருந்த போது கேள்விப்படாத விழாக்களை எல்லாம் பி;ள்ளைகளுக்கு வைக்கின்றார்கள். பொழுது போக்க கொண்டாட என்ன செய்வதென்று தெரியாததால் வரும் பிரச்சனைகள் இங்கே.
reply to this comment
02/06 16:26:44
karthikramas wrote:
பத்மா நல்ல கட்டுரை.
reply to this comment
02/06 17:12:47
Padma Arvind wrote:
வெங்கட்
நீங்கள் சொல்வதை நான் அனுபவைத்திருக்கிறேன். என் சகோதரர்களுக்கே 70களில்உ பநயனம் செய்யவில்லை. என் பெற்றோர்களெதையும் வ ற்புறுத்தாததோடு, தன்னம்பிக்கையும் நிறைய தந்திருந்தார்கள். நன்றென நினைப்பதை எல்லாம் நடத்திட துணிவு வேண்டும் என்று சொல்லித்தந்தார்கள்.திருமணமான போது என் கணவரின் குடும்பத்தில் இந்த சடங்குகளின் மேல் அவர்களுக்கு இருந்த நம்பிக்கையும், பிடிவாதமும் அதற்கு நேர்மாறாக என் கணவனும் இருந்ததில் ஒரே குழப்பம். பிள்ளை மீது இந்த நம்பிக்கைகளை திணிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். தானே செய்யாத ஒன்றை பிள்ளைமீது திணிக்க இருவருக்கும் நாட்டமில்லை. விளைவு:உறவு முறிந்து போனது. 2 வருடம் பேச ம றுத்துவிட்டார்கள்.கணவனின் வருத்தம் ஒருபுறம். நம்பிக்கை ஒருபுறம். இருவரும் மிகவும் வேதனைப்பட்டோம். வயதானவர்கள் ஈமசடங்குகள் செய்ய ஒரே பிள்ளைக்கு உரிமை இல்லை என்று கடிதம் எழுதினார்கள். கொண்ட கொள்கையில் பிடிப்பாக இருந்தோம். பிள்ளையின் உணர்ச்சிகள் முக்கியம் என்று. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. இனிமேல் உணர்ச்சிபூர்வ பயமுறுத்தல்கள் பயனில்லை என்று உணர்ந்து கொண்டார்கள். சமீபத்தில் இங்கே வந்து 6 மாதம் தங்கியிருந்தார்கள். அனுசரித்து போக வேண்டியவை சில. கொள்ளும் கொள்கை என சில. சில பழக்கங்களில் என்னால் அனுசரித்து போக முடியும் அது என் கொள்கைக்கு மாறுபடாத போது. அதிகமாக அனுசரித்து போக போக பயமுறுத்தல்கள் அதிகரிக்கும். கைப்பிள்ளை தூக்க தூக்க மேலும் அழுவது போல என்பது என் கருத்து. Sometime love and affection are weakness and sometime they are the strength
reply to this comment
02/06 18:16:46
Padma Arvind wrote:
கறுப்பி, கார்த்திக்
நன்றிகள் பல
reply to this comment
02/06 18:17:48
selvanayaki wrote:
////Sometime love and affection are weakness and sometime they are the strength////
மிகச் சரி பத்மா,
“அம்மாவுக்குக் கடிதம்”…..சிந்திக்கவேண்டிய செய்தி.
reply to this comment
02/06 18:24:47
செல்வராஜ் wrote:
//நம்மை நம்பியிருக்கிற நம் குழந்தைகளின் மகிழ்ச்சியைவிட வாழ்ந்து முடிந்த ஒருவரின் விருப்பம் எப்படி முக்கியமாகும்? //
பத்மா, மிகவும் ஔஅருமையாக எழுதப் பட்டிருக்கும் கடிதம். சாதிச் சின்னங்கள் மட்டும் என்றில்லை. வேறு பல வகைகளிலும் பிறரின் மகிழ்ச்சிக்காகவும் திருப்திக்காகவும் நமது எண்ணத்தை, செயலை மாற்றிக் கொள்ள நேர்வது மிகவும் வேதனையானது தான். அப்படி இல்லாமல் கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்க முடிவதைத் தான் முதிர்ச்சி, தைரியம் என்று சொல்ல முடியும். இப்படிச் செய்ய முடியாமல் தடுக்க அன்பு, பாசம், மரியாதை, பயபக்தி என்று பல இருக்கின்றன. அவற்றை பலவீனமாக இல்லாமல் பலமாக எப்படி மாற்றிக் கொள்வது என்பது சுலபமான ஒன்றில்லை. ஆனால் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.
மிகவும் நல்ல பதிவு. நன்று.
reply to this comment
02/06 21:52:30
அல்வாசிட்டி.வி wrote:
சிந்திக்க வேண்டிய கட்டுரை.பெருசுகள் பண்ணும் ரவுசால் இன்னும் இந்த கலாச்சாரம் பண்பாடு என்பதை பிடித்து தொங்க வேண்டியிருக்கிறதோ என்று தோன்றுகிறது. சமுதாயம் என்பதை விட்டு விட்டு உள்ளுக்குள் சிந்தித்துப் பார்த்தால் குடும்ப பெரியவர்கள் செய்யும் Emotional blackmail-ம் முக்கிய காரணம் என்றும் எனக்கு தோன்றுகிறது.குடும்பத்தில் புரட்சிகாரனாக அவன் வளர்க்கப்படாத விதத்தில் பெரியவர்களை எதிர்த்து அவனால் சில சமயம் பேச முடியாமல் போய் விடுகிறது. அதில் எல்லோருடைய சுதந்திரமும் பரிக்கப்பட்டு விடுகிறது. குடும்பம் என்ற கட்டமைப்பு என்று வந்து விட்ட சமயத்தில் இது தவிர்க்க முடியாததாகி விடுகிறதே.
reply to this comment
02/06 22:02:00
துளசி கோபால் wrote:
பொழுதன்னைக்கும்,’நாலு பேர்’ என்ன சொல்வாங்களோன்னு யோசிக்க வைக்கற நம்ம
சமுதாய முறை/பழக்க வழக்கங்களிலே இருந்து வெளியே வர்றது அவ்வளவு சுலபமில்லை!
வயசுலே பெரியவுங்களாச்சேன்னுதான் பலரும் விருப்பமில்லாட்டாலும் இதுக்குப் பணிஞ்சு
போயிடறோம்.
நல்லவேளை, என் மகளுக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இல்லை
reply to this comment
02/06 23:45:36
padma wrote:
செல்வராஜ்
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் வருத்திவிடுமோ என்று பயம் கொள்ள தேவையில்லை. இதனல் பல விஷயங்ககளில் அனுசரித்து போவதும் நேரிடுகிறது. தெளிந்த நிலை விவாதமும், நல்ல பேச்சும் இருப்பின் இவற்றை குறைக்க முடியும். இல்லை எனில் நமது குழந்தைகளும் நாம் இப்படி நினைப்போமா என்று எண்ணி தமது மகிழ்ச்சியை மறைக்கும் வேளை வரலாம். ஒரு திராடசையை கூட விருப்பமில்லாமல் உண்ணும் போது அந்த விருப்பமில்லா கசப்பை சேர்த்துவிடுகிறோம்.இதில் தான் நாம் இருவேறு மனங்களிடையே கருத்து வேற்றுமை இருப்பதில் தவறில்லை அதற்கும் அன்பு செலுத்துவதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவாய் நமது குழந்தைகளுக்கு செய்கைகளின் மூலம் சொல்ல மறுக்கிறோம்.பின்னாளில் நாம் நினைப்பதை அடுத்தவர் செய்ய வேண்டும் என்று நினைக்கும் சிலர் அதை மற்றவர் மீது திணிப்பதும் அதுவும் நம்மை சார்ந்தவர்மீது திணிப்பதும் என்று பழகுகிறார்கள். மற்றும் சிலர் நம்மை போல இதை எல்லை மீறவிடுவதில்லை. இதனால்தான் சில பெண்களும் குழந்தைகளும் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
கருத்துக்களுக்கு நன்றி. கடினமான செயலை வருங்கால குழந்தைகள் கற்று கொள்ள நாம் உதவுவோம்.
reply to this comment
03/06 08:22:28
padma wrote:
விஜய்:
{பெருசுகள் பண்ணும் ரவுசால் இன்னும் இந்த கலாச்சாரம் பண்பாடு என்பதை பிடித்து தொங்க வேண்டியிருக்கிறதோ என்று தோன்றுகிறது. சமுதாயம் என்பதை விட்டு விட்டு உள்ளுக்குள் சிந்தித்துப் பார்த்தால் குடும்ப பெரியவர்கள் செய்யும் Emotional blackmail-ம் முக்கிய காரணம் என்றும் எனக்கு தோன்றுகிறது} உண்மைதான் விஜய்.ஒருவேளை இதுவே பல சமூக குழப்பங்களுக்கு காரணமாக கூட இருக்கலாம்.நன்றி
reply to this comment
03/06 08:23:52
padma wrote:
செல்வநாயகி, துளசி
கருத்துக்களுக்கு நன்றிகள்
reply to this comment
03/06 08:24:54
ரவியா wrote:
//நம்மை நம்பியிருக்கிற நம் குழந்தைகளின் மகிழ்ச்சியைவிட வாழ்ந்து முடிந்த ஒருவரின் விருப்பம் எப்படி முக்கியமாகும்?//
//இந்திய பெற்றோரை கொண்ட இன்னொரு மாணவனுக்கும் இடையே ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதும் தெரிய ஆரம்பிக்கிறது//
//நமக்கு அடங்கிய குழந்தைகள்தானே என்று அவர்களின் எண்ணப்போக்கை உணராமல், முயற்சிக்க கூட இல்லாமல் பெற்றவரே முடிவெடுப்பது வேதனையானது//
அருமையான பதிவு !
இங்கு நண்பர்கள் தங்கள் பெண்களுக்கு “சடங்கு” செய்யும் போது அந்த பெண்கள் முகத்தில் சொல்ல முடியாத ஒரு சோகத்தை பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் பெற்றோர்கள் இளைய வயதினரே ! முதியவர்கள் கட்டாயத்தினால் மட்டும் இல்லை !
அதிலும் அழைப்பிதழ் பிரன்ஞ்சு மொழியிலும் அடிக்கப் பட்டு (nubility feast)பிரன்ஞ்சு காரர்களை கூப்பிட்டு !!!!!
nubility feast for a 12 year girl !!!
reply to this comment
03/06 11:01:11
Malathi Srivatsan wrote:
Dear Padma,
Thanks for bringing this to my attention. While I appreciate the style of your writing I disagree with most part of your write up for the following reasons:
1) Not everyone in USA who celebrates the Poonool ceremony for their sons do it as a ritual. Many children of Indian origin show genuine interest in learning about and practicing their ancestral cuture. For e.g. my son showed genuine interest in Bhagvat Gita and learned it in depth starting from the age of 10. Like my son, the son of my Marathi friends was born and raised in USA. He did math in college. After graduate studies, he went to Berkeley and did Ph.D. in Sanskrit first and then in Thamizh.
2) If I wear poonool and do not really follow and do the necessary associated rites such as santhyavandhanam or Gayatri Jabam, it is my loss ans I do not get the full benefit of it. However it does not affect anyone else.
3) We all are different in our own ways. Kids do not worry about how they are going to explain their differences. In fact very early on they have learned to celebrate their individuality and individual expressions. It is one of the reasons that schools celebrate international cultural days! Also some kids pierce their belly button, eyebrow or lip, some boys grow long hair, each kid dyes his or her hair differently. They wear different styles of clothes, make up etc. They have no problem in their locker rooms with these differences.
4) If a child does not like to wear poonol and if the child’s parents insist on it, these days kids know to go to their school counselor or express their displeasure at home. As long as the parents’ desicions do not harm the children, outsiders should not interfere in their family matters. Once the son becomes independent, in no time he will throw away the poonool. If he feels that his parents imposed it on him against his will, he will stay away from his parents. Then it is the parents’ loss or if both parties are mature enough, they will discuss it out.
5. If we begin to interfere between parents and children, I am afraid that it will start a dangerous trend. For e.g. a teenager may want to play computer games all the time and may fight with the parent who disciplines. Outsiders can not pity the child or the parent and take sides on this issue.
6) It is very easy to explain diversity to children. The concept of one is different from the other is ok with the children. It is only when we introduce the concept of one is better than the other, the problems start. In fact diversity is our strength. If it is my son, I will tell him that the garden is pretty because we have flowers of different shades. If all the plants are the same height, bloom with flowers of the same size, shape and color, it will be very monotonous. I will also tell him that people of each religion, culture or nation follow different treditions, we should learn about them and respect them. While all religions, castes and nationalities are equal, it will be very silly of anyone to expect them all to follow only one way of life.
I remember in the sixties my grandfather never questioned me about bringing my shedule caste friends home and my grand mother would happily serve them lunch side by side with me. However there was a time when he went out he was not sure he would return home safely because he was wearing poonool,it had much significance for him and a sect of non-Brahmins were beating up those who wore poonool (a form of south Indian Nazzism!) We do not want to go back to those days of intolerence.
9) While rituals that Brahmins perform have been criticized by everyone, non-Brahmin hindus also follow their own variations of certain rituals. These are not being criticized. Everyone should be allowed their own rights as long as they do not impose it on others.
10) These days our life style and professions do not follow our caste system like it was 4000 years ago and it is meaningless to set rules based on caste system. While it is wrong to make a rule that only male Brahmins can wear poonool (in fact I know that many non-Brahmins also wear poonool), it is equally wrong on anyone’s part to tell me that I should not wear it or I should not perform this ceremony for my son!
Thanks for the opportunity to share my opinion on this matter.
Best wishes,
Malathi
reply to this comment
13/06 08:15:02
Padma Arvind wrote:
Malathi
Thanks much for showing the other side of the coin.ஊர்விடு ஊர் வந்து சம்பிரதாயத்திற்காகவும், தங்களுடைய status symbol காட்டவும் ஊர் சென்று உபநயனம் செய்யும் பெற்றோர் பலர் உண்டு. இங்கே நா.கண்ணன் எழுதியதை குறிக்கோள் இடுகிறேன்
அந்தணர் என்போர் அறவோர்! என்று சொல்லும் வள்ளுவன் அவசரமாக ‘மழித்தலும், நீட்டலும் வேண்டா!’ என்றும் சடங்கு பூர்வமான புரிதலை நிராகரித்துவிடுகிறான். பிரம்மவித்தையை அறிவதில் நாட்டமுடையவன், அறிந்துவிட்டால் அதை மற்றவருக்குச் சொல்வதில் நாட்டமுடையவன் பிராமணன் என்பதுதான் இந்திய வர்ணாசிரம தர்மம். இந்திய சரித்திரத்தைப் பார்த்தால் புரியும் பிரம்ம அநுபூதி பெற்றவரில் பெரும்பாலோர் பிராமணர் அல்லாதவராக இருப்பது. இந்தியாவின் மிகப்பிரபலமான பிரம்மவித்தை சாரமான பகவத்கீதை வியாசரால் அருளப்பெற்றது (இறைவனின் அருளால் என்பது வேறு விஷயம்). வியாசர் பிராமணர் அல்லர். திராவிட உபநிஷத்து என்று கற்றோரால் போற்றப்படும் ‘திருவாய்மொழியை’ அருளிச்செய்த சடகோபன் பிராமணர் அல்லர். ஆனால், பிராமணர்களுக்கு இந்திய சமூகம் ஒரு அளப்பரிய அங்கீகாரம் கொடுத்து இதுவரை உயர்வாக வைத்திருந்தது. அந்தக்காலம் மலையேறிவிட்டது.
பிராமணர்கள் பெயருக்காக இல்லாமல் உண்மையாக பிரம்மவித்தையை அறிந்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது! பிரம்மவித்தையின் முதற்படி நல்ல கேள்விகள். வெளிநாட்டு பிராமணர்கள் முதலில் கேட்க வேண்டிய கேள்வி பிரம்மத்தை அறிவதற்கும் பூணூலுக்குமுள்ள சம்மந்தம் என்னவென்று!
பாரதி போன்ற பிரம்மவித்தகர்கள் பூணூல் இல்லாமலே பிராமணர்களாக வழ்ந்து காட்டமுடிந்தது. பிரம்ம நாட்டமுடையவனுக்கு பூணூல் ரொம்பச் சின்ன விவகாரம். இதில் போய் கவனச் சிதைவு கூடாது.
நன்றிகள் பல
reply to this comment
13/06 09:40:31
Ramachandranusha wrote:
பத்மா, துபாய்வாசி ஒருவர் தன் மகனுக்கு பூணூல் போட்டார். செலவு சில லட்சங்கள். தாய்க்கும் மகளுக்கும் புதியதாய் வைர, தங்க நகைகள். பட்டுபுடவைகள். பையனுக்கு சூட்டு கோட்டு இரண்டு செட் மற்றும்
கையில், கழுத்தில் தங்க ஆபரணங்கள். சொந்தங்களுக்கு நாலுகிராம் தங்கம். ஊரில் செய்துவிட்டு
இங்கே ஹோட்டலில் ஒரு பார்ட்டி. அதில் தண்ணி, நான்வெஜ் உண்டான்னு கேட்டுடாதீங்க
அம்மாவாவது, அப்பாவாவது ஊர்ல ஷோ காட்ட இது ஒரு சான்ஸ்.
reply to this comment
13/06 11:09:56
Padma Arvind wrote:
பலரும் இதே தான் சொல்கிறார்கள். இது ஒரு ஷோ என்று. பல லட்சங்கள் செலவு செய்து ஊரில் செய்துவிட்டு, உள்ளூரில் இருப்பவருக்கு ஒருவித சங்கடங்களை உருவாக்குகிறது. என் உறவினர் ஒருவரின் தம்பி ஆடம்பரமாக செய்திருக்கிறார். அவருடைய அண்ணனின் பிள்ளைக்கு வயது கூட.பொருளாதார காரணாங்களால் தள்ளிப்போட பிரச்சினை ஆகிவிட்டதாக சொன்னார்.
இனும் புடவைகள், நகைகள் வாங்க ஒரு விழா!!
நன்றி உஷா
reply to this comment
13/06 11:23:49
Anonymous wrote:
Usha,
Ellarum appadi endru thayavuseithu solla vendam. Unmayileye silavatri kadaipidikka vedum endru ninaippavargal irukkirargal.
Nowadays it has become a trend(fashion) to criticize everything done in the name of our traditions.
Show katta ninaippavargal entha chansayum vida mattargal.
reply to this comment
13/06 11:27:37
Malathi Srivatsan wrote:
Padma,
I agree with you that one does not need poonool to get Brahma gnanam. It is true Bharathiyar at some point in life threw away his poonool and at a later time in life celebrated it by making several shedule caste people wear it. Why did he do it? It is because it is better to give an opportunity to everyone interested in it instead of denying the opportunity to all. In a similar sense, one need not wear sari to go to temple. However many of us do it because a lot of things have associative value and significance. When I see or touch my old sari, a lot of associated incidents come to my mind. Many of us light little lamps for Karthigai. One can also pray Karthigeyan without lighting the lamps. Will we protest against those who celebrate by lighting the lamps just because some people do not light lamps? The lamps and karthigai have associative significance for some people. Similarly Brahmobadesam performed during poonool has significance and each time one does poonool-related ritual, it comes to his mind. Truely speaking a fully liberated person should be a thigambara swami! Starting from asking people to shun Poonool, where will it end? I am not a thigambara swami and I know a lot of people are not. My point is that as long as my life style does not harm another person, no one has a right to criticize or deny me the right on things that have associative significance for me. I am not ashamed to be a brahmin neither am I ahamed to follow certain rituals that have significance for me because I do not consider myself to be above anyone neither do I consider myself to be below anyone just because I am born as a brahmin. I do not consider inheriting something (whether it is wealth or caste or social status) by birth alone is something I should be very proud of. Instead I feel proud of what little I achieve by my own efforts. Yet I am grateful to my brahmin inheritance because it has exposed me to the depth of Hinduism at a very early age in life. Also even though Vyasar was not a Brahmin, it is well known that it is mostly brahmins who studied the writings of Vyasar thoroghly and placed him on a pedastal rightfully. As everyone knows well, two wrongs do not make a right and bringing down one sect does not automatically elevate another sect whether it be brahmins or non-brahmins!
Malathi