»
S
I
D
E
B
A
R
«
31/05: இன நிற மத வெறியின் அரசியலும் அறிவியலும் -1
May 31st, 2005 by பத்மா அர்விந்த்

நான் செல்லும் பல விவாதக்கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் வெள்ளை இனத்தவர்தான் 98% (white Caucasian). இவர்கள் ஒன்றாகவே 20+ வருடங்கள் ஒரே துறையில் வேலை பார்த்தவர்கள், பார்ப்பவர்கள். கிட்டதட்ட ஒரே வயது கூட. பள்ளி நாட்களையும் பழைய கல்லூரி நாட்களையும் ஒன்றாய் கழித்தவர்கள். அவர்களிடையே புதிதாக ஒருவர் வந்தாலே “new kid in the block” என்று பார்க்க கூடியவர்கள். அப்படி இருக்ககையில் புதிதாய் ஒரு இந்தியர், அதுவும் பெண் இடையில் புகுந்து, புகுந்ததோடு மட்டுமின்றி புதிதாய் கருத்துக்களையும் சொல்லி அவர்களையே பழக்குதற்கான பணியையும் தொடர்ந்தால் எப்படி வரவேற்பு இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். 20 வருடமாக செய்த தொழிலில் மாற்றங்கள் வரும் போது அச்சப்படுவது மனித இயல்பு. தவறிழித்துவிடுமோ என்ற அச்சமும், அதை தன்னுடைய சகா பார்க்க நேரிட்டால் கேலி செய்வார்களோ என்ற தன்னிரக்கம், மேலும் தெரியாத பாதையை குறித்து மனதில் உள்ள ஒருவித குழப்பம் இவை அனைத்தையும் மீறி புதிய செயல்பாடுகளும் திட்டங்களும் சேர்க்க படுகின்றன. முதலில் நான் சேர்ந்த போது அலட்சியமாக நினைத்தவர்கள் இப்போது அன்போடும் மரியாதையோடும் பழகுவதும் தொடர்பு கொள்வதும் வரவேற்கத்தக்கது. எதுவுமே ஒருவித கட்டாயத்தில் வருவதைவிட, தானே உணர்ந்து வரும் மரியாதையும் நட்பும் சிறந்தது. அறிவியல் விவாத கூட்டங்கள் வேறு. அங்கே பலதரப்பட்ட விஞ்ஞானிகளும் எல்லாருக்கும் பழக்கம். ஆனால் சில துறைகளில் இன்னமும் மேலாண்மைதுறையில் இந்தியர்கள் குறைவு. என்னதான் இங்கேயே பிறந்து வளர்ந்தாலும் முதல் வாரிசுகளுக்கு சமுதாய முக்கியத்துவம் வர நிரூபிக்க வேண்டிய அவசியம் உண்டு. மேலோட்டமாக தெரியாவிட்டாலும் பல முறை பார்க்கலாம். அதுவும் நான் வந்த புதிதில் (89 இல்) ஹூயுஸ்டன் கடைகளில் வித்தியாசத்தை உணர முடியும். இப்போது போல பெரும்பாலான சாதாரண மக்கள் இந்தியர்களை பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஏன் இந்த தனிமைப்படுத்தும் குணம், எதானால் இத்தனை நிறவெறி என்று யோசித்தால் விடை காணமுடியா குழப்பமும் நாடு இனம் என்று இல்லாமல் இது பரவிக்கிடப்பதும் எளிதாய் அறியலாம்.

ஜாதி மதங்களை பாரோம்- உயர்
ஜன்மமித் தேசத்திலெய்தின ராயின்
வேதியராயினும் ஒன்றே அன்றி
வேறு குலத்தினராயினும் ஒன்றே

என்றெல்லாம் பாடி வருடங்கள் பல போனாலும், மக்களின் மனம் என்னவோ மாறவேயில்லை. எங்கிருந்து இந்த இனவெறி, நிறவெறி தோன்றுகிறது?.மனிதன் தன்னை பாதுகாத்துக்கொள்ள சில சட்டங்களையும் கண்ணுக்கே புலப்படாத சில கட்டுபாடுகளையும் ஆரம்பித்து வைக்கிறான். இது பிறகு கல்லில் எழுதிய எழுத்தாய் மாறிவிடுகிறது. காலம் காலமாய் மக்கள் வேதனைப்படவும், ஒருவரை மற்றவர் அடக்கி ஆளவும் உபயோகிக்க படுகிறது. சமமாய் இருந்த மனிதர்களிடையே ஏற்ற தாழ்வுகள் வரத்தொடங்குகின்றன.

இன்னமும் சாதி, இனம் நிறம் என்று பாடுபாடு காண்பது எல்லா நாட்டிலும் நடந்து கொண்டுதானிருக்கிறது. இன வெறி என்பது ஒரு கொடூரமான தன்மை. இது மனிதனின் குணங்கள் அவனால் பிறப்பின் அடிப்படையில் கொள்ளபடுவதாக எண்ணுவதாகும். அமெரிக்காவில் இதற்காக சட்டத்தின் உதவியை நாடமுடியும் என்றாலும், அடிப்படையில் இன்னமும் இன வெறி, நிற வெறி இருந்துகொண்டுதானிருக்கிறது. இனவெறியும் பிடிப்பும் மனிதனை மற்ற மிருகங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. இதனாலேயே உயர் சாதிக்காரர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தவறிழைத்தாலும், குடும்ப குல பெயரை காத்திட எண்ணி அவரை பாதுகாப்பதும், அதே சமயம் கெட்டு போன ஒரு மனிதன் கூட என் முன்னோர் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் தெரியுமா என்று பெருமை பேசுவதும் நடக்கிறது. அதே போல தவறு நடந்தவர்களை அடையாளம் காட்ட என்று கவலர் நிலையம் செல்பவர்கள் ஒரு ஆப்பிரிக்க இனத்தவரை அடையாளம் காட்டுவதும் நடக்கிறது. பல முறை வன்புணர்ந்த வழக்குகளில் ஆப்பிரிக்க இனத்தவரை கைது செய்து பொய்வழக்குகளும் பதிவாயிருக்கின்றன. கலிபோர்னியா பக்கத்தில் ஆப்பிரிக்க இனத்தவர் உயர்தர வாகனம் செலுத்தினால் காவலர்கள் அவர்களை ஓரம் கட்டுவதும் பரிசோதிப்பதும் இன்னமும் நடக்கிறது. இந்தியாவும் சளைத்ததில்லை. அதனால்தான் செயேந்திரருக்கு இத்தனை பார்ப்பனர்களின் ஆதரவும், பத்திரிக்களைன் ஆதரவும். தலித்துக்களுக்கு நடக்கும் கொடுமையும் இன்னமும் போகவில்லை. நல்ல இரத்தம் ஓடுகிறது, அ வன் தவறே செய்திருக்க மாட்டான் என்பது போல பேசுவதும், அதேபோல நாங்கள் நல்ல ஆசாரத்து குடும்பத்தை செர்ந்தவர்கள், எங்கள் பெண் ஒரு போதும் அவனை காதலித்து இருக்க மாட்டாள் என்று வீறாப்பு சொல்வதும் பார்க்கிறோம்.இவர்கள் சொல்லுகின்ற ஆசாரத்துக்கும் ஒழுக்கத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.

நவீன இனவெறிக்காரர்கள் இதையே சற்று மாற்றி வரலாற்றின் துணையும் எடுத்துக்காட்டுகளுடனும் வந்து பேசுகிறார்கள். அமெரிக்காவில் இன்னமும் நான் ஐரிஷ்காரன், இதாலியன் என்று பெருமை பேசுவோர் உண்டு. விதிவிலக்குகள் இருந்தாலும் இந்தியர்கள் கூட வெள்ளை அமெரிக்கர்களிடம் பாராட்டும் அதே நட்பை ஆப்பிரிக்க இனத்தவரிடம் காண்பிப்பதில்லை. அறிவியல் துணை கொண்டு இப்போது இனத்தையும் நிறத்தையும் பிரிவு படுத்தி பேச வந்திருக்கிறார்கள்.
அவன் பார்ப்பனன் அவன் நன்றாக படிப்பதில் தவறென்ன என்றும் இவன் விவசாயி தான், இவன் படித்து என்ன ஆக போகிறது என்றும் பாகுபடுத்தும் ஆசிரியர்களும் உண்டு. மனிதனின் குணங்களுக்கும் அவனுடைய குலத்தை காட்டுவதும் தவறே. எத்தனை முட்டாள்கள் ஒருவனின் குடும்பத்தில் இருந்தாலும் அக்குடும்பத்தில் ஒருவன் புத்திசாலி என்றால் அவன் புத்திசாலிதான். அதே போல ஒருவன் குடும்பத்தில் அல்லது இனத்தில் எத்தனை புத்திசாலிகள் இருப்பினும், அங்கு தோன்றிய முட்டாள் முட்டாள் ஆகத்தான் இருக்க முடியும். எனவே குலத்தின் அடிப்படையில் குணங்களை வரையறுப்பதும், வேலையை தீர்மானிப்பதும் தவறே ஆகும்.
இதில் உள்ள அரசியலையும் அறிவியலையும் தொடர்ந்து வரும் பதிவுகளில் காணலாம எனக்கு தெரிந்த அளவு, நான் பார்த்த வ்ரை எழுதுகிறேன்.்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeஅல்வாசிட்டி.வி wrote:
பதிவு நன்றாக இருக்கிறது. நம்மூருல சாதி வெறின்ன, வெளியூர்ல இனவெறி. நம்மூர்ல மட்டும் தான் இந்த ‘வெறி’ பிரச்சனைகள் என்று நினைக்க முடியுமா? வேறு வடிவத்தில் வெளிநாட்டில். எனக்கு இந்த சாதி இன வெறிகளின் வேர் என்ன என்பதை அறிந்துக் கொள்ள ஆசை. ‘நிறம்’ மட்டும் தானா பிரச்சனை?

தொடர்ந்து எழுதுங்கள்.

reply to this comment
01/06 02:24:59
தங்கமணி wrote:
நல்ல பதிவு பத்மா. மனிதர்கள் தங்களை வேற்றுமைப்படுத்தி உயர்வுபடுத்திக்கொள்வதும் மற்றவரை தாழ்த்துவதும் எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதன் அடிப்படையிலான அரசியல் மிக நுட்பமானது; அதில் உள்ள அறிவியல் குறித்து உங்கள் பார்வையையும், அனுபவத்தையும் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன். நன்றிகள்.

reply to this comment
01/06 02:52:47
sarah wrote:
Thank you Padma for sharing your nice thoughts with us.

reply to this comment
01/06 03:08:05
Ibnu Hamdun wrote:
it is really a food for thought.
Thanks madam

reply to this comment
01/06 07:20:01
Ibnu Hamdun wrote:
it is really a food for thought.
Thanks madam

reply to this comment
01/06 07:26:38
Ibnu Hamdun wrote:
it is really a food for thought.
Thanks madam

reply to this comment
01/06 07:27:03
Ibnu Hamdun wrote:
it is really a food for thought.
Thanks madam

reply to this comment
01/06 07:39:22
Padma Arvind wrote:
விஜய்
நன்றி. உண்மைதான் ஒவ்வொரு நாட்டிலும் ஏதோ ஒருவகையில் மனிதனை மனிதன் தாழ்த்துவது நடக்கிறது

reply to this comment
01/06 18:15:11
padma wrote:
தங்கமணி
அறிவியல் குறித்து மேலும் தெரிய தெரிய இத்தனை காலம் இன்வேறுபாட்டின் அடிப்படையில் விஞ்ஞானிகள் அறிவியலையும், அறிவியல் மூலம் இன வேறுபாட்டையும் அறிய முயற்சி செய்தது வியப்பாக இருக்கிறது. எவ்வாறு எந்த ஒரு கண்டுபிடிப்பும் நல்லது, அல்லது ஆகிய இரண்டுக்கும் பயன்படுமோ அது போல தீயதற்கு பயன் படுத்தாமல் இருக்க நினைப்பது ஒன்றூதான் நாம் செய்ய கூடிய செயல்.
உங்களின் பழைய பதிவுகளை(2003)படித்தேன். மிக சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

reply to this comment
01/06 20:49:45
padma wrote:
சாரா
ஊக்கத்திற்கு நன்றி. உங்களின் ஆங்கில பதிவுகளை படித்தேன். மிக சிறந்த ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்துகிறீர்கள். நன்றி
இப்னு ஹம்டென்
நன்றிகள்.

reply to this comment


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions